ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ பரந்த படி -சரம ஸ்லோஹ-உத்தரார்த்த -பிரகரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————–

இனி மேல் பிரபத்தவ்ய க்ருத்யத்தையும் -பிரபன்ன க்ருத்யத்தையும் சொல்லுகிறது –
விரோதி நிவர்த்தகத்வம் பிரபத்ய க்ருத்தியம் –
நிர்ப்பரத்வம் பிரபன்ன க்ருத்தியம் –

அஹம் -பதார்த்தம் –
7-அஹம் –
சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டனான நான் –
கீழ் உபாய பரிக்ரஹத்துக்கு ஏகாந்தங்களான குண விசேஷங்களைச் சொல்லிற்று –
இங்கு கார்ய கரத்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதிகள் இல்லாத போது உபாய பரிக்ரஹம் இன்றிக்கே ஒழியுமா போலே ஜ்ஞானாதிகள் இல்லாத போது
கார்ய கரம் இன்றிக்கே ஒழியும்-

அசித்தும் சேதனனும் சேதன அந்தர்யாமித்வமும் பரத்வமும் வ்யூஹமும் தொடக்கமானவைகள் அல்ல வ்யாவர்த்யம் –
விபவாந்தரங்களும் இவ் விபவம் தன்னில் முன்னும் பின்னும் வ்யாவர்த்யம் –

தேஹேந்த்ரிய மன பிராணாதிகளில் ஆத்ம புத்தி பண்ணி இருக்குமவனுடைய அஹம் சப்த பிரயோகம்
தத் தத் வஸ்து மாத்ர பர்யவசிதமாய் இருக்கும்
தேஹாதுத் தீரண வஸ்து மாத்ர விஷய ஜ்ஞானாவானுடைய அஹம் சப்த பிரயோகம் சேதன மாத்ர பர்யவசிதமாய் இருக்கும்
ஈஸ்வரனுடைய அஹம் சப்த பிரயோகம் உபய வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –
ஜ்ஞானமும் சக்தியும் சேஷித்வமும் பூர்த்தியும் இவ்விடத்தே அனுசந்தேயம் –
இவை இல்லாத போது சொல்லுகிற விரோதி நிவ்ருத்தி கூடாது –

இங்கு சக்தியாக நினைக்கிறது –
யானும் –இசைந்து -பெரிய திருவந்தாதி -26- என்றும் –
இசைவித்து என்னை -திருவாய்மொழி5-8-9- என்றும் சொல்லுகிறபடியே
சேதனனுடைய அவிவாத ஜ்ஞானத்துக்கும் சம்சார விமோசனத்துக்கும் அடியான சாமர்த்தியத்தை –
அத்தைப் பற்ற பிரளயாபத் விமோசனமும் -சர்வ சௌலப்யமும் -சர்வ வஸ்துக்களிலும் பரிசமாப்ய வ்யாபன வ்ருத்தியும்
தொடக்கமானவை அத்யந்த ஸூசகங்கள் என்னும் படி இருக்கும் –
இதில் சொல்லுகிற குண விசேஷங்கள் சேதனனுடைய அநந்ய சாதனத்வத்துக்கும் –
ஈஸ்வரனுடைய பல பிரதாத்ருத்வத்துக்கும் உப யுக்தங்களாய் இருக்கும் –

மாம் -என்று
உத்த்ருதரதி சரண -என்கிறபடியே இவன் கால் தன் தலையிலே பட நிற்கும் நிலையைச் சொன்னான்
அஹம் -என்று
தன் கால் அவன் தலையிலே பட நின்ற நிலையைச் சொல்லுகிறான் –

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் -தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே -பெரிய திருமொழி -11-5-8-என்றது இறே
மாம் -என்று கையும் உழவு கோலுமாய் நின்ற வேஷத்தைக் காட்டினான் –
அஹம் -என்று கையும் திருவாழியுமாய் நின்ற வேஷத்தைக் காட்டுகிறான் –
செழும் தார் விசயன் -பெரியாழ்வார் -1-8-6-இறே –
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு -பெரிய திருமொழி -2-3-1-என்றும்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -திருப்பாவை -14–என்னா நின்றது இறே –

மாம் என்று தர்மங்களைக் குலைக்கும் நிலையைக் காட்டினான் –
அஹம் என்று அதர்மங்களைக் குலைக்கும் நிலையைக் காட்டுகிறான்

மாம் என்கிறது உக்திக்கு விபரீதமான நிலையை –
அஹம் என்கிறது அனுஷ்டானத்துக்கு விபரீதமான நிலையை –

————————————————————————–

த்வா பதார்த்தம் –
8- த்வா –
சாத்யமான சாதனங்களை சவாசனமாக த்யஜித்து சித்தோபாய ஸ்வீகாரம் பண்ணியும் –
தேஹாத்ம ப்ரமம் தன்னையும் -தேஹாதுத் தீர்ணமான ஆத்ம வஸ்துவில் ஸ்வா தந்த்ர்ய புத்தியையும் –
அந்ய சேஷத்வ பிரதிபத்தியையும் -தத் சேஷத்வ மாத்ர புத்தியையும் –
சாத்யந்தரங்களில் சாத்யதா புத்தியையும் -சாதநாந்தரங்களில் சாதநத்வ புத்தியையும் –
சித்தோபாய ஸ்வீகாரத்தில் உபாயத்வ புத்தியையும் -ஷூத்ர சாத்தியங்கள் அகப்பட ப்ரவ்ருத்தி சாத்யமாய் இருக்க
துர்லபமான மோஷ புருஷார்த்தத்துக்கு
நிவ்ருத்தி சாத்யத்வம் அகடிதம் என்கிற புத்தி விசேஷம் தொடக்கமான வற்றையும்
சவாசனமாக த்யஜித்து இருக்கிற உன்னை –

கீழில் பதத்தில் ஈஸ்வர ஸ்வரூபம் சொல்லிற்று –
இப்பதம் அதிகாரி ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –

அங்கு சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வங்களும் பிராப்தியும் நைரபேஷ்யமும் சொல்லப் பட்டது
இங்கு அஜ்ஞான அசக்திகளையும் அப்ராப்தியையும் ஆகிஞ்சன்யத்தையும் சொல்லுகிறது –

ஸ்வீகாரத்தில் உபாய புத்தியிலும் அகப்படச் சோம்பனாய் இருக்கிற உன்னை –
இந்த பிரதிபத்தி விசேஷத்திலும் உபாயத்வ புத்தி அனுவர்த்திக்குமாகில் உபாயாந்தரத்தோடு ஒக்கும் இத்தனை –
ஈஸ்வரனே உபாயம் என்கிற அத்யவசாய விசேஷத்தில் சாதநத்வ புத்தியும்
அசக்ருத் கரணமும் உண்டான போது ததேக உபாயத்வம் இல்லை

ஆக எல்லாம் கூட த்யாக ஸ்வீகார விசிஷ்டனான உன்னை -என்றபடி –

————————————————————————-

சர்வ பாப பதார்த்தம் –
9- சர்வ பாபேப்யோ –
கீழ் நிவ்ருத்திக்கு ஏகாந்தமான குண விசேஷங்களைச் சொல்லிற்று –
இது நிவர்த்யஸ்வ ரூபத்தைச் சொல்லுகிறது –

பாபமாகிறது -இஷ்ட விரோதியாய் இருக்குமதுவும் அநிஷ்ட ஹேதுவாய் இருக்குமதுவும் –
மோஷ பிரகரணம் ஆகையாலே இவ்விடத்தில் இஷ்ட விரோதிகள் ஆகிறன-பகவல் லாப விரோதிகள் –
ஜ்ஞான விரோதியும் ருசி விரோதியும் உபாய விரோதியும் பண்டே நிவ்ருத்தமாய்த்து –
இனி பிராப்ய விரோதி இறே உள்ளது -அத்தை பிரதிபாதிக்கிறது இப்பதம் –
புண்ய பாப விதூய -என்றும் –
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து -திருவாய் -1-5-10- என்றும் இத்யாதிகளிலே
பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யமாகச் சொல்லிற்று இறே –
ஆகையாலே புண்ய பாபங்கள் இரண்டையும் பாப சப்தத்தாலே சொல்லுகிறது –

பஹூ வசனத்தாலே அவற்றினுடைய பாஹூள்யத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே
அஜ்ஞானம் தொடங்கி சரீர சம்பந்தம் எல்லையாக உண்டானவை –
சரீர பாத சமயத்தில் ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம் படியும் —
வாங் மனசாதி லய பிரகாரமும் –
உத்க்ரமண் பிரகாரமும் –
ஹார்த்தா நுக்ரஹ கார்யமான மார்க்க விசேஷ பிரகாசமும் –
ஹ்ருதய குஹாநிர்கமநமும் –
ஸூஷ்ம சரீர சம்சர்க்கமும் –
அர்ச்சிர் வாசர ஸூக்ல பஷ உத்தராயண சம்வத்சர
வாயு பாஸ்கர சந்திர வித்யுத் வருண இந்திர ப்ரஜாபதிகள் ஆகிற
ஆதி வாஹிகர்கள் உடைய லோகா விசேஷங்களும்
அண்டாவரணாதிக்ரமணமும் –
பிரகிருதி லங்கநமும் –

விராஜா பிராப்தியும் –
ஸூஷ்ம சரீர விச்லேஷமும் –
அமாநவ கர ஸ்பர்சமும்-
அகால கால்ய திவ்ய தேச பிராப்தியும்
அபஹத பாப்மத்வாதி குண கண ப்ராதுர்பாவமும் –
பகவத் சங்கல்ப கல்பித திவ்ய தேக பிரவேசமும் –
அப்ராக்ருத சரஸ் சம்சர்க்கமும்
திவ்ய அப்சரஸ் சங்க சத்காரமும்
அப்ராக்ருத மண்டல பிராப்தியும்
பகவத் சௌரப்யாதி சம்சர்க்கமும் –
அப்ராக்ருத கோபுர பிராப்தியும்
ஸூரி பரிஷத் பிரத்யுத் கமநமும் –
ராஜ மார்க்க கமநமும் –
ப்ரஹ்ம வேசம பிரவேசமும் –
ஸூரி பரிஷன மண்டப பிராப்தியும்
சபத்நீக சர்வேஸ்வர தர்சனமும்
ஸ்துதி பிரா-பரமாத்மா சமீப பிராப்தியும் –
பாத பீட பர்யங்காரோஹணமும்-
பகவதுத்சங்க சங்கமும்
ஆலோக நாலா பாலிங்க நாத்யநுபவமும் –
ஸ்வ ஸ்வரூப குண விக்ரஹாத்ய நுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷமும் –
நாநா வித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான
சர்வ பிரகார கைங்கர்ய கரணமுமாகிற ப்ராப்தி விசேஷங்கள் இதுக்கு அனந்தரத்திலே அனுசந்தேயங்கள் –

சர்வ சப்தத்தாலே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று த்யாஜ்யங்களாக விஹிதங்களாய்
போக்ய புத்த்யா அனுஷ்டேயங்களாய் இருக்கிற தர்மங்களில் உபாயத்வ புத்தியையும்
அபுத்தி பூர்வகமாக அனுஷ்டிதமான உத்தராகத்தையும் –
ப்ராரப்தத்தையும்-
லோக சங்க்ரஹார்த்தமாக அனுஷ்டேயங்களான தர்ம விசேஷங்களில் ஸ்வார்த்ததா புத்தியையும்
ஆவ்ருத்த பிரபத்தியையும்
பகவத் பாகவத விஷயங்களில் உபசார புத்த்யா பண்ணும் அபசாரங்களையும் –

பரி -என்கிற உபசர்க்கத்தாலும்
ஏக -சப்தத்தாலும் சொன்னவற்றினுடைய அனுவ்ருத்தியையும் சொல்லுகிறது –
அதிகாரி குறையாலே யாதல் -உபாய பூதனான ஈஸ்வரன் குறையாலே யாதல் இறே பாபங்களில் சிறிது கிடப்பது –
உபாயாந்தர பரித்யாகமும் சித்தோபாய பரிக்ரஹமும் புஷ்கலம் ஆகையாலே அதிகாரி பக்கல் குறை இல்லை –
ஜ்ஞான சக்த்யாதி புஷ்கலம் ஆகையாலே உபாய பூதனான ஈஸ்வரன் பக்கல் குறை இல்லை –

————————————————————————–

மோஷயிஷ்யாமி –பதார்த்தம் –
10- மோஷயிஷ்யாமி-
கீழில் மூன்று பதமும் நிவர்த்தக ஸ்வரூபத்தையும் நிவர்த்திய ஆஸ்ரயத்தையும் – நிவர்த்த்யத்தையும் –
தத் பாஹூள்யத்தையும் சொல்லிற்று –
இந்தப் பதம் நிவ்ருத்தியையும் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –

சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் -5-4-3- என்கிறபடியே
அநாதிகால சஞ்சிதங்களான கர்ம விசேஷங்கள் எல்லாம் உன்னைக் கண்டு கூசி தானே விட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
வானோ மறி கடலோ -பெரிய திருவந்தாதி -54- என்றும் –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -பெரிய திருவந்தாதி -26-என்றும் சொல்லுகிறபடியே –
வேறு சிலருடைய இசைவு கொண்டு பஹூ பிரயாசத்தாலே போக்க வேண்டாதே தன்னடையே விட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
பூர்வாகத்தோடு உத்தராகத்தோடு வாசியற பிரதிபந்தங்கள் எல்லாம் அக்நி ஸ்ப்ருஷ்டமான இஷீக தூலம் போலே
ஆயர் குலத்தினால் தோன்றும் மணி விளக்கைக் கிட்டினால்
தீயினில் தூசாகும் -என்கிறபடியே பின்னமும் காண ஒண்ணாத படி தக்தமாய்ப் போம் இறே

பாபங்கள் ஆகிறன
குப்பையில் ஆமணக்கு போலே உயர வெழுந்து பாம்பு போலே மிடற்றைப் பிடிப்பது ஓன்று அன்றே
சேதனன் பண்ணின கர்மங்கள் ஷணத் வம்சிகள் ஆகையாலே அப்போதே நசித்துப் போம் –
அஜ்ஞன் ஆகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போம்
ஸ்வதஸ் சர்வஜ்ஞனான ஈஸ்வரன் ஓன்று ஒழியாமே உணர்ந்து கொண்டு இருந்து ப்ராப்த காலங்களிலே
தப்பாமே நிறுத்து அனுபவிப்பிக்கும்
ஆகையாலே கர்மங்கள் ஆகின்றன -அவனுடைய நிக்ரஹங்கள்-
இக்கர்மங்களைப் பண்ணிப் போருகிற சேதனன் சத்த்வம் தலை எடுத்து ஒரு கால்
அவன் திருவடிகளிலே தலை சாய்த்தால் விலக்காமை பற்றாசாக ரஷண ஸ்வ பாவனாய் இருக்கும்
ஈஸ்வரன் இவ்வளவும் பெற்றால் விடான் இறே

ஆகையாலே இவனுடைய பூர்வாகத்தை ஷமித்து உத்தராகத்தில் அவிஜ்ஞாதாவாய் இருக்கும்
இனி யாரைக் கைக் கொண்டு அவை ஜீவிப்பது –
உணர்ந்த போது இவன் பக்கல் வ்யாமோஹாதிசயத்தாலே நன்று செய்தார் என்று அவை தன்னை
குணமாகக் கொள்ளுமாகையாலே இவ்வதிகாரிக்கு ஒரு பிரகாரத்தாலும்
அநாதி காலார்ஜிதங்களான கர்ம விசேஷங்களைக் குறித்து அஞ்ச வேண்டா –
மோஷயிஷ்யாமி என்கிற வார்த்தை தப்பாது என்று விஸ்வஸ்தனாய் இருக்கும் அத்தனை வேண்டுவது
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின்
கீழ்ச்சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று -திருவாய் -7-5-10- என்றும்
தெளிவுற்று வீவின்றி நின்று அவர்க்கு இன்பக்கதி செய்யும் -திருவாய் -7-5-11- என்றும்
கீழ் அருளிச் செய்த வார்த்தை அறிந்தவர்களுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்தி யன்றோ பலம் –
ஆயிருக்க அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரத்தையே பலமாகச் சொல்லுவான் என் –
பகவல் லாப விதுரமாக அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரமே பலமாய் இருப்பது கேவலனுக்கு அன்றோ –
முமுஷுவான இவ்வதிகாரிக்கு இரண்டும் பலமாய் அது தன்னில் இஷ்ட ப்ராப்தி பிரதானமான பலமாய் இருக்கும்
அத்தைச் சொல்லாதே தத் அங்கதயா உபாதேயமான பிரதிபந்தக நிவ்ருத்தி மாதரத்தையே
பலமாகச் சொல்லி விடுவான் என் என்னில்
விரோதி நிவ்ருத்தியும் பகவத் பிராப்தியும் ஆகிற பல த்வயத்திலும் வைத்துக் கொண்டு
ஒரு பலத்தைச் சொன்னால் பலாந்தரம் தன்னடையே வருகையாலே சொல்லிற்று இல்லை –

மாமேவைஷ்யசி சத்யம் தே -என்று கீழில் உபாயத்துக்குச் சொன்ன பலம் தானே இவ்வுபாயத்துக்குப் பலம் ஆகையால்
வேறு இதுக்குப் பலம் இன்றிக்கே ஒழிகையாலே பல கதநம் பண்ணிற்றில்லை என்னவுமாம் –

ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில்
மாமேவைஷ்யசி -என்று ஸ்வ ப்ராப்தி லஷணமான பலத்தை யாய்த்து அங்குச் சொல்லிற்று –
அதுக்குப் பூர்வ பாவியாய் பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாய் இருக்கிற பல விசேஷம் அங்கு அநுக்தம் ஆகையாலே
தாத்ருசமான பல விசேஷம் இவ்வதிகாரிக்கு அதிகம் ஆகையாலும் இங்குச் சொல்லிற்று –

இவனுக்கு அபி லஷிதமாய் பகவத் அநுபவாதி ரூபமாய் இருக்கிற பிரதான பலம் திரோஹிதங்களாய் இருக்கிற
மணித்யுமணி தீ பாதிகளினுடைய பிரகாசாதிகளைப் போலே
ஸ்வதஸ் சித்தமாய் பிரதிபந்தக நிவ்ருத்தி மாத்ர சாகாங்ஷமாய் இருக்கையாலே
நிவ்ருத்த பிரதிபந்தகனான இவனுக்கு ஸ்வத ஏவ ஆவிர்ப்பாவமாய் இருப்பது ஒன்றாகையாலே
தனித்துச் சொல்ல வேண்டா இறே –

வழித் தங்கு வல்வினையை -பெரிய திருவந்தாதி -57-என்றும்
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ண கில்லேன்
நடுவே யோருடம்பிலிட்டு -திருவாய் -5-1-5- என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தேக சம்பந்த பிரமுகமான பிரதிபந்தக வர்க்கம் ஔபாதிகமாய் இறே இருப்பது
ஆகையாலே வந்தேறியான விரோதி கழிந்தால் தன்னடையே வருகையாலே சொல்லிற்று இல்லை –

——————————————————————————

மாஸூச -சப்தார்த்தம் –
11- மாஸூச
கீழ் எல்லாம் கூட சோக நிவ்ருத்திக்கு வேண்டும் பரிகரங்களை விஸ்த்ருதமாகச் சொல்லிற்று –
இப்பதம் சோக நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
சாதனாந்தர சம்பந்தமும் -ஸூகர சாதன தர்சனமும் -விரோதி சமூஹ அனுவ்ருத்தியும் இறே சோக காரணம் –
துஷ்கரங்களான சாதா நாந்தரங்களை வாசநா சஹிதமாக த்யஜிக்கச் சொல்லுகையாலே
சாதாநாந்தர நிபந்தனமாக சோகிக்க வேண்டா –
சர்வ ஸூ லபனாய் நிருபாதிக வத்சலனாய் சர்வ ஸ்வாமியாய் சீலவானாய் நிரபேஷ சாதன பூதனாய் பரம காருணிகனாய்
இருக்கிற தன்னை நிரபேஷ சாதனமாக ஸ்வீகரிக்கச் சொல்லுகையாலே
ஸூகர சாதன தர்சனத்தாலே சோகிக்க வேண்டா –
சர்வஜ்ஞனாய் சர்வ சக்தியாய் அவாப்த சமஸ்த காமனாய் ப்ராப்தனாய் இருக்கிற நான் சாம்சாரிக
சகல துரிதங்களையும் ச வாசனமாகப் போக்கி நிரதிசய ஆனந்த யுக்தனாம் படி பண்ணுகிறேன் என்கையாலே –
விரோதி பாஹூள்யத்தை அனுசந்தித்து சோகிக்க வேண்டா

உபாய ஸ்வரூபத்தை அனுசந்தித்தாலும் சோகிக்க யோக்யதை இல்லை –
அதிகாரி ஸ்வரூபத்தை அனுசந்தித்தாலும் சோகிக்க யோக்யதை இல்லை
பல ஸ்வரூபத்தை அனுசந்தித்தாலும் சோகிக்க யோக்யதை இல்லை

உபாயம் ஸூசகமாகையாலே உபாயத்தினுடைய துஷ்கரத்வ நிபந்தனமாக சோகம் இல்லை
அதிகாரிக்குக் கர்த்தவ்யம் இல்லாமையாலே தந் நிபந்தனமாக சோகிக்க வேண்டா
சர்வ பாப மோஷத்தைப் பலமாகச் சொல்லுகையாலே பல ஸ்வரூப பிரயுக்தமாக சோகிக்க வேண்டா
த்யாஜ்யங்களில் கிடப்பது ஓன்று இல்லாமையாலே சோகிக்க வேண்டா
கர்த்தவ்யம் மானச வியாபார மாத்ரம் ஆகையாலே சோகிக்க வேண்டா
பிரதிபந்தகம் நிச்சேஷமாக நிவ்ருத்தம் ஆகையாலே தந் நிமித்தமாக சோகிக்க யோக்யதை இல்லை –

உபாயாந்தர ஸ்ரவணத்தில் சோகியாது ஒழிகைக்கு யோக்யதை இல்லாதாப் போலே -இவ்வுபாய ஸ்ரவணத்தில்
சோகிக்க யோக்யதை இல்லை –
சாதனாந்தர ஸ்ரவணத்தில் சோக அனுவ்ருத்தியும் ஜ்ஞாத்ருத்வ கார்யம்
சித்த சாதன ஸ்ரவணத்தில் சோகாபாவமும் ஜ்ஞாத்ருத்வ கார்யம்
உபாயாந்தர ஸ்ரவணத்தில் சோக பாவம் உண்டாய்த்த்காக்கில் த்யாக ஸ்வீகாரங்களில் அந்வயம் இல்லை –
பிரபத்யுபாய பரிக்ரஹத்துக்குப் பின்பு சோக அனுவ்ருத்தி உண்டாய்த்தாகிலும் த்யாக ஸ்வீகாரங்களில் அந்வயம் இல்லை –
ஸ்வாமிக்காய்த்து பலித்வம் உள்ளது -பலியாய் இருக்கும் அவனுக்காய்த்து உபாய அனுஷ்டாத்ருத்வம் உள்ளது
ஸ்வாமி ஸ்வம் மான வஸ்துவை இழந்தால் சோகிக்கும்-பலி பலம் இல்லாத போது சோகிக்கும்
அனுஷ்டாதா அனுஷ்டான விரோதம் பிறந்தால் சோகிக்கும்
மூன்றிலும் உனக்கு அந்வயம் இல்லாமையாலே சோகிக்க ப்ராப்தி இல்லை –

முன்பு சோகித்திலன் ஆகில் உபாய அதிகாரம் இல்லை –
பின்பு சோகித்தான் ஆகில் உபாய குணம் அறிந்திலனாம்
சோக நிவ்ருத்திக்கு ஹேது உபாய ஜ்ஞானம் –

ஆக
சோக நிவ்ருத்தியையும் –
சர்வ பாப விமோசனத்தையும் –
அப் பாபங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய ஸ்வரூபத்தையும்
அவற்றுக்கு நிவர்த்தகனான ஈஸ்வரனுடைய ஜ்ஞான சக்த்யாதி குண விசேஷங்களையும்
அவை கார்யகரமாம் படி பண்ணக் கடவதாய் சேதன கதமாய் இருக்கிற புத்தி விசேஷத்தையும்
புத்தி விசேஷ பிரகாரத்தையும்
புத்தி விசேஷத்தில் உபாயத்வ புத்தி ராஹித்யத்தையும்
புத்தி விசேஷ விஷயத்தையும்
அதுக்கு அங்க பூதமான புத்த்யந்தர தத்பரிகர பரித்யாகத்தையும்
அதுக்கு யோக்யதா பாதகங்களான ததிதரங்களினுடைய த்யாகத்தையும் சொல்லித் தலைக் கட்டுகிறது –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading