பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-7-திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவளும்-

ஒரு ஆறானது பல வாய்க்கால் களாக பெருகினாலும் பிரதானமான பெயர் ஒன்றே போலே
தாய் தோழி மகள் பாசுரங்களும் -மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் -என்று
ஆழ்வார் பாசுரமாகவே தலைக் கட்டும் –

பரவசமாக ஸ்திரீ பாவம் ஏறிட்டுக் கொள்வார்கள் ஆழ்வார்கள்
ஸ்வா தந்த்ர்யா நாற்றமே இல்லாமல் பார தந்த்ர்யமே வடிவாய் இருப்பதால் ஸ்திரீ பாவனை வந்தேறி இல்லை
தண்ட காரண்ய வாசிகளே சௌந்தர்ய அனுபவித்தில் ஈடுபட்டு ஆயர் மங்கைகளாக கண்ணனைக் கூடினார்கள் –
பரபக்தி பரஞான பரமபக்திகளே கொங்கை முதலிய சொற்கள் –
தோழி -திருமந்த்ரத்தில் சொல்லும் அனன்யார்ஹ சேஷத்வம் -சம்பந்த ஜ்ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தை –
தாய் -அவனே விஷயீ கரிக்க வேணும் -நம பத -உபாய அத்யாவசாய ப்ரஜ்ஞா  அவஸ்தை
கிட்டி அனுபவித்தால் ஒழிய தரிக்க மாட்டாத மகள் -நாராயண பதம் -அர்த்தம் ப்ரஜ்ஞா அவஸ்தை-

தன் ஸ்வரூபத்தை நோக்கும் அளவில் -பதறக் கூடாது என்கிற -அத்யவசாயமும்
அவனுடைய வைலஷண்யத்தை நோக்கும் அளவில் பதற்றம் உண்டாகுமே
ஆசை விடாளால் –போதுமோ நீர் மலைக்கே என்னும் -இத்யாதிகளால் மகளது பதற்றமும்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -வினாக்களால் அத்யவசாயமும் வெளியாம் –
ஆழ்வார் உடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாய் பரிணமித்து விட்டது –

——————————————————–

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு  நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

அரிவை-நித்ய யௌவனம் உடையவள் -தெய்வப் பெண் என்றுமாம் -யுவ குமாராக்கு ஏற்ற படி
ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷணாம்-கண் அழகில் ஈடுபடுபன் என்பதால் குவளயம் கண்ணி  என்கிறாள்
சேதனனுடைய க்ரியாகலாபம் பேற்றுக்கு சாதனம் அன்று -பரம புருஷனுடைய திரு உள்ளத்தில் இரக்கமே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறாள்-புருஷகார பூதை திரு மார்பிலே இருக்க இழக்கவோ –
அஞ்சாமல் உன் அருகில் வருகிறேன் –

சிசுக்களுக்கு தாயின் முலை போலே -அடியவர்களுக்கு எம்பெருமானது பாதார விந்தமே உத்தேச்யம் –
ஆதலால் நின் தாள் நயந்து இருந்தவளை -என்கிறாள் –
திருமகள் ஆனவள் ஸ்வரூப ஜ்ஞானம் இன்றி திரு மார்பை விரும்பினால் –
என் பெண் நல குடிப்பிறப்பும் நல்லறிவும் யுடையவள் ஆகையாலே -திருவடியையே விரும்புகின்றாள்-
குவளயம் கண்ணி-உட்கண் ஜ்ஞானத்தை சொன்ன படி –
ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு -முதல் திரு -67-
கொல்லியம்பாவை -ஆத்ம வைலஷண்யம் -சொன்னபடி –
வல்வில்ஓரி -சிற்றசருக்கு உரிய பெண் பதுமை -அசுரரும் அரக்கரும் இவள் சிரிப்பைக் கண்டே மயங்கி உயிர் துறப்பர்களாம்-
அவர்கள் வாடை பட்டதுமே இது நகைக்குமாம் –
திரி புரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும் பாவையும் நகைக்க கற்றது எல்லாம் இந்த நகை கண்டாயோ -சித்ர மடல் பாடல்
செரு வெம் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் -சிலப்பதிகாரம் -கடலாடு காதலி -60-61-
ஒப்புயர்வற்ற அழகில் சிறந்த மாதர்க்கு உவமை நற்றிணை அகநானூறு புற நானூறு 
சீவக சிந்தாமணி குறுந்தொகை -முதலிய இடங்களில் யுண்டு
கொல்லி யம்பாவை போன்றவள் என்னாமல் முற்று  உவமை யாக –
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -திருவாய்மொழி -6-9-9- போலே –

—————————————————-

துளம்படு முறுவல் தோழி யார்க்கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம்முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

லௌகிக விஷயங்களிலே நெஞ்சு செல்லாமல் -பகவத் காமமே அதிகரித்து —
வாய் விட்டு சொல்ல நேர்ந்தால் -அன்று இவ் யுலகம் அளந்தாய் -மாலே -நெடியானே கண்ணனே -என்று வாய் வெருவி
அநந்ய பக்தையாய் இவள் திறத்தில் என்ன திரு உள்ளம் பற்றி இருக்கிறாயோ –
துளம்படு முறுவல் -மாதுளம் -துளம் என்று சுருங்கி  -மாதுள விரை போன்ற பற்கள் என்றபடி –
குளம்படு குவளை -தன்னிலத்தில் இருந்து செவ்வி மாறாத குவளை மலர் -என்றபடி
மால் இன மொழியாள் -வ்யாமோஹனனுக்கு -வ்யாமோஹத்துக்கு -தகுதியான பேச்சை யுடையவள்
புறம் சுவர் கோலம் செய்து -பிராக்ருதர்கள் யுடன் ஒப்பு இல்லாதவள் –
இப்படிப் பட்ட என்னை அபேஷிக்கப் போகிறாயா உபேஷிக்கிறாயோ-என்கிறாள் –

————————————————-

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி  வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –2-7-3-

குளிர்ந்த உபசாரங்களை திருத் தாயார் செய்தவாறே நெருப்பை வாரிக் கொட்டினால் போலே இருந்தனவே
சாந்து –சந்தனக் குழம்பு -கலவைச் சந்தனத்தையும் வெறும் சந்தனத்தையும் சொன்னபடி
ஏந்திழை இவளுக்கு -ஏந்துதல் -தரித்தல் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை யுடையவள் என்றபடி
உன்னுடைய சம்ச்லேஷம் ஓன்று தானே இவளை நான் ஆபரணங்களோடே   தரித்து காணப் பெறுவேன் –
பகவத் குணங்களை அனுசந்தித்து கண்ணும் கண்ண நீருமாய் இருத்தலும்
மயிர்க் கூச்சு எறிந்து இருத்தலமே  பக்தர்கட்கு ஆபரணம்  -அதனால் ஏந்திழை -என்கிறாள்-

———————————————–

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும்சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-4-

பரகால நாயகி யுடைய வாய் வெருவுதலை திருத்  தாயார் பாசுரமிட்டுப் பேசுகிறாள்
பலபல ஊழிகள் யாடிடும் அன்றியோர் நாழிகையை பலபல கூறிட்ட கூறாயிடும் —
அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் -திரு விருத்தம் –
கொடியார் கொடுமையில் ஆற்றாக் கொடிய இந்நாள் நெடிய கழியுமிரா -திரு குறள்-
ஒண் சுடர் துயின்றதால் என்னும் –
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரான் வாராது ஒழிந்தான் -திருவாய் -5-4-4-
துயின்றது -தீர்க்க நித்தரை யாயிற்று என்ற பொருளில் சூர்யன் செத்தே ஒழிந்தானோ என்கிறாள்
தோழி இடம் சொல்வதை தாய் அனுவாதம் செய்கிறாள் –
-அன்றிலும் -பனை மரத்தில் வாழும் உன்னை பிரியாது இருக்கும் -க்ரௌஞ்சம் என்பர் -வாய் அலகைக் கோத்துக் கொண்டே உறங்கும்
துணை முலை  அரக்கும்-அரக்குதல் -ஸ்தானத்தை விட்டுப் பெயர்த்தல் –
கொள்ளும் பயன் ஒன்றுமிலாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்ப்பேனே  -நாச்சியார்
ஏழையேன் பொன்னுக்கு பாடம் சரி இல்லை ஏழை என் பொன்னுக்கு -சரியான பாடம் -அன்பின் மிகுதியால் பொன் என்கிறாள் –

—————————————————–

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-5-

ஓதிலும் -உம்மைத் தொகையாலே சொல்வதில் அருமை -ஒரு கால் வாய் திறந்தாலும் –
அம்மா அண்ணா என்னாதே கோபாலா கோவிந்தா என்கிறாள் –
விக்ரேதுகாமா கில கோப கன்யா முராரி பதார்ப்பித்த சித்தவ்ருத்தி –தத்யாதிகம் மோஹவசாதவோசத்
கோவிந்த தாமோதர மாதவேதி -விற்பவளும் கூவிக் கொண்டே சென்றது போலே –
திரு நாமம் சொன்னவாறே ஸ்வரூபம் ரூபம் குணங்கள் நினைவுக்கே வர ரூபத்திலே உருகா நின்ற சீதளத்தை யுடையவள் ஆனால்
கடல் போலும் கார் முகில் போலும் குளிர்ந்த திரு மேனி என்னே -என்று நீர்ப்பண்டம் ஆனால்
காதன்மை பெரிது -உன்னுடைய திருமேனியைப் குளப்படி ஆக்கும் படி இவள் ஆசையே பெரிது
கையறவு யுடையள் கையறவாவது -செயல் அறுதலும் -உதவியின்மையும் -செயல் அற்று சகாயம் அற்று இருக்கின்றாள்
பேதையேன் பேதை-அறிவு கெட்டவள் வயிற்றில் பிறந்த பெண் அன்றோ –
ஏதலர் முன்னா -உபாயாந்தர நிஷ்டர்களை ஏதலர் -என்கிறார் -மார்பிலே கை வைத்து உறங்கப் பிராப்தி அன்றோ –

———————————————————

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே——2-7-6-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்ற படியே –
ஆறி இருப்பதே பிரபன்ன குல மரியாதை –
பதறுகிறாள் ஆகையாலே -தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் –
சீதா பிராட்டியைப் பெற செய்த கார்யங்களை கேட்டு இன்புற்று -நம்மை உபேஷிப்பதே-வருந்தி மூர்ச்சை அடைகிறாள்
அவன் மேல் விழுந்து அனுபவிக்க அவளது அவயவ சௌந்தர்யத்தை மேலே பேசுகிறாள் திருத் தாயார் -மின் கொடி-இத்யாதியால் –

—————————————————————

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-7-

பரிபக்குவமான நெஞ்சை யுடையவளாய் -நெஞ்சு கனிந்து உன்னையே சொல்லுவதும்  
உகந்து அருளின நிலங்களையே சொல்லுவதுமாக –
வாய் வெருவுகின்றாள்
இந்த அழகியை நீ இழக்கலாமா -களங்கனி முறுவல் -பயன் உவமை களங்கனி வாய்க்கு இனிமை போலே
முறுவலும் இனிமையாய் -மாரி வண்  கை-கற்பக வள்ளல் போலே
இளங்கன்னி இவளுக்கு -இளங்கனி இவளுக்கு -தொகுத்தல்  விகாரம் –

——————————————————————

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—2-7-8-

ஆம்பல் -இசைக் குழல் என்னும் பெயர்
அலம் கெழு தடக்கை ஆயன் –  ஹலாயுதன் -பலராமனைச் சொல்லிற்று என் என்னில்
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய்ப் பின்னும் இராமனாய்
தாமோதரனாய் கல்கியும் ஆனான் -பெரிய திருமொழி -8-8-10-ஒற்றுமை நயம் தோன்ற
அலம்புரிதடக்கை யாயனே -1-6-2-என்றார் கீழும்
அலமும் ஆழிப் படையான் -9-3-8-என்பர் மேலும் –
போதுமோ நீர் மலைக்கு என்னும்
திருநீர்மலையிலே விசேஷ அபிமானம் இவ் வாழ்வாருக்கு –
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை -5-2-8- என்றும்
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே -7-1-7-என்றும்
அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய் வெருவினாள்  -8-2-3–என்றும்
நெருநல் கண்டது நீர் மலை -10-1-1-என்றும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் -திரு நெடும் தாண்டகம் –
போதும் -தன்மைப்  பன்மை விகுதி -போவோம் என்றபடி
நெடு மழைக் கண்ணி – ஆஹ்லாத சீத நேத்ராம்பு -பரம பக்தர்கள் நிலை –

—————————————————–

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய  வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே—–2-7-9-

ஊரூண் கேணி யுண்டு யுறைத்து ஒக்க  பாசி அற்றே பசலை காதலர் தொடு யுழி நீங்கி
விடு வுழி பரத்தலானே -குறுந்தொகை -399
இவ் வணங்க்கு ஏற்ற நோய் அறியேன் -உனது  கடாஷத்தில் ஆசைப் பட்டா -புன் முறுவலில் ஆசைப் பட்டா –
திரு மேனி யுடன் அனைய ஆசைப் பட்டா -அறிகிலேன் என்றவாறே-

மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு-உள்ளுறை பொருள் –
ஆசரயத்தின் அளவில்லாத பக்திப் பெரும் காதலை யுடையவள் என்றவாறு
என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100- போலே
குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவேந்தை எந்தை பிரானே –
தாய் உதவுவள் -தமப்பன் உத்தவுவன் -உறவினர் உதவுவர் -நமக்கு என் -என்று நினைத்து இருக்கிறாயோ
இப்படி யாகில் பரமபதத்தை விட்டு நீ இந்நிலத்தில் வந்து திரு விடவெந்தையிலே சந்நிதி 
பண்ணி அருளிற்று பிரயோஜனம்  அற்றதாகுமே என்றவாறு  –

——————————————————–

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-

தாமான தன்மையில் பேசி அருளி தலைக் கட்டுகிறார்
திருவவதாரம் செய்து பலருக்கும் அருள்  செய்தால் போலே எனக்கும் அருள் புரிய வேண்டும்
தீ வினைகள் முற்றும் அறுத்து நித்ய கைங்கர்ய பிராப்தி இப்பதிகமே  அருளும்
கலியன் வாய் ஒலிகள் -பக்தி பெரும் காதலை அந்யா பதேசத்தால் அருளியவை
அருளாய் என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை என்றதானால் –
எம்பெருமான் சோதி வாய் திறந்து அருளிச் செய்தது கொண்டு தேறுதல் அடைந்து
இத் திரு மொழியைத்  தலைக் கட்டி அருளுகிறார் எனபது விளங்குமே –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading