ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
—————————————————————————————————————
உத்தர வாக்யார்த்தாரம்பம்
உத்தர வாக்கியம் -ஸ்வீகாரத்தினுடைய பல ரூபமாய் -ஸ்ரீ யபதியாய் -சர்வ ஸ்வாமி யாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே இச்சேதனன் பண்ணும்
வ்ருத்தி விசேஷத்தினுடைய ப்ரார்த்த நத்தை பிரதிபாதிக்கிறது -பூர்வ வாக்யத்தில் பிரதிபாதிதமான சாதனா விசேஷம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இ றே இருப்பது
அதில் இவ்வதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கிறது இவ்வாக்யம்
இவனுக்கு அபிலஷிதமான பலமாகிறது -விரோதி நிவ்ருத்தியும் அபிமத பிராப்தியும் -அதில் அபிமத ரூபமாய் இருக்கிற பலத்தை முன்பே பிரதிபாதிக்கிறது –
இரண்டு பலமும் இவனுக்கு அபிமதமாய் இருக்குமாகில் இரண்டையும் ப்ரார்த்தியாதே ஒன்றே பிரார்த்திப்பான் என் என்னில்
பல த்வயமும் அபிலஷிதமாய் இருந்ததே யாகிலும் பிரதான பலமாய் இருப்பது அபிமத ப்ராப்தி விரோதி நிவ்ருத்தி உண்டானால் அல்லது அபிமதம் சித்தியாமையாலே
விரோதி நிவ்ருத்தி ததர்த்தமாக அபேஷிதமாய் இருக்கும் அத்தனை -அங்கன் கொள்ளாத போது ததேக சாத்யத்வம் அசித்தமாம்
ஆகையாலே விரோதி நிவ்ருத்தியில் காட்டில் கைங்கர்யத்துக்கு உண்டான பிரதான்யத்தைப் பற்ற கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறது –
இதில் சரம பதம் கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது -மத்யம பதம் கைங்கர்யத்தையும் கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் பிரதிபாதிக்கிறது –
———————————————————————–
7-ஸ்ரீ மதே பதார்த்தம்
பிரதம பதம் கைங்கர்ய பிரதிசம்பந்தி விசிஷ்டம் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது –
சேஷத்வ பிரதிசம்பந்தி மிதுனமாய் இருக்குமா போலே கைங்கர்ய பிரதிசம்பந்தியும் மிதுனமாய் இ றே இருப்பது –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே -என்றும் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் நம்மாழ்வாரும் மிதுனமே ப்ராப்யம் என்று அருளிச் செய்தார் –
அவர் தமக்கு அடியான இளைய பெருமாளும் -சஹ வைதேஹ்யா -என்று கிஞ்சித்காரத்துக்கு விசிஷ்ட வேஷமே விஷயம் என்று அருளிச் செய்தார் –
அவர் தம்முடைய பூர்வ அவஸ்தையிலும் -திருமாற்கரவு-என்கிறபடியே கிஞ்சித்கார பிரதிசம்பந்தி விசிஷ்டமாய் இ றே இருப்பது
இவர்கள் இத்தனை பேரையும் அடி ஒற்றின பரமாச்சார்யார் ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் மஹா புஜம் -என்றும் -ஸ்ரீ யஸ் ஸ்ரீ யம்-என்றும் விசிஷ்ட வேஷத்தை அருளிச் செய்து
ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி-என்று தத் விஷயமான ஆர்த்தி விசேஷத்தை பிரார்த்தித்தார் –
அவர் திருவுள்ளத்தை பின் சென்ற ஸ்ரீ பாஷ்யகாரரும் -ஸ்ரீ வல்லப -என்று விசிஷ்ட வேஷத்தை பிராப்யமாக அருளிச் செய்தார் –
ஆகையாலே தனித்து இவர்களுக்கு ப்ராப்யத்வம் இல்லை -இருவரையும் பிரித்து விரும்பினால் ராவண ஸூர்ப்பணகிகளுக்குப் போலே நாசமே பலமாய் இருக்கும்
இருவரையும் பற்றினால் ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே உஜ்ஜீவனமே பலமாய் இருக்கும் –
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேன் -என்றும் –
வாரணி முலையாள் மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப —காரணி மேகம் நின்றதொப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றும்
சொல்லுகிறபடியே சேர்த்தியிலே பற்றினால் இ றே ஸ்வரூப உஜ்ஜீவனம் உள்ளது –
ஆக -கைங்கர்ய பிரதிசம்பந்தி மிதுனமாய் இருக்கையாலே ஸ்ரீ மச் சப்தம் பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தியைச் சொல்லுகிறது –
பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தம் சேதனனுடைய அபராதத்தையும் -ஈஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் கண்டு
இவர்கள் அவனுடைய குரோதத்துக்கு விஷய பூதராய் நசித்துப் போகாதே இவனைக் கிட்டி உஜ்ஜீவித்துப் போக வேணும் என்று சாபராதரான சேதனரை
ஈச்வரனோடே சேர்க்கைக்காக என்றும் ஒக்க விடாதே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இங்குத்தை ஸ்ரீ மச் சப்தம் கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தைப் பற்றவும் அவர்கள் பண்ணும் கைங்கர்ய த்தை ஈஸ்வரன் திருவுள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்துகைக்காகவும்
அனுபவ விச்சேதத்தில் தனக்கு சத்தா ஹனி பிறக்கும் படி இருக்கையாலே நிரந்தர சம்ச்லேஷத்துக்காகவும்
அவனை ஷண காலமும் பிரியாதே சர்வ காலமும் சம்ச்லிஷ்டையாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
மாத்ருதேவோ பவ –பித்ருதேவோ பவ என்கிறபடியே மாதா பிதாக்களைச் சேர்த்துக் கிஞ்சித் கரித்தால் இ றே புத்ரனுக்கு ஸ்வரூப சித்தி உள்ளது
அப்படி த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவதேவோ ஹரி பிதா -என்கிறபடியே நேரே மாதா பிதாக்களாய் இருக்கிற
பிராட்டியையும் ஈஸ்வரனையும் சேர வைத்துக் கிஞ்சித் கரித்தால் இ றே இவனுக்கு ஸ்வரூப சித்தி உள்ளது
——————————————————————-
நாராயண பதார்த்தம் –
8- இப்படி கைங்கர்ய பிரதிசம்பந்தியான பிராட்டியோட்டைச் சேர்த்தி யளவன்றிக்கே-குண விக்ரஹ விபூதிகளோடே கூடி இருக்கும் ஆகாரம்
கைங்கர்ய வர்த்தக தயா அனுபாவ்யமாய் இருக்கையாலே ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களோடும் திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
உபய விபூதி யோகத்தொடும் கூடியிருக்கிற பகவத் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –நாராயண பதம் –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்றும் -சதா பஸ்யந்தி ஸூரயா-என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
குண விக்ரஹாதிகளும்-ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி -என்கிற ஸ்வரூபத்தோ பாதி கைங்கர்ய வர்த்தகமே போக்யங்களாய் இ றே இருப்பது –
ஜ்ஞான சக்த்யாதி குணங்களோடு வாத்சல்யாதி குணங்களோடு சௌர்ய வீர்யாதி குணங்களோடு வாசியற எல்லா குணங்களும் அனுபாவ்யங்களாய் இருக்கையாலே
பூர்வ வாக்யத்தில் நாராயண பதத்தில் உபாய வரணத்துக்கு உபயுக்த தயா அனுசந்தேயங்களான குண விசேஷங்களும் இப்பதத்திலே ப்ராப்ய தயா அனுசந்தேயங்கள் –
ஆஸ்ரயமான ஸ்வரூப விசேஷத்துக்கு ஆகாரத்வயம் உண்டாகிறாப் போலே ஆஸ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகாரத்வயம் உண்டாய் இ றே இருப்பது –
அனுபாவ்ய த்வம் அவிசிஷ்டம் ஆகையாலே சகல குணங்களும் பிரதிபாதிதமாய் இருந்ததே யாகிலும்
சதுர்த் யந்தத்தில் சொல்லுகிற வ்ருத்தி விசேஷத்துக்கு மிகவும் அந்தரங்கமாய் இருப்பது ஸ்வாமித்வம் ஆகையாலே
கீழ் சௌலப்ய பிரதிபாதநத்திலே நோக்கு ஆனால் போலே இங்கு ஸ்வாமித்வ பிரதிபாதநத்திலே நோக்காகக் கடவது –
—————————————————————————————-
சதுர்த்தி யினர்த்தம்-
9- இப்பதத்திலே ஏறிக் கிடக்கிற சதுர்த்தீ விபக்தி சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் பக்கல் இச்சேதனன் பண்ணும் வ்ருத்தி விசேஷ பிரார்த்தனையை பிரதிபாதிக்கிறது –
இங்கு ப்ரார்த்த நீயமான வ்ருத்தி விசேஷமாகிறது –
அல்பமாய் அஸ்திரமாய் துஸ் சாதனமாய் துக்க மிஸ்ரமாய் ஸ்வரூப விருத்தமாய் இருக்கிற ஐஸ்வர்ய புருஷார்த்தம் போல் அன்றிக்கே
நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணமாய்-விஷயத்தோடு ஆஸ்ரயத்தோடு தேசத்தோடு தன்னோடு வாசியற யாவத்காலம் அனுவர்த்திக்கக் கடவதாய்
அஞ்சலி மாத்ர லப்தமாய் -துக்க கந்த ரஹிதமாய் ஸ்வரூப அனுரூபமாய் -இறப்பதற்கே எண்ணாது-என்றும் -இறுகல் இறப்பு – என்றும் -சொல்லுகிறபடியே
ஆத்மா விநாச ரூபமாய் இருக்கிற கைவல்யத்தில் காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தமாய் -புண்ய பாப விமோசனம் தொடங்கி-
பகவத் அனுபவ ஜநிதி ஹர்ஷம் எல்லையாக நடுவுண்டான தேக விமோசனம் பரமபத ப்ராப்தி ஸ்வரூப ப்ராப்தி சாமயா பத்தி தொடக்கமாகச் சொல்லுகிற
புருஷார்த்த விசேஷங்களுக்கும் அவ்வருகாய்
மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே ஆத்மாவுக்கு நித்ய சித்தமாய் பகவன் முக விகாசத்துக்கு ஹேதுவாய் இருக்கிற
பகவத் அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யம் –
இக்கைங்கர்யம் ஏக காரணத்தாலே அனுஷ்டேயமாய் இருக்கை யன்றிக்கே –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்றும் -சாம காயன் நாஸ்தே -என்றும் -நம இத்யேவ வாதின -என்றும்
சாயா வா சத்வம் அனுகச்சேத்-என்றும் -யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே கரண த்ரயத்தாலும் அனுஷ்டேயமாய் இருக்கும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும்
-சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும் -ந ச புநரா வர்த்ததே -என்றும்
பணையம் கொடுக்கிலும் போகவொட்டார்-என்றும் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
இவ்வதிகாரியினுடைய ஸ்வரூப அனுரூபமாய் நிரதிசய போக்யமுமாய் தாரகமுமாய் இருக்கிற கைங்கர்யத்தினுடைய
அபி நிவேசாதி அதிசயத்தாலே தேச கால பிரகார அவஸ்தாதிகார நியம விதுரமாக பிரார்த்திக்க கடவனாய் இருக்கையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் வ்ருத்தி விசேஷத்தை பிரதிபாதிக்கிறது –
இச்சதுர்த்திக்கு தாதர்த்யம் அர்த்தமானாலோ-கைங்கர்யம் அர்த்தமாக வேண்டும் நிர்பந்தம் என் என்னில்
இதுக்கு கைங்கர்யம் அர்த்தமாகாதே தாதர்த்யம் அர்த்தமான போது பூர்வ வாக்ய அனுசந்தானம் நிரர்த்தகமாய் –
வ்யாக்யாதாக்கள் உடைய வசனங்களோடும் விரோதம் பிரசங்கிக்கும் –
ஆகையாலே தாதர்த்ய பல ரூபமான கைங்கர்யமே அர்த்தமாகக் கடவது -கைங்கர்யம் அர்த்தமாகிறது பிரார்த்தனை வந்தபடி என் என்னில்
கைங்கர்ய பிரதிசம்பந்தியான விஷயம் உத்துங்கமாய் இருக்கையாலும் ஆஸ்ரய பூதனான சேதனன் அத்யந்த பரதந்த்ரன் ஆகையாலும்
பிரார்த்தனா விஷயம் இல்லாத போது கைங்கர்யம் சித்தியாமையாலே விஷய ஸ்வ பாவத்தாலும் ஆஸ்ரய ஸ்வ பாவத்தாலும் பிரார்த்திக்கக் கடவது –
ஆக -இந்த விபக்த்யம்சத்தாலே -புருஷார்த்த ஆபாசங்களான ஐஸ்வர்ய கைவல்யங்கள் இரண்டில் காட்டில் வ்யாவ்ருத்தமாய்
ஸ்ரீ யபதியாய் சர்வ ஸ்வாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளை விஷயமாக உடைத்தாய்
க்ரியதாம் -என்றும் -கூவிப் பணி கொள்ளாய் -என்றும் -ஏவ மற்றமரர் ஆட்செய்வர் -என்றும் அவனுடைய நியோக கர்ப்பமாய்
ஸ்வ நிர்பந்த விதுரமாய் -வாங் மன கார்ய ரூபமான கரண த்ரயத்தாலும் பண்ணும் வ்ருத்தி விசேஷத்தைச் சொல்லுகிறது
ஈத்ருச வ்ருத்தி விசேஷம் யாகிறது -நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தை விஷயீ கரித்து இருக்கையாலும் –
நிரஸ்த சாம்சாரிக சகல பிரதிபந்தகமாய் இருக்கிற
ஸ்வ ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக உடைத்தாய் இருக்கையாலும் கர்த்தாவாய் இருக்கிற சேதனனுக்கு அத்யந்த ப்ரீதி ரூபமாய் இ றே இருப்பது –
————————————————————————————————–
நமஸ்-சப்தார்த்தம்
10- பரதந்த்ரனான இவனுக்குப் பிறக்கும் போகம் பாரதந்த்ர்யா விரோதி யானால் யல்லது புருஷார்த்தம் அல்லாமையாலே இதனுடைய
புருஷார்த்ததா ஹேதுவான பகவத் ப்ரீதி ஜனகத்வ பிரதிபத்தியை ஒழிய ஸ்வயம் போக்யமாய் இருக்கும் ஆகாரம் விரோதியாய் இ றே இருப்பது –
தாத்ருசமான விரோதியை நிவர்த்திப்பிக்கிறது நமஸ் ஸூ -பகவத் முக விகாசமே நமக்கு போக்யம்-
அதுக்கு பிறக்கும் பிரதிபத்தி ஒழிய இப்போக விசேஷத்தில் மதீயத்வ பிரதிபத்தியும் சஞ்சரிக்குமாகில் இவனுக்கு அபுருஷார்தமாய் இ றே இருப்பது –
ஆகையாலே இந்த நமஸ் ஸூ கைங்கர்ய தசையிலே ஈத்ருசமான பிரதிபத்தி விசேஷம் விரோதி என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது –
கீழ் இரண்டு பதமும் விஷய வைலஷண்யத்தையும் விஷயியினுடைய வைலஷண்யத்தையும் சொல்லுகிறது -இப்பதம் ஆஸ்ரய வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –
ஸ்வரூப விரோதி என்றும் -சாதன விரோதி என்றும் ப்ராப்தி விரோதி என்றும் ப்ராப்ய விரோதி என்றும் சதுஷ்டயமாய் இருக்கும் விரோதி –
அதில் திருமந்தரம் ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
சரம ஸ்லோகம் அர்த்தத்வயத்தாலும் சாதன விரோதி நிவ்ருத்தியையும் ப்ராப்தி விரோதி நிவ்ருத்தியையும் பிரதிபாதிக்கிறது –
இது ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
ஆக
1- கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும் –
2- கைங்கர்யத்தையும் –
3- கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் –
4- கைங்கர்ய ப்ராப்திக்கு ஹேது பூதமான ஸ்வீகாரத்தையும் –
5-ச்வீகார்யமான பிராபக ஸ்வரூபத்தையும் –
6-அதுக்கு ஏகாந்தகளான குண விசேஷங்களையும் –
7-உபாயத்வ அத்யவசாயத்தையும் –
8-உபாய ஸ்வரூபத்தையும்
9-அக் குணங்களுக்கு உத்பாவகமான புருஷகார ஸ்வரூபத்தையும்
10-புருஷகாரத்தையும் -சொல்லித் தலைக் கட்டுகிறது –
———————————————————-
அஷ்டாஷர மஹா வித்யா தாத்பர்யமகிலம் க்ரமாத்
ஸூநுநா கிருஷ்ண மிஸ்ராணாம் லோகாசார்யேண தர்சிதம் –
ஆறண நூல் வாழ்க அருளிச் செயல் வாழ்க
தாரணியும் விண்ணுலகம் தான் வாழ்க பூரணமாய்ப்
பின்னுமுள்ளோர் தான் வாழ்க பிள்ளை யுலகாரியனே
யின்னம் ஒரு நூற்றாண்டு இரும் –
—————————————————————————————————–
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply