ஸ்ரீ பராசர பட்டர் அருளிய நம்பெருமாள் திருமஞ்சன கட்டியங்கள் — ஸ்லோஹங்கள்–21-27-

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-

ஸ்ரீ நம்பெருமாள் ஒரு திரு ரேவதி தினத்தன்று திருமஞ்சனம் கண்டு அருளுவது -மகா யாகம் நடத்திய பின்பு
அவபிருத ஸ்நாநம் செய்வதாக உருவகப்படுத்தி அருளுகிறார்
சக்கரவர்த்தி திரு மகன் -யஜமானன் -ராவண வதம் யாகம் -போல வர்ணித்து அருளுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

சர்வஸ்மாத் பர சாம்பராயசவநே சக்திஸ் தவேச்சாத்மிகா
பத்நீ பாத்ர கணாச்ச ஹேதி பதய ப்ராப்தர்த்விஜோ பாஹவ
பௌலஸ்த்ய பசவோ தசா நனமுகா ரஷாபலம் ஜ்ஞாநினாம்
ஸ்ரீ மன் மஜ்ஜனகை வாதவப்ருதஸ் நாதேவ ரங்கேஸ்வர –ஸ்லோகம் -21-

நாயந்தே
யஸ் சர்வஜ்ஞ்ஸ் சர்வித் -என்றும் -பராச்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய -என்றும் சொல்லுகிறபடியே
சர்வஜ்ஞராய் -சர்வசக்தியாய் -அவாப்த சமஸ்த காமரான தேவரீர் லீலா விபூதியான இந்த லோகத்திலே
ராவணோ நாம துர்வ்ருத்த ராஷசோ ராஷசேஸ்ர -என்கிறபடியே தேவரீருடைய திரு நாபீ கமலத்திலே உத்பவனான பிரம்மாவின்
மானச புத்ரரான விச்வரஸ் என்கிற மகரிஷிக்கு ராவணன் என்கிற பெயரையுடைய ராவணன் ராஷச ராஜன் புத்ரனாகப் பிறந்தான் –
நைனம் ஸூர்ய பிரதபதி பார்ச்வேவாதி ந மாருதி சலோர்மி மாலீ தம் த்ருஷ்ட்வா சமுத்ரோபி ந கம்பதே -என்கிறபடியே
அவனுடைய ஆஜ்ஞைக்குப் பயப்பட்டு ஸூ ர்யனும் தன் கிரணங்களை முழுதும் விளங்க விடான் –
வாயு ச்பர்சிக்கவும் பயப்படும் -ம்ருத்யு தானே பய ஹேதுவாய் இருக்க பயம் தன்னதாய்க் கொண்டு அவனுடைய
நியமனத்திலே வர்த்தியா நிற்கும் சமுத்ரமும் அவனுடைய முத்ரா தாரணம் செய்தாப் போலே ஸ்தம்பியா நின்றது –

ஸ்தாணுவை-சிவனை — கைலாசத்தொடு சலிப்பித்தும் வைஸ்ரவணனை சிரவண ரஹிதனைப் போலே அத்யவசித்து
அவன் புஷ்பகத்தை தன்னதாக்கியும் யக்ஞங்களை அழித்தும் ரிஷிகளை நலிந்தும் இப்படிக்கொத்த துர்வ்ருத்தன் ஆகையாலே
ப்ரஹ்மாதி சகல தேவதைகளும் தப்தராய் சாயாவ்ருஷமிவாத்வாக -என்று சொல்லுகிறபடியே
சமஸ்த தாபஹரரான தேவரீரை சரணம் புகுந்த அளவிலே
தத பத்ம பலாசாஷா க்ருத்வாத்மா நம் சதுர்விதம் -என்றும்
பிதரம் ரோசயாமாச ததா தசரதம் நருபம் -என்றும் தேவரீர் தசரதாத் மஜாராக அவதீர்ணராய் அவனப்ரவ்ருத்தரான தேவரீர்
-வன பிரவ்ருத்தரான காலத்திலேயே தசமுகன் ஹிரண்ய அபஹாரம் செய்தவர்களைப் போலே
ஹிரண்ய வர்ணை யான பிராட்டியை சௌ ந்தர்யத்தாலே கொண்டு போக
தேவரும் மகாராஜருடனே புறப்பட்டு அருளி ஜல -ஜட -பிரக்ருதியான சமுத்ரத்தை பந்தித்து
அதாஷிண்ய பரராகையாலே யுத்தத்திலே தீஷித்து அருளி எழுந்து அருளிற்று
அந்த சரமம் தீர ஜன்ம திவசத்திலே திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி
யஜமானன் ஒருவன் யஜ்ஞத்தை முடித்து அவப்ருதம் செய்யுமா போலே இரா நின்றது -எங்கனே என்னில் –

சர்வஸ்மாத் பர சாம்பராயசவநே சக்திஸ் தவேச்சாத்மிகா பத்நீ–
இச்சா சக்திரியம் லஷ்மீ-என்கிறபடியே இச்சா சக்தி பத்நியாகவும் –

பாத்ர கணாச்ச ஹேதி பதய –தச யஜ்ஞாயுதான் யஸ்ய சக்ரா தீஞாயுதாநி ச -என்கிறபடியே திவ்ய ஆயுதங்களே யஜ்ஞபாத்ரங்கள் ஆகவும் –

ப்ராப்தர்த்விஜோ பாஹவ –
சத்வார ருத்விஜ சமுத்திஷ்டந்தி -என்றும் -ருத்விஜ
ஷோடஸ புஜா-என்றும் சொல்லுகிறபடியே
திருத் தோள்கள் ருத்விக்குகள் ஆகவும்

பௌலஸ்த்ய பசவோ தசா நனமுகா –
ஸ்வ பக்த ப்ரத்ய நீகாயே பசவோத்ரா பிரகீர்திதா -என்று சொல்லுகிறபடியே ராவண கும்ப கர்ணாதிகள் பசுக்களாகவும் -யாகத்தில் பலியிடும் ஆடுகள்
கும்ப நிகும்பாதிகள் சமித்துக்கள் ஆகவும் –நின் தன் சோதி வெள்ளம் அக்னியாகவும்

ரஷாபலம் ஜ்ஞாநினாம் –
சத்துக்கள் விஷயமான தேவரீருடைய நிர்ஹேதுக கிருபை தஷிணை யாகவும்

ஸ்ரீ மன் மஜ்ஜனகை வாதவப்ருதஸ் நாதேவ ரங்கேஸ்வர —
ஆக இப்படி சாங்க பல யுக்தமான சங்க்ராம யக்ஜ்ஞத்தை -யுத்தமாகிய யாகத்தை —முடித்து அவப்ருத ஸ்நானம் பண்ணி
எழுந்து அருளி நிற்கிற நிலை போலே இரா நின்றது –

——————————————————————–

ஒரு அமாவாசையில் திருமஞ்சனமாடி அருளிய நம்பெருமாபெருமாளை பட்டர் அமாவாசையின்
லஷணங்களுக்கு ஒப்பாக சிலேஷ பங்கியில் அனுபவிக்கிறார் –

க்ரியா தர்சே தர்சே க்ருதமாகவி தீநா முபகதே
பிரவ்ருத்தஸ் நாநஸ்த்வம் பரமுதயசே ரங்க தரணே
பிரகர்ஷேண உத்புத்தத் விஜகுலம சேஷம் பிரதிதிசம்
ப்ரஹ்ருஷ்டா பத்மோர்வீ பவதி ச ஜகத்த் வஸ்த திமிரம் –ஸ்லோகம் -22–

நாயந்தே
விஸ்வம் விஷ்ணு -என்றும் -விஸ்வம் நாராயணம் தேவம் -என்றும் -விஸ்வம் நாராயணம் ஹரிம் -என்றும் –
விஸ்வ மேவேதம் புருஷ -என்றும் -தத் த்ருஷ்ட்வா ததேவா நுப்ராவிசத் -என்றும்
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் சொல்லுகிறபடியே
தேவரீர் தாமே விஸ்வமுமாய் -தேவரீர் தாமே விஸ்வத்தையும் சிருஷ்டித்து அதுக்கு அந்தர்யாமியாய்
ரங்க நாத ஜகன்னாத -என்றும் -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும்
சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்றும் சொல்லுகிறபடியே
ஜகன்னாதனாய் எழுந்து அருளி இருக்கிற தேவரீர் இந்த அம்மாவாசையில் திருமஞ்சனம் பண்ணி அருள
விஸ்வமும் மதா பிபதி கஷாயம் என்னும் ந்யாயத்தாலே ஸ்நாதமாய்க் கொண்டு ஸூகிதமாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

க்ரியா தர்சே தர்சே க்ருதமாகவி தீநா முபகதே பிரவ்ருத்தஸ் நாநஸ்த்வம் பரமுதயசே –
சுருதி ச்ம்ருதிர் மமை வாஜ்ஞா -என்று தேவரீருடைய சங்கல்ப்பத்தின் படியே ஒழுகி தேவரீருடைய சங்கல்ப்பத்தின் படியே ஒழுகி
தேவரீருடைய ஆஜ்ஞா பரிபாலனம் செய்கிறவர்களுடைய தொழிலிலே தேவரீரும் இழியும் படியாய் இருந்தது
அது எங்கனே என்னில்
அவர்கள் இந்த தர்சனத்திலே இஷ்டிபார்வணாதி வித்யனுஷ்டான க்ரமம் ஸ்பஷ்டமாகக் கொள்ளுகையாலே
இந்த தர்சனத்தை அவர்களுக்கு ஆதர்சம் என்று சொல்லலாய் இருந்தது
இப்படிப்பட்ட தர்சனத்திலே திருமஞ்சனமாடி அருளி எழுந்து அருளி நிற்கிற தேவரீர் தாமும் விளங்கா நின்றீர் –

ரங்க தரணே உதயசே
தேவறேருடைய உதயமும் இதிலே கானலாய் இருந்தது
தர்சனத்திலே ஆதித்ய உதயத்தில் சர்வ க்ருத்யங்களும் விஸ்வத்தில் காணலாய் இருந்தது –

பிரகர்ஷேண உத்புத்தத் விஜகுலம சேஷம் பிரதிதிசம்
ஆதித்ய உதயத்திலே சர்வபஷி ஜாதங்களும் சர்வ திக்குகளிலும் நித்ரையைப் போக்கி உணரக் கடவதே இருக்கும்
தேவரீருடைய உதயத்திலே ப்ராஹ்ம வர்க்கம் எல்லாம் அத்யந்தம் ப்ரபோதத்தை யுடையதாய் இரா நின்றது –

ப்ரஹ்ருஷ்டா பத்மோர்வீ –
ஆதித்ய உதயத்திலே பத்மோர்வீ உண்டு -பத்மம் -ஷேத்ரம் -அது விகாசம் அடையக் கடவதே இருக்கும்
தேவரீர் திருமஞ்சன மாடி யருளி விளங்கா நிற்க -பத்மாலயா பத்மா எனப்படும் லஷ்மியும் உர்வீ பூமியும் சேரப்ரஹ்ருஷ்டைகளாய் இரா நின்றார்கள் –

ஜகத்த் வஸ்த திமிரம் —
ஆதித்ய உதயத்திலே விஸ்வமும் அந்தகாரம் நீங்கியதாய் இருக்கும்
தேவரீர் திருமஞ்சனமாடி அருளின தீர்த்த ப்ரபாவத்தாலே பிராணி ஜாலங்களுடைய திமிரம் -பாபங்கள் -நசியா நின்றன

ஆக இப்படி எழுந்து அருளி இருக்கும் நிலை திருமஞ்சனம் என்கிற வ்யாஜத்தாலே ஆஸ்ரயித்தவர்களின் சகல பாபங்களையும்
போக்க வேணும் என்று கொண்டு ஒருப்பட்டு எழுந்து அருளி நிற்கிற நிலை போலே இருந்தது –

————————————————————————————————-

அமாவாசை ஞாயிற்றுக் கிழமை திருவோணம் -மூன்றும் சேர்ந்தால் வ்யதீபாதம் -எனப்படும்
இது நூறு ஸூ ர்ய க்ரகனத்துக்கு சமமாம் –
இந்த வ்யதீபாதம் தை அல்லது மாசி மாதம் வந்தால் அர்த்தோதயம் என்பர்
இது திங்கட் கிழமை வந்தால் மகோதயம் என்பர் –
அர்த்தோதய புண்ய கால திரு மஞ்சனம் கண்டு அருளும் நம்பெருமாளிடம் புண்ய கால விசேஷ அம்சங்களை
ஏறிட்டு சிலேஷ பங்கியில் அருளிச் செய்யும் ஸ்லோகம் –

சந்த்ரார்கௌ ரங்க தாமன் ஸ்ரவண முபகதௌ சஷூராகார யோகாத்
மாந்யோ மாசங்க மஸ்தே சதசி பஹூமதோ மித்ர வாரஸ்ய யோக
காலோயம் புஷ்யதிஷ்டா பவதி மயி மஹாம்ஸ்த்வத் கடாஷஸ்ய பாத
த்வத் காந்த்யர்நௌக சேது த்வமஸி வயமிஹ ப்ராப்த தீர்த்தா பவாம –ஸ்லோகம் –23-

நாயந்தே
ப்ருதிவ்யப ஸூ ப்ரலீயதே ஆபஸ்தே ஜசிலீ யந்தே தேஜோ வாயௌ லீயதே -என்ற லய பிரகரக்ரியையாலே
ப்ருதிவ்யந்தமான கார்ய வர்க்கம் எல்லாம் ஸ்வ ஸ்வ காரணத்திலே லயித்து -அசரம் தமாசி லீயதே தம ரே தேவ ஏகி பதி -என்றும்
பிரக்ருதிர்யா மயாஸ் க்யாதா வ்யக்தாவ்யக்த ஸ்வ ரூவணீ
புருஷஸ் சேத்யுபாவேதௌ லீயதே பரமாத்மநி -என்றும்
அஷர சமஷ்டி வாச்யமான ஜீவா சமஷ்டியும் பிரதான தத்வமும் பர ஸ்வ ரூபத்திலே லயித்து
ஆஸீ திதம் தமோ பூதம பிரஜ்ஞாத ம லஷணம்
அப்ரதர்க்ய மவிஜ்க்னேயம் பிர ஸூ ப்தமிவ சர்வத -என்றும்
நாஹோ ன் ராத்ரிர்த நபோத பூமி -என்றும் நப்ரஹ்மா தேசான -என்றும் -தேமே த்யாவா ப்ருத்வீ -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லாவன்று -என்றும் -சொல்லுகிற பிரளய அவஸ்தையில் ஸ்ரீ ஸ்தனம் போலேயும்
அத்யந்த ஸ் ப்ருஹா விஷயமான ஆத்மவர்க்கம் அசித் கல்பமாய் ஒரு புருஷார்த்தத்திலும் அந்வயிக்கப் பெறாத ஆகாரத்தைக் கண்டு –

அசித விசேஷிதாத் ப்ரலய சீமநி சம்சாரத கரண கலேபரைர் கடயிதும் தயமான ம நா -என்கிறபடியே தயமானமானவாய்க் கொண்டு
கரண களேபர பிரதானம் பண்ணி புருஷார்த்தன்களிலே அன்வயிப்பித்து உஜ்ஜீவிப்பதாகத் திரு உள்ளத்திலே கோலி அருளி
ததை சத பஹூ ஸ் யாம் பிரஜாயேயே தி தத்தேஜ ஜஷத தா ஆப ஜ ஷத்த -என்றும் -சதபோதப்யாத -என்றும் –
ஈஷண தப சப்தா பரபர்யாயமான சங்கல்பத்தைப் பண்ணி அருளி –
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ பிபாச சத்யகாமஸ் சத்யசங்கல்ப -என்று கொண்டு
சத்யசங்கல்பாதி குண விசிஷ்டர் ஆகையாலே ஸ்வ சங்கல்ப அனுகுணமாக இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்து –
தத் ஸ்ருஷ்ட்வா ததேவா நுப்ராவிசத் -என்கிறபடியே இந்த ஆத்ம வர்க்கத்தினுடைய
சத்தா ஸ்திதி பிரவ்ருத்தி நிவாஹகராய்க் கொண்டு ரஷித்து அருளியும்
அஜாய மா நோ பஹூ தா விஜாயதே -என்றும் -பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -என்றும்
அஜோபி சந் நவ்யயாத்மா பூதாநா மீச்வரோபி சந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாம்யாத்மமாயயா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வ சங்கல்ப்பத்தாலே ஸ்வ பிரக்ருதியான ஜ்ஞான சக்த்யாதி குணங்களுடனே
தேவ மனுஷ்யாதிகளுக்கு விசஜாதீயராய் இருக்கச் செய்தே தத் சஜாதீயராய்க் கொண்டு அவதரித்து அருளி
துஷ்ட நிரசனாதிகளாலே தர்ம சம்ஸ்தாபனம் பண்ணி ரஷிக்கும் அதுவும் அன்றியிலே இந்த யத்தனங்கள் எல்லாம்
கால வ்யவதானாதிகளாலே தத் தத் காலின புருஷர்கள் அளவிலே பர்யவசிக்கையாலே இவ்வாத்மாக்களினுடைய சர்வகாலிக ரஷணத்தை சங்கல்பித்து –
ஷீராப்தேர் மண்டலாத் பாநோ யோகி நாம் ஹ்ருதயாதபி ரதிம்கதோ ஹரிர்யத்ர தஸ்மா தரங்கமிதி ஸ்ம்ருதம் -என்று
அத்யர்த்த ப்ரிய விஷயதையாலே உபய விபூதி வ்யாவ்ருத்தமாய் இருக்கிற திருவரங்கம் திருப்பதியை ஆதரித்து அருளி
ரூபா ஔதார்ய குணை பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் -என்று சௌந்தர்யாதி குணங்களாலே இவர்களை
ஆனந்த நிர்பரரர்கள் ஆக்கி எழுந்து அருளி இருக்கிற தேவரீர் அர்த்தோயம் என்கிற கால விசேஷத்திலே
திரு மஞ்சனத்துக்கு ஏறி அருளி நிற்கிற நிலை
பிரதான புருஷாவ்யக்த காலாஸ்து பிரவிபாகச
ரூபாணி ஸ்திதி சர்க்கான் தவ்யகதி சத்பாவ ஹேதவ-என்று
காலத்தையும் திருமேனியாக பிரதிபாதிக்கையாலே இக்கால விசேஷத்தைத் திரு மேனியிலே வெளியிட்டுக் கொண்டு
எழுந்து அருளி நிற்கிற நிலை போலே இருந்தது -அது எங்கனே என்னில் –

சந்த்ரார்கௌ ரங்க தாமன் ஸ்ரவண முபகதௌ சஷூராகார யோகாத்
நாயந்தே
அர்த்தோதயமானது
அமார்க்க பாத ஸ்ரவண யுக்தா சேத புஷ்யமாகயோ
அர்த்தோதயஸ்ஸ விஜ்ஞேயோ ராஹூ பர்வசதாதிக -என்று புஷ்ப மாசத்திலே அமாவாசையையும் -ஆதித்ய வாரமும்
-வ்யதீபாதமும் ஸ்ரவண நஷத்ரமும் கூடுகையாய் இருந்தது
சந்த்ரர்க்கௌ சஷூஷீ பூமான் -என்றும் -சந்திர சூர்யௌ ச நேத்ரே -என்றும் சொல்லுகிறபடியே தேவரீருக்கு திரு நயனங்களாய் இருக்கிற சந்திர சூர்யர்கள்
நீண்ட வப்பெரியவாய கண்கள் -என்கிறபடியே தேவரீருடைய திருச் செவியை ப்ராப்தராய் இருந்தார்கள்

மாந்யோ மாசங்க மஸ்தே –
இக்காலத்தில் அமாவாசையின் சங்கமம் மான்யமாய் இருக்கும்
நித்யைவேஷா ஜகன்மஆஹா விஷ்ணோ ஸ்ரீர நபாயி நீ -என்றும் -இறையும் அகலகில்லேன் என்றும் சொல்லுகிறபடியே
மா தங்கம்ன -பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி தேவரீருக்கு மான்யமாய் இருக்கும் –

சதசி பஹூமதோ மித்ர வாரஸ்ய யோக
இந்தக் காலத்துக்கு ஆதித்ய வாரத்தோடு சேர்த்தி கால வித்துக்களின் கோஷ்டியில் பஹூ மதமாய் இருக்கும்
மைத்ர்யாதி குணங்களை யுடையராய் இருக்கிற சாத்விக ஜன சங்கங்களின் யோகம் தேவரீருடைய கோஷ்டியில் பஹூ மதமாய் இருக்கும் –

காலோயம் புஷ்யதிஷ்டா பவதி
இந்த அர்த்தோதயம் என்னும் காலம் புஷ்ய மாசத்திலே நிர்திஷ்டமாய் இருக்கும்
தேவரீருடைய திருமஞ்சன காலம் சர்வாத்மாக்களுடையவும் இஷ்டங்களைப் போஷித்துக் கொடுக்குமதாய் இருந்தது –

மயி மஹாம்ஸ்த்வத் கடாஷஸ்ய பாத –
இந்தக்காலம் வ்யதீபாதம் என்கிற யோகத்தொடே கூட்டுறவை அபேஷித்து இருக்கும்
கடாஷ கருணா சாந்த்ரா ஹரேரத்புத கர்மண-என்கிறபடியே கருணா நிபிடமாய் -நிறைந்து -இருக்கிற தேவரீர் கடாஷ பாதங்கள்
என் போன்ற சர்வாத்மாக்கள் பக்கலிலும் சம்பூர்ணங்களாய் இருக்கும் –

த்வத் காந்த்யர்நௌக சேது த்வமஸி –
இந்த புண்ய காலத்திற்கு சேது தர்சனம் பிரசச்தமாய் இருக்கும்
தேவரீருடைய லாவண்யம் என்கிற சமுத்ரத்திற்கு தேவரீருடைய திருமேனி தானே சேது என்று சொல்லலை இரா நின்றது –

வயமிஹ ப்ராப்த தீர்த்தா பவாம
ஆகையாலே அகிஞ்சனராய் இருக்கிற அடியோங்கள் நத்யஸ் சமுத்ராச்ச ச ஏவ சர்வம் -என்கிறபடியே
சகல தீர்த்ததாத்மகராய் தீர்த்தாந்தர நிரபேஷ பாவன ச்வரூபரான தேவரீரைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தரார்களாகா நின்றோம் –
த்ரஷ்தவ் யாந்தரத்தில் -அண்டர் கோன் அணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -அன்றோ –

———————————————————————————–

பத்மரவித்யு தலங்ருதாங்க விபவம் கம்பீர நாதாச்ரயம்
சாந்த்ரேந்த்ரோ பல காந்தி சோரவ புஷா சந்தாப வித்வம்சினம்
காருண்யாம்பு பராச்ராயம் விதததம் சச்சாதகா நாம் முதம்
மாந்யம் மேகமமோக பூர்ண பலதம் ரங்கா திபம் மன்மஹே –ஸ்லோகம் –24-

நாயந்தே
ஏக இத்ராஜா ஜகதோ பூவா -என்றும் -சர்வமிந்த்ர இதம் பிரசாசி -என்றும் -சர்வஸ் யேசாத் -என்றும்
த்ரயாணாமபி லோகா நாம் ராகவோ ராஜ்யம் அர்ஹதி -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்றும் சொல்லுகிறபடியே
ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தமான அகில புவனதிற்கும் அசாதாராண காரண பூதராய்
அகாரண கருணா ப்ரவர்ஷி விபுவாய்த் லோசன பாலித சமாஸ்ரித்த வர்க்கராய் நித்ய நிரவத்ய பரிணாம பரிபூர்ண திவ்ய விக்ரஹராய்-
அனுக்ரஹ காரண ஜாகரூகரான தேவரீருடைய வைபவத்தைப் பேசி முடிக்க வெண்ணும் இடத்தில் பதக்ரம முகரங்களான வேதங்களோடு
முக்யமான சாதுர்யம் உடையனான ப்ரஹ்மாவோடு-சர்வஜ்ஞோ தூர்ஜடிர் நீல லோஹித -என்னும் ருத்ரனோடு –
அனந்தாதிகளான அந்தரங்க பரிகரங்களோடு -சாகா சஞ்சாரிகளான த்விஜ கணங்களோடு –
சமாதி சாவதானராய் தப காரண பராயரான தபோதனரோடு வாசி அறப் பேசி முடிக்க ஒண்ணாத படி
எண்ணிறந்த அபதானங்களுக்கு எல்லாம் ஆகரபூதரான தேவரீர்
சகல சாத்விகர்க்கும் நம் பக்கல் சிநேக ப்ரவாஹம் சஹ்யம் பற்றி வர வேணும் என்று சஹ்யத்தைப் பற்றி வரக்கடவதான
காவேரி பரிசரத்தை சர்வ ஆவாச சங்கு லாம் படி ஆவாசமாக ஆதரித்து அருளி
ஷீரார்ணவ சாயியாய் நீர்க்கிடை அறியுமவர் ஆகையாலே நிலக்கிடை வாய்ப்பும் அறிந்து அநந்த போக ப்ரவணர் ஆகையாலே
சகல பிராணிகளுக்கும் அநந்த போகங்களையும் கொடுக்க கடவரான தேவரீர் இப்போது திருமஞ்சனமாடி அருள வேண்டி
மந்திர பரிபூத மங்கள கலச க்ருத அபிஷேகராய் -நாநா வர்ண மாலா கலாப மாம்சளராய்-ராக பரித குங்கும கேசரராக பாடலித பவித்ர காத்ரராய்
ஐராவதத்தின் மததாரைகள் போலே நாநா வர்ணமாகச் சாத்தப்பட்ட திருமாலைகளை யுடையராய்
சந்த்ரமா மனசோ ஜாத -என்று அவனுடைய உத்பத்தி ஸ்தானத்தை வெளியிடக் கடவதான திருமார்பிலே சாத்தின
சந்தனக் காப்பையும் உடையவராய் எழுந்து அருளி நிற்கிற நிலை ஒரு காள மேகத்தோடே சாம்யம் சொல்லலாய் இரா நின்றது –

நாயந்தே
லோகத்திலே த்யாக ச்லாக்கியர்களாகக் கொள்ளப்படும் கற்பக கர்ண காம தேனுக்களில் வைத்துக் கொண்டு
கற்பகமானது -எட்டாத தேவ லோகத்திலே யாய் -அற வீசு கொம்பாய் -கொடுக்கும் அளவிலும் பஞ்சத்வா பன்னமாய் இருக்கும் –
ஐந்தில் ஒன்றாய் இருக்கை -சந்தனம் -ஹரி சந்தனம் -மந்தாரம் -பாரிஜாதம் -கல்பகம் -ஐந்து தேவ வ்ருஷங்களும் கொடையில் வல்லவையே –
காமதேனுவும் வசிஷ்டருக்கே வத்சலையாய் பிரதானத்தில் வந்தால் நிறுத்துக் கொடுக்கக் கடவதாய் -கொடுக்கும் அளவிலும்
அதோமுகமாய்கொடுக்கக் கடவதுமாய் -அதோமுகம் -தலை கீழாக -முலை வழியே கொடுக்கும் என்றவாறு-
மேய்ச்சல் தலையிலும் வந்தால் கன்று தனக்கு தாயும் தனக்கு என்று போகா நிற்கும்
த்வசம் கர்ண -என்று கொண்டு அபராகத்தில் கர்ணனை ஆகர்ணநம் பண்ண வேண்டாதபடி காநீநன் ஆகையாலே
அவன் கொடையும் கன்யா கர்ப்பமாய் இருக்கும் –நஹி நிந்தா நியாயம் –
அப்படி அன்றிக்கே காளமேகமானது
மின்னலால் அலங்க்ருதமான ஸ்வ அங்கத்தை யுடையதாய் கம்பீரமான இடி முழக்கத்தை யுடையதாய்
இந்திர நீலக்கல் போலே திணிந்த கறுப்பு நிறத்தால் விளங்கும் மேனியை யுடையதாய் சச்ய ராசிகளின் சந்தாபங்களைப் போக்குமதாய்
ஜல பர பரிதமாய் சாதகப் பஷிகளுக்கு சந்தோஷத்தை விளவிக்குமதாய் பூர்ண சச்யாதி பல பிரதமுமாய் இருக்கும் –

நாயந்தே
தேவரீரோ வென்றால்–மின்னு மா மழை தவழும் மேக வண்ணன் ஆகையாலே அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே பெரிய பிராட்டியார் ஆகிற மின்னலால் அலங்க்ருதமான திருமேனியை உடையராய்
படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியத்தின் திவ்ய கம்பீர கோஷ முகரராய் அக் கோஷத்தாலே ஆஸ்ரிதர்களான
மயில் இனங்களை ஆனந்த நிர்ப்பரரங்களாம் படி பண்ணக் கடவராய்
கரு மாணிக்க மாலை என்னும்படி நீல ரூபதரராய்
சகல பிராணி சச்ய சந்தாபஹரராய் காருண்யம் புபராக்ரந்தராய்
சத்துக்கள் ஆகிற சாதகங்களை சந்தோஷிப்பிக்கக் கடவராய் விபரீதராய்
தாமஸ ராஜசர்களான ராஜ ஹம்ச குலங்களை ஓட்டக் கடவராய்
அம்மேகம் போலே நஸ்வர பல ப்ரதர் அன்றியே சாஸ்வத பல பிரதராய்
இப்படி ஒரு அழகிய –அழகிய மணவாளப் பெருமாள் –எனப்படும் காள மேகம் முன்னே வந்து நிற்கிற நிலை போலே இருந்தது –

——————————————————————-

த்வம் மே அஹம் மே குதஸ் தத் ததபி குத இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சா நாதி சித்த அனுபவ விபவாத்தர்ஹி சாக்ரோச ஏவ
க்வாக்ரோச கஸ்ய கீதாதிஷூ மம விதித கோத்ர சாஷி ஸூ தீஸ்ஸ் யாத்
ஹந்த த்வத் பஷ பாதீச இதி ந்ருகலஹே ம்ருக்யமத் யஸ்த்த்வ தத்வம் –ஸ்லோகம் -25-

நாயந்தே
ஹ்ரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்றும்
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்றும்
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்றும்
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ -என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரீ லஷ்மி பூமி நீளா நாயகனாய்
யதோ வ இமானி பூதானி ஜாயந்தே -என்றும் -சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்றும்
ச காரணம் கரணாதிபாதிப -என்றும்
ஸ்திதி சம்யாய கர்த்தா சௌ ஜகதோ அஸ்ய ஜகச்ச ச -என்றும்
தானோர் உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சகல ஜகத் காரண பூதனாய்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகா விஜிகத்சோ அபிபாச சத்யகாம சத்யசங்கல்ப -என்றும்
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல க்ரியாச -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் பிரம்மா -என்றும் –
சமஸ்த கல்யாண குணாத்மக -என்றும்
குணா நாம் ஆகரோ மஹான் -என்றும்
பகவோ ந்ரூப கல்யாண குணா புத்ரச்ய சந்திதே -என்றும்
வசீவ தான்யோ குணவான் ருஜூச் சுசி என்றும் -உபக்ரமித்து
சமஸ்த கல்யாண குணா ம்ருதோததி -என்றும்
தயா ஷாந்தி ஔதார்ய -என்று உபக்ரமித்து
ஸூ ள பதத்யா வரகுணா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றும்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய ஸூ ரிகளாலே அநவரத பரிசர்யமான சரண நளின யுகளராய் இருக்கச் செய்தேயும் –

ச ஏகாகீ நரமேத -என்கிறபடியே உண்டது உருக்காட்டாதே தேவாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே சம்சாரி செத்தனர் பக்கலிலே திரு உள்ளம் குடி போந்து
அனுக்ரஹாய புண்யா நாமாஸ்திதோ சூண்ட மகாம் பிரபோ
ஷீரோதம் மண்டலம் பாநோ ஔபேந்த்ரம் சததாதிவி -என்றும்
அவதார சஹாஸ்ராணி கல்பே கல்பே கரோம்யஹம் -என்றும்
பிரஜாநா மநுகம்பார்த்தம் புனர் அர்ச்சாத்மாநாபுவி -என்றும் பின்னானார் வணங்கும் சோதி என்றும் –
சகல சேதன உஜ்ஜீ விஷையாலே பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாதிகளிலே அத்யந்த ஸூ லாபமாய் அபராத சஹமாய்
ஆபிரூப்ய மூல கந்தமான அர்ச்சாவதாரமாய் சதுர்முக இஷ்வாகு ப்ரப்ருதி தசரத நந்தன விபீஷண தர்மவர்ம தப பலபூத
ஸ்ரீ ரங்கே சய ரூபேண அவதரித்து அருளி
ஆத்யம் ப்ரோக்தம் ஸ்வயம் வ்யக்தம் விமானம் ரங்க சம்ஜ்ஞகம் -என்றும்
செங்கயல் பாய் நீர் திருவரங்கம் -என்றும்
குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் -என்றும்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கம் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் அபிமத அஷ்டோத்தர சதா ஸ்தான ஸ்ரேஷ்ட தமமாய் அதி ஹ்ருத்யமான கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற தேவரீர்
இந்த விசேஷ உத்சவத்திலே திரு மஞ்சனம் கண்டு அருளி எழுந்து அருளி இருக்கிற நிலை இங்கனே விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது
அது எங்கனே என்னில் –

த்வம் மே
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -என்றும் -ஏக ஏவா பவத் தத்ர தேவோ நாராயண ப்ரபு -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் காரண பூதனான உமக்கு
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து என்று சொல்லுகிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி
நித்ய சம்சாரியாய்ப் போந்த நீ சேஷ பூதன் என்று ஜீவனைக் குறித்து அருளிச் செய்ய –

அஹம் மே –
தேஹாத்மா அபிமானியான நான் ஈச்வரோஹம் அஹம் போகீ-என்றும்
யானே என்தனதே என்று இருந்தேன் -என்றும் -ஸ்வ தந்திர அபிமானியான யுக்தனான எனக்கே நான் சேஷ பூதன் என்று ஜீவன் செல்ல –

குதஸ் தத்-
அது எதனாலே -என்ன –

ததபி குத-
அது எதனாலே என்ன

இதம் வேத மூல ப்ரமாணாத் –
வாசா விரூப நித்யயா -என்றும்
அநாதி நிதநாஹ் யேஷா வாக்குத் ஸ்ருஷ்டா ஸ்வயம் புவா -என்றும்
சுடர் மிகு சுருதியுள் -என்றும்
நித்ய அபௌ ருஷேயமான தேவ ரூபமான லிகிதம் உண்டாய் இருக்கையால் என்ன –
அதில் சொல்லுகிறது என் என்ன
பதிம் விஸ்வஸ் யாத்மேச்வரம் -என்றும்
தமீஅச்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதா நாம் பரமம் ச தைவதம் -என்றும்
ஷராத்மா நௌ ஈசதே தேவ ஏக -என்றும்
ப்ரதான ஷேத்ரஜ்ஞே பதிர் குணே ச -என்றும்
போக்தா போக்யம் ப்றேரிதாரம் ச மத்வா -என்றும்
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதனா நாம் -என்றும்
அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் -என்றும்
யஸ்ய ப்ருதிவீ சரீரம் -என்றும்
இந்தப்படி உன்னை சேஷ பூதனாகச் சொல்லுகையாலே என்ன –

ஏதச்சா நாதி சித்த அனுபவ விபவாத் –
அநாதி அனுபவம் தான் என்னதன்றோ -என்ன

தர்ஹி சாக்ரோச ஏவ –
அனால் அதற்கு ஆஷேபணை உண்டு காண் என்ன

க்வாக்ரோச கஸ்ய –
யார் எங்கே ஆஷேபணை பண்ணினார் என்ன

கீதாதிஷூ மம விதித –
கீதாதிகளில் நாம் ஆஷேபணை பண்ணினோம் என்ன
ஆஷேபணை பண்ணின பிரகாரம் எது என்ன
தவாவிமௌ புருஷௌ லோகே ஷரச் சாஷார ஏவச
ஷர சர்வாணி பூதானி கூடஸ் தோ அஷர உச்யதே -என்றும்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமோத்மேத்யுதாஹ்ருத
யோ லோகத்ர்ய மாவிச்ய பிபர்யத்யவ்யய ஈஸ்வர -என்றும் -என்று காண் என்ன –

கோத்ர சாஷி –
அதற்கு சாஷி யார் என்ன

ஸூ தீஸ்ஸ் யாத்
ஜ்ஞானியே சாஷி என்ன

ஹந்த த்வத் பஷ பாதீச
அவ்வளவேயோ
ப்ரியோஹி ஜ்ஞாதிநோஸ் அத்யர்த்தம் அஹம் ச சம ப்ரிய -என்று அவன்
தேவரீருக்கு பஷபாதி யாகையாலே கூட சாஷி என்ன

இதி ந்ருகலஹே
இப்படி தேவரீரோடு சேதனன் ஆனவன் விவாதம் பண்ணின அளவிலே

ம்ருக்யமத் யஸ்த்த்வ தத்வம் –
பிரமாணம் கர்த்து முத்யுக்த ம்ருக்யமத் யஸ்த ஈரித -அவனாலே
அசித்தி பண்ணிப் போகாத படி பிரமாணம் பண்ண யத்னம் பண்ணி அருளுகிறாப் போலே இரா நின்றது –

—————————————————————————————————-

உத்தர யபடிகா விராஜதே
ரங்க ராஜ பவதோ புஜாந்தரே
சத்பதே சதமகோமல ப்ரபே
ஜாஹ் நவீவ சரதப்ர நிர்மலா –ஸ்லோகம் –26-

தேவரீருடைய சௌந்தர்ய சந்த்ரிகா நிஷ்யந்தத்திலே சகல ஜனங்களுடைய லோசன சகோரங்களை பானம் பண்ணுவித்து
தேவரீருடைய கரை புரண்ட கருணா ராசா வர்ஷத்தாலே விஷ்ணு பதாஸ்ரயமான சரணாகத சாந்தச சமூஹத்தை சானந்தம் ஆக்குவது
தேவரீருடைய ச்யாமமான திருமேனியிலே சாருசாமர தாரணி களான வராங்கனைகள் ஆகிற
வன சிகண்டிகளை தாண்டவிகளாகப் பண்ணுவதாய் இப்படி எழுந்து அருளி இருந்து
பாவன மநோகரமான திரு மேனியிலே கந்தோக வர்ஷத்தாலே வழியைச் சாத்தி
அங்க ராகம் சாத்தி அதன் மேலே சாத்தின உத்தரீயமானது இந்திர நீல பங்க நிபையான வியதந்த்ரத்திலே
விஜ்ரும்பமாணயான விஷ்ணு பதியோடு சாம்யாரூடை என்று சொல்லலாய் இருந்தது

——————————————————————————————–

பச்யத் ஸூரா அ ஸூ ரகணம் ஸூ மநோ விகாசம்
சத்சித்தசார சமூஹா நிஷேவ்யமாநம்
சத்ருஷ்ட சாருதர சாரதரா அம்ருதௌகம்
த்வாம் ரங்க ராஜ கலயாமி ஹி மந்த்ரராத்ரிம் –ஸ்லோகம் -27-

நாயந்தே
வைகுண்டே து பரே லோகே சரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ -என்கிறபடியே
சுழி பட்டோடும் சுடர்ச் சோதியான நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே -ஒண்டொடியாள் திருமகளுடனே வைகுந்தத்து அமரரும் முனிவரும்
வகுத்த அடிமை செய்ய -ஏழுலகும் தனிக்கோல் செல்ல கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் வீற்று இருந்து
வீவில் இன்பம் மிக எல்லை நிழந்து இருக்கிற தேவரீர்
நித்ய ஸூ ரிகளைப் போலே நிரதிசய புருஷார்த்தமான நித்ய கைங்கர்யத்தை இருவருமான சேர்த்தியிலே நிரதராய்
இருக்கைக்கு நிருபாதிக ப்ராப்தி உண்டாய் இருக்கச் செய்தே அத்தை இழந்து ஆக்கையின் வழி உழன்று
பிறவி என்னும் கடலில் விழுந்து அழுந்திக் கிடக்கிற சேதனர்படியை திரு உள்ளம் பற்றி அவ்விபூதியில்
அனுபவம் உண்டது உருக்காட்டாமல் இவர்களையும் அவர்களோடு ஒரு கோர்வை ஆக்குகைக்காக
நிஷத்வர தீர்க்கிகா நிபதித நிஜாபத்யாதித் சர்வதீர்ண பித்ரு க்ரமத்தாலே சேற்றில் அழுந்திக் கிடந்த
பிரஜையைக் கண்ட பிதானானவன் ஆதாரத்துடன் எடுக்க வருமாப் போலே இவ்வழியிலே அவதீர்ணராய்
வண் பெரு வானகம் உய்ய தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் அணியார் பொழில் சூழ் அரங்க மா நகரிலே
மணியார மேனியுடன் விபீடணனுக்கு வேறான நல்லானமை தோற்ற
அன்போடு தென்திசை நோக்கி பள்ளி கொண்டு அருளி -அவ்வள வன்றிக்கே அகில லோகங்களுக்கும்
அவளோகன தானம் செய்து அருளுகைக்காக திவ்ய உத்சவ வ்யாஜேன திருவீதியிலே
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொண்டு
எல்லாரும் ஈடுபடும் படி வல்லரானாப் போலே உலாவி அருளி
லோசன சர்ஸா சாஹச சஹமாய் புஷ்ப ஹாச ஸூ குமாரமான திரு மேனியிலே இளைப்புத் தீர
திருமஞ்சனமாடி அருளி சந்திர சந்தன பங்க மகரந்த பரித ஸூ மநோ ப்ருந்த ஸூ ந்தரராய்க் கொண்டு
எழுந்து அருளி நிற்கிற நிலை மந்திர பர்வதம் என்னும் மதிக்கலாய் இரா நின்றது -எங்கனே என்னில் –

பச்யத் ஸூரா அ ஸூ ரகணம்-
மந்திர பர்வதமானது -பருவரை ஓன்று முதுகில் பறந்து சுழல்கின்ற -என்கிறபடியே அம்ருத மதன சமயத்திலே சுழன்று வருகிறபடியாலும்
சமஸ்தான விசேஷத்தால் உண்டான சோபாதிசயத்தாலே வைத்த கண் வாங்காதே பார்த்துக் கொண்டு நிற்கிற நிலை
மதன உத்யோக பாரீணரான தேவா ஸூ ர கானத்தை உடைத்தாய் இருக்கும்
தேவரீர் சாஷாத் மன்மத மத என்கிறபடியே மன்மதனுக்கும் மடல் எடுக்கும் படியாய்
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான சௌந்தர்யத்தாலே விவசராய் கிண்ணகத்திலே இழிவாரைப் போலே
திறள் திறளாய் கொண்டு திருமேனியை எப்பொழுதும் அனுபவியா நிற்கிற அனுகூல பிரதிகூல விபாகம் அற
சர்வ பிராணிகளை உடையராய் இரா நின்றீர் –

ஸூ மநோ விகாசம் சத்சித்தசார சமூஹா நிஷேவ்யமாநம்-
மந்தர பர்வதமானது போக யோக்ய பிரதேசத்தாலே விகஸ்வர மனஸ் கராய் காம்பீர்ய அனுகுண யௌவனாதி வைலஷண்யத்தை
உடையராய் இருக்கிற சித்த சாரண ரூபா தேவ யோனி விசேஷ பரிஷன்நிஷேவ்யமாய் இருக்கும்
தேவரீர் -ச அசாநந்த்யாய கல்பதே -என்னும் உள்ள உலகளவும் யானும் உளனாவன் -என்றும் சொல்லுகிறபடியே
சாம்சாரிக்க சங்கோசம் தீர்ந்து நம சப்த உபலஷித ஞான பக்த்யாதிகளை யுடையரான முக்தருடையவும்
ஸூரயோ நித்ய சம்சித்தா சர்வ தர்சின -என்று சொல்லப்படுகிற விழுமிய அமரரான நித்ய சித்தருடையவும் திரளாலே
கலக்கமிலா நல்தவ முனிவர் கரைகண்டோர் துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் -என்கிறபடியே
நிரந்தரம் சேவிக்கப்படா நின்றீர் –

சத்ருஷ்ட சாருதர சாரதரா அம்ருதௌகம்
மந்திர பர்வதமானது தன்னாலே அமரத்வாவஹா ரூபா சாதுர்யத்தை உடைத்தாய்
மாதுர்யதிசயத்தாலே சாரதரமான அம்ருத ப்ரவாஹத்தை உடைத்தாய் இருக்கும் –
தேவரீர் -தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்கிறபடியே ஜ்வர சந்நிபதிதரைப் போலே
அடைவுகெட ஏத்தும்படி கடாஷிக்கப் பட்டு இருப்பாராய்
அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் ஆகையாலே சாருதரராய் அஸ்தான ரஷ அவ்யசனிகளாம் படியான பிரேம அதிசயத்தாலே
சார தரமான நித்ய ஸூ ரி சங்கத்தை உடையராய் இருப்பீர் –

த்வாம் ரங்க ராஜ கலயாமி ஹி மந்த்ரராத்ரிம் —
ஆக இப்படிகளாலே அமுதில் வரும் பெண்ணமுதான பிராட்டியை பிறப்பிக்கையால் உண்டான உபகார ஸ்ம்ருதி
உள்ளே ஊறி இருந்து பாவன பிரகர்ஷத்தாலே ஹர்ஷம் முற்றி லஷ்மி -ஸ்ரீ -ரங்கத்திலே தேவரீரும் பிராட்டியுமாக
மந்தர சாம்யத்தை அங்கீ கரித்துக் கொண்டு நிற்கிற நிலை போலே இருந்தது

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading