திரு சரம ஸ்லோக சுருக்கு –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

கல்லார் அகலும் கருமமும் ஞானமும் காதலும் மற்று
எல்லா நிலைகளுக்கு ஏற்ப விதித்த கிரிசைகளும்
வல்லார் முயல்க வலி இழந்தார் எந்தனைத் தொழுக என்று
எல்லாத் தருமம் உரைத்தவன் இன்னடி சேர்ந்தனமே –1-

——————————————————————-

வெறுமை யுணர்ந்து அது முன்னிட்டு வேறு அங்கம் இல்லை எனக்
குறியவன் இன் நறவு எட்ட குறித்திடும் கோணை துறந்து
உறும் அயன் அஸ்திரம் என்னப் பொறா நிலை யோர்ந்திடவோர்
அற நெறி யன்று உரைத்தான் அழியா வறமாயினனே–2-

குறியவன் இன் நறவு எட்ட -குள்ளன் எட்டாத இனிய கொம்புத் தேனை அடைய
குறித்திடும் கோணை துறந்து -இலக்கு வைக்கும் துன்பத்தைக் கை விட்டு
அயன் அஸ்திரம் என்னப் பொறா நிலை -வேறு சாதனத்தைப் பொறுக்காத நிலைமையை கொண்ட பிரம்மாஸ்திரம் –

————————————————————————————–

வாரிதி விட்டு மலர்மகளோடு மதுரை வந்து
பாரத வெஞ்சமர் பார்மகள் பாரம் செக யுகந்து
சாரதியாய் முன்பு தூதனுமாய்த் தளரும் விசயன்
தேர் அதில் நின்று அவனைத் தேற்றினான் திறம் ஆயினமே –3-

வாரிதி விட்டு -திருப்பாற்கடலை விட்டு
விசயன் தேர் அதில் நின்று அவனைத் தேற்றினான் திறம் ஆயினமே -ஸ்ரீ பார்த்த சாரதிக்கு அடிமை பூண்டோம் –

மாம் பதார்த்தமும் அவதார ரகச்யங்களையும் அருளுகிறார் –

—————————————————————————————

தன் அருளால் பெரும் சாதனம் சாதகன் என்று இவற்றைத்
தன்னுடன் எண்ணுதல் நீங்கத் தனித்து ஒரு சாதனமாய்ப்
பொன்னருளோடும் அப்பூ மகளோடும் புகழ நின்ற
வின்னுரை ஈசனையே ஏகம் எண்ண இசைந்தனமே –4-

ஏக பதார்த்தம் அருளுகிறார் -உபாயம் பலன் இரண்டுமே சர்வேஸ்வரனே –
சரணம் அடைவதும் அவன் சங்கல்பத்தாலேயே -என்றவாறு –

————————————————————————————————-

ஊனில் இணைத்து உழல்விக்கும் வினைக்கடலுள் விழுந்த
யான் எனதான குணங்கள் எனக்கு இசை நல் வழியும்
தான் உதவித் தனைத் தந்திட நின்ற தனித் தருமம்
நான் இனி வேறோர் பரம் நணுகா வகை நல்கியதே –5-

சரண சப்தார்த்தம் அருளுகிறார் -சேதனனுக்கு ஸ்வரூப ஞானம் பிறப்பித்து பக்தி பிரபத்தி உபாயங்களை காட்டி அருளி
தன்னையே அனுபவிக்கும் பரமாக காட்டி அருளி -எல்லா பொறுப்பும் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு அருளுகிறான் என்றவாறு –

——————————————————————————————————-

கடுவினை நாம் பெரும் பேற்றைத் தகைந்தமை கண்டு நம் மேல்
தொடை விலகாமல் இசைந்து ஒரு காலம் துணிவுடனே
யுடைமை யடைக்கலமாக வடைக்கும் உகப்பதனால்
யடை என வன்று உரைத்தான் அடைவித்தனன் தன்னடியே –6-

தொடை விலகாமல் இசைந்து-சாஸ்திர ஆஜ்ஞ்ஞை வழுவாமல் எம்பெருமானுக்கு உகப்பானவற்றையே ஏற்றுக் கொண்டு
இத்தால் இது காறும் கர்மங்கள் விலக்கி வந்த புருஷார்த்தத்தை பெற்று மஹா விசுவாசத்துடன்
ஆத்ம சமர்ப்பணம் பண்ணி -வ்ரஜ -பதார்த்தம் –

தொடை விலகாமல் -ப்ரதி கூல்ய வர்ஜனம்
இசைந்து -ஆனுகூல்ய சங்கல்பம்
துணிவுடனே -மஹா விஸ்வாசம்
அடைக்கலமாக -கோப்த்ருத்வ வர்ணம்
ஆடை -அங்கியான ஆத்ம சமர்ப்பணம்
அடைவித்தனன் -சாத்விக த்யாகம்-

—————————————————————————————-

கான் என்ற வேதங்கள் காக்கும் பரன் என்று காட்ட நின்றோன்
தான் என்று அறிய கிலார்க்கு அறிவிக்கும் தனித் திறலோன்
வான் ஒன்றினாரோடு மானிடன் என்ன வவதரிப்பான்
நான் என்ற நந்திருமால் நமை நற்பதம் சேர்த்திடுமே –7-

நான் என்ற நந்திருமால்-அஹம் என்று சரம ஸ்லோகத்தில் கூறிக் கொண்ட ஸ்ரீ யபதி என்றபடி –

———————————————————————————————

தன்னிலை காட்டித் தனிமை யுகந்து தனித்தகவால்
அல்நிலை தீர வடைக்கலம் கொண்டு அடி சேர்ந்திடவே
பன்னிலை மூல வெழுத்திலும் பாண்டவன் தேர் தனிலும்
முன்னிலை கொண்ட பிரான் எமை முன்னிலை கொண்டனனே –8-

தன்னிலை காட்டித்-ஈச்வரனான தனது ஸ்வரூபத்தை ஸ்ரீ கீதா சாஸ்திரம் முகமாக -வெளியிட்டு அருளி
தனிமை யுகந்து -உபாயாந்தரன்களை அனுஷ்டிக்க முடியாத நம்முடைய ஆகிஞ்சன்யத்தை திரு உள்ளத்தில் கொண்டு உகந்து
தனித் தகவால் -ஒப்பற்ற கருணையினால்
அல்நிலை தீர -அஞ்ஞானம் ஆகிய இருளை நீக்க
வடைக்கலம் கொண்டு அடி சேர்ந்திடவே
பன்னிலை மூல வெழுத்திலும் -பல ஸ்வ பாவங்களை யுடைய வேதத்தில் முதல் அஷரமான பிரணவத்திலும்
பாண்டவன் தேர் தனிலும்
முன்னிலை கொண்ட பிரான் எமை முன்னிலை கொண்டனனே
த்வா -என்று நம்மை முன்னிலையாக்கி உபதேசித்து அருளினான் என்றவாறு
பொறுப்பை அவன் இடமே சமர்ப்பித்து க்ருதக்ருத்யரராய் அவனையே எதிர்பார்த்து நிற்கிற -த்வா -சப்தார்த்தம் –

———————————————————————————————–

காடுகளோ நரகோ கடிதாம் கரளத் திரளோ
சூடு விடா அனலோ தொலையா நிலை நல்லிருளோ
சாடு படச் சரணால் அன்று சாடிய சாரதியார்
வீடு செய்வித்து நமை விடுவிக்கின்ற பாவங்களே –9-

கரளத் திரளோ-விஷத்தின் கூட்டமோ
சர்வ பாபேப்யோ -பதார்த்தம்
அவித்யை -அதனால் வரும் கர்மம் -இதனால் மீண்டும் அவித்யை -ருசி –வாசனை –ஸ்தூல சூஷ்ம பிரகிருதி சம்பந்தம் –
சகடாசூர நிரசனம் போலே இவற்றை வேர் அற தீர்த்து அருளுவான் என்றவாறு
நம்மால் கண்டு அறியாத முடியாமையால் காடுகள்- பொறுக்க முடியா துன்பம் தருவதால் நரகமாகவும்
உள்ளே வளர்ந்து ஆத்மாவைக் கெடுப்பதால் விஷமாகவும் -சம்சார தாபம் தருவதால் அக்னியாகவும் –
சேதன ஸ்வரூபம் மறைப்பதால் நள்ளிருள் ஆகவும் வர்ணிக்கப் படுகின்றன –

————————————————————————————————

சென்றுயர் வானமர்ந்து அவ்வடியாருடன் சேர்ந்திடவே
இன்று எனில் இன்று நாளை எனில் நாளை யினிச் செறிந்து
நின்ற நிலை நின் அனைத்து வினையும் நின் விட்டு அகலக்
கன்றி விடுப்பான் என்றான் கருத்தால் நமைக் காத்திடுமே –10-

சென்று -அர்ச்சிராதி மார்க்கத்தால் சென்று
கருத்தால் -தன் சங்கல்ப்பத்தினால்
மோஷயிஷ்யாமி பதார்ர்த்தம் –

—————————————————————————-

அறிவும் அனைத்தும் இலா வடியோமை யடைக்கலம் கொண்டு
உறவென நின்ற வெலா முறவே நின்ற தான் எமக்காய்
மறுபிறவித் துயர் வாரா வகை மனம் கொண்டு அகலா
விறையவன் இன்னருளால் எங்கள் சோகம் தவிர்த்தனனே –11-

அறிவும் அனைத்தும் இலா வடியோமை -ஞான யோகம் போன்ற எந்த சாதனமும் இல்லாத தாசர்களாகிய
நம்மை யடைக்கலம் கொண்டு –
உறவென நின்ற வெலா முறவே நின்ற தான் எமக்காய் –மறுபிறவித் துயர் வாரா வகை
மனம் கொண்டு அகலா விறையவன்-நம் மனத்தை இருப்பிடமாகக் கொண்டு அதை விட்டு நீங்காத சர்வேஸ்வரன்
இன்னருளால் எங்கள் சோகம் தவிர்த்தனனே-
மா ஸூ ச -பதார்த்தம் -இதுவும் விதி வாக்கியம் -எதற்கும் சோகிக்க வேண்டாம் என்றவாறு

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading