அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-2-

வீடுமின் முற்றவும் -அவதாரிகை –
இரண்டாம் திருவாய் மொழியில் –இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான
தத் இதர சகல தியாகத்தையும் பஜன பிரகாரத்தையும் அஸ்தைர்யத்தையும் தியாக பிரகாரத்தையும் தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
அதிசயித புருஷார்த்தத்வத்தையும் சர்வ ஸமத்வத்தையும் விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும் தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –
————————————————–
இதில் முதல் பாட்டில் -சகல இதர பரித்யாக பூர்வகமாக பகவத் விஷயமான ஆத்மசமர்ப்பணத்தை விதிக்கிறார் –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-

முற்றவும்-பஜன விரோதியான ஸாத்ய சாதனங்கள் எல்லாவற்றையும்
வீடுமின்-சவாசனமாக விடுங்கோள்-
அவ்வளவில் நில்லாதே
வீடு செய்து -அவற்றை விட்டு
உம்முயிர்-உங்களுடைய ஆத்மாவை
வீடுடை யானிடை –மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமி பக்கலிலே
வீடு செய்ம்மினே –விடுதலைப் பண்ணுங்கோள் –
வீடு இசைமினே-என்றும் சொல்லுவர்-
—————————
அநந்தரம் தியாக புத்தி ஸுகர்யத்துக்காக த்யாஜ்யங்களுடைய நிலையாமையை அருளிச் செய்கிறார் —

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –1-2-2-

உயிர் -ஆத்மா
மன்-தனக்கு அபிமதமாகச் செறிந்த
ஆக்கைகள் -பந்தக சரீரங்கள்
மின்னின் நிலையில -முன்னிலும் காட்டிலும் -தோன்றியே மாயக் கடவதான நிலையையும் உடையவல்லவாய் இருக்கும்
என்னும் இடத்து -என்று சொல்லும்படி யாதலில்
இறை யுன்னுமின் நீரே –ஸ்வாமியை மனனம் பண்ணுங்கோள் –

மன்னுயிர் ஆக்கைகள் என்று ஆத்மாவுக்கு மாறி மாறி வரும் ஆக்கைகள் -என்றுமாம் –
இறை யுன்னுமின் நீரே-என்று நீரே நிலையாமையைச் சிறிது நிரூபியுங்கோள் -என்றும் சொல்லுவர்-
இது பூர்வ உத்தரமான இரண்டு பாட்டிலும் சொல்லுகிற பகவத் ஆஸ்ரயண பர்யந்தைக்குச் சேராது –
——————————–
அநந்தரம் தியாக பிரகாரத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3-

நீர் நுமது என்றிவை -ஆத்ம ஆத்மீயங்களில் யுண்டான அஹங்காரமும் மமகாரமும் ஆகிற இவற்றை
வேர் முதல் மாய்த்து -ருசி வாசனைகள் ஆகிற பக்க வேரோடு முதல் அறுத்து
இறை-ஸ்வாமியை
சேர் மின் -சேருங்கோள்
உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே-ஆத்மாவுக்கு அத்தோடு ஒத்த நிரப்பம் இல்லை –
—————————–
அநந்தரம் இப்படி தியாக பூர்வகமாக பஜனீயமான வஸ்துவினுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-

இல்லதும் உள்ளதும் -ஸ்வரூப பரிணாமத்தாலே ஒருபடிப்பட்ட அஸ்தித்வம் இல்லாமையால் அசத்திய சப்த வாச்யமாயும் -ஏக ரூபவத்தாலே ஒருபடிப்பட்ட அஸ்தித்வத்தை யுடைத்தாகையாலே சத்ய சப்த வாச்யமாயும் யுள்ள அசித்துவினுடையவும் சித்தினுடையவும் படி
அல்லது -அன்றியே
அவனுரு-அவனுடைய ஸ்வரூபமானது
எல்லையில் அந்நலம் –அபரிச்சின்னமான கீழ்ச் சொன்ன ஆனந்தத்தை வடிவாக உடைத்தாய் இருக்கும்
பற்று அற்றே –அத்தை இதர விஷயங்களில் பற்று அற்று
புல்லு –சினேக யுக்தமாகச் செறி-

புல்லுதலாவது -ஸ்னேஹமான செறிவாகையாலே பஜனத்தினுடைய அத்யர்த்த பிரியத்வம் சொல்லுகிறது –
புல்கு -என்றும் சொல்லுவர் –
கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது
த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் –
பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –
————————————–
அநந்தரம் பஜனீயனுடைய அதிசயித புருஷார்த்த தத்வத்தை அருளிச் செய்கிறார் –

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

பற்று-புறம்புள்ள பற்று
அற்றது எனில் -அற்றது என்ற போதே
உயிர் -உயிரானது
வீடு உற்றது -மோக்ஷத்தை உற்றதாம்
அது -அந்த ஆத்ம பிராப்தி மோக்ஷத்தை
சேற்று -சேர்த்து
மன்னுறில்-நிலை நிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில்
அற்று -இதர சங்கத்தை அறுத்து
இறை – ஈஸ்வரனை
பற்று -ஆஸ்ரயி
பற்று அற்றது எனில் உயிர் வீட்டை உற்றது என்று சாமான்யத்தாலே சொல்லி அந்தப் பற்றைச் செற்று
நித்ய புருஷார்த்தத்தைக் கிட்டில் அறுதி உடையையாய் இரையை ஆஸ்ரயி என்றுமாம் –
——————————————-
அநந்தரம் பஜனீயனுடைய சர்வ சமத்வத்தை அருளிச் செய்கிறார் –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

பற்றிலன் யீசனும் -சர்வேஸ்வரனாய் இருக்கச் செய்தேயும் பூர்வ ஆஸ்ரிதரான மஹிஷீ பரிஜா நாதிகளில் சங்கம் அற்று
முற்றவும் நின்றனன்-அபூர்வ ஆஸ்ரிதரான நம் பக்கலிலே தாரகத்வ போஷகத்வ போக்யத்வாதிகள் எல்லாமாக நிலை நின்றான்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –நீயும் சாம்சாரிக சங்கத்தை விட்டு அவனுடைய தாரகதவாதி ஸமஸ்த ஸ்வ பாவங்களிலும் அந்தரபவிக்கப் பார் –
அன்றியே –
சர்வேஸ்வரனாய் இருக்கச் செய்தேயும் நம் பக்கல் சங்கத்திலே உளனாய்-சமோஹம் சர்வ பூதேஷூ என்று ஆஸ்ரயணீயத்வத்திலே தாரதம்யம் அற்று நின்றான் –
நீயும் அவன் பக்கலிலே சங்கத்திலே நிலை யுடையையாய் அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதியாதி ஸமஸ்த பிரகார அனுபவத்தில் அந்தர்ப்பவி என்னவுமாம் –
—————————————-
அநந்தரம் அவன் விபூதி மஹத்தையைக் கண்டு இறாயாதே அவனுக்கு அத்தோடு உண்டான சம்பந்தத்தை அனுசந்தித்து அதினுள்ளே சொருகப் பார் -என்கிறார் –

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-

அடங்கு எழில் சம்பத்து -கட்டு அடங்க அழகிதான சம்பத்தை
அடங்கக் கண்டு ஈசன்-ஓன்று ஒழியாமல் அனுசந்தித்து ஈஸ்வரனுக்கு
அஃது -அது
அடங்கு எழில் என்று அடங்குக உள்ளே –அதிசய கரமான சேஷமாய் இருக்கும் என்று சம்பத்தை அறிந்து அதினுள்ளே விபூதி ஏக தேசமாகச் சொருகு –
சம்பந்த ஞானம் உண்டானால் உள்ளே அடங்கலாம் இறே-
———————————
அநந்தரம் பஜன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்–மனன அதிகரணமான மனஸூம்-ஸ்துதி அதிகரணமான வாக்கும்
ப்ரணமாதிகரணமான காயமும் -நமக்கு என்ன அடியிலே யுண்டாய் சந்நிஹிதமான இம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி பிரயோஜனத்தை நிரூபித்து இதர விஷய அன்வயத்தைத் தவிர்த்து
ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே பரதந்த்ரனாய் ஒதுங்கு
உரை செயல் என்று வ்ருத்திகளை இட்டு தத் கரணங்களை லஷிக்கிறது -உள்ளிக் கெடுத்து என்று இவற்றினுடைய
பூர்வ வ்ருத்தத்தை ஆராய்ந்து அந்நிய பரதையைத் தவிர்த்து என்றுமாம் –
——————————
அநந்தரம் பஜன பலமான விரோதி நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார் –

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

ஒடுங்க அவன் கண் –ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகாரதயா அந்தரபவிக்கவே
ஓடுங்கலும் –ஆத்மாவினுடைய ஞானாதி ஸ்வபாவ சங்கோசமும்
எல்லாம்–தத் ஹேதுவான அவித்யாதிகளும் எல்லாம்
விடும் -விட்டுக் கழியும்
பின்னும் –க்ருதக்ருத்யா பிரதீஷந்தே -என்கிறபடியே பின்னையும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–ஆரப்த சரீர சேஷத்தினுடைய முடிவை பார்த்திரு —
ஆக்கை விடும் பொழுது என்ன வேணுமோ -என்றுமாம் –
அன்றியே
பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து -பின்னையும் அந்திம தசையில் நினை என்று அந்திம ஸ்ம்ருதியை விதிக்கிறது என்பாரும் உளர் –
——————————-
அநந்தரம் பஜனீயனுடைய ப்ராப்யத்வ பூர்த்தியை அருளிச் செய்கிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

எண் -ஆனந்த வழியிலே சொல்லுகிற கணக்கிலே எண்ணுக்கு
பெருக்கு -அவ்வருகே பெருகி இருப்பதாய்
அந் நலத்து -அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான ஆனந்தாதி குணத்தை யுடைய
ஒண் பொருள்- அகமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய் ஆவிர்ப்பூத ஸ்வரூபமான விலக்ஷண ஆத்ம வர்க்கம் என்ன
ஈறில வண் புகழ் நாரணன்–அசங்க் யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையன் ஆகையால் –
நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய
தின் கழல் சேர் –ஆஸ்ரிதரைக் கை விடாதபடி ஸ்திரமான திருவடிகளை ஆஸ்ரயி —
விலக்ஷண குண விபூதி விசிஷ்டனான நாராயணன் திருவடிகள் ஆஸ்ரயணீயமாகச் சொல்லுகையாலே இனக்குச் சொல்லுகிற ஆஸ்ரயணம்
பஜன பிரபதன சாதாரணம் -என்னவுமாம் –
இப்படி கீழ்ப் பாட்டுக்களிலும் உபய ஆகார சாதாரண்யம் நிரூபித்துக் கொள்க –
—————————————
அநந்தரம் இத்திருவாய் மொழியினுடைய உபாதேயத மத்வத்தைப் பலமாக அருளிச் செய்கிறார் –

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்–செறிதலை யுடைத்தான தடாகங்களை யுடைய அழகிய திரு நகரியில் ஆழ்வார் அருளிச் செய்த
சீர் தொடை -சப்த லக்ஷண கதமான சீர்களினுடைய தொடையை யுடைய
ஆயிரத்து இப்பத்து -ஆயிரத்தில் ஆஸ்ரயண உபதேச பரமான இப்பத்து
ஒர்த்த-நிரூபிக்கப் பட்டன –
ஒர்த்த இப்பத்தைச் சேர் என்று வினையாகவுமாம் –
இத்திருவாய் மொழி இரு சீராய் குறளடி நான்கும் ஒத்து இருக்கையாலே வஞ்சித்து துறை –
————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading