ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்-ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

(ரஹஸ்ய த்ரய ஞானம் -அகாரமே நாராயணன் -நரங்கள்-அழியாத வஸ்துக்களின் கூட்டம் –
கல்யாண குணங்களும் உண்டு -மாம் அஹம் -இவனே –
நிரங்குச ஸ்வ தந்த்ரன் –ஸ்ரீ யபதி -நீர் பூத்த நெருப்பு போல் இருப்பதை கிளறி-
ஸ்வாபாவிக குணங்களை கார்யகரம் ஆக்க பிராட்டியும் உண்டே – -த்வயமே ஷேமங்கரம் –
உசித உபாயங்களை எடுத்து உரைத்து –
திருமந்திரம் தொடர்பு-காட்டும் -சரம ஸ்லோகம் உபாயம் சொல்லும் -த்வயம் மூலம் -மந்த்ர ரத்னம் –
பிராட்டியை புருஷகாரமாக பற்றி மிதுனத்தில் கைங்கர்ய பிரார்த்தனை -அதுவும் அவர்கள் உகப்புக்காக )

(அஹம் -யசோதை இளம் சிங்கம் –
மாம் -நந்த கோபன் குமரன் –
கார் மேனி செங்கண் -கதிர் மதியம் போல் முகத்தான் -அகாரம் பொதுவான –
நாராயணனே -அகாரம் விளக்கம் –
நாராயணன் மூர்த்தி கேசவன் -நாற்றத் துழாய் நாராயணன் -விவரணம்
மா மாயன் -மாதவன் -மணி வண்ணன் -விளக்கம் -லஷ்மி நாதன் சுருக்கமாக
இத்தை தெளிவாக ஒன்றாம் பாசுரம் ஒன்பதாம் பாசுரம் சேர்த்து 19 பாசுரம் -ஸ்ரீ யபதி -இப்பாசுரம்
தத்வம்-ஸ்வரூபம்-புருஷார்த்தம் -தகவு -கிருபா குணம் -)

ஈராயிரப்படி -அவதாரிகை –
இவள் திறக்கப் புக –
நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று
இவளைத் திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடந்தது
அந்த ஸூக ஸ்பர்சத்தாலே மறந்து உறங்குகிறவனை எழுப்பி
மறு மாற்றம் கேளாமை பின்னும்
அவனை உணர்த்துகைக்காகவும் அவளை எழுப்புகிறார்கள் –

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-

பதவுரை

குத்து விளக்கு–நிலை விளக்குளானவை-ஆயர் குலத்தில் விளக்காக இருவரும் இருக்க இது மங்கள அர்த்தம்
எரிய–(நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல்–யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற–மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி–(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்)
ஐந்து குணங்களை யுடைய துமான படுக்கையின் மீதேறி
கொத்து அலர் பூ குழல்–கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை–நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை–திருமுலைத் தடங்களை
மேல் வைத்து–தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த–பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா–அகன்ற திருமார்பை யுடைய பிரானே!-அவள் ஸ்பர்சத்தால் மலர்ந்த மார்பு என்றுமாம்
வாய் திறவாய்–வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்-உனக்கு ஒரு சொல் மாஸூச நமக்கு வாழ்வு
மை தட கண்ணினாய்–மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ–நீ
உன் மணாளனை–உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும்–ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய்–படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும்–க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய்–(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல்–ஆ! ஆ!!.
தகவு அன்று–நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம்–(இஃது) உண்மை’
ஏல் ஓர் எம் பாவாய்

குத்து விளக்கு -நிலை விளக்கு
கோட்டுக் கால் கட்டில்–யானைத் தந்தங்களை காலாகக் கொண்ட கட்டில்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை-இவள் திருக்குழலே தன்னிலம்
கீழேயும் கந்தம் கமழும் குழலீ -நப்பின்னை –
ஆத்மாக்கள் -சேஷத்வ பாரதந்தர்ய குணங்கள் -கந்தம் இதுவே
கீழே உந்து -18-பாசுரத்தில் -கடை திறவாய் -மகிழ்ந்து வந்து திறவாய் -மட்டுமே உண்டு – –
சேர்ந்து உள்ளாரை பிரிக்கும் ராவணன் அல்லவே இவர்கள் –
மலர் மார்பா -வாய் திறவாய் இல்லையே
அஸ்து தே -திருவாய் திறந்து கத்யத்தில் உண்டே –
மாஸூச -ஒரு வார்த்தை தானே நமக்கு வாழ்வு –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு –
வாய் திறவாய் மைத் தடங்கண்ணினாய்-கண்ணாலே கார்யம் இவளுக்கு -யசோதா அறிவுறாய் போல் –
அல்லி மலர் மகள் போக மயக்குகள் -பித்தர் பனி மலர் பாவைக்கு –

குத்து விளக்கு எரிய –
நமக்குப் போலே இருள் தேட வேண்டாதே
பகலையும் இரவாக்கிக் கொண்டு விளக்கு எரியக் கிடக்கப் பெறுவதே இவள் -என்கை

கோட்டுக் கால் கட்டில் மேல்
குவலயா பீடத்தைக் கொன்று அதன் கொம்பால் செய்த கால்களையுடைய காட்டில்
வீர பத்னீ ஆகையால் மற்றையவற்றில் கண் உறங்காது

கட்டில் –
ஜாதி பேச்சு

மெத்தென்ற
ஆர்த்தராய் அலைந்து கிடைக்க படுக்கையில் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கண் உறங்குவதே –
இவர்களுக்கு மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளி இறே
அவனுக்கு நெருப்பு நீராம் ஒளஷதம் உண்டு இறே
(விரஹ தாபம் குறைக்கும் தன்மை உண்டே )

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பாதேந அத்ய ஆரோஹதி-என்று நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ நீ படுக்கையில் ஏறுவது என்கை
அங்கு ஏறில் அவன் -கோஸி-என்ன –
இவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்னும்
ப்ரஹ்மம் நான் என்னப் போமோ என்னில் –
பரவாந் அஸ்மி காகுஸ்த- என்னுமா போலே பிரகாரமான ப்ரஹ்மம் -என்கை –
ரமமாணா வநே த்ரய -என்று ஆசைப்படுகிறார்கள் –

(பரவாந் அஸ்மி காகுஸ்த–நான் உனக்காகவே இருக்கிறேன் –
மூவரும் ஆனந்தம் -கைங்கர்யம் செய்தும் -தூண்டி விட்டும் -ஏற்றுக் கொண்டும் -ஆனந்தம்
காட்டில் மூவர் அங்கு -இங்கு கட்டிலே மூவரும் வேண்டுமே )

கொத்தலர் பூம் குழல்
பெரிய திரு நாளாய்ச் செல்லா நிற்க குறி அழியாது இராது இறே
ஒரு மஹா பாரதத்தாலே ( ப்ரணய கலக உத்சவத்தில் )அலருகை-
காலம் அலர்த்துமா போலே அவனுடைய ஸ்பர்சம்
மலரிட்டு நாம் முடியோம் -என்றது மறந்தாயோ
இழவு சொல்லும் போது தங்களோடு கூட்டுவர்கள் –
பேறு சொல்லும் போது அவனோடு கூட்டுவர்கள் –

கொத்தலர் பூங்குழல்
வாசம் செய் பூங்குழலாள்-( 10-10-2-)-என்னுமா போலே –

நப்பின்னை கொங்கை மேல்-வைத்துக் கிடந்த –
கொங்கையைத் தன மேலே வைத்துக் கிடத்தல் –
கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல் –
ந சாஸ்திரம் நைவ ச க்ரம-
பர்யா யேண ப்ரஸூப் தஸ்ச –
மலராள் தனத்துள்ளான் –
( மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் )

மலர் மார்பா
அவனுக்கு உஜ்ஜீவனம்

வாய் திறவாய்
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த-என்று சொல்லி வைத்துப் பேசாதே கிடக்கும் இத்தனையோ
இருவரும் கூடின பின்பு த்வயத்தில் உத்தரார்த்தம் போலே அனுபவிக்கும் இத்தனை –
அங்கு ஒன்றும் காணாமை
(அவன் இடம் பதில் பெறாமல் -இவள் கடாக்ஷம் மூலமே பெற வேண்டுமே –
ஆகவே திருக்கண் பிரசங்கம் -துல்ய சீல வயோ வ்ருத்தம் –அஸி தேக்ஷிணை )

மைத் தடங்கண்ணினாய் –
என்கிறார்கள் –
இவன் வாய் திறக்கப் போக –
அவள் நான் அன்றோ என்ன –
பேசாதே கிடந்தான் –
நீ கண்ணாலே விலக்க வேணுமோ –

தடம் கண்ணி
இக்கடலைக் கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது
ந ஜீவேயம் க்ஷணம் அபி –இறே
(தம் விநா ந ஜீவேயம் க்ஷணம் அபி–கண் அழகு தானே தவிக்கச் செய்தது அங்கும் )
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

நீ யுன் மணாளனை
கோபீ ஜன வல்லபன் -என்கை –
இனி உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் –

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
கட்டின கை நெகிழில் பிழைக்க மாட்டாய் –
புணர்ச்சிக்காகப் பிரியவும் பயப்படுவுதி –

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
அகலகில்லேன் இறையும் என்று நீ நில்லா நின்றாய் –
உனக்காக அன்றோ அவன் புறப்படாது ஒழிகிறது –
பிரியில் நீ பிழையாய்-உன்னை இழக்க ஒண்ணாது என்று –

தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-
தத்துவம் -சத்யம் அன்று
தகவு -தகவன்று என்று எங்கள் ஆற்றாமையால் சொல்லுகிறோம் அன்று
மெய்யே தர்மம் அன்று –
தத்துவம் அன்று -ஸ்வரூபம் அன்று –

———————————-

(அஹம் -யசோதை இளம் சிங்கம் –
மாம் -நந்த கோபன் குமரன் –
கார் மேனி செங்கண் -கதிர் மதியம் போல் முகத்தான் -அகாரம் பொதுவான –
நாராயணனே -அகாரம் விளக்கம் –
நாராயணன் மூர்த்தி கேசவன் -நாற்றத் துழாய் நாராயணன் -விவரணம்
மா மாயன் -மாதவன் -மணி வண்ணன் -விளக்கம் -லஷ்மி நாதன் சுருக்கமாக
இத்தை தெளிவாக ஒன்றாம் பாசுரம் ஒன்பதாம் பாசுரம் சேர்த்து 19 பாசுரம் -ஸ்ரீ யபதி -இப்பாசுரம்
தத்வம்-ஸ்வரூபம்-புருஷார்த்தம் -தகவு -கிருபா குணம் -)

நாலாயிரப்படி-அவதாரிகை –
இவள் திறக்கப் புக –
நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
மல் கட்டாக்காகக் கட்டிக் கொடு கிடக்க
மறு மாற்றம் கேளாமையாலே பின்னையும் கிருஷ்ணனை உணர்த்துகைக்காக
நீ திறக்க வேணும் என்கிறார்கள்

இத்தால் ஆஸ்ரிதற்கு மாறி மாறிப் பரிகைக்கு இருவரும் உண்டு-என்கை
என்னடியார் அது செய்யார் (4-9)என்னும் அவன் –
இவள் ந கச்சின் ந அபராத்யதி -என்னும்
அவர்கள் உள்ளு பிறந்த வியாபாரம் அறிந்தபடி எங்கனே -என்னில்
ச கோத்ரிகள் ஆகையால் அறிவார்கள் இறே

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-

குத்து விளக்கு எரிய –
நாம் புறம்பே பனியில் தரையிலே நிற்க –
ஊரார் இசைவும் வேண்டாதே –
கீழ் வானம் வெள்ளென்றது -என்கிற பயமும் இன்றிக்கே
நமக்குப் போலே இருட்டும் தேட வேண்டாதே
பகலையும் இரவாக்கிக் கொண்டு விளக்கு எரியக் கிடக்கப் பெறுவதே இவள் -என்கை
இவள் தன்னை கை விளக்காகக் கொண்டு பிரகாசிப்பதொரு நிலை விளக்கு உண்டாவது -என்றுமாம்
அப்போது எம்பெருமானுக்குக் கூட அவள் விளக்காய் இருக்கிற படி
அதீவ ராம்ஸ ஸூ ஸூ பே-(சீதை யுடன் சேர்ந்த பெருமாள் அதிகமாக பிரகாசித்தார் – )

(அவனை அடைய இவள் புருஷகாரமாக வேண்டும் -வெந்நீரை தண்ணீர் கொண்டு ஆற்றுமா போல்
இவளுக்கு வேறே ஒன்றுமே வேண்டாமே -தண்மை ஸ்வ பாவிகம் அன்றோ -)

கோட்டுக் கால் கட்டில் மேல்
குவலயா பீடத்தைக் கொன்று அதன் கொம்பால் செய்த கால்களையுடைய கட்டில்
வீர பத்னீ ஆகையால் மற்றையவற்றில் கண் உறங்காது –
மாணிக்கத்தாலே செய்யிலும் பள்ளிக் கட்டில் என்னும் அத்தனை இறே
நாஹாரயதி சந்த்ராஸம் பாஹு -(பெருமாள் உடன் கூடச் சென்ற சீதை -தோள்களுக்கு கீழ் அடங்கி பயம் இல்லாமல் இருந்தாள்_
ஆனையுள்ளிட்டின காட்டைக்  கண்டால் முக விகாசம் பிறக்கும் அத்தனை
ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான அச்சம் இல்லை –
இதுக்கடி தனக்கு என்னத் தோள் படைக்கையாலே –

இத்தால் பதிம் விஸ்வஸ்ய -இத்யாதியில் ஓதிக் கிடக்கிறபடியே
அவனுக்கும் தங்களுக்கும் உண்டான முறையை உணர்ந்து இருப்பார்க்கு
ஸ்வரூப ப்ரயுக்தமான பயமில்லை என்கை -(விஸ்வ பதி -லோக பர்த்தா -)

(ஸர்வ ரக்ஷகன் -அடங்குக உள்ளே -ஆழ்வார் -சம்பந்தம் ஒத்துக் கொண்டாலே ஸம்ஸார பயம் இருக்காதே)

வீர பத்னிகளுக்கு தோளில் சரசரப்புக்கு காணா விடில் தங்களோட்டை பெண்களைத் தழுவினத்தோடே ஒக்கும்
ஜ்யா கிண கர்க்கஸை(ஸ்தோத்ர ரத்னம் )
உபதாய புஜம் தஸ்ய லோக நாதஸ்ய ஸதக்ருதம்(சீதா பிராட்டி )
பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா
உயிரோடே பிடித்துக் கொம்பை வாங்கும் வீரனுடைய பத்னி இறே
வீர பத்னிகள் ப்ரபன்னர் படி

ஆர்த்தோ வா யதிவா த்ருப்த -(விபீஷண அபய ப்ரதானம்-பிராணனை விட்டே யாகிலும் சரணாகதரை ரக்ஷிக்க வேண்டும் )என்னும் போது அவன் பலமே உபாயமாக வேண்டாவோ
புத்தி பூர்வகமாகப் பண்ணின பிராதி கூல்யத்துக்கு அபுத்தி பூர்வகமாகப் பண்ணின பிரபத்தி
(வாய் வார்த்தையாக புரிதலே இல்லாமல் செய்த சரணாகதி )ப்ராயச்சித்தமாம் போது சரண்யன் நீர்மையே பலிக்கிறது அத்தனை –
பலத்தோடு சந்திப்பிக்குமது அன்றோ உபாயமாவது
அங்கண் என்றே யாகில் பிரபத்தி வேண்டுவான் என் என்னில்-
சைதன்ய கார்யம் வேண்டுகையாலே

பிரபன்னனுக்கு தத் ஸ்வீகாராதிகள் அடைய உபாயமாக வேணுமோ
அங்கண் அன்றே யாகில் இவன் தன்னுடைய சத்தை உபாயமாக வேணுமோ
சர்வ ஸ்வதானமும் (உலகு அளந்து அனைவருக்கும் )தூற்றிலே நெருப்பிடுகையும் ஓத்தாப் போலே இங்கும்
ஆர்த்தோ வா யதிவா த்ருப்தா -என்கிறது

கட்டில்
ஜாதி பேச்சு –

மெத்தென்ற
நாங்கள் ஆர்த்தராய் அலைந்து கிடக்க
படுக்கையில் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கண் உறங்குவதே –
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி (9-9)இறே
அவளுக்கு நெருப்பு நீராம் ஒளஷதம் உண்டு இறே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பஞ்ச விதமான சயனத்தில் மேல் ஏறி -அதாவது உஷ்ண பரீஹாரமும் -ஸீத பரிஹாரமும் –
தர்ச நீயகை யாகையும்-மெத்தென்று இருக்கையும் -பரம்பி இருக்கையும் –
அஞ்சுருவிவிட்டுப் பண்ணின படுக்கை என்றுமாம்
அழகு குளிர்த்தி மார்த்த்வம் பரிமளம் தாவள்யம்-(வெண்மை )என்றுமாம்
பாஞ்சாலே செய்தது என்றுமாம்

மேல் ஏறி –
பாதேந அத்ய ஆரோஹதி-(பர்யங்க வித்யை )என்று நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ நீ படுக்கையில் ஏறுவது என்கை
அங்கு ஏறில் அவன் -கோஸி-என்ன –
இவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்னும்
ப்ரஹ்மம் நான் என்னப் போமோ என்னில் –
பரவா நாஸ்மி என்னுமா போலே பிரகாரமான ப்ரஹ்மம் -என்கை -(பரன் திறம் அன்றி மற்ற யாரும் இல்லையே -உமக்கு சார்ந்தவனாகவே இருக்கிறேன் )
ரமமாணா வநே த்ரய (ஆனந்தத்தில் சாம்யம்-காட்டில் மூவர் -இங்கு கட்டிலே மூவர் வேண்டாமோ )-என்று ஆசைப்படுகிறார்கள் –
யஸ்ய ஸ்ரீ ருபபர்ஹணம் -என்று பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே குறையற்றது
இனி மிதித்து ஏறுவார் குறை –

கொத்தலர் பூம் குழல்
இவ்ளோட்டை ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக அலருகிற பூவையும்
குழலையும் யுடைய நப்பின்னை பிராட்டி

கொத்தலர் பூங்குழல்
பெரிய திரு நாளாய்ச் செல்லா நிற்க குறி அழியாது இராது இறே
ஒரு மஹா பாரதத்தாலே அலருகை-
காலம் அலர்த்துமா போலே அவனுடைய ஸ்பர்சத்தாலே அலருகை என்னவுமாம்
இங்குத்தைக்குத் திருப் பூ மண்டபம் செய்வானும் தானே இறே
மலரிட்டு நாம் முடியோம் -என்றது மறந்தாயோ
இழவு சொல்லும் போது தங்களோடு கூட்டுவர்கள் –
பேறு சொல்லும் போது அவனோடு கூட்டுவர்கள் –
அவளுக்கு இரண்டு தலையையும் விட ஒண்ணாது

கொத்தலர் பூங்குழல்
வாசம் செய் பூங்குழலாள்-(10-10)என்னுமா போலே –

நப்பின்னை கொங்கை மேல்-வைத்துக் கிடந்த –
கொங்கையைத் தன மேலே வைத்துக் கிடத்தல் –
கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல் –
ந சாஸ்திரம் நைவ ச க்ரம-
பர்யா யேண ப்ரஸூப் தாஸ்ச-(மந்தாகினி நதிக்கரையில் மடியில் மாற்றி மாற்றி சயனம் )
மலராள் தனத்துள்ளான் –
மலைப் பார்ஸ்வத்தைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே

மலர் மார்பா
அவளுக்கு ஜீவனம் த்வந்த்வம் பரஸ்பர ஆஸ்ரயம்(மலர்ந்த மார்பால் அணைந்த என்றும் இவள் அணைப்பால் மலர்ந்த )

மலர் மார்பா
திரு முலைத் தடங்கல் உறுத்துகையாலே அகன்று இருந்துள்ள மார்பு
அப்போது சதைக ரூப ரூபாயா -என்பதுக்கு குற்றம் அன்றோ என்னில் –
ஹேய குணங்கள் இல்லையே -இது கல்யாண குணங்களில் புகும்

வாய் திறவாய்
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த-என்று சொல்லி வைத்துப் பேசாதே கிடக்கும் இத்தனையோ
அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க இவர்கள் ஆரை எழுப்புகிறது –
இருவரும் கூடின பின்பு த்வயத்தில் உத்தரார்த்தம் போலே (கைங்கர்யம் பெறுவீர்கள் )அனுபவிக்கப் புகுருங்கோள்-என்னும் அத்தனை
நம்மைப் புறப்பாடாய் என்னில் ராவணனைப் போலே ஆவீர்கள் -(முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றாரே ஆழ்வார் )
அலர்மேல் மங்கை யுறை மார்பா -(வைத்துக் கிடந்த மலர் மார்பும் இதுவும் அன்யோன்யம் )

அங்கு ஒன்றும் காணாமை யாலே
மைத் தடங்கண்ணினாய் –
என்கிறார்கள் –
இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று
அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான்
ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் –
நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் –
இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ –

தடம் கண்ணி
இக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பது
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8)
மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10)
ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறே
மையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

நீ யுன் மணாளனை(வெட்டிப் பேசுகிறாள் )
கோபீ ஜன வல்லபன் -என்கை -லோக பார்த்தாராம் என்கை தவிர்ந்து -உனக்கு விலையும் ஒத்தியும் செல்லும்படி இருக்கிற இருப்பு
எல்லாம் எங்களுக்கு உடல் என்று இருந்தோம்(கௌசல்யை அவரை லோகத்துக்கே பார்த்தா என்று பெற்றாளே -என்னை கை விட்டால் அந்தப் பெயர் கிட்டாதே )-இனி உனக்கே சேஷம் என்று இருக்கிறோம்
பண்டு இருவரையும் தங்கள் ஸ்வம் என்று இருக்கையாலே
அவனுடைய நீயும் உன்னுடைய அவனும் என்று இருந்தோம்
இனி உன்னுடைய மணாளன் என்று கிலாய்க்கிறார்கள் –

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
கட்டின கை நெகிழில் பிழைக்க மாட்டாய் –
புணர்ச்சிக்காகப் பிரியவும் பயப்படுவுதி –

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
அகலகில்லேன் இறையும் என்று நீ நில்லா நின்றாய் –
உனக்காக அன்றோ அவன் புறப்படாது ஒழிகிறது –
பிரியில் நீ பிழையாய்-உன்னை இழக்க ஒண்ணாது என்று –

தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-
தத்துவம் -சத்யம் அன்று -தகவு -தகவன்று என்று எங்கள் ஆற்றாமையால் சொல்லுகிறோம் அன்று
மெய்யே தர்மம் அன்று –
தத்துவம் அன்று -ஸ்வரூபம் அன்று –
உன் ஸ்வரூபம் நீர்மை அன்று இனி அவனில் உனக்கு வாசி இல்லை என்று இருக்கிறோம்

உன்னை அவனை விட உயர்ந்த நிலையில் கருதினோம் -இப்பொழுது இவன் உடன் சாம்யம் என்று மட்டம் தட்டுகிறார்கள்

பாபா நாம் என்ற இடம் (லுகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி )பொய் என்கிறார்கள் –
த்விதா பஜ்யேயம் -என்றத்தோடு சரணம் கத என்றத்தோடு (ராவணன் வார்த்தையும் விபீஷணன் வார்த்தையும் ) வாசி இல்லை
இவள் சந்நிதி யுண்டானால் பெறுகைக்கு கபோதியில் கெட்ட பிராட்டி யுண்டோ என்று இருந்தார்கள்

(புறா கதை -பேடையைப் பிரித்து இத்யாதி -வேடனுக்கு தன்னையே கொடுத்ததே)

(ஆண் புறா ராமன் -இங்கு சீதையைக் கொள்ள வில்லை –
அங்கு வேடன் வந்தான் -இங்கு தம்பி தானே வந்தான்
அங்கு சரணம் சொல்லவில்லை
இங்கு விபீஷணன் சரணம் கத என்றும் சொன்னான்
இவனைக் கைக் கொண்டாலும் -உயிர் கொடுத்த புறாவுக்கு கீழ் தானே  ஆகும்)

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை
வேடனுக் குதவிசெய்வான் விறகிடை வெந்தீ மூட்டி
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம்புள்
வீடுபெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிதன்றோ  (கம்ப ராமாயணம்) -இந்தக் கதை ஸ்ரீராமர் சொன்னது.

(அப்யஹம் ஜீவிதம் -ரிஷிகளைக் காத்தே தீருவேன் -நம் ஆச்சார்யர்கள் இந்த வசனம் இன்றும் நமக்கு ஸமாச்ரயணம் பண்ணி அருளி சாதிக்கிறார்கள்)

(ஆச்சார்யர் தானே குத்து விளக்கு –
சாயைப் போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -எம்பார் -பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்கள் ஆவார்
பாதுகையே ஞானமும் அளித்ததே
அர்த்த பஞ்சகம் -பஞ்ச சயனம் –
கொங்கை மேல் திருமலைகளில் -மலர் மார்பா பரந்த திரு உள்ளம் -எம்பெருமானார் பட்டம்
பக்தி அஞ்சனம் மை
பிரிந்து இருப்பார் யார் -பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை -பெரும் திவத்திலும் அன்பு அற்று
தத்வம் ஸ்வரூப ஞானத்தால் அன்று தகவு -கருணையால் முக்தர்)

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading