இது திருக்கண்ண புரத் திருப்பதிக மங்களா சாசன பத்தாவது திருமொழி-
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே –8-10-1-
என் செய்கின்றாய் சொல்லு -சகல சாஸ்தரார்த்தம்-அவன் திரு உள்ளத்தில் இரக்கமே பேற்றைப் பெருவிக்க வல்லது
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக இருந்து இரக்கம் அருள வைக்கிறாள் –
வண்டார் பூ மலர்மேல் மங்கை மண நோக்கம் யுண்டானே –
அவனுக்கு இவள் நோக்கமே ஜீவனார்த்தம் -கடாஷ வீஷணத்தை உணவாகக் கொள்ளுபவன்
யஸா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீ நோ விதத்தேகிலம் –
மிதுனத்தில் அடிமை செய்வதே சாஸ்தராத்ரம் என்பதையும் வெளியிடுகிறார் -உன் தனக்கே தொண்டனேற்கு
உன்னை உகந்து உகந்து -பிராட்டியும் அவனுமான சேர்த்தியால் யுண்டான உகப்பாலே இரட்டித்து
தொண்டனேற்கு -கைங்கர்ய விருப்பம் கொண்ட எனக்கு -தேஷாம் -சத்தா யுக்தாநாம் போலே –
சத்த யோகத்தை விரும்புகின்றவர்கள் என்றே அங்கும் பொருள்
நால் வேதம் கண்டானே -பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி -இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
கண்டவனே -கர்த்தரித் பொருள்
காணப் பட்டவனே -கர்மணி பொருள்
நால் வேதங்களாலும் உபாயமும் உபேயமமுமாக காணப் பட்டவனே -நிஷ்கரிஷிக்கப் பட்டவனே என்றபடி-
——————————————————-
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும்
கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே -8-10-2-
நீ உண்டு உமிழ்ந்த எச்சிலான தேவர்களை ஒரு பொருளாகவும் நெஞ்சிலே கொள்வேன் அல்லேன் –
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ -பிள்ளை பெருமாள் ஐயங்கார் தனிப்பாடல் –
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்து –
பிரளயம் வந்த போதாக உன் வயிற்றிலே போய்ப் புக்கு
நீ வெளிநாடு காணப் புறப்பட விட்டவாறே
நான் ஆஸ்ரயநீயன் என்று வருவதொரு தேவதை உண்டாக நான் அறியேன் –
ஒரு தாரா -விளியாகவும் கொண்டு -ஆஸ்ரித ரஷணத்துக்கு தனி மாலை இட்டவனே என்றுமாம்
சம்சார பிரளயம் போக்கி அருள இங்கே நித்ய சந்நிதி பண்ணி நீ அருளா நிற்க
மற்ற தெய்வ ஆபாசங்களை பூர்வ பஷமாகவும் நெஞ்சிலிட்டு நினையேன்-
——————————————————–
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-
தேவதாந்திர பாசம் இல்லாதது அவ்வளவேயோ -தாமச புருஷர்களோடு சேர்க்கையும் இல்லை –
சாத்விக புருஷர்கள் ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன்
பாகவத சேஷத்வமே திருமந்த்ரார்த்த தாத்பர்யம் –
மிக்க இறை நிலையும் இத்யாதி அர்த்த பஞ்சகமும் திருமந்த்ரத்தில் யுண்டே
பிரணவத்தாலே -சேதன ஸ்வரூபமும்
நமஸ் ஸாலே விரோதி -உபாய ஸ்வரூபங்களையும்
நாராயண -பதத்தாலே பரம புருஷனது ஸ்வரூபத்தையும்
ஆய -சதுர்த்தியாலே-புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
பிரதிபாதிக்கையாலே -மற்று எல்லாம் பேசிலும் -என்கிறார்
முமுஷூப்படி -மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இதுக்கு உள்ளே உண்டி -அதாவது அஞ்சர்த்தம் –
பேசிலும் -உம்மைத் தொகையால் -அவற்றில் தமக்கு ஊற்றம் இல்லை என்றும்
தமக்கு ஊற்றம் இருப்பது -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறார்-
நமஸ் -பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் பாகவத சேஷத்வம் காட்டும் -என்பதே ஆழ்வார் ஆச்சார்யர்கள் திரு உள்ளம்
சிலர் -அகாரம் ஏறிக் களைந்த சதுர்த்தியிலும்– உகாரத்தில் அனந்யார்க்க சேஷத்வம் சொல்லும் இடத்திலும்
எல்லை நிலமாக இது உண்டு என்பர்
அர்த்தாத் சித்தமாக இவையும் அனுசந்திக்கக் குறை இல்லை என்றாலும்
அஹங்கார மமகாரங்கள் கழிவதைக் காட்டும் நமஸ்ஸில் அனுசந்திப்பதே மிகப் பொருந்தும்
கற்று நான் வல்லது கண்ணபுரத்தானே-பாட பேதமும் யுண்டு -ரீதி பேதம் பிறவாமைக்காக-
—————————————-
பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர்அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே -8-10-4-
பூதனை விஷமே உனக்கு விரும்பத் தக்கவதானதால் நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத அடி நாயேனும் உனக்கு உகந்த விஷயம் தானே –
கொடியவனே யாயினும் புருஷகாரம் பண்ணி செர்ப்புத்து அருள பிராட்டி நித்ய வாசம் செய்து இருக்கவும் நான் இழக்கவோ
பொறுமை தானே வடிவு கொண்ட பூமிப் பிராட்டியும் உசிதமான உபாயங்களால் பொறுப்பிக்க வல்ல பெரிய பிராட்டியாரும்
கூடி இங்கே சந்நிதி செய்து இருக்கவும் இழக்கவோ
பெண் ஆனாள் பேரிளம் கொங்கை -யசோதை உருவம் ஏறிட்டுக் கொண்டாள் –
———————————————-
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே –8-10-5-
பரி பூர்ணனான அநந்ய கதித்வம் யுடையவன் –
உற்றான் -படாத பாடுகள் பட்டவன் என்றுமாம்
எங்கும் திரிந்து உழன்று அலைந்து வருந்தி வந்து சேர்ந்த இவனை பரீஷிக்க தேவை இல்லை –
கடுக கிருபை செய்து அருள வேணும்
உற்றான் -அனர்த்தப் பட்டான் -என்னும் பொருளில்
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மாநிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் -திருமாலை
நீ இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருள பயன் வேண்டுமே அருளாய்
இங்கே கற்றார் பலர் இருக்கவும் நீ கைவிடலாமோ-
——————————————
ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ
காத்தி போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-6-
யமன் முதலானோரும் அருகே வாராத படிநோக்கி அருள வேண்டும்
மதுசூன பிரபன்னான் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம்
திறம்பேன்மின்— சாதுவராய் போதுமின் –தூதுவரைச் செவிக்கு -திருமழிசை ஆழ்வார்
நமன் தமரால் ஆராயப்படார் -பொய்கையார்
கூற்றின் தமர்களும் குறுககில்லார் -நம்மாழ்வார்
நாவலிட்டு உழி தருகின்றேன் நமன் தமர் தலைகள் மீதே
சோத்தம் -ஸ்தோத்ரம் -அஞ்சலி -சோத்தம்பிரான் இங்கே வாராய் -பெரியாழ்வார்
அஞ்சுதும் –தன்மை பன்மை வினை முற்று
காத்தி போல் –போலே உவமை பொருளது அன்று -ரஷித்து அருளுகிறாய் அன்றோ என்கிறது -வாக்ய அலங்காரம் –
————————————–
வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே–8-10-7-
திருப் பாற் கடலில் கூக்குரல் -கூப்பீடு இடத்தில் யோகு செய்து அருளுபவனே
யமபடர்கள் பாகவதர்களை கிட்ட மாட்டார்கள் என்று மட்டும் இல்லை
அவர்கள் கள்ளர் போலே மறைந்து ஒளிந்து கிடக்கும் படியாய் அன்றோ உனது பிரபாவம்
சித்ரகுத்தன் எழுத்தால் தென் புலக்கொன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடு ஒளித்தார்-பெரியாழ்வார் –
——————————————-
மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-8-
அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாபங்கள் பல செய்து இருந்தாலும் அவை
வானோ மறி கடலே மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -போன இடம் தெரியாமல் போயினவே
ஸ்ரீ வராஹ ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாய் திரு வவதரித்து செய்து அருளிய சேஷ்டிதங்களை
நெஞ்சார நினைக்கவே இவை போகக் கண்டேன்
பேணாத -தேக வ்யதிரிக்த ஆத்மா உண்டு என்று அறிந்து அதற்கு உரிய நன்மைகளை
நாடாதவனாய் இருந்தவன் நான் -என்றபடி-
———————————
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே –8-10-9-
பாபங்கள் அகன்று போன படியையும் தாம் பெற்ற பேற்றையும் பேசித் தலைக் கட்டுகிறார்
நிர்ஹேதுக கிருபையாலே விஷயாந்தரங்களிலே மண்டிக் கை கழிந்து போன என்னை
திருமந்த்ரார்த்தம் உணர்த்தி தொண்டர்கள் திரளிலே நிலை நிறுத்தினாய்
இப்படிப் பட்ட சேஷத்வ ஞானம் ஆகிற ராஜ குல மகாத்ம்யத்தாலே என்னுடைய பாபங்கள் அறுத்து ஒழிக்கப் பெற்றேன்
அவ்வளவேயோ
என் நாவினுள்ளே நீ வந்து புகுந்து இனிய பாசுரங்களைப் பாடுவிக்கையாலே என் ஹ்ருதயத்தின் யுள்ளே நீ
நித்ய வாஸம் செய்து அருளுகிறாய் என்று நிச்சயித்து கொண்டேன்
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இருந்தபடி
மலையாள தேசத்தில் முக்கோட்டை -என்று ஒரு இடமாம் -நில மிகுதியால் ஊமைகள் கூட மிதித்த உடனே அழகாக கவி பாடுவார்களாம்-
——————————————————-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே -8-10-10-
கண்ட சீர் -கண்ணாலே ப்ரத்யஷமாக காணக் கூடிய செல்வம்
இத் திருமொழியை பா மாலையை நிதியாகக் கொண்டு பாடி ஆடும் அடியவர்கட்கு திரு நாட்டுச் செல்வத்தை ஆளப் பெறுவதே பேறாகும்-
கொண்ட சீர்த் தொண்டன் -சீர் கொண்ட தொண்டன் -சீர் -ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி ஸ்ரீ
அந்திரிஷத கத ஸ்ரீ மான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -ச து நாகவர ஸ்ரீ மான் —
——————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply