திருமலை வைபவம் -நம்மாழ்வாரும் திருவேங்கடமுடையானும் -ஸ்ரீ வரதராஜன் ஸ்வாமிகள்

ருக் வேதம் -அராயி காணே விகடே கிரிம் கச்ச சதாந்வே சிரம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -என்று -தாப த்ரயங்கள் நீங்கி – சகல புருஷார்த்தங்களையும் அடைய
திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய திருமலையைக் குறித்து பக்தர்களுடன் சென்று சேர்ந்து யோக்யதை பெறலாம் என்கிறது –

வேதம் தமிழ் செய்தான் மாறன் – வேதத்தின் உட்ப்பொருள் நிற்கப் பாடினான் -வேதைச்ச சர்வை -அஹமேவ வேத்ய-வேதப்பொருளே வேங்கடவா -வேதாந்த விழுப்பொருளே இவன்
அர்த்த பஞ்சகமம் அருளி வேதத்தால் அறியப்படும் திருவேங்கடத்தான் நித்ய வாசம் செய்யும் திரு வேங்கடத்தையே பிதற்றி –
அவன் தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஸ்வரூபம் விபூதிகள் அனைத்தையும் காட்டி அருள -தங்கள் மனத்தே கண்டு
அவனுக்கு சகல வித கைங்கர்யங்களையும் செய்ய பாரித்து அவனிடமே சரணாகதி அடைந்து -த்வய பூர்வ உத்தர வாக்கியங்களை அவன் இடமே அருளிச் செய்கிறார் ஆழ்வார் –

சேஷ தர்ம புராணம் -48-13—மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் ஸ்வாமி புஷ்கரணீ தீரே -என்பதையே
ஸ்ரீ வைகுண்ட விரக்த்யா ஸ்வாமி புஷ்கரணீ தீடே ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் -என்று அருளிச் செய்கிறார்-

பரமபதத்தில் இருந்து முதலில் தங்கிய திவ்ய தேசம் அன்றோ –
பாண் குன்ற நாடார் –திரு விருத்தம் -8- வண்டுகள் பாடா நின்றுள்ள திவ்ய தேசம்
தண் மா மலை வேங்கடத்து உம்பவர் நம்பும் சேண் குன்றம் –உறைபவன் இடம் –
அம்பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் மிசை மிண் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே -30-என்று
மேகங்களை தூது விடுகிறாள் பராங்குச நாயகி –
தேரில் வரும் திருவேங்கடவன் பராங்குச நாயகியின் தளர்ந்த நிலைமையை அறிந்து தன பாகனைப் பார்த்து –
விரைந்து நண்ணுதல் வேண்டும் வலவ தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முதல் வாசிகைத்தாய் மண் முதல் சேர்வுற்று
அ ருவி செய்யா நிற்கும் மா மலைக்கே–50-என்கிறான் பிரிந்த நாள் சிரமம் தீரும் படி அன்றோ அருவிகள் –

அறியா காலத்திலேயே அடிமை செய்ய வேண்டி திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே உடையவள் -60-பராங்குச நாயகி
திருமலையையும் திருப் பாற் கடலையும் ஸ்ரீ வைகுந்தத்தையும் விட்டு நிறம் கரியனாய் ஆழ்வார் உள்ளம் புகுந்து நீங்காதவனாய் இருப்பதை
அடியேன் உள்ளத்தகம் –பெரிய திருவந்தாதி –68-என்று அருளிச் செய்கிறார் –
சஷூர் தேவானாமுமர்த்யானாம் -யஜுர் வாதம் படியே கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8–3-என்பர் –
பக்த முத்த கோடி த்வயத்தோடே ஸம்ஸலேஷிக்கைக்கு ஈடாக அன்றோ இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான் –

மண்ணோர் விண்ணோர்க்கு என்பது ஈஸ்வரன் நினைவாலே -விண்ணோர் வெற்பனே நித்ய ஸூ ரிகள் நினைவாலே –
நாதன் ஞாலம் கொள் பாத்தான் என்னம்மான் -1–8–10-என்று ஆழ்வாருக்கு கிட்டலாம் படி அன்றோ திருமலையில் வந்து ஆழ்வாரை அடிமை கொண்டவன் –
தண் வேங்கடம் மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே -2–6–10-பரிமளம் மிகுதியால் அதனை மோந்து கொண்டு உள்ளான்
தோமாலை சிறப்பு –தோளில் இட்ட மாலை கொண்டு எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –2–6–9-
அடிமையை நிலை நிறுத்தி அருளினான் ஸ்ரமஹரமான திருமலையில் வந்து நின்று ஸ்வாமித்வத்தை காட்டி சேஷத்வத்திலே நிறுத்தி அருளினவன் அன்றோ –
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –2-7–11-
வள்ளல் தன்மைக்கு மூலமே திருமலை தான்
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடூயிரே–3–2–10-என்று
ஆழ்வார் துக்கம் தீர ஆத்மா நித்யமாம் படி திருமலையில் காணப் பெற்றேன் என்கிறார் -நாயனார் நித்ய வஸ்து நீடு பெற்று -221-என்பர் –

திருமலையில் நின்று அருளும் நிலையை மனத்தில் கண்ட ஆழ்வார் -எழில் கொள் சோதி -3–3–1-வேங்கடம் மேய விளக்கு அன்றோ-குன்றில் மேலிட்ட்ட விளக்கு –
-அகலகில்லேன் இரையும் என்று பிராட்டி நித்ய வாசம் செய்கிறாள் அன்றோ –
திருப் பாற் கடல் சோதி கடலே கொள்ளை கொண்டு கிடக்கும்-பரமபதத்தில் பகல் விளக்கு -போல் அன்றோ –
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதானம் பரமம் ச தைவதம்—ஸ்வேதாஸ்வர உபநிஷத் -என்பதையே எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –3–3–2-
அந்தமில் புகழ் உடையவன் -அணி கொள் செந்தாமரைக் கண்ணன் -இவனது பவளவாய் காண அன்றோ படியாய்க் கிடக்கிறார் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
பிராட்டி உடன் கூடி எழில் கொள் சோதி யானவன் -அந்தமில் புகழால் கார் எழில் அண்ணாவானான் -குணத்தாலும் அழகாலும் எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் ஆனான் –
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னிடம் பாசம் வைத்து பரஞ்சுடர் சோதியானான்
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -என்பதையே சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -3–3-5-
யதோவா இமானி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபிசம் விசந்தி தத் விஜிஞ்ஞாஸ்வ தத் ப்ரஹ்மேதி –தைத்ரியம் -காரண வாக்கியம் –
காரணம் து த்யேய சர்வ ஐஸ்வர்ய சம்பந்த சர்வேஸ்வர சம்புர் ஆகாச மத்யே -அதர்வசிக உபநிஷத் –அந்த ஆதி மூர்த்தி தீதில் சீர்த் திருவேங்கடத்தான் –3–3–5-
அவனே வேதியர் முழு வேதத்து அமுதன் -ஆனந்தோ ப்ரஹ்ம-ரஸோ வை ச –
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் –அது சுமந்தார்கட்கே -3–3–6-கடன்கள் -பூர்வ உத்தர ஆகங்கள்–தததிகம உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாசவ் தத்வ்யபதேசாத்-
கடன்கள் மெய் மேல் முற்றவும் வேம்-கொண்டு கூட்டி பொருள் உரைத்து இது மெய் சத்யம் என்றுமாம் –
புகழும் நல் ஒருவன் -3-4-பதிகத்தில் வாசிக கைங்கர்யம் -பெரும் காற்றிலே பழத்தை எடுப்பாரைப் போலே அருளிச் செய்கிறார் –

திருவேங்கடமுடையான் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுத்து அருள –
உணர்வின் மூர்த்தி -3-4–10-ஞான ஸ்வரூபன் /நலம் கடல் அமுதம் -அறுசுவை அடிசில் -நெய்ச்சுவை தேறல் –போக்யம் ஆனந்தம் /
அமலன் –அகில ஹேய ப்ரத்ய நீகன்/தோய்விலன்-வியாபகத தோஷம் தட்டாதவன் –
அனந்தன் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் அபரிச்சேதன் / பங்கயக் கண்ணன் –முதல்ளி உறவு பண்ணும் திருக் கண்கள் – மணி வண்ணன் , கொண்டால் போல் வண்ணன் -ரூபம் /
புகழும் நல் ஒருவன் -பாவு சீர்க் கண்ணன் -குணங்கள் /கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணல் -சேஷ்டிதங்கள் /
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும்படி சர்வாத்ம பாவத்தை புகழ்ந்து அருளிச் செய்கிறார் –
திருவேங்கடமுடையானின் நீர்மையிலே ஈடுபட்டு அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி விஷயமான திரு நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை
நித்ய ஸூ ரிகள் ஆதரிப்பார்கள் என்பதை வார் புனல் அம் தண் அருவி வாடா திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லி –அமரர் தொழப் படுவாரே–3–5–8-
பேர் பல ஒழிவில் காலத்திலும் -புகழு நல் ஒருவனிலும்-அருளிச் செய்த படி –அதாவது வானவர் ஈசன் -ஈசன் வானவர் -வானவர் ஆதி என்கோ -என்பதால் ஸ்வரூபமும்
கார் எழில் அண்ணல்,-கரு மாணிக்கம்–பங்கயக் கண்ணன் என்கோ என்பதால் ரூபமும் -அந்தமில் புகழ்–புகழும் நல் ஒருவன் என்கோ என்பதால் குணமும் –
அஹம் அன்னம் -அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களித்து ஆடுவது பாடுவது போலே இவையும் –
என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் தென்னா தென்னா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –3-9-1-
திருவேங்கடத்து -என்பதால் ஸுலபன் /என் ஆனை-கவி பாட விஷயம் அவனே / என்னப்பன் -உதவியாளன் /எம்பெருமான் -கெடுதல் செய்தாலும் விட ஒண்ணாத பிராப்தி /
உளனாக –ஆழ்வார் மங்களா சாசனம் செய்ததால் தான் தான் உளனாக என்னும் வத்சலன் -ஆழ்வார் கவி பாடி சம்பாதித்த யானை யாயிற்று திருவேங்கடத்தான் –
இவர் திருக் கையில் தாளத்தைக் கொடுத்து தான் மங்களா சாசனம் பெற -ஆழ்வாரும் வீற்று இருந்து -4–5-பதிகம் -/
தமக்கு ஒப்பு பரம பதத்திலும் இல்லை என்பதை நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பந் -என்பர் –
மாரி மாறாத தண்ணம் மலை வேங்கடத்து அண்ணலை –ஆயிரத்து இப்பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4–5–11-
சீல குண சரமபர்வ நிலையை காட்டி அருளுகிறான் –

மாசறு சோதி -5–3–கடியன் கொடியின் நெடியமால் உலகம் கொண்ட அடியன்–ஆகிலும் அவன் என்றே கிடக்கும் –
வழி அல்லா வழி யாகிலும் அவனுடன் கலக்க எண்ணுகிறாள் –
ஆற்றாமையால் மோகிக்க திருத் தாயார் -மாலுக்கு -6–6-பதிகத்தில் -கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை –சடகோபன் சொல் ஆயிரத்து –
ஓன்று ஆக்கைப் புகாமை உய்யக் கொள்வான் நின்ற திரு வேங்கடம் அன்றோ -அவசர பிரதீஷனாய் நின்று அருளுகிறான்
உலகம் உண்ட பெருவாயனில் -6-10-கூடுமாறு கூறாயே -என்று ஏங்கி சரணாகதி செய்கிறார் –
உலகம்
1-பிரளய ஆபத்திலேயோ ரஷிப்பது-உன்னை விஸ்லேஷித்து இருக்கும் அடியேனை ரஷிக்கலாகாதோ –
2 =உலகம் எல்லாம் ஈடுபட்டால் தானோ ரஷிப்பது -அவை அனைத்தும் அடியேன் ஒருவனுக்கு ஏற்பட்டால் ரஷிக்கலாகாதோ
3-துக்கம் அறியாதாரையோ ரஷிப்பது -உன்னை ஆசைப்பட்ட அடியேனை ரஷிக்கலாகாதோ
உண்ட –
4-திரு வயிற்றில் வைத்து தான் ரஷிப்பதோ-உன் வடிவைக் காட்டி ரஷிக்கலாகாதோ
பெரு –
5–உனது அதிகமான ஆசைக்கு இலக்காகாதவரை மட்டுமே ரஷிப்பதோ -உன் பாக்கள் அதிகமான பிரியம் உள்ள அடியேனை ரஷிக்கலாகாதோ
வாய் –
6–வாயாலேயோ ரஷிப்பது -உனது வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
உலப்பில் கீர்த்தி
7–எல்லையற்ற குணங்களை அழிய மாறியோ ரக்ஷிப்பது-அந்த குணங்களை அனுபவிக்கும் படி செய்து என்னை ரஷிக்கலாகாதோ –
அம்மானே –
8–சேஷி சேஷ பாவம் அறியாத உலகையே ரஷிப்பதோ-அதை அறிந்த அடியேனை ரஷிக்கலாகாதோ –
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி –
9–உன் ரூபத்தின் பெருமை அறியாதாரையோ ரக்ஷிப்பது -அறிந்தவரை ரஷிக்கலாகாதோ –
நெடியாய் –
10–உன் பெருமை உணராதாரையோ ரஷிக்கலாவது-உணர்ந்த அடியேனை ரஷிக்கலாகாதோ –
அடியேன் ஆருயிரே –
11–உன்னை விஸ்லேஷித்து தரிப்பாரையோ ரக்ஷிப்பது -தரியாத அடியேனை ரஷிக்கலாகாதோ
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே
12–கண்டு பற்றுகைக்கு அறிவில்லாதாரையோ ரஷிக்கலாவது -கண்டு பற்றுகைக்கு ஸூலபன் என்று அறிந்த அடியேனை ரஷிக்கலாகாதோ –
குல தொல் அடியேன் –
13–மற்றவருக்கு ஆட்பட்டாரையோ ரஷிக்கலாவது -அநந்யார்ஹனாய் உனக்கே ஆட்பட்ட அடியாரை ரஷிக்கலாகாதோ –
உன பாதம்
14–உபாயாந்தரங்களை பற்றினாரையோ ரஷிக்கலாவது -உன்னையே பத்ரிநாராய் ரஷிக்கலாகாதோ
கூடும்
15–பிரயோஜனாந்தரங்களை விரும்புவர்களையோ ரஷிக்கலாவது -உன்னையே ஸ்வயம் பிரயோஜனமாக கொல்வாரை ரஷிக்கலாகாதோ
ஆறு –
16–பிரிய நினைப்பாரையோ ரஷிக்கலாவது -உன்னுடன் கூட நினைப்பாறை ரஷிக்கலாகாதோ
கூறாயே
17–பெரிய சேஷ்டிதங்களை செய்தோ ரஷிக்கலாவது -மாஸூ ச என்று வார்த்தை அருளி ரஷிக்கலாகாதோ
இவ்வாறு வார்த்தை தோறும் ஆழ்வாரது அலமாப்பை தொகுத்து வியாக்யானம் அருளிச் செய்வர் –

இப்படி துக்கம் மேலிட்ட ஆழ்வார் மேல் பாசுரங்களால் –
திருவேங்கடத்தானுடைய அசாதாரண பெருமைகளையும் -விரோதி நிரசனத்துக்கு தேஜஸ் மிக்க பரிகாரங்கள் கொண்டவன் என்றும் –
காள மேக ரூபம் கொண்டவன் என்றும் -வியப்பை உண்டு பண்ணும் குணங்களை யுடையவன் என்றும் -நெஞ்சிலே புகுந்து தித்திக்கும் அமுது என்றும் –
உலக விரோதத்துக்கு தீங்கை விளைக்கும் ஸ்ரீ மத்தை உடையவன் என்றும் –
எல்லாக் காலத்திலும் இமையோர் இனம் இனமாய் வந்து வணங்கி சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடிமை செய்யும் படி திருமலையில் நிற்பவன் என்றும்
எல்லையற்ற அவயவ சோபையை யுடையவன் என்றும் பலபடியாக அனுபவித்து அகலகில்லேன் இறையும் என்று –பற்ற தகுதியாக பிராட்டியுடன் கூடிய தன்மையும்
குணப் பெருமையும் உடையவன் என்றும் அருளி பூவார் கழல்களிலே முறைப்படி பூர்ண சரணாகதி செய்து அருள்கிறார்
மன்னார் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழுலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் -நாயனார் –160-

ஆழ்வார் திருமேனியில் அதி பிரியம் கொண்டவன் கார்யம் செய்ய வில்லை –
உண்ணிலவியா ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
உனது பாத பங்கயம் -என்பதற்கு தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள் -என்றும் -பூவார் கழல்கள் -என்றும் -திருவேங்கடமுடையான் திருவடிகளில் நோக்கு என்பர் நம்பிள்ளை –
நங்கள் வரிவளை–வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே –8-2–1-என்று
கலந்து பிரிந்த பராங்குச நாயகி திருவேங்கடமுடையான் இடம் ஆசைப்பட்டு பாசுரம் இடுகிறாள்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலையுண்ட வாயான் மாதவனே-10–5–7-என்று
அடியாருக்காக கண்ணனாய் வந்து திருவவதாரம் செய்து விரோதியை நிரசித்தவனாய் சிரமத்தை போக்கும் நிறத்தை யுடையனான திருமகள் கேள்வன் –
துரும்பும் எழுந்து ஆடும்படி அடிமையிலே மீண்டு அல்லது நிற்க முடியாத வடிவு யுடையவன் –
மாதவன் வேங்கடம் மேயான் -ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே-இவ்வாறு திருவேங்கடமுடையானை அனுபவித்து அவா அற்று வீடு பெற்றார் ஆழ்வார் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வரதராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading