ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் –ஸ்ரீ கண்ணன் திரு நாமங்கள் –ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்–

ஸ்ரீ கீதையும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஸ்ரீ மகா பாரத சாரங்கள்

தத்வ தர்சி இடம் கேட்கச் சொல்லி தானே கேட்டு அருளியதே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் –

1-122 வரை பரத்வமும் -123-146- வரை வ்யூஹமும் -மேலே விபவமும் –
அந்தர்யாமி -பரத்வத்திலும் -அர்ச்சை விபவத்திலும் -சேர்ந்து அனுபவம் –

——————————-

697-770 வரையும் -மேலே 989-992–ஸ்ரீ கிருஷ்ண பரமான திரு நாமங்கள் –
வாசு ரேதஹா -முதல் திரு நாமம் –வாசு -ஜோதி -திவ்யமான ஜோதி வடிவானவன் –
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்த -ஆதியம் ஜோதியுமான உருவம் அவனதே
-அதுவே அங்கும் இங்கும் -அதே குணங்களுடன் இங்கும் –
சத்திய விரதம் -சத்திய பரம் -த்ரி சத்தியம் -மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டு திரு அவதரித்தார் –
சூட்டு நன் மாலைகள் படியே –
நான் அவனுக்கு தாசன் ஆன பின்பு அவன் நம்மை விடாமல் நமக்கு தாசன் ஆகிறானே
கேசவன் -என்று வாழ்விலே ஒரு தடவை கூட சொல்லாமல் இங்கே உழல வந்தாயே -யமதர்மன் வார்த்தை
கேசவா என்ன இடராயின எல்லாம் கெடுமே
ஹரி ஹரி -காலையிலே எழுந்ததும் சொல்வதே புருஷார்த்தம் -சொல்லி பலனை எதிர்பார்க்கக் கூடாது
நமக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ அவன்

மீன் பிடிப்பவன் -வியாபாரி –அரசன் -மாணிக்கம் -கதை –
அவன் திருமேனி -பொன் மேனி –நன் பொன் -மாசறு பொன் -உரைத்த பொன் -சுட்டு உரைத்த நன் பொன் –
சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது –
அரங்கனைப் பாட முடியாது என்று சொல்வதற்கு ஆயிரம் நாக்குகளை கேட்டு அருளிச் செய்தார் பராசர பட்டர் –
வஸு பிரதஹா -சொத்துக்களையும் ஐஸ்வர்யங்களையும் நிதியாக அளிப்பவன்
தேவகி வசுதேவருக்கு மாதா பிதா பட்டம் அளித்தவன் –
மாணிக்கத்தைப் பெற்ற தாயை கௌசல்யா ஸூ ப்ரஜா ராமா -என்றார் இறே விஸ்வாமித்ரர்
என்ன நோன்பு நோர்ந்தாயோ -இவனைப் பெற்ற வயிறு உடைய நீ
அதே திருநாமம் மீண்டும் -யசோதை நந்தகோபனுக்கும் உண்டே
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்து
தனக்கும் தாய் தந்தை பெற்ற ஐஸ்வர்யம் கொடுத்து அருளினானே என்றுமாம் –

32 பற்கள் சங்கு சக்கரம் உடன் காட்சி கொடுத்தானே பிறந்த உடனே —
தேவகி வசுதேவர் மகிழ்ந்து மறைக்கச் சொல்ல மறைத்தானே -வ ஸூ தேவா என்று சொல்வோம் –
படுக்கையை விட்டு பிரிய மாட்டானே -ராமன் லஷ்மணன் -கிருஷ்ணன் பலராமன் —
அடுத்த வேளை குளியல் பரதன் உடன் -திருச் சங்கு ஆழ்வான் அம்சம் –

வஸு மனஹா –
வசுதேவரை மனசில் கொண்டவன் -மறக்காமல் -10 வருஷங்கள் சென்ற பின் அனைத்தும் காட்டி அருளினான்
மாமனார் வீட்டில் பள்ளி கொண்டு அருளி -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -அது தானே பிராட்டி பிறப்பிடம்
ஸ்ரீ ரெங்க மன்னார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ பெரியாழ்வார் திரு மாளிகையையே கோயிலாக கொண்டால் போலே
சிசுபாலன் கண்ணன் கள்வன் கண்ணன் திருடன் கண்ணன் பொய்யன் என்று சேர்த்து சொல்லியே பேறு பெற்றான்
சத் -ஆக நாம் திரு நாமம் சொன்னால் பலன் கிட்டும் எனபது கைமுதிக நியாயத்தால் பலிக்கும் –
வடை குச்சி சிஷ்யர் குரு கதை -தண்டா பூப நியாயம் –
கடலில் துரும்பும் தள்ளப்படும் திமிங்களும் அழுந்தும் -நாம் அவன் சொத்து என்று ஒத்துக் கொண்டாலே போதும்

சத் கதி –
நல்ல விஷயங்களைத் தர வல்லவன்

சத் கருதி –
நல்ல சேஷ்டிதங்கள் உடையவன் -அவனுக்கும் அவை திவ்யம் என்றான் இறே ஸ்ரீ கீதையில்
தாமோதரன் -தழும்பு அடியவர்க்கு அடியவன் காட்டிக் கொடுக்குமே
ராமர் சீதை கோதாவரி நீச்சல் போட்டியில் தோற்று –
மைத்துனன் பேர் பாடி -பிராட்டி வென்றதையும் கிருஷ்ணன் தோற்றத்தையும் பாடுவோம்
நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை -மாயா சிரச் –
யமுனையும் கறுப்பு -அவன் சம்பந்தத்தால் -தூய யமுனைத் துறைவன் கொப்பளித்த நீர் அன்றோ
கோபிகள் -ஒரு கோபி மகிழ -மறைய மற்றை நம் காமங்கள் மாற்று -சொல்லிக் கொடுக்க லீலை

பூதா வாசஹா –
விஸ்வரூபம் காட்டி அருளின அவதாரம் அன்றோ -நாராயணா -நாரங்கள்
பகிர் வ்யாப்தி அந்தர் வ்யாப்தி இரண்டும் உண்டே
நாராயண -வாசுதேவ -விஷ்ணு -வ்யாபக மந்த்ரங்கள் –
ஓம் -உனக்கு நான் அடிமை -நமஹ -எனக்கு அடிமை அல்லேன் -சேர்த்து சொல்லி பயன் பெறுவோம்

சர்வாசு நிலையஹா –
அனைத்துக்கும் புகலிடம் அடைக்கலம் அவனே – அசுர தேவ விபாகம்

அனலஹா -நமக்கு கொடுத்து விட்டு போதும் என்று இருக்க மாட்டானே -அனல் -அக்னி
கோவிந்தா -கடன் பட்டவன் போலே போனான்
தர்ப்பஹா தர்ப்பதஹா –
தேவதைகளின் மமதை போக்கினவன் அன்றோ -கோவர்த்தன -பெரிய திருப் பாவாடை உத்சவம் –
கண்ணனை அன்றி வேறு தெய்வம் இல்லை -காட்டி அருளி கோவிந்தா பட்டாபிஷேகம்
தர்ப்பம் -ஆசை -யாதவர்கள் மமதை யால் குலத்தையே அழிக்க வேண்டிற்றே
உலக்கை கொழுந்து -கதை -ஆசை கர்வம் அளித்ததால் தர்ப்பஹா தரப்பதஹா
அத்ருத்தஹா –
என்ற திரு நாமமும் உண்டு ஆசை கர்வம் இல்லாதவன் –
நந்த கோபன் இளம் குமரன் -சக்கரவர்த்தி திருமகன் போன்று அடங்கி இருப்பவன் அன்றோ
ஷடர்த்த நயனஹா -வால்மீகி சிவனைப் புகழ்ந்தார்

துர்த்த்ரஹா -அடக்க முடியாதவன்
அபராஜிதஹா -வெல்ல முடியாதவன்
அன்பு பக்திக்கு அடங்குவானே
விஸ்வ மூர்த்தி -அனைத்தும் பிரகாரம் -சரீரம்
மகா மூர்த்தி -ஆதி அந்தம் இல்லாத –
தீப்த மூர்த்தி -பேர் ஒளியாக திகழ்பவன்
ஆண் அல்லன் பெண் அல்லன்
ஒன்றே என்னில் ஒன்றாவான் பலவே என்றால் பலவாவான்
அமூர்த்திமான் -அருவமும் அவனே -வடிவங்களுக்கு அப்பால் பட்டவன்
அநேக மூர்த்தி -சதா மூர்த்தி என்ற திரு நாமங்களும் உண்டே
ஷோடஸ ஸ்திரீ சஹாஸ்ராணி -பராசர பட்டர் -16108 திருமேனிகள் கொண்டானே
அவ்யக்தா -வெளிப்படாதவன் -புலப்படாதவன் -தனக்கும் தன தன்மை அறியாதவன்
ஏகஹா -ஒருவனாகவும்
நஏகஹா -அல்லாதவனாகவும்
அபராஜிதன் -தோல்வியே இல்லாதவன்
சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதம் இல்லாதவன்

நீராய் நிலனாய்
வையம் எல்லாம் கண்டாள் பிள்ளை வாயுளே
சஹா -கொடுப்பது -கொடுப்பவன்
வஹா -வசிப்பவன்
சஹா -ஞானத்தை தருபவன் என்றுமாம்
சஹா வஹா கஹா கிம் -கறந்த பாலுள் நெய்யே போலே இருப்பவன் அன்றோ கிம் -தேடிக் கண்டு அறியலாம் என்றபடி
யத் -யத்தனம் முயற்சியே வேண்டும்
அவனும் நம்மை மீட்க யத்நிக்கிறான் -சரணாகதர்களை ரஷிக்காமல் விடேன் விரதம் பூண்டு -உள்ளானே
ஆழி கொண்டு மறைத்து –
லோக நாதன் -செங்கோல் உடைய திருவரங்கன்
மாதவ -அகலகில்லேன் இறையும்-இத்யாதி என்பதால் மாதவன் -அவளாலே சிறப்பு பக்த வத்சலன்
அவனைக் கண்டு கலங்கிய விதுரர் போன்ற ஞானிகளுக்கு அவன் அடங்கி விரும்பி இருப்பான்
பதம் அநுத்தமம் -பரமபதம்
ஸ்வர்ண வர்ணஹா -சுட்டுரைத்த நன் பொன் அவன் திருமேனி ஒளி ஒவ்வாது

வீரஹ -வீரம் உள்ளவன்
ஹேமாங்கஹா -சுத்த சத்வ மயம்
விஷமஹ -விஷமக் காரன் கண்ணன்
ஆனாலும் விகல்பம் இல்லாதவன் -கல்லைப் பென்னாக்குவான் கல்லைத் தூக்கி குடையாக்குவான் -சர்வபூத ஸூ ஹ்ருத் –
சூன்யஹ -குற்றம் இல்லாதவன்
க்ருதாசிஹி -பூமியை ஆனந்தப் படுத்துபவன்
அசலன் -எந்த நிலையிலும் சலன் இல்லாதவன் -கடிகாசலம் –
ஸ்ரீ ருக்மணி பின்பு வந்ததால் நமக்கு ஸ்ரீ பார்த்த சாரதி தர்சனம் -முகத்தில் தழும்புடன் -அவள் அணைத்து ஆற்றி இருப்பாளே
சூன்யஹா -தீமையும் துர் குணமும் இல்லாதவன்
மானதஹா -மானம் கொடுத்து அருளினவன் -பாண்டவர்களுக்கு -செய்தவற்றிலே காணலாமே
பாண்டவ தூதன் பெயரில் ஆசை கொண்டான்
அமானி -தனது மானம் பற்றி கவலைப் படாமல் தன்னைத் தாழ விட்டுக் கொண்டவன்

ஸ்ரீ ராம ரத்னம் -ஒருவர் தவம் இருந்து பெற்ற நால்வரில் ஒருவன்
ஸ்ரீ கோபால ரத்னம் -நால்வர் வ்தவம் இருந்து பெற்ற ரத்னம் -மே தேஜ -விரதம் இருந்து பெற்ற பிள்ளை என்ற திருநாமம்
தேஜோப்ருஷ -தேஜஸ் கொண்டு உலகை அருளினவர் அன்றோ
குழந்தைகள் பசுக்களாக தானே தோன்றி பிரம்மா -பொறாமையால் -ஒருவருஷம் -துதி தஹா திருநாமம்
சர்வ சாஸ்திர பிரதாம் -அனைத்து சச்த்ரங்களையும் தரித்து -அப்படி தரித்து உள்ளவர்களுக்குள் ஸ்ரீ ராமனாக இருக்கிறேன் என்றானே
ப்ரக்ரஹ -கடிவாளம் போட்டு அடியவர்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்து இருப்பவன்
வியக்ரஹ -பொறுமை இல்லாதவன் -அடியவர்களுக்கு அனைத்தும் செய்தாலும் இன்னம் நிறைய செய்யப் பெற்றிலோமே என்பவன்
ஏக சிருங்கஹா -ஒரு ஆயுதமும் இல்லாதவன் -ஆயுதம் எடேன் என்றானே
நைக சிருங்கஹா -எப்பாடு பட்டாலும் அடியவர்களை ரட்ஷிப்பவன்
ஷிதிசஹாஸ்ரீ பூமா பிராட்டிக்கு அனைத்தும் செய்தவன் அன்றோ
பாப நாசனஹா -நம் பாபங்களை நாசம் செய்பவன் அன்றோ
ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் நமக்கு நாயக நாயகி அன்றோ

நயதி -அழைத்துச் செல்பவன் ப்ராப்யததி -தேவையானவற்றை தந்து அருள்பவன்
அவமரியாதை சொல் ஒன்றாலே கொல்வது போலே
நண்பன் தோழன் சஹா மித்திரன் ஸூ ஹ்ருத்
முறம் சல்லடை -ஒரே கார்யம் -கசடுகள் சல்லடையில் தங்கும் -நல்லவை முறத்தில் தங்கும்
ஆத்மா தேகம் பஞ்ச பூதங்கள் பரம் பொருள் இந்த்ரியங்கள் ஐந்தும் வேண்டுமே ஒரு செயலைச் செய்ய
ஆசார்யர் இடம் கால் வாசியும்
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மூலம் கால் வாசியும்
காலப் போக்கில் கால் வசியும்
பகவத் கிருபையால் கால் வாசியும் அறியப்படும் என்பர்
மாவுக் கனவு கதை போலே கூடாதே
பலனை எதிர் பாராமல் கடமையைச் செய்து சர்வம் ஸ்ரீ கிருஷ்ணமயம் என்று அவனுக்கே சமர்ப்பணம்

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading