திருப்பாவை –ஆழி மழைக் கண்ணா — வியாக்யானம் .தொகுப்பு –

அவதாரிகை –

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் இங்கே கிருஷ்ணனாய் வந்து -தன்னைத் தாழ விட்டு–பெண்கள் சொல்லிற்று செய்ய்ம்படிக்கு
ஈடாக தான் கையாளாய் —அவர்களுடைய அபேஷித சம்விதானம் பண்ணிப் போருகிறபடியைக் கண்டால்–இதர தேவதைகளுக்கு
சொல்ல வேண்டா வி றே –
இவர்களும் அவனுடைய சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து அத்தாலே ஸ்வரூப லாபமாய் இருக்கும் இ றே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாருக்கு- தேவதைகள் தாங்களே வந்து உபவஸ்தித்ராகக் கடவர் இ றே –உபஸ்திதர் -சேஷபூதர்-
திறம்பேன்மின் -திருமழிசை பிரான் அருளிச் செய்த படி –
திருவடி தன நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் – பரத்த்ரந்தர சம்ச்லேஷம் உண்டானால் பார்யைக்கு யோக்யதை கெடும் இ றே
நமனும் தன் தூதுவரை -செவிக்கு -இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் -என்றான் இ றே
ஆக இப்படி பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அனுவர்த்திக்க கடவர் ஆகையாலே வர்ஷ தேவதையான பர்ஜன்யன்-நாம் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற வேணும் -என்று வந்து நான் இங்குத்தைக்கு செய்யும் அடிமையை நியமிக்க வேணும்-என்ன செய்யக் கடவ படியை -இன்ன படியும் இன்ன படியும் -என்று கையோலை செய்து கொடுக்கிறார்கள்
இப்பாட்டில் இவர்களை வர்ஷ தேவதை-அடியேனுக்கு ஒரு கிஞ்சித் காரம் நியமித்து அருள வேணும் என்று பிரார்த்திக்க இவர்கள் அவனுக்கு கைங்கர்யம் நியமித்த படியைச் சொல்லுகிறது –
தேவதைகள் குட நீர் வார்த்து மதி முக மடந்தையர் பாதம் கழுவ
இதர தேவதைகளை கண்டால் ஸ்ரீ வைஷ்ணவர் செய்யும் பிரகாரம் என்ன–அவமதிக்க கூடாது -வந்தனம் செய்ய கூடாது
சாஸ்திரம் சங்கை கூரத் ஆழ்வான் –கேட்ட கேள்வியே தப்பு
ஸ்ரீ வைஷ்ணவர் கண்டால் இதர தேவதைகள் எப்படி நடந்து–அவை தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுவதியாது ஒழிவது என்
சு புருஷம் -யமன் -தஸ்ய கர்ண மூல அபிவீஷ்ய நன்றாக பார்த்து–பாச ஹஸ்தம் கொண்டு போவாரை–மது சூதனன் அடியவர்
அஹம் பிரபு அன்யர்களுக்கு–ஓலக்கத்தில் சொல்லாமல் தன் மனுஷ்யர் இடம் சொல்கிறான் —மெய்யே அழைக்கிறான் தோற்றும்படி-
அபிவீஷ்ய–முன்பு கொன்ற கோலம் குறையாமல் நிற்க–இது போல சென்றால் தலையும் இருப்பும் நில்லாது
யமன் இப்படி சொல்ல சர்வேஸ்வரன் இவன் கூறாக வைத்து இருந்தாலும் பயந்து–காதோடு சொல்ல–உரக்க சொன்னால் தலை போகும்
ராஜ பத்னி -தார பிராவண்யம் -ரகசியம் –
ஆஸ்ரித விரோதிகளை கண்டால் தன்னை பேணாமல்–மது சூதனன்–நான் மது பட்டது படாமல் இருக்க கிட்டே போகாதீர்
பிரபு -நீயே என்று இருந்தோம்–சோறு தாரகம் இருப்பாருக்கு நான் பிரபு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ரஷகன்–
ஆதி வாகஹர் அனுப்புவான் அவர்களை கூட்டி வர

ஆழி மழைக் கண்ணா –
கம்பீர ஸ்வபாவத்தை உடையவனாய்–வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –
சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்ம ருத்ரர் தலையிலே பொகட்டு–ஸ்வரூபத்துக்கு சேர்த்த பாலன விதியை தானே நடத்துமா போலே
நாட்டாரை கட்டுவது விடுவது ஆகிற க்ரௌரய வியாபாரத்தை–யமாதிகள் தலையிலே ஏறிட்டு–நம்மோபாதி ஜகத்தை ஈரக் கையால் தடவி
நோக்க வல்லன்-என்று ஈச்வரனாலே மதிக்கப் பட்டவன் அன்றோ நீ -இத்தால் நாட்டார் சிறுமை பாராதே–உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி -என்கை

ஆழி மழை -என்று மண்டல வர்ஷமாக்கி –ஆழி -வட்டம் -சுழித்து வர்ஷிக்கை —மண்டல வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -என்னவுமாம் –
ஸூ க்ருதம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷித்தும்–பாபம் பண்ணினார் இருந்த இடத்தே வர்ஷியாதும் போருவது ஓன்று உண்டு இ றே
எங்கள் பாக்யத்தை நினைத்து புஜிக்கும் நாடு ஆகையாலே–நீ அங்கன் புதைத்துப் பார்க்க ஒண்ணாது–எங்கள் கோடியிலே நீயும் ஆக வேணும்
நாட்டுக்கு இட்ட நினைவைக் கொண்டு படுக்கைப் பற்றிலே செல்லாதே கொள்–இவனை இங்கனே சொல்லுவான் என் என்னில்
இப்பெண்கள் பாலைகள் ஆகையாலே இவன் பேர் சொல்ல அறியார்கள்–ஆகையால் இவன் அதிகரித்த கார்யம் தன்னை இட்டே சொல்கிறார்கள்-
ஆழி--அபரிச்சேத்யமான ஜ்ஞான வைபவத்தை உடையையாய்
மழைக் கண்ணா —பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹனானவனே-என்னுதல்–பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு
விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல் பகவத் குணாம்ருத வரஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்
அதிகரித்த கார்யத்தை இட்டு–இன்னது பிடித்தான்–கங்கை கொண்ட சோழன் போலே–கடாரம் கொண்டான்-சுந்தர பாண்டியன் -கண்ணாடி-சாமரம் வீசுவான் திருச் சின்னமூதுவான் போலே கைங்கர்யம் இட்டே விளிச் சொல்-
யாரை அழைத்தாலும் கண்ணா என்பார்கள் வாசனை–நெற்றி பெற்ற கண்ணன் வணங்கு பாத-கண்ணன் கோபிகளுக்கு கை ஆளாக இருக்க–இங்கு கிஞ்சித் கரித்த-பலன் சொல்ல வேண்டாமே

ஓன்று நீ கை கரவேல் –
உன்னுடைய ஔ தார்யத்தில் ஒன்றும் மாறாத படி தோற்ற வேணும்–கை -என்று கொடை–கரக்கை -மாறுகை
சேதனனுடைய நன்மை தீமைகளை கணக்கிட்டுப் படி வைக்கும்–குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியைப் பார்த்து விஷமமாக வர்ஷியாதே-பாபமே பச்சையாக -ரஷிக்கும் எங்கள் படியைப் பார்த்து எங்கும் ஒக்க வர்ஷிக்க வேணும்

ஒன்றும்--ஏகதேசமும்
நீ
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் பகவத் காருண்யத்துக்கு விஷயம் ஆக்கவில்ல நீ–வர்ஷியா விட்டால் உடம்பு வெளுக்கும் நீ
கை கரவேல் —பகவத் குண வர்ஷத்திலே சோராதே கொள்ளாய்
ஆழி ––பகவத் குணாம்ருத சாகரத்திலே–உள் புக்கு–உள்ளே அவஹாகித்து
முகந்து கொடு —யாவத் குணங்களையும் புத்தி ஸ்தமாம் படி அகஞ்சுரிப்படுததிக் கொண்டு -அதாவது எப்பேர்பட்ட அபாரதிகள் ஆகிலும் தாம் அபிமானத்தவர்களில் காருண்யத்தைப் பண்ணும்படி எம்பெருமான் விதேயமாம்படி
பண்ணிக் கொள்ளுகை–ஆர்த்து–ஸ சம்ப்ரமமாக–ஏறி–ஆசார்ய பதத்திலே ஏறி

ஆழி யுட்புக்கு –
சகரர் கல்லின சிறு குழியில் அன்றிக்கே–சமுத்ரத்திலே போய் புக்க வேணும்–அதிலும் வாய்கரையிலே ஆக ஒண்ணாது —நடுவே சென்று இழிய வேணும் –
மண் பற்றோடு வாங்கி–மண்டி உண்ட

முகந்து கொடு-
இழிந்தால் மேற்பட்ட ஜலம் கொண்டு போர ஒண்ணாது–கடலை மணலே சேஷிக்கும்படி கிரஹிக்க வேணும்

ஆர்த்து –
இரா மடம் ஊட்டுவாரைப் போலே–முகம் தோற்றாமல் வந்து ரஷிக்கும் ஈஸ்வரனைப் போலே–ஆக ஒண்ணாது –
அனசநத்திலே தீஷித்த முதலிகள் அடைய திருவடி வரவாலே–சத்தை பெற்று சம்ப்ரமித்தால் போலே -நாடு எல்லாம் உங்கள் உடைய-த்வனி கேட்டு வாழும்படி மின்னி முழங்கி வில்லிலிட்டுக் கொண்டு–பெரிய சம்ப்ரமத்தோடு வந்து தோற்ற வேணும்
சப்தம் விடாய் கெடும்படி–ஒலி கேட்ட சந்தோஷம்–திருவடி -திரும்ப -முதலிகள்–வடக்கு இருந்து -ஆரவாரம் -உடன் வர

ஏறி
ஆகாச அவகாசம் இடமடையும் படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்க வேணும்–விண்ணீல மேலாப்பு விரித்தாப் போலே -என்றும்
மத யானை போல் எழுந்த மா முகில்காள் -என்றும்–சொல்லுகிறபடியே
கர்ப்பிணி பெண்கள் மலை ஏறி போவது போலே
ஊழி முதல்வன்–திருமேனி போலே–சிருஷ்டி காலத்தில் கறுப்பு மிக்கு இருப்பானாம்–கிருபையால் சிருஷ்டி–உபகரணங்கள் கொடுத்து-தனது பேறாக ஸ்ருஷ்டிப்பதால் திரு மேனி மிக்கு கருத்து–முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன்
கர்மானுகுனமாக சிருஷ்டிக்கும் பொழுது இப்படி இல்லை–உருவம் போல் மெய் கறுத்து–அவன் அகவாயில் தண்ணளி இவனுக்கு தேட ஒண்ணாதே
ஏறி முகம் காட்டி கார்யம் செய்தல் -விண்ணீல மேலாப்பு விரித்தால் போல்

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
ஜகத் காரண பூதன் ஆனவனுடைய வடிவு போல் இருக்க வேணும்–இந் நிர்தேசத்துக்கு கருத்து என் என்னில்-நெடுநாள் தம் பக்கலிலே சம்ஹ்ருதமாய்க் கிடந்த ஜகத்தை–உண்டாக்குவதாக சங்கல்பித்தவாறே பண்டு போல் அன்றிக்கே கரு வடைந்த பயிர் போலே-நிறத்திலே வருவது ஒரு வேறுபாடு உண்டு -அத்தை நினைக்கிறார்கள் —காலோபலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கின வனுடைய வடிவு
உங்களுக்கு உண்டாக வேணும்

ஊழி முதல்வன் -போலே -பெருமாள் போலே கர்மம் அடி இல்லை–பிராட்டி போல்-கருணையே உருவாக உள்ளவன் போலே-தானது தந்திலன்-காரேய் கருணை ராமானுசர் போலே ஔதார்யம் வேண்டும்–ஓன்று நீ கை கரவேல் என்கிறாள்
உலகுக்கு மழை-ஆத்மாவுக்கு மழை ஆசார்ய உபதேசம்–5 பாசுரம் திருப்பாவை ஆரம்பம் கீதை 2-12 ஸ்லோகம் போலே-விஸ்வக்சேனர் பூஜை போலே இந்த பாசுரம் நிர்விக்னம் –

மெய் கறுத்து-
அகவாயில் நீர்மை உங்களால் உண்டாக்க ஒண்ணாது இ றே–வர்ஷித்தால் அநந்தரம் வெளுத்துப் போமவை இ றே இவை-
கர்ப்பிணி பெண்கள் மலை ஏறி போவது போலே-ஊழி முதல்வன்–திருமேனி போலே–சிருஷ்டி காலத்தில் கறுப்பு மிக்கு இருப்பானாம்
கிருபையால் சிருஷ்டி–உபகரணங்கள் கொடுத்து–தனது பேறாக ஸ்ருஷ்டிப்பதால் திரு மேனி மிக்கு கறுத்து
முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன்–கர்மானுகுணமாக சிருஷ்டிக்கும் பொழுது இப்படி இல்லை
உருவம் போல் மெய் கறுத்து–அவன் அகவாயில் தண்ணளி இவனுக்கு தேட ஒண்ணாதே
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாது -என்றால் போலே–பார தந்த்ர்யமே -அவளுக்கு–ஸ்வா தந்த்ர்யம் கலசாத
நப்பாசையால் போலி கண்டு தரிக்க பார்க்கிறார்கள்–அம்மான் உருவம்–அண்ணலும் துன்னலும் நீரும் நெருப்பும்-நான்கு பூதங்களும் மேகத்தில் உண்டே–தூமக ஜோதி காளி தாசன் –

ஊழி முதல்வன் போல் மெய் கறுத்து–சிருஷ்டி உன்முகனான ஈஸ்வரன் உடைய திரு மேனியைப் போலே-காருண்ய சிருஷ்டி உன்முகனான உன் திரு மேனியிலும் வேறுபாடு உண்டாய்-
பாழி யம் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி —பலிஷ்டமாய்–சர்வ அபாஸ்ரயமாய்–அதி சுந்தரமான புஜங்களை உடையனாய்
சமஷ்டி சிருஷ்டி க்கு கடவனாய் பிரம்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான திரு நாபீ கமலத்தை உடைய
எம்பெருமான் உடைய திருக் கையிலே இருக்கிற திரு ஆழி ஆழ்வானைப் போலே
காருண்யா சிருஷ்டிக்கு கடவரான எம்பெருமானை யோக பலத்தாலே–சாஷாத் கரிக்கையால் வந்த மிக்க புகரை உடையராய்-

பாழியம் தோளுடைப்
உபய விபூதியும் ஒதுங்கினாலும் ஒதுங்கிய ரஷ்ய வர்க்கம் அளவு பட்டு–ரஷகனுடைய காவல் துடிப்பே மிக்கு இருக்கை –
பாழித் தோள் –
வலி உடைய தோள் என்னுதல்–இடம் உடைய தோள் என்னுதல்
அம் தோள்–அழகிய தோள்
அங்கன் இன்றிக்கே
குழைச் சரக்கே யாகிலும் விட ஒண்ணாத போக்யதை மிக்கு இருக்கை —ரஷகமுமாய் அது தானே போக்யமுமாய் இருக்கை -அழகிய தோள்–ரஷகத்வம் போக்யதையும்–சுந்தர தோளன்-பத்ம நாபாவோ புத்ரஷ்ய -பிள்ளை பிறந்த -கொண்டாட்டம் சுற்றி உள்ளார் கொண்டாடுவது போலே-ஆழி யோடும்–இன்னார் என்று அறியேன்–ஞானமும் கொடுக்கும் கலங்கவும் பண்ணும்

பாழியம் தோளுடைப் பற்பநாபன் –
பிள்ளைகளே தொட்டிலே வளர்த்தி–புற்பா இட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு நோக்கி இருப்பாரைப் போலே-திரு நாபீ கமலத்திலே வ்யஷ்டி சிருஷ்டிக்கு காரண பூதனான ப்ரஹ்மாவை பெற்று வைத்து–திருத் தோள்களாலே காத்துக் கொண்டு இருக்கிறவன்

பற்பநாபன் -கையில் -ஆழி போல் மின்னி –
சிருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை சிருஷ்டித்த திரு நாபீ கமலத்தை உடைய சர்வேஸ்வரன் கையில்-திரு ஆழியோ பாதி மின்ன வேணும்
இந் நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில் –
பிள்ளை பெற்ற ஹர்ஷம் விஞ்சி இருக்கச் செய்தேயும்–காம்பீர்யத்தாலே அது தோற்றாது இருப்பர்கள்-அவ்வர்க்கு உரிய அகம்படியரானவர்கள் அந்த ப்ரீதிக்கு போக்கு விட்டு நெய்யாடல் போற்றிக் கொண்டு திரியுமா போலே பிரதம ஜனானான
ப்ரஹ்மா உண்டான பின்பு சர்வேஸ்வரனுக்கு பிறந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கொண்டு ஆடினான் திரு ஆழி ஆழ்வான் -ஆகையாலே அவனை ஒப்பாக சொல்லுகிறது –
ஆழிவட்டம் சமுத்ரம் சக்கரம் —மூன்று அர்த்தங்களும் இந்த பாசுரத்தில்

வலம் புரி போல் நின்று அதிர்ந்து
பாரத சமரத்தில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி போலே இருக்க வேணும்–அனுகூலர் வாழவும் பிரதி கூலர் முடியவும் ஆக வேணும் –
நின்று அதிர்ந்து ––அது போல் ஒரு கால் முழங்கி விட ஒண்ணாது–மாறாதே நின்று அதிர வேணும் –
தாழாதே –
நோன்பிலே நின்று உபக்ரமித்து–உபவாச க்ருசைகளாய் இருந்த எங்கள் வடிவு இருந்தபடி கண்டாய் இ றே–அத்தனை கால விளம்பத்தோடே ஆக ஒண்ணாதே
ஆர்த்திக்கு முற்பாடனாய் ரஷிக்கும் ஈஸ்வரனைப் போல் ஆக வேணும்
தேவ மாத்ருகம் -வானம் பார்த்த நிலம் -போல் அன்றிகே பகவத் சமாஸ்ரயணம் நதீ மாத்ருகம் போலே -சரதம் -என்கை –
சார்ங்கம் உதைத்த சர மழை போல்–இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்–சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று -எய் வண்ண வெஞ்சிலை இ றே —உடையவன் அம்பு பெருக்கி இடுகை –
சார்ங்கம் உதைத்த —அகம்படியர் -சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இ றே-அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும் விலக்க ஒண்ணாதாய் இருக்கை

வலம் புரி போல் நின்று அதிர்ந்து –
இவ்விடத்திலும் பற்ப நாபன் கையில் என்று அநு ஷங்கிக்க வேணும்
அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து
அதாவது-
பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை
வாழ —-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி
உலகினில்–லௌகிகர் இடங்களில்–பெய்திடாய்–பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

நின்று அதிர்ந்து- பாரத யுத்தம் போலே ஒரு தடவை இல்லாமல்–ஸ்த்ரீத்வத்க்கு முலை போலே அவனுக்கு திவ்ய ஆயுதங்கள்
வானம் பார்த்த பூமி–நதி கரை போலே பகவத் சமாஸ்ரயணம்–சார்ங்கம் இறை பெறாத பாம்பு போலே
இலக்கு இல்லாமல்–சர வ்ருஷ்டி பொழிந்து–அடக்கி ஆளவேண்டும்–அகம்படி கோபித்தால் ராஜாவாலும் மீட்க முடியாதே
அழுத்திப் பிடித்து இருப்பார்–விட்டால் விரோதி–வில்லாண்டான் -கார்யம் செய்யாமல் அடக்கி வைப்பது –
வாழ--சரம் போலே முடிக்க ஒண்ணாது–ஜகம் அடைய வாழ வேண்டும்–ஈஸ்வரன் -அடைத்த பணி

நம்பெருமாள் சங்கு சக்கரம் கதை-பஞ்ச ஆயுதம் தர்சனம் ஆச்சார்யர்களுக்கு சதா பஞ்சாயுதம் விப்ரது-தனுர் மாசம் -சார்ங்கம் உதைத்த -சாரங்கபாணி –
சீதை கிடைக்க -பெற்ற -கிருதஞ்க்தை காட்டி எய் வண்ண வெஞ்சிலையே துணையாக -பர கால நாயகி -பார்க்க வரும் பொழுதும் விடாமல் –
கல்வி சிலையால் காத்தானூர் கண்ணபுரம் —பரசுராமன் -வாங்கிய வில்
தடம் தோள்-சரங்க வில் சேவகனே -சக்கரபாணி–சாரங்க பாணி தளர்நடை நடவாயே -நாலாவது வில் -இது வா போக்கு -இன்னும் வந்து போக்கு –
சார்ங்கம் உதைத்த சரமழை–திருக்கல்யாணம் -செய்யவும் இதே சார்ங்கம்–யாகம் சம்ரஷணம் -கல்விச் சிலை
பரசுராமர்–சாரங்கபாணி தளர்நடை
சுக்ரீவன் ஏழு சால மர்ராமரங்கள் – -வில் நாண் ஏற்றி -ஏழு குல பர்வந்தங்கள்-நடுங்க -ஏழு வேலையும் கடலும் எழு எனபது இலக்கானதோ
சப்த ரிஷி கன்னிகள் லோகங்கள் புரவிகள் —உலகம் உண்ட -தீவாய் வாளி-புணராய் -சாரங்கத்து உனபாதம் சேர்வது அடியேன் எந்நாளே-
ஒரு வில்லால் -அணை கட்டி–வில் விடாதே ஸ்ரீ ராமனை —கோலார்ந்த நெடும் சார்ங்கம் -புறம் சூழ்ந்து காப்ப
உறகல் உறகல்–சார்ங்கம் ரஷகம்–நமக்கும் ரஷகம் —வில்லை நம்பி -சொல்லால் சுடுவேன் –நமசப்தார்த்தம் —சர்வருக்கும் ரஷகம் –
பொன்னார் சாரங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வாளும் வில்லும் கொண்டு செல்வார் மற்று இல்லை -கைங்கர்யம்

வாழ உலகினில் பெய்திடாய் —த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது–அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்
அழகிது -ஈஸ்வர ஆஞ்ஞையாலே நான் முன்பே அதிகரித்த தொரு கார்யம் அன்றோ –
இங்குத்தைக்கு நான் கிஞ்சித் கரித்தவனாம்படி என் என்ன –
நாங்களும் மார்கழி நீராட —நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக் கடவோம்
அதுவும் முன்பே ஊராக நிச்சயித்த தொன்று அன்றோ —இப்போது வந்த தன்னேற்றம் என் என்ன –

நாங்களும் மார்கழி நீராட –
பகவத் கைங்கர்ய ஏக போகரான நாங்களும் -நோன்பு -என்கிற–வ்யாஜ்யத்தாலே–பகவத் சம்ச்லேஷத்தைப் பண்ணி
மகிழ்ந்து--மகிழக் கடவோம்–அதாவது–பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே–என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை
நாங்கள் மார்கழி மகிழ்ந்து நீராட
நியமத்தால் இல்லை–மகிழும் படி–சேர குளிக்கை உனக்கு கிடைக்குமே
மகிழ்ந்து – நாங்களும் நோன்பு நோற்றோமாய் அந்த நோன்புக்கு பலமான வர்ஷமும் உண்டாய்த்தாய்-கிருஷ்ணனோட்டை சம்ச்லேஷத்தால் மகிழ்ந்து நீராடக் கடவோம்-
மகிழ்ந்து-ஊரார்க்கு மார்கழி நீராடுகைக்கு மேலே ப்ரீதி பூர்வகமாக–குளிக்க வேண்டுவதொரு நிர்பந்தமும் இல்லையே-
உனக்கு பிரியகரமாக புருஷார்த்தமாக – கிருஷ்ணனும் நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம் -என்கிறார்கள்-ஏல் ஓர் எம்பாவாய்-

இப்பாட்டில்
வர்ஷ தேவதைக்கு அவன் அதிகரித்த கார்யத்தையே–தங்களுக்கு இஷ்டமாக நியமிக்கையாலே–பகவத் பாகவத இஷ்டத்வேன
நித்ய நைமித்திகாதி தர்மங்களை யதாவாக அனுஷ்டிக்கை–பிரபன்ன அதிகாரிகளுக்கு அவசியம் என்றது ஆயத்து —

ஆழி மழைக் கண்ணா –அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் —வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே -யதிராஜ சப்ததி-ஒன்றும் கை கரவேல் -இராமானுசன் என்னும் சீர் முகிலே--ஆழியுள் புக்கு -உபநிஷத் துப்தாக்தி மத்யோத்த்ருதாம் –ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூ கதியும் அனுசந்தேயம்
ஆழி –ஆசார்யர் காரயமாகவே–முதலிலே நீராட–ஆழியுள் புக்கு -ச்வாபதேச அர்த்தம் யாதாம்ய அர்த்தம்-மீன் நோக்கு நீள் வயல் சூழ் திரு வித்துவக் கோடு
கடலில் மத்யசங்கள் இங்கே நீர் வற்றினால் போய் இருக்க வயல் உண்டே –
சுவாமிநாத ஐயர் -பெரிய வாச்சான் பிள்ளை எங்கே தமிழ் கற்றார் என்றாராம் —உபநிஷத் -உள்ளே புக்கு ஸ்ரீ பாஷ்யம் அருளினது போலே
லஷ்மி நாதாச்ய சிந்தோ -சடாரி பிராப்ய காருண்யா நீரம் யதீந்த்ராத்ரா –தேசிகேந்திர
சமுத்ரம் -மலைகள் இறக்கை -வஜ்ராயுதம் —எம்பெருமான் -ஈர் இரண்டு மால் வரைத் தோல் அம்மான்–மா மணியும் -செங்கமல -பொன் வடமும் -சுட்டியும் —மலர் மேல் மங்கையும் -அகலகில்லேன் இறையும்–சங்கமும் தங்குகின்ற
கடல் போல் இவர் யார் கொல் அஷ்டபுஜம் —ஆழ்வார் காளமேகம் –அடியார்க்கு இன்ப மாரியே – -தானே சொல்லி கொண்டாரே
பிராப்ய காருண்யா -நீரம் கிருபை நீர்மை–நாத முனிகள் —ரகுவர ராம மிஸ்ரர் அம்போத்க சஷ்ஸ் புண்டரீகாச்சர் மாற்றி சொன்னது -மணக்கால் நம்பி இடம் சொல்லி திருநாடு–யாமுனா நதி பெருக்காறு -யமுனைத் துறைவர் -யாமுனாக்யம் சரிதம் கதவா-பத்மா கரெந்த்ரம் -எம்பெருமானார் தடாகம் -நிறைத்து–74 மதகுகள் -எண்ணி பார்க்கலாம்–திக் கஜங்கள்-பயிருக்கு பாய்கிறது -நம் இடம்–நமக்கு எம்பெருமானார் மேகம் -ஆழி மழைக் கண்ணா -செழும் கொண்டலே –இராமானுசா -கண்ணனைக் காட்டித் தரிலும் -105–ஆழி மழைக்கு அண்ணா -ஆஹ்லாத சீத்ர நேத்ராம்பு த்ரஷடவ்ய –
ஓன்று நீ கை கரவேல்–எம்பெருமானுக்கும் கை கொடுத்தார் எம்பெருமானார் –
பாஹ்ய குத்ருஷ்டிகளை —மறைப்பால் கடலை -தொண்டர்க்கு அமுது உண்ண —திரு நாவின் மந்தரத்தால் கடைந்து-துறைப்பால் படுத்தி–தமிழ் ஆயிரத்தின் சுவை இன்பம் -சென்மம் விடாய்க்கு நிழல் இல்லை –
கொண்டல் வண்ணன் -ஒண் சங்கு ஆழியான் உள்ளே இருப்பதால் -ஊழி முதல்வன் போல் மெய் கருத்து-இந்த பாசுரத்தில் உள்ளது எல்லாம் ஆழ்வார் அருளி–போல் /மெய் -அதிக்கப்படி சொல்கள் இல்லை வியாக்யானம் இவற்றுக்கும் உண்டே

பகவதோஸ்ய தயையைக சிந்த்யோ -ஏரார் எதிராசர் இன் அருளால் –ஆசை உடையார்க்கு எல்லாம் -தாய்க்கும் மகனுக்கும் –இவர்க்கும் இவர் அடி பணிந்தோர்க்குமே இவை உள்ளது
பஞ்ச ஆயுதங்களையும் சொல்லி -அடையார் –இந்த பூதலம் காப்பதற்கு இடையே ராமானுச முனி ஆயின-திரிதண்டம் விஸ்வக்சேனர் பிரம்பு தேசிகன்–ஆழி போல் -மின்னி -வலம் புரிபோல் நின்று அதிர்ந்து -சங்கு ஒலியும் சாரங்க வில் நாண் ஒலியும் -தலைப் பெய்வது என்று கொலோ–இரண்டு பிராட்டி அபேஷை-
ருக்மிணி பிராட்டி -சங்கு ஒலி-சீதை பிராட்டி -சார்ங்க நாண் ஒலி–பொலிக பொலிக பொலிக மூன்று கார்யம்-வாழ்வு அற்றது தொல்லை வாதியருக்கு சார்ங்கம் உதைத்த சர மழை-போல்–வாழ உலகினில் பெய்திடாய் அடியார்கள் வாழ -ஆசார்ய அபிமானம் தளைத்து ஓங்க

ஸ்வா பதேசம்
முதலாழ்வார் திருமழிசை பிரான் திருமங்கை ஆழ்வார் எம்பெருமான் -மேகம் –கருணா ரச வர்ஷிகள்-
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும்
திருமால் சீர்க்கடலை உட்பொதிந்த சிந்தனையேன்
கல்யாண குணங்களை பருகி–திருமால் திருமேனி ஒக்கும்–உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
தீர்த்தகரராமின் திரிந்து–தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து–தீங்கின்றி அநர்த்த கந்தமும் இல்லாமல்-
இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோமே என்று வெள்கி–சிஷ்யர்கள் உஜ்ஜீவனம் தங்கள் பேறாக நினைத்து இருக்கும்-
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் ஆகிய முதல் ஆழ்வார்கள்
உருவின வாளை உறையில் இடாது அடியிடைமுடிகளில்–தேவதாந்திர அப்ரத்வத்தையும்–பகவத் பரத்வத்தையும் உபபாதிக்கும் திரு மழிசை பிரானும்
காரார் புயல் கை கலிகன்றி -அருள் மாரி ஔதார்யத்தில்–மேகத்தை ஒத்து கருணையை வர்ஷிக்கும் திருமங்கை ஆழ்வார்
குணம் திகழ் கொண்டல் எம்பெருமானார்
ஏறி ஆச்சார்யா பதவியிலே ஏறி–வலம்புரி போல் பிரணவம் போல்–நின்று அதிர்ந்து வெளியிட்டு அருளி-
மடப்பள்ளி விறகு கொண்டு வருபவனுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்வார்கள்
ஆழி உள் புக்கு –துப்தம் அப்தி -பாற் கடல்-அனந்த வேதாந்தம் துத்தம் ஹித தமம் – உபநிஷத் -மத்யோ-த்ருதம் -பராசர்யர் வாச ஸூ தா ம் -அமிருதம் –
ஸ்ரீ பாஷ்யம் -முதலில் –ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ ரகச்யத்ராயம் -பகவத் விஷயம் யாவத் தேஹம் –
மயில் -மேகங்கள் கருத்த நிறம் கண்டு ஆடும் -ஹம்சம் அஞ்சுமாம்-கருடன் மேலே பிராட்டி பெருமாள் வர -கருத்த மேகம் –
அன்ன பஷி மேல் ப்ரஹ்ம வர பயந்து –கீழே விழ -மயில் ஆட -ப்ரஹ்மா நிலைகண்டு அறு முகன் சிரிக்க -மயிலில் உட்கார வைக்க
-பத்து தலைகள் பார்த்து ராவணன் -அஞ்சன நிற வண்ணா -கவிஞர் பாட
கருமை நிறம் கர்ஜனை -பாஞ்ச ஜன்யம் மின்னல் சக்கரம் வர்ஷிக்கும் கருணை -பொழிந்தாலும் வெளுக்க முடியாதே
மேகம் கண்ட மயில் -மேகங்கள் கருத்த நிறம் கண்டு ஆடும் -ஹம்சம் அஞ்சுமாம்-கருடன் மேலே பிராட்டி பெருமாள் வர -கருத்த மேகம் –
அன்ன பஷி மேல் ப்ரஹ்ம வர பயந்து –கீழே விழ -மயில் ஆட -ப்ரஹ்மா நிலைகண்டு அறு முகன் சிரிக்க -மயிலில் உட்கார வைக்க -பத்து தலைகள் பார்த்து ராவணன் –

ஆழி மழைக் கண்ணா -ஓன்று நீ கை கரவேல் –ஆழி சங்கு சார்ங்கம் -அடையார் கமலத்து அலர்மகள் –வவ்ருதே பஞ்ச பிராயுதைர் முராரே -பஞ்சாயுத ஆழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷ திருவவதாரம்-ஆழியுள் புக்கு -உபநிஷத் துக்தாப்தி மத்யோர்த்ருதம்-ஒன்றும் நீ கை கரவேல் -இராமானுசன் என்னும் சீர் முகிலே –
ஆழியுள் புக்கு -உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம் –

மகிழ் மாலை-சாற்றுகிறாள் இதில்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து–நீராட்டம் -ஐந்து பாசுரங்களில்
நீராடப் போதுவீர்–நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து–குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே–உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு–மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
கிருஷ்ண சம்ச்லேஷம் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ர்தம்
காலை நல் ஞானத்துறை படிந்தாடி -திருவிருத்தம்
மார்க்க சீர்ஷம் -ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்யா அபிமானம் ஒழிய கதி இல்லை-என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்ய கேட்டிருக்கையாய் இருக்கும்
ஸ்வ ச்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று–பகவத் ஸ்வா தந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று
ஆச்சார்யனைத் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோபாதி
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -மகிழ்ச்சி மாலை மகிழ்வு மாலை -என்னாமல் மகிழ் மாலை
என்பதால் ஆழிமழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் -ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி -74 சிம்ஹாசானாதிபதிகள் -மகிழ் மாலை மார்பினன் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading