ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
———————————————————————————————————————————————————————————————
பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-
1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய
அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள் –
அவை எவை என்னில் –
1- விசேஷண விசேஷ்ய சம்பந்தம் –
2- ரஷ்ய ரஷக சம்பந்தம் –
3-சேஷ சேஷி சம்பந்தம் –
4-பர்த்ரு பார்யா சம்பந்தம் –
5-ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் –
6-ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் –
7-சரீர சரீரி சம்பந்தம் –
8-தார்யா தாரக சம்பந்தம் –
9- போக்த்ரு போகய சம்பந்தம் –
1–இதில் -விசேஷண விசேஷ்ய சம்பந்தம் ஆவது –
a -பிரக்ருத்யர்த்த சங்கா நிவர்த்தகமாய்-
b –ஆஸ்ரய ஆஸ்ரயியாய்-
c –வ்யாவர்த்தக வ்யாவர்த்தமாய் இருப்பது ஓன்று —
a -பிரக்ருத்யர்த்த சங்கா நிவர்த்தகமாகையாவது-
சமஸ்த சப்த காரணமான அகார ஸ்வ பாவத்தாலே -தத் வாச்யனும் சமஸ்த சப்த வாச்யமான சிதசித்துக்களுக்குக் காரணமாம் இடத்தில்
நித்யங்கள் ஆனவை கார்யமாம் இடத்தில் அநித்யங்கள்ஆமே -என்கிற சங்கை உதிக்க –
அவை நித்ய ப்ரஹ்ம விசேஷணம் ஆகையாலே அநித்யத்வம் சங்க நீயம் என்று பரிஹரிக்குமதாகை —
b –ஆஸ்ரய ஆஸ்ரயியாவது–சௌக்ல்யம் படத்தைப் பற்றி யல்லது நில்லாதாப் போலே சிதசித்துக்கள் பகவத் ஸ்வ ரூபத்தைப் பற்றி யல்லது சத்தையற்று இருக்காய் –
c –வ்யாவர்த்தக வ்யாவர்த்தமாகையாவது -இவை பகவத் ஸ்வ ரூபத்துக்கு உண்டான இதர வ்யாவ்ருத்திக்கு பிரகாசகமாய்
வ்யாவர்த்யமான பகவத் ஸ்வ ரூபம் வ்யாவர்த்தகமான இவற்றை ஒழிய பிரகாசியாத படியுமாய் இருக்கை-ஆக -நித்ய கார்யா நாதித்வ ஸூசகம் இந்த சம்பந்தம் –
2- ரஷ்ய ரஷக சம்பந்தமாகை யாவது –
a –தாது சித்தமாய்
b -பிரக்ருத்யர்த்தா நந்தர பாவியாய்
c -உபய ஸ்வரூப உசிதமாய் இருப்பதொன்று —
a –தாது சித்தமாகையாவது –
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்தமான ரஷணம்-நிர்விஷயமாயும் நிராஸ்ரயமாயும் நில்லாமையாலே –
யேந ஜாதாநி ஜீவநதி -இத்யாதி பிரசித்தமான ரஷ்ய ரஷக ஸ்வ ரூபா பிரதர்சனமாகை –
b -பிரக்ருத்யர்த்தா நந்தர பாவித்வமாகை யாவது –
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் –திருவாய் -2-8-5–என்கிறபடியே -பிரக்ருத்யர்த்தமான காரணத்வத்துக்கு அநந்தரம் வேண்டுவது ஒன்றாகி –
c -உபய ஸ்வரூப உசிதமாகையாவது –
ரஷ்ய ரஷக ஸ்வ ரூபமான பாரதந்த்ர்யா ஸ்வா தந்த்ர்யங்களுக்குச் சேருகை-
பர தந்த்ரனுக்கு ஸ்வ ரஷண அந்வயம் கூடாமையைக் காட்டும் இந்த சம்பந்தம் –
3-சேஷ சேஷி சம்பந்தமாவது –
a-விபக்தி சித்தமாய்
b -தாத்வர்த்த பரார்த்ததா பிரகாசகமாய்
c -போகாநுரூப தாத தர்சகமாய் இருப்பதொன்று –
a-விபக்தி சித்தமாகையாவது -அகாரத்தில் ஏறிக் கழிந்த சதுர்த்தியில் உதித்த சேஷத்வம்
யஸ் யாஸ்மி நதமந்தரேமி-இத்யாதி பிரசித்தமான சேஷ சேஷிகளைக் காட்டுகை —
b -தாத்வர்த்த பரார்த்ததா பிரகாசகமாகையாவது –
தாத்வர்த்தமான ரஷணம் சரீரியான சேஷி பிரயோஜனம் அத்தனை என்று காட்டுகை —
c -போகாநுரூப தாத தர்சகமாகையாவது –
சேஷ வஸ்து ஸ்வ ரூபம் சேஷி விநியோக அநுகுணமாய் இருக்கையாயிற்று நிலை நின்ற வேஷம் என்று காட்டுகை –
அதாவது -சேஷி சேஷத்வத்தை அழிய மாறி விநியோகிக்கும் இடத்தில் பிற்காலியாத முறை யுணர்த்தி
ஸ்வகத ஸ்வ ரூபா குணத்தையும் சாஹியாததொரு சம்பந்தம் –
4-பர்த்ரு பார்யா சம்பந்தமாவது –
a -உகார சித்தமாய் –
b -விபக்த்யர்த்த சோதகமாய்-
c -ஸ்வரூப ப்ராரப்தமாய் இருப்பதொன்று –
a -உகார சித்தமாகையாவது –
உகார்த்தம் அவதாரண அர்த்தமாய் இருக்கை –
அதாவது ரஷகனான புருஷோத்தமனுக்கே ரஷ்யமான ஆத்ம ஸ்வ ரூபம் அற்றுத் தீர்ந்து இருக்கும் என்று தோற்றுகை-
b -விபக்த்யர்த்த சோதகமாகையாவது –
பதிவ்ரதையினுடைய சேஷத்வம் அனந்யார்ஹமாய் இருக்குமா போலே
லுப்த சதுர்த்யர்த்தமான பகவச் சேஷத்வம் அனந்யார்ஹம் என்று மறுக்களைந்து இருக்கை –
c -ஸ்வரூப ப்ராரப்தமாகையாவது –
பர்த்ருத்வ பார்யாத்வங்கள் பும்ஸ்த்ரீத்வத்துக்கு ஈடாமா போலே
பர்த்ரு பார்யா சம்பந்தம் ஸ்வாதந்த்ர்ய பாரதந்த்ர்யங்களுக்கு ஈடாகை –
அனந்யார்ஹ ப்ரசங்காஸஹம் இந்த சம்பந்தம் –
5—ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தமாகை யாவது –
a -மகாரத்ஸ்யமாய்
b -உகாரார்த்த அனுசந்தான அபேஷிதமாய்
c -அசித் வ்யாவருத்தி வேஷமாய் இருப்பதொன்று –
a -மகாரத்ஸ்யமாகையாவது –
மன ஜ்ஞானே -என்கிற ஜ்ஞான வாசியான மகாரம் காட்டுக்கிற ஜ்ஞாத்ரு த்வத்துக்கு ஜ்ஞேயம் பகவத் ஸ்வரூபாதி களாய்த் தோன்றுகை-
b -உகாரார்த்த அனுசந்தான அபேஷிதமாகையாவது –
உகாரார்த்தமான பர்த்ரு பார்யா சம்பந்த அனுசந்தானத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் அபேஷிதமாகை-
c -அசித் வ்யாவருத்தி வேஷமாகையாவது –
இந்த சம்பந்தங்களை அறிகையும்-ஜ்ஞேயமும் ஜ்ஞாதாவாகையும் –
ஜ்ஞேய அதீநமுமாய் தத் பிரயோஜநமுமாய் இருக்கும் இந்த ஜ்ஞாத்ருத்வம் என்று காட்டும் இந்த சம்பந்தம் –
6-ஸ்வ ஸ்வாமி சம்பந்தமாவது –
a -நமஸ் சப்த தாத்பர்யமாய் –
b -மகாரார்த்த நிபந்தன ப்ரம நாசகமாய் –
c -ஸ்வா பாவிகமாய் –இருப்பதொன்று –
a -நமஸ் சப்த தாத்பர்யமாகையாவது –
நமஸ் சப்தார்த்தமான அஹம் மமதா நிவ்ருத்தி -பலித்வ அபிமாநித்வங்களையும்
ஸ்வ கதம் அன்று -பரகதம் -என்று காட்டு -பலியுமாய் அபிமா நியுமான எம்பெருமானுடைமையுமாய்த் தோன்றுகை –
b -மகாரார்த்த நிபந்தன ப்ரம நாசகமாகையாவது –
மகாரார்த்தமான ஜ்ஞாத்ருத்வ நிபந்தனமாய் வந்த கர்த்ருத்வ ப்ரமத்தை அறுக்குமதாகை –
அதாவது -பராதீனமான ஸ்வ ரூபத்தின் குண விசேஷங்களும் பராதீனம் என்று ஸ்வாதீநதா பிரதிபத்தியைக் கெடுக்கை
c -ஸ்வா பாவிகமாகையாவது —
அஹங்காராதிகளைப் போலே வந்தேறி யன்றிக்கே -ஸ்வ தவ மாத்மநி சஞ்சாதாம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
ஜீவ பரர்களுடைய ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் ஸ்வதஸ் சித்தமாய்ப் பொருகை –
ஸ்வ த்துக்கு ஸ்வ ரஷண கர்த்ருத்வம் இல்லை என்றும் ஸ்வாமிக்கே அது தொழில் என்றும் காட்டுக்கிறது இந்த சம்பந்தம் –
7-சரீர சரீரி சம்பந்தமாவது –
a -நாராயண பதத்தில் சமாச விசேஷ சித்தமாய் –
b – நமஸ் சப்தார்த்த ஸ்வ ரூப பிரகாசகமாய் –
c -சாமாநாதி கரண்ய யோக்யமாய் இருப்பதொன்று —
a -நாராயண பதத்தில் சமாச விசேஷ சித்தமாகையாவது –
நாராயண பதத்தில் பஹூவ்ரீஹி சமாசத்திலே வ்யாப்யமான நாரங்கள் சரீரமாய் –
அந்தர் வ்யாப்தியாலே வ்யாபக ஸ்வ ரூபம் சரீரியாய்த்தோன்றுகை –
b – நமஸ் சப்தார்த்த ஸ்வ ரூப பிரகாசகமாகையாவது –
நமஸ் சப்தார்த்தமான ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் க்ருஹ ஷேத்ராதி சம்பந்தங்கள் போல் அன்றிக்கே அப்ருதக் சித்தமாய் இருக்கும் என்று காட்டுகை –
c -சாமாநாதி கரண்ய யோக்யமாகையாவது –
ஸ்வ ரூப பேதத்தால் பின்ன பிரவ்ருத்தி நிமித்தமான ஜீவ பர ஸ்வரூபம் சரீர சரீரியான எயக்யத்தாலே ஓன்று என்னலாகை –
விசிஷ்டாத்வைத பிரகாசகம் இந்த சம்பந்தம் –
8-தார்யா தாரக சம்பந்தமாவது –
a – சமாசாந்தர சித்தமாய் –
b -சரீர சரீரி சம்பந்தைக லஷணமாய்-
c – அசித விசேஷ ஸ்திதி ஹேதுவாய் இருப்பதொன்று-
a – சமாசாந்தர சித்தமாகையாவது –
நாராயண பதத்தில்,தத் புருஷ சமாச சித்தையான பஹிர்வ்யாப்தியாலே நார பத வாச்யங்கள் தார்யமாய் –
அயன பத வாச்யன் தாரகனாய்த் தோன்றுகை –
b -சரீர சரீரி சம்பந்தைக லஷணமாகையாவது –
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வ ரூபமான சரீர லஷணங்களிலும்
ஆதாரத்வ விதாயகத்வ சேஷித்வ ரூபமான சரீரி லஷணங்களிலும்
பிரதாமான ஆதேயத்வ ஆதாரத்வ ரூப லஷணம் ஒன்றாய்த் தோன்றுகை –
c – அசித விசேஷ ஸ்திதி ஹேதுவாகையாவது –
அநேந ஜீவே நாத்மநா நுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி-என்று அந்தர் வ்யாப்தி போலே
சேதன ஸ்திதி ப்ரதானமாகை அன்றிக்கே -பாகிர் வியாப்தியாலே சேதன அசேதனங்கள்
இரண்டினுடையவும் வ்யவஸ்தி தஸ்வரூப ஸ்திதி வ்யாபாரங்களுக்குக் காரணமாய்த் தோன்றுகை –
சித அசித்தின் நித்ய ஸ்திதி காரணம் இந்த சம்பந்தம் –
9- போக்த்ரு போகய சம்பந்தமாவது –
a – சரம விபக்தி சித்தமாய் –
b -பூர்வ சம்பந்த பிரயோஜன பிரதர்சகமாய் –
c – பிரதி சம்பந்தி போக அநு ரூபமாய் இருப்பதொன்று –
a – சரம விபக்தி சித்தமாகையாவது –
ஆய -என்கிற சதுர்த்தி விபக்தியிலே அனந்யார்ஹ சேஷ பூதனான மகார வாச்யனுடைய சஹஜ சேஷவ்ருத்தி தோன்ற –
அதில் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சரீரியான பரம சேஷிக்கேயாய்-சரீரமான சேஷபூதனுக்கு அன்று என்று இருக்கை-
b -பூர்வ சம்பந்த பிரயோஜன பிரதர்சகமாகையாவது
சர்ப்ப விஷவத் தார்யா தாரகத்வங்கள் நிஷ் பிரயோஜனமாய் விடாதே
ரச நாரச வஸ்துவத் தார்ய தாரகங்களுக்கு அநு கூல க்ராஹ்ய க்ராஹக ரூப பிரயோசனத்தைக் காட்டுமதாகை –
c – பிரதி சம்பந்தி போக அநு ரூபமாகையாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியான செஷியினுடைய கைங்கர்ய ரச அனுபவத்துக்கும்
கைங்கர்ய ஆஸ்ரயமான சேஷ பூதனுடைய சேஷி போக விருத்த ரச த்வராஹித்யத்துக்கும் இடமாய் இருக்கை –
சேஷித்வத்திலும் சேஷத்வத்திலும் மறுக் களைந்தது இந்த சம்பந்தம் –
இதில்
1- விசேஷண விசேஷ்ய சம்பந்த ஞானம் பிறக்கவே -காரணாந்தர சங்கை அறும்
2- ரஷ்ய ரஷக சம்பந்த ஞானம் பிறக்கவே -ரஷகாந்தர சங்கை அறும் –
3-சேஷ சேஷி சம்பந்த ஞானம் பிறக்கவே -சேஷ்யாந்தர சங்கை அறும் –
4-பர்த்ரு பார்யா சம்பந்த ஞானம் பிறக்கவே -அனந்யார்ஹ சங்கைஅறும் –
5-ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்த ஞானம் பிறக்கவே ஜ்ஞேயாந்த்ர சங்கை அறும்
6-ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஞானம் பிறக்கவே ஸ்வா தந்த்ர்ய சங்கை அறும்
7-சரீர சரீரி சம்பந்த ஞானம் பிறக்கவே ஸ்வரூப ஐக்ய சங்கை அறும்
8-தார்யா தாரக சம்பந்த ஞானம் பிறக்கவே தாரகாந்தர சங்கை அறும் –
9- போக்த்ரு போகய சம்பந்த ஞானம் பிறக்கவே போத்ருத்வ சங்கை அறும் –
ஆக -நவவித சம்பந்தமும் அறிந்து ஆனந்தித்து இருக்கவும் –
ஸ்ரீ நவ வித சம்பந்தம் முற்றிற்று –
—————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
November 25, 2018 at 1:08 am |
மிகவும் உபயோகமாயிருந்தது இந்த ஸூத்ரங்களை தேடிக் கொண்டிருந்தேன். பிள்ளை உலகாசிரியனின் மற்ற ரஹஸ்ய க்ரந்தங்களின் ஸுத்திரங்கள் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். தன்யோஸ்மி.