பிரவேசம்
இப்படி திருமலையின் போக்யதையை அனுபவித்த ஆழ்வார் -வேதங்கள் வைதிக புருஷர்கள் ப்ரஹ்ம ருத்ரர்கள் தடக்கமானாருடைய ஸ்தோத்ராதிகளுக்கு
அபூமியாய் -ஸமாஸ்ரிதர்க்கு அத்யந்த பராதீனராய் -வடமா மலை யுச்சி -என்னுமா போலே திருமலைக்கு அவயவமாய் இருபத்தொரு
கல்பக தரு போலே இருக்கிற அழகருடைய அபரிச்சேதயமான சவ்ந்தர்யாதிகளை அனுபவித்து விஸ்மிதாராகிறார் –
———————————
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-
திருமலையை அனுபவித்துச் செல்லா நிற்கச் செய்தே-திருமலையிலே அழகரைக் கண்டு ப்ரீதி அதிசயத்தாலே
அழகருடைய திரு அணிகலன்களுக்கும் திவ்ய அவயவங்களுக்கும் உண்டான சேர்த்தி அழகால் உள்ள அழகை விஸ்மிதராய்க் கண்டு பேசுகிறார் –
————————————————-
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-
மெய் சொல்லில் தாமரை கண் பாதம் கைகளுக்கு நிதர்சனமாக மாட்டாது
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு நிதர்சனமாக மாட்டாது
இப்படி இருக்கச் செய்தே இவற்றைத் த்ருஷ்டாந்தமாகச் சொல்லியிருந்த கம் உன்னைப் புகழா நிற்கும்
அத்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிறவை எல்லாம் த்ருஷ்டாந்தமாக மாட்டாமை யன்றியே –
உனக்கு நிகர்ஷத்தை ஆவஹிக்கும் என்று கண்டு திவ்ய அவயவகதமான அழகைப் பேசுகிறார் –
———————————–
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-
நீ இப்படி அழகினால் எல்லாரிலும் மேற்பட்டு வர்த்தியா நின்று பின்பு மற்று உன்னைப் போலே அழகியார் இல்லாமையாலே படியோவி வர்த்திகையாலே
பரஞ்ஜோதிஸ் சப்த அபிதேயானாய் சர்வ ஜகாத் காரணத்வ ப்ரயுக்த நிரவதிக தேஜஸ் ஸை யுடையவனாய்
நிரவதிக சவ்சீல்ய விசிஷ்டனாய் இருந்த உன்னுடைய இந்த குணங்கள் எனக்குச் சொல்ல நிலமல்ல -என்கிறார் –
——————————————————————
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-
இப்படி போக்யனாய் இருந்த எம்பெருமானை இந்த லோகம் இழந்து போகிறபடி காண் என்று கொண்டு இன்னாதாகிறார்
————————————————-
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-
இப்படி என்ன தபஸ்ஸூ பண்ணிப் பெற்றதோ என்னும்படி அதி கல்யாணமாய் ஸ்வாபாவிகமாய்
நிரதிசய தேஜோ மயமாய் இருந்த திரு உடம்பை உடையனாய்
ஸ்வாபாவிக அசங்குசித திவ்ய ஞான விசிஷ்டனாய் சர்வ காலமும் ஒருபடியே சர்வாத்ம ரக்ஷண ஏக ஸ்வ பாவனாய் இருந்த
உன்னுடைய குணங்களை நான் எ௭ங்கே முடியச் சொல்லுவது -என்கிறார்
———————————————-
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-
சர்வ லோகங்களிலும் உள்ள அத்யேதாக்கள் எல்லாராலும் தப்படுகிற சர்வ வேதங்களாலும் அளவிட முடியாத கல்யாண குணங்களை யுடையவனாய்
நிரதிசய சவ்ந்தர்யாதி கல்யாண குண நிதியாய்-ஸ்ரீ யபதியாய் இருந்த உன்னை நான் ஓருவன் எத்தைச் சொல்லிப் புகழ்வது -என்கிறார் –
————————————————-
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-
நீர் ஒருவராகையாலே வாழ்த்த முடியாது என்கிறீராகில் பலர்த்தே நின்று வாழ்த்தினாலோ என்னில்
வாழ்த்துவர் பலராக ஆகிறார் நீ படைத்த ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டரான ருத்ராதி தேவதைகள் இறே ஏத்துவார்
அவர்களும் உன்னுடைய குணங்களை முடிய ஏத்த வல்லரோ -ஏத்துகைக்குத் தான் அர்ஹரோ-அல்லர் இ றே -என்கிறார் =-
———————————————————-
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-
அந்த தேவதைகளோடே கூட -சர்வாதிபதியாய் நிர்தோஷ ஞானனான சதுர்முகன் நின்று ஏத்தினாலோ என்னில்
ஹேய ப்ரத்ய நீகமாய்-தேஜோ மயமாய் -வ்ருத்தி ஷயாதி விகார ரஹிதமான திவ்ய ரூபத்தை யுடையையாய் –
ஹேய ப்ரத்ய நீக சார்வஞ்ஞயாதி அசேஷ கல்யாண குணங்களை யுடையையாய் இருந்த உன் திருவடி மலர்களை
அந்த சதுர்முகன் தான் ஏத்த வல்லனோ -யோக்யனோ-இப்படி இருக்கிற உன்னை நான் எத்தைச் சொல்லி வாழ்த்துவது -என்கிறார் –
————————————————
அவதாரிகை
பின்னையும் அவனுடைய குணங்களை ஏத்தி அல்லது தரிக்க மாட்டாமையாலே அவனுடைய குணங்களைச் சொல்லி ஏத்துகிறார் –
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
உன்னுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஆகிற மஹா குணத்தை ஒருவரும் அறியாததொருபடி சங்கல்ப ஞானத்தாலே
ஆஸ்ரிதனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து அருளாதே அந்த ஆஸ்ரித வாத்சல்யம் சர்வ லோக விதிததாம் படி
திரு வாழியை ஏந்திக் கொண்டு பெரிய திருவடி மேலே வந்து தோன்றி அருளி என்னை உண்டாக்கி அருளினார் -என்கிறார் –
—————————————————-
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-
பக்தி ஹீனர்க்கு உன்னை அறிய ஒண்ணாதபடி மறைத்துக் கொண்டு இருக்கிற சர்வ வேதங்களினாலும் ப்ரதிபாத்யனாய்
ப்ராப்தியாலே ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாராதி ஹேது பூதனாய் இருந்த உன்னுடைய சர்வேஸ்வரத்தை அறிந்து உன்னை ஏத்துகைக்கு விஷயமாக
உன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற இருப்பு உனக்கோர் ஏற்றமோ -அன்று இறே –
இப்படி இருக்கிற உன்னை நான் எத்தைச் சொல்லி ஏத்துவது -என்கிறார் –
—————————————————————–
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-
லோகத்தில் விஸ்மய நீயமானவற்றை விஸ்மய நீயமாக யுடையன் அன்றியே யதா பூத வாதியான சர்வ வேதங்களாலும் ப்ரதிபாத்யனாய் இருந்தவனை
பகவத் கைங்கர்ய ரதித்வமாகிற கல்யாண புகழையுடையார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் ஓர் அஞ்ஞான கந்தம் இல்லாதபடி
சாஷாத் கரித்துத் தொழுது உரைத்த இத்திருவாய் மொழி பகவத் சாஷாத்கார விரோதி சம்சாரத்தைப் போக்கும் -என்கிறார் –
———————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply