ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ பரந்த படி -த்வய -பிரகரணம் -உபோத்காதம்–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

உபோத்காதம்-
திருமந்த்ரத்தாலே ஸூ ஷிதமான பகவத் அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடையவனாய் –
சரம ஸ்லோஹத்தாலே பகவத் ப்ராப்திக்கு பிரபத்தி வ்யதிரேகண விளம்ப விதுரமாய் ஸ்வரூப அனுரூபமாய் இருப்பதொரு சாதன விசேஷம் இல்லை என்று நிர்ணயித்து
பிராபக ச்வீகார பூர்வகமாக ப்ராப்யத்தை லபிக்க வேணும் என்கிற கௌதுகத்தை யுடையனாய் இருக்கும் அதிகாரிக்கு
ஸ்வ சேஷத்வ அனுரூபமான உபாய உபேயங்களை பிரதிபாதிக்கிறது த்வயம் –
ஜ்ஞானத்துக்கு பலம் தத் அனுரூபமான அனுஷ்டானம் ஆகையாலே ரஹச்ய த்வயத்திலும் பிரதிபாதிதமான உபாய உபேய விஷய ஜ்ஞானம் அனுஷ்டான சேஷமாய் இறே இருப்பது –
ஆகையாலே உபாய விஷய ஜ்ஞானத்தின் உடைய சாபல்ய ஹேதுவாய் இருக்கிற உபாய அனுஷ்டானத்தை பிரதிபாதிக்கிறது பூர்வ வாக்யம்-
உபேய விஷய ஜ்ஞான சாபல்ய ஹேதுவாய் இருக்கிற உபேய அனுஷ்டானத்தை பிரதிபாதிக்கிறது உத்தர வாக்யம் –
இதில் பிரதிபாதிதமான உபாய அனுஷ்டானமும் உபேய பிரார்த்தனையும் இல்லாத போது இவ்வதிகாரிக்கு சாதன வ்யாவ்ருத்தியும்
சாத்யாந்தர நிஷ்டாதி வ்யாவ்ருத்தியும் இன்றிக்கே ஒழியக் கடவது
ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான சாதன சாத்யங்கள் இரண்டையும் பிரதிபாதிக்கிற வாக்ய த்வயமும் அனுசந்தேயமாக இருக்கும் –
பூர்வ வாக்ய அனுசந்தானம் இல்லாத போது பகவத் ஏக சாதனத்வ லாபம் இல்லை -உத்தர வாக்ய அனுசந்தானம் இல்லாத போது பகவத் ஏக சாத்யத்வ லாபம் இல்லை
உத்தர வாக்ய அனுசந்தானம் சாதகனுக்கும் சாதாரணமாய் இருக்கும் -பூர்வ வாக்ய அனுசந்தானம் அதிகாரி த்ரய சாதாரணமாய் இருக்கும்
ஆகையாலே உபய அனுசந்தானம் உண்டானாலாய்த்து அதிகாரி த்ரய வ்யாவ்ருத்தியும் உண்டாவது –

வாக்ய த்வயத்திலும் பிரதிபாதிக்கப் படுகிற சாதன சாத்யங்களை ஒழிந்த இதர சாதன சாத்யங்கள் இரண்டுக்கும் ஸ்வரூப அனநுரூபத்வம்
அவிஷ்டமாய் இருக்குமாகையாலே -அவை த்யாஜ்யங்களாகக் கடவன -இவை இவனுக்கு ஸ்வரூபத்துக்கு அனுரூபங்களாய் இருக்கையாலே அத்யந்தம் உபாதேயங்களாகக் கடவது –
ஸ்வரூப அனுரூபமாய் இருக்கிற இந்த உபாய உபேயங்கள் இ றே வேத தாத்பர்ய விஷயம்
தஸ்மாத் அபிவத்யம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும் –
தஸ்மான் நயாச மேஷாம் தபசாமதிரிக்தமா ஹூ -என்றும்
நியாச ஏவாத்ய ரேசயத் -என்றும்
யோ ப்ரஹ்மாணம் -என்றும்
தமேவ சரணம் கத -என்றும்
சக்ருதேவ பிரபன்னாய -என்றும்
பத்தாஞ்சலி புடம் -என்றும்
மஹத்யாபதி சம்ப்ராப்தே ச்மர்த்தவ்ய -என்றும்
நமாஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்றும்
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்றும்
யேன யேன தாத்தா கச்சதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றும்
க்ரியதாம் இதி மாம்வாத -என்றும்
தன்னி யுக்த கரிஷ்யாமி -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே இந்த உபாய உபேயங்கள் தான் ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசாதி சித்தங்களான அளவன்றிக்கே
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
நாயேன் வந்தடைந்தேன் -என்றும்
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் -என்றும்
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே என்றும்
அநந்ய சரண சரணம் அஹம் ப்ரபத்யே என்றும்
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும்
அடியேனை ஆட்கொண்டு அருளே -என்றும்
ஐ காந்திக்க நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும்
நித்ய கிங்கரோ பவா நி என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுஷ்டித்ததும் பிரார்த்தித்ததும் இவற்றையே யாகையாலே நமக்கும் இவையே உபாதேயங்கள்
ப்ராமாணிகத்வம் உண்டே யாகிலும் ஆசார்ய ருசி பரிக்ருஹீதத்வம் இல்லாத போது ஆதரணீயத்வம் இல்லை இ றே –
ப்ராமாணிகத்வம் உண்டாய் இருக்கச் செய்தேயும் சிஷ்டர்களுடைய அனுஷ்டான ராஹித்யத்தாலே இ றே அஷ்டகையில் பஸூ விசசனம் அகர்த்தவ்யமாகிறது –
ஆசார்யவான் புருஷோ வேத -என்றும்
பவத பரமோ மத -என்றும்
தர்மஜ்ஞசமய பிரமாணம் -என்றும்
ஆசார்ய நிஷ்டாமன் விஷய இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஆஸ்ரயணீ யதைக்கு பிரதான ஹேதுவான ஆசார்ய ருசி பரிக்ரஹம் இவற்றுக்குக் கனத்து இருக்கையாலே இவையே ஆதரணீ யங்கள் –

பிள்ளை ஜீயரை ப்ரபத்திக்கு ரிஷிச் சந்தோ தேவதாதிகள் அனுசந்தேயங்கள் அன்றிக்கே ஒழிவான் என்-பிரமாணம் சுருங்கி இருப்பான் என் –
அதிகாரி சுருங்கி இருப்பான் என் -என்று கேட்க -இதில் அர்த்தத்துக்கு கூட்டு வேண்டில் அன்றோ இதுக்குக் கூட்டு வேண்டுவது
ருஷ்யாதீம்ச்ச கரன்யாசமங்க ந்யாசஞ்ச வர்ஜயேத்-என்றது இ றே பிரமாணம்
யோ ப்ரஹ்மாணம்விததாதி பூர்வம் -என்றும்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்தவம் நாராயண பர -என்றும்
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்றும்
தஸ்மாத் நியாச மேஷாம் தபசாமதிரிக்தமா ஹூ –நியாச இத்யாஹூர்ம நீஷீண -ஏவமாதி பிரமாணங்களும் உண்டு
என் பஷத்தால் இதுக்கு பிரமாண அபேஷை இல்லை –
சம்சாரி கீழ்க் கழிந்ததும் அறியான் -மேல் வருவதும் அறியான் -வர்த்தமானத்திலும் பூதாம்சம் அறியான் பவிஷ்யதம்சம் அறியான் இவன் நிலை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்றும்
ஆனந்தோ ப்ரஹ்ம -என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ-என்றும் நிர்தோஷ பிரமாணத்தாலே கேட்டிருக்கும் ஈஸ்வரன் படி இது
இருவர் ஸ்வ பாவமும் பிரத்யஷத்தாலும் நிர்தோஷ சாஸ்த்ரத்தாலும் அறிந்த பின்பு அவனை இவன் பற்றுகைக்கு
நிதித்யாசிதவ்ய -என்றால் போலே ஒரு விதி வேணுமோ
இருவருடையவும் தரமி க்ராஹக பிரமாணமே அமையும் –
அவ ரஷணே –மன ஜ்ஞானே –மால் தேடியோடும் மனம் -நோக்கும் உணர்வு –
துர்லபனாய் இருப்பான் ஒருவன் அமிழ்ந்தான் என்றால் பலவானாய் இருப்பான் ஒருவன் அருகே நின்றால் அவனை இவன் பற்றுகைக்கு ஒருத்தர் சொல்ல வேணுமோ
முமுஷுக்கள் அதிகாரிகள் ஆகையாலே அதிகாரிகள் சுருங்கிற்று என்று அருளிச் செய்தார் –

ஒருவன் வெட்டத் தொடர்ந்து வாரா நின்றால் அவன் சரணம் புக ரஷித்திலன் ஆகில் காதுகன் என்று லோகம் அடைய கர்ஹியா நின்றது
ரஷித்தான் ஆகில் ஒருவன் நீர்மையே என்று லோகமாக கௌரவியா நின்றது
ரகுராஜச சம்வாதம் -நஹூஷப் ருஹச்பதி சம்வாதம் வயாக்ரா வானர சம்வாதம் -மறவன் முயல் குட்டியை விட்டுப் போந்தேன் என்ன -அது கேட்டு பட்டர் அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ பாஷ்யகாரர் சரம சமயத்திலே த்வயத்தை எப்போதும் அனுசந்திக்கை எனக்கு பிரியம் என்று அருளிச் செய்த வார்த்தையும்
பெரிய கோயில் நாராயணரைக் குறித்து சப்த பூர்வகமாக த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை என்று அருளிச் செய்த வார்த்தையும்
சசேல ஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபசன்னனான சிறியாத்தானுக்கு த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை என்று எம்பார் அருளிச் செய்த வார்த்தையும்
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டராவீர் -என்று நஞ்சீயரைக் குறித்து அனந்தாழ்வான் பிரசாதித்த வார்த்தையும்
மந்த்ராந்தரங்களைச் சொல்லி விடும் இத்தனை இ றே என்ன நஞ்சீயர் த்வயத்தையும் உபதேசித்துப் பிள்ளைக்கு அருளிச் செய்த வார்த்தையும்
அம்மங்கியம்மாள் திருநாராயனபுரத்திலே காணச் செல்ல உடையவர் அருளிச் செய்த வார்த்தையும் தொடக்கமான
பூர்வாச்சார்யா வசனங்கள் ருசி விச்வாசங்களுக்கு உறுப்பாக இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –
இங்குப் பிரதிபாதிக்கிற உபாய உபேயங்களை ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான இச்சப்த விசேஷத்தை ஒழிய சப்தாந்தரத்தாலே அனுசந்திக்கலாகாது –

மெய்க்கன்றுக்கு இரங்கிப் போந்த வாசனையாலே தோல் கன்று மடுத்தாலும் ஸூ ரபியானது இரங்கிப் பால் சுரக்குமா போலே -பொய்யான தமக்கும் இரங்குவது
இச்சப்த விசேஷத்தை கேட்டாலாய்த்து -ஆகையாலே இதுவே அனுசந்தேயம் என்று பிள்ளைக்கு ஜீயர் அருளிச் செய்த வார்த்தை
ஆகையாலே த்வயம் ஆதரணீ யம் -பூர்வ்வாசார்யர்கக் ரஹச்ய த்ரயத்தையும் தங்களுக்குத் தனமாக நினைத்துப் போறச் செய்தேயும்
சர்வாதிகாரம் ஆகையாலும் ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும் புத்தி பூர்வகமான அபசாரத்துக்கும் பரிஹாரம் ஆகையாலும்
கர்ம அவசானத்திலே அன்றிக்கே சரீர அவசானத்திலே மோஷம் ஆகையாலும் த்வயத்தையே மிகவும் தஞ்சமாக நினைத்துப் போருவர்கள் –
சக்கரவர்த்தி திருமகனோடு காக விபீஷணா திகளோடு வாசியற எல்லாருக்கும் அதிகாரமாய் இருக்கையாலே சர்வாதிகாரமாய் இருக்கும் -ரோகிணாம் ஔஷதம் யதா -என்கிறபடியே
திருமந்தரம் சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -சரம ச்லோஹம் சரண்ய ருசி பரிக்ருஹீதம் -த்வயம் ஆசார்ய ருசி பரிக்ருஹீதம்
இம்மூன்றுக்கும் மூன்றும் உண்டாய் இருக்கச் செய்தேயும் இப்படிச் சொல்லுகிறது ஊற்றத்தைப் பற்ற –
த்வயம் கடவல்லியிலே அதீதமாகையாலே சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் –
ப்ரஹ்மாதிகளைக் குறித்து சர்வேஸ்வரன் அருளிச் செய்தான் என்னும் இடம் பகவச் சாஸ்திர சித்தம் ஆகையாலே சரண்ய ருசி பரிக்ருஹீதம் –
ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் என்கைக்கு கீழே ஆசார்ய வசனங்கள் சொன்னோம் –

புருஷகார பூர்வகமாக அபராத ஷாமணத்திலே இழிந்தால் பூர்வ அபராதங்களிலே ஈஸ்வரன் அவிஜ்ஞாதாவாய் இருக்கையாலே
ஷமித்தோம் என்கிற உக்திக்கும் ந ஷமாமிக்கும் விரோதம் இல்லை –
பிரபத்தி யுத்தர காலம் ப்ராமாதிகங்களை ஒழிய புத்தி பூர்வகமாக அபசாரம் கூடாது –
பகவத் பிரபாவத்தைப் பார்த்தால் காதாசித்கமாக வரும் புத்தி பூர்வகமான அபசாரத்துக்கும் பரிஹாரமாம்
அபசாரத்துக்கு அநந்தரம் அனுதாபம் பிறந்ததில்லை யாகில் ஜ்ஞானம் பிறந்ததுமில்லை என்று ஜீயர்
எண்ணாயிரத்து திருவாய்க் குலத்தாழ்வானைக் குறித்து அருளிச் செய்தார் -குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் –
உபாசகனுக்கு மோஷத்துக்கு சாதனமாக தான் அனுஷ்டிக்கிற உபாசனம் பக்வமாய் -அனந்தரத்திலே கர்ம ஷயம் பிறந்து முக்தனாக வேண்டுகையாலே –
கர்ம அவசானத்திலே மோஷமாகக் கடவது -பிரபன்னனுக்கு உபாய தயா கர்த்தவ்யம் இல்லாமையாலும் உபாய பூதனான ஈஸ்வரனுக்கு ஜ்ஞான சக்தியில்
வைகல்யம் இல்லாமையாலும் -வர்த்தமான சரீரத்தை ஒழிய ஆகாமி சரீரத்தில் இச்சை இல்லாமையாலும்
பிரபத்த்யுத்தர காலம் இச்சரீரத்தினுடைய ஸ்திதிக்கு ஹேது தீவ்ரசம்வேக ராஹித்யமாகையாலும் சரீர அவசானத்திலே மோஷமாகக் கடவது –
ஸூ ஷ்ம சரீரம் போலே இச்சரீரமும் ஈஸ்வர அனுஹ்ரகுஅத்தாலே இருக்கிறது என்னில் அது விரஜை அளவும் கமன சாதனமாய் இருக்கிறது -இச்சரீரத்துக்கு பிரயோஜனம் இல்லை –
ஸூ கோத்தரமாக இருந்தானாகில் பகவத் அனுக்ரஹத்தாலே என்னலாம் -அல்லாமையாலே –
ஆகையாலே சரீர ஸ்திதிக்கு பிராரப்த தோஷமே ஹேது -பிரபதனா நந்தரம் சரீர மோஷம் உண்டாவது பரமார்த்தி யுண்டாகில்-
கர்ப்ப நரக பிரவேசாதிகளில் அசஹ்யத்தை ஒழிய வர்த்தமான சரீரத்தில் அசஹ்யத்தை இல்லை -ஆகையாலே வைத்து அருளும் –
அப்போதே சரீர விச்லேஷம் பிறக்கில் நச்சுப் பொய்கை என்று பீதராய் இழிவார் இல்லை –
இவன் ஒரு ஷண காலம் இருக்க அநேக அவதாரங்களில் கிடையாத பலம் சித்திக்கும் –
சரம தேஹம் ஆகையாலே ஈஸ்வரனுக்கு அதிலே ஆதரணீயத்தை நடக்கும் -இவை அவாந்தர பலங்கள்-துக்கோத்தரமாய் இருக்கச் செய்தே விட மாட்டாதவன்
ஸூக லவம் உண்டாகில் இதிலே வேர் பற்றும் என்று ஈஸ்வரன் ஹிதகாமன் ஆகையாலே சரீர அவசானத்தளவும் கர்மபலம் அனுபவித்திடுவான் என்று உதாசீனனாய் இருக்கும்
ஆகையாலே பிரபன்னனுக்கு பிராரப்த கர்ம அவசானம் பார்த்து இருக்க வேண்டா –

திருமந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்த ஜ்ஞானத்தாலும் துச்சாத்யமான பலம் இதில் சப்த உச்சாரணத்தாலே ஸூ லபமாம்-
பூர்வாச்சார்யர்கள் மற்றை இரண்டிலும் அர்த்தத்தை மறைத்துக் கொண்டு போருவர்கள் -இதில் சப்தார்த்தங்கள் இரண்டையும் மறைத்துக் கொண்டு போருவர்கள் –
மந்திர ஸ்லோகங்கள் இரண்டிலும் சப்தத்தை வெளியிட்டு அர்த்தத்தை வெளியிட்டு அர்த்தத்தை மறைத்துக் கொண்டு போருவர்கள் –
த்வயத்தில் இரண்டையும் மறைத்துக் கொண்டு போருவர்கள் -குஹ்யா நாம் குஹ்யமுத்தமம் -என்றது இ றே-
வாச்யம் சக்ருத் கர்த்தவ்யம் ஆனால் போலே வாசக உச்சாரணமும் சக்ருத் கர்த்தவ்யம் –
தஸ்மாத் சக்ருத் க்ருதே நைவ கர்மணா யேன மா நவ -சக்ருஜ் ஜப்தேன மந்த்ரேண க்ருதக்ருத்யஸ் ஸூ கீ பவேத் -என்று பிரச்னம் பண்ண
மந்த்ரோ ஹி வித்யதே யேன சக்ருத் உச்சாரிதேந வை புருஷோ ஜீவலோகே அஸ்மின் க்ருதக்ருத்யோ பவிஷ்யதி -என்று பிரதிவசனம் பண்ணுகையாலே –
இவ்வர்த்தம் கடவல்லியிலும் சொல்லிற்று -இத்தை அறிய எல்லா மந்திர பலங்களும் சித்திக்கும் –
சர்வ மந்திர பலான் யஸ்ய விஜ்ஞா நேன பவந்தி வை -என்கையாலே ஏதன் மந்திர மவிஜ்ஞாய என்கையாலே இத்தை அறியாத போது சம்சார நிவ்ருத்திக்கு உபாயம் இல்லை
வாசிகம் மாநசம் -இத்யாதியாலே உச்சாரணம் ஒழிய ஸ்ம்ருதி மாத்ரத்தாலே திரிவித கரணத்தாலும் பண்ணின பாபங்கள் போம் என்று சொல்லும்
மூன்றும் உடையவனே யாகிலும் த்வயத்துக்கு அதிகாரி அன்றிக்கே ஒழியுமாகில் அவனைக் கண்டால் விலக வேணும் -என்று சாஸ்திரம் சொல்லிற்று
-இம்மூன்றும் இல்லை யாகிலும் த்வய உச்சாரணம் பண்ணினவன் பூஜ்யதமன் என்றும் சொல்லிற்று -ரஷகன் க்ருதாத்மா வாகையாலே
அஹ்ருத உக்தியையும் புத்தி பூர்வ உக்தியோடே ஒக்க நினைத்து இருக்கும் –
ஆநு கூல்யத்தில் தாரதம்யம் கொண்டு த்யாக பரிக்ரஹம் பண்ணுவது அபரிபூர்ணன் ஆகையாலே -ஆபிமுக்ய ஸூ சகம் ஒன்றும் இ றே வேண்டுவது
பொய்யே கைம்மை சொல்லி -என்றும் புறனுரையே யாகிலும் -என்றும் -நிரர்த்தகமான சமுத்திர கோஷத்தைக் காட்டிலும் சார்த்தகங்களான கடபடாதி சப்தங்கள் ஸ்ரேஷ்டங்கள் –
அவற்றில் காட்டில் தேவதாந்திர நாமங்கள் ஸ்ரேஷ்டங்கள் -அவற்றில் காட்டில் பகவன் நாமங்கள் ஸ்ரேஷ்டங்கள் -அவற்றில் வைத்துக் கொண்டு மூல மந்த்ரம் ஸ்ரேஷ்டம்
மூல மந்த்ரம் சமுத்திர கோஷ ஸ்தாநீயமாம் படி த்வயம் ஸ்ரேஷ்டம் -அதுக்கடி மூல மந்த்ரத்திலே ஆர்த்தமான அர்த்தம் த்வயத்திலே வாசகமாகை –
வாச்யங்களில் சர்வேஸ்வரனுக்கு அவ்வருகு இல்லாதாப் போலே வாசகங்களிலும் இதுக்கு அவ்வருகு இல்லை இதுவே சித்தாந்தம் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

திருமந்தரம் ஆத்ம பாரதந்த்ர்யா பிரதானம் -சரம ஸ்லோகம் பகவத் ஸ்வா தந்த்ர்ய பிரதானம் -த்வயம் பகவத் பாரதந்த்ர்யா பிரதானம்
திருமந்தரம் ப்ராப்ய பிரதானம் -சரம ஸ்லோகம் பிராபக பிரதானம் -த்வயம் உபய பிரதானம்
திருமந்தரம் மந்திர ரூபம் -சரம ஸ்லோகம் விதி ரூபம் -த்வயம் அனுஷ்டான ரூபம்
இதுக்கு அதிகாரி திருமந்த்ரத்தில் திருதிய பதத்திலும் -சரம ஸ்லோகத்தில் பிரதம பதத்திலும் த்வயத்திலும் நிஷ்டை யுடையவன் –
இதுக்கு த்வயம் என்று திருநாமாய்த்து சாதனா சாத்யங்களைச் சொல்லுகையாலே இது ஒழிய நாலஞ்சு ஹேதுக்களைச் சொல்லுவர்கள் –
இதுதான் பூர்வ வாக்யம் மூன்று பதமும் -உத்தர வாக்யம் மூன்று பதமும் ஆக ஆறு பதமாய் இருக்கும்
இதில் பூர்வ வாக்யம் உபாயத்தை பிரதிபாதிக்கிறது -உத்தர வாக்யம் உபேயத்தை பிரதிபாதிக்கிறது –
நாளும் நின்றடும் நம் பழமை அங்கொடு வினையுடனே மாளும் -என்றும் -புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி -என்றும்
-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஜ்ஞப்தி தசையிலே உபாயத்துக்கு உபேயாநந்தர பாவித்வம் உண்டாய் இருந்ததே யாகிலும்
மாமேகம் சரணம் வ்ரஜ -அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்றும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ-என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
வ்யுத்பத்தி -அனுஷ்டான- தசையிலே உபேயம் உபாயாந்தர பாவியாய் இருக்கையாலே உபாய பிரதிபாதிகமான பூர்வ வாக்யம் முற்பட அனுசந்தேயமாய்
உபேய பிரதிபாதகமான உத்தர வாக்யம் பிற்பட அனுசந்தேயமாய் இருக்கும் –
ஆகையாலே இ றே திரு மந்த்ரத்திலே நமஸ் ஸூ க்குப் பின்பு நாராயண பதமாச்சுது –
இதில் பதத்ரயாத்மகமான பூர்வ வாக்யத்தில் பிரதம பதம் ச்வீகார்ய வஸ்துவை பிரதிபாதிக்கிறது -த்வதீய பதம் ச்வீகார பிரகாரத்தை பிரதிபாதிக்கிறது
திருதிய பதம் ச்வீகாரத்தை பிரதிபாதிக்கிறது –

————————————————————————————————————————————-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading