ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
———————————————————————
ரகஸ்ய த்ரய சாரம் -32-அத்தியாயங்கள்
குரு பரம்பரா சாரம்
அர்த்த அனுசார பாதம் -22-அத்தியாயங்கள் – உபோத்காதம் -தொடங்கி
ஸ்த்ரீகரண பாதம் –நான்கு அத்தியாயங்கள் –
பத வாக்ய யோஜனா பாதம் -திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் அடுத்த மூன்றும் –
நான்காவது பாதம் – சாம்ப்ரதாய அர்த்தங்கள் –
அடுத்த மூன்றும் -ஆச்சார்ய -சிஷ்ய -சரம அத்யாயம் தொகுத்து அருளுகிறார் –
—————————————————————-
ஸ்ரீ குரு பரம்பரா சாரம்
குருப்யஸ் தத் குருப்யச்ச நமோவாக மதீமகே
வ்ருணீமகே ச தத்ரா ஆத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ-
அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்
பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-
பழையவர் மூவர் –
முனி மனன சீலர் பகவத் தியானமே கால ஷேபம் –பொய்கை- சரஸ் –
பூதத்தார் -பூ சத்தா -கர்ப்ப ஸ்ரீ மான் கருவரங்கத்துள் கிடந்தேன் கை தொழுதேன் -வேறே அடை மொழி வேண்டாமே –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் –பூதங்கள் -நித்ய ஸூரிகள்
பேயாழ்வார் -மாறுபாடு உள்ள ஸ்வாபம்-/மஹா யோகி –
நாட்டார் இயல் ஒழிந்து திரு நாரணனுக்கு ஆளாகி -திருக் கண்டேன் –திருவிலே ஆரம்பித்து முடித்தார்
தண்-பொருநலுக்கு-அடை மொழி -சம்சாரம் தாபம் இல்லாமல் -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆக்கி
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
விஷ்ணு சித்தர் -பெரியாழ்வார் – பட்டர் பிரான் –
இங்கு ஆண்டாளை தனியாக சொல்லாமல் -விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல்
அது காண்டுமே -அத்யந்த பரதந்த்ரை -என்ற உத்கர்ஷம் உண்டே –
துய்ய குலசேகரர்- பாகவத பிரதிபத்தி –ஆரம் கெட –குடப்பாம்பில் கை இட்ட –
நம் பாணனார் –அபிமானித்து -தேசிகன் -அசாதாரண சம்பந்தம் -முனி வாஹனர் -வேதாந்தச்சார்யார் -விருது பெற்ற
முனி வாகன போகம் -பழ மறையின் பொருள் -என்று நிரூபித்து அருளி –
பகவத் த்யான சோபனம் அமலனாதி பிரான் போல் திருவடி தொடங்கி- வர்ணாஸ்ரம தர்மங்களை மீறாமல் –
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தி அருள பிரார்த்தித்தார்
மழிசை வந்த சோதி -பெரும் புலியூர் அக்ர பூஜை காட்டி -பக்தி சாரர் -சக்கரத்தாழ்வார் அம்சம் என்பதாலும் சோதி –
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன்–மாயோனை வாள் வலியால் மந்த்ரம் கொண்டவர் –
திரு மந்த்ரம் இவர் பெற்றதும் மறை விளங்கிற்றே- வேல் ஏந்தி ரஷித்து-வையம் எல்லாம் மறை விளங்கிற்றே –
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் -மங்கையர் கோன்
கலயாமி கலி துவம்சம் -கலி ஹன்-லோக திவாகரன் -வையம் எல்லாம் மறை விளங்க –
வேதம் வேத இதி–வித்வான் வித் தாது ஞானம் -மறை -வேதார்த்தம் மறைந்தே இருக்கும் –
அதுவே விளக்கும் மறைக்கும் ஆதரவும் அநாதாரமும் நம்மிடம் தானே – -ஆராவமுதன் -திராவிட வேதம் தர்சகன் –
இவருக்கு நிறைய அடைமொழி -திருமந்திரத்தில் ஊன்றி- வாள் வேல் ஏந்தும் -இரண்டையும் ஏந்தி மங்கையர் கோன்-
பரகாலன் –பிற சமயத்தாருக்கும் -பராத்பரனுக்கும் காலன்-
திருமந்த்ரசாரம் தனது அருளிச் செயல்களில் காட்ட-லோகம் எல்லாம் விளங்கும்படி -வாள் வலியால் மந்த்ரம் பெற்றார் –
ஆலி நாட்டு அரசு தெய்வ அரசன் இடம் இருந்து அரச மரத்தடியில் மந்த்ர அரசனான திரு மந்த்ரம் பெற்றார் அன்றோ –
என்று இவர்கள் -அநு வாதம் -ப்ரீதி காரணம் – பொய் நின்ற ஞானம் அநு வாதம் பீதியால் –
ப்ரீதி வழிந்து வந்த அருளிச் செயல்கள் -மகிழ்ந்து – ஆனந்த அனுபவம் மண்டி –மாலைகள் –தொடர்ச்சி சப்தங்கள் அர்த்தங்கள்
தமிழ் மாலை -சர்வாதிகாரம் -செய்ய -செம்மை-ஆர்ஜவம் – தெளிவு –
தெளிய ஓதி -சப்தங்கள் அர்த்தங்கள் அறிந்து -தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –
இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-
1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவு மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –
ஸ்ரீ ந்யாஸ விம்சதியிலும் இந்த பத்து அர்த்தங்களை ஆச்சார்யர் விஷயத்தில் -காட்டி அருளி
தொல் வழி -பாகவத பர்யந்த சேஷத்வ பாரதந்தர்யம்
ஸ்ரீ மதுர கவி திரு நாமமே ப்ரீதி அதிசயத்துக்கு த்ருஷ்டாந்தம் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் நிஷ்டை –
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க -அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு –
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும் -துன்பு அற்ற -சம்சய விபர்யயம் இல்லாமல் –
நீக்கமில் அடியார் -அக்குளத்தில் மீன் -அடிமை தலை நின்ற –
கோதில் அடியார் -அநல சத்ருக்நன் -தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–
பாபிஷ்ட்ட ஷத்ர பந்துச்ச புண்டரீகச்ச புண்ய க்ருத்-ஆசார்யவத்த்யா முக்தௌ தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் -என்று
ஆசார்வத்தையே சர்வருக்கும் மோஷ காரணம் என்று அறுதியிட்டார்கள் –
மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால் தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது
முமுஷூவுக்கு ஆசார்ய வம்சம் பகவான் அளவும் செல்ல அனுசந்திக்க வேண்டும் என்று ஓதப்பட்டது —
தம் இமம் சர்வ சம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும்—மஹாபாரதம்–ஸபா பர்வம்–என்றும்
(எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும், முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,
தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் , பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-
ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் . வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )
மம அபி அகில லோகா நாம் குருர் நாராயணோ குரு –ஸ்ரீ விஷ்ணு புராணம் (5–1–14) -என்றும்
(எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன், எனக்கும் குரு-
தனக்கென்று எந்த ஆசார்யனும் இல்லாத பரமாசார்யன் –நாராயணன்-இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே)
த்வமே பந்துச்ச குரும் த்வமேவ -என்றும்
(நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி, ஸ்ரீ க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம்)
குருரசி கதிச்ச சி ஜகதாம்-ஸ்தோத்ர ரத்னம் (60 ) –
(பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் )
என்றும் சொல்லுகிறபடியே சர்வ லோகத்துக்கும் பரமாச்சார்யனான சர்வேஸ்வரன் –
1- ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும்-அவற்றுக்கு அபகாரம் பிறந்த போது மீட்டுக் கொடுத்தும் –
இவன் முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் –
2- இவன் புத்ரர்களான சனத் குமாராதிகளை ஸ்வபமாகத விஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா-(பாரதம்–சாந்தி பர்வம் )-
என்னும்படி பண்ணி அவர்கள் முகங்களாலே ஹித பிரவர்த்தனம் பண்ணுவித்தும்-
3-இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகரிஷிகளை இட்டும் அத்யாத்ம சம்ப்ரதாயம் குலையாத படி நடத்தியும் –
4-க்ருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோ ஹ்மன்யோ பூமிம் மைத்ரேய மகாபாரத க்ருத்வேத்-(விஷ்ணு புராணம் ) -என்றும்
(க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும் வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே ,
மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.)
மஹஷை கீர்த்தநாத் தஸ்ய பீஷ்ம ப்ராஜ்ஞலி அப்ரவீத்-(மஹாபாரதம் —ஆதிபர்வம் )
(மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும்போது, பீஷ்மர், கைகளைக் கூப்பியவண்ணம் பேசினார்.)
என்றும் சொல்லுகிறபடியே நிற்கிற வ்யாசாதிகளை அனுபிரவேசித்து மகா பாரத சரீராதிகளை ப்ரவர்த்திப்பித்தும்
(சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்மஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும், )
5-ஹம்ச மத்ஸ்ய ஹயக்ரீவ நர நாராயண கீதாச்சார்யாத்யவதாரங்களாலே தானே வெளி நின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை பிரகாசிப்பித்தும் –
(ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—– இவர்கள்,
தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்மயோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.பகவான் மிகவும் கருணையுடன்
ஹம்ஸரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவபர—சரீரஆத்மபாவ ரூபத்தை உபதேசித்தார். )
(மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும். உலகங்கள் யாவும் ,
கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,அப்போது,
அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்தபோது,
அவர், ஜலதர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து, அவராலேயே,
கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய்சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி,
ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து, வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்)
(ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது— ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில்
தங்கத்தூள்கள் ஒட்டுவதுபோல, மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளிகொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழிகாணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும்,அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித்தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் )
அபஹரித்துக்கொண்டு பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்து வைத்தனர். ப்ரஹ்மா பதறினான்;
நான்கு வேதங்களின் உதவி இல்லாமல், ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான்,
பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து, பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப,
இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது, ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு,
ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார். அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட,
பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.)
(நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார்
இவரால், தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க,
அப்ஸரஸ்களை அனுப்ப, நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல,
இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது-
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் )
6-தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரை இட்டு மூதலிப்பித்தும்
7- பாஞ்சராத்ரச்ய க்ருத்ச்னச்ய வக்தா நாராயண ஸ்வயம் -மஹாபாரதம்—சாந்தி பர்வம்– என்கிறபடியே
தான் அடியிலே அருளிச் செய்த பகவத் சாஸ்த்ரத்தை
ப்ராஹ்மனை ஷத்ரியை வைசம்யச் சூத்ரச்ச க்ருத லஷணை-
அர்ச்சநீயச்ச சேவ்யச்ச நித்ய யுக்தை ஸ்வ கர்ம ஸூ சாத்வதம்
விதி மஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய த்வாபரச்ய யுகச்யாந்தேன் ஆதௌ கலியுகச்ய ச –என்கிறபடியே
அவசரங்களிலே ஆவிஷ்கரித்தும்
(பகவான் நாராயணனே, பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.)
8- பூர்வோத் பன்னேஷூ பூதேஷு தேஷு தேஷு கலௌ பிரபு அனுப்ரவச்ய குருதே யத் சமீகித மச்யுத –விஷ்ணு தர்மம்-என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே
அபிநவனமாக ஒரு தசாதவதாரம் பண்ணி –
மேகங்கள் சமுத்திர ஜலத்தை வாங்கி சர்வ உப ஜீவ்யமான தண்ணீராக உமிழுமா போலே-
வேதார்த்தங்களில் வேண்டும் சார தமமாம் அம்சத்தை
சர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையிலே சங்க்ரகித்துக் காட்டியும் —
9- இப்படி தான் பிரவர்த்திப்பித்த சத்பதத்துக்கு பிரகடராயும் பிரசன்னராயும் இருந்துள்ள பாஷாண்டிகளால் உபரோதம் வாராமைக்காக
ஏ சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகன்
காருண்யாச் சாஸ்திர பாணினா ஏ-(ஜயாக்ய ஸம்ஹிதை என்றும் –
10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து என்றும் சொல்லுகிறபடியே
அகஸ்த்ய சேவிதமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்து அருளினான்-
(ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே )
இத்தைக் கணிசித்து –
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷூ சபூரிசா
தாம்ரபர்ணீ நதீ யத்ர கிருதமாலா பயகி தீ
காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகா நதீ –ஸ்ரீமத் பாகவதம்–என்று மகரிஷி அருளிச் செய்தான் –
தானே நேராக உபதேசம் -சில ஜீவர்களை அதிஷ்டானம் பண்ணி உபதேசம் -சிலரை நியமித்து உபதேசம் –
அனுக்ரஹ விசேஷத்தால் ஞான ப்ரதம் இப்படி நான்கு வகைகளில் –
ஆழ்வார்கள் ரூபேண நவ-புநர் – தசாவதாரம் ஸூசகம்–
பீதகவாடை -சங்கு சக்ராதிகளுக்கும் உப லக்ஷணம்
பிரம குருவாகி வந்து -ஆச்சார்யர்கள் ரூபேண தானே அவதாரம் ஸூசகம் —
———————————————–
இவ்வாச்சார்யர்களில் –
ஈஸ்வர முனிகள் திருக் குமாரர் நாதமுனிகள் -நியாய தத்வம் என்கிற சாஸ்திரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார் –
இவருக்கு ஸ்ரீ மதுர கவிகள் முதலாக சம்ப்ரதாய பரம்பரையிலும் -திருவாய் மொழி முகத்தாலும்
யோக தசையில் சாஷாத்க்ருதராயும் நம் ஆழ்வார் ஆச்சார்யர் ஆனார் –
நாதமுனிகள் திருக் குமாரர் -ஈஸ்வர பட்டாழ்வான் -அவர் திருக்குமாரர் ஆளவந்தார் –
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் ஆகம ப்ராமாண்யமும்-புருஷ நிர்ணயமும்
ஆத்ம சித்தி -ஈஸ்வர சித்தி -சம்வித் சித்தி என்கிற சித்தி த்ரயமும் -கீதார்த்த சங்க்ரஹமும் –
ஸ்தோத்ர ரத்னமும் -சதுஸ் ஸ்லோகியும் –ஆகிய எட்டும்
ஆளவந்தார் திருக் குமாரர் –சொட்டை நம்பி –அவர் திருக் குமாரர் -என்னாச்சான் -அவர் திருக் குமாரர்கள் நால்வர் –
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்–இவர் பிள்ளை தோழப்பர்-அவருக்கு திருக் குமாரத்திகள் இருவர் –
நாதமுனிகள் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த முதலிகள் –
உய்யக் கொண்டார் -குருகைக் காவல் அப்பன் -நம்பி கருணா கர தாசர் –ஏறு திருவுடையார்
திருக் கண்ண மங்கை யாண்டான் -வானமா தேவி யாண்டான் –உருப்பட்டு ராச்சான் பிள்ளை –சோகத்தூர் ஆழ்வான்-ஆகிய எண்மர்-
உய்யக் கொண்டார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள் –
மணக்கால் நம்பி -திரு வல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர் –
சேட்டலூர் செண்டலங்காரர்-ஸ்ரீ புண்டரீக தாசர் -உலகப் பெருமாள் நங்கை-ஆகிய ஐவர்
மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
ஆளவந்தார் -தெய்வத்துக்கு அரசு நம்பி –
கோமடத்து திரு விண்ணகர் அப்பன் -சிறுப் புள்ளூர் ஆவுடைய பிள்ளை-,ஆச்சி -ஆகிய ஐவர்-
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
பெரிய நம்பி -திருக் கோட்டியூர் நம்பி -திருமாலை யாண்டான் –ஆளவந்தார் ஆழ்வார் —
திருமலை நம்பி -ஈசாண்டான் –தெய்வ வாரி யாண்டான் –சிறியாண்டான் –திரு மோகூர் அப்பன் –திரு மோகூர் நின்றான் –
தெய்வப் பெருமாள் -திருமங்கை யாளியார்-பிள்ளை திருமால் இரும் சோலை தாசர் –மாறனேர் நம்பி -ஆள்கொண்டி -என்ற பதினைவர் –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
எம்பெருமானார் -மலை குனிய நின்றார் -ஆர்ய ஸ்ரீ சடகோப தாசர் -அணி யரங்கத்து அமுதனார் –
திருவாய்க்குலமுடையான் பட்டர் -திருக் கச்சி நம்பி -என்ற அறுவர் –
எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ரகஸ்ய அர்த்தங்களைச் சிஷித்தார் –
திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே திருவாய் மொழி கேட்டார்
ஆளவந்தார் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே திருவாய் மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும் அருளிச் செய்யும் நல் வார்த்தைகளும் கேட்டு அருளினார் –
திருமலை நம்பி ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ மத் ராமாயணம் கேட்டு அருளினார்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் -ஸ்ரீ பாஷ்யமும் தீபமும் சாரமும் வேதார்த்த சங்க்ரஹமும்
ஸ்ரீ கீதா பாஷ்யமும் சிறிய கத்யமும் பெரிய கத்யமும்
வைகுண்ட கத்யமும் நித்யமும் ஆக ஒன்பதும்
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகளை தம் தம் சம்ப்ரதாயப் படிகளிலே அறிந்து கொள்வது –
————————————————————————————
ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்
குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேன கோபயேத் அப்ரகாச பிரகாசாப்யாம் ஷீயதே சம்பதாயுஷீ -சேஷ ஸம்ஹிதை–என்றார்கள்
குருவை ஒருவன் பிரகாசிப்பிக்கறதும் ஒருவன் பிரகாசிப்பியாது ஒழிகிறதும் குரு பக்தியில் தாரதாம்யத்தால் இறே-
பகவத் விஷயத்தில் போலே குரு விஷயத்திலும் பரையான பக்தியுடையவனுக்கு அபேஷி தார்த்தங்கள் எல்லாம்
பிரகாசிக்கும் என்னும் இடம்
கட ஜாபாலாதி ஸ்ருதிகளிலும் சஞ்ச்யாதி வ்ருத் தாந்தங்களிலும் பிரசித்தம் –
(தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம் போலப்
பாதுகாக்க வேண்டும். இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால்,
ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும். ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும்,
குருவிடம் அவன் வைத்துள்ள அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோஅதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும் ஆசார்ய பக்தி பரிவாஹத்தால்
ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது.
சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.)
இங்கன் அல்லாதார்க்கு இப்படி ஞான சம்பத்து உண்டாகாது என்னும் இடம்
சிஷ்யர்களுடைய ஞான தார தம்யத்தாலே கண்டு கொள்வது
மிகவும் குணாதிகரான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை பிரகாசிப்பியாதருக்கு நிஷ்டை குலையாது என்னும் இடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே பிரசித்தம் –
(ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து,
இவனுக்கு, உபதேசித்தார். ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை )
பெற்றது குணமாக உபதேசித்தால் சிஷ்ய பாவம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்டை குலையுமாம் படி என்னும் இடம் –
வருவது விசாரியாதே இந்தரனுக்கு உபதேசித்து தானும் ப்ரஹ்ம வித்யையை மறந்து
தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு சர்வேஸ்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படி இருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டு கொள்வது —
(ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால் அந்தத் தகுதியில்லா சிஷ்யன்
செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன. இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து,
ப்ரஹ்மாஅவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார். இதன் பலன் அவருக்கு,
பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின. பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார்.
பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.)
இப்படி அப்ரகாச பிரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும்
ஷீயதே சம்பதாயுஷீ என்கிற பலங்களை ஔசித்யத்தாலும் பிரமாண பிரசித்தியாலும்
க்ரமத்தாலே உதாகரித்தது இத்தனை
இரண்டிலும் இரண்டு அன்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை –
ஆகையால் சர்வ அவஸ்தைகளிலும் குரு பக்தியின் பரிவாகமாக குருவை பிரகாசிப்பிக்கவும்
மகா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலே இருக்கிற திரு மந்த்ரத்தின் உடைய சீர்மையும்
தன் நிஷ்டையும் குலையாமைக்காக
சிலவான பிரயோஜனன்களைப் பற்ற
சிஷ்ய குண பூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் பிராப்தம் –
இவ்விடத்தில் குரு சப்தம் பரம குருக்களுக்கும் உப லஷணம்-
சாமான்யமாகவுமாம் மந்திர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரஹஸ்யங்களுக்கும் பிரதர்சன பரம்
தான் இந்த ரஹஸ்யங்களை அனுசந்திக்கும் போது எல்லாம் ஆசார்ய பரம்பரையை அனுசந்திக்கவும் விதி பல ப்ராப்தம்
இவ் வாச்சார்யர்கள் உடைய அனுசந்தானம்
சம்பாஷ்ய புண்ய க்ருதோ மநஸா த்யாயேத்-கௌதம தர்ம ஸுத்ரம் என்கிறபடியே
பிரதிஷி சம்பாஷணத்துக்கு பிராயச் சித்தமுமாம் —
(ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம்
வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர் மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்;
சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு, ஆசார்யன் உபதேசிக்கலாகாது;
சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .
ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——- பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்து விட்டால்,
அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்கவேண்டும்.)
—————————————————————————————-
என்னுயிர் தந்து அளித்தவரை சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுததத் திரு மகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே —
ஏதே மக்யம் அபோட மன்மத சார உன்மாதாய நாதா தய
த்ரயந்த ப்ரதி நந்த நீய விவித உதந்தா கதந்த்ரம் இக
ஸ்ரத்தா தவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா
ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவே வைதேசிகா தேசிகா —
(வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் )
ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ—
க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந —
ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||
(ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை, அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.
இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் , திசைகள் தோறும் உள்ள வெற்றித் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது.
அந்தத் தூண்களில் உள்ள கொடிகள், மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப் போலே
விரட்டித் தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல் மார்க்க தர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது )
ஆரண நூல் வழிச் செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரண மாயவா வாதக கதலிகண மாய்த்த பிரான்
ஏர் அணி கீர்த்தி இராமானுசன் முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே —
ஐதுகர்க்கு -ஹேது வாதம் பண்ணுவார்களுக்கு-கேவல யுக்தி வாதிகள் –
வாதக கதலி கணை -வாதங்களாகிற வாழைகளை
பண்டரு மாற்றம் பசும்தமிழ் –வேழம் அன்றோ –
நீள வந்து இன்று விதி வகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னம் வினைவுடம்பொன்றி விழுந்து உழலாது
ஆளவந்தார் என என்று அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தார் அடியோம் படியோம் இனியல் வழக்கே
நீள வந்து -சம்சாரம் அநாதி அன்றோ
சம்சார சுழற்சியில் இன்று விடுபட்டு பரம புருஷார்த்தம் பெற -நம்மை ஆள வந்தார் அன்றோ
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவ நெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே —
குரு பரமபர அநு சந்தானம் -அந்தக் குருக்கள் இடம் பக்தி பூர்வகமாக இருக்க வேண்டும் —
அந்த குரு பக்தி தானே சம்சார தசையில் காம க்ரோதாதிகளினால் கலங்கிய மனுஷ்யருக்கு அசம்பாவிதம் ஆகையால் –
அந்த காம க்ரோதாதி நிவ்ருத்தமும் ஆச்சார்ய கடாக்ஷத்தினாலேயே உண்டாக வேண்டுமே -என்பதால் இந்தப் பிரார்த்தனை –
ஸ்ரீ யபதியின் தயையாகிய கங்கையை தலையிலே தரித்த ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் இடம் பரவும்படி செய்து
மன்மத பானத்தால் வந்த பீடைகளை நிவ்ருத்தி செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை –
பால் பித்த ரோகம் நிவ்ருத்தி செய்து பின்பு ஸ்வயம் போக்யமாகுமா போலே -இதர விஷய வைராக்யம் உண்டாக்கி –
பரம புருஷார்த்த ஆசை விளைந்து -குருவை ஆஸ்ரயித்து குரு பக்தியை வளர்த்து அருள
அவனுடைய கல்யாண குணங்களாகிற சரங்களே உபாயம் –
அஸங்க்யேய கல்யாண குணங்கள் அவனைப் போலவே நம் பூர்வர்களுக்கும் இருக்குமே
அடியவருக்கு -தாச பூதங்களான மேலை அகத்து ஆழ்வான் -கீழை அகத்து ஆழ்வான் இருவருக்கும்
தாளம் வழங்கி -தாள சாஸ்திரம் உபதேசித்து அருளி –
காளம்-வலம்புரி -அன்ன–இவருக்கும் அவனுக்கும் இவை அன்றோ சிஹ்னங்கள்–
கீழே சிந்தியோம் இனி தீ வினையே -பரி ஸூத்த மநோ விருத்தியும்
படியோம் இனி அல் வழக்கே –பரி ஸூத்தமான வாக் வியாபாரமும்
தொழுது எழுவோம் -என்று பரி ஸூத்தமான காயிக வியாபாரமும் இருந்தாலும்
ஒவ் ஒரு ஆச்சார்யர்கள் இடமும் இம்மூன்றும் சேர அனுசந்தேயம் –
(ஸ்ரீ உடையவருக்குப் பின்பு, வடகலை ஆசார்ய பரம்பரை
திருமடைப்பள்ளியாச்சான் ,கிடாம்பி ராமாநுஜப்பிள்ளான் ,
கிடாம்பி ரங்கராஜாசார்யர், அப்புள்ளார்,ஸ்வாமி தேசிகன் –
குருகேசர்,எங்களாழ்வான், நடாதூர் அம்மாள், கிடாம்பு அப்புள்ளார், ஸ்வாமி தேசிகன்)
—————————————————————————————
அதிகாரம்-1–உபோத்காத அதிகாரம்-
ஆபகவத்த பிரதிதாம் அனத்யாம் ஆசார்ய சந்ததிம்
மனசி மம யத்ப்ரசாதாத் வசதி ரஹஸ்ய த்ரயஸ்ய சார அயம் —
(தோஷங்கள் —அதாவது குற்றங்கள் எதுவுமே இல்லாததும் , மிகவும் ப்ராபல்யமானதும்,
பகவானே முதல் ஆசார்யனாக இருப்பதுமான , இந்தக் குரு பரம்பரையை நமஸ்கரிக்கிறேன் –அவர்களின் க்ருபையால்,
அடியேன் மனஸ்ஸில் மூன்று முக்ய ரஹஸ்யங்களின் ( திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் )
ஆழ்ந்த உட் கருத்துக்கள் எப்போதுமே நிலைத்து உள்ளன )
கர்மம் ப்ரஹ்ம ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகான்
வந்தே ஹஸ்தகிரி ஈசஸ்ய விதி சோதக கிங்கரான்–
(கர்மா விசாரம், ப்ரஹ்ம விசாரம் என்று இரண்டு பாகங்களை உடைய வேத சாஸ்த்ரங்களில் ,
ஹைதுகர்கள் —-அதாவது, எதற்கும் காரணம் கேட்பவர்கள்–ப்ரமாணங்களை நம்பாதவர்கள்—இவர்களைக் கண்டித்தவர்களும்,
ஸ்ரீ தேவாதிராஜனுடைய திருவீதிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் கைங்கர்யங்களைச் செய்பவர்களுமான ஆசார்யர்களை
நமஸ்கரிக்கிறேன். இவர் ஸ்ரீ -அப்புள்ளார் —ஸ்ரீ தேவப்பெருமாளை அடையும் வழியை–மார்க்கத்தைத் தூய்மை ஆக்கினார் )
ஆளும் அடைக்கலம் என்று என்னை அம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க இங்கே நமக்கு ஒரு விதி வாய்க்கின்றதே
மணிவர இவ சௌரே நித்ய ஹ்ருதய அபி ஜீவ
கலுஷமதி அவிந்தன் கிங்கரத்வ ஆதிராஜ்யம்
விதி பரிணதி பேதாத் வீஷித தேந காலே
குரு பரிஷித் உபஜ்ஞாம் ப்ராப்ய கோபாயதி ஸ்வம் –
(கௌஸ்துபமணி போன்ற ஜீவாத்மா ,எம்பெருமானுக்குப் பிரியமானவன். எம்பெருமானும் கௌஸ்துப மணிக்குப் பிரியமானவன்.
ஜீவன் , தனது அறியாமையால் புத்தி தடுமாறி எம்பெருமானுக் செய்யும் கைங்கர்யத்தை , ஒரு கால கட்டத்தில் கைவிடும்போது,
எம்பெருமானின் கடாக்ஷத்தால் , ஆசார்யர்களின் உபதேசங்கள் மூலமாக, தனது ஸ்வரூபம் பற்றிய உண்மை அறிவு, –
அதாவது–ஜீவன் எம்பெருமானின் அடிமை,ஜீவன் எம்பெருமானுக்காகவே இருக்கிறான்–என்கிற ஞானம் ஏற்படுகிறது.
இதனால், ஜீவாத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.)
—
ஜீவாத்மாவின் ”ஸ்வரூப ” யோக்யதை
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயனாய்க் கொண்டு –
ஹ்ருதயங்கமனாய் குமாரன் என்றும் புத்திரன் என்றும் சிஷ்யன் என்றும்
ப்ரேஷ்யன் என்றும் சேஷ பூதன் என்றும் தாஸ பூதன் என்றும் அவ்வோ சாஸ்த்ரங்களில்
பிரதிபன்னனாய் இருக்கும் ஜீவாத்மா –
இவன் தனக்கு வகுத்த சேஷியாய்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் –
உயர்வற உயர் நலம் உடையவனாய் –
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனாய்
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான சர்வேஸ்வரன் –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே லைங்க புராணம் -என்றும் –
(ஸமஸ்த உலகங்களுக்கும் எஜமானன் ஆக இருக்கிற பகவான் ,வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் விளங்குகிறான் )
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் சொல்லுகிறபடியே
(கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –4-9-10-)
பெரிய பிராட்டியாரோடு கூடத் தெளி விசும்பிலே
யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்திதா -ஸ்ரீ குணரத்னகோசம் -23 -என்கிறபடியே
(ஆஜ்ஞாநுக்ரஹ பீமகோமலபுரீபாலா பலம் பேஜுஷாம்
யாயோத்யேத்யபராஜிதேதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா |
பாவை ரத்புத போகபூமகஹநை : ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி :
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி !யுவயோ :தாம் ராஜதாநீம் விது : ||
ஆணையிடுவதும் , வாழ்த்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் த்வாரபாலகர்களை உடைய நகரம்—
எம்பெருமானை, -பக்தி-ப்ரபத்தி வழிகளில் ஆச்ரயித்தவர்களுக்கு, அடைய வேண்டிய பயன் ——–
யுத்தம் செய்து வெல்ல இயலாத நகரம்—— என்றும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத நகரம்——–
வேதங்களால் அறியப்பட்ட நகரம் ———ஸ்வர்காதிகளுக்கும் மேலே உள்ள நகரம் ——–என்றும் நிலைத்திருக்கும் நகரம் ——–
அத்புதமான பகவதனுபவம் நிறைந்த பொருட்களால் செழிப்பான நகரம்———– அத்தகைய நகரம்–வைகுண்டம் –பரமபதம் என்பது–
திவ்ய தம்பதியரான உங்கள் தலைநகர் என்று வேதவிற்பன்னர்கள் -ச்ருதி–ஸ்ம்ருதி –இதிஹாஸ –புராண–ஸ்ரீ பாஞ்சராத்ராதிகளிலும் ,
ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் புகழ்கிறார்கள் )
அயோத்யாதி சப்த வாசியான கலங்கா பெரு நகரிலே
சஹஸ்ர தூணாதி வாக்யங்களாலே ஒதப்படுகிற திரு மா மணி மண்டபத்திலே
கௌஷீ தகீ பிரம்மணாதிகளிலே ஒதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே
சென்றால் குடையாம் இருந்தால் சிங்கா சனமாம் -என்றும் –
(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் —-என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு )
நிவாச சய்யா ஆசன -என்றும் சொல்லுகிறபடியே
நிவாஸசய்யாஸந பாதுகாம்சுக உபதாந வர்ஷாதப வாரணாதிபி : |
சரீர பேதைஸ்தவ சேஷதாம் கதை :யதோசிதம் சேஷஇதீரிதே ஜநை : || -(ஸ்தோத்ர ரத்னம் -40 )
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசித சர்வ வித கைங்கர்யங்களையும்
சர்வ வித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே தனக்கு நிரூபகம் ஆகையாலே சேஷன் என்றே திரு நாமம்
ஆகும்படியான திரு வநந்த ஆழ்வான் ஆகிற திருப் பள்ளி மெத்தையிலே
வான் இளவரசாகக் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை சர்வ ஆத்மாக்களும் அனுபவித்து
க்ருதார்த்தராக வேணும் என்று சஹ்ருதனாய் இருக்கிற இருப்பு அடியாக
நித்ய அனுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்து அடியாரான நித்ய ஸூரிகளோடு ஒக்க
தானும் ஸ்வாமி கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து
அநாதி மாயையினால் ஸூ தப்தனாய் –
அநேக ஜன்ம சஹஸரீம் சம்சார பதவீம் வ்ரஜீன் மோஹ சரம பிரயாதோ அசௌ வாஸநா ரேணு
குண்டித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே
(அநேகமாயிரமாயிரம் ஜன்மமெடுத்து, ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, மோஹத்தில் மூழ்கி, ச்ரமத்தை அடைந்து,
தான் யாரென்றே அறியாதபடி, மயக்கத்தில், கர்மாக்களின் வாஸனையாகிற புழுதியில் அகப்பட்டு,
ஞானத்தை இழந்து ஜீவாத்மா உள்ளான்)
சம்சாரம் ஆகிற பாழிலே விழுந்து ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து தட்டித் தாவற்று அழுக்கு அடைந்து
ஒளி அழிந்த படியாலே தத்வ ஹித விஷயமாய் யதாவத் பிரகாச ரஹிதனாய் நிற்க
ஒரு ராஜா அந்தப்புரத்துடன் வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே சக்தனான அளவிலே
வார்த்தை அறிவதற்கு முன்பே வழி தப்பின ராஜகுமாரன் எடுத்தார் கைப் பிள்ளையாய்
ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர அவன் தனக்கு இல்லாத சபரத்வாதி ஜாதிகளை ஏறிட்டுக் கொண்டு
மாதா அபி ஏகா பிதா அபி ஏக மம தஸ்ய ச பஷிண
அஹம் முனிபி ஆ நீத ச ஆ நீத கவாசனை
அஹம் முனீ நாம் வசனம் ஸ்ருணோமி கவாசனானாம் ச வஸ ச்ருணோதி
ப்ரத்யஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டும் சம்சர்கஜா தோஷ குணா பவந்தி -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்கிறபடியே
(ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகத்தின் மூலமாக,
தாய் தகப்பனாக கிளிகளின் பெற்றோருக்குப் பிறந்த இரண்டு கிளிகள் பற்றிய சம்பவத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துரைக்கிறார்—
கிளி, ஒரு முனிபுங்கவரிடம் சொல்கிறது——-எனக்கும் இன்னொரு கிளிக்கும் தாயும் ஒருத்தி; தகப்பனும் ஒருவனே !
நான், ஆஸ்ரமவாசிகளான ரிஷிகளாலும், இன்னொரு கிளி பசுமாம்ஸம் தின்பவர்களாலும் வளர்க்கப்பட்டோம்.
நான், தினந்தோறும் முனிவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன்; அந்தக் கிளியோ மாட்டிறைச்சி உண்பவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறது.
நான் பேசும் பேச்சுக்களின் தன்மையையும், அந்தக்கிளி பேசும் பேச்சுக்களின் தன்மையையும் கேட்டு, இவற்றிலுள்ள வேறுபாட்டை
நீ தெரிந்துகொண்டு இருக்கலாம். இவற்றிலிருந்து, குணங்களும் குற்றங்களும் —- நல்ல பண்புகளும், தீய பண்புகளும் ,
சேர்க்கையால் ஏற்படுகின்றன என்று சொல்லிற்று)
வேடுவச் சேரியிலே கிளி போலே அவர்கள் பழக்கி வைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய்
அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே ஊணும் வ்ருத்தியும் தனக்கும் ஊணும் விருத்தியுமாய்
தனது பிறவிக்கு உரிய போகங்களில் ஆசார சம்ச்காராதிகளிலும் புதியது உண்ணாதே ராஜ போக விருத்தங்களான
ஜூ குப்சித விஷயங்களிலே தனக்குப் பேறும் இழவும் ஹர்ஷ சோகங்களுமாய்
ராஜ குமாரன் என்று தன்னடி அறிவார் சில ரிஷி ப்ராயர் உண்டானாலும் அவர்களுக்கு கிட்ட ஒண்ணாத அவஸ்தையை யுடையவனாய்
இப்படி பிராந்த சித்த சபரத்வாத்ய அவஸ்தை யோடு யாவஜ்ஜீவனம் நடக்கில் உத்தர ஜன்மங்களிலும்
ஒரு யோக்யதை பெற விரகு இல்லாதபடி தட்டுப் பட்டு நிற்குமா போலே
இவனும் தேஹாத்மா அபிமானாதிகளாலே தன்னுருக் கொடுத்து வேற்று உருக் கொண்டு நிற்க –
அந்த ராஜ குமாரனுடைய லஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார் சில தார்மிகர் ஒரு விரகாலே
இவனை மீட்கப் பெற்று அபிமானிக்க
இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தர அபிமானத்தை வழி விலக்கி திருஷ்ட அத்ருஷ்ட சம்ச்காராதிகளாலே
உத்தர உத்தர போக தத் உபாயங்களுக்கு யோக்யனாம்படி விரகு செய்து
(த்ருஷ்ட ஸம்ஸ்காரம்—-ஸ்நானம், வஸ்திரம் இவை-அத்ருஷ்ட ஸம்ஸ்காரம் — செளள , உபநயனங்கள் இவை
ஸாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்தல், வஸ்திரம் உடுத்தல், ,பிற ஆசாரங்களை அறியும்படி செய்தனர்)
இவனுக்கு ஸ்வ ஜாதி அனுரூபமான குண வ்ருத்தங்களை தங்கள் உபதேச அனுஷ்டானங்களாலே குடி புகுர விட்டு
இவனுக்கு அநேக தோஷ த்ருஷ்டங்களான சபராதி போகய சூத்திர விஷயங்களை அருவருப்பித்து
ராஜாதி போக்யங்களான அதிசய புருஷார்த்தங்களை ஆய்ந்து எடுக்க வல்ல அளவுடைமையை யுண்டாக்கி நிறுத்துமா போலே
இவ் வாத்மாவுக்கு சில தார்மிகர் பித்ராதி முகேன நொடித்து –
புமான் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப -சரீராக்ருதிபேதா அஸ்து பூயைத கர்மயோ நய -ஸ்ரீ விஷ்ணு புராண-என்கிறபடியே
(ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— ஒவ்வொருவருக்கும்
சரீர அமைப்பில் ஏற்பட்ட வேறுபாடானது,அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உண்டானவை—)
உரு வியந்த இந் நிலைமையை உணர்த்தி
அதுக்கு அனுரூபமான புருஷார்த்த தத் உபாயங்களிலே அன்வயிக்கலாம் படி விரகு செய்து
உடம்பு தின்றார் படி அன்றிக்கே ஒரு வெளிச் சிறப்புடையார்க்கு வரும் குண விருத்தங்களை யுண்டாக்கி
ஹேய உபாதேய விபாக ஷமனும் ஆக்கி நிறுத்தின அளவிலே –
இவனுடைய அடி யுடைமையையும் -சில தார்மிகர் அடியாக வந்த யோக்யதையும் -அளவுடைமையும் நேராகக் கண்டு
பரம காருணிகனான பரம சேஷியாலே ப்ரேரிதராய்த்
தாங்களும் காருணி கோத்தமராய் இருப்பார் சில தேசிகர்
ஈச்வரஸ்ய ச சௌஹார்த்தம் யத்ருச்சா ஸூ க்ருதம் ததா விஷ்ணோ கடாஷம் அத்வேஷம் ஆபிமுக்யம்
ச சாத்த்விகை சம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்தி ஹேதவ –என்கிறபடியே
(ஜீவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென்று ஈச்வரன் எண்ணுவது
ஜீவனுக்குத் தற்செயலாக வரும் புண்ய கர்ம பலன்
ஜீவனுக்கு எம்பெருமானின் கடாக்ஷம்
ஜீவனுக்கு, எம்பெருமானிடத்தில் இருந்த த்வேஷம் போவது
ஜீவனுக்கு, எம்பெருமானின் கல்யாணகுணங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்
ஜீவனுக்கு, ஸத்வ குணம் உள்ளவர்களுடன் ஸ்நேஹம் —
இந்த ஆறும், ஒருவனை, மிகவும் நல்ல ஆசார்யனிடம் சேர்த்துவிடும் )
நேர்பட்டு அந்த ராஜ குமாரனுக்கு சில ராஜ அந்தரங்கர் நேர்பட்டு பிறவியை உணர்த்தி
மேலுள்ள ஹித தமங்களையும் பிரிய தமங்களையும் தெரிவித்து
ஒரு விரகாலே ராஜாவுக்கும் ராஜ குமாரனுக்கும் பரஸ்பர சம்ச்லேஷ ஆகாங்ஷையை உத்தமிக்குமா போலே
இவனுக்கும்
நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஜ்ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா சேஷா ஹி பரமாத்மன –என்றும்
(ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை—
அவன் , ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ஸ்வரூபமாக உடையவன். அவன் பகவானுக்கு அடிமை.
பகவானையே அண்டி இருக்கிறான்.அவனது கைங்கர்யத்துக்காகவே இருக்கிறான்.)
தாஸ பூத ஸ்வ தஸ் சர்வே ஹி ஆத்மன பரமாத்மன -என்றும்
(ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சிவன் சொல்கிறார் — எல்லா ஆத்மாக்களும், பரமாத்மாவுக்கு இயற்கையாகவே தாஸர்கள்.
ஆகையால், நானும் உனக்குத் தாஸன் என்று நினைத்து வணங்குகிறேன் )
-பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு யாதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய
ஸ்ரீ யபதி நாராயணன் உடனே குடல் துவக்கத்தைத் தெளிவித்து
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே —
இவனுக்கு தத் ப்ராப்தி உபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே தங்களுக்கு
பொன்னுலகையையும் புவனியையும் ஆளுகையாக உகந்து -அதடியாக
அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கி சுரக்கும் தேசிகரைப் போலே இத் தேசிகர் இவ்வாத்மாவுக்கு
அஜ்ஞ்ஞான சம்சய விபர்யயங்கள் தீர வேண்டும் என்று மிகுந்து குறைவறச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு
தத்த்வேன யச் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ இத்யாதிகள் படியே
ஈஸ்வரனுடையவும் ஈசிதவ்யங்கள் யுடையவும் ஸ்வரூப ஸ்வ பாவ சம்பந்தங்களும்
இவற்றின் த்யாஜ்ய உபேதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும்
இவற்றின் கதி பிரகாரங்களும்
உக்த அனுக்தங்களான மோஷ விரோதிகளும் ஆகிற இவ் வர்த்தங்கள்
முமுஷூவான இவ்வாத்மாவுக்கு ஜ்ஞாதவ்யங்கள் –
(தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ போகாபவர்க தாதுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராணரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய ||
ஜீவர்கள், அசேதனம் , ஈச்வரன் என்னும் தத்வத்ரயம் , அவற்றின் ஸ்வபாவங்கள் ( குணங்கள் ) , இவ்வுலக போகங்கள்,
மோக்ஷம் , மோக்ஷ சாதனங்கள்,ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம், இவைகளையெல்லாம் உள்ளபடி விளக்கி ,
எந்த உதார புருஷரான ஸ்ரீ பராசரர் , ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளினாரோ , அந்த ருஷிச்ரேஷ்டருக்கு நமஸ்காரம்)
இவ் வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய சப்த ராசியிலே சார தமமான ரஹஸ்யத்திலே
பிரதிதந்திர சார உத்தாரேண சங்க்ரஹிக்கப் படுகின்றன –
திருவுடன் வந்த செழு மணி போல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே –
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன்
என்று என்னுள் புகுந்து இருந்து -2-7-3-
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
மலரடி சூடும் -திருவடிகளின் போக்கிய அதிசயம் -திருவடிகளில் மலர்களை சூடும் பாக்யம் என்றுமாம் —
மற்ற கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்
நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று –
ஆச்சார்யர்களது உபதேசமும் அபிமானமும் மட்டுமே உஜ்ஜீவகார உபாயம்
கர்ம அவித்யாதி சக்ரே பிரதிபுருஷ மிஹா நாதி சித்ர ப்ரவாஹ
தத் தத் காலே விபக்திர் பவதி ஹி விவிதா சர்வ சித்தாந்த சித்தா
தல்லப்த ஸ்வாவாகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்ய மாண கதாசித்
முக்தைச்வர்ய அந்த சம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித் –
(ஸம்ஸாரத்தில் உழலும் ஒவ்வொரு ஜீவனும் , கர்மாக்கள், அறியாமை போன்ற வினைகளில் சிக்குண்டு ,
எத்தனையோ வருஷங்களாக, அல்லல்படுகிறான். பூர்வ கர்மாக்கள் பலன் கொடுக்கத் தொடங்கும்போது,
பகவானின் கருணை கிடைக்கிறது–இது மிக்க குறைவான ஜீவன்களுக்கே கிடைக்கிறது –இப்படிப் பெறும் கருணையால்,
இவன் பெருத்த ஐச்வர்யத்தை அடைகிறான் –இந்த ஐச்வர்யம் நித்யஸூரிகள் பெரும் ஐச்வர்யத்தைப் போன்றது)
அநாதி கர்ம சுழற்சியில் உழன்று இருக்க–ஸூஹ்ருதா பரிணாம காலத்தில் -சஹஜ காருண்யத்தால் விஷயீ கரிக்கப்படுகிறோம்
அத்யந்த தண்ணியரான நமக்கும்–ஆச்சார்ய கடாக்ஷம் பெற்று -ஹேய உபாதேய விவேக ஞானம் பெற்று –
மனசாலும் கூட எண்ண முடியாத நிரதிசய ஆனந்த யுக்த பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யம் அருளுகிறார்
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply