அவதாரிகை –
பெண்பிள்ளைகளில் ஒருத்தி ––நாம் இப்படியே கனக்கப் பாரித்துக் கொண்டி இழியா நின்றோம் ––நமக்குத் தான் இது தலைக் கட்டுகைக்கு விஸ்வாசம் என் –
அநாதி கால சஞ்சிதமான கர்மங்கள் இதுக்கு விரோதத்தைப் பண்ணாதோ–பஹூ விக்நாநி அன்றோ -என்று பிரச்சனம் பண்ண
அவர்களிலே வேதாந்த ஜ்ஞானம் உடையவள் ஒருத்தி ––நாம் நம்முடைய விரோதிகளைப் போக்கிக் கொண்டு வந்து இதிலே இழிகை என்று ஒரு பொருள் இல்லை
–--நமக்கு அடைத்த பகவத் அனுபவத்தைப் பண்ணா நின்றால்–சேர்பால் போக ரூபமாக பருகுமவனுக்கு தன்னடையே பித்தம் போமா போலே
இவை தன்னடையே விட்டு ஓடிப் போம்–ஆனபின்பு இனி அயோக்யதையைப் பார்த்து அகல வேண்டா -என்கிறாள்-
இலை அகல பாரித்து இருந்தோம் -நடக்குமா -கோபி-பஹு விஞ்ஞானி ஸ்ரேயாந்தி -நல்ல கார்யம் -பக்தி மகான் -பெரியவர்களுக்கும் நடக்குமே —கேட்டவள் அவ்யுதன் வார்த்தை -அறியாதவள்-சம்பராந்தகன் தசரதர் பாரித்தார் -இந்த்ரன் கார்யம் செய்தவர்–வசிஷ்டர் முகூர்த்தம் -உண்மையில் தசரதர்–ராமோ விக்ரஹான் தர்மா முடு சூட-சக பத்னி விசாலாட்ஷ்யா – பெருமாள் பிராட்டி பெரிய பெருமள் இடம் பிரார்த்திக்க–உண்மையில் நடக்க கூடாது என்பதற்காக நாராயண உபாகமத்
இச்சாமஹா -மகேன கஜதாம் -நாடு அடங்க மங்களா சாசனம்–இதுக்கும் அன்றோ விக்னம் நடந்தது —பாதுகா பட்டாபிஷேகம் நடந்ததே -தேசிகன் –
தெய்வம் -தலை விதி நேராக அர்த்தம் –மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை- தூய பெருநீர் யமுனைத் துறைவனை ––ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை ––செப்பு ––போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்கிறாள் .
அவன் எவ்விடத்தான் யான் யார்–பற்றுகையாவது தான் ஏன்–அயோக்யதா அனுசந்தானம் பண்ண–அதிகாரி சம்பத்து உண்டாக்கி இழிய வேண்டாம்-
1973/74 அத்யயன உத்சவம் -12 திருமண் இட சொல்லி–அதுக்கு யோக்யதை இல்லை ஒரு திருமண் இட்டுக்க உண்டா – காஞ்சி சுவாமி-அவரே இட்டு விட்டார் -அத்யயன உத்சவம் சேவை பெற்றார்
நோவு குடிநீர் கஷாயம் குடிக்குமா போலே
நாம சங்கீர்த்தனம் -மாயானை–தாமோதரனை -செப்பு
அரு சுவை அடிசில் இது -தாயை குடல் விளக்கம் செய்த /தாமோதரனை பிரித்து —குடிக்கிற குடி நீர் இதுவே –
இனிமையான வஸ்து கஷாயம் என்று சொல்ல வேண்டி இருக்கே —பிராப்தம் இது -விஷ்வக் சேனபூஜை -இது தடங்கல்தான் தடை அதுவே போக்குமே-
-சுவாமி–கை அழுக்கை சோப்பு போக்கும் -சோப்பு அழுக்கு -சோப்பே போக்கி கொள்ளுமே-
அர்த்த பஞ்சக பரமான ஐந்து பாசுரங்கள் என்றுமாம் –
மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் -பர ஸ்வரூபம் -ஸ்ரீ பாஷ்ய சுருக்கம்
வையத்து வாழ்வீர்காள் உய்யமாறு –உகந்து -ஜீவ ஸ்வரூபம் –
உத்தமன் -சித்த உபாய பூதன் -/ஆஸ்ரயிக்கும் தசையில் சமோஹம் சர்வ பூதேஷூ -அத்யந்த ப்ரீதி -அநந்ய பிரயோஜனர் இடம் -பொது நின்ற பொன்னம் கழல் –
காற்று எங்கு உள்ளது -cycle tyre காத்து அடிப்பது போலே அவனை வசீகரித்து -பேர் பாடி -யோகம் யாகம் அர்ச்சனை திரு நாம சங்கீர்த்தனம் நான்கு யுகம் –
தீங்கு இன்றி -தேஹாத்ம பிரமம் ஸ்வ ஸ்வாதந்த்ரம் -தேவதாந்த்ர ஸ்பர்சம் தவிர்ந்து -உபாயாந்தர பிரமம் -மும்மாரி தத்வ த்ரய ஞானம் உபதேசம்
பொறி வண்டு -ஆச்சார்யர் -வண்டுகளோ வம்மின் –
தேங்காதே புக்கு இருந்து -ஆச்சார்யர் இடம் உபதேசம் பெரும் முறை -நான்கு பிரமாணங்கள் நான்கு முலைகள் –
பலம் – -குண அனுபவம் ப்ரீதி காரித கைங்கர்யம் -ஆழி மழை கண்ணா -ஆனந்த கண்ணீர் சொரிய -ஓன்று நீ கை கரவேல் -சகல வித கைங்கர்யம் -வித்யா பிரார்த்தனை ஆச்சார்யர் பரமாக—பஞ்ச ஆயுதங்களை சொல்லி -ஸ்ரீ பாஷ்யகாரர் –
பிராப்தி விரோதி -மாயனை -முன்பும் பின்பும் -மோக்ஷ பிரதிபந்தகங்கள் -பின்பு அனுபவ விரோதிகள் -கால் ஆளும் -விளம்பம் -நைச்யம் இத்யாதி –
மாயனை -திருடன் குழந்தை இடம் chacolate கொடுத்து தங்க சங்கிலி திருடுவது போலே -வாயினால் பாடி – போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் படி செய்து கொள்கிறோம்-
மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5–
மாயனை
பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு–தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து
அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே –மாயன் -என்கிறது –
கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே–பரமபதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே
எத்திறம் -என்கிறார்கள் –
மாயனை –
ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இ றே இது–ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே
ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-
அன்றிக்கே
நித்ய சூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்–அவதரித்தான் என்று–அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து
அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே
ஆழம் கால் பட்டு -எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –
மாயனை
சமஸ்த கல்யாண குணாத்மகன்-பரத்வம்–நிரதிசய ஆனந்த போக்யத்வம்–உபய விபூதி உக்தன்–ஸ்ரீ ய பதித்வம்
ஏகாகி -ஏக ஆர்ணவம் -தனி இருப்பு–பண் கடந்த தேசம் —எதோ வாசே நிவர்த்தந்தே —யஸ்ய அமுதம் தஸ்ய மதம்-மாயனை ஒரே சப்தத்தால் பேசலாம் படி கை வந்தபடி
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல்–வில்லிபுத்தூர் உறைவானை கூப்பிடாமல்–அவன் கிட்டே உள்ளான் இவ்விடத்திலும் அவ்விடம் நிலமாக இருக்கிறதே
தோனி அபிநிவேசம்–ஞானம் விசதம் ஆனால் அவ்விடம் அணித்து இவ்விடம் தூரம் ஆகுமே–அக்கரை என்னும் அனர்த்த கடலில் -உன் பேர் அருளால் –
இக்கரை ஏறி இளைத்து -தமப்பனார்–தம் அப்பன்–தகப்பனார் கொச்சை சொல்–அவன் அபிமானத்தில் ஒதுக்கினார் அனைவரும்–இங்கே ஈச்வரோஹம்
மாயனை -பரத்வத்தில் எத்திறம் இவளுக்கு–இங்கு ஊராக உடம்பு கொடுத்து அங்கு நாட்டுக்காக–சதா பச்யந்தி–சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு ஊற்று அதுவே
தாம்பாலே பந்தித்த ஊர்–சதாபச்யந்தி கடைக் கண் என்னும் நெடும் கயிறு கொண்டு கட்ட-
ஜாதோசி-
தேவகி வயிற்றில் பன்னிரண்டு மாசம் குடி இருந்து–பிறந்த பிள்ளைத் தனத்தில்–குறைவறப் பிறந்தவனுக்கும் இல்லை செய்ய ஒண்ணாத படி
மூதலித்து கொடுக்கலே இருக்கை–ஆக இப்படி இருக்கிறவன் ஆர் என்னில் –
ஒரு காலத்திலும் கர்ம ஸ்பர்சம் இல்லாத நித்ய சூரி பரிஷன–நிர்வாஹகன் ஆனவன் ––அயர்வறும் அமரரர்கள் அதி பதி என்கை-
கிருஷ்ணனாக வந்து–வெண்ணெய் திருடி–நகரை ஷோபம் கலக்கி–இத்தை நினைத்து எத்திறம் என்னவுமாம்
சூட்டு நன் மாலைகள் இத்யாதி —-மாயையினால் -அங்கும் உண்டே–வெண்ணெய் தொடு உண்ண போந்து–கோட்டிடை பின்னைக்காக வந்தான்-சதைக ரூப ரூபாயா அங்கு-அது அறிந்த படி என் என்னில்
பரமபத நிலையமுமாய்-சூரி நிர்வாஹகமுமான வஸ்து வுக்கு அசாதாராணமான-சிஹ்னமான ஆழ்வார்களோடே அவதரிக்கையாலே –
மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –-முன்பு சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் நெடும் காலம் தபஸு-பண்ணி-சத்ருகன ஆழ்வான் வன்னிய மறுத்து படை வீடு செய்து-சர்வேஸ்வரன் எப்போதும் அவதரித்து போருவதொரு தேசம்
மல்லை மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இ றே –
வட மதுரை-
நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே–பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் ––பரமபதம் கலவிருக்கை என்னும்படி
பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை ––விரோதி நிரசனத்துக்கும் தானேயாகை—பிராப்யமும் தானே யாகை-
இத்தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை ––தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு–அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –
அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே–அஜஹத் ஸ்வபாவனாய் கொண்டு–நித்யனானவன்–ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு
மைந்தனை–மிடுக்கனை
தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ நள்ளிருட் கண் வந்த எந்தை -என்று–மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழல வந்து–திரு அவதரித்த படி –
பிள்ளை -என்றுமாம்
திரு அவதரித்து எனக்கு உபகரித்த பின்பு இளகிப் பதித்த படியாததால் ––ராஜா என்றுமாம் ––தன் அழகைக் காட்டி–இருந்ததே குடியாக தன் வசம் ஆக்கின படி-
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –
விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி –
யமுனைத் துறைவனை–கவி பாட ஊரும் பேரும் வேண்டுமே--முத்து படும் துறை–சங்கணித் துறைவன் நம் ஆழ்வார்
கிருஷ்ணனுக்கு பெண்கள் படும் துறை--நல்ல சரக்கு படுவது நீரிலே இறே –அமுதில் வரும் பெண் அமுது
கடலில் ஒரே பிராட்டி–இங்கே பஞ்ச லஷம்
மறைத்து -கம்ச பயத்துக்கு அஞ்சி ஒழிக்க வல்லார் -யமுனைத் துறைவன்
மாயை -ஞானம் இச்சையால் சங்கல்பத்தால் அவதரித்தான்–பிறந்தது போலே நாடகம் -சங்கரர்
ஜன்ம கர்ம மே திவ்யம் புரிந்து கொள்ளாமல் பொய் அர்த்தம்–விஷ்ணு வ்யாபக வஸ்து ஏக தேசம் பிறந்து
சனாதனன் -என்றும் உள்ளவன் ஒரு நாளில்–மைந்தன் -யௌவனம் உண்மீகி பூத யுவா குமார-கம்சனை கொன்ற மிடுக்கு--மதுரையார் மன்னன்
தூய பெரு நீர்–விட்ட விரஜையை மறக்கும் படி ஆறு
அடி அறிவான் கருத்து அறிந்து கார்யம் செய்ய அதுவும் இங்கே வர–கருப்பு உடுத்து ராஜா வர கூட வருவார்-திருவடி திரு வனந்த ஆழ்வான் போல் விரஜையும் வர
தூய
1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –
2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –
3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்
பெரு நீர் –
அத்ய காதமான ஆறு பாங்காக வற்றிக் கொடுத்தது ––மநோதரம் ஆகையாலும்–பாவனம் ஆகையாலும்–ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம்
யமுனைத் துறைவனை –
திருக் குரவை ஸ்தானம் ஆகையாலே
பெண்கள் படும் துறையை உடையவன்-
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –
பரமபதத்தில் காட்டில் குணங்கள்–இடைச் சேரியிலே அத்யுஜ்ஜ்வலம் ஆனபடி–அந்த காரத்தில் தீபம் போலே
தோன்றும் –
1-கர்ப்பத்தில் தொற்று இல்லாமை-கீழைத் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம்-இவளோடு அவனுக்கு உள்ளது –
2-ஸ்ரீ மதுரையிலே திரு அவதரித்து இருக்க செய்தே-திரு அவதார பிரகாசம் திரு ஆய்ப்பாடியிலே சென்றது என்றுமாம் –
3-ஆயர் குலம் என்றது–அநந்ய சாதனரான பாகவத குலம் -என்றபடி-
அணி விளக்கை
திரு ஆய்ப்பாடிக்கு மங்கள தீபம் என்றுமாம் –
அணி விளக்கு -கண் காட்டி இவர்களுக்கு கை விளக்கு–அந்தகாரத்தில் தீபம் போலே அங்கே
மணி விளக்கு–அழுக்கு அற்ற படி இங்கே பிறந்த பின்பு
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
வயிற்றில் தழும்பாலே யசோதைப் பிராட்டி விளங்கப் பண்ணினவனை –
தாயைக் குடல் விளக்கம் செய்த-
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்-என்று–நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்ருக்கு பட்டம் கட்டினவனை –
– தாமோதரனை –
தன்னுடைய பவ்யதையாலும்–அவளை நாட்டார் கொண்டாடும்படி பண்ணினவனை –
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்கப் போகாதது போலே–அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க ஒண்ணாதே –
இப் பந்தத்தை அனுசந்தித்தால் ஆஸ்ரிதர் உடைய சம்சார பந்தம் போம் என்கை –
சேஷியினுடைய திரு இலச்சினை -தாமோதரம்–சேஷ பூதர் சங்கு சக்கரம் போலே பட்டர் அருளிச் செய்த–பிரணவம் கோள் சொல்லி கொடுக்கும்
கிளை தாவ –கோபிகள் சிரிக்க -தழும்பு தோற்றமல் திரு மஞ்சனம் -இன்றும் வஸ்த்ரம் மாற்றி
உலகுக்கு மழை –ஆத்மாவுக்கு மழை ஆசார்ய உபதேசம்
5 பாசுரம் திருப்பாவை ஆரம்பம் கீதை 2-12 ஸ்லோகம் போலே–விஸ்வக்சேனர் பூஜை போலே இந்த பாசுரம் நிர்விக்னம் –
மாயனை -ஷட்ரசம் -ஆண்டாள் –மாயனை-வாயினால் பாடி–யமுனைத் துறைவனை வாயினால் பாடி –தாமோதரனை வாயினால் பாடி
மாயனை -மதவாதிகள் பெருக -சம்பவாமி ஆத்மமாயயா -வணங்கும் துறைகள் பலபலவாக்கி –
எல்லையில் மயத்தான் -ஆழ்வார் -அது கொண்டே பஹூஸ்யாம் -மாயா கிர்த்ரிமம் கள்ளம் அன்று–வித்ராயன்யர் -உடையவர் 100 வருஷம் பின் பட்டவர்
அவர் பாஷ்யம் வேதங்களுக்கு–சுதபிரகாசிகா காரர் -மாயா -ஞானம் தான் அர்த்தம் நீங்களே எழுதி உள்ளீர் காட்டி
மாயனை அடுத்த ஐந்திலும் வைத்து ஆச்சார்யம் அனுபல்லவி —சிருஷ்டி மட்டும் சங்கல்பம் இல்லை தனது அவதாரமும் சங்கல்பத்தால் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் அவதரிக்கும் பொழுதே –வடமதுரை மைந்தன் மாயன்-–யமுனைத் துறைவன் -மாயன் -வற்றிக் கொடுத்த ஆச்சார்யம் ஜானுமாத்ரம்–ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை மாயனை -ஜிம்பா பூதம் -அம்பா நவநீதம் -அதி ரம்யம் -குமு குமு வர-நெய் உண்ணோம் பால் உண்ணோம் -பிறந்த பின் பெற்று அறியோம் –
தாயை குடல் விளக்கம் செய்த மாயனை -தேவகி யசோதை–என்ன நோன்பு பெற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –
எந்தையே -உந்தை யாவன் என்று உரைப்ப -தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் —சர்வ லோக பிதா புத்ரனான மாயம்
மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்–அவன் மகன் தன் காதல் மகனை –நெஞ்சே
என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் —தாமோதரனை மாயனை —எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
ஸ்ரீ பாஷ்யம் 4-4- சம்பத்ய -அடைந்து – -ஸ்வேன சப்தாத் -அஸ்மத் சரீராய
சம்பத்ய உபசம்பத்ய பரஞ்சோதி ஸ்வேன ரூபேண விகசித்து அடைகிறான் மலர்ந்து அடைகிறான் -இயற்க்கை ஆவிர்பாவம் -புது உருவம் பூர்வ பஷம் -ஸ்வரூபம் தான் விகாசிக்கும் -ஸ்வேன ரூபேண ஸ்வ ரூபேண -அர்த்தம் கிட்டும் -இயற்கையால் நாம் ஞானி சேஷன்-
மாற்றி அறிய வைத்து இருப்பதே மாயன்-அக்கரை என்னும் அனர்த்த கடலில் —உன் பேர் அருளால் -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் –
ஸுகரம் அருளிய ஸுகரம்
தத் விஷ்ணோ -விச்நோர்யா பரமம் பதம் –மாயனை -தாமோதரனை–தூ மலர் தூவித் தொழுது -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பு போலே –பாபங்கள் வாள்களாக நாள்கள் செல்ல என் நினைந்து போக்குவர் இப்போது -ஆழ்வார்
ஸ்வதர சமஸ்த சேதன விலஷண–அகில ஹேய பிரத்யநீக–கல்யாண குணை ஏக–உபய விபூதி நாதன்-திவ்ய மங்கள விக்ரஹன்–அமலன் -விமலன் நிமலன் நின்மலன் —விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்–மாயன் தாமோதரன் –
ப்ரஹ்மம்-ஒன்றே அத்வைதம் —ரெங்கராஜ முனி உபநிஷத் பாஷ்யம் –
வேதம் உள்ளவற்றை எடுத்துக் கொடுத்தார்கள் மூவரும் வைதிகர் வைஷ்ணவர் வேதமே பிரமாணம்–அந்தர் ஜுரம் -சுருதி ஸ்மரதி போக்கி -ராமானுஜர் –
அநிர்வசனீயம் -விளக்க முடியாத ப்ரஹ்மம் -சங்கரர் —கண்ணனை கூவூமாறு அறிய மாட்டேன் ஆழ்வார் –
உருவம் இல்லாத படியால் குணம் அற்ற படியால் -விபூதி இல்லை -பிறப்பு இல்லை -சங்கரர் –
ஞானம் ஒன்றே சொல்லி தான் -ஞானம் உடையவன் என்றும்–ஞானம் -அறிவு அறிவாளி அறியப்படும் பொருள் மூன்று இல்லை –
தீ என்கோ -சுடர் இரண்டும் எனக்கோ-கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்–எப்படிப்பட்டவன் =சொல்லி எப்படிப்பட்டவனும் ஆவான்
ஆழ்வார் -மாயம் ஆச்சர்யம்–எதுவாகவும் இல்லை அதனால் சொல்ல முடிய வில்லை சங்கரர் -மாயம் பொய்
ஆண்டாள் மாயனை -மன்னு வடமதுரை மைந்தன்–தாமோதரனை –
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் -வஸ்து இல்லை சொல்ல வில்லை -சர்வ சூன்ய வாதம் இல்லை
புருஷோத்தமன் -அல்ல சொல்ல வில்லை அல்லன் -அன் விகுதி ஆண் விகுதி சொல்-
கம் ஆகாசம் சுகம் -பரமாசகம் சுக ஸ்வ ரூபம் மோத ஆமோத சம்மோத பிரமோத -தேஜோ மாயம் -பரம சத்வ மயம் -துருவம் யது ஆனந்த கந்தம்
அதி சுந்தரம் அத்புதம் -கூரத் ஆழ்வான் –
தூயோமாய் வந்து நாம் –
அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே–இருந்தபடியே வந்து இருந்தபடியே–வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இ றே
ஸ்ரீ மான் என்றது இ றே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
வந்த நாம்
அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து–முறை கெட வருவான் என் என்னில்–உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே
உபேயத்தில் த்வரை ஊரை பார்த்து இருக்க ஒட்டாது இ றே
தூ மலர் –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும்–சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்–அநந்ய பிரயோஜனமான பூ வி றே
மலர் –
யோக்கியம் என்றும் அயோக்கியம் என்றும் பாராதே–கண்ணுக்கு தோற்றின மலர் என்றுமாம் –
தூவி
அடைவு கெட பரிமாறி–பிரேமம் அடைவு பார்க்க ஒட்டாது இ றே
தொழுது
அவனுக்கு பொறுக்க ஒண்ணாத படி அஞ்சலியைப் பண்ணி–அவனைத் தொழுவித்துக் கொள்ளும் அவர்கள் இ றே தொழுகிறார்கள்
பித்ராதிகளுக்கு அடைவு கேடு என்று தோற்றாதபடி அஞ்சலி பண்ணுகிறார்கள் -என்றுமாம்-
தெற்கு ஆழ்வான் கோளரி ஆழ்வான் ஐதிகம்–விபீஷணன் கடலில் முழுகாமல்–அர்ஜுனன் நீசர் நடுவில்-பிரபதிக்கு சுத்தியும் தேட வேண்டா–அசுதியும் சம்பாதிக்க வேண்டா–நின்ற நிலையில் அமையும்
சுத்தியாக நினைப்பது ராம சம்பந்தம்–பாவனம் -ஆக்கி பெருமாள் கடாஷமே —அநந்ய பிரயோஜனம் -தூய்மை
வந்து –
அவன் வர இருக்க–இட்ட நாலு அடிக்கும் புண்படுவான் ரிஷிகள்
விபீஷணன் வந்த தூரம் -பெருமாள் பரமபதம் -வந்த தூரம் தெரியாமல் பதறி துடிக்க
உபாயத்தில் துணிவு–உபேயத்தில் துணிவு செய்யப் பண்ணும்
மிக்க சீர் தொண்டர் இட்ட பூ–கள்ளார் துழாயும் கனவலர் பூ -அலறி பூவும் திரு துழாயும் சேர்த்து–புள்ளாய் ஓர் ஏனமுமாய் கோரைக் கிழங்கு அமுது செய்து
பக்தி ஒன்றே–பொருளின் தாரதம்யம் பாராமல்–இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்த்து —அச்னாமி -பத்ரம் புஷ்பம் தோயம் -வாரி விழுங்குதல்
வாயினால் பாடி –
1-வாய் படைத்த லாபம் பெற்றோம் என்று திரு நாமத்தை சொல்லி –-2–மனஸ் சஹகாரம் இன்றிக்கே -என்றுமாம்
3-வருவதற்கு மேலே–சொல்லுவதும் செய்தோம் -என்னவுமாம் –
மனத்தினால் சிந்திக்க –
1-மனஸ் ஸைப் பெற்ற லாபம் பெற்றோம் என்று –-2–மனஸ் அடியாக வரக் கடவ உக்தியும் வ்ருத்தியும் தவிர்ந்து
தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -என்று–தனித் தனியே கரணங்கள் மேல் விழுந்த படியை சொல்லுகிறது –
சுருதி கிரமேண் அன்றிக்கே மனஸ் க்கு முன்பே தொழுகையும் பாடுகையும்
தொழுது பாடி சிந்திக்க முக் கரண வியாபாரங்களும்
தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க—ஆற்றாமை மிக்கு க்ரமம் மாறி —பாடுகைக்கும் தொழுவதற்கும் முன்பே சிந்திக்க வேண்டுமே-
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் ––உத்தர பூர்வாகங்கள்–தீயினில் தூசாகும் ––நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்
தூசு -பஞ்சு–பாலும் கண்ட சக்கரையும் குடிக்க பித்தம் தன்னடையே போம் போலே–பகவத் அனுபவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக் குவை போலே
உரு மாய்ந்து போம்
செப்பு –
சொல்ல அமையும் என்கை
பூர்வாகம் ஆவது அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்தவை
உத்தராகமாவது -பகவத் ஞானம் பிறந்தால் பிரகிருதி வாசனையாலே ப்ராமாதிகமாக பிறந்தவை –
க்ருத யுக ஓங்கி உலகளந்த – த்ரேத யுக சார்ங்கம் உதைத்த -பெருமாள் – விபவம் துவாபர யுக கிருஷ்ணன் -வடமதுரை மைந்தன்-அவதாரம் அடைவு கெடாமல் அருளி-மன்னு-வடமதுரை மைந்தன் -மதுரையார் மன்னன் -பெயரில் அதி விருப்பம் –
நதியைத் தாண்டும் பழக்கம் மாறாத -மாயன் -விரஜா /யமுனை /
சரயு -ஆற்றங்கரையிலே வாசம் -பக்தர்கள் உடன் அனுபவம் -பாதேயம் -பக்தர்கள் உணவு –காவேரி -நாமும் தாண்டி சென்று சேவித்து வரும்படி வைத்தான்
ஆனை காத்து ஆனை கொன்று –மாயன் –தூயோமாய் வந்தோம் -தூய்மை மேலும் 15 வரும் -இரண்டு தூய்மை –
தசரதன் -ஆபாச தர்மங்கள் -விடச் சொன்னதை பற்றி – மாம் ஏகம் -என்னைப் பற்று -என்றதை விட்டான் -மோஷம் பலம் இழந்து ஸ்வர்க்கம் -போனான்
இதுவா தூய்மை —அடைய புண்யம் ஹேதுவாகாதாப் போலே பாபமும் விலக்கு அன்று -அவன் சம்பந்தமே ஏற்றம்
மாயன் -பரத்வம் -மதுரை மைந்தன் விபவம் துறை -வ்யூஹம் விளக்கு -அந்தர்யாமி -தாமோதரன் -அர்ச்சை
விளக்கு —-பரம பதம் சத்தா மாதரம் -சர்வரும் சாம்யம் -பகல் விளக்கு அங்கு -பகல் விளக்காக பரஞ்சுடர் –
வெம் கதிரோன் குலத்துக்கு ஒரு விளக்கு கொஞ்சம் -பிரகாசத்வம் -இங்கே ஆயர் குலத்தில்- அணி விளக்கு ஆனார்
-இடக்கை வலக்கை அறியாதவர்கள் நடுவில் -பர்வதம் பரமாணு -வாசி இல்லாமல்
தூயோமாய் வந்து -ஆஜகாம கதா பாணி -போய் இல்லையே அங்கும் -இக்கரை அக்கரை-ஆழ்வார்கள் -நிலை யன்றோ –
அநந்ய பிரயோஜனத்வம் தூய்மை –ப்ரீதி காரித கைங்கர்யத்துக்கு சங்கோச விச்சேதங்கள் உண்டாக்கும் புத்தி பூர்வாக அபராதங்கள் பிரபன்னனுக்கு –
குருபரம்பரா அனுசந்தானம் -பூர்ணம் பூர்வகமாக -ஆசார்யரை-ஆஸ்ரயித்து--கீழே பிரார்த்தித்து -இங்கே குரு பரம்பரை அனுசந்தானம்-
மாயன் -சடகோபன் -அத்யந்த விலஷணர் அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் –மூன்றாம் விபூதி -ஆழ்வார் –
தாம் தம் படியார் -பிராட்டிமாரும் அவனும் இவர் படி அறியான் -அவன் அருளிச் செய்த மதி நலம் அருளியது -இப்படி முன்பு பலித்தது காணாமையால்
-வடமதுரை மைந்தன் நாதமுனிகள் -அங்கே பல சிஷ்யர்கள் –யமுனைத் துறைவன் -ஆளவந்தார் –-யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் -தீர்த்தர் -தூய பெருநீர்
ஆயர் -ஆராய்ந்து மத ஸ்தாபனம் ஆயர் பேராயர் சப்தம் -ஆய்ந்து உரைப்பவர்கள் ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ கீதை –அணி விளக்கு ஸ்ரீ பாஷ்யகாரர் -தாமோதரன் -தேசிகன் -/மா முனிகள்
ஐந்து ஆசார்யர்களை சொல்லி -மேலே அஹம் ஜனார்த்தனன் சாஸ்த்ராத்ராத்-பக்த்யா -சுத்த -வியாசர் மூலம் -சுத்த பாகம் – வேத்மி -சஞ்சயன்
–ஆசார்யர் மூலம் -வந்ததே மனத்தூய்மை -தூ மலர் தூவித் தொழுது -அஹிம்சா பிரதமம் புஷ்பம் –அத்யந்த ப்ரீதி ஆந்தர புஷ்பங்கள் -நாடாத மலர் நாடி
நாடிப் பெற வேண்டாமே -எண்பகர் பூ -ஆத்ம குணங்கள் –வாயினால் பாடி -குரு பரம்பரை தனியன்கள் மனத்தினால் சிந்திக்க
-முக்கரணங்களால் ஆசார்யர் போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் -ஆசார்யர் அபிமானமே உத்தாரகம் –புகுதருவான் -அபுத்தி பூர்வகமாக பின்பு செய்வனவும்-
மாயனை மன்னு வடமதுரை மாயனை -ஆயர் பாடிக்கு அணி விளக்கு
ந்ருபசு–வ்ருத்த்யா பசுர் நரவபு-பசு ப்ராயர்கள் அச்மதாதிகள் வர்த்திக்கும் இருள் தரும் மா ஞாலம் -தோன்றிய ராமானுஜ திவாகரர் -அச்யுத பானு போலே
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர –என்னக் கடவது இ றே-
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாதார்-முன்னுரை /வேதம் வல்லார்கள் – பாகவத திருப்பள்ளி எழுச்சி -ஐந்தில் விடிந்தமைக்கு அடையாளம் -ஐந்தில் இல்லாமை / விண்ணோர் -ஸ்தானம் அடுத்த ஐந்தும் /நேராக அவனையும் /அவா அற சூழ்ந்தமையும் -உண்டே -இவ்வாறு ஐந்து ஐந்தாக வகுத்த பாசுரங்கள் வகுப்பு மட்டும் இல்லை –
1–ஐந்தும் -பர வ்யூஹ விபவ -திரு விக்ரமன் -ராமன் கிருஷ்ணன் -அந்தர்யாமி-ஐந்தும்/ 2-அர்ச்சா / அர்த்த பஞ்சகம் -என்ற ஐந்தும் –நாராயணனே / நமக்கே -/ பறை / தருவான் -நான்கே வார்த்தைகளில் –
3-செய்யும் கிரிசைகள் ஐந்தும் -பரமன் அடி பாடி / நாட் காலே நீராடி -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி –4-செய்யக் கூடாத கிரிசைகள் -நெய் உண்ணோம் பால் உண்ணோம் மை இட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் -செய்யாதன செய்யோம் தீக் குறளை சென்று ஓதோம் –
5-சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் / வையத்து வாழ்வீர்காள் /ஓங்கி வள்ளல் பெறும் பசுக்கள் –நீங்காத செல்வம் நிறைந்து / வாழ உலகினில் பெய்திடாய் /போய பிழையும் –தீயினில் தூசாகும் –
6-மாயனை –தாமோதரனை -ஐந்தும் -ஒரே பாசுரத்தில் -அருளிச் செய்கிறாள் -க்ஷேத்ரம் தீர்த்தம் -மஹாத்ம்யம் -தொண்டைக் குலம்/ தாயை குடல் விளக்கம் -நம் போலே இருந்து நம்முடன் கலக்க -/தாமோதரன் -ஐந்து வித விசேஷணங்கள் கண்ணனுக்கு -ஒரே பாசுரத்தில் உண்டே –
பிழை மாயும் மாலை-சாற்றி அருளுகிறாள்-
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தத்ததிகம உத்தர பூர்வாகயோர் அச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் -ப்ரஹ்ம ஸூதரம்–உபநிஷத் -பூர்வ பாவம் உத்தர பாவம் நிர்த்தேசம் சொல்லாமல்
தத்யதா இஷிக தூலம் அக்னௌ ப்ரோதும் ப்ரோதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வ பாப்மான ப்ரதூயந்தே -என்று விநாசம் சொல்லி
யதா புஷ்கரபலேசா ஆபோ நா ஸ்லிஷ்யந்தே ஏவம் விதி பாபம் ந கர்ம ச்லிஷ்யதே -என்றும்
தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேன-என்றும்–பாபங்கள் ஒட்டாது என்பதை
சேர்த்து ப்ரஹ்ம சூத்ரத்தில் ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமிகள் அருளிச் செய்கிறார்
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்பகோடி சதைரபி -அனுபவித்தே கர்மங்களை தீர்க்க வேண்டும் என்றும்
ப்ரஹ்ம வித்யையினால் கூடும் என்றும் சாஸ்திரம் சொல்லுமே–நெருப்பு சுடும் தண்ணீர் அணைக்கும் போலே-நெருப்பு பிரபாவம் ஜலம் இல்லாத இடத்தில் -பகவத் கிருபை நீர் போலே பாபங்களை நெருப்பை அழிக்கும் –உயர்ந்த வேதாந்தார்த்தம் –
யானி நாமானி கௌனானி குண பூதாக வாசகம் திரு நாமங்கள் -மாயன் -அவனாலும் திருத்த ஒண்ணாத -ஆசார்யர்கள் ஆச்சர்ய சக்தர்கள்-அவன் நாடு கடத்த முடியாத கார்யம் செய்த அரசன் கதை –
இந்த வேதாந்த விழுப் பொருளை தாம் ஆண்டாள் அருளிச் செய்கிறார்-
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply