ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
————————————————————————
முதல் பாகம் -அர்த்த அநு சாசனம் பாகம் -1-22-அத்யாயங்கள் –
இரண்டாம் பாகம் -ஸ்த்திரீ கரண பாகம் -23/24/25/26 அதிகாரங்கள் –
—————
அதிகாரம் -23 -சித்த உபாய சோதன அதிகாரம் –
யுகபத் அகிலம் ப்ரத்யஷேண ஸ்வத சததம் விதன்
நிரவதி தயா திவ்ய உதன்வான் அசக்ய விவர்ஜித
ஜலதி ஸூ தயா சார்த்தம் தேவோ ஜகத் பரிபாலயன்
பரமபுருஷ சித்தோபாய ப்ரதீஷ்ட பர சதாம் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த ஷேத்ரஜ்ஞன் அவசர ப்ரதீஷையான பகவத் கிருபையாலே புரிந்து
சமீசீன சாஸ்திர முகத்தாலே தத்வ ஹித புருஷார்த்த விசேஷங்களைத் தெளிந்து –
முமுஷூவாய் -ஸ்வ அதிகார அனுரூபமாய் இருப்பதொரு உபாய விசேஷத்தை பரிக்ரஹித்து க்ருத க்ருத்யனாய்
தன் நிஷ்டியைத் தெளிந்து -அதுக்கு அனுரூபமாக இங்கு இருந்த நாள்
யதா சாஸ்திரம் நிரபராதமாய்ப் பண்ணும் கைங்கர்ய ரூப புருஷார்த்தம் இருக்கும் படியும்
சரீரபாத அநந்தரம் அர்ச்சிராதி கதியாலே அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்றால் இவனுக்கு
அநவிச்சின்ன பகவத் அனுபவ பரிவாஹமாக வரும் பரிபூர்ண கைங்கர்ய ரூப பரம புருஷார்த்த சித்தி
இருக்கும் படியும் சொன்னோம் –
இவ் வர்த்தங்களில் ஜ்ஞாதவ்யமான சித்த உபாயத்தைப் பற்றவும் -சித்த உபாய விஷயமாகவும் –
இவ் உபாய பிரபாவ விஷயமாகவும்
கர்ம வஸ்யருக்கு கடுக தெளிவு பிறவாமைக்கு ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரன் இவர்களுடைய பூர்வ அபராதத்தாலே
இட்ட நினைப்பு ஈடுமாறுகைக்கு பிரதான காரணம் மூன்று உண்டு -அவை எவை என்னில்
1-அஸ்து மே என்று அபேஷித்தால்-அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ச்யதே -என்கிற திரு முகப் பாசுரமும் –
2-சதாசார்யா அனுக்ரஹமும் –
3-சத் சம்ப்ரதாய சித்தியும் –
இவற்றில் சதாசார்ய அனுக்ரஹத்துக்கு வ்யாஜ்யங்களும் –
இதின் பல விசேஷங்களும் -பராசர மைத்ரேய சஞ்ஜய ஆச்வலாயநாதி வ்ருத்தாந்தந்களிலே கண்டு கொள்வது –
சத் சம்ப்ரதாய சித்தி யாவது -தான் சத்த்வோத்தரனாய் சம்யகுபசன்னனாய் சாவதாநனாய் இருக்கும் அவஸ்தையிலே
க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் காருண்ய பரதந்த்ரனான சதாசார்யன்
சர்வருக்கும் பிரதம ஆசார்யனான சர்வேஸ்வரன் முதலாக உபதேச பரம்பரையாலே வந்த தத்வ ஹிதங்களை
அநபேஷித விஸ்தரமும் அபேஷித சங்கோசமும் இல்லாதபடி
சர்வேஷாமேவ லோக நாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா –என்கிற
கட்டளையிலே உபதேசிக்கப் பெறுகை-
பஹூ க்லேசமாய் புத்தி சலன சம்பாவனை உண்டான சாஸ்திர பரிக்ரமத்தில்
அநாதி க்ருதருமாய் -பரமாஸ்திகருமாய் இருப்பாருக்கு இவ் வுபதேசமே பிரதானம் –
மற்று உள்ளாருக்கு தாங்கள் தெளிகைக்காகவும்
குதர்க்கங்களாலே கலக்குவாரைத் தெளிவிக்கைக்காகவும்
சமீசீன யுக்திகளோடு கேட்க பிராப்தம் –
ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத சாஸ்த்ரா விரோதி நா
யஸ் தர்க்கேணா நு சந்தத்தே ச தர்மம் வேத நேதர -என்கிறபடியே
இவ்வர்த்தங்களை சமீசீன தர்க்கங்களாலே தெளியாதவர்கள் காணாத
சாக்ய பாஷண்ட த்ரயீ தர்மோ விலோபித -என்கிறபடியே
ஹை துக்கராய் வேத விரோதி தர்க்கங்களை இட்டு பிரமாணிக அர்த்தங்களை அபஹரிப்பவர்கள் –
இவ் வபஹாரம் விபூதியையும் விபூதி மானையும் பற்ற இரண்டு வகையாக இருக்கும் –
அதில் விபூதிமானை அபஹரிக்கை யாவது –
1- ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனை இல்லை என்னுதல்-
2- வேறு ஒருவனை ஈஸ்வரனாகக் காட்டி சர்வேஸ்வரனை விபூதி கோடியிலே வைத்தல் -செய்கை –
விபூதியை அபஹரிக்கை யாவது –
1- விபூதியை ஒரு முகத்தாலே இல்லை என்னுதல் –
2- உண்டாக்கி ஈச்வரனோடு சம்பந்தம் அறுத்து ஸ்வ தந்த்ரம் என்னுதல் –
3-பர தந்த்ரமாக்கி தன்னோடு பிறரோடு புணைப்புதல் செய்கை –
இவ் வபஹாரங்களில் ஏதேனும் ஓன்று ஸ்வரூபத்தில் ம்ருது பிரஜ்ஞனாய் ஆத்ம சமர்ப்பணம் பண்ணினவனுக்கு
விபரீத சம்சர்க்கத்தாலே வருமாகில்
தத் தஸ்ய ஹரணேன ச என்கிற அபஹாரத்திலும் கொடியதாய்
களவு கொண்டு கொடுத்த த்ரவ்யத்தை மீண்டும் களவு கொள்வது போலே யாகும் –
ஆகையாலே பஹூ விதமான வ்யோமோஹ காரணங்களில் ஹை துக்க சம்சர்க்கம் போரப் பரிஹரணீயம் –
இவ்வர்த்தத்தை –
பாஷாண்டி நோ விகர்மஸ்தான் பைடால வ்ரதிகான் சடான் ஹைதுகான் பக்வ்ருத்திம்ச்ச வாங்மாத்ரேணாபி நார்சயேத்
டம்பி ஹைதுக பாஷண்டி பக்வ்ருத்திமச்ச வர்ஜயேத் நாசப்தி கிஞ்சி தாசரேத் த்யஜ துர்ஜன சம்சர்க்கம் வரம் ஹைதுவஹ
ஜ்வாலா பஞ்சராந்தர்வ்ய வஸ்திதி ந சௌரி சிந்தா விமுக ஜன சம்வாசவை சசம் -இத்யாதிகளாலே பிரபஞ்சித்தார்கள் –
இந்த ஹைதுகரோட்டை -சம்பாஷணம் மாயயா அபஹ்ருதஜ்ஞாநா -என்கிறபடியே
கண்டு மதி கெட்டானாகி-சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ருதா -என்று
ஈஸ்வரன் நம்முடையவர்கள் என்னும் நாலு வகையிலும் கூடாதே –
அளியல் நம் பையல் -என்னாதபடி பண்ணி
ந மாம் துஷ்க்ருதி நோ மூடா ப்ரபத்யந்தே -என்கிற பகவத் அபிமான பாஹ்ய வர்க்கத்திலே கோப்புண்ணப் பண்ணும் –
அசரண்ய சரண்யனான சர்வேஸ்வரனை சரணமாகப் பற்றுகிற பரமாஸ்திகனுக்கு சிலரோடு சேர்த்தியால் பாஹ்யதை வாராது ஆகிலும்
அவனுக்கு கலக்கங்கள் வரவும் -அதுக்கு சதாச்சார்யர்கள் பரிஹாரம் பண்ணவும் காணா நின்றோம் –
மஹ ரிஷிகளும் –
ஏகம் எதி பவேச் சாஸ்திரம் ஜ்ஞானம் நிஸ் சம்சயம் பவேத் –பஹூத் வாதிஹ சாஸ்த்ராணாம் ஞான தத்வம் ஸூ துர்லபம் -என்றும்
நிஸ் சம்ச்யேஷூ சர்வேஷூ நித்யம் வசதி வை ஹரி –ச சம்ச்யான் ஹேது பலான் நாத்யா வசதி மாதவ -என்றும் -சொன்னார்கள் இறே –
ந க்ரோதோ ந மாத்ஸ்சர்யம் லோபோ ந சுபா மதி -இத்யாதிகளும் ஆத்ம குண பரிபூர்ண அதிகாரி விசேஷ விஷயத்திலே ஆகக் கடவன் –
ஆன பின்பு ஆரூரூ சஷூஸ் ஸூக்களுக்கு கலக்கம் உண்டு என்னும் இடம்
ஸ்ரூயதே கில கோவிந்த பக்தி முத்வாஹதாம் ந்ருணாம்
சம்சார ந்யூனதா பீதா த்ரிதசா பரிபந்தின -என்றும்
சத்யம் சதேன விக்நாநாம் சஹஸ்ரேண ததா தப
விக்னா யுதேன கோவிந்தே ந்ருணாம் பக்திர் நிவார்யதே –இத்யாதிகளிலே பிரசித்தம் –
அதில் முற்பட சித்தோ பாயத்தைப் பற்ற வரும் கலக்கங்களும் அவற்றின் பரிஹாரங்களும் சொல்கிறோம் –
அநாதி காலம் அநாதரித்த ஈஸ்வரன் இன்று ஒருத்தனை ஆதரிக்கிறது தன் ஸ்வ தந்த்ர மாத்ரத்தாலே அன்றோ -இங்கன் அன்றாகில்
இன்று என்னைப் பொருளாக்கி என்னை தன்னுள் வைத்தான் -அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது
என் செய்வான் -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய
சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின -இது ஒழிய வேறு ஒரு உத்தரம் அருளிச் செய்தானோ –
ஆகையால் நாம் ஒரு உபாய அனுஷ்டானம் பண்ணுகை என் என்பது –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்கிறபடியே
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து அவன் தானே ரஷித்த போது காணும் அத்தனை அன்றோ
என்று சிலர் கலங்குவார்கள் –
இவர்களைத் தெளிவிக்கும் படி –
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரனே யாகிலும் -வைஷம்ய நைர்க்ருண்யங்கள் ஆகிய தோஷங்கள் தனக்குத் தட்டாமைக்காக –
இவன் பக்கலிலே ஒரு வியாஜத்தை உண்டாக்கி-அத்தை அவலம்பித்து -தான் ரஷிக்கும்-இவ் வர்த்தத்தை
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் என்று
ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் –
இந்த வ்யாஜம் தானும் ஈஸ்வரன் தன்னாலே யாகில் இத்தை முன்பே உண்டாக்காதே விட்டது என் என்னில்
இவ் வாத்மாக்களுக்கு அநாதியான கர்ம பிரவாஹங்கள் விஷம விபாக சமயங்களாய் கொண்டு போருகையாலே ஈஸ்வரன்
கர்ம அநுரூப பலப்ரதன் அல்லாத போது வைஷம்ய தோஷம் வருகையாலே
முன்பு இதுக்கு அவசரம் ஆயிற்று இல்லை என்னும் இடம் கார்ய விசேஷ தர்சனத்தாலே கல்பிதம் –
இங்கன் இசையாத போது சர்வ சித்தாந்திகளுக்கும் இதுக்கு முன்பு இல்லாத மோஷ ஸ்ரத்தாதிகள் இப்போது
பிறக்கைக்கு அடி என் என்றால் உத்தரம் சொல்ல விரகில்லை-
அநாதி கர்ம ப்ரவாஹ வைசித்ரயத்தாலே என்னும் உத்தரம் ஈஸ்வரனை இசைந்தார்க்கும் துல்யம்
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் ஒரு வ்யாஜத்தைக் கொண்டு அவன் நினைத்த போதே ரஷிக்கைக்கும் –
விலக்க வல்லார் இல்லாமைக்கும் உறுப்பாம் –
இப்படியானால் -இன்று என்னை -என்கிற பாட்டுக்கும் இதுக்கு மூலமான வசனங்களுக்கும் நிர்வாஹம் என் என்னில் –
அது சொல்லுகிறோம் –
ஈஸ்வரனுக்கு சஹஜங்களான-ஸ்வா தந்த்ர்ய காருண்யங்களினுடைய ப்ராதான்யத்தாலே இவற்றுக்கு
வ்யாஜ பூதங்களான விசேஷ காரணங்களை அநாதரித்து-
பண்டு என்னை பராங்முகன் ஆக்கைக்கும் இன்று என்னை அபிமுகன் ஆக்கைக்கும்
உன் ஸ்வா தந்த்ர்யமும் கிருபையும் ஒழிய வேறு ஒரு பிரதான காரணமும் கண்டிலேன் –
எனக்குக் காட்டாதே ஸ்வதா சர்வஜ்ஞனான நீ கண்டது உண்டாகில் அருளிச் செய்ய வேணும் என்ன
ஈஸ்வரன் நிருத்தனாய் இருக்கும் இருப்பிலே ஸ்வா தந்த்ர்ய கிருபைகளினுடைய பிரதான்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார்
இத்தால் -இச் சேதனனை லீலா உபகரணம் ஆக்குகைக்கு பிரதான காரணம் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்
இதுக்கு சஹகாரி காரணம் ப்ரவாஹ அநாதியான ஸ்வ தந்திர அஜ்ஞாதி லங்கனம் –
இவனை போக உபகரணம் ஆக்குகைக்கு பிரதான காரணம் ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக காருண்யம்
இதுக்கு பிரதிபந்தகமான ஈஸ்வர நிக்ரஹத்தை சமிப்பித்துக் கொண்டு சஹகாரி காரணம் என்று பேர் பெற்றது –
இவனுடைய ஸூஹ்ருத விசேஷ த்வாரக கிருபை அடியாக வந்த வசீகரண விசேஷங்கள் என்று
ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தையும் வைஷம்ய நைர்க்ருண்யங்கள் இல்லாமையும் -பந்த மோஷாதி வ்யவஸ்தையையும்
பிரமாண பிரதி நியதமான படியாலே அனுசந்தித்து ஸ்வ தந்த்ரனுடைய கிருபையிலே ஊன்றிப் போர விடுக்கும் என்று கருத்து –
நிஷ் க்ரூபனுடைய ஸ்வா தந்த்ர்யம் பாதகம் –அஸ்வதந்தரனுடைய காருண்யம் பரர்க்கும் அநுபகாரகமாய் தனக்கும் கிலேசாவஹமாய் இருக்கும் –
ஸ்வ தந்த்ரனுடைய காருண்யம் நினைத்து முடிக்கையாலே தனக்கும் அதிரசமாய் ஆஸ்ரயிப்பார்க்கு எல்லாம் அன்றே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் உடலாய் இருக்கும் –
இப்படி ஆகையாலே அவதார தசையிலும் வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
இப்புடையில் சொல்லுமவை எல்லாம்
அனுக்ரஹ விஷயமாய் இருப்பார் சிலரை ரஞ்ஜிப்பைக்கும் அஸூர பிரப்ருதிகளை மோஹிப்பிக்கைக்காகவுமாக இத்தனை –
இவ்வர்த்தத்தை –
காலஸ்ய ஹி ச ம்ருத்யோச்ச ஜங்கம ஸ்தாவரச்ய ச
ஈசதே பகவா நேக சத்யமேதத் ப்ரவீமி தே
ஈசன்நபி மஹா யோகீ சர்வச்ய ஜகத பிரபு
கர்மாண் யாரபதே கர்த்தும் கீ நாச இவ துர்பல
தேன வஞ்சயதே லோகன் மாயா யோகேன கேசவ
யே தமேவ ப்ரபத்யந்தே ந தே முஹ்யாந்தி மா நவா -என்றும்
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருதுலோசன
மோஹயித்வா ஜகத் சர்வம் கத ஸ்வம் ஸ்தான முத்தமம் -என்றும்
மனுஷ்ய தேஹி நாம் சேஷ்டா மித்யேவமநுவர்த்ததே
லீலா ஜகத்பதே தஸ்ய சந்தத சம்ப்ரவர்த்ததே –என்றும் இத்யாதிகளிலே மஹ ருஷிகள் அறுதியிட்டார்கள்-
ஆகையால் அவதார வ்ருத்தாந்தங்களிலும் துக்காபி நயமாத்ரமே உள்ளது —
அது தானும் க்ருபா மூலம் -இது ஸ்வ தந்த்ரனான தனக்கு லீலையுமாய் இருக்கும் –
கூனர் குறளரை கொண்டாடி ரஷிக்கை நிரபேஷரான ராஜாக்களுக்கு நிலையுமாய் க்ருபா கார்யமுமாய் காணா நின்றோம் இறே –
இப்படி யாகையாலே இறே -உபாதத்தே சத்தா ஸ்திதி நியம நாத்யை-சிதசிதௌ ஸ்வ முத்திச்ச்ய ஸ்ரீமான் என்றது –
இப்படி பரஹித வியாபார ஆஸ்ரயம் ஆகையாலே ஆஸ்ரிதர்க்கு ரஷகனுமாய் உபாயாந்தர ஸ்தான நிவேசத்தாலே உபாயமுமாய் இருக்கும் –
ரஷண வியாபார பல ஆஸ்ரயம் ஆகையாலே -சேஷியுமாய் அதடியாக பிராப்யனுமாய் இருக்கும் –
இப்படி இருக்கை இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் என்று தார்மிக்ராஹக பிரமாண சித்தம் –
இப்படி ரஷகனான ஈஸ்வரனுக்கு பிரதானமான ஞான சக்தி கருணைகளில்-
ஞான சக்தாதிகள் நிக்ரஹ அனுக்ரஹ சாதாரணங்கள் -காருண்யம் அனுக்ரஹத்துக்கு அசாதாரணம் –
இங்கு காருண்யம் ஆவது பரஹித ப்ரவணதை-
இது த்ரிவித சேதனர்களுடைய சத்தா ஸ்திதிகளுக்கும்-அனுகூல வ்ருத்திகளுக்கும் –
நித்யருடைய நித்ய அனுபவத்துக்கும் -முக்தருடைய அநாவ்ருத்திக்கும்-
லீலா விபூதியில் சாமான்ய ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும்-ஸ்வ அவதார ரூபையான சுத்த சிருஷ்டிக்கும் –
சாஸ்திர ப்ரவர்த்தனத்துக்கும் -அதடியாக தத்வ ஹித விஷயமான ஞானத்தை பிறப்பிக்கைக்கும்-
மோஷ ஸ்ரத்தையை உண்டாக்குகைக்கும் -இது கொடுக்கைக்கு ச்யாஜ்யமான ஸூ க்ருத விசேஷத்துக்கும் –
அதிகார ரூபங்களான நிக்ரஹ சமன உபாயங்களைக் கொடுக்கைக்கும் –
இவற்றில் கரண பிரேரண தசையில் சஹகாரியாய் நிற்கைக்கும் –
உபாசகனுக்கு அந்தராயம் வந்தால் பிரதி சமாதானம் பண்ணுவிக்கைக்கும்-
அகிஞ்சனருக்கு உபாய ஸ்தானத்திலே நின்று நிரபாயமாக ரஷிக்கைக்கும் –
இவ் வ்யாஜங்களைக் கொண்டு பிரசன்னனாய் அநாதி காலம் பண்ணின அநந்த மஹா அபராதங்களை அநாதரித்து
அநந்த ஸூகத்திலே விஸ்ரமிக்கும் படி சம்சார நிவர்த்தனாகைக்கும் –
ஆர்த்த பிரபன்னருக்கு அப்போதே மோஷம் கொடுக்கைக்கும் –
இருந்த நாள் நிரபராதனாய் இருக்க வேணும் என்று பலம் கோல மறந்த த்ருப்த பிரபன்னனுக்கு
பிராரப்த கர்ம வசத்தாலே புகுந்த அபராதத்துக்கு
அனுதாபத்தை விளைப்பித்து அதிகார அனுரூபமான பிராயச் சித்த விசேஷத்திலே மூட்டுகைக்கும்
அங்கன் ம்ருது பிரக்ருதிகள் அல்லாதார்க்கு யம விஷய கமனமும் கோலின பலத்துக்கு பிரதிபந்தமும் வாராத படி பண்ணி
உப கிலேசங்களில் சிஷிக்கைக்கும் பிரதானமான சாமான்ய நிதானமாய் இருக்கும் –
இப்படிப்பட்ட கிருபா விசிஷ்டனான ஈஸ்வரன் கிருஷ்ணம் தர்மம் சநாதனம் -என்கிறபடியே சித்த உபாயம் –
இவனுக்கு பிரசாதங்களான பக்தி பிரபத்திகள் சாத்ய உபாயங்கள் –
ஒரு அதிகாரி விசேஷத்துக்காக கர்த்தவ்யமாக மாமேகம் சரணம் வ்ரஜ -என்று விதிக்கப் படுகிற
பிரபத்தியை அதிகாரி விசேஷணம் என்று சிலர் சொன்ன இடம்
அதிகாரி விசேஷத்துக்கு சேரும் லஷணத்தோடு சேராமையாலே அதிவாதம் –
இங்கன் அல்லாத போது ஈஸ்வரன் உபாயமாக நிற்க உபாச நாதி சாஸ்திரங்களும் அதிகாரி விசேஷணங்கள் ஆகும் –
ஆகையால் பிரபத்தியும் கூட உபாயம் அன்று என்று சிலர் அதிவாதம் பண்ணுகிற இதுவும்
சித்த உபாயத்தின் உடைய பிரதானம் அடியாக அத்தனை –
அது பிரதானமான படி பிரசாதங்களாலே பிரதிபந்தகமான நிக்ரஹம் சமித்தால் ஸ்வா பாவிக அனுபவத்துக்கு பிரயோஜகம் ஆகையாலே –
அது எங்கனே என்னில் ரத்னத்துக்கு அழுக்கு அற்றால் வரும் ஸ்வா பாவிகமான பிரபா விகாசமும்
அதுக்கு அனுரூபமான பகவத் சங்கல்ப மாத்ரத்தாலே யானால் போலே முக்தனுக்கு வரும் ஜ்ஞான விகாசாதிகளும் –
அதுக்கு அனுரூபமாய்க் கொண்டு வ்யவஸ்திதமான பகவத் சங்கல்பம் அடியாகவாய் இருக்கும் -இப்படி நித்யர்க்கும் –
இவ் வர்த்தத்தை -இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36 -என்று அபியுக்தர் சங்க்ரஹித்தார்கள் –
ஆகையால் சித்தோபாயம் பிரதானமே யாகிலும் தத் வசீகரண அர்த்தமான சாத்ய உபாய அனுஷ்டானத்துக்கு –
இன்று என்னை -இத்யாதி பூர்வாச்சார்ய வாக்ய விரோதம் இல்லை –
யோ மே கர்ப்ப கதஸ் யாபி வ்ருத்திம் கல்பித வான் பிரபு
சேஷவ்ருத்தி விதா நே அபி கிம் ஸூ ப்தஸ்ஸ அத வா ம்ருத-இத்யாதிகளும்
ரஷகாந்தரம் தேடாமைக்கு சொன்னவை யத்தனை-அல்லாத போது போஜ நாதி வியாபாரங்களும் தவிர வேணும் —
ஸ்வயம் ம்ருத் பிண்ட பூதஸ்ய பரதந்த்ரச்ய தேஹிந-என்றும்
ஆஜ்ஞோ ஜந்து ரநீச அயம் ஆத்ம நஸ் ஸூ க துக்கயோ
ஈஸ்வரோ ப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்க்கம் வா ச்வப்ரமேவ வா -என்றும்
அப்ரமேயோ அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ
மோததே பகவான் பூர்த்தை பால க்ரீடநகைரிவ-என்றும் சொல்லப்படும்
இத்யாதிகளில் ஜீவனுடைய பர தந்த்ர்யமும் ஈஸ்வரன் இவனுடைய கர்மாநுகுணமாக நடத்தும் படியும் சொன்ன இத்தனை –
இப் பாட்டுக்கும் இவ் வசனங்களுக்கும் இப்படி தாத்பர்யம் அல்லாத போது சர்வ சாஸ்திர விரோதமும் பூர்வ பர விரோதமும் வரும் –
இப்படி ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய சஹஜ காருண்யங்கள் அடியாக வரும் கலக்கங்களுக்கு பரிஹாரம் சொன்னோம் –
சம்பந்தம் விஷயம் அடியாக வரும் கலக்கத்துக்கு பரிஹாரம் சொல்லுகிறோம் –
ஈஸ்வரன் சேஷியாய் இருக்க -நாம் கர்ப்ப பூதஸ்த போத நா -என்னும் கணக்கிலே
ஸ்த நந்த்ய ப்ராயராய் இருக்க -தாய் முலைப் பாலுக்கு ஆர்த்தனாய் –
அழுதல் செய்யும் அளவன்றிக்கே -கூலி கொடுப்பாரைப் போலே
நாம் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்-ரஷிக்க வேணும் என்று அபேஷிக்கையும்-விஸ்வசிக்கையும்
என்றால் போலே சொல்லுகிற இவை எல்லாம் இவை எல்லாம் ஸ்வரூபத்துக்கு பொருந்துமோ என்று
சிலர் சித்தோபாய முகத்தாலே சாத்ய உபாய சரீரத்தை அழிக்கப் பார்ப்பார்கள் –
இவர்களை விலக்கும்படி பரமர்ஷிகளும் பாஷ்ய காராதிகளும்
விஸ்வாச பூர்வக ப்ராராத நாத்ம நிஷேபாதிகளை தாங்களும் அனுஷ்டித்து
இதுக்கு சாஸ்திரங்களையும் மூதலிப்பித்துக் கொண்டு உபதேச பரம்பரையும் நடத்திப் போருகையாலே
சேஷித்வாதி நித்யம் சம்பந்தம்
நித்யமே யாகிலும் கர்மவான்களான ஜீவர்கள் விஷயத்தில்
ஈஸ்வரன் ஒரு சாத்ய உபாய விசேஷத்தை முன்னிட்டு அல்லது ரஷியான் -என்று சாஸ்திர நிஷ்டருக்கு வேணும் –
சாஸ்த்ரத்தை கை விட்டால் இச் சம்பந்தம் சொல்லுகைக்கு ஈஸ்வரனும் கிடையாது –
ஆன பின்பு சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் ரஷிக்க ப்ராப்தன் என்றும்
சேஷ பூதனான இவன் தன்னை ரஷித்துக் கொள்ள ப்ராப்தன் அன்று என்று
முன்பு சொன்னதுவும் ரஷ்ய ரஷக பாவத்துக்கு லோக திருஷ்டி பிரக்ரியையாலே ஔசித்யம் சொன்னபடி இத்தனை –
இவ்வளவே ரஷைக்கு நிரபேஷ காரணம் என்றபடி அன்று -அப்படிக் கொள்ளில் சர்வரும் நித்ய முக்தராகப் பிரசங்கிக்கும்
ஸ்வா தந்த்ர்யத்தாலே நியமம் சொல்லில் முன்பு சொன்னபடி வைஷம்ய நைர்க்ருண்யங்கள் பிரசங்கிக்கும் –
யுக்தி மாத்ரத்தால் இவ்வர்த்தங்கள் சொல்லுவார்க்கு -சம்பந்த ஜ்ஞானமே அபேஷிதம்-
ரஷா பேஷாதிகள் வேண்டாம் -என்று சொல்ல ஒண்ணாது –
அசித் த்ரவ்யங்களும் பசு மிருக பஷ்யாதிகளும் ஸ்தநன்யரும் ரஷாபேஷா ரஹிதங்கள் ஆனால் போலே
சம்பந்த ஞான ரஹிதங்களுமாய் இருக்க -அவற்றை ரஷிக்க காணா நின்றோம் இறே-
அப்படி கண்டோம் ஆகில் சாஸ்திர பலத்தாலே இங்கே சம்பந்த ஞானம் அபேஷிதம் என்னில்
சாஸ்திரம் சொன்ன கட்டளையில் ஜ்ஞான விசேஷம் ஸ்வீகரிக்க வேணும் –
தன்னை ஈஸ்வரன் ரஷிக்கும் போது சம்பந்தத்தோடு கூட விலக்காமையே வேண்டுவது என்னில் அதுவும் அனுபபந்தம் –
ஸூ ஷூப்த்யாதி அவஸ்தைகளிலே எல்லாருக்கும் மோஷம் கொடுக்கப் ப்ராசங்கிக்கையாலே
தான் விலக்குகைக்கு யோக்யதை உள்ள அவஸ்தையிலே விலக்காது ஒழிகையே அபேஷிதம் என்னவும் ஒண்ணாது
விலக்குகைக்கு யோக்யதை இல்லாத அசித்தையும் -விலக்குகிற பச்சாதிகளையும் – புத்த்ராதிகளையும் ரஷிக்கக் காண்கையாலே –
ஆனபின்பு -யே நாதவந்தோ ஹி பவந்தி லோகே தே நாத்மகர்மாபி சமார பந்தே
தேஷாம் ஹி கார்யேஷூ பவந்தி நாதா சைப்யாதயோ ராம யதா யயாதே-என்கிற ஸ்லோகத்திலும்
நாத சப்தத்தில் வ்யுத்பத்தி யாலும்
நிர்பரதைக்கு உபயுக்தமான சம்பந்த விசேஷத்தைச் சொல்லுகிற மது ப்ரத்யயத்தாலும் –
யாசனமும் ஆத்ம நிஷேபமும் வ்யஞ்ஜிதம் ஆயிற்று –
அல்லாத போது அதி பிரசங்காதி தோஷங்கள் வரும் –
நாத வந்த -என்கிற இடத்தில் இத்தனை விவஷை கொள்ளாத போது லோக நீதியில் உள்ளது எல்லாம்
மோஷ சாஸ்த்ரத்தில் ஊஹிக்க வசன வ்ருத்தம்-
சர்வ ரஷகனான ஈஸ்வரன் உண்டாய் இருக்க ஸ்வ ரஷண வியாபாரத்தில் நமக்கு அந்வயம் இல்லை என்கிற
ஆப்தர் பாசுரத்துக்கு தாத்பர்யம் சொல்லுகிறோம்
யதர்த்தம் து க்ருதோ நியாச ததர்த்தம் ந புன க்ரியா
பூர்வமப்ய பராதீன ப்ரவ்ருத்தா வஸ்ய நான்வய -என்றபடி
யதா பிரமாணம் ஸ்வ ரஷண பர சமர்ப்பணம் பண்ணினவனுக்கு பின்பு ஸ்வ ரஷணார்த்த வியாபாரத்தில் ப்ராப்தி இல்லை –
முன்பு தானும் ஸ்வ ரஷணார்த்தமாகப் பண்ணின சமர்ப்பணாதி வியாபாரமும்
ஸ்வ கர்த்தாவான அவன் தானே பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவர்த்திப்பித்த கர்ம ப்ரவாஹ விபாக விசேஷத்தாலே —
வந்ததொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதாதி விசேஷ காரணத்தை முன்னிட்டுக் கொண்டு பண்ணுவித்தான் ஆகையாலே
நாமே நம்மை ரஷித்துக் கொள்கிறோம் என்று இருக்க ப்ராப்தி இல்லை –
சர்வ ரஷகனான மூல மந்த்ராதிகளிலே சிஷிதனான இவன் தானே நம்மை ஒரு உபாயத்திலே வ்யாபரிப்பித்து
அந்த வ்யாபாரத்தாலே பிரசன்னனாய் ரசிக்கிறான் என்று இருக்க பிராப்தம் –
ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்பரம்
ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வா ர்த்தம் ஸ்வ ஸ்மின் ந்யஸ் யதி மாம் ஸ்வயம் -என்ற இது
ஆத்ம சமர்ப்பண தசையில் க்யாதி லாப பூஜா பல சங்க கர்த்ருத்வ உபாயத்வங்கள் ஆகிற தூறல் அற்ற
பகவத் அனுசந்தானக் கட்டளை –
ஆகையால் தாய் முலைப்பால் போல் வருகிற ஈஸ்வர பிரசாதத்துக்கும்
ஸ்த நந்த்யனுடைய முலை யுண்கிற வியாபாரம் போலே இவனுடைய அபேஷாதிகள்-
இத்தால் சித்தோ உபாய ஸ்வரூபத்துக்குக் கொத்தை வாராது –
இப்படி நாராயண சப்தத்தில் சித்தமான
குண விசேஷ சம்பந்த விசேஷங்கள் அடியாக பிறக்கும் கலக்கங்களுக்கு பரிஹாரம் உதாஹரித்தோம் -இனி
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேசா தேவா காருண்ய ரூபயா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே –என்கிறபடியே
ச பத்நீகனாய்க் கொண்டு ஸ்வ ரஷண யஜ்ஞ தீஷிதனான சர்வேஸ்வரனுக்கு-ஸ்ரீ மத்-சப்தத்தாலே சொல்லுகிற
பத்நீ சம்பந்தத்தால் வரும் கலக்கங்களுக்கு திங் மாத்ரத்தாலே பரிஹாரம் காட்டுகிறோம் –
சிலர் த்வயத்தில்
பூர்வ கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தம் உப லஷண பரம் என்றும்
உத்தர கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தம் விசேஷண பரம் என்றும்
பிரியச் சொன்னார்கள் –
இவ்விடத்தில் சப்தம் ஏக ரூபமாய் இருக்க -ஸ்வா ரஸ்யத்துக்கு பாதகமும் இன்றிக்கே இருக்க
ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் பகவத இதம் இத்யாதிகளிலே பிரசித்தமான கூடஸ்த சம்ப்ரதாய விருத்தமாக
பண்ணுகிற இவ்விபாகம் அனுபபந்தம் –
அநந்ய உபாயத்வ விருத்தமான உபாய விதித்வ பிரசங்கம் இவ்விடத்தில் பாதகம் ஆனாலோ என்னில்
அநந்ய பிரயோஜனத்வ விருத்தமான ப்ராப்ய விதித்வ பிரசங்கத்தாலே உத்தர கண்டத்திலும் விசேஷணத்வம் தவிரப் பிரசங்கிக்கும் –
ஆனால் இரண்டு இடத்திலும் உப லஷணம் ஆனாலோ என்னில்
குண விக்ரஹ வியாபார விசேஷங்களுக்கும் இரண்டு இடத்திலும் உப லஷணங்களாகப் பிரசங்கிக்கும்
உப யுக்தங்கள் ஆகையாலே அவை விசேஷணங்கள் என்னில்
இது பூர்வ உத்தர கண்டங்களில் பத்நீ சம்பந்தத்திலும் துல்யம் –
உபயோக விசேஷங்கள் தத் தத் வஸ்துக்களுக்கு அனுரூபமான படியாலே பிரமாண சம்ப்ரதாயங்களிலே கண்டு கொள்வது –
வஸ்துவநுரூபமாய் இறே உபயோகம் இருப்பது –
உபாய உபேயபரமான வாக்யத் த்வயத்திலும் ஸ்ருதமான இவ் விசேஷணத்தின் உடைய உபயோக பிரயோகத்தை
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் -என்றும்
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -என்றும் நம்மாழ்வார் அருளிச் செய்தார் –
அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் சரணாகதி சாரமான ஆதி காவ்யத்திலே நிபந்தித்தான் –
சம்சார ஆர்ணவ தாரிணீம் -என்று ஹிரண்ய வர்க்க காச்யபாதிகளும் சொன்னார்கள் –
வாச பரம் ப்ரார்த்த யிதா பிரபத்யேன் நியத ச்ரியம்-என்று ஸ்ரீ சௌனக பகவான் விதித்தான் –
ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பல தாயி நீ -என்று வசிஷ்ட புலஸ்திய வரப்ரசாத லப்த பரதேவதா
பரமார்த்தய ஞானம் உடைய ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி அருளிச் செய்தான் –
விமுக்த பல தாயி நீ -என்கிற இது ஆத்ம வித்யா விசேஷணம் ஆனாலும்
தத் சாமா நாதி கரண்யத்தாலே அது இவளுடைய விபூதி யாயிற்று –
ஸ்ரீ யபதி தானும் -யாமாலம்ப்ய ஸூ கே நேமம் துஸ்தரம் ஹி குணோததிம் -நிஸ் தரந்த்ய சிரேணைவ
வ்யக்த த்யான பராயணா -என்று -ஸ்ரீ சாத்வத சம்ஹிதையிலே ஸ்ரீ பதி ரூப தானத்திலே அருளிச் செய்தான் –
தத் பரங்களான சாஸ்திரங்கள் நிற்க இம்மத்யச்த சாஸ்திரங்கள் அதி பிரபலங்கள் –
ஆளவந்தாரும் -ஜகத் சமஸ்தம் யதபாங்க சம்ச்ரயம் -என்றும் –
ஸ்ரேயோ ந ஹி அரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத்யதே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கஹிசித் -என்றும் அருளிச் செய்தார் –
ஸ்ரீ பாஷ்ய காரரும் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் –
சேஷ சேஷாச நாதிகம் சர்வம் பரிஜனம் பகவத -தத்த தவஸ் தோசித பரிசர்யாயாம்
ஆஜ்ஞா பயந்த்யா-என்று பகவத் கைங்கர்ய ரூப பரம புருஷார்த்தம்
இவள் நியோகத்தின் படியே நடத்த வேணும் என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ கூரத் ஆழ்வானும்-ஸ்ரீ ஸ்தவத்தில்
ஸ்வஸ்தி ஸ்ரீர்தி சதாத சேஷ ஜகதாம் சர்கோ பசர்கஸ் திதீ
ஸ்வர்க்கம் துர்கதி மாபவர்க்கிக பதம் சர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு நான்யதா அஸ்ய ரசதா ஸ்யாதை கரஸ் யாத்தயா-என்று சங்க்ரஹித்த அர்த்தத்தை
தேவி த்வன் மஹிமா வர்த்தின ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே -என்று தொடக்கி விஸ்தரித்தார் –
ஸ்ரீ பராசர பட்டர் -ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மை சித் அஞ்ஜலி பரம் வஹதேவி தீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜசே கதயக அயம் உதார பாவ -என்று சுருதியிலே உதார சப்தத்துக்கு வியாக்யானம் பண்ணி அருளினார் –
ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்திலே நஞ்சீயரும் அபேஷித்த அர்த்தங்கள் எல்லாம் உபபாதித்தார்
இப்படி சுருதி ஸ்ம்ருதி சம்ப்ரதாயம் நிற்கிற நிலைகளைக் கொண்டு ஸ்ரீ மச் சப்தத்தில் சொன்ன விசேஷணத்துக்கு
விக்ரஹாதிகளுக்கு போலே வஸ்து அனுரூபமான விசேஷங்களை சஹ்ருதயர் அறிந்து கொள்வது –
பர ஸ்வீகார ரஹிதம் ரஷா சங்கல்ப வர்ஜிதம் -குணாதிகமி ஹேஷ்டம் ஹி சரணச்ய விசேஷணம் -என்றும்
ஏக ரஸ்ய ஜூஷோ சேஷி தம்பத்யோ சர்வ கர்ம ஸூ –விசேஷண விசேஷ்யத்வம் ஸ்ருதம் கஸ்மான்ன ரோசதே -என்றும்
பிரதர்த்த நாதி வித்யா ஸூ வேத்யே அபி பரமாத்மநி–அசேத நவதிச்சாமி சேதனம் ச விசேஷணம் -என்றும் –
இத்தம் பிரபத்தி வித்யாயாம் தத் தந் மந்த்ராநுசாரதா –விபு பத்ன்யா குணாத்யைச்ச விதிஷ்டோ விஷய அத்ர ந -என்றும் சொல்லிற்றே
இங்கு கேவல தர்க்கங்களை இட்டு பிரமாணங்களை பாதிக்கலாகாது என்னும் இடம் முன்பே சொன்னோம் –
ஆகையால் யதா பிரமாணம் சரண்ய அபிப்ராய விசேஷ அனுகுணமாக விசிஷ்டம் உபேயம் ஆனால் போலே விசிஷ்டம் உபாயமாகக் குறை இல்லை
நாராயண சப்தத்திலும் -சரண சப்தத்திலும் தோற்றுகிற குண விசேஷ விக்ரஹ விசேஷாதி விசிஷ்டமான ஏகம் உபாயம் ஆனால் போலே
துல்ய யோக ஷேமமான ஸ்ரீ மச் சப்தத்தில் தோற்றின நித்ய பத்நீ சம்பந்த விசிஷ்டம் ஆனாலும் உபாய ஐக்ய த்துக்கு குறை இல்லை
உபாய விசேஷணங்கள் எல்லாம் விட்டு உபாயத்தை ஏகம் ஆக்க வேணும் என்னில் உபாயத்வமும் விசேஷணம் இன்றிக்கே போம்
விசேஷண பிரயுக்தமாய் விசேஷ்யத்துக்கு வரும் ஏற்றத்தாலே விசேஷ்யத்துக்கு வைகுண்யாதிகள் வாராது என்று
ஸ்வத ஸ்ரீ த்வம் விஷ்ணோ ஸ்வம் அசிதத ஏவ ஏஷ பகவான்
த்வத் ஆயத்தருத்தித் வேபி அபவத் அபராதீ நவிபவ
ஸ்வ யாதீப்த் யாரத் நம்பவத் அபிமார்ஹம் நவி குணம்
நகுண்ட ஸ்வா தந்த்ர்யம் பவத் இதிச நாசா அந்ய ஆஹீத குணம் -ஸ்ரீ குண ரத்ன கோசம் -31- ஸ்லோகத்திலே நிர்ணயிக்கப் பட்டது
விசேஷணத்தால் விசேஷ்யத்துக்கு வரும் அதிசயம் போலே விசேஷயத்துக்கு ஸ்வரூப அனுபந்தியான அதிசயமும்
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்கிற த்ருஷ்டாந்தத்திலே காணலாம்
பாஸ்கரனுக்கும் பிரபைக்கும் ச்வத சித்தமான தேஜஸ்த்வம் போலே இருவருக்கும் அனந்யா தீன கல்யாணம் -என்கிறபடியே
ஸ்வ பாவ சித்த கல்யாணதை யாலே –
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஜனகாத்மஜா -என்றும்
தவ ஸ்ரியா -என்றும்
உன் திரு-என்றும்
ஸ்ரீ ய ஸ்ரீ -என்றும்
திருவுக்கும் திரு -என்றும்
அந்யோந்ய அதிசயாவஹங்களாக விசேஷண விசேஷ்யங்களை நிர்தேசிக்கிறதுக்கும் குறை இல்லை
சுருதி பலத்தாலே -தவை ச சதைக சேஷீ-என்கிறபடியே
உபய அதிஷ்டானம் சைகம் சேஷித்வம் என்றும்
சோமாசி ஆண்டான் ஷடர்த்த சங்ஷேபத்தில் நிஷ்கர்ஷித்த படியே இருவரும் ஏக சேஷித்வ ஆஸ்ரயர் ஆனபடியாலே
ஹவிர் விசேஷங்களில் அக்ரா விஷ்ணு ப்ரப்ருதிகளுக்கு போலே ஆத்மஹவி சமர்ப்பண பிரதி சம்பந்திகள் ஆகைக்கும் குறை இல்லை
யுவத்வா தௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமன
ஸ்திரத்வ ஆதீ ந்க்ருத்வா பகவதி குணான் பும்ஸ்த்வ ஸூ லபான்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தான்ம்ர்திமபதி பரார்த்த்ய கருணா
ஷமா ஆதீன்வா போக்தும் பவதி யுவயோ ஆத்ம நிபிதா -ஸ்ரீ குண ரத்ன கோசம் -34-என்கிறபடியே
பத்னிக்கு நித்ய பதிர் பாரார்த்தவ்யத்தாலே யாக தந்திரத்தில் போலே பதி பிரதானமாக சாஸ்த்ரங்களில் உபதேசங்களுக்கும்
ஏகன் யஜமானன் என்னுமா போலே ஏக வ்யபதேசத்துக்கும் குறை இல்லை
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறதுக்கும் இதுவே தாத்பர்யம்
தத் அந்தர்பாவாத் த்வாம் ந ப்ருத கபி ததே சுருதி அபி -என்கிற வழிகளும் கண்டு கொள்வது –
எம்பெருமானைச் சொன்ன இடத்தில் பிராட்டியையும் சொல்லிற்றாம் -என்று தொடங்கி
உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஆச்சான் பக்கலிலே கேட்டு நஞ்சீயர் சங்க்ரஹித்தார்-
ஆகையால் காம்ய பிரதானமான அதிகார அர்ச்சன ரூபத்திலும் விஷ்ணு பத்நீத்வம் ப்ரதிஷ்டிதம் ஆகையாலே
லய போகார்ச்சனங்களிலே பிரவ்ருத்தராய்
அநந்ய பிரயோஜனரான முமுஷூக்களுக்கும் காம்ய பிரதானமான பகவத் ரூபத்தில் போலே
மாத்ருத்வாத்யுபாதிகமான ப்ராணாமாத்யா சாரங்களுக்கும் குறையில்லை –
இப்படி மத்யஸ்த த்ருஷ்டியாலே பிரமாணிகார்த்தங்கள் தோற்றச் செய்தே பற்றினது விடாது ஒழியில்
த்ருடபூர்வ ஸ்ருதோ மூர்க்கோ தர்மாணாம விசாரத
வ்ருத்தா நப ருச்சன் சந்தேஹான் அந்த ஸ்வ ப்ரமி வர்ச்சதி
அந்யதா மந்த புத்தி நாம் ப்ரதிபாதி துராத்மநாம்
குதர்க்க வ்யாள தஷ்டா நாம் விப்ராந்தேந்த்ரிய வாஜி நாம் -என்கிற திசையாம்
ஆகையால் சித்தோ உபாய சப்த வாச்ய விமர்சத்தில்
நாநயோர் வித்யதே பரம் யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம
அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மின் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம்
தே நேயம் ச ச தர்மார்த்தா முஹூர்த்தமபி ஜீவதி
வ்யாபகாவதி சம்ச்லேஷா ஏகதத்வம் இவொதிதௌ-என்கிறபடி
ஏக சேஷித்வத்தாலும்-
ஏக அபிப்ராயதை யாலும்
பரஸ்பர ப்ராவண்ய அதிசயத்தாலும்
ஸ்வரூப ரூபாதிகளில் பிரிவற்ற அந்வய விசேஷத்தாலும்
கடோபகூடாநிதே -சதுஸ் ஸ்லோகி -4-என்னும்படி ஸூஸ்லிஷ்டமான விசிஷ்டத்வம் நிற்கிற நிலை குலையாதபடி
ச விசேஷமான நாராயண சப்தம் பிரதிபாதிக்கிறபடியை அனுசந்திக்கை சத்த்வச்தர்க்குப் பிராப்தம் –
சமஸ்த புருஷார்த்தா நாம் சாத கஸ்ய தயா நிதே
ஸ்ரீ மத் பூர்வ சித்தத்வாத் சித்தோபாயம் இமாம் விது-
பக்தி பிரபத்தி ப்ரமுகம் தத் வசீகார காரணம்
தத் தத் பலார்த்தி சாத்யத்வாத் சாத்ய உபாயம் விதுர் புதா
சாத்ய உபாய உத்தரங்கேண சித்த உபாயஸ்ய சேஷிண
லீலா ப்ரவாஹ காருண்ய ப்ரவாஹேன நிருத்யதே
தேநைவ சர்வே லீயந்தே சிக்தா சேது பந்தவத்
ஸ்வ தந்த்ரஸ் யாபி சங்கல்பா ஸ்வ கைங்கர்ய நிரோதகா
பிரசாத நச்யோபாயத்வே சாஸ்த்ரீ யேபி பலம் ப்ரதி
கர்த்துத் வாவ்யவதா நாத்யை சித்தோபாய ப்ரதா நதா
ஸ்வ தந்த்ரன்யாச நிஷ்டானாம் சித்தோபாய விபௌ ஸ்திதி
ஷணாத் ஸ்வ யத்ன விரதி வ்யக்த்யை ப்ரோக்த விசேஷத
அதோ யதர்த்தம் ஸ்வ பர சித்தோபாய நிவேசிதே
ததர்தம் சாந்த யத்ன அசௌ சித்தோபாயம் ப்ரதீஷதே
பிரபத்தேர் லஷணே மந்த்ரே விதௌ வாக்யாந்த ரேஷூச
பாஷ்யா தௌ சம்ப்ரதாயே சோபாயத்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
பூர்வ சித்தச்ய தேசாதே தர்மத்வம் யத்விஷ்யதே
ஏவம் தத்வவித ப்ராஹூ க்ருஷ்ணம் தர்மம் ச நாதனம் —
மன்னு மனைத்துறைவாய் மருண் மாற்றருள் ஆழியுமாய்
தன்னினைவால் அனைத்தும் தரித்து ஓங்கும் தனியிறையாய்
இன்னமுதத்த முதலாலிரங்கும் திரு நாரணனே
மன்னிய வன் சரண் மற்றோர் பற்றின்றி வரிப்பவர்க்கே –
விஸ்ராம்யத்பி உபரி உபரி அபி திவா நக்தம் வஹிர் தர்ச நௌ
அஸ்மத் தேசிக சம்ரதாய ரஹிதை ரத்யாபி நாலஷித
ஸ்வ ப்ராப்தே ஸ்வயமேவ சாதநதயா ஜோ குஷ்யமாண ச்ருதௌ
சத்த்வத் தேஷு பஜேத சந்நிதி மசௌ சாந்தாவதி சேவதி
—————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply