ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -அங்கண் மா ஞாலத்து அரசர் -திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

ஜாய மான கடாக்ஷம் -பிறவி நீக்கும் -கருவிலே திரு உடையோர் –
ஜன்ம சுழல் கர்மத்தால் -கிருபையால் கடாக்ஷம் -கௌஸ்துப ஸ்தானம் ஸூத்த ஆத்ம ஸ்வரூபம் –
இரு வல் வினைகள் -அது காரணமாக ஜென்ம பரம்பரை
ஞான சக்தி -கிருபா காரணமான கடாக்ஷம் வலிமை மிக்கது

இஜ் ஜென்மத்துக்கு மூலம்
சார்ந்த இரு வல் வினை–
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் திருவாய்-1-9-10-என்று
ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திரு நாமம் -திருவாய்-5-9-10- என்கிற
அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை-

முந்திய பாசுரம் மாற்றார் -விரோதிகள் –
இதில் தாங்களே சேஷிகள் -அரசர்கள் -என்ற அபிமானம் தொலைந்து வந்தமை –
காம்பற தலை சிரைத்து -இசைவித்து தாளிணைக் கீழ் சேர்த்த பிரான் –
மற்றை நம் காமங்கள் மாற்று என்ற நிஷ்டை வேண்டுமே –

ஈராயிரப்படி -அவதாரிகை –

கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்று –
இப்பாட்டில் தங்களுக்கும் பிறருக்கும் ஆகாதபடியான
அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –

(தாதர்த்த சதுர்த்தி -அகார வாஸ்ய விஷ்ணுவுக்கே மகாரம் -அவதாரணார்த்தம் –
மற்றவர்க்கு அல்ல -இது உகாரத்தாலும் அறிகிறோம் –
நமக்கு நாம் தவிர்க்கவே நமஸ் ஸூ -அவனுக்கு மட்டுமே உரியேன் ஆவேன் )

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்-அவன் அமர்ந்த இடமே சிங்காசனம் ஆகுமே –
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப் போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச் சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து–கழிந்து விடும்’
ஏல் ஓர் எம் பாவாய்

அங்கண் மா ஞாலத்து -அழகிய பெரிய –சாகேத் -ஜடாயு மோக்ஷம் -நாசிக் அருகில் –இயற்க்கை காட்சிகள் –
மனத்தைக் கொள்ளை கொள்ளும் இடங்கள் நிறைய உண்டே -பசுமை பாது காக்க வேண்டுமே –
அரசர் அபிமான-ப்ரம்மா முதல் பிபீலி வரை அகங்காரம் -அது காட்டவே கீழே உள்ள அடைமொழிகள்
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-அகங்காரம் போக்கி -ஸிம்ஹாஸனம் -சேர பாண்டியன் -கிட்டி
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்-சங்கம் வடமொழி -சங்ககாலம் -இப்பொழுது அணுகி உள்ளோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-பாதி மலர்ந்து -அரை வட்டம் -அதுவும் -பாதி மலர்ந்த திருக்கண்கள்
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-விழியாயோ இல்லை -இரக்கம் வர திருக்கண்களே கடாஷிக்குமே
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-சாபம் -துக்கம் -ஜாயமான கடாக்ஷம் யம் பஸ்ஸேத் ஜனார்தன
கப்யாசம் புண்டரீகம் ஏவ அஷிணி -சாந்தோக்யம்

அங்கண் மா ஞாலத்து அரசர் –
இப்பரப்பு எல்லாம் தங்களது என்று அபிமானம் பண்ணின ராஜாக்கள் –
இதடையத் தம் தாம் அபிமானத்திலே அடக்கி வைக்கை-
பவுண்டரக வாஸூ தேவனைப் போலே –

அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
இளைய பெருமாளைப் போலே –
குணைர் தாஸ்யம் உபாகத -இறே –

(அஹம் அஸ்ய அவரோ ப்ராதா -மற்றவர் கருத்து தான் இவருக்கு தம்பி –
பால்யத்திலே சேஷம்- ஜென்ம சித்தம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -தாசன் சேஷன் பரதந்த்ரன் –
குண க்ருத தாஸ்யம் -இரண்டாம் பக்ஷம் -அநசூயை -சீதா பிராட்டி சம்வாதம் -குணம் இருப்பதால் தாஸ்யம் இல்லை
ராமனை விட்டு குணங்களைப் பிரிக்க முடியாதே -ஆகவே இங்கு இரண்டுமே ஓன்று தான் )

சங்கம் இருப்பார் போல் –
வெளியே திரியில் பின்னை ராஜ்யம் பண்ணு என்று தலையிலே முடியை வைப்பார்கள் –
என்று அஞ்சி அணுக்க ஓலக்கத்திலே சேவிப்பார்கள் –

(அருளாள பெருமாள் எம்பெருமானார் -தனது மடத்தை இடித்து -ஸ்வாமியே எம்பெருமானார் என்று காட்டி அருளினார்
பரதாழ்வான் திருவடி இணைகளைப் பெற்று – -அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு பெற்று மகிழ்ந்தானே
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -நம்மாழ்வார் -இங்கேயே அமர்ந்து இருந்தே
கங்குலும் பகலும் -தென் திருவரங்கம் கோயில் கொண்டானே -அருளிச் செய்கிறார் -)

வந்து தலைப் பெய்தோம்-
கீழ் எல்லாரையும் எழுப்பிப் பட்ட வியஸனம் எல்லாம் தீர்ந்து கிடக்கப் பெற்றோம் –
பண்டு கை கழிந்த படியும்
இன்று சங்கதி உண்டான படியும்
அந்நலனுடை ஒருவனை நணுகினம் நாமே-(1-1-3-) -இறே
(பரதாழ்வான் -அடையாளங்கள் கண்டு ப்ராப்த தேசம் அடைந்தோம் ஆச்சர்யம் என்று மகிழ்ந்தான் அன்றோ)
வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் சமாகம –
(சீதாபிராட்டி திருவடி இடம் கேள்வி -இங்கு இப் பிரமாணம் காட்டியது -ஸுசீல்ய ஸ்வபாவன் -ஆகவே என்ன ஆச்சர்யம்
அங்கு சீதா பிராட்டி அணிகலன் தர்சன பலத்தால் வானரர்கள் சேர்க்கை
இங்கும் நப்பின்னை இவர்கள் கோஷ்ட்டியில் சேர்ந்த பலத்தால் வந்து தலைப் பெய்த்தோம் )

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-
இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி
காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி
பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் இவனே )

செங்கண்
உவமானம் நேரே நில்லாமை
உபமேயம் தன்னையே சொல்லப் பெறும்படி
(தாவி வையம் கொண்ட தடம் தாமரைக்கே -முற்று உவமை )

சிறுச் சிறிதே
ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க
பிரதம பரிஷ்பந்தமே பிடித்துக் காண வேணும் என்கை

எம்மேல் விழியாவோ
கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமா போலே
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப்படுமா போலே –
(ப்ரபந்ந ஜன சாதகாம்புஜம் -யதிராஜ விம்சதி )

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும்
கிடையாதோ என்கிற அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90
(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் –
சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன்
குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )

அங்கண் இரண்டும் கொண்டு
கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போல் அல்ல ( முழுத்தன்மை வீர்யம் வேண்டுமே )
சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவ பிரிய தர்சனம் –
முழு நோக்குப் பொறுக்கும் படியால்
உன் அழகிய இரண்டு கண்களையும் இட்டுப் பார்க்க வேணும் நாங்கள் பிழைக்க –
கோப பிரசாதங்களை சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல-
(கீழே தாமரை போல் -செங்கண்களுக்கு ஒப்பு அல்ல –
அதே போல் இங்கும் -சில அம்சங்களுக்குத் தான் இவை த்ருஷ்டாந்தம் )

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே

அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே

க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே

பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே

அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே

அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே

ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

எங்கள் மேல் நோக்குதியேல்-எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-
யாதனா சரீரம் போலே உன்னையும் பெறாதே
வியசனப் படுகைக்கு அடியான சாப உபஹதரான எங்கள் துக்கம் போகை-என்கை –

விஸ்லேஷ வியசனத்தால் வரும் துக்கம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்றது
சாபம் இழிந்து நோக்குதியேல் -என்று அந்வயம்

விழியாவோ -என்று மநோரதம்
நோக்குதி-என்கிறது அவனைக் குறித்து –

—————————-

(ஜாய மான கடாக்ஷம் -பிறவி நீக்கும் -கருவிலே திரு உடையோர் –
ஜன்ம சுழல் கர்மத்தால் -கிருபையால் கடாக்ஷம் -கௌஸ்துப ஸ்தானம் ஸூத்த ஆத்ம ஸ்வரூபம் –
இரு வல் வினைகள் -அது காரணமாக ஜென்ம பரம்பரை
ஞான சக்தி -கிருபா காரணமான கடாக்ஷம் வலிமை மிக்கது-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணி –

(பாவானத்வமும் போக்யத்வமும் -ஜாய மான கடாக்ஷம்யம் பஸ்யேத் மது ஸூதனா-
சாத்விக -சத் விஞ்ஞான மோஷார்த்த சிந்தனை வளரும் -ஞானவானாகி –
ஸத் அனுஷ்டானம் கொண்டு முமுஷுவாகவே வாழ்வான்
கதிர் மதியம் போல் முகத்தான் முதல் பாசுரம் – இங்கு திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்-இங்கு நிகமனத்தில் சங்கத்தமிழ் மாலை )

இஜ் ஜென்மத்துக்கு மூலம்
சார்ந்த இரு வல் வினை–
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் திருவாய்-1-9-10-என்று
ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திரு நாமம் -திருவாய்-5-9-10- என்கிற
அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை-

முந்திய பாசுரம் மாற்றார் -விரோதிகள் –
இதில் தாங்களே சேஷிகள் -அரசர்கள் -என்ற அபிமானம் தொலைந்து வந்தமை –
காம்பற தலை சிரைத்து -இசைவித்து தாளிணைக் கீழ் சேர்த்த பிரான் –
மற்றை நம் காமங்கள் மாற்று என்ற நிஷ்டை வேண்டுமே -)

———–

நாலாயிரப்படி-அவதாரிகை –

கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்று -(வலி தொலைந்து -கீழ் )
இப் பாட்டில் தங்களுக்கும் பிறருக்கும் ஆகாத படியான
அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –

(கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் என்றும் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை என்றுமே இருப்போம்)

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-

அங்கண் மா ஞாலத்து அரசர் –
அழகிய இடம் –
ப்ரஹ்மாவுக்கும் தானும் தன் பரிகரத்தோடும் அனுபவிக்கலாய் –
பீபிலிகாதுகளுக்கும் அதன் போக உபகரணத்தோடே அனுபவிக்கலாய் இருக்கை
இப் பரப்பு எல்லாம் தங்களது என்று அபிமானம் பண்ணின ராஜாக்கள் –

கோவாகி -(கோவாகி மா நிலம் காத்து -இரண்டாம் -69)
இதடையத் தம் தாம் அபிமானத்திலே அடக்கி வைக்கை-
யாவையும் யாவரும் தானாம் அமையுடைய நாரணன் -(1-3)என்கிறவற்றை அநுசரிக்கிற
பவுண்டரக வாஸூ தேவனைப் போலே

(கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –இரண்டாம்69–

(அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-தானாம் -சரீராத்ம பாவம் -)

அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
அபிமான ஸூன்யாராய் வந்து
சிம்ஹாசனத்தின் கீழே திரள வந்து அணுக்க ஓலக்கமாய் இருக்கை –

கீழே
அவதாரணம்(கீழேயே )

வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி போல்-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் –
புத்தியால் அநந்யார்ஹ சேஷத்வம் உணர்வதையே இங்கும் சொல்லிற்று
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து உன் திருவடிக் கீழேயே வாழ்ச்சி)

நின் பள்ளிக் கட்டில் கீழே-
எங்கேனும் வழி பறியுண்டாலும் ராஜாவின் வாசலிலே கூப்பிடுமா போலே –
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம்

(ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்-எங்கும் வியாபித்து -இவன் ஒருவனே
தாங்கியும் -தாரகம் இவனே – ஈஸ்வரன் -நியமித்து -பிரஜாபதி உத்பத்தியும் இவனே )

அவர்களாகில் ஆற்றாமைக்கும் தங்கள் ஆகிடுகை
இளைய பெருமாளும் குணைர் தாஸ்யம் உபாகத –
இவர்களுக்கு இவ்வாதாரத்தில் அழகு தோற்பித்து அடிமையிலே மூட்டிற்று

(ஸ்வரூப க்ருத தாஸ்யம் -குணைர் க்ருத தாஸ்யம்
உரிமையுள்ள தம்பி பிறர் சொல்வார் அடிமையுள்ள தாஸன் நான் -பெருமாள் குணத்துக்குத் தோற்று இளைய பெருமாள்
இவர்கள் விரஹ தாபம் தாங்காமல் வந்தனர்
அடி பட்டு வந்த அரசர்-ஆற்றாமையால் வந்தவர்களும் உண்டு –
அடிமை அறிந்து ரிஷிகள் -அழகுக்கு தோற்று இவர்கள் -சாஷாத் மன்மத மன்மதன்)

சங்கம் இருப்பார் போல் –
வெளியே திரியில் பின்னை ராஜ்யம் பண்ணு என்று தலையிலே முடியை வைப்பார்கள் -என்று
அஞ்சி அணுக்க ஓலக்கத்திலே சேவிப்பார்கள் –
ராஜன் -(கைகேயி பரதனை )
கச்சிந்த துஷ்டோ வ்ரஜஸி-என்று

(முக்காலமும் அறிந்த பரத்வாஜரும் -பெருமாளுக்கு ஆபத்து செய்யப் போகிறாயா –
கேட்டதும் நான் கொல்லப் பட்டே ன் என்று விழுந்தான் பரதன்
ஊரார் அறிய கேட்டேன் என்றார்-மாமன் வீட்டுக் போனதில் குற்றம் –
பள்ளிக்கட்டில் கீழே இருந்து இருந்தால் இவை நடந்து இருக்காதே
விலக விலக பயம் -அருகே வர வர அபயம் )

வந்து தலைப் பெய்தோம்-
கீழ் எல்லாரையும் எழுப்பிப் பட்ட வியஸனம் எல்லாம் தீர்ந்து கிடைக்கப் பெற்றோம் –

வந்து தலைப் பெய்கை
கீழ் – பண்டு கை கழிந்த படியும் இன்று யாத்ருச்சிக சங்கதி உண்டான படியும்
அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே 1-1-3–இறே

(பரதாழ்வான் -அடையாளங்கள் கண்டு ப்ராப்த தேசம் அடைந்தோம் ஆச்சர்யம் என்று மகிழ்ந்தான் அன்றோ)

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

சிராய மே கூலமிவாசி லப்த -(ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 24 )
வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் சமாகம –

(சீதாபிராட்டி திருவடி இடம் கேள்வி -இங்கு இப் பிரமாணம் காட்டியது -ஸுசீல்ய ஸ்வபாவன் -ஆகவே என்ன ஆச்சர்யம்
அங்கு சீதா பிராட்டி அணிகலன் தர்சன பலத்தால் வானரர்கள் சேர்க்கை
இங்கும் நப்பின்னை இவர்கள் கோஷ்ட்டியில் சேர்ந்த பலத்தால் வந்து தலைப் பெய்த்தோம் )

(நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||(ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 24 )

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.)

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-
இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி
காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன –
விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்

செங்கண்
உவமானம் நேரே நில்லாமை உபமேயம் தன்னையே சொல்லப் பெறும்படி

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

சிறுச் சிறிதே
ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே
பிடித்துக் காண வேணும் என்கை

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமா போலே
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப்படுமா போலே -விழியாவோ -என்று மநோ ரதம்

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும்
கிடையாதோ என்கிற அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
பித்தம் கழன்று தங்களுக்குத் தண்ணளி மிக்கு இருக்கையும் என்றுமாம் –
பிரதாபமும் தண்ணளியும்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்(குளிர்ந்த ஆதித்யன் ஒளி மஹாபாரதம் )

அங்கண் இரண்டும் கொண்டு
கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போல் அல்ல
சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் -(சந்திரன் போல் என்று தப்பச் சொன்னோம் -அதீவ பிரிய தர்சனம் அதுக்காக )
முழு நோக்குப் பொறுக்கும் படியால் உன் அழகிய இரண்டு கண்களையும்
இட்டுப் பார்க்க வேணும் நாங்கள் பிழைக்க -என்கை –

அம் கண்
தாமரைப் பூ என்ற போது விகஸிக்கைக்கு தாமரை ஒப்பு இல்லாதாப் போலே –
கோப பிரசாதங்களை சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல-

எங்கள் மேல் நோக்குதியேல்-எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-
சாபம் விரஹ வ்யஸனம் ஆதல் –
சம்சார துக்கம் ஆதல் –
தண் கண்கள்
யாதனா சரீரம் போலே உன்னையும் பெறாதே வியசனப் படுகைக்கு அடியான
சாப உபஹதரான எங்கள் துக்கம் போகை-என்கை –
விஸ்லேஷ வியசனத்தால் வரும் துக்கம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்றது

சாபம் இழிந்து நோக்குதியேல் -என்று அந்வயம்
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்று கீழோடே -அந்வயம்-

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading