ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
——————————————————————————–
ஸ்ரீ சப்தார்த்தம்
1- அதில் ஸ்ரீ மத் என்கிற அம்சத்தாலே புருஷகாரத்தையும் -புருஷகாரத்தினுடைய நித்ய சந்நிதியையும் சொல்லுகிறது –
-ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பிராட்டியுடைய புருஷகார பாவத்துக்கு உபயுக்தங்களான குண விசேஷங்களைச் சொல்லுகிறது –
அக்குண விசேஷம் ஆகிறது உபய சம்பந்தம் -அதில் கர்மணி வ்யுத்பத்தி சேதனனோடு உண்டான பந்த விசேஷத்துக்கு பிரகாசகமாய் இருக்கும்
கர்த்தரி வ்யுத்பத்தி ஈச்வரனோட்டை சம்பந்தத்துக்கு பிரகாசகமாய் இருக்கும் –
சேதனனோடே மாத்ருத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் -ஈஸ்வரனோடே மஹிஷீத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –
மாத்ருத்வ லஷண பந்தத்தாலே புருஷகார நிரபேஷமாக சகல சேதனர்க்கும் ஆஸ்ரயணீயையாய் இருக்கும் –
மஹிஷீத்வ பிரயுக்தமாக ஈஸ்வரனோடே நித்ய சம்யுக்தையாய் இருக்கையாலே புருஷகார நிரபேஷமாக ஈஸ்வரனை சேவியா நிற்கும் –
யஸ்யா கடாஷணம் அநு ஷணம்-இத்யாதியாலே வ்யுத்பத்தி த்வயத்தாலும் உண்டான அர்த்தத்தை ஆழ்வான் அருளிச் செய்தார்
ச்ருணோதி ச்ராவயதி என்கிற நிறுக்தி விசேஷத்தாலே ஸ்ரீ யதே ஸ்ரயதே என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்த விசேஷத்தைச் சொல்லுகிறது
ச்ருணோதி என்றது கேளா நிற்கும் என்றபடி -ச்ராவயதி என்றது கேட்பியா நிற்கும் என்றபடி –
ப்ரதீப்த சரணத்தில் பொருந்தாதாப் போலே சம்சாரம் அடிக் கொதித்து பகவத் விஷயத்தை கிட்டி யல்லது தரிக்க மாட்டாத படியான தசா விசேஷத்தை யுடையனாய் –
பகவத் சமாஸ்ரயண உன்முகனான சேதனன் -யத் ப்ரஹ்ம கல்ப இத்யாதிப் படியே கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் சிறிது வரையிட்டுக் காட்டக்
கடவதல்லாத படி க்ரூரங்களாய் இருக்கிற
அக்ருத்யகரண க்ருத்யாகரண பிரமுகங்களான அபராத விசேஷங்களை கரண த்ரயத்தாலும் அநாதி காலம் கூடு பூரித்து ஈஸ்வரனுடைய -ஷிபாமி – ந ஷமாமி -என்கிற
வெட்டிய சொற்களுக்கு விஷயபூதனாய் போந்தான் ஒருவன் ஆகையாலே
அநாதி கால ஆர்ஜிதங்களான தன்னுடைய அபராத விசேஷங்களையும் -ஈஸ்வரனுடைய நிரந்குச ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து பீதனாய்
பிராட்டியுடைய நிரவதிகமான காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்கு உண்டான பந்த விசேஷத்தையும் புரச்கரித்து
சாபராதனாய் அநந்ய சரணனாய் இருக்கிற எனக்கு அபராத நிவ்ருத்தி மாத்ரத்திலே ப்ரசன்னையாய் அசரண்ய சரண்யையாய் இருக்கிறவள் திருவடிகளை ஒழியப் புகல் இல்லை என்று
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தையை தானே கேளா நிற்கும் -ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்யும் வார்த்தையை அவன் கேட்கும்படி பண்ணா நிற்கும் –
இச்சேதனனுக்கு இருவரோடும் பந்தம் உண்டாய் இருக்க அவனுக்கு அவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில்
மாத்ருத்வ நிபந்தனமான வாத்சல்யாதி ரேகத்தாலும் ஈச்வரனோபாதி காடின்ய மார்த்தவங்கள் கலந்து இருக்கை யன்றிக்கே கேவல மார்த்தவமேயாய்
சாபராதரான சேதனரை அபராதா நுகுணமாக நியமிக்கும் இடத்தில் மர்ஷயாமீஹ துர்பலா -என்கிறபடியே அசக்நையாய் இருக்கையாலும்
தவம் நீசச்சவத் ஸ்ம்ருத என்கிறபடியே தன் திருவாயாலே இப்படி புல்லிதமான வார்த்தையை அருளிச் செய்ய வேண்டும்படி விபரீத புத்தியாய்
தன் திறத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ணி
ராவணோ லோக ராவண -என்கிறபடியே இருந்ததே குடியாகக் கையெடுத்துக் கூப்பிட வேண்டும்படி பர ஹிம்சையே யாத்ரையாக யுடையனாய் இருக்கிற
ராவணனுடைய தண்ணிமையைப் பாராதே
அவனைக் குறித்து -தேன மைத்ரி பவது -என்றும் – மித்ர மௌபயிகம்கர்த்தும் -என்றும் ஹிதோபதேசம் பண்ணுகையாலும்
ராஷசிகள் ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் ஸ்வப்னம் கண்டு அத்தாலே பீத பீதைகளாக -த்ரிஜடை-
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-என்று நாம் விடாதே இருந்து தர்ஜன பர்த்சனங்களைப் பண்ணி நலிய
நம்மாலே நலிவு படுகிறவள் தானே நமக்கு ஆபத்து உண்டான காலத்திலேயே நம்மைக் கைவிடாதே ரஷிக்கும் என்று சொல்லுகையாலும்
இப்படி பிறர் சொன்ன அளவன்றிக்கே பிராட்டி தானும் இவர்கள் நோவுபடுகிற சமயத்தில் பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள்
நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா -என்று அபய பிரதானம் பண்ணுகையாலும்
இப்படி வ்யவஹார மாத்ரமேயாய் அனுஷ்டானம் விபரீதமாகை யன்றிக்கே திருவடி வந்து ராவணன் பட்டான் -பெருமாள் விஜயிகளானார்-என்று
விண்ணப்பம் செய்த வார்த்தையைக் கேட்டு இவன் பண்ணின உபகாரத்துக்கு சத்ருச பிரத்யுபகாரங்கள் காணாதே தடுமாறுகிற அவஸ்தையிலே
பத்து மாசம் தேவரீரை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணி நலிந்து போந்த இப்பெண் பயல்களை நான் நினைத்த வகைகளிலே நலியும்படி அவர்களைக் காட்டித்தர வேணும்
நான் முன்பு தேவர் திருவடிகளிலே வந்த போது இவர்கள் பண்ணின நலிவைப் பொறுக்க மாட்டாதே நொந்து போனேன் –
இப்போது இவர்களை நிரசிக்கைக்கு ஒரு ப்ரதிபந்தகம் இல்லை -இவர்களை ஐம்பது அறுபது வகைகளாலே கொல்லும் வகை சொல்லா நின்றேன் –
இவனுக்கு நாம் பரிசிலாகக் கொடுக்கலாவது என் என்று தடுமாற வேண்டா -இவர்களை நிரசிக்கும் படி என்கையிலே காட்டித் தருமது ஒழிய
எனக்குப் பண்ணும் பிரத்யுபகாரம் வேறில்லை என்று விண்ணப்பம் செய்ய
திருவடி பண்ணின உபகாரத்தையும் ராஷசிகள் பண்ணின அபகாரத்தையும் பாராதே அப்போது அவர்களுடைய அச்சம் ஒன்றுமே திரு உள்ளத்திலே பட்டு
அவர்களுடைய கண் குழிவு காண மாட்டாதபடியான மார்த்தவத்தாலே ந கச்சின்னா பராத்யதி -என்றும் -க குப்யேத்-என்றும் -துர்ப்பலா -என்றும்
திருவடியோடே மன்றாடி ஆர்த்ராபராதைகளான ராஷசிகளை ரஷிக்கையாலும்
இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது பெருமாள் நிறுத்திப் போகத் தேடின அளவிலே
சீதாமுவாச -என்று பிராட்டி புருஷகாரமாகப் பெருமாளோடு கூடப் போகையாலும்
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ என்று ஜீவிக்க வேண்டி இருந்தாயாகில் பெருமாள் தம்முடைமையும் தாமுமாகச் சேர இருக்கும் படி
பண்ணப் பார் என்று ராவணனைக் குறித்து பெருமாளும் பிராட்டியும் சேர இருக்கைக்கு உறுப்பான வார்த்தைகளைச் சொல்லியும் த்ரிஜடையைப் பிராட்டிக்கு
வ்யசனங்களில் உசாத் துணையாக வைத்தும் இப்படி பிராட்டி முன்னாக பெருமாளை சரணம் புகுகையாலும்
மஹா ராஜர் திருவாபாரணம் முன்னாகப் பெருமாளைப் பற்றுகையாலும் -காகம் அபராதத்தைப் பண்ணி வைத்து பிராட்டி சந்நிதியிலே தலை யறுப்புண்ணாதே பிழைக்கை யாலும்
ராவணனுக்கு அத்தனை அபராதம் இன்றிக்கே இருக்க பிராட்டி சந்நிதி இல்லாமையாலே தலை யறுப்புண்கையாலும்
பின்னையும் இளைய பெருமாளைக் குறித்து பிராட்டி தன்னை வனத்திலே விட்டுப் போகா நிற்க தம்பிமாரோடே ஒக்க நாட்டை ரஷிக்க விண்ணப்பம் செய்யும் என்று அருளிச் செய்கையாலும்
மற்றும் இவை தொடக்கமான ஸ்வ பாவ விசேஷங்கள் எல்லாவற்றாலுமாக ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் போது இவள் புருஷகார பூதையாகக் கடவள் –
முக்யமாக எம்பெருமானை ஆஸ்ரயிக்கை யாவது -பிராட்டி முன்னாக ஆஸ்ரயிக்கை –
ஆச்சி சிறியாத்தானுக்கு பகவச் சேஷமாய் அவற்றை நெடும் காலம் அகன்று போந்த இவ்வாத்மாவை எம்பெருமானோடே இணைக்கக்குப்
பற்றாசாக நமக்குப் பிராட்டி யுளள் என்று நிர்ப்பரனாய் இரு என்று அருளிச் செய்தார் –
சர்வஜ்ஞனாய் சர்வசக்தியாய் இருக்கும் ஈஸ்வரன் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்கிறபடியே ஹ்ருதிச்தனாய்க் கொண்டு
என்கிறபடியே ஹ்ருதிச்தனாய்க் கொண்டு
சேதனர் பண்ணும் அபராதங்களைக் குறித்து அவற்றுக்கு ஈடாக நியமிக்கையாலே சாபராதரான சேதனர் சரண உக்தியைப் பிரயோகித்தால்
அதுவும் அபராத கோடிகடிதமாய் இருக்கும் இ றே
ஆகையாலே அநாதி காலம் தான் பண்ணிப் போந்த அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் போது
அந்தபுர பரிகரமாய் நின்று விண்ணப்பம் செய்ய வேண்டுகையாலே -சர்வஜ்ஞனான ஈஸ்வரனையும் கூட நிருத்தரனாம் படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும் –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்றும் -மலராள் தனத்துள்ளான் -என்றும் -மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் -என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்றும் தன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தாலும்
மற்றும் உண்டான உசித உபாய விசேஷங்களாலும் சேதனனுடைய அபராதங்கள் ஈஸ்வரன் திரு வுள்ளத்தில் படாதபடி பண்ணி
அநாதி காலம் அகன்று போந்த இருவரையும் சேர்க்கக் கடவதாய் இருக்கிற பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று
——————————————————————————————————————-
மது பதார்த்தம்
2- மதுப்பாலே -புருஷகாரபூதையான பிராட்டியுடைய நித்ய யோகம் சொல்லுகிறது
நித்ய அநபாயிநீம்-என்றும் -அகலகில்லேன் -என்றும் -விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயிநீ -என்றும் -பாஸ்கரேண பிரபா யதா என்றும் தன்னோடும் பிரிவிலாத் திருமகள் என்றும்
சொல்லுகிறபடியே ஈஸ்வரனோடே நித்ய சம்ச்லேஷ விசிஷ்டையாய் இருக்கையாலே ஆச்ரயண உன்முகனான சேதனன்
தன்னுடைய அபராதங்களையும் ஈஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து பிற்காலிக்குமா போலே
புருஷகார பூதையான பிராட்டியினுடைய அசந்நிதியை அனுசந்தித்துப் பிற்காலிக்க வேண்டாதே ருசி பிறந்த போதே ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கும் –
ந ச சீதா த்வயா ஹீ நா -என்கிறபடியே அரை ஷணம் விச்லேஷித்தால் சத்தாஹாநி பிறக்கும்படி இருக்கையாலும்
தன்னைப் பிரிந்த போது -ஜகத்ச சைலம் -என்கிறபடியே நாடு குடி கிடவாது என்று அறிந்து இருக்கையாலும்
பரத்வத்தோடு வ்யூஹத்தோடு விபவத்தோடு அர்ச்சாவதாரத்தோடு அந்தர்யாமித்வத்தோடு வாசியற எல்லாவிடத்திலும் பிரியாதே இருக்கும் –
திருமால் வந்து என்நெஞ்சு நிறையப் புகுந்தான் -பாவை பூ மகள் தன்னோடும் உடனே வந்தாய் –என் மனத்தே புகுந்தாய் –சேர்ந்த திருமால் இத்யாதி
இவளுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான சேர்த்தியும் நித்யமாய்-அனுபவமும் நித்யமாய் தத் கார்யமான ஹர்ஷமும் என்றும் உண்டாகையாலே
இச்சேதனனுக்கு பிராட்டி அசந்நிதி பிரயுக்தமாக ஆச்ரயண வைமுக்யம் பிறக்கை யன்றிக்கே இப்பிரதிபத்தி மாத்ரமே யாய்த்து அபேஷிதம்-
இது உண்டான போது சர்வ காலமும் ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கும் –
ஆக -ஸ்ரீ மச் சப்தத்தாலே
அச்யேசானா ஜகத -தவம் மாதா சர்வ லோகா நாம் –அகில ஜகத் மாதரம் –என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜகத்துக்கு பூஜ்யையாய்
விஷ்ணு பத்னீ -என்றும் விஷ்ணோஸ் ஸ்ரீ என்றும் -தேவ தேவ திவ்ய மஹிஷீம் என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஈஸ்வரனுக்கு மஹிஷியாய்
அவனுக்கு அத்யந்த பரதந்த்ரையாய் அவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளைப் போலே அபரிச்சேத்யமாய் இருக்கிற தன்னுடைய யோக்யதா பிரகர்ஷத்தாலே
எப்போதும் ஒக்க அவன் திரு உள்ளத்தைத் தன் பக்கலிலே துவக்கிக் கொண்டு இருக்கக் கடவளாய்-ஈஸ்வரன் வைச்வரூப்யம் எல்லாம் கொண்டு
சர்வகாலமும் தன்னை அனுபவியா நின்றாலும் தன்னுடைய -குண ரூப விலாச சேஷ்டிதங்களாலே அபோர்வவத் விச்மயங்களைப் பண்ணக் கடவளாய்
-இப்படி இருக்கிற தான் இறையும் அகலகில்லேன் -என்கிறபடியே
விக்ரஹ ஏக தேசத்திலே காலதத்வம் உள்ளதனையும் ஆழம் கால் பட வேண்டும்படி நிரவதிக போக்யதா பிரகர்ஷத்தை உடையனாய் இருக்கிற ஈஸ்வரனை
ஷண காலம் விச்லேஷிக்கில் சத்தா ஹானி பிறக்கக் கடவளாய்
யத்ர நாந்யத் பஸ்யதி-என்னும்படியான விஷயத்தை சர்வகாலமும் அனுபவியா நிற்கச் செய்தேயும் பிரஜைகளினுடைய ரஷணத்தில் எப்போதும் திரு உள்ளம் கிடந்தது
தேவதேவ திவ்ய மஹிஷியான தன்னுடைய மேன்மை பிரஜைகள் பக்கல் நடையாடாதே மாத்ருத்வ நிபந்தனமான பந்தமே அனுவர்த்திக்கக் கடவதாய்
சர்வ லோக ஜனநீத்வ ரூபமான ப்ராப்தி விசேஷம் அன்றிக்கே அசரண்ய சரண்யாம்-என்கிறபடியே ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால்உண்டான நிகர்ஷம் பாராதே
ரிபூணாமபி வத்சலனாய் சர்வபூதசமனாய் -ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே ஜகத் ரஷணத்திலே தீஷிதனாய் இருக்கிற ஈஸ்வரன் -ஷிபாமி –ந ஷமாமி -என்று
தள்ளிக் கதவடைத்தாலும் வந்து விழலாம் படியான விசேஷ ப்ராப்தியை யுடையளாய்
ஈஸ்வரன் ஸ்வா தந்த்ர்யத்தையும் தம்தாமுடைய அபராதத்தையும் பார்த்து தடுமாறின அவஸ்தையில் ஈஸ்வரன் முகத்தைப் பார்த்து
சர்வஜ்ஞராய் சர்வ சக்திகராய் உபய விபூதி நிர்வாஹகராய் இருக்கிற தம்முடைய பெருமையையும் -அஜ்ஞான அசக்திகளால் புஷ்கலராய் சிறு மானிடவர் -என்னும்படி
இருக்கிற இவர்களுடைய சிறுமையையும் பார்த்தால் பர்வத பரம அணுவுககுச் சேர்த்தி இல்லாதாப் போலே உமக்கும் இவர்களுக்கும் கதமாசீத் சமாகம
என்கிறபடியே ஒரு பிரகாரத்தாலும் சேர்த்தி யற்று அன்றோ இருக்க வடுப்பது -சப்ரயோஜன கடாஷம் பண்ணி இவர்களை அங்கீ கரிக்கைக்கு
யோக்யதை இல்லாத படி நீர் அவாப்த சமஸ்த காமராய் இருந்தீர்
உம்முடைய தரத்துக்கு ஈடான பச்சை இவர்களால் இடப் போகாது -ஆனபின்பு இவருடைய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் இரண்டு தலையையும்
சேர்க்கைக்கு யோக்யதை இல்லை
இவர்களை அநாதரித்தால் உம்முடைய நாராயணத்வமும் ஒருவாய்ப் போய் சர்வ ரஷகனான உம்முடைய ரஷகத்வமும் விகலமாய் சீலாதி குணங்களும் முடங்கப் பட்டு
உம்முடைய ச்வா தந்த்ர்யமே தலையெடுத்து இவர்கள் உம்முடைய சீற்றத்துக்கு இலக்கை நசித்துப் போம் அத்தனையாய் இருந்தது
உமக்கும் இவர்களுக்கும் உண்டான பந்த விசேஷத்தைப் பார்த்தால் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்கிறபடியே குடிநீர் வழித்தாலும் போகாதது ஒன்றாய் இருந்தது
ஸ்ருஷ்ட் யாவதாராதி முகத்தாலே எதிர் சூழல் புக்குத் திரிகிற உம்முடைய பேற்றுக்கு நான் இரக்க வேணுமோ –
உம்முடைய ஸ்வரூப சித்த்யர்த்தமாக இவர்களை ரஷிக்க வேண்டாவோ -அதிக்ராமன் நாஜ்ஞாம் என்கிறபடியே
நம்முடைய ஆஜ்ஞாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு அநாதி காலம் இலக்கை போந்தவர்களை -இவர்கள் பண்ணின அபராதத்துக்கு உசித தண்டம் பண்ணாதே
இவர்கள் செய்த தப்புக்களைப் பொறுத்து இவர்களை ரஷித்தால் இவர்கள் அநாதி காலம் சாஸ்திர மர்யாதாதி லங்கனம் பண்ணினால் போலே
நாமும் அனந்த காலம் சாஸ்திர மர்யாதாதி லங்கனம் பண்ணினோம் ஆகோமோ-
அஜ்ஞனான இவன் தப்புச் செய்தான் என்ன சர்வஜ்ஞனான நாமும் தப்புச் செய்யவோ இரண்டு தலையும் தப்புச் செய்வதில் ஒரு தலையே அத்தை அனுஷ்டித்து விட அமையாதோ
ஒரு தலையில் தப்பை மாற்றக் கடவதாகத் தொடங்கி இரண்டு தலைக்கும் தப்பு உண்டாக்குகிறாய் அன்றோ
இவர்களை ரஷித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது –
இவர்களை ரஷணம் பண்ணாதே அபராத அனுகூலமாக்கி நியமித்தால் உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும் படி என்-
நியமியாதே போனால் சாஸ்திரம் ஜீவியாதாப் போலே ரஷியாத போது குணங்கள் ஜீவியாதே –
ஆனபின்பு க்ருபாதி குணங்கள் ஜீவிக்கைக்காக இவர்களுடைய ரஷணம் பண்ண வேண்டாவோ
ரஷணத்தில் சாஸ்திரம் ஜீவியாது என்று சொல்ல வேண்டா -சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கினால்
குணங்களை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆனபின்பு இவர்களை ரஷித்து அருள வேண்டாவோ -என்று இச் சேதனனை அபராதங்கள் பாராதே ஈஸ்வரன் விஷயீ கரிக்கும் படியான பாசுரங்களைச் சொல்லி
விளக்குப் பொன் போலே நடுவே நின்று இரண்டு தலையையும் சேர்க்கக் கடவளாய் இருக்கிற பிராட்டியாருடைய நித்ய யோகத்தை பிரதிபாதிக்கிறது –
———————————————————————————-
நாராயண பதார்த்தம் –
3-நாராயண பதம் –
இப்புருஷகார பூதையாய் இருக்கிற பிராட்டி தானே தான் சேர்த்த இவனை ஈஸ்வரன் கைவிடும் படியான பாசுரங்களைச் சொன்னாலும்
தோஷோ யத்யபி தஸ்யா ஸ்யாத்-என்றும் -செய்தாரேல் நன்று செய்தார் -என்றும் -சொல்லுகிறபடியே அவளோடு
மறுதலைத்து நோக்கும் படியான வாத்சல்யாதி குணங்களை பிரதிபாதிக்கிறது –
இப்பதத்தில் பிரதிபாதிக்கப் படுகிற வாத்சல்யாதி குணங்கள் ஆக்கின -புருஷகார பூதையான பிராட்டியாலே உத்பவிக்கப் பட்டு
பிரபத்யே -என்கிற பதத்தில் சொல்லப் படுகிற ச்வீகாரத்துக்கு உபயுக்தங்களாய் இருப்பன சில –
வாத்சல்யம் ஆவது -வத்சத்தின் பக்கல் தேனு இருக்கும் இருப்பு -அதாகிறது அதினுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும் –
ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும் -எதிரிட்டவர்களை கொம்பிலும் குளம்பிலும் கொண்டு நோக்குகையும் இ றே
அப்படியே ஈஸ்வரனும் -செய்தாரேல் நன்று செய்தார் -என்று தோஷத்தை போக்யமாகக் கொண்டு -பாலே போல் சீர்-என்கிற குணங்களால் தரிப்பித்து
கதஞ்சன ந த்யஜேயம் -என்றும் -அபயம் சர்வ பூதேப்ய என்றும் அனுகூலர் நிமித்தமாகவும் ப்ரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும் –
ஸ்வாமி த்வமாவது-உடையவனாய் இருக்கும் இருப்பு -அதாகிறது சேதனர் தன்னை அழித்துக் கொள்ளும் அன்று விடமாட்டாதே இவன் பக்கலிலே ப்ரவணனாய்-
கர்ஷகன் பயிர்த் தலையிலே குடில் வளைத்து நோக்குமா போலே இவர்களுடைய ரஷண அர்த்தமாக நித்ய சந்நிதி பண்ணி விடாதே நோக்குகைக்கு உறுப்பான பந்த விசேஷம் –
அத்வேஷம் தொடங்கி கைங்கர்யம் எல்லையாக நடுவுண்டான அவஸ்தா விசேஷங்கள் எவ்ல்லாம் உண்டாக்குகிறது -இந்த பந்த விசேஷம் அடியாக இ றே
சௌசீல்யமாவது-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தாலும் உபய விபூதி யோகத்தாலும் பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தியாலும் நிரங்குசமான
வைபவத்தையுடையனாய் இருக்கிற ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும் -சிறு மானிடவர் -என்கிற தங்கள் சிறுமையையும் கண்டு அவன் எவ்விடத்தான் யானார் -என்னும்படி இருக்கும் இ றே
அப்படி அவன் மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து ஆச்ரயண வைமுக்யம் பிறவாதபடி தன் பெருமையையும் பாராதே
இவர்கள் சிறுமையையும் பாராதே எல்லாரோடும் ஒக்க மேல் விழுந்து புரையற சம்ச்லேஷிக்கையும்
இப்படி சம்ச்லேஷியா நின்றால் இவர்கள் கார்யம் செய்தான் அன்றிக்கே தன் பேறாக நினைத்துத் தன்னுடைய மேன்மை திரு வுள்ளத்தில் நடையாடாதபடி இருக்கையும் –
சௌலப்யமாவது-அதீந்த்ரியனான தன்னைச் சேதனன் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிகலாம் படி நயன விஷய தாங்கதனாகை-
அதினுடைய பூர்த்தி உள்ளது அர்ச்சாவதாரத்திலே –மாம் -என்று காட்டின சௌலப்யம் -பரத்வம் என்னும் படி இ றே அர்ச்சாவதார சௌலப்யம் –
மாம் என்று கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க் கயிறுமாய்க் கொண்டு சாரதியாய் நின்ற நிலையை இ றே பற்றச் சொல்லிற்று அங்குத்தை சௌலப்யம் –
மய்யா சக்த மநா பார்த்த -என்று தன் பக்கலிலே ஆசக்தமான மனசை யுடைய அர்ஜுனன் ஒருவனுக்குமாய் இருக்கும் அர்ச்சாவதார சௌலப்யம் சர்வ விஷயமாய் இருக்கும் –
நீயே நமக்கு வேண்டா என்றவர்களையும் விட மாட்டாத சௌலப்யம் இ றே இது –
அந்த சௌலப்யம் காதா சித்தகமாய் இருக்கும் -இந்த சௌலப்யம் சர்வகாளிகமாய் இ றே இருப்பது –
ச்வீகாரத்துக்கு உபயுக்தங்களான குண விசேஷங்களோ பாதி உபாயத்வ உபயோகிகளான குண விசேஷங்களும் இவ்விடத்தே அனுசந்தேயங்கள்
பிரதம பாதாநந்தரத்தில் அஸ்மச் சப்தத்துக்குப் போலே இதுக்கு சங்கோசம் இல்லாமையாலே அஸ்மச் சப்தத்வயார்த்தமும் இவ்விடத்திலே அனுசந்தேயம் –
———————————————————————
சரண பதார்த்தம்
4- சரனௌ-
கீழ்ச் சொன்ன குணங்களை ஒழியவும் தானே விரோதி நிவர்த்தகமுமாய் -அபிமத ப்ராபகமுமாக வல்ல விக்ரஹ வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –
தெரிவை மாருருவமே மருவி -பெரிய திருமொழி -1-1-3- என்கிறபடியே இதர விஷயங்களினுடைய பொறி புறம் தடவின வடிவிலே அகப்பட்டுப் போருகிற சேதனனுக்கு
தன பால் ஆதாரம் பெருக வைத்த -திருமாலை -16- என்கிறபடியே தன் பக்கலிலே பிரேமத்தை யுண்டாக்கி இதர விஷயங்களில் ருசியை மாற்றி
பின்பு தானே உபாயமாய் ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பச்யந்தி என்கிறபடியே ப்ராப்யமும் தானே யாகையாலே
ஸ்வரூப குணங்களில் காட்டில் விக்ரஹம் இ றே உபாதேயமாய் இருப்பது –
ஜிதந்தே புண்டரீகாஷ -என்றும் -சரணத்வந்த்வம் வ்ரஜாமி -என்றும் -ந ஜாநே சரணம் பரம் -என்றும் -த்வத்பாத கமலாதன்யத் -என்றும் -பாதயோஸ் ஸ்திதம் -என்றும் –
விக்ரஹத்தினுடைய ருசி ஜனகத்வத்தையும் உபாய உபேயத்வங்களையும் இ றே ஜிதந்தையில் அடைவே பிரதிபாதிக்கிறது –
இவ்விடத்தில் திவ்ய மங்கள விக்ரஹத்தை சொல்லுகிறது ஆகில் விக்ரஹ வாசகமான சப்தத்தை பிரயோகியாதே
விக்ரஹ ஏக தேசமான திருவடிகளுக்கு வாசகமான சரண சப்தத்தை பிரயோகிப்பான் என் என்னில் –
மேல் பிரபதனம் பண்ணப் புகுகிற அதிகாரி நாராயண பதத்திலே ஈஸ்வரனுடைய ஸ்வாமி தவத்தையும் சேஷித்வத்தையும் அனுசந்தித்த்வன் ஆகையாலும்
மாதாவினுடைய இதர அவயவங்களில் காட்டில் ஷீரஸ் யந்தியான ஸ்தனத்திலே பிரஜைக்கு விசேஷ ச்நேஹமும் ப்ராப்தி யுண்டாய் இருக்குமா போலே
இவனுக்கும் அம்ருதஸ் யந்தியான திருவடிகளிலே விசேஷ பிராப்தியும் ச்நேஹமும் கிடக்கக் கடவதாகையாலும்
பாத க்ரஹணத்தில் கிருபை அதிசயித்து இருக்கையாலும் -சரண சப்த பிரயோகம் பண்ணுகிறது –
நாளு நம் திருவுடையடிகள்தம் நலம் கழல் வணங்கி -என்றும் -திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -என்றும்
இத்யாதிகளில் படியே உபதேச சமயத்திலும் திருவடிகள் ரஷகம் என்று உபதேசிசரணாகக் கொண்ட -என்றும் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அனுஷ்டான தசையிலும் திருவடிகளையே ரஷகமாக அத்யவசித்தார் இ றே நம்மாழ்வாரும் –
மற்றும் உள்ள ஆழ்வார்களும் பலவிடங்களிலும் திருவடிகளையே உபாயம் என்று அருளிச் செய்தார்கள் இ றே –
சப்ராதுஸ் சரணு காடம் நிபீட்ய-என்று ஆழ்வாருக்கு அடியான இளைய பெருமாளும் திருவடிகளை இ றே உபாயமாக அத்யவசித்தது-
ப்ராப்யமும் ஸ்வரூபமும் ஸூ ரிகளோடு சமானமாய் இருக்குமா போலே ப்ராபகமும் ஸூ ரி சமானமாய் இ றே இருப்பது –
ஆக –
கீழே சொன்ன ஸ்ரீ மத்தையும் – நாராயணத்வமும் -அகிஞ்சித்கரமான அவஸ்தையிலும் தானே கார்யம் செய்ய வற்றான விக்ரஹ வைலஷண்யம் சொல்லுகிறது –
——————————————————————————–
சரண சப்தார்த்தம் –
5- சரணம் -உபாயமாக –
கீழ் ச்வீகார்ய வஸ்துவைச் சொல்லிற்று -இங்கு ச்வீகார பிரகாரத்தைச் சொல்லுகிறது –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பா -என்றும் -கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே லஷ்மீ பரிஷ்வங்கியான வஸ்துவுக்கு பிராபக தயா வரணீயத்வமும் ப்ராப்ய தயா வரணீயத்வமும் உண்டாய் இ றே இருப்பது –
இதுவே இ றே வாக்யத்வயத்துக்கும் அர்த்தம் -இதில் பூர்வ வாக்யத்துக்கு பிராபக தயா வரணீயத்வமும்அர்த்தம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
ஷீரம் பத்யமுமாய் போக்யமுமாய் இருக்கிறாப் போலே நிர்வாணம் பேஷஜம் -என்றும் -அம்ருதம் சாதனம் சாத்தியம் -என்றும்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் ஏகமாய் இ றே இருப்பது –
உபாயம் ஆகிறது -அநிஷ்ட நிவாரகமுமாய் -இஷ்ட ப்ராபகமுமாய் இருக்குமது –
அநிஷ்டமாவது–நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து -என்றும் -அநாத்மன் யாத்மா புத்திரா -என்றும் சொல்லுகிறபடியே அனாத்மன்யாத்ம புத்தி ரூபமாயும் –
அஸ்வே ஸ்வ பிரதிபத்தி ரூபமாயும் இருக்கிற அவித்யையும்
அவித்யா கார்யமான ராகத்வேஷங்களும் -கரண த்ரயத்தாலும் கூடு பூரித்து வைக்கும் தத் கார்யங்களான புண்ய பாப ரூப கர்மங்களும்
கர்மத்வயத்தினுடைய பல போகார்த்தமாகப் பரிக்ரஹிக்கும் தேவ திர்யகாதி யான நாநா வித சரீரங்களும்
அச் சரீரங்களைப் பரிக்ரஹித்து அனுபவிக்கும் ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும் தொடக்கமானவை –
இஷ்டமாகிறது -புண்ய பாப கர்ம விதூந நப்ரகாரமும் -ஹாரத்த மார்க்க விசேஷ பிரகாரமும் –ஹ்ருதய குஹா நிர்க்க மனனும்-
அர்ச்சிர்வாசரோத்தராயண ஸூ கள பஷாத்யாதி வாஹிக சத்காரமும் -சலில தகன பவ நாத்யாவரண சப்தகாதி லங்கநமும் -த்ரிகுணாதிரமணமும்-
விரஜாக்யாப்ரக்ருத நதீ விசேஷா வகாஹா நமும் -ஸூ ஷ்ம சரீர விமோசனமும் -அமானவா கர ஸ்பர்சமும் –
-அபஹத பாப்மத்வாதி குணகண ததாஸ்ரைய ஸ்வரூப பிரகாசமும் -பஞ்சோப நிஷன்மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரஹமும் -ஜரமதீய திவ்ய சர பிராப்தியும் –
திவ்ய அப்சரஸ் சங்க சத்காரமும் -ப்ரஹ்ம அலங்கார லங்கரணமும் -ப்ரஹ்ம கந்த ரச தேஜ பிரவேசமும் –
திவ்ய கோபுர பிராப்தியும் -ஸூ ரி சங்க சத்காரமும் -ராஜ மார்க்க கமனமும் -ப்ரஹ்ம வேசம பிரவேசமும் -திவ்ய மண்டப பிராப்தியும்
-திவ்ய பர்யங்க நிரீஷணமும் -சபத்நீக சர்வேஸ்வர தர்சனமும் -ஆனந்த மய பரமாத்மா சமீபஸ்திதியும்-பாதபீட பர்யங்கோத் சங்காரோகணமும் –
ஆலோகாலாபா லிங்க நாத்ய நுபவமும் -ஸ்வரூப குண விக்ரஹாத்ய நுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷமும்
நாநாவித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசித சர்வ பிரகார கைங்கர்ய கரணமும் –
இதில் பிரதானமான இஷ்டமாய் இருப்பது கைங்கர்யம் -அதுக்கு உப யுக்தங்கள் ஆகையாலே இஷ்டங்களாய் இருக்கும் மற்றும் உள்ளவை –
ஆக
இப்படிக்கொத்த அநிஷ்டத்தை நிவர்ப்பித்து இஷ்ட ப்ராப்தியைப் பண்ணுகை உபாயமாகை யாகிறது –
—————————————————————————————-
ப்ரபத்யே -பதார்த்தம் –
6-ப்ரபத்யே –
கீழ் ச்வீகார பிரகாரத்தையும் ச்வீகார்ய வஸ்துவையும் சொல்லிற்று -இதில் ச்வீகாரத்தைச் சொல்லுகிறது –
பிராட்டியுடைய புருஷகார பாவமும் -ஈஸ்வரனுடைய உபாய பாவமும் கார்யகரமாம் போது இவனுடைய பிரதிபத்தி வேணும் இறே –
இந்த பிரதிபத்தி ராஹித்யத்தாலே இ றே நித்யங்களாய் இருக்கிற இவை இது பூர்வம் அகிஞ்சித் கரங்கள் யாய்த்து –
ஆகையாலே அவை இரண்டையும் கார்யகரமாம் படி பண்ணக் கடவதான இவனுடைய பிரதிபத்தி விசேஷத்தைச் சொல்லுகிறது –
பத்லு கதௌ-என்கிற தாதுவுக்கு அர்த்தம் -கதி -இவ்விடத்தில் கதியாக நினைக்கிறது -கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிற புத்தி விசேஷத்தை –
இந்த புத்தி விசேஷம் ஆகிறது -அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநாத்யநந்தர பாவியாய் -சாத்திய சாதனா வ்யாவ்ருத்தமாய் –
சேவா நாம் குஹ்யமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் சக்ருதநுஷ்டேயமாய்-அவிளம்ப பல பிரதமாய் -சர்வாதிகாரமாய் -ஸ்வரூப அனுரூபமாய்
-நியம விதுரமாய் -அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-ஸூ சகமாய் -யாச்ஞா கர்ப்பமாய் -த்ருடாத்யவ சாயமுமாய் இருப்பதொரு ஜ்ஞான விசேஷம் –
இந்த ஜ்ஞான விசேஷத்தில் பிரயோஜனாம்சம் இருப்பது ஒரு விசுவாசம் -கிரயோ வர்ஷதாராபி -என்கிறபடியே
திரைமேல் திரையாகப் பொறுக்க ஒண்ணாத படி வந்து மேலிடுகிற வியசன பரம்பரைகளாலும் யுக்த்யாபாச வசநாபாசங்களாலும் –
ஈஸ்வரன் பரீஷை தொடக்க மானவற்றாலும் இவ்வத்யவசாய விசேஷம் அப்ரகர்ப்யமான போது இ றே பல சித்தி உள்ளது –
இப்பிரபதனம் கரண த்ரயத்தாலும் உண்டாக வுமாம் -ஏக கரணத்தாலும் உண்டாக வுமாம் பல சித்திக்கு குறை இல்லை –
அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயம் வேணும் -பல சித்திக்கு ஏக கரணமே அமையும் –
உபாய பூர்த்திக்கு ஸ்ரீ யபதித்வமும் -வாத்சல்யாதி குண யோகமும் -திவ்ய மங்கள விக்ரஹமும் அபேஷிதமாய் இருக்கிறாப் போலே
அதிகாரி பூர்த்திக்கு கரண த்ரயமும் அபேஷிதமாய் இருக்கும்
உபாய வரணத்துக்கு ஏகாந்தமான அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானமும் ப்ராப்ய ருசியும் தொடக்கமான குண விசேஷங்கள்
இன்னார்க்குப் பிறக்கக் கடவது என்கிற நியமம் இல்லாமையாலும்
இங்குப் பிறக்கிற பிரதிபத்தி விசேஷம் தனக்கு இதர சாதனங்கள் போலே அக்னி வித்யா சாபேஷதை இல்லாமையாலும்
உபாசனம் போலே த்ரைவர்ணி கர்க்கே அதிகாரமாய் இருக்கை யன்றிக்கே சர்வாதிகாரம் ஆகையாலே ஆச்ரயண விதுரமாய்க் கிடக்கிறது –
பிரபத்யே என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே நாட்கடலைக் கழிமின் என்று இருக்கும் நான் காலம் செல்ல விட அரிதாய் இருக்கையாலும்
சம்சாரத்தின் உடைய தோஷத்தையும் பகவத் விஷயத்தினுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்தால் இப்போதே
சம்சார சம்பந்தம் அற்று பகவத் விஷயத்தை லாபிக்க வேணும் என்னும் படியான த்வாதிரேகம் பிறக்கக் கடவதாகையாலும்
இவ்வுபாய விசேஷம் தான் அனந்யாஸ் சிந்தயந்த -என்கிறபடியே நிரதிசய ப்ரீதி ரூபமான உபாசனத்தளவன்றிக்கே அதிலும் காட்டில்
அத்யர்த்த ப்ரீதி ரூபமாய் இருக்குமாகையாலும் -த்வயமர்த்தா நுசந்தா நேன சஹ -என்கிறபடியே –
யாவச்சரீர பாதம் அனுவர்த்திக்கும் என்னும் இடம் ஸூ சிதமாகிறது -பல சித்திக்கு சக்ருத் கரணம் அமையும் –
கால ஷேபாதிகளுக்கு அசக்ருத் கரணம் அபேஷிதமாய் இருக்கும்
-இப்படிக் கொள்ளாத போதே சக்ருதேவ பிரபன்னாய என்கிற பிரமாண்த்தோடு விரோதிக்கும் இ றே
ஆக
பூர்வ வாக்யத்தாலே ச்வீகாரத்தையும் -ச்வீகார பிரகாரத்தையும் -ச்வீகார்ய வஸ்து விசேஷத்தையும் பிரதிபாதிக்கிறது —
———————————————————————————-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply