ஆச்சார்யர்களுக்கு -வண்டு / குருகு கொக்கு நாரை / ஹம்ஸ/ குயில் /கிளி / மயில்/ வள்ளல் பெரும் பசு /மேகம் –சாம்யம்- பல படிகளில் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்–

எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே —
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு கழித்து உழல்வீர்க்கு -நீர்ப்பூ தாமரை செங்கழு நீர் -ஷீராப்தி சாயி வ்யூஹம்
நிலப்பூ -மல்லிகை முல்லை -விபவவதாரங்கள் -மரத்தில் ஒண் பூ -சேணுயர் வானத்தில் இருக்கும் பரவா ஸூ தேவன் –
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும் குடக் கூத்தற்கு ஏன் தூதாய் நுங்கால் கள் ஏன் தலை மேல் கெழுமீரோ நுமரோடே –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம்கண்ணா யுன் கோலப் பாதம் —
பரம பாகவதர்கள் சபரிவாரராக வந்து தலை மீது திருவடிகளை வைக்கவே பிரார்த்திக்கிறார்
அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -ஆசார்யவத் ஆசார்ய புத்ரே ஆசார்ய தாரேஷூ ச வ்ருத்தி-நுமரோடே நும்கால்கள் ஏன் தலை மேல் கெழுமீரோ –
தக்க மரத்தின் தாழ்சினை ஏறித் தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே -சீரிய சிங்காசனத்து எழுந்து அருளி ஆசார்யன் சீரிய போக்யமான அர்த்தங்களை உபதேசிக்க தாழ நின்று கேட்கும் சிஷ்யர்களைப் போலே என்றது ஆயிற்று
தேசிகாஸ் தத்ர தூத –ஸ்ரீ தேசிகன் –
குயில் மயில் -நன்னலப் புள்ளினங்காள் –புள்ளினங்காள் புல்லாணி செப்புமினே –புள்ளும் சிலம்பின கான் -ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் —
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதி ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம —
ஏக க்ருதீ சகுந்தேஷூ யோந்யம் சக்ராத் ந யாசதே -தேவேந்த்ரனைத் தவிர எவரிடமும் பல்லைக் காட்டாத பஷி -வெண் பல் தவத்தவர் சாதக பஷி -பரமைகாந்திகள்
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -அவரவர்கள் அதிகா அனுகுணமாக லலிதமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கும் குருக்களே

——————————————————————————————-

அறுகால சிறு வண்டே -விசேஷார்த்தம் –

1- வண்டு மதுவ்ரதம் -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை –எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே –தேனை நன்பாலை கன்னலை யமுதை —
தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி ஸ்திதே ரவிந்தே மகரந்த நிர்ப்பர மதுவ்ரதோ நே ஷூ ரகம் ஹாய் வீஷதே-ஸ்ரீ ஆளவந்தார்

2- வரி வண்டு தேதென வென்று இசை பாடும் -யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் –வண்டினங்கள் காமராக்கள் இசை பாடும் -எப்பொழுதும் முரல்வதே பணி-
மச்சித்தா -மத்கதப்ராணா-போதயந்த பரஸ்பரம் -கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –அநவரதம் எம்மானைச் சொல்லிப் பாடுவதையே போது போக்காகக் கொண்டவர்கள் –
யாழினிசை வேதத்தியல் திருவாய் மொழியைப் பாடிக் களிப்பவர்கள்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் -என்றும்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -என்றும் திரு நாமங்களையும் திருக் குனங்களையுமே பாடித் திரிவர் –

3- வண்டுக்கு சஞ்சரீகம் என்றும் பெயர் -மது உள்ள இடங்கள் எங்கும் பறந்து திரியும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்கிற உகந்து அருளின திருப்பதிகள் தோறும் மண்டி
எண்டிசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்தகரராமின் திரிந்து -என்று பூதத் ஆழ்வார் நியமித்த படியே
கொங்கும் குடைந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து -பதியே பரவித் தொழும் தொண்டர்களாய் இருப்பவர்கள் –

4-வண்டுகளுக்கு எங்கும் செல்லவும் தடை இல்லையே -கர்ப்ப க்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திரு முடி மேலும் தாராளமாக புகுந்து களிப்பதை காணா நிற்கிறோம்
அது போலே பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய -என்றும் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க -என்றும் இருக்க
அதிகார செல்வதுடன் தடை இன்றி உள்ளே புகுந்து ஒழிவில் காலம் எல்லாமுடனாய் இருந்து வழு விலா அடிமை செய்து கொண்டு இருப்பவர்கள்

———————————————————————————————–

கொக்கினங்காள் குருகினங்காள் –அஞ்சிறைய மட நாராய் –செங்கால மடநாராய் -கொக்கு குருகு நாரை சஜாதீயங்கள் –

1- ஆசறு தூவி வெள்ளைக் குருகே -ஆசறு என்றது -நிஷ் களங்கமான -வெள்ளை -சுத்த சத்வமயம் -தேக சுத்தியும் மானஸ சுத்தியும்
ய ஸ்மரேத் புண்டரீகாஷம் ச பாஹ்யாப் யந்தரச் சுசி –நீராடி சுத்த வஸ்த்ரம் எச்சல் தீட்டு படாத பாஹ்ய சுத்தியையும்
காம குரோத மோக லோப மத மாத்சர்யாதிகள் தீய குணங்கள் இல்லாத -நெஞ்சில் அழுக்கு இல்லாத ஆந்தர சுத்தியையும் -இரண்டிலும் குறை அற்றவர்களைச் சொல்லிற்று-

2-வாயும் திரை உகளும் கானல் மட நாராய் -உணவைத் திரட்டுவதால் உண்டான ஊக்கத்தால் -அலைகள் வந்து கிட்டி மேலே தாவிப் போகா நிற்கிற கடலிலே அசையாமல் இருக்கிற நாரையே —
கிரயோ வர்ஷ தாராபி ஹன்யமாநா ந விவ்யது அபி பூய மாநா வ்யசனை யதா அதோ ஷஜ சேதச -என்று எம்பெருமான் பக்கலிலே நெஞ்சை ஊன்ற வைத்து நிற்பதனால்
சம்சார கடல் அலைகளான தாபத் த்ரய வ்யசனங்கள் மேன்மேலும் வந்து நெருங்கா நின்றாலும் அவற்றுக்கு வருந்தாமல் இருப்பவர்கள்

3-வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்-என்றும் -காதல் மென்பெடையோடுடன் மேயும் கரு நாராய் -என்றும் சொல்லுவது
தங்களை பிரியில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்கள் உடன் கூடி மனத்துக்கு இனிய கால ஷேப கூடங்களில் பகவத் குண அனுபவம் பண்ணுபவர்கள்

4-செங்கால மட நாராய் –நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக -என்றது சரீரம் அர்த்தம் பிராணம் ச சத்குருப்யோ நிவேதயேத்-என்னும்
அடைவிலே ஆதாரத்தோடு சமர்ப்பித்த வற்றை அங்கீ கரிக்கும் தன்மை உடைய ஆசார்யர்கள் –

5-உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு –அல்ப உணவுகளை பொருள் படுத்தாமல் கனத்த உணவுகளையே கொள்ளும் கொக்கு போலே
அசாரமாயும் அல்ப சாரமுமாயும் உள்ள அர்த்தங்களைக் கொள்ளாதே சார -சாரதர -சாரதமங்களான-அர்த்தங்களையே கொள்ளுமவர்கள்

ஆக
உள்ளும் புறமும் ஒத்த சுத்தியை உடையவர்களாய் –
எம்பெருமான் பக்கலிலே நெஞ்சை ஊன்ற வைத்து சம்சார தாபங்களால் தடுமாறாத வர்களாய்-
தங்களைப் பிரியில் தரிக்க மாட்டாத பேரன்பு வாய்ந்த சிஷ்யர்களுடன் கூடி இருந்து பகவத் குண அனுபவம் பண்ணுபவர்களாய்-
க்ருதஜ்ஞர்களான சிஷ்யர்கள் ஆதாரத்தோடு அளித்த உடல் பொருள் உயிர் முதலானவற்றை ஏற்றுக் கொள்பவர்களாய் –
உயர்ந்த சாஸ்த்ரங்களிலே அவதானம் உடையவர்களாய் இருக்கும் மகான்களையே நாரை கொக்கு குருகு என்பர் –

—————————————————————————————————————————————————

ஹம்ஸ விசேஷார்த்தம் –

1-சாந்தோக்யம் -ஜா நஸ்ருதியின் உபாக்கியானம் -இரண்டு ரிஷிகள் ஹம்ஸ ரூபியாய் பறந்து போக -நிழல் படாமல் போக என்ன -இவர் என்ன ரைக்வர் போல ப்ரஹ்ம ஞானியோ என்ன -ரைக்வரைத் தேடி ப்ரஹ்ம ஞான உபதேசம் பெற்றான் –

2- ஹம்சோ யதா ஷீரமிவ அம்புமிச்ரம் -அது போலே இவர்களும் சாஸ்த்ரங்களில் சார அசாரங்களை பகுத்து அறியும் தன்மை விவஷிதம் –

3-அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த –அன்னமாய் நூல் பயந்தான் -சிஷ்யர்களை குறித்து சாஸ்த்ரங்களை உபதேசிக்கும் தன்மை விவஷிதம் –

4-ந பத்நாதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்த்த மாம் பஸி-சேற்று நிலத்தில் மனம் பொருந்தாது -மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார்
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே அழுந்தார் –

5-பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று நடையோடு இயலி –ஹம்சம் நடை பயிலும் பாச்சார்யர் அன்ன நடை அணங்கான பிராட்டி உடைய புருஷகாரத்தை அனுசரிப்பார் -தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷீ -ஸ்ரீ தேசிகன் –

6-அன்ன மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் வீற்று இருக்கும் –தாமரை இலையாக குடையாகக் கொண்டு வீற்று இருக்கும் –
அக்கமலத்து இலை போலும் திரு மேனி யடிகள் -பத்மபத்ர நிபாச்யமளமான அந்த திரு மேனியை சம்சார துக்க தாபம் தட்டாதபடி ஒதுங்க நிழலாய் உடையராய் இருப்பர்-வாஸூ தேவ தருச்சாய –

7-அன்னம் செந்நெல் ஒண் கவரி வீச வீற்று இருக்கும் -பரிபக்குவமான ஞானத்தை உடைய சிஷ்யர்கள் சாமரம் சமர்ப்பிக்க -கைங்கர்ய வ்ருத்திகளைச் செய்ய ஆசார்யர்கள் வீற்று இருப்பார்கள் –

8-சங்கமவை முரலச் செங்கமல மலரை ஏறி அன்னமலி பெடையொடும் அமரும் -சுத்த ஸ்வபாவர்கள்-சிஷ்யர்கள் -சங்கு -அன்னவர்களின் ஸ்துதி கோஷங்களை கீட்டுக் கொண்டு வீற்று இருக்கும் ஆசார்யர்கள் –

9-வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் நாடும்-வண்டுகளின் மிடற்று ஓசை பாட்டாகக் கொண்டு இருக்கும் ஹம்சம் –
வண்டுகள் தேனையே போக்யமாகக் கொண்டு இருப்பது போலே -உளம் கனிந்து இருக்கும் அடியவர்கள் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனாகிய
பகவத் விஷயத்தையே போக்யமாகக் கொண்டு இருக்கும் பாகவதர் இசையை கீர்த்தியைப் பாடும்படி எழுந்து அருளி இருப்பவர்கள் ஆச்சார்யர்கள் –

———————————————————————————-

குயில் விசேஷார்த்தங்கள்–

1-போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூங்குயில்காள்–புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே —
புன்நாகத் தல்லஜம் அஜஸ் ரச சஹச்ர கீதி சே கோத்த திவ்ய நிஜ சௌர பமாம நாம –
திருப்புன்னை கீழே ஒருவர் இருக்கும் இடத்திலே நம் முதலிகள் பத்துப் பேர் கூட நெருங்கிக் கொண்டு இருக்கச் செய்தே —
குயில் நின்றால் பொழில் சூழ் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடிக் களிக்குமவர்களையே குயில்கள் -என்கிறார் —

2–மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்தத் தீம் பலங்கனி தேனது-சாமான்ய சாஸ்த்ரங்களிலே வாய் வைத்து பின்பு அத்யாத்ம போக்ய விசேஷ சாஸ்த்ரங்களிலே போது போக்கும் பக்தர்களின் படி சொல்லிற்று —

3–குயில்களுக்கு பரப்ருதம் என்றும் பெயர் -காக்கையின் கூட்டிலே கொண்டு விடப்பட்டு அவற்றாலே போஷிக்கப் படும் என்றபடி -பரனான ஆச்சார்யனால் போஷிக்கப் பட்டு வளரும் குருகுல வாசிகள் -என்றபடி –

4-சில கால விசேஷங்களில் குயில் தனது மிடற்று ஓசை காட்டி வீறு பேரும் -ஆச்சார்யர்களும் கம்பீரமாக உபந்யசித்து மற்றைவர்களில் காட்டில் தங்கள் வைலஷண்யத்தை வெளிக் காட்டுவார்கள் –

5-பிக கூஜதி பஞ்சமம் –குயில் கூவும் இசையானது பஞ்சமம் ஆகும் -ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளும் ஐந்தாவது வேதமோ என்னலாம் படி இருக்கும் –
அல்லி மலர்ப் பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர் சொல்லுமவிடு ஸ்ருதியாம் -ஞான சாரப் பாடல்

6-குயிலே என் வேங்கடவன் வரக் கூவாய் –குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் -என் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே -மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே —
எம்பெருமானைக் கூவி வருவிக்க வல்லது குயில் -உக்தி மாத்ரத்தாலே எம்பெருமானை கைப் படுத்த வல்லவர்கள் ஆசார்யர்கள் –

———————————————————————————————————————————-

கிளி விசேஷார்த்தம் —

1- சுக பஞ்சர பந்தஸ்தே மதுராணாம் கிராம்பலம் -கிளி மதுரமான வாக்குப் படைத்ததனால் பந்தப்பட்டு இருக்கும் -ஆச்சார்யர்களும் தங்கள் மதுரமான வாக்குப் படைத்ததனால் சிஷ்யர் போல்வாரின் நிர்பந்தங்களுக்கு உள்ளாகி இருப்பர் –

2-சொன்னதைச் சொல்லுமாம் கிளிப் பிள்ளை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாம் அதனைப் பேசும் ஏக கண்டர்கள்

3- கிளி மேனி அழகில் மேம்பட்டது ஆசார்யர்கள் வடிவு அழகும் சிஷ்யர்களுக்கு உத்தேச்யம் -ஆசார்யன் சிஷ்யன் ஆருயிரைப் பேணுமவன் தேசாரும் சிஷ்யன் அவன் சீர் வடிவை –

4- கிளி வலையில் அகப்படும் -உன் தாமரைத் தடம் கண் வழிகளின் அகவலைப் படுப்பான் -என்றபடி எம்பெருமான் திருக் கடாஷ வலையிலே அகப்படுவார்கள் –

5-வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மட கிளியை கை கூப்பி வணங்கினாளே-கொண்டாட்டத்துக்கு கொள்கலமாய் இருக்கும் -ஆச்சார்யர்களும் உகந்து தொழும் படியான பெருமை படைத்த சிஷ்யர்கள் -நஞ்சீயர் நம்பிள்ளை போல்வார் –

6-இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை -நல்ல மது பதார்த்தங்கள் ஊட்டப் பட்ட கிளி -எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமம் —நமோ நாராயணமே-என்று பரம போக்யமான திருமந்தரம் போன்றவற்றை ஊட்டப் பெற்ற சிஷ்யர்கள் விவஷிதம் –

———————————————————————————————————————————

-இடையில் நான் வளர்த்த கிளிகாள் –மயில்காள் –என்றும் -புற்றர வல்குல் புன மயிலே -என்றும் சொல்லப்படும் மயில் விசேஷார்த்தங்கள்–

1- சந்தோஷ காலங்களில் தோகை விரித்து கூத்து ஆடும் -ஆச்சார்யர்களும் சிஷ்யர்கள் இடம் உகப்பு மிகுந்தவாறே மறைத்து வைத்து இருந்த ரகஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளுவார்கள் –

2–மயில் முகிலைக் கண்டவாறே துள்ளும் -ஆச்சார்யர்களும் முகில் வண்ணனுடைய பிரஸ்தாபம் வந்தவாறே
கார்முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் சசம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார்கள் –

3-மயிலின் நிழல் பட்டவாறே நச்சுப் பூச்சிகள் நலியும் -யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே ந தாத்ரா சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷதஸ் கரா -என்றபடி பசி பகை தீயன எல்லாம் பாறி ஒழியும் –

4-மயில் தன்னை நிர்பந்தித்தவர்களுக்கே இறகு தரும் -பெரும் பாலும் ஆசார்யர்கள் அனுவ்ருத்தி பிரசன்னாசார்யார்களே எம்பெருமானார் போல சிலரே க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர்கள் –

5-கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து -என்றும் -மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா -என்றும் மயிலின் ஏக தேசம் எம்பெருமான் திரு முடி மேல் ஏறி விளங்குவது போலே ஆச்சார்யர்களும் எம்பெருமான் திரு முடி மேல் ஏறித் திகழ்வார்கள் —

————————————————————————————————————————————————

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் -என்றும் -மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -என்றும் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்றும்
பசுக்களாகச் சொல்லப் படுபவர்கள் ஞானம் மிக்க ஆசார்யார்களே -அவற்றின் விசேஷ அர்த்தங்கள் —

1- கோ தானம் பண்ணும் போது கவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுர்தச-என்பர் -பதினான்கு வித்யைகளும் ஆசார்யர்கள் இடம் நிரம்பி இருக்கும் 0-

2- பரம பாவனம் பசி -பரம பவித்ரர்கள் ஆசார்யர்கள் –

3-பசுவின் மல மூத்ரங்களும் பரம உத்தேச்யம் -வம்புப் பேச்சுகளும் ஆசார்யர் திரு வாக்கில் -கலை இலங்கு மொழியாளர் -போலே சாஸ்திர அர்த்தங்களே ஆகும்

4-யதா யதா ஹி தர்மஸ்ய கலா நிர் பவதி பாரத -அப்யுத்தா நம் அதர்மஸ்ய ததா ஆத்மானம் ஸ்ருஜாம் யஹம் -கோ தானம் சிறந்தது என்பர் -ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் —

5-பசுக்கள் கிருஹங்களில் புழக் கடைகளில் -கடைசி ஸ்தானத்தில் வந்து நிற்கும் -அடியார் அடியார் அடியார் தம் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே —
தவப் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யச்ய ப்ருத்ய —

6- பசுக்கள் நான்கு முலைக் கண்களால் பால் சுரக்கும் -ஆசார்யர்கள் பாலே போன்ற சீரிய பொருளை -எம்பெருமான் கட்டளை –தம் ஹார்த்தமான அனுபவ பரீவாஹம் வேண்டுதல் —
சிஷ்யர்களின் பிரார்த்தனை -அது இல்லா விடிலும் அவர்கள் அனர்த்தம் கண்டு பொறாமை –இந்த நான்கு ஹெதுக்களும் நான்கு முலைக் கண்கள் —

7-பசுக்களுக்கு புல்-தண்ணீர் -தானியங்களின் பொட்டு-சாமான்ய சாஸ்திரங்கள் தானியங்கள் ஸ்தானம் —உபநிஷத் போன்றவை -புல்லின் ஸ்தானம் -அருளிச் செயல் ஓதுதல் தண்ணீர் ஸ்தானம்

8-உட்கொள்ளுவது -எதுவானாலும் வெளி வருவது அமிர்தமே -ஆச்சார்யர்களும் அமுத மென் மொழியார்கள் –

9-கன்று இல்லை என்னில் பசு சுரவாது -ஆசார்யர்களுக்கும் ச்ரோதாக்கள் இல்லை என்றால் சொல்லத் தோன்றாது —

10-மா நிதி கபிலை -என்கிறபடியே எம்பெருமான் நாடொறும் காலையில் விஸ்வரூபத்தில் பசுக்களை கண்டே யாக வேணும் –ஆழ்வார்கள் ஆசார்யர்கள் தானியங்களை நிச்சலுமே கேட்க வேண்டும்

11-ஆனின் மேய ஐந்தும் நீ -பஞ்ச கவ்யங்களை தந்து புனிதமாக்கும் பசு –பஞ்ச சம்ஸ்காரம் –அர்த்த பஞ்சகம் –பரத்வாதி பஞ்சகம் –போன்ற ஐந்து ஐந்தான வற்றை அளித்து புனிதர் ஆக்குவார்கள் ஆசார்யர்கள் —

12- ஏற்ற கலங்களை நிறைக்கும் பசுக்கள் -வாய்த்த சத்பாத்ரங்களான சச் சிஷ்யர்களை அமுதூட்டுவார்கள் ஆசார்யர்கள் –

13-பசுக்கள் ஏந்தி வைக்க யுரிய பாலையும் சுரக்கும் -முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவதும் உண்டு –ஆசார்யர்கள் ஸ்ருதிப் பிரகாசிகா –ஈடு–போன்ற ஸ்ரீ ஸூ க்தி அமுதங்களையும் -தார் காலத்துக்கு ஏற்ற செவிக்கினிய செஞ்சொல் களையும் பெய்து அருள்வார்கள் –

—————————————————————————————————-

போவான் வழிக் கொண்ட மேகங்களே –என்றும் -மேகங்களே உரையீர் -என்றும் -ஆச்சார்யர்களையும் எம்பெருமானைப் போலே மேகங்களாகச் சொல்வர் —

1-மேகம் கடல் நீரை முகந்து கொண்டு வர்ஷிக்கும் -சுருதி சாராத் –திராவிட வேத சாரம் -உபய வேதக் கடல்களில் உள்ள ரசப் பொருள்கள முகந்து கொண்டு வர்ஷிப்பார்கள் –

2-மேகம் உப்புத் தண்ணீரையும் தன் வாய்க் கொண்டு மதுரமாக்கி வர்ஷிப்பது போலே -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தின வாறே சர்வ சர்வோ உபய ஜீவ்யம் ஆகுமே –

3-மேகங்கள் உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து என்றபடியே உலகங்கள் எல்லாம் சென்று வேண்டிய இடத்தே பெய்யும் –
ஆச்சார்யர்களும் எண்டிசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து என்ற பூதத் ஆழ்வார் நியமனப்படியே சிஷ்யர்கள் உள்ள இடம் எங்கும் சஞ்சரித்து நல்ல அர்த்தங்களை பெய்து உபதேசிப்பார்கள்

4- மேகமானது பள்ளமான இடங்களிலே பெய்து அவற்றைப் பூரிக்கும் -இவர்களும் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று இருக்கும் பரம சாத்விகர்கள் இடத்தே அர்த்தங்களைத் தேக்கி வைப்பார்கள் —

5–மேகம் எப்போதும் பெய்யாது -சில கால விசேஷங்களில் பெய்யும் -ஆச்சார்யர்களும் தாபம் மிக்கவர்கள் வேண்டும் காலத்திலும் -முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவதைப் போலே தாங்கள் தரிக்கைக்காகவும் அர்த்தங்களை வர்ஷிப்பார்கள் –

6-மேகம் பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யா விடில் தீங்கு மலியும் -ஆச்சார்யர்களும் உபதேசிக்க வேண்டிய காலத்தில் உபதேசியா விடில்
தேஹாத்மா ப்ரமம்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா ப்ரமம் –அந்ய சேஷத்வ ப்ரமம் -ஸ்வ ரஷணே ஸ்வ அந்வயம்-ஆபாச பந்து சங்கம் -விஷய ப்ராவண்யம் முதலான தீங்குகள் மலியும் —

7-திங்கள் மும்மாரி பெய்து –மகம் வாழ்விக்கும் -ஆச்சார்யர்களும் ரகஸ்ய த்ரயம் –தத்வ த்ரயம் -ஸ்ரீ கீதை ஷட்க த்ரயம்-தத்வ ஹித புருஷார்த்தங்கள் -பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகள் -போன்ற மும் மாரிகளை பெய்து வாழ்விப்பார்கள் –

8–மேகம் எவ்வளவு வர்ஷித்தாலும் வர்ஷித்தோம் என்று இராமல் மேன்மேலும் வர்ஷிப்பதிலேயே ஊக்கம் கொண்டு இருக்கும் –
ஆச்சார்யர்களும் உபன்யாசங்களையும் உபதேசங்களையும் வழங்கி திருப்தி பெறாமல் மென்மேலும் குதுகூலத்துடன் வழங்கிக் கொண்டே இருப்பார்கள் –

9;; மேகம் தனது பேறாகவே வர்ஷிக்கும் -அநந்ய பிரயோஜனர்களாய் தங்கள் பேறாகவே பொழிவார்கள் –

10-மேகம் சில சமயங்களில் நாலு சிறு துளிகளைப் பெய்து போகும் -மற்றும் சில சமயங்களில்
கடல் வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்பட நீர் முகந்து ஏறி எங்கும் குடவாய்ப் பட நின்று மழை பொழியும் -தாழாதே சார்ங்கம் உத்தைத்த சர மழை போல் -என்கிறபடியே கனக்கப் பொழியும்
ஆச்சார்யர்களும் அப்படியே -செவி வழியே நாலு வார்த்தைகளை உபதேசிப்பதும் -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் போலே வாங்கக் குடம் நிறைய பொழிவதும் உண்டு –

11-மேகம் சில இடங்களில் சில காலங்களில் பெய்யும் நீர் முத்தாகி மேன்மை பெரும் -ஆசார்யர்கள் சில வ்யக்தி விசேஷங்களில் உபதேசிக்கும் அர்த்த விசேஷங்கள் முத்துப் போலே பிறருக்கும் அணி கலமாய் னிருந்து அனர்கமாய் இருக்கும் –

12-மேகம் பெய்த நீர் நதிகள் குளங்கள் ஏரிகள் கிணறுகள் சேர்ந்து அனைவருக்கும் உப ஜீவ்யமாயும் மற்றை இடங்களில் தேங்கினால் வாய் வைக்க ஒண்ணாதாயும் இருக்கும்
ஆசார்யர்கள் உபதேசமும் நல்ல ஞானத் துறைகளிலே சேர்ந்தால் உபதேச பரம்பரையில் வந்து உப ஜீவ்யமாகும் -அநாதிகாரிகள் பக்கலிலே தேங்கினால் அப்ரயோஜனமாய் ஒழியும் –

13- எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -பயிர்களால் ப்ரதீஷிகப் பட்டு அவற்றை வாழ்விக்கும்
நீர்காலத்து எறிக்கிலம் பழ விலை போல் வீழ்வேனை -என்கிறபடியே எறிக்கிலை போன்றவற்றை மாளச் செய்யும் –
ஆச்சார்யர்களும் அப்படியே -நாட்டில் நீசச் சமயங்கள் மாண்டன -நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது -தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது -என்பரே —

14–குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே -மேக விடு தூது -இராமானுசனையே ஆண்டாள் தூது விடுகிறாள்
1-மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் –மேலாப்பு மேல்கட்டு விதானம் -விசித்திர வர்ணங்கள் -கொண்டதாய் இருக்கும் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -ஸ்ருதிகள் நான்கும் -எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் -சகல சாஸ்திர விஜ்ஞானமே நாநா வித வர்ணம் –
சுதர்சன சகத்தில் சுதர்சன ஜ்வாலையே விதானம் என்பர் -அடையார் காமத் தலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும் படையோடு –இராமானுச முனி யாயின இந்நிலத்தே –என்றபடி -சேஷாவதாரத்வம் பிரசித்தம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீர் அரவணை -திரு மழிசைப் பிரான் –
2-மா முத்த நீர் சொரியும் நவ ரத்னங்களை சொரிந்த -ஸ்ரீ பாஷ்யம் –வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ கீதா பாஷ்யம் -நித்யம் என்கிற பகவத் ஆராதன பிரயோகம் -சரணாகதி கத்யம் -ஸ்ரீ ரெங்க கத்யம் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் -செமவைப்பான நிதிகள்
எம்பெருமானின் ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் சிஷ்யர் வர்க்கங்களுக்கு வர்ஷித்தவர் என்றுமாம் –
3-அளியத்த -மேகங்காள் -தயையுடைய-கிருபா மாத்ர பிரசன்னாசார்யர் இவர் என்றே பிரசித்தம் -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்குமே இவை உள்ளது என்பரே –
4- மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் -மின்னல் தோன்றப் பெறாத மேகம் பொழியாது -மின்னல் உள்ள போது கனத்த வர்ஷம் அணித்து என்று தோற்றுமே
எப்போதும் அர்த்தங்களை வர்ஷித்துக் கொண்டே இருக்கும் எம்பெருமானரையே இவ்வாறு சொல்லிற்று
ஆசை உடையோர்க்கு எல்லாம் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்
அன்றிக்கே ஆகத்து மின் எழுகின்ற யஜ்ஞ ஸூ த்ரம் விளங்கா நிற்கப் பெற்ற திருமார்பம் -இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே
மின் எழுகின்ற காஷாய சோபையைச் சொல்லிற்றாகவும்
5-வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் –வான் பரம பதம் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே —
அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ச்யதே –பரம பதத்தை தமக்கும் தம் அடியார்க்கும் உரித்தாகப் பெற்றுக் கொண்டு கிளர்ந்து எழுந்த எம்பெருமானாரே —
சோயம் ராமானுஜ முனி ரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத -என்றபடியுமாம் –
6-சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் -யாதவ பிரகாசரது சலம் கபடத்தைக் கொண்டு -யாத்ரை வழியில் தெரிந்து கொண்டு -கிளர்ந்து எழுந்த ஸ்வாமியே
தேவப் பெருமாளுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் தீர்த்தம் கொடுத்து விடாய் தீர்த்ததால் முகிலே
திருக் கோட்டியூர் நம்பி பக்கலிலே கபடமாக சொல்லி கோபுரத்தின் மேலே கிளர்ந்து எழுந்து வர்ஷித்த படியாகவுமாம்
7-சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் எம்பெருமான் சம்பந்தம் பெற்ற எம்பெருமானாரே —
மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் -நம் ஆழ்வார் சம்பந்தம் பெற்ற எம்பெருமானாரே என்றுமாம்
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் இராமானுசன் -பராங்குச பாத பக்தம் இராமானுஜம்
8-கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் -சம்சார மழை காலத்தில் தோன்றிய எம்பெருமானாரே –
9-மதயானை போல் எழுந்த –பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் —

————————————————————————————————————

ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading