ஸ்ரீ பாஷ்யம்
அவித்யாயாம் சப்த வித அனுபபத்தி -ஏழு விதம்
அனுபபத்தி -உப பத்தி இல்லாததும் மட்டும் இல்லை -எப்படி சரியாக இல்லை என்பதையும் காட்டி
உபபத்தி -சரியான காரணம்
ஆறு வார்த்தை
ஸ்ரீ பாஷ்யம்
அசக்தன் அருளிச் செயல்
படி படியாக
திரு நாராயணபுரம்
தன்னுடைய ஸ்ரீ பாஷ்யம் முதலில் சொல்ல காரணம்
மீண்டும் அகில ஹேய ப்ரத்ய நீக அருளி –
அத்வைதிகள் ஜீவாத்மாவே இல்லை
நிர்குணம் நிராகாரம் அவேத்யம் அவாசகம் அத்வைதிகள் வியாபகமான இருந்த காலம்
குணங்களை விசேஷமாக அருளி செயல் ஸ்ரீ ராமாயணம்
சங்கர பாஸ்கர யாதவ பிரகாசர்
ஆரம்பத்தில் அவற்றைக் கற்று
இதுவா அதுவா குழப்பம்
காஞ்சி பூர்ணர் இடம் காட்டு தெளிந்தார்
அத்வைத சித்தாந்தம் பரவி இருக்க
வேதார்த்த ஸங்க்ரஹம் முதலில் அருளி –
ஸ்ருதிக்கு விரோதம்
நியாய விரோதம்
ஜகதி விஸ்தாரம் மோகனம் -வித்தி -விஸ்தாரம் -மோகம் பரவி
குணங்கள் உண்டு
ஆகாரத்வமும் உண்டு -அபிராக்ருதமான
சுபாஸ்ரயம்
சவிசேஷா விபூதி உண்டு
ஸ்ரீ பாஷ்யம் வாசித்து இவை உண்டு அறிந்த பின்பு
historical back ground
அடிமை பட்டவர்கள் அறிந்து
கதய த்ரயத்திலும் மீண்டும் மீண்டும் குணங்கள் விக்ரஹம் விபூதி சொல்லி
ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்
மங்கள ஸ்லோகம்
யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய
அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்
ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்
ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்
அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே
குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே
அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்
ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு
விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே
ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி
அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்
அவித்யா -வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -நாம்
6 வித அர்த்தம் negative உண்டே
அப்ராஹ்மானம் கூட்ட வா
விதித்வா -ஞானம்
தமேவ -மிருதயம் தாண்டி மோஷம் அடைகிறான்
தமேவ வித்வான் அம்ருத ஏக பவதி நானன்ய பவதி
பக்தி ரூபானன்னா ஞானம்
ஞானம் யோகம் ஒன்றாலே மோஷம் அத்வைதிகள்
ஞான யோகம் நிராகாரமான
உபாசனம் இல்லையே அத்வைதிக்கு
ஒன்றே தான் உண்டு
ஏது அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவியக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்தியம் கூடஸ்தம் அசரம் துருவம்
ஸநியம்ய இந்திரிய கிராமம் ஸர்வத்ர சமபுத்தேர்
தே பிராபனுவந்தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா :கீதை 12 யோகம் -ஞான யோகம்
அவயகதம் உபாசனம் கிலேசம் சரமம் உண்டாகும்
துக்கத்தில் போய் முடியும்
பக்தி மார்க்கம் சொல்லி அருளுகிறான்
மர்கட கிசோர நியாயம்-குரங்கு குட்டி தானே அம்மாவைக் கட்டி கொண்டு தன ரஷணம் தனக்கு
மார்ஜுவர கிசோர நியாயம் -தானே கவ்வி கொண்டு போகும் பூனை
ஞானம் பக்தி மார்க்கம்
குழந்தை தாய் கை பிடிப்பதற்கும் தாய் குழந்தை பிடித்து போவதற்கும்
அவதாரணம்
பக்தி ரேவா முக்தி உபாயம் –
அவித்யா வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -கர்மம் தானே
ஞான கர்ம சமுச்சய வாதம் -நான்குவித பசங்கள் உண்டு
அங்க அங்கி பாவம் நம் சித்தாந்தம்
ஞானம் அங்கி
கர்மம் அங்கம் –
அத்வைதிகள் –
அவித்யை எனபது-கொண்டே சம்ப்ரதாயம்
அடித்தளம்
சாதகம் செய்ய -சாத்தியம் இல்லையே
ஆத்மா யாதாம்ய வித்யை அநாதாரிகம்
ஏழு அனுபபத்தி காட்டி -அருளி
அனுர்வசநீயம் -நிர்வசனம் நிர்வசநீயம் அவித்யை எப்படி பட்டது சொல்ல முடியாது
பர ப்ரஹ்மா அவித்யையால் ஜீவாத்மாவாக என்பதால்
அபூர்வமான பர ப்ரஹ்மம்
நாம ரூபம்
அநேன ஜீவனே – ஜீவாத்மா மூலமாக -சாதுர்முகன் மூலம் நாம ரூபம் வாயகரவாணி
காலம் –
எல்லா வஸ்துவும் வசநீயம் நீயமானம்
1-ஆஸ்ரய அனுபபத்தி முதல் அனுபபத்தி
நேதி நேதி மார்க்கம் நிராகாரா உபாசனம்-ஆழந்த சிந்தனை-கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் அறிய
உபநிஷத் சொல்வது எல்லாம் சகுண வித்யை தான்
உபாசனம் சொன்னாலே குணம் ஆகாரம் வேண்டுமே –
ஈசா வாச உபநிஷத் வித்யா அவித்யா
கர்மம் அர்த்தம் அங்கும்
ஈஸ்வர சர்வ பூதானம் ஈசான சீலன் நாராயண சங்கரர் அருளி –
நாராயண சப்தம் கொண்டே
ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-19-41-முக்கிய ஸ்லோகம்
ககனமான அர்த்தம்
கீதை ஷணம் தோறும்வேலை செய்து கொண்டே
சூஷ்ப்ப்தி அவஸ்தையிலும் அஹம் அர்த்தம் உண்டே
ஜாக்ரதை சொபன துரியா அவஸ்தை
கர்மம் -ஆகர்ஷக ரூபமான கர்மம்
பந்தத்துக்கு காரணமாக இல்லாமல் காயிக வாசக மானச –
மோஷத்துக்கு காரணமாக இருக்க வேண்டும்
வித்யை அது போலே
வித்யை விகாசம் -சிந்தம் –
உப லஷணம்-
ஆயாசாகா -கர்மம் -சரமம் தாபம் பந்தம்
வித்யை பேர் லௌகிக அறிவு
சரியான கர்மம் வித்யை ததேவ கர்மா
ச ஏவ வித்யா முக்திக்கு காரணமானது தான் –
பந்தங்கள் மோஷங்கள்
அவித்யை காரணத்தால் சம்சாரதுக்குள் படும் ப்ரஹ்மம்
அநாதி அவித்யை
நிர்விசேஷ சுயம் பிராகசம் ப்ரஹ்மம் இரண்டும் பிரதான அம்சம்
தீபம் போலே தன்னையே காட்டிக் கொடுக்கும் போலே
ஈச ஈச்தவ்யாது அநேக வித
ஈசிதவ்யம் -நம்முடையது
ஈசித -சுவாமி
ஸும் ஸ்வாமி பாவம்
தோஷத்தால் விகல்பங்கள் உண்டாகிறது
தோஷச்த ஸ்வரூப திரோதான -பிரகாசிக்க முடியாமல் பண்ண -அவித்யா தோஷம்
அது மட்டும் இல்லை –
விவித விச்சேத்ரா விச்சேபம் -கடம் படம் போலே காட்ட –
அநாதி
பிரதம பிரவ்ருத்தி -ஸ்வா தந்த்ர்யம்
கரமண அநாதித்வா
ந வித்யதே –ஆதி என்றுமாம் -ஆரம்பம் தெரியாததுஎன்றும் ஆதி இல்லாதது –
சத் அசத் அநிர்வசனீய
ஹிரன்ய நிதி -அமிர்தேன
நித்ரா –
பரமாத்மா சம்யோகம் தான் நித்ரா
நாடி புரீதம் நாடிக்குள் மனஸ்
சைதன்யமயம் பரமாத்மா
பிராணிகள் எல்லாம் இப்படி
யதா ஹிரன்ய நிதிம் அஷர-ப்ரஞ்ஞாகா -தெரியாமல்
புதையல் கீழே -இருப்பது அறியாமல் -வீட்டை விற்று
உபரி உபரி சஞ்சரி ன் விந்தைதான் நிறை நிறை
அது போலே அஹர் அஹர் ப்ரஹ்ம கச்சந்தி ன் வின்தடி
எதானால் தோஷம் -ஏவமேவ
அமிர்தம் ன் பிரத்யஊடக வார்த்தை எடுத்து தோஷம்
சுஷ்ப்தி அவஸ்தை சொல்ல வந்த பிரகரணம்
சதச் அநிர்வசநீயா அநாதி அவதியை
சத் -இருக்கும் வஸ்து
அசத் வஸ்து -சச ஸ்ருங்கம் முயல் கொம்பு ஆகாச தாமரை சிங்க தும்பிக்கை போல்வன -சம்பூரணமான அசத் வஸ்து
பிரபஞ்சம் எல்லாம் சத் அசத் வஸ்துக்களாக இருக்கும்
இரண்டும் உள்ள வஸ்துவோ
இரண்டுமாக இல்லாத வஸ்து உண்டோ
அத்வைதிகள்
இருக்கலாம் -illution
கயிறு பார்த்து பாம்பு சொல்வது
புல் குச்சி -கரடி
சர்வதா அசத்தாக இருந்தால் சரபம் போலே எப்படி தோன்றும்
கரடி போலே நினைக்க வில்லை
சத் தானே சர்ப்பம் –
சர்வதா அசத்தாக இருந்து இருந்தால் தோன்றி இருக்காதே
பாம்பு தான் என்று நினைத்து பயந்து இருக்க
கயிறு தான் காட்டிய பின்பு
புரிந்து
முன்னாள் பாம்பு புரிதது பொய்
பாதக -பெயர் கொடுத்து
பூர்வ ஞானம் பாதிகம்
சர்ப்பம் அசத்
சர்ப்பம் இத்தால் சத் அசத் இரண்டு ஆகாரமும் வந்ததே
சதித் ந பாத்யேதே
அசத்த்யேத தோன்றியே இருக்காதே
சதசதே அதனால் அநீவசநீயம் -define பண்ண முடியாதது
1/o =infinity அநிர்வசனீயம்
infinity /infinity -infinity அநிர்வசனீயம் போலே
அவித்யை அது போலே
அசத் -சொல்ல முடியாது
ஜீவாத்மாவாகவும் மற்ற அசித் வஸ்துகளாகவும் பார்ப்பதால்
சத் சொல்லலாமோ -உண்மையால் இல்லை
சதேவ சமய ஏக மேவ அத்விதீயம் ப்ரஹ்மா
ஒரே வஸ்து
ஒற்றே இருந்தது
இரண்டாவது இல்லை சொல்லி
விதி முகென நிஷேத முகென
சதசத அநிர்வசநீயத்வம் அநாதி
நிர்வசன யோக்யதை இல்லையாமையால்
பிராந்த பாதம் இரண்டும் இருப்பதால் சத்
ஸ்ருதி விரோதம் வருவதால் அசதி சொல்ல முடியாதே
இரண்டு கோடியிலும் இருப்பதால்
இரண்டு கோடியிலும் சேராமல் இருப்பதால்
ஏழு வித அனுபபத்தி காட்டி
ஆஸ்ரய அநுபவத்தி பிரதம
அவித்யை எங்கு இருக்கு -முதல் கேள்வி –
அப்யுகம -இருந்து என்று வைத்து கொண்டால்
கௌதம மக ரிஷி காட்டி
வாத க்ரம-படி
ப்ரஹ்ம வசத்துக்கு ஆஸ்ரயம் எங்கே அவர்கள் கேட்டால் ஸ்ரீ பாஷ்யம் அர்த்தம் உண்டே
அவித்யை ஜீவாத்வாவிலீ பரமாத்வாவிலா
விகந்தி பூஷணம்
ஜீவாத்மாவே இல்லையே உங்கள் பஷத்தில் இருக்க முடியாதே
பரமாத்மாவில்
சூரியன் இடம் அந்தகாரம் இருக்குமா
சுயம் பிரகாச வஸ்து நீங்களே சொல்லி
அங்கும் இருக்கும் முடியாதே
தத் அயுத்தம்-
தத்ச்ய சுயம் பிரகாச ஞான ஸ்வரூபம் என்று சொல்வதால்
நித்யத்வம்
அநித்யத்வம் ஆகாசம் காலம்
புஸ்தகம் உத்பத்தி வினாசகம்
ஒரே வஸ்துவில் இரண்டும் சேர முடியாதே
ஏகத்வம் பகுத்வம் இருக்க
பரஸ்பர விருத்தம்
அவித்யை உபாதியால் எனபது முடியாது
ஆஸ்ரய அனுபபத்தி உண்டே
கவிதார்த்த சக்கரவர்த்தி -ஸ்ரீ பாஷ்யம் கண்டனம்
கவிதார்த்த சிம்ஹம் தேசிகன்
தூஷணி அருளி பதில் கொடுக்க
சத பூஷணி எழுத வைத்தார் காஞ்சிபெரிய ஸ்வாமி
பரமார்த்த பூஷணி உத்தமர் ஸ்வாமி
பாஸ்கரர் உபாதி சத்யம் சொல்லி த்விதீயம் ஸ்ருதி வசனம் தப்பாகுமே
பாமதி பிரஸ்தானம்
விவரண பிரஸ்தானம் அத்வைதி இரண்டு பஷம்
பரகால ஸ்வாமி ஆராய்ந்து இத்தைக் காட்டி அருளி –
திரோதான உபபத்தி -இரண்டாவது
மறைவது –
அந்தர்தானம் -ஒரு சப்தம் உண்டு -அது வேற
பிரகாச ஏக ரூபம் ப்ரஹ்மன்-முதலில்
யாருக்கு
பார்க்கிறவன் பார்க்கப் படுபவன் இரண்டு இல்லையே அவர்கள் பஷம்
2-அடுத்து அவித்யை ஏற்பட்டு -அநிர்வசனீயம்
மறைத்து –
பூர்ண அந்தகாரமா -தோராயமாக காட்டி
அடுத்து -இதனால் -திரோதானம்
அந்த திரோதானம் போன பின்பு
பந்தமும் மோஷமும் ப்ரஹ்மத்துக்கு
பந்தத்துக்கு காரணம் அவித்யை
மோஷத்துக்கு காரணம் வித்யை –
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மிதியை
மறைத்தது
ஹிரன்ய மயமான பாத்ரத்தால் ஆவிர்வதம் சத்யம் அபிஹிதம் ஈசானா உபநிஷத்
ஜீவாத்மா -அந்தர்ஹிதம் பரமாத்மா சொல்ல வந்தது
எள்ளுக்குள் யென்னெய் போலே
கரந்தநெய் தயிரில் போலே
சர்வம் வியாபி
ஷீரே-
பாலில் நெய் -காய்ச்சி கொஞ்சம் ஆரி -உறை குத்தி -ஏடு எடுத்து கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்
த்யானம் -கடைவது போலே
தேவம் பச்யேது
அல்லோக்கம் அகாரத்துக்கு லோபம்
விஹிதம் -ஒரே அர்த்தம்
நிகூடவது -as if hidden
திரோதானம் என்ன –
மூடி வைத்தா -முதல்
தீபம் விநாசம் -பிரகாச உத்பத்தி பிரதிபந்தம்
தீபத்தையே அழித்து
இரண்டும் சரிப்படாதே
வித்யமானச விநாசகம் இருக்க முடியாதே
நித்ய சுத்த பிரகாச்த்வ ஸ்வரூபம் சொன்ன பின்பு –
மறைக்க -முடியாதே பிரகாசம் எப்பொழுதும் உண்டே
பிரகாசம் குணமா –
தீபம் திருஷ்டாந்தம் சொன்னால் தேப்பம் வேற பிரகாசம் வேற
பத்ரம் வைத்து மூடி
தீபமே அணைந்து
தீபம் வேற பிரகாசம் வேற குணா குணி பாவம் வருமே
இரண்டு இல்லையே உங்கள் பஷத்தில்
அபசித்தாந்தம் -self goal போலே
கிஞ்ச –
ந்னு-
அத –
major objection
தூஷநாந்தரம் -ஓன்று சொல்லி பின்பு அடுத்து சொல்ல
இதி வததா-இப்படி சொல்லிய உன்னால்
பிரகாச ஏக ஸ்வரூபம் அவித்யய்யால் திரோதிகம்
ஸ்வரூப நாசம் ஆனது போலே ஆகுமே
பிரகாச திரோதானம்
உத்பத்தி பிரதிபந்தி
விநாசன
ஞான ஏக ஸ்வரூபம் ப்ரஹ்மம் அவித்யையால் மறைய முடியாதே
பூஷணம் போலே அத்வைதிகள் சப்த அனுபபத்தி சொல்வார்கள்
பூஷணம் ஏவ தூஷணம் இல்லை
ராமாயணம் -சீதை ராவணனுக்கு உபதேசம் சுந்தர காண்டம்
உனது மனைவி தொக்கி போனால்
சு தர்ம ரஷணம் -இது எங்கள் தர்மம் என்பான்
நீ தோஷம் சொன்னது எல்லாம் குணம் தான் என்பான்
துர்கடத்வம் எல்லாம் பூஷணம் தான் என்பார்கள் –
கண்டன கண்ட காவியம்
சதா தூஷணி 68 வாதம் தேசிகன்
வாத ஜல்ப விகண்டா வாதம் -தத்வம் அறிய
ஜல்பம் உளறுவது
விதண்டா -சுய பஷ ஸ்தாபனம் உத்தேச்யம் இல்லை
ப்ரஹ்மம் சத்யம் நிராகரணம் செய்தால் ப்ரஹ்மம் மிதியை வருமே
கதையாம் அதிகாராம் நாஸ்தி
வாதம் பண்ண மாட்டேன் -சொன்னால் insult
அவமானம் –
சங்கராச்சாரியாருக்குப் பிறகு வந்த பாஸ்கர, யாதவபிரகாசர் பக்ஷங்கள் தவிற ,
மிஸ்ரருடைய பாமதி பிரஸ்தானம் , பிரகாஸாத்மா வினுடைய பஞ்சபாதிகா விவிரண பிரஸ்தானம் முறையே
ஜீவாக்ஞான வாதம், பிரஹ்மக்ஞான வாதம் என அனுபபத்திப் பரிகாரம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்களும், பகவத் ராமானுஜருடைய இந்த சப்தவித அனுப்பபத்திகளுக்கு யுக்தா யுக்தமாக பதில் சொல்ல வில்லை.
அவர்களுக்குப் பிறகு வந்த ஸ்ரீஹர்ஷா என்கிற கவி ”கண்டன கண்ட காவியம் ” என்கிற தன்னுடைய கிரந்தத்தில்
பகவத் ராமானுஜருடைய யுக்திகளை விதண்டா வாத முறையில் எதிர்க்க, அவைகளுக்கு ஸ்வாமி தேசிகன்,
”ஸததூஷணி” என்கிற கிரந்த முகேண தக்க பதில் அளித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை புனருத்தரித்தார்.
2. திரோதான அனுப்பபத்தி :
ஸ்வயம் பிரகாசமான பிரஹ்மம் அவித்யையின் பரிணாமத்தால் திரோதானத்தை அடைகிறது .
பரம் பிரஹ்மைவ அக்ஞம் பிரம பரிகதம் ஸம்ஸர்கி என்று பந்த மோக்ஷம் இரண்டும் பிஹ்மத்துக்காய் –
அகண்டைஸ்ச நித்ய முக்த ஸ்வரூபம் நித்ய பிரகாசமான பிரஹ்மத்துக்கு வித்யமானஸ்ய விநாசம் என்பது ஏற்புடைத்தல்லவே?
தீபம் போலே பிரஹ்மம் , திரையிட்டாப் போலே அதன் ஒளி மழுங்கிவிடுகிறது என்றால்,
பிரஹ்மத்துக்கு பிரகாசம் அப்படியே இருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் ஒளி குன்றித் தோற்றம்
அளிப்பது போல வைத்துக் கொண்டால் பிரஹ்மம் வேறு, பார்க்கிறவர் வேறு
அதாவது விளக்கு வேறு ஒளி வேறு என்றாகி அத்வைதம் நிற்காது.
திரோதானத்தால் பிரஹ்மத்தினுடைய ஸ்வப்பிரகாச தர்மம் மறைகிறது என்று வைத்துக் கொண்டால் , பிரஹ்ம ஸ்வரூபம் நாசமடைகிறது என்றாகும்.
சூரியனில் இருட்டு சேராதாகையாலே, தாங்கள் சொன்னதை தாங்களே பொய்ததாகிற, அப -சித்தாந்த தோஷம் வரும் ?
அகடித கடனா படீயத்வா: அவித்யாயேவ துர்கடத்வம் பூஷ்ணமேவா நது தூஷணம். – என்று அத்வைதிகள்
இந்த சப்தவித அனுப்பபத்திகளை குறை எனக்கொள்ளாமல் தங்கள் ஸித்தாந்தத்தின் பெருமையாக,
”அவித்யா ” அப்படியானதொரு அநிர்வசனீய ”பிரஹ்மைவ அக்ஞம் ” என்று ஆமோதிக்கின்றனர்.
அசோக வனத்தில் சிறை இருந்தவளான சீதை, ராவணனுக்கு தன்னை ராமனிடத்தில் சமர்ப்பித்துவிடு என்று உபதேசிக்கிற வேளையில்,
‘ஹே! ராவணா உன்னுடைய மனைவியை வேறு யாரேனும் கவர்ந்து சென்று விட்டால் உன்மனம் எப்படி பாடுபடும்,
அதை நினைத்து , என்னை ராமனிடத்தில் சமர்பிப்பாய் ‘ என்று சொல்ல அதற்கு
இராவணன் பிறர் மனைவியை பெண்டாடுவது ராக்ஷச தர்மமாய் குணமாகும் அன்றி குற்றமாகாது என
தன் தூஷணத்தை பூஷணமாக கொண்டாடினாப்போல உள்ளது அத்வைதிகளுடைய இந்த விமர்சன ஸ்வீகாரம்.
3-ஸ்வரூப அனுப பத்தி மூன்றாவது – ஸ்வரூபம் –இயற்க்கை தன்மை-ரூபம் –நிறம் -ரூப்யம்
அவயவ அர்த்தம் இல்லை –இருந்தால் நித்யமா அநித்தியமா விகல்பம் செய்து வாதம்
சத்யமான யதார்த்தமான வஸ்துவா-அசத்தியமான அயார்த்தமான வஸ்துவா
சத்யம் என்றால் இரண்டாவது வஸ்து வருமே-அசத்தியம் என்றால் அத்தால் பிரமை ஏற்படுமா
அசத்தியம் என்றால் ப்ரஹ்மமும் அசத்தியம் ஆகுமே
பாவ ரூபம் அவித்யை -அனுமானம் பிரமாணம் வைத்து
கயிறு பாம்பு -இருட்டில் -வளைந்த ரூபம் இந்த காரணங்கள் நிஜமா பொய்யா –
கயிறு சத்யம் தானே -வளைவு சத்யம் -நேராக இருந்தால் பிரமை ஏற்பட்டு இருக்காதே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி வாக்கியம்
சிரோ வாக்கியம்-நிர்விஷய நிராசாயா சு பிரகாச anu பூதயா ஞானமே பிரம்ஹம்
அனந்தாச்ரயம்-அனந்த விஷயம் ஆத்மாநாம் -சம்சாரம் அனுபவிக்க தன்னை தானே
பரமார்த்த -சத்யம் -அபரமார்த்தாமா -அசாத்தியமா
பிரமாதாவா -த்ரஷ்டா -பார்க்கக் கூடியவன்
தர்ஷ்யம் -பிரமேயம்
த்ரீஷியம் -பிரமாணம்
அத்வைதம் – -பிரமை -இரண்டு அம்சம் –
ஜகத் சர்ப்பம் ஸ்தானம் -கயிறு ப்ரஹ்மம் ஸ்தானம்
சாதிஷ்டான ப்ரஹ்மம் அத்வைதி
-அதிஷ்டானமான ப்ரஹ்மம் மிதியை சூன்ய வாதம் -மாத்யமிக பாஷம் -புத்தர் போலே
வைதிக சித்தாந்தம் ஆகாதே
சத் அசத் சதசத் ந அசதசத விலஷணம்-சூன்யம் மாத்மிகர்
அவித்யையினுடைய ஸ்வரூபம் என்ன என்பது கேள்வி? ஸ்வரூபம் என்றால் = nature. ரூபம் என்றால் colour or form.
abstract ஆன விஷயத்துக்கு ஸ்வரூபம் உண்டா என்றால் கிடையாது. இங்கு அவித்யைக்கு ரூடி அர்த்தம் என்ன?
அப்படியான ஒரு வஸ்து உண்டா? இல்லையா? என்பதே கேள்வி?
அப்படியொரு வஸ்து இருக்கிறது என்று வைத்துக் கொண்டு , அது உண்மையா? பொய்யா? என்று வாதிப்பது விகல்பம்.
இருக்கிறது என்றால், கூடாத விஷயங்கள் (அனுப்பபத்தி) இவை.
இல்லை என்றால் கூடாத விஷயங்கள் இவை என்று இரண்டுமே சித்திதால், அப்படியொரு நித்யாநித்ய வஸ்துயில்லை என்பதே உண்மை.
அவித்யா யதார்த்தம் என்றால் துவைதம் சித்திக்கும். அயதார்த்தம் என்றால் அது எப்படி பிராஹ்மத்தைப் பீடிக்கும் ? என்பது அடுத்த கேள்வி?
அது ஊகத்தால் பெறப்படுகிறது என்கின்றனர். ஊகமாவது அனுமானம் .
உ.ம்.-பர்வதோ வந்நிமான் , தூமத்வாத் என்பது ஒரு அனுமான நிர்தேசம்.
இங்கு
பர்வதம் – பக்ஷம்.
வந்நி – சாத்தியம் .
தூமம் – ஹேது .
பர்வத: வந்நி அபாவவான் , பாஷாணத்வாத் – என்று பிரதிவாதி.
வாதம் என்றால் வாதி, பிரதிவாதி இடையில் மத்யஸ்தன் என்ற நடுவர் உண்டு.
முதலில் ”சமய பந்தம்” என்று சில Axioms பொதுவாக நிர்ணயிக்கப் படும் .
அதற்கு உடன்பட்டு இருவரும் வாதத்தைச் செய்ய வேண்டும். இதற்கு ஸத் பிரதிவாதம் என்று பெயர்.
அப்படி ஒப்புக்கொள்ள வில்லையானால் அவர்கள் மேலும் வாதம் செய்ய முடியாமல் கதா-அநதிகாரி என்று வாதத்தில் இருந்து விலக்கப் படுவர்.
4-நான்காவது அநிர்வசனீயதவ அனுபபத்தி
5-ஐந்தாவது பிரமாண அனுபபத்தி -அனுமானம் -ஸ்ருதி வாக்யங்கள்
பிரமாண அனுபபத்தி பெரிய அனுபபத்தி
க்யாதி வாதம் -பல விஷயங்கள் theory of ஏற்றோர்
இப்படி பட்ட வஸ்து ஸ்பஷ்டமாக காட்ட முடியாது -அநீர்வசநீயத்வம்
அநிர்வசனீயம் அவித்யா என்பதை
a . யுக்தியைக் கொண்டும்,
b . அனுமானத்தாலும்,
c . ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாச வசனங்களாலும்-அத்வைதிகள் நிரூபிக்க பார்க்க, அதன் அனுப்பபத்தியை மேலும் பார்ப்போம்.
பிற மதத்தவர் காட்டும் பிரமாணங்களின் எண்ணிக்கை 8. அவை :
a. பிரத்யக்ஷம். – புலனறிவு. மானஸம் சேர 6 வகை.
b. அனுமானம் – ஊகம் . தெரிந்தலிருந்து தெரியாததை அறிவது- inference.
c. உபமானம் – உவமை. ஒரு சம்பவத்தில் இருந்து இன்னொரு சம்பவத்தை d. ஒப்புவமிப்பது.
d. ஸப்த – உபதேச ./ யதா திருஷ்ட, யதார்த்த ஆப்த வசனம்.
e. அர்த்தாபத்தி – பீனோ தேவதத்தா திவா நபுங்க்தே – ராத்திரி போகி. இரவில் பூஜிப்பான் என்று ஊகித்தறிவது – deduction.
f. அநுபலபத்தி – இருந்ததில்லை
g. ஸம்பவம் – Possibility
h. ஐதிஹ்யம் – சதே பஞ்சாசம் நியாயம் / அக்ஞாத வக்திருகம் – செவி வழி.
நமக்கு 3 பிரமாணங்களே சம்மதம்.
ஸதஸத் அநிர்வசனீயம் அநாத் யவித்யா., என்பதற்கு,
பகவத் ராமானுஜர் பல அனுப்பபத்திகளை காட்டின பிறகு , அநிர்வசனீயம் என்றில்லாமல் ”பாவ” ஸப்தத்தாலே காட்ட முயன்றனர்.
பதார்த்தா : த்விதா : பாவ: அபாவ: சேத்.
பாவ: என்றால் அஸ்தித்வ வஸ்து (+ve entity ).
அபாவ : என்றால் நாஸ்தி வஸ்து ( -ve entity ).
அவித்யா என்பது பாவ: Positive entity .
பிராஹ்மத்துக்கு அவித்யையால் ஜீவ பாவத்தை அடைந்து ஸம்ஸரிக்கிறது .
தன்னுடையதேயான வித்தையால் மோக்ஷ பிராப்தி அடைகிறது. அதாவது பிரஹ்மத்துக்கே பந்தம். பிரஹ்மத்துக்கே மோக்ஷம்.
ஜீவ பாவம் கல்பிதம் என்பது அத்வைதிகள் சொல்வது.
ஸுத்த புத்த முக்த ஸ்வரூபம் பிரஹ்ம என்ற போது புத்த என்ற வித்யைக்கு எதிர்த்தட்டான
அவித்யா (ந+வித்யா) எப்படி பிரஹ்மத்தோடு சேர்ந்திருக்கும்?
ஆலோக: = வெளிச்சம்.–ந ஆலோக: = இருட்டு.-என்பது போல் அல்ல .
அவித்யா வித்யா விரோதி அல்ல . வித்யா பின்னம் . வித்யா சதுர்சம். நவித்யா- அன்யது கிஞ்சிது வித்யையைப் போன்றது. வேறுபட்டது.
உ.ம். அபிராஹ்மண: அதுவும் ஒரு பாவ வஸ்து. வித்யைப்போலே இன்னொரு positive entity.
ஆகையால் இரண்டும் பிரஹ்மத்திடத்தில் ஒருசேர இருக்க தட்டில்லை.
விஷயம் – விஷயீ.
ஒரு புத்தகத்தைப் பார்த்து, ”இது புத்தகம்” என்று தெரிந்து கொள்கிறபோது, ”புத்தகம்” விஷயம்.
இது புத்தகம் என்று ஏற்பட்ட ”அறிவு” விஷயீ என்றாகும்.
உறங்கி விழித்தவன் ”நான் சுகமாக தூங்கினேன், (என்ன நடந்தது என்று) ஒன்றுமே தெரிய வில்லை ” என்று சொன்னானேயாகில் ”
ஞான அபாவம்” இருந்ததாக உணர்த்துகிறான்.
ஞான அபாவத்துக்கு பிரதியோகி = ஞானம்
உ.ம். கஜாபாவத்துக்கு பிரதியோகி = கஜம்.
அஸ்வாபாவத்துக்கு பிரதியோகி = அஸ்வம். .
கஜாபாவத்தை குறிப்பிட வேண்டுமாயின், கஜத்தை ஒருமுறையேனும் பார்த்தவனாக இருக்க வேண்டும் .
கஜாபாவ பிரதி கஜ காரணம். அது இல்லாதவனுக்கு அபாவ க்ஞானமே ஏற்படாது. இதை ஒரு Thumb rule ஆக சொல்லப் போனால்
அபாவ க்ஞானம் பிரதி பிரதியோகி காரணம் – என்ற இத்தை
மேல்சொன்ன தூங்கி விழித்தவனுடைய உதாரணத்தில் பொருத்தி பார்க்கையில் ,
ஞானா-க்ஞானம் ” இல்லாமல் ”க்ஞான-அபாவம்” உண்டாகாது என்று தேறுகிறது.
தூங்கி விழித்தவன் ”ஒன்றும் தெரியவில்லை ” என்று நினைவு கூறுவது (பிரத்யபிக்ஞா) அஞானமாக வைத்துக்கொண்டால் ,
அது ஞான விரோதியான ஞான-அபாவம் இல்லை . அதுவும் ஞானத்தைப் போன்ற இன்னொரு வஸ்து .
அந்த வகையில், எப்படி தூங்கிவிழித்தவனிடத்தில் ”ஞானம் ” , ”அஞானம் ” இரண்டும் ஒருசேர இருந்ததாக
ஒப்புக்கொள்கிறோமோ அதுபோல , ”வித்யா ” , ”அவித்யா ” இரண்டும் ”ஸகபாவி” யாக இருட்டு,
வெளிச்சம் போல் அல்லாமல். புத்தகம், பேனா – லேகனி, அலேகனி போலே பிரஹ்மத்திடத்தில் இருக்க அமையும்.
எந்த தோஷமும் இல்லை..
அவித்யா என்பது ஸதஸத் அநிர்வசனீயம் தான். பாவ ரூபமான வஸ்து வானபடியாலே பிரஹ்மத்திலே இருக்கலாம் என்று
பிரத்யக்ஷ பிரமாண த்தைக் கொண்டு அத்வைதிகள் சமர்த்திக் கின்றனர்.
அவித்யா தோஷமா? இல்லையா ?
தோஷமானால், அது பிரஹ்மத்திட்டத்தில் இருக்க வழி இல்லை. காரணம்,
பிரஹ்மம் நிரவத்யம், நிரஞ்சனம் என்று சுருதிகள் கோஷிக்கின்றன அத்வைதிகள் படி அந்த பிரஹ்மம் ஸுத்த புத்த நித்ய தத்வம்.
தோஷமில்லையாகில், அது எப்படி பிரஹ்மத்தை வஸ்து ஜாதங்களாக பிரமிக்கச் செய்யும்? ஸம்சரிக்கச் செய்யும்?
அத்துவால் வியாகாத தோஷம் (Self contradition) வாராதோ?
ஸுஷுப்தி (sub-Conscious state) அல்லது உறக்கம் மற்றும் மூர்ச்சா அவஸ்தையில் (un-Conscious state)
பாஹ்ய வஸ்து க்ஞான உணர்த்தி இல்லையே ஒழிய ( Dharma bhootha Jnanam goes dormant and not absent),
”அஹமர்த்த” (நான் என்கிற உணர்வு) ஞானம் ஸ்வ பிரகாசமாதலால் தூக்கம், மூர்ச்சை வேளையிலும் நிலைத்தே இருக்கும்.
This ” I ” is not Ego – அஹங்காரம். இல்லை.
அத்வைதிகள் தர்மிபூத ஞானத்தை ஒப்புக் கொள்கின்றனர். தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்வ தில்லை.
தார்க்கிகளாகிற நையாயிகன் தர்மிப்பூத ஞானத்தை ஒப்புக் கொளவதில்லை. தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.
விசிஷ்டாத்வைத்த சித்தாந்தத்தில் இரண்டுமே ஒப்புக் கொள்ளப் படுகின்றன.
மற்ற சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட இந்த நிலைப்பாட்டால், ஸர்வ தந்திர ஸ்வதந்திர சித்தாந்தமாகிறது.
அவித்யா – ஞான அபாவமா? (absence of Jnana) ஞான விகல்பமா? (different from Jnana) ஞான விரோதியா? (or opposed to jnana).
எப்படியானாலும் அவித்யா பாவ ரூபா: என்பது மேலே பலபடியாக நிராகாரணம் செய்யப் பட்டது.
கியாதி வாதம் :
அக்கியாதி – மீமாம்சகன்.
அன்யதா கியாதி – தார்கிகன் .
(அக்கியாதி ஸம்ஹரித ) யாதார்த்த கியாதி – பகவத் ராமானுஜர்.
அஸத் கியாதி – பௌத்தன்.
அநிர்வசனீய கியாதி – சங்கரர்./ ஜைனர்.
பாம்பை பழுதென்று நினைகை அயதார்த்த கியாதி.
இல்லாததை இருப்பதாக புரிகை (அ ) இருப்பதை இல்லாதாக புரிகை அயதார்த்த ஞானம்.
வசிஷ்ட புத்திம் பிரதி விசேஷண ஞானம் காரணம்..
உ.ம்.
குண்டலி தேவதத்த :
குண்டலத்தை அணிந்தவன் குண்டலி.
தேவதத்தன் குண்டலத்தை அணிந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டுமானால்,
குண்டலத்தைப் பற்றிய ஞானம் நமக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
குண்டலம் விசேஷணம்.
கோ என்றால் கௌ-த்வ விசிஷ்ட: கோ: அதுபோல
ரஜ்ஜுத்வ க்ஞானம் இல்லாமல் ரஜ்ஜு தோற்றது.
ஸர்பத்துவ க்ஞானம் இல்லாமல் சர்ப்பம் தோற்றது.
ரஜ்ஜுவில் ஸர்பத்துவ க்ஞானம் ஏற்பட்ட வேண்டுமானால் , அதற்கு காரணம் அங்குள்ள ரஜ்ஜுத்வம் தோற்றாதது ஒன்று. அது அக்கியாதி.
ஸர்பத்துவம் தோற்றினது அன்யதா கியாதி .-அந்யதாகியாதிக்கு காரணம் அக்கியாதி.
ப்ரமா ஸத்கியாதி. ப்ரமா அக்கியாதி ( அயதார்த்தம்) ஸம்ஹரித யாதார்த்த கியாதி (க்ஞானம்). உ.ம். கானல் நீர்.
”யதார்த்தம் ஸர்வ விஜ்ஞானம் இதி வேதவிதாம் மதம்” – என்கிற வேதாந்த அனுமதியும் இதற்கு உண்டு
என்பதை பகவத் ராமானுஜர் இவ்விடத்தில் காட்டுகிறார்.
இனி அனுமான பிரமாண முகேண உத்பாதனம் .
எல்லாம் மிதியை சொல்லுகிற வார்த்தை மித்யையா சத்தியமா
நான் சொல்லுகிற வார்த்தை பொய் என்பதும் பொய்யாம்னால் –
வாய் திறந்தால் அத்வைதம் போகும் சொல்லும் சொல்பவனும் உண்டே
சந்தாயவதன வேளையில்
சிகை பூணல் தாகம் அத்வைதிகள்
சஞாசா ஆஸ்ரமம் பண்ணக் கூடாது சாஸ்திரம்
புதர்
சங்கரர் ஆச்சார்யர் கோவிந்த பாதர் -அவர் குரு
குட பாதர் பௌத்தர் அவர்
அவதூத சன்யாச கிராமம்
நான்கு ஆஸ்ரமம் தாண்டினது
சிகை பூணல் விதிக்க தர்மம்
ஏக தண்டமும் அப்படி
சாஸ்திர விருத்தம்
ராவணன் -த்ரி தண்ட தாரி தான்
வர்ண ஆஸ்ரமம் உள் பட்ட சன்யாசம் -சிகை -பூணல் உண்டு நமக்கு
மோஷம் கிடைத்தாயிற்று -அதனால் வேண்டாம் என்று அவர்கள்
கடாகாசம் -கடம் உடைந்து கடாகாசம் மகாசம் லயம் ஆனபின்பு
உதாரணம் காட்ட
சரீரம் போகத்தான் காத்து இருக்க –
அவித்யா பாவ ரூபம் பிரமாணம்
பிரத்யஷம்
அனுமானம் -காட்டி சொல்ல
அத்தை நிரசனம் செய்து அருளுகிறார் –
தமஸ் -பாவ ரூபமான வஸ்து நாம் சொல்கிறோம்
அவித்யை பாவ ரூபம் இதுக்கும் நிறைய வாசி உண்டு நல்குரவும் -புண்ணியம் பாபம்-விருத்த ஸ்வபாவம் –
அவித்யா எனபது -வித்யா பின்னம் சத்ருசம் அதனால் – கர்மம் நாம் சொல்கிறோம்
5- அநிர்வசனானுப்பபத்தி :
அவித்யா அநிர்வசனீயா – அது இன்ன தன்மை என்று காட்ட முடியாது என்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. காரணம்
உலகில் பெயர், உருவம் இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது. இவையே பதார்த்தம் எனப்படுவது.
பதம் + அர்த்தம். யானை என்று சொன்னால், தந்தம், தும்பிக்கையுடைய விலங்கைப் பற்றி நம் மனதில் ஒரு சித்திரம் அல்லது பிம்பம் ஏற்படுகிறது.
அந்த பிம்பத்துக்கு ”பிரதீதி ” என்று பெயர். இந்த பிரதீதியைக் குறிக்கும் சப்தம் வார்த்தை ஆகிறது.
ஸர்வாஹி பிரதீதிஹி ஸதஸகாரா – யதார்த்தமாய் வரும் ஞானம் யாவுமே சத்தியம். – பகவத் ராமானுஜர்.
பிரத்யய ஸர்வா மித்யா, பிரத்யது ஸ்வாப்பந பிரத்யயாது – ஸ்வப்பனத்தில் ஏற்படும் ஞானம் பொய் போலே எல்லா ஞானமும் அசத்தியம்.
காரணம் ஸ்வப்னத்தில் வஸ்து இல்லாமல், வரும் ஞானம் அயதார்த்தம் . கட : பட: குட்யம் , குசூலம் (அத்யஸ்தம் ) என்று ஏற்படுகிற (அத்யாஸ) ஞானமும் பொய், பிரஹ்மத்துக்கு பிரமத்தால் ஏற்படும் க்ஞானம் அதுவாகையாலே. பிரஹ்ம (அதிஷ்டான) க்ஞானம் பிறந்தவாறே ,
கட : பட: என்பது மறைந்து , பிரஹ்மம் ஒன்றே புலப்படும்.- சங்கர பகவத் பாதர்.
த்வனி சப்தம் — கடலோசை, பக்ஷி கூவல் இவைகளுக்கு பொருள் இல்லை.
வர்ண சப்தம் – ஏதாவது ஒரு பொருளை குறித்தே வரும். புத்தகம், பேனா நாஸ்தி (இல்லை) என்றால்,
இப்போது, இங்கு இல்லை என்பது பொருள். அப்படிப்பட்ட பொருள்களே உலகத்தில் இல்லை என்பது கிடையாது. அப்படியான பொருள் அனைத்தும் ”சது” .
முயல்கொப்பு, ஆகாசத் தாமரை, சிம்ஹசுண்டம் (சிங்கத்தின் துதிக்கை) என்பான எக்காலத்திலும், எங்கேயும் இல்லை என்பதுதான் பொருள்.
அவை ”அசது ”. இவை இரண்டைத் தவிற ”சதசது ” என்கிற மூன்றாவது பொருள் ”அவித்யா ” என்று அத்வைதிகள் சொல்லக் காரணம் . உ.ம். பாம்பு-கயிறு.
கயிறு , வேறு எதுவுமாகத் தோற்றால், பாம்பு என்று தோற்ற வேண்டுமானால், பாம்பு ”ஸது ” ஆகிறது
”அஸத் ”சேத் ந பாஸயதி. நாயம் சர்ப்ப இதி , கிந்து ரஜ்ஜு எவ ” – பாம்பு இல்லை, கயிறுதான் என்று புரியும் போது அது ”அசது ” ஆகிறது.
”ஸத் ” சேத் ந பாத்யதா ” . அதனால் ”அவித்யா ” ஸத் போல தோற்றி, அஸத் என மறைகிறது .
இதுவா அதுவா என்று சொல்ல முடியவில்லை ஆகையாலே அநிர்வசனீயம் என்பது அத்வைதிகள் வாதம்.
சதசத் என்றோ சதசத் விலக்ஷணம் என்றோ ஒன்று இருப்பதாக சாஸ்திர பிரமாணம் கிடையாது.
அப்படி இருப்பதாக ஒத்துக்க கொண்டால் எது எதுவாக வானாலும் ஆகலாம்- என்றாகி சாஸ்திர வரம்பற்றுப் போகும்.
2 + 2 = 4 என்பது கணிதம். ஏன் 5 ஆகாது? என் 3 ஆகக்கூடாது என்றால், அந்த வாதம் அர்த்தமற்றது அன்றோ?
சூத்ரம்-வார்திக்யம்-பாஷ்யம் இவை 3ம் சாஸ்த்திர பிரக்கிரியை .
நியாய சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – கௌதம மஹரிஷி.
வார்திக்யம் – உத்தியோகர மஹரிஷி .
பாஷ்யம் – வாத்ஸாயனர் .
மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – ஜைமினி.
வார்திக்யம் – குமாரித பட்டர். (சிஷ்யர்-பிரபாகர குரு)
பாஷ்யம் – ஷபர ஸ்வாமி
பிரபாகரர் ஞானம் சு பிரகாசம்
குமாரின பட்டர் -பாட்டர் மதம் –
குரு துரோகம் பௌத்தர்
உமி -அக்னியில் உட்கார்ந்து
வேதனையால் பாபம் போக்கிக் கொண்டார்
சங்கரர் வாதம் -செய்ய சொல்ல –
சிஷ்யர் வாதம் பண்ணுவார்
தோற்று சிஷ்யர் ஆனார் சங்கரர் இடம் என்பர்
பஜ கோவிந்தம் போன்றவை சங்கரர் பண்ணவே இல்லை
நாராயண சப்தம் கீதா பாஷ்யம்
ஈஸ்வர சீலன் நாரார்யணன்
பிரமை உண்டு
எல்லா ஞானமும் யதார்த்தம் இல்லை
எல்லா ஞானமும் பிரமாணம் இல்லை
சர்வ பிரமாணமும் அபிரமாணமும் இல்லை
மாணா அமாண வ்யவஸ்தை வேண்டும்
பிரபாகரர்
குமார பட்டர் -பிரபாகர் குரு
இங்கும் சொல்ல வில்லை அங்கும் சொல்ல வில்லை -அதனால் அனுக்தம் புனர யுக்தம் எப்படி தெரிய வில்லை
கதைகள்
ராஜா -சரஸ் -தண்ணீர் இறைக்க
மோதகம் கொண்டு வா
மா உதகைகி தா தண்ணீரை அடிக்காதே சொன்னேன்
சமஸ்க்ருதம் கற்று வா
பிரகரணம் அறிந்து அர்த்தம்
அத்ரா புனர யுக்தம் து சப்தம் தாத்ரா அபி நா யுக்தம் அதனால் புநரா உக்தம்
அபி சப்தத்தாலும் து சப்தத்தாலு
பிரபாகர் வேத வித் –பிராபாகர மதம்
க்யாதி வாதம் –
கௌரவ பூர்வகமாக ராமானுஜர் –
தர்சன பிரஸ்தானம் –
ஸூ தரம் -வாக்கியம் -பாஷ்யம் -மூன்றும் இருக்க வேண்டும்
கௌதம உத்தியோகத வாத்சாயனர் பாஷ்யம் நியாய சாஸ்திரம்
ஜைமினி சபராசா
குமாரயா பட்டெர்
யதார்த்தம் சர்வ விஞ்ஞானம் -முக்கியமான விஷயம் –
விபுத்வம் ஆகாரத்வம் மட்டும் இல்லை
நிராகாரத்வமும் உண்டு
சாகாரம் எனபது நிராகாரத்வ நிஷேதம் இல்லை
உருவமும் அருவமும் ஆனான் –
ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் –
அறிந்த பின் ஆசை வந்து அடைய பிரயத்னம் செய்கிறோம் –
சர்வம் ஞானம்
பிரத்யக -சப்தம் அத்வைதிகள் -இது பேனா போன்ற ஞானம்
சர்வோ மித்யா
சொபன ஞானம் போலே -நல்லதும் கேட்டதும் விசித்ரமாகவும் இருக்குமே –மித்யை தானே இது
ராமானுஜர் -இதுவும் சத்யம்
அதிகரணம் -தனியாக
ஜீவாத்மா கர்த்தா இல்லை
நமக்கு வேண்டிய சொபனம் காண வில்லை
பரமாத்மா தான் கர்த்தா
ஸூ சகமாக காட்ட -நடக்கப் போவதை
நான்கு அவாந்தர அவஸ்தை உண்டு நான்கிலும்
சொபனம் துரிய சுஷூப்தி ஜாக்ரதை
புஷ்பக விஷயம் ஞானம்
ஞானம் ப்ரஹ்ம ஞானமே
சமுத்ரம் நீர் பாத்ரம் கொண்டு வந்தது போலே
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானம்
விருத்தி ஞானம்
இந்த ரூபமாக இருக்கக் கூடிய ஞானம் அத்வைதிகள்-
அனுமானம் பிரயோகம் -பர்வதம் -பஷம்- சாத்தியம் -புகை -ஏக சம்பந்த ஞானம் -ஹேது -வாக்கியம் -உதாரண வாக்கியம் –
பஷ்யம் -சாத்தியம் -ஹேது -மூன்றும் உண்டே
சப்த பிரமாணம் வேதம் -முன்னோர் மொழிந்த முறைகளே பிரமாணம்
-சாஸ்திர ப்ரத்யஷ விரோதி -வேதமே பிரதானம் –
அஹம் ஸ்தூல -நான் -ஆத்மா தான் -ஆத்மா ச்தூலத்வம் இல்லை -வேதம் மூலம் அறிகிறோம் –
ஜ்வாலை-விளக்கு ஏற்றி பின் வேலை செய்து -அதே ஜ்வாலை இல்லை சாயம் காலம்
திரி எண்ணெய் குறையும் -ஜ்வாலைக்கு பிரத்யஷ பேதம் -என்னுடைய சரீரம் -ஆத்மா வேற சரீரம் வேற
ராமன் உடைய புத்தகம் போலே
ஸ்வம் ஸ்வாமி சம்பந்தம் –
அத்வைதி சங்கரர் பின் ஜீவாத்மா பரமாத்மா வாதம் -இரண்டாக பிரிந்து –
ஸ்வ அவலோக கல்பிதம் இல்லை -பஞ்ச பாதிகா விவரணம் கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பரமாத்மாவிடம் அவித்யை -சொல்லி
மாயை வேற அவித்யை வேற என்பர்
பிரமாண அனுபபத்தி பார்த்தோம் முன்பு
ஆறாவது அனுபபத்தி –
நிவர்த்தகார அனுபபத்தி
சரீரம் -போன பின்பு -ஒன்றாகி
அவஸ்தை மூன்று
பிரதிபாதிகம் total illusion முதல்
வ்யவாரிக்க -இப்பொழுது இருப்பது போலே -அடுத்து
பாரமார்த்திக -அவஸ்தை
சத்தா -existing
சத்யம் reality –
வாக்யார்த்த ஞானம் அஹம் பிரம்மாஸ்மி -நிவர்த்தாக ஞானம் -சத்வமசி இத்யாதி வாக்கியம்
போக்கக் கூடிய ஞானம் கடபடாதி விஷயமான ஞானம்
நிவர்த்தக ஞானம் சத்தியமா மித்யையா-தோஷம் –
அனவஸ்தா தோஷம் -நிவர்த்தக ஞானம் போக்க ஞானம் –
கடக பீஜம் -நீரை சுத்தியாக்கி தானும் கரைந்து போகும் –
காட்டு தீ காட்டியும் அழித்து தானும் அழிந்து போவது போலே தானும் நிவர்த்தகம் ஆகும் -என்பர் அத்வைதிகள்
நிர்விசேஷ சின் மாத்ர பிரமஸ்-பரமாத்மா என்பர்
ஸ்ருதி உபநிஷத் வாக்கியம் கொண்டும் -வேதாகமேதம்
மஹதோ மஹதா
ஆதித்ய வர்ணம்
தமசஸ் பரஸ்தாத்
ப்ரஹ்ம ஏவம்
பல ஸ்ருதி வாக்யங்கள் –
logic கொண்டும் சுவாமி நிராகரிக்கிறார்
பட்டர் கோஷ்டியில் சாதாரண ஞானம் கொண்டவரை வித்வான் விட கொண்டாடி பேசி -சிஷ்
மீமாம்ஸா -விசாரம் பண்ணி -புரியும் அதிகாரிகளுக்கு -ஸ்ரீ பாஷ்யம் -அதிகாரி –
சின்மாத்திர -ராமோ விக்ரஹவான் தர்ம -நிர்விசேஷம்-ப்ரஹ்மம்-
அவாந்தர ஆஷேபம் -அனவஸ்தா தோஷம் -பார்த்தோம்
வாக்யார்த்த ஞானம் –
வேதாஹமேதம் -அவன் ஒருவனே புருஷன் -நாம் ஸ்திரீ ப்ராயர்-
சோதக வாக்கியம்
சத்யம் ஞானம் அநந்தம்
அசத் வ்யாவர்த்தம் -நாம் அசத் –
ஞான ஆஸ்ரய
ஸ்வரூப நிரூபக தர்மம் -unique -அசாதாராணமான-
நிரூபித ஸ்வரூப விசேஷணம்-
தேகம் -சரீரம் –
வளருவது -தேகம்
தேய்வது சரீரம் –
புண்ய பாபம் அனுபவிக்க தேவ மனுஷ்யாதி –
சரீர அவசானே மோஷம் -நம் சம்ப்ரதாயம் -அம்ருத இஹ பவதி -மோஷம் போன்ற நிலை
ஜீவன் முக்தி -அத்வைதிகள் –
பந்தம் -போக மோஷம்
பந்தம் மித்யை-நிவ்ருத்தி ஆவது எப்படி
யோனி எடுக்கும் சில ஆத்மாக்கள்
பிறந்தவன் இறப்பான் ஜாதஸ்ய …மிருத்யு –
தவன் ஜன்ம -மிருதச்ய-இறந்தவன் பிறப்பான் –
ஞானி அம்ருதத்வா –
நித்யா நித்யானாம் சேதன அசேதனனாம் ஏகோ பகுனாம் யோ விததாயி காம -அநேக ஜீவாத்மா -மித்யை இல்லை
நிவ்ருத்தி அனுபபத்தி சாரம் ஸ்வ நாச -மரக்கிளையில் இருந்து கொண்டே வெட்டுமா போலே அத்வைதிகள் வாதம்
நான் பொய் அஹம் ப்ரஹ்மாசி-
காளிதாசர் -கதை -ராஜ குமாரி -அத்வைதி மடாதிபதிகளும் பூஜா செய்து –
ஆத்மயாத்ம்ய ஞானம் பெற்று -ஆஸ்ரம வர்ண கர்ம யோகம் செய்து -ப்ரஹ்ம ஞானம் பெற்று -மோஷம் அடைவோம்
பீடிகா -அவதாரிகை –
அதா தோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –
லகு -பூர்வ பஷம் -சித்தாந்தம் -சாதான ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
மகா-பூர்வ பஷம் – சித்தாந்தம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
தஸ்மாத் -அநாத கர்ம பிரவாக ரூப -அஞ்ஞான ஞான மூலத்வாத் -பந்தம் ஏற்பட்டது அஞ்ஞானத்தால் –
அது நிவர்த்தகம் ஆக கர்ம வர்ண அனுகுணமான ஆத்ம யாதாம்ய புத்தி விசேஷம் சம்ஸ்க்ருதம் -கார்யாந்தர யோக்யதா கர்த்தும்
சம்ஸ்காரம் -க்ரமப்படி செய்து –
ஜீவா பரமாத்மா யாதாம்ய ஞானம் பூர்வகமாக -ஆராதானம் ரூபம் –
ஆன்மிகம் -பகவத் கைங்கர்ய ரூபம்
அஹரஹராக அனுஷ்டானம் விடாமல் நித்யம் -பரம புருஷாராதனம் என்கிற நினைவுடன் –
சுருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞை -ப்ரீதி கோபம் புண்யம் பாபம்
கேவல கர்மம் அல்ப அஸ்திரம் பலம்
அநந்தம் ஸ்திரம் பலம் கிடைக்க பரம புருஷாராதனம் வேதம்
உபாசான ஆத்மக ஞானம் த்வாரேன கிட்டும்
கர்ம ஸ்வரூப ஞானம் முதல் படி
பூர்வ பூர்வ பதார்த்தானாம் –உத்தர உத்தர -பிச்சைக்காரன் கனவு -மாவு உதைத்து
கேவல ஆகார -ஞானம் இல்லாமல்-கர்மா
சந்த்யாவந்தனம் அத்வைதிகள் சன்யாசிகள் விட –
ஆபாத பிரதிபத்தி
அத -கர்ம விசாரம் பின்பு
அதோ -ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் –
அதிகரண க்ரமம் முன்பே பார்த்தோம்
————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply