ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
————————————————————————
இனி இப்பிரதிபந்தக நிவ்ருத்திக்கு உபாயம் –
சந்ந்யாச த்யாக நிஷேப சரணாகத் யாதி சப்த வாச்யமாய்
சத்ய வசநாதி தர்மங்கள் போலே சர்வாதிகாரமாய் இருந்துள்ள பரமாத்மா பிரபதனம்
—————————————
பிரபத்தி ஸ்வரூப கதநம்
அதாவது பகவத் ஆஜ்ஞாதி வர்த்தன நிவ்ருத்தி -பகவத் அனுகூல்யம் -சர்வசக்தித்வ அனுசந்தானம்
தொடக்கமானவத்றோடு கூடி இருந்துள்ள யாச்ஞா கர்ப்பமான விஸ்ரம்ப ரூப ஜ்ஞான விசேஷம் –
அதில் ஜ்ஞே யாகாரம் –
ஈஸ்வரனுடைய நிரபேஷ சாதனத்வம் -ஜ்ஞானாகாரம் -வ்யவசாயம்–இது தான் சாஸ்தரார்த்தம் ஆகையாலே சக்ருத் கர்த்தவ்யம் –
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும் –
தஸ்மான் ந்யாசமேஷாம் தபசாமதிரிக்தமாஹூ-என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி ம நீஷீண -என்றும்
அஹமச்ம்யபாராதா நாமாலய -என்றும்
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விசுவாச பூர்வகம் –ததேகோபாயதயாச்கஞா பிரபத்திஸ் சரணாகதி -என்றும் –
யத் யேன காம கா மேன –யா நி நிஸ்ரேயசார்த்தா நி சோதி தா நி தபாம்சி வை –தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ் ஸ்ருதம் -என்றும்
பவ சரணம் -என்றும் –
சக்ருதேவ பிரபன்னாய -என்றும் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் இத்யாதிகளே இதில் பிரமாணங்கள் –
இதுக்கு அதிகாரிகள்
பரம ப்ராப்ய த்ருஷ்ணையையும் –
ப்ராப்யாந்தர வைத்ருஷ்ணயையும்-
பகவத் ஔதார்ய குணாத்யவசாயத்தையும் உடையவர்கள்
இதுக்கு அங்கம் ஆகிஞ்சன்யம்
இவ்வதிகாரி தான் பிரபத்தி பண்ணின அனந்தரத்தில் மோஷம் வேணும் என்று இருந்தானாகில் அப்போதே பலமாய் இருக்கும் –
உபாயம் அப்போதே நிஷ்பன்னம் ஆகையாலும் –
சாத்திய பக்திஸ்து சா ஹந்த்ரீ ப்ராரப்தச்யாபி பூயசீ -என்று ப்ராரப்தமும் நசிக்கையாலும்
அல்லாத போது மா ஸூச -என்கிறது சேராது –
இப்படி ஆர்த்தராய் இருக்கச் செய்தேயும் சிலர் இருக்கிறது ஈஸ்வர இச்சையாலே –
அதுக்கு பிரயோஜனம் சம்சாரி சம்ரஷணம்-விக்ரஹ அனுபவம் தொடக்கமானவை –
பிரபத்யுத்தர காலத்திலும் சம்சாரத்தில் சங்கம் நடந்ததாகில் சங்கம் நிவ்ருத்தமாம் அளவும் வைக்கும் –
ஆனால் துக்காம்சம் கழியாது ஒழிவான் என் என்னில்
ஈஸ்வரன் ஹித பரன் ஆகையாலே வைராக்ய ஜனநார்த்தமாக இட்டு வைக்கும்
இது தான் ஸ்வ தந்த்ரேண கார்யகரமான வன்றிக்கே பக்தி யோகத்தை உத்பாதித்தும் கார்யம் செய்யும் –
————————————
பக்தி யோகாதி ஸ்வரூப கதநம் –
பக்தியாகிறது –
யமேவைஷா வ்ருணுதே-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சக்ய-என்றும் –
பஜதாம் ப்ரீதி பூர்வகம் -என்றும் –
ப்ரியோ ஹி ஜ்ஞா நின -என்கிறபடியே
விஷயம் ப்ரிய தமம் ஆகையாலே தானும் அத்யர்த்த ப்ரிய ரூபமாய் பாவநா பிரகர்ஷத்தாலே
தஸ்மின் த்ருஷ்டே -என்றும் –
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய -என்கிற படியே பிரத்யஷமா நாகாரமாய்–
த்ருவா ஸ்ம்ருதி -என்கிறபடியே
அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமாய் இருக்கும் த்யான விஷயம் –
இது தான் நாள் தோறும் அப்யாசத்தாலே அதிசயிதமாய்
ச கல்வேஷம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகமாபி சம்பத்யதே -என்கிறபடியே –
ஆப்ரயானத்து அளவும் அனுவர்த்தித்தால் அல்லது கார்யகரம் ஆகாது
இப்படிப்பட்ட த்யானம் நிஷ்பன்னம் ஆவது –
யஜ்ஞே ந தாநே ந தபஸா ஸ் நாசகே ந ப்ரஹ்மணா விவிதி ஷந்தி-என்றும் –
யஜ்ஞ தான தப கர்ம ந த்யாஜ்யம் கார்யம் -என்றும் –
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய -என்கிறபடியே
பகவத் சமாராதன ரூபமாய் பலாபிசந்தி விதுரமாய் இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானத்தாலும்
சாந்தோ தாந்த உபரதஸ்தி ஷூஸ் சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவாத் மாநம் பச்யேத்-என்கிற சம தமாதி களாலும்
உக்த கர்ம அனுஷ்டானத்தாலே
தர்மணே பாபமாபா நுததி -என்கிறபடியே புண்ய பாபங்கள் நசிக்கும் –
அத்தாலே ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை சாய்ந்து சத்வம் உத்பூதமாம் –
அத்தாலே த்யானம் நிஷ்பன்னமாம்
இப்படி அவ்யவஹிதமாயும் வ்யவஹிதமாயும் பரமாத்மா பிரபதனமே பிரதிபந்தக நிவர்த்தகம் –
—————————————–
சங்கராதி மதம்
சிலர் தத்த்வமச்யாதி வாக்யங்களாலே பிறக்கிற வாக்யார்த்த ஜ்ஞானமே உபாயம் -என்றார்கள் –
அது அனுபபன்னம் –
த்யான விதிகளுக்கு வையர்த்யம் பிரசங்கிக்கையாலும்
அநந்தரம் முக்தனாக வேண்டுகையாலும் –
முக்தனாகில் துக்க அனுபவம் கூடாமையாலும்
ஜ்ஞானம் தான் விதேயமும் இன்றிக்கே ஒழியும்
————————————————–
பாட்டாதி மதம்
கேகய -ஜநகாதிகள் கர்ம நிஷ்டர் ஆகையாலும்
குர்வன் நே வேஹ கர்மாணி ஜிஜி விஷேச்சதம் சமா -என்று கொண்டு யாவஜ்ஜீவம் கர்ம அனுஷ்டானத்தைச் சொல்லுகையாலும்
கர்மமே புருஷார்த்த சாதகம் –
அந்தக் கர்மத்தை அனுஷ்டிக்கும் போது தேஹாதிரிக் தமான ஆத்மாவை அறிய வேண்டுகையாலே
ஜ்ஞானம் அதுக்கு அங்கம் என்று சிலர் சொன்னார்கள் –
அதுவும் அனுபபன்னம்
கிமர்த்தா வயம் யஷ்யாமஹே-என்று ஜ்ஞானவானுக்கு கர்ம த்யாகம் காண்கையாலும்
அக்னி ஹோத்ர தர்ச பௌர்ண மாசாதிகள் இல்லாத ஊர்த்வ ரேதாக்களுக்கு ப்ரஹ்ம நிஷ்டை யுண்டாகையாலும்
கிம் பிரஜா கரிஷ்யாம என்று விரக்தனுக்கு கார்ஹஸ் த்யத்யாக முண்டாகையாலும்
ஷீயந்தே சாஸ்ய கர்மாணி என்று வித்யையால் புண்ய பாபங்களுக்கு நாசம் உண்டாகையாலும் –
வித்யை கர்மத்துக்கு அங்கம் அல்லாமையால் –
வித்யா அனுஷ்டான நிஷ்டனும் பின்னை கர்மத்தை அனுஷ்டிக்கிறது ஏன் என்னில் -வித்யைக்கு கர்மம் அங்கம் ஆகை அனுஷ்டிக்கிறார்கள்
யாவஜ்ஜீவம் கர்ம அனுஷ்டானம் சொல்லுகிறது விரக்தர் அல்லாதவர்களுக்கு
————————————————-
யாதவ பிரகாச மதம்
ஜ்ஞான கர்ம சமுச்சயம் உபாயம் என்கிற பஷமும் அனுபபன்னம்
அவித்யா ம்ருத்யும் தீர்த்தவா -என்றும்
யஜ்ஞேந தா நே ந -என்றும் கர்மத்தை ஜ்ஞானத்துக்கு சேஷமாக்கி விநியோகிக்கையாலே –
நனு-பிரபத்தி ஸ்வ தந்திர உபாயம் ஆகில்
நான்ய பந்தா -என்று பக்தியை ஒழிய உபாயம் இல்லை என்றத்தோடே விரோதியாகாதோ என்னில்
பிரபத்தியும் ஜ்ஞான விசேஷம் ஆகையாலே விரோதியாது –
அத்யவசாய கௌரவத்தால் குருவாகையாலே கூடும் –
லகுவானாலும் பக்த் யங்கங்களான கர்மங்களில் சாகா பேதத்தாலும் வர்ணாஸ்ரம பேதத்தாலும்
குரு லகு உபாயம் உண்டாய் இருக்கச் செய்தே விகல்பம் கூடினால் போலே இங்கும் விகல்பமும் கூடும்
உபாயாந்தர நிஷேதமும் குரு லகு விகல்பமும் அங்க அங்கி பாவமும் விஷய பேதம் அதிகாரி பேதம் தொடக்க மானவற்றாலே கடிக்கும் –
உபாய ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம் –
தத்வ சேகரம் முற்றிற்று
————————————————–
ஆக
அகில புவன ஜன்மஸ் தேமா பங்காதி லீலனாய்
விதி சிவ சதமக பிரமுக -நிகில தேவதா நிர்வாஹகனாய் –
முமுஷு உபாஸ்யனாய்-
மோஷ பிரதனாய் இருந்துள்ள
நாராயணனுக்கு —-பர ஸ்வரூப நிரூபணம் -முதல் பிரகரணம் –
தேஹந்த்ரியாதி விலஷணரான-சமஸ்த ஆத்மாக்களும்
சர்வ பிரகார பரதந்த்ரர் -ஸ்வ ஸ்வரூப நிரூபணம் -இரண்டாம் -பிரகரணம்
அவர்களுக்கு ஸ்வரூப அனுகுண புருஷார்த்தம்
சகல பாஹ்ய குத்ருஷ்டி திருஷ்ட மோஷ விலஷணமான
பரமார்த்தம கைங்கர்யம் -புருஷார்த்த ஸ்வரூப நிரூபணம் -மூன்றாம் பிரகரணம்
தத் ப்ரதிபந்தகீ பூதா ஜ்ஞாதி லங்கன ஜனித பகவன் நிக்ரஹ
நிபர்கன உபாயம் நிகில ஜந்து சாத சரண்யா
ஸ்ரீ மன் நாராயண சரணாரவிந்த சரணா கதி –
என்கிற ஜ்ஞான விசேஷம் தத்தவ ஜ்ஞானம் ஆவது –
விரோதி ஸ்வரூப -உபாய ஸ்வரூப நிரூபணம் -நான்காவது ஐந்தாவது பிரகரணங்கள் –
————————————–
ப்ராப்யபூ பரம் ப்ரஹ்மாத் யர்த்த பஞ்சக நிர்ணய
தத்த்வ சேகர நாமாயம் லோகாசார்யேண தர்சித —
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply