நடு நாட்டுத் திருப்பதிகளில் மற்று ஒன்றான திரு வஹீந்திர புரம் திவ்ய தேசத்தை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்-
இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன் -பெரிய திரு மொழி -4-3-9-
என்னப் பட்ட பகவத் விஷயம் ஆகிற தேனை விரும்பியும் –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் யுண்டு
அமர்ந்திட வேண்டி -இராமானுச நூற்றந்தாதி -99- என்கிறபடியே
ஆசார்ய பாதாராவிந்த சேவை யாகிற மதுவைப் பருகுதலாகிய வ்ரதம் பூண்டும்
ஊர்த்த கதிக்கு சாதனம் ஆகிற இரண்டு சிறகுகள் கர்ம ஞானம் -சார க்ரஹிகள்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் -வண்டு-
அவர்கள் பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்த ஆனந்தத்துக்கு போக்கு வீடாக –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி -திருவாய் -3-5-2-என்கிறபடியே
நாரத முனிவர் -திருப் பாண் ஆழ்வார் -தம்பிரான்மார் முதலானவரை போலே இசை பாடுவதாலே -இன்னிசை முரன்று எழும் –
பகவத் பாகவத குண அனுபவங்களுக்கு வாய்த்த இடங்களே பொழில்
செருந்தி -ஒரு வ்ருஷ விசேஷம் -அதன் மேலே சென்று அணைவது-
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -திருவாய் -6-3-9-என்றும்
வாசுதேவ தருச்சாயா -என்றும்
சம்சாரம் ஆகிய கொடிய வெய்யிலே தபிக்கப் பட்டவர்களுக்கு விடாய் தீர்க்கும் வாசுதேவருடைய
பாதமலர் சென்று சேர்ந்து இருக்கும் இருப்பு -இதுவே திருவயிந்தபுரம் –
இவ்வாறு ஸ்வாபதேச வியாக்யானம் -திருவாய் -5-9-1- மானேய் நோக்கு நல்லீர் -என்கிற பாட்டில் –
தேனார் சோலைகள் சூழ் –
நித்ய ப்ராப்யனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
திருமேனியாகக் கொண்டு முகம் கொடுத்துக் கொடு நிற்கிறாப் போலே
அங்கு உள்ளாறும் இங்கே போந்து ஸ்தாவரங்களாயும் ஜங்கமங்களாயும் திர்யக்குகளாயும் அவனை விட மாட்டாதே நிற்கிறபடி –
நித்தியரும் முக்தரும் அவன் இடம் ருசியுடையாரும் உகந்து அருளின நிலங்களையே இறே பற்றி இருப்பது-
அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் சூரயஸ் ஸ்ரச்த பந்தா -விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம
மஹிதமநுஜ திர்யக் ஸ்தாவரத்வா -ஸ்ரயந்தே ஸூ நியதமிதி ஹ ஸ்ம ப்ராஹூரேப்யோ நமஸ் ஸ்தாத்-சர் ரெங்கராஜ சத்வம் –
ஸ்வேதா வராஹ கல்பம் இப்பொழுது -முந்திய பாத்ம கல்பத்தில் மகா வராஹ ரூபி
பாரார் உலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -பெரிய திருமொழி -8-8-3-
வளை மருப்பின் அகலத்து ஒடுக்கி -பிரான் உன் பெருமை யார் அறிவார் –
உராய் உலகு அளந்த நான்று -வராகத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ
எந்தை அடிக்களவு போந்தபடி -பொய்கையார்
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் –
அவன் நிழல் இட்டாலே கருத்த நிறம் கொண்ட திருப் பாற் கடல் –
அன்றிக்கே –
திருப் பாற் கடல் தானே மகா வராஹத்தின் யுடைய குளம்பிலே துகளாய் குழம்பித் தன்நிறம் போயிற்று என்னவுமாம்
தேறல் -தேன்
பொதுளுதல் -நெருங்குதல்
செறிந்து அழகிய பொழிலூடே-என்றபடி-அவன் பூஜித்த ஸ்தலம்-
—————————————————-
மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-
பரமபத லஷணம் மூன்றையும் சொல்லி அருளி
காளமேகத்திலே மின்னல் போலே திரு ஆழி -மின்னும் ஆழி யம் கையவன் –
மின்னல் கொடி நித்ய ஸ்ரீ யாய் -செய்யவள் உறை தரு திரு மார்பன்
தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூ விரிய மது நுகரும்
பொறி வரிய சிறு வண்டே -பெரிய திரு மொழி -3-6-1–
வண்டானது சாகைகளின் நுனியில் திரியுமா போலே வேத சாகைகளின் நுனியிலே விளங்கும்
எம்பெருமான் பிராட்டி உடன் ப்ரணய கலஹம் -என்றுமாம் –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –
———————————————————————
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-
தாஸ சத்யன் -இங்கு உள்ள எம்பெருமான் திரு நாமம் -அதனால்; அடியவர்க்கு மெய்யன் -என்கிறார்
அத்வேஷம் முதல் படி -அவர்களையும் அடியவர் என்று திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ஸ்வ பாவங்களை மெய்மையாகக் காட்டி அருளுபவன்
——————————————————————–
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே–3-1-4-
ஆஸ்ரித பஷபாதம் ஆகிய திருக் குணங்கள் விளங்க வாழும் இடம்
——————————————————-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5-
குரங்குகளை சொன்னது சபலரான-நின்றவா நில்லா நெஞ்சை யுடையரான – சம்சாரிகளை கூறியவாறாம்
வேங்கை கோங்கு செண்பக மரங்களை -பூக்கள் பொன்னிறம் ஆதலால் -பொன் மலர் திகழ்-
ஸ்வா பதேசத்தில் நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்தரங்களைச் சொன்னபடி
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் -பெரியாழ்வார்-
——————————————–
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்
கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்
வானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே–3-1-6-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு –வன் கானடை -பெரியாழ்வார்
வனவாசோ மஹோதயா-சந்தோஷமே விஞ்சி திருமேனி புகர் பெற்று -கானுலாவிய கரு முகில் திரு நிறத்தான்
பிராட்டியுடன் எழுந்து அருளும் இருப்பு மின்னல் உறைந்த மா முகில் -நடந்து செல்லுகிற படி
மால்வரை மா மதிள்–மலைகளாலும் மதில்களாலும் சூழப் பட்ட
அன்றிக்கே
உம்மைத் தொகையாகக் கொள்ளாமல் உவமைத் தொகையாக கொண்டு மலை போன்ற மதிளால் சூழப் பெற்ற திவ்ய தேசம் –
————————————————-
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்
அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர
செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே–3-1-7-
கானுலாவிய என்றவர் ராவண சம்ஹார பர்யந்தமான செயல்களையும் அருளிச் செய்கிறார்
மின்னின் நுண்ணிடை -மின்னப் போன்ற மின்னலை விட -தேக குணங்களுக்கு எல்லாம் உப லஷணம்
மடம் -என்றது ஆத்ம குணங்களுக்கு உப லஷணம்
விலங்கலின் மிசை இலங்கை -விலங்கல் என்று மலைக்கு பெயர் –
ஸூ வேல பர்வதத்தின் மேலே த்ரிகூடத்தின் மீது அமைக்கப் பட்ட இலங்கை
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் யுரைத்த போலே ஆசார்யர்கள் சிஷ்யர்களுக்கு யுரைத்தும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்து அழுந்தார் – என்றபடி
சம்சாரத்தில் பொருந்தாத கூரத் ஆழ்வான் போல்வார் அன்னம்
பெடையொடும் என்றதால் க்ருஹ ஆஸ்ரமத்தில் இருப்பாரை
அரவிந்தமளி -எம்பெருமான் உடைய-ஆசார்யன் யுடைய பாதார விந்தங்கள்
செந்நெலார் கவரி குலை வீச -சிஷ்யர்கள் சாமரங்கள் சமர்ப்பிக்க -கைங்கர்யம் செய்து உஜ்ஜீவிக்கும் படி சொல்லிற்று –
———————————————————-
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்
வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-8-
ஸ்ரீ ராமபிரானுடைய பராக்ரமமும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சௌலப்யமும் தைவ நாயகன் பக்கலில் கண்டேன் என்கிறார் –
கருட நதி பிரவஹிக்கும் படியை வருணிக்கிறார் –
——————————————————-
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-9-
ஸ்ரீ பார்த்த சாரதியாய் இருந்து வெற்றி பெறுவித்தவன் வாழும் இடம்
வெற்றிலைத் தோட்டங்களும் பாக்குச் சோலைகளும் நீர் வாய்ப்பும் உள்ள கழனிகளும் நிறையப் பெற்ற திவ்ய தேசம் –
———————————————————
மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-
ப்ரஹ்ம ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருந்தும் தானான தன்மையாலும் -மூவராகிய ஒருவனை
தேவர்களும் அசுரர்களும் வந்து இஷ்ட சித்திக்காக ஆஸ்ரயிக்கலாம் படி எழுந்து அருளி இருக்கும்
விஷயமாக அருளிச் செய்த இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
பாபங்கள் நீங்கி புண்ய பலம் அனுபவிக்கப் பெறுவார்கள் –
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply