திரு புள்ளம் பூதம் குடி மங்களா சாசன திருப் பதிகம் –
அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
ஸ்வ யத்னத்தால் அறிய முயல்வாருக்கு அரியான்-
தான காட்ட காண்பார்கள் இறே-திவ்யம் ததாமி தே சஷூர் பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் –
மற்ற ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியா முடியாது ஆனாலும் அனைத்து உலக்கும் யுடையான் -சர்வ ஸ்வாமி-அறிவது எளிதாகும்
உலகம் ஒரு தட்டும் ஆழ்வார் ஒரு தட்டும் -என்னை ஆளுடையான்
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமின் போலே
குறிய மாண் யுருவாய கூத்தன் -சர்வ லோக ஸ்வாமி காட்டி அருளிய இடம்
குறிய மாண் யுருவாகிய பிழையான பாடம்
திருக் குருகூர் அதனுள் குறிய மாண் யுருவாகிய -திருவாய் -4-10-10-இங்கு வந்து நுழைந்தது போலும்
சுரும்பு வண்டுகளில் ஒரு ஜாதி
ஜடாயு பரிசுத்தி பெற்ற ஸ்தலம் –
————————————————-
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-
பொள்ளை -துளை
போதகத்தின் துன்பம் தவிர்த்த என்றாலே போதுமே -பொள்ளைக் கரத்த என்றது -புஷ்பம் வைத்து உள்ள துதிக்கையும்
மூழ்கும் படியான பேர் ஆபத்து என்பதைக் காட்டி அருள
புனிதன் -யானையின் துயரம் தனது துயரமாக கொண்ட பரிசுத்தன்
ஆலவாயுடையான் தமிழன் பட்டர் இடம் கேட்ட பிரசித்தி யுண்டே -பிள்ளைக்கு இரை தேடும்-
———————————————
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-3-
மேவா அரக்கர் -இயற்கையிலே த்வேஷமே வடிவாய்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை சேர்த்து அனுபவிக்கிறார்
தேங்காய்கள் விழ மீன்கள் குதிக்க குருகுகள் சிதறி ஓட நீர் வளம் மிக்க தேசம்-
——————————————-
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-4-
வல்வில் ராமன் -கோவர்த்தன கிரி தாரி இவனே
மதிள்கள் மாட மாளிகைகள் மண்டபங்கள் நிறைந்த ஸ்தலம் –
———————————–
மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-
தான் அவாப்த சமஸ்த காமனாய் இருக்கச் செய்தேயும் குறைவாளன் போலே திரு ஆய்ப்பாடியிலே
தயிர் நெய் பால் களவு கண்டு அமுது செய்து அருளிய ஆழி யம் கையன் இங்கே நித்ய வாசம் செய்கிறான்
மீன்கள் நாரைகள் வைதிக அந்தணர்கள் நிறைய வாழும் ஸ்தலம்-
————————————
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
கருமாரி பாய்ந்தும் அனைய வேண்டும் ஆய்த்து நப்பின்னை பிராட்டியின் வடிவு அழகு
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் -இன்றும் திருப் புன்னை மரம் வளர்க்கப் பட்டு இருக்கும் –
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய் -திருச்சந்த விருத்தம்
அருளிச் செயல் படியே இன்றும் ஒரு திருப் பனை மரம் வளர்க்கப் படுவது போலே-
——————————————
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-
விலங்கல் -கோவர்த்தன மலையை
கிருஷ்ணனே இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
குடையா -குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை -திருவாய் -போலே மூன்றாம் அடி என்பர்
குடையா -என்பதே வ்யாக்யானத்துக்கு சேரும் -புத்ர பௌத்ராதிகள் உடனும் பார்யாதிகள் உடனும்
வண்டுகள் ஆனவை மது பானத்தைப் பண்ண-என்று இருப்பதால்
வண்டுகள் உண்ண -என்றும் -வண்டு -கள் -உண்ண என்றும் பிரிக்கலாம்
———————————————————
கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே–5-1-8-
பார்த்த சாரதி என்ற பெயர் பெற்றவனும் –
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் முண்டத்துக்கு ஆற்றா -தலையோட்டையை தனது ஜல பிந்துவாலே
நிறைத்த எம்பெருமான் இவனே
இங்கு உள்ள அந்தணர்கள் மறையால் மிக்கவர்கள் -முத்தீயை வளர்ப்பவர்கள் -வன்மையால் மிக்கவர்கள் –
பொறையால் மிக்கவர்கள்
மறையால் முத்தீயை வளர்ப்பவர்கள் என்றுமாம் –
————————————————–
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9-
சோமுகன் என்னும் அசுரன் தவங்கள் செய்து வரங்கள் பெற்று நான்கு வேதங்களையும் கவர்ந்து போக
மீனாக அவதரித்து அந்த அசுரனைத் தேடித் பிடித்து கொண்டு வேதங்களையும் மீட்டு அருளி
சார அசார விபாகம் பண்ணி அருளும் ஹம்சமாகவும் திரு அவதரித்து பிரமனுக்கு உபதேசித்து அருளியவனே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
வேயின் முத்தும் -மின்னு சோதி நவ மணியும் -சொல்லி
பொன்னையும் முத்தையும் தனிப்பட சொல்லுவதால் இவை திருக் காவேரியால்
அதிகமாக கொணரப் படும் என்றது ஆயிற்று
———————————————–
கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-
துயர் அற்றவாராவார் பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் -கன்று + ஆ =கற்றா
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply