எம்பெருமானுடைய-உலகளந்த திருவடி-தானாகவே ஆழ்வார் திரு உள்ளத்திலே
வந்து சேர்ந்தன -என்று அருளிச் செய்கிறார்-
எதற்காக என்றால்-அங்கு வெந்நரகில் சென்று சேராமல் காப்பதற்காக –
ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப-ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து-
எண் மதியும் கடந்து அண்டமீது போகி-இரு விசும்பினூடு போய் எழுந்து
மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை –
சிறியேனுடைச் சிந்தைக்குள்-எல்லா உலகும் அளந்த திருவடிகள் அடங்க போதுமான இடம் அன்றாகிலும்-
நெருக்குப் பட்டாலும் ஆழ்வார் திரு உள்ளத்துக்குள் இருந்திட வேண்டும் என்கிற சங்கல்பம் கொண்டு-வந்து நிற்கிறான் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவே இவ்வளவும் செய்து அருளினான் –
யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிர்யோ யஸ் த்வயா வினா-கூடி இருக்கை ஸ்வர்க்கம்
அவனை விட்டு பிரிந்து இருந்தால் நரகம் –
திருவடிகளை என் நெஞ்சினுள் அமைத்தான்-என்னவுமாம்
சென்று அங்கு வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-
பதவுரை
அன்று–முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு–அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று
பார் உருவும்–பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும்–அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும்
கண் புதைய–மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால்–காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு–கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று–இப்போது
இங்கு–இவ்விடத்தில்
என் நெஞ்சால்–என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட–நெருக்குப் பட்டுக் கிடக்கின்றன.
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
அங்கு வெந்நரகில்-சென்று சேராமல்-காப்பதற்கு-என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு –
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட –
இப்போது-இவ்விடத்திலே-என்னெஞ்சிலே-நெருக்குப் பட்டு கிடக்கின்றன
அன்று விஸ்தார இடங்களிலே சுகமாக வளர்ந்து விளங்கின அத் திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்த சிறிய நெஞ்சினால் இடுக்கப் பட்டன –
அன்று-
முன்பு மகா பலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்குப் –
அந்த மகாபலியின் யாக பூமியிலே சென்று
பாருருவும்
பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீருருவும் –
அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற-ஜல வஸ்துவும்
கண் புதைய
மறையும்படி
காருருவன் தான் நிமிர்த்த கால்
காள மேகத் திருவுருவனான எம்பெருமான்-நிமிர்த்து அருளிய திருவடிகள்-
(சென்றங்கு வெந்நரகில்)
எம்பெருமானுடைய உலகளந்த சேவடியானது தானாகவே வந்து தம்முடைய திருவுள்ளத்தில் குடிகொண்ட தென்கிறார்.
அன்று அங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண் புதையக் காருருவன் தான் நிமிர்த்த கால்
இன்று இங்கு என்னெஞ்சா லிடுக்குண்ட;
(ஏதுக்காக வென்னில்;) அங்கு வெந்நரகிற் சென்று சேராமல் காப்பதற்கு.
“ஒண்மிதியில் புனலுருவி யொருகால் நிற்ப ஒருகாலும் காமரு சீரவுணனுள்ளத் தென்மதியுங் கடந்து அண்டமீது போகி
இருவிசும்பினூடு போயெழுந்து, மேலைத் தண்மதியுங் கதிரவனுந் தவிர வோடித் தாரகையின் புறந்தடவியப்பால் மிக்கு,
மண்முழுது மகப்படுத்து நின்றவெந்தை” (திருநெடுந்தாண்டகம்-5) என்றபடி
ஸகல லோகங்களையும் ஆக்கிரமித்து நின்ற
திருவடிகள் இன்று என்னுடைய நெஞ்சினுள்ளே வந்து சேர்ந்து நெருக்குண்டிரா நின்றது.
எல்லா வுலகங்களையும் அளாவின திருவடிகள் எவ்வளவு பெரிதாயிருக்க வேண்டும்;
சிறியேனுடைச் சிந்தையானது அவை அடங்குவதற்குப் போதுமான இடமன்றாகிலும்
‘நெருக்குப் பட்டாகிலும் ஆழ்வார் நெஞ்சினுள்ளே இருந்திட வேண்டியது’ என்ற ஸங்கல்பத்தினால் அப்பெருமான் அப்பெரிய திருவடிகளை
இந்த நெஞ்சினுள் கஷ்டப்பட்டுப் புகுவித்து நிற்கின்றான்; இப்படி செய்தருளாவிடில் நான் நற்கதிபெற்று உஜ்ஜீவிக்க
வழியில்லை யாகையால் என்னுடைய உஜ்ஜீவநார்த்தமாகவே இவ்வளவு காரியம் செய்தான் என்கிறார்.
நரகு = நரகம் என்ற வடசொல் விகாரம். கும்பீபாகம், ரௌரவம் முதலிய கொடிய நரகங்களைக் கருதி வெந்நரகு என்கிறார்.
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா”
(எம்பெருமானோடு கூடியிருக்கை ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருக்கை நரகம்) என்றபடி
நான் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக்கூடாதென்று திருவுள்ளம் பற்றித் தனது திருவடிகளை என்னெஞ்சினுள் அமைத்தான் என்னவுமாம்.
இன்று இங்கு என்னெஞ்சால் இடுக்குண்ட = விஸ்தாரமான இடங்களிலே அன்று ஸுகமாக வளர்ந்து விளங்கின அத்திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்தச் சிறிய நெஞ்சினால் இடுக்குப்பட்டன.
இடுக்குண்ட என்றது – இடுக்குண்டான என்றபடி; வினைமுற்று.
கால் என்பது பால்பகா அஃறிணைப் பெயராதலால் கால்கள் எனப் பொருள்படும்.
—————————————————————
(காலே பொதத் திரிந்து.)
எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்.
அவயவியான வ்யக்தியை விட்டு அவயவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம்பெருமானே தமது திருவுள்ளத்தில்
வந்து சேர்ந்தமையைக் கூறினபடி யாய்த்து.
அதை இப்பாட்டில் “மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்யவாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.
காலே பொதத்திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-
பதவுரை
என் மனத்தே–எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார்–திருமால் வந்து சேர்ந்து விட்டார்;
வல் வினையார் தாம்–(இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வீற்றிருக்கும் இடம் காணாது–(இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
கால் பொத திரிந்து–கால் நோவத் திரிந்து அலைந்ததனால்
மேலால்–முன்பெல்லாம்
தருக்கும்–என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும்–பெருமையோடே
இளைத்து–வருத்தமுற்று
இன்நாள்–இப்போது
கத்துவாரம்–கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும்.
காலே பொதத்திரிந்து –
கால் நோவத் திரிந்து-அலைந்ததினால்-பொலிக பொலிக பொலிக -போயிற்று வல்லுயிர் சாபம்—
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று எங்கும் இருப்பதால்
கத்துவராம்-
கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும் –
இன நாள் –
இப்போது –
இந்நாள் -என்றும் பாட பேதம்
மாலார் குடி புகுந்தார்-
திருமால் வந்து சேர்ந்து விட்டார்
அடியவர்கள் இடம் வ்யாமோஹம் கொண்ட எம்பெருமான்-இன்று என் நெஞ்சிலே குடி புகுந்தார்-
இருள் மூடி கிடந்த இடத்திலே பிரகாசம் வந்து சேர்ந்தால் போலே –
என் மனத்தே –
-மேலால் –
முன்பு எல்லாம்-இனி மேல்- இதற்கு முன்பு -இரண்டும் பொருள் உண்டே
இது வரையில் நெருக்கிக் கொண்டு இருந்த இவை-இப்படியே இருக்க இடம் கிடைக்காமல்-
இனிமேல் ஹிம்சித்துக் கொண்டு இடம் காணாமல் -என்றபடி –
தருக்கும்-
என்னைத் துன்பம் படுத்திக் கொண்டு இருந்த –
இடம் -பாட்டினொடும்-பெருமையோடு –
இடம்பாடு -பெருமை –
வல்வினையார் தாம் –
இது வரையில் இங்கே குடியிருந்த கொடிய பாபங்கள் –
வீற்று இருக்குமிடம் காணாது –
இனி மேலும் அதிகாரம் செலுத்திக் கொண்டு-தங்கி இருக்க இடம் காணாமல் –
வீற்று இருத்தல் வீறு தோற்ற இருத்தல்-விழுந்து கிடக்க இடம் இல்லாமல் என்பதை மாற்றி அருளுகிறார்
இளைத்து –
வருத்தமுற்று –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற -என்பதால்-
அவற்றுக்கு இடம் கிட்டாதே-என் செய்வோம் என்று கத்துகின்றன –
சீற்றமும் இழிவும் தோற்ற வல் வினையார் -உயர் திணையாக
துஷ்டர்களைக் கண்டால் ஸ்வாமி எழுந்து அருளினார் என்னுமா போலே –
என் மனத்தே மாலார் குடிபுகுந்தார் = அடியவர்களிடத்திலே மிக்க மோஹங் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இன்று
என்னுடைய நெஞ்சினுள்ளே குடி புகுந்து விட்டார்; இருள் மூடிக்கிடந்தவிடத்தில் ப்ரகாசம் வந்து சேர்ந்தால் பிறகு இருள் தன்னடையே
விலகிப் போய் விடுவது போல், இதுவரையில் இங்கே குடியிருந்த பாவங்கள் இனி இவ்விடத்தில் தங்க மாட்டாமல் கிளம்பிப் போய் ‘
இனி நாம் எங்கே சுகமாக வாழலாம்’ என்று இடந்தேடுகின்றன.
“ஊரும் நாடு முலகமும் தன்னைப்போல், அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற” (திருவாய்மொழி – 6, 7, 2) என்றபடி
நான் வாழ்கிற வூரிலே எல்லாரும் என்னைப் போலவே யிருப்பர்களாதலால் அவை குடி புகுவதற்கு எங்கே இடம் கிடைக்கும்?
கால் பாவி நிற்க எங்கும் இடங்கிடைக்காமையினால் பரிச்ரமப்பட்டுத் திரிந்து அலைந்து பார்த்தன. எங்கும் இடம் வாய்க்கவில்லை;
“ஐயோ! இதுவரையில் ஆழ்வாருடைய நெஞ்சில் செங்கோல் செலுத்திக் கொண்டு வாழ்ந்த வெமக்கு இன்று இக்கதி நேர்ந்து விட்டதே!
என் செய்வோம்!” என்று கத்துகின்றன.
“வல்வினையார் தாம் மேலால் தருக்குமிடம் பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது
காலே பொதத் திரிந்து இளைத்துக் கத்துவர்” என்று அந்வயித்துக் கொள்க.
அசேதநங்களான வல் லினைகளை வல் வினையார் தாம் என்று சிறப்பித்துக் கூறுவது ஏன்; என்னில்;
“உவப்பினுமயிர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால் திணை விழுக்கினுமியல்வே” என்பர் நன்னூலார்;
இழிவு தோற்றச் சொல்ல வேண்டும் போதும் சீற்றந்தோற்றச் சொல்ல வேண்டும்போதும் பால் திணைகளை மாறாடிச் சொல்லலாம்
என்றிருப்பதனால், சீற்றமும் இழிவும் தோற்ற இங்கு வினையார் என உயர் திணையாகக் கூறுகின்றாரென்க.
துஷ்டர்களைக் கண்டால் ‘ஸ்வாமி எழுந்தருளுகிறார்” என்று சொல்லுவதுண்டிறே, அதுபோலக் கொள்க.
மேலால் தருக்குமிடம் பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது =
மேலால் என்பதற்கு. இனிமேல் என்றும், இதற்கு முன்பு என்றும் பொருள் கொள்ளலாம்.
இதுவரையிலும் என்னை நெருக்கிக் கொண்டு பெருமதிப்போடு எழுந்தருளியிருந்த இந்த வல்வினையார்கள் இப்படியே இன்னமும்
எழுந்தருளியிருக்க இடம் காணாமல் என்றபடி,
இனிமேல் பிறரை ஹிம்ஸித்துக் கொண்டு வைபவமாகக் குடியிருப்பதற்கு உரிய இடம் காணாமல் என்றுமாம்.
இடம்பாடு- பெருமை.
வீற்றிருக்குமிடம் = வீற்றிருத்தலாவது வீறு தோற்ற இருந்தால்; வீறு- பெருமை. தனது பெருமைக்குக் குறையில்லாமல்
மேனாணிப்போடே யிருத்தல் வீற்றிருத்தலெனப்படும்.
‘தாங்கள் விழுந்துகிடக்க இடம் கிடைக்காமல்’ என்று
இழிவாகச் சொல்ல வேண்டியதை இப்படி மாற்றி யருளிச் செய்தாரென்க.
எப்படியாவது ஓரிடத்தில் குடியிருந்து தீர வேண்டியவர்கள் ஓரிடத்தில் இடம் கிடைக்காவிடினும் மற்றுமெங்கேயாவது கிடைக்குமோவென்று
பலவிடங்களிலும் திரிந்தலைந்து தடுமாறிப் பார்ப்பது போல இப்பாவங்களும் கால் நோவப் பலவிடங்களிலும் திரிந்து பார்த்தனவென்கிறார்.
காலே போதத் திரிந்து என்பதனால், அப்படி திரிந்து பார்த்தும்,
“பொலிக பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியுங்கெடுங் கண்டு கொண்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல், மலியப் புருந்திசை பாடி பாடி யுழிதரக் கண்டோம்.” (திருவாய்மொழி, 5-2-1) என்னும்படியான
இந்நிலத்திலே கால் பாவுவதற்கு எங்கும் இடம் நேராமையாலே,
கத்துவராம் = ‘ஐயோ! எங்கள் குடியிருப்புப் போயிற்றே!’ என்று வாய்விட்டுக் கதறுகின்றனவாம்.
இன்று எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே எழுந்தருளினமையால் என்னைப் பற்றிக் கிடந்த பாவங்களெல்லாம்
பறந்து போயின என்று சொல்ல வேண்டியதை இங்ஙனே ஒரு சமத்காரமாக விரிந்துரைத்தாரெனக் கொள்க.
“இனநாள்” என்றும் “இந்நாள்” என்றும் பாட பேதங்களுண்டு; பொருள் ஒன்றே .
————————————————————
(இளைப்பாயிருப்பாய்.)
எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பொருளைப் பிரகாசப்படுத்துவான்;
சில ஸமயங்களில் உதாஸீநஸாப்போலே உபேக்ஷையாயிருந்திடுவன்.
அவன் எப்படி யிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக் கூடாது;
அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விச்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல் காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-
பதவுரை
நெஞ்சமே–ஓ மனமே!
நமன் தமர்கள்–யமபடர்கள்
இளைக்க பற்றி–பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த–அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய்தந்து மோதாமல்–நாய்களை ஏவி நலியாமற்படி
நல்குவான் நல்காப்பான்–(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;
தான்–அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும்–எல்லாப் பிராணிகளுக்கும்
தாய் தந்தை–தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன்–(இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய்–இனி நீ அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே-
ஒ மனமே-இனி நீ அனர்த்தப் பட்டாலும் படு-சுகப்பட்டாலும் படு –
இந்த அத்யாவசாயம் குலையாது இருந்தால் நீ தளராமல் இருக்கலாம்-
குலைந்தால் தளர்வடைவாய்-உள்ள விஷயம் உனக்கு சொல்லி விட்டேன்
இனி நீ தளர்ந்தாலும் தளர்-தளராமல் ஒழிந்தாலும் ஒழி-என்கிறார் –
சொன்னேன் –
இந்த உண்மையை உனக்குச் சொல்லி விட்டேன் –
இளைக்க நமன் தமர்கள் பற்றி –
நமன் தமர்கள் இளைக்கப் பற்றி-யம படர்கள்-பிடிக்கும் பிடியிலே நாம் துடிக்கும் பற்றி
நம்மை பிடித்து –
காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –
இளைப்பெய்த –
அதுக்கு மேலும் அதிகமாக துடிக்கும் படி –
நாய் தந்து மோதாமல்-
நாய்களை ஏவி நலியாமற்படி –
நல்குவான் நல்காப்பான் –
எம்பெருமான் நமக்கு அருள் செய்தாலும் சரி-அருள் செய்யா விட்டாலும் சரி
நல்குதல் -அருள் புரிதல்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
என்று இருப்பதே நமக்கு ஸ்வ ரூபம் –என்கிறார்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
அந்த எம்பெருமான் தான்-எல்லா பிராணிகளுக்கும்-தாயும் தகப்பனும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-
நமன் தமர்கள் இளைக்கப் பற்றி, இளைப்பு எய்த நாய் தந்து மோதாமல் (எம்பெருமான்) நல்குவான் நல்காப்பான்;
தானே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை; (இதை) நெஞ்சமே! (உனக்குச்) சொன்னேன்; (இனி) இளைப்பாய் இளைப்பாய்.
*“காவலிற் புலனை வைத்துக் கலி தன்னைக் கடத்தப் பாய்ந்து நாவவிட்டுழி தருகின்றோம் நமன்றமர் தலைகள்மீதே” (திருமாலை 1)
என்றபடி யமகிங்கரர்களை நாம் தகர்க்கும் படியும் அவர்களால் நமக்கு எள்ளளவு துன்பமும் நேரிடாதபடியும் எம்பெருமான் நம்மைக் காத்தருள்பவன்.
அப்படி அவன் நம்மைக் காத்தருளாவிடினும் அவனிடத்தில் நம்முடைய ப்ரதிபத்தி குலையக்கூடாது;
*சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவாரே” (திருவாய்மொழி 5-1-8) என்றபடி
அவனையே நாம் ஸகலவித பந்துவுமாக விச்வஹித்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவன் நம்மை ரக்ஷிக்கும்போதுதான் அவனிடத்தில் நாம் ப்ரதிபத்தி வைக்க வேண்டியது, உபேக்ஷித்த காலத்தில் நாமும் அவனை
உபேக்ஷித்து விட வேண்டியது என்று ஒருகாலும் கருத வொண்ணாது.
நெஞ்சமே! இவ்விஷயம் எல்லார்க்கும் எளிதில் தெரிய மாட்டாது; ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை அன்பினால் உனக்குக் காதுபடச் சொன்னேன்;
இந்த என் வார்த்தையை நீ உறுதியாகக் கடைப்பிடித்திருப்பாயாகில் உனக்கு ஒருபோதும் இளைப்பு நேரிடாது;
இந்த வார்த்தையை நீ அலக்ஷியம் செய்து விச்வாஸம் குலைய நின்றாயாகில் உனக்கு மிக்க இளைப்பு நேரிடும்.
உண்மை இது; இனி நீ உன் கருத்தின்படி ஒழுகலாம் என்றாயிற்று..
யமபடர்கள் நம்மை வந்து பிடிக்கும்போதே நமக்கு மிக்க க்லேசம் உண்டாகும்படி பிடிப்பார்களாதலால் “நமன்றமர்கள் இளைக்கப்பற்றி” என்றார்.
அவர்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு போய், செந்நாய் கருநாய் வெறிநாய் முதலியவற்றை ஏவி நம்மை அளவற்ற க்லேசத்துக்கு
ஆளாக்குவர்களாதலால் “இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்” என்றார்.
நல்குவான் நல்காப்பான் = நல்குதலாவது அருள் புரிதல்; அருள் செய்தாலும் செய்வன். அருள் செய்யாவிடினும் செய்யா தொழிவன் என்றபடி.
அவன் எது செய்தாலும் ‘களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி, 5-8-8) என்றிருப்பதே
நமக்கு ஸ்வரூபம் என்கிறார் ஈற்றடியால்.
இளைப்பாய் இளையாப்பாய் = எக்காலத்திலும் அவனே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால்
நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அந்யவஸாயம் குலைந்தால் தளர்வடையாய்;
உள்ள விஷயத்தை உனக்கு நான் சொல்லி விட்டேனாகையால் இனி நீ தளர்ந்தாலும் தளர், தளராதொழிந்தாலும் ஒழி என்கிறார்.
——————————————————–
(தானே தனித்தோன்றல்.)
“தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க,
அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலை நாட்டிப் பேசுகிறாரிதில்.
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-
பதவுரை
தானே தனி தோன்றல்–அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;
தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான்–அவனே ஒப்பற்றவன்;
இளைக்கில்–(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார்–இவ்வுலகமானது
கீழ்மேல் ஆம்–தலைகீழாக விபரீதமாய்வீடும்;
பிறர் தானே கட்கும் தற்றேன்றல்–அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
(தானே)–இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
மீண்டு அமைப்பான் ஆனால்–(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார்–இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்?
தானே தனித் தோன்றல்
அவ் வெம்பெருமான் ஒருவனே-புருஷோத்தமன் –
தோன்றல்
ஆண் மகன் -அரசன் -பெருமையில் சிறந்தவன் -வெளிப்படுவதற்கும் பெயர்
கருமத்தால் அன்று ஸுய இச்சையால்
அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீர பரிஜாநந்தி யோநிம்
நிர்ஹேதுக கிருபையாலே அவதரித்து அருளுபவன்
அன்றிக்கே
தானே தனித் தோன்றல்
விருப்பம் இருந்தால் மட்டும் சேவை சாதிப்பவன்
தன் அளப்பு ஓன்று இல்லாதான் –
அவனே ஒப்பற்றவன் –
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா என்கின்றாளால்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -உலகம் முழுவதும் இவன் ஒருவனாலே என்னும் பொழுது யார் ஒப்பார் உளர்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அவனே மற்று எல்லா பொருள்களிலும்-வியாபித்து இருப்பவன் –
அந்தர்யாமியாய் இருந்து சத்தையை நோக்குபவன்
கருதரிய யுயிருக்கு யுயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம்
தானே –
இப்படிப் பட்ட-எம்பெருமான் தானே –
இளைக்கில்-
ரஷிக்கும் தொழிலில் சளைத்து நிற்கும் பஷத்தில்
பார் கீழ் மேலாம் –
இவ்வுலகம் தலை கீழாய்-விபரீதமாகி விடும் –
மீண்டு அமைப்பான் ஆனால்-
இப்படி தலை கீழான அவற்றை-சரிப்படுத்த புகுந்தால்-அமைத்தல் ஒழுங்கு பட நியமித்தல்
ஈண்டு -இவ்வண்ணம்-இவ்வுடன் –சீக்கிரம் என்றுமாம்
மோனைக்கு சேரும்-பொருள் சுவை கருதி மீண்டு -பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்
அளக்கிற்பார் பாரின் மேலார்
இந்த பூமியில் யார் தான்-அவனுடைய ரஷகத்வத்தை-அளவிட வுரியர் –
அவனுடைய ரஷண சாமர்த்தியமே அளவிட ஒருவராலும் இயலாத பொழுது
வேறு ரஷகர் இல்லை எனபது சொல்லவும் வேணுமோ –
தானே தனித் தோன்றல் என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம்;
தோன்றல் என்று ஆண்
மகனையும் அரசனையும் பெருமையிற் சிறந்தவனையும் சொல்லும்; அவ்வெம்பெருமானொருவனை புருஷோத்தமன்;
அவனே உலகங்கட்கெல்லாம் இறைவன்; அவனே பெருமையிற் சிறந்தவன். இனி, தோன்றல் என்று வெளிப்படுதலுக்கும் பேராகையாலே,
அவன் மற்றவர்களைப்போலே கருமங்களால் பிற்பவனல்லன்; தன்னருளால் தானே தோன்றுதலையுடையவன் என்று முரைக்கலாம்.
அஜாயமாநோ பஹுநா விஜாயதே; தஸ்ய தீரா பரிஜாநந்தியோநிம்” என்று வேதம் கூறும். இதன் பொருள்:-
எம்பெருமான் பிறப்பு இல்லாதவனாயினும் பல பிறவிகள் பிறக்கிறான்; அப்படி அவன் பிறப்பதற்குக் காரணம் இன்னதென்பதை
ஞானிகள் அறிவர் என்பதாம்.
இனி, தானே தனிந்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம்
பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய,
வேறொரு காரணங் கொண்டு ஸேவை ஸாதிப்பவனல்லன் என்பதாகவுங் கருத்துரைக்கலாம்.
தன் அளப்பு ஒன்றில்லாததான் = தனக்கு வேறொருவரையும் ஒப்பாக உடைத்தாகாதவன்.
“ஒருவரையொருவர் நின்னொரப்பாரொப்பிலாவென்னப்பா வென்கின்றளால்” (பெரிய திருமொழி, 8-1-2) என்றது காண்க.
உலக முழுவதும் இவனாலே படைக்கப்பட்டு இவனாலே காக்கப்பட்டு இவனாலே அழிக்கப்படுதலால்,
இவனோடு உபமானமாகப் போருவதற்கு யாருளர்?
தானே பிறர்கட்கும் தற்றோன்றல் = எந்த வஸ்துவிலும் அவன் அநுப்ரவேசித்திருப்பவன்; அவனில்லாமல் ஒரு துரும்பும் எழுந்தாடாதாகையால்
எல்லாப் பொருட்கட்கும் தான் அந்தர்யாமியாயிருந்து அவற்றின் ஸத்தையை நோக்குமவன் என்கை.
கருதரிய யுயிர்க்குயிராய்க் கரந்தெங்கம் பரந்துறையுமொரு தனி நாயகம்” (திருவரங்கக கலம்பகம், 1) என்றபடி.
தானே இளைக்கில் பார்கீஅமேலாம் = இப்படி தனி நாயகனாய் நின்ற எம்பெருமான் தான் ரக்ஷிக்குந் தொழிலில் சோம்பிக் கைவாங்கி
நிற்பனாகில் இவ்வுலகம் முழுவதும் அநாதமாய்த் தலைகீழாக விகாரப்பட்டுவிடும்.
அமைப்பானானால் பாரின்மேல் அளக்கிற்பார் ஆர் = அவரவர்களை அந்தந்த நிலைமைகளிலே நிறுத்திக் காப்பாற்றுதல்.
இது செய்வதற்கு எம்பெருமானே சக்தன்; அவன் இப்படி நியமித்து ரக்ஷிக்குமாகில் அந்த ரக்ஷகத்வத்தை
எல்லை காணக் கூடியவர்கள் இவ்வுலகில் அருளர்? அவனுடைய ரக்ஷண ஸாமர்த்தியம் இப்படிப்பட்டதென்று பரிச்சேதித்தறிவதற்கே
இங்கு ஆளில்லை யென்னும் போது, வேறு ரக்ஷகரில்லையென்பது சொல்லவும் வேணுமோ? என்று கருத்து.
மூன்றாமடியில் “பார் கீஅ மேலாமீண்டமைப்பானானால்” என்றவிடத்து, மீண்டு எனப் பிரிப்பதிற்காட்டிலும் ஈண்டு எனப்பிரித்தல்
மோனையின்பத்திற்குச் சேர்ந்திருக்கும். ஈண்டு – இவ்வண்ணம், இவ்விடம், சீக்கிரம்,
மீண்டு என்று பிரித்தலின் பொருட்
சுவையிருப்பதுகொண்டு பெரியவாச்சான்பிள்ளை மீண்டெனப் பிரித்தெடுத்துரைத்தருளினர்
பார் கீழ்மேலான நிலைமையின் நின்றும் மீட்டு அமைப்பானாகில் என்கை…
————————————————————-
(ஆரானுமாதானுஞ் செய்ய.)
கீழ்ப்பாட்டில் விரித்துரைத்தபடி எம்பெருமானே ஸர்வ ரக்ஷகனாயிருக்கவும்
இதனைப் பலர் தெரிந்து கொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார்,
இவ் வுண்மைப் பொருளைப் பலர்க்கும் உபதேசித்துத் திருத்துவோம் என்று முயன்றார்;
“கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” (திருமாலை 11) என்றபடி ஜாயமாந கடாக்ஷமில்லாதார் பலருளராகையால்
அவர்கள் திருந்தி வரக் கண்டிலர்;
“சொன்னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினோ” (திருவாய்மொழி 3-9-1) என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி
உபதேசித்தவிடத்திலும் பாழும் ஸம்ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்?
அளவில்லாமல் பரந்து கிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ?
நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்;
பாக்கியமுள்ளவர்கள் திருந்துவார்கள்; கர்பதுர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்;
யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில்,
ஸம்ஸாரிகள்மேல் வெறுப்புத் தோற்ற அருளிச் செய்கிறார்.
இந்த இருள் தருமாஞாலத்திலே இவர்களைப் போல் தான் கெட்டுப் போகாமல்
எம்பெருமானை யடி பணிந்து வாழப்பெற்றேனென்று தம்முடைய நிலைமைக்குத் தாம் உகக்கிறார் பின்னடிகளில்
வழிப் போக்கர்களின் கைப்பொருள்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுங்கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறிகொடுத்து நிற்க,
ஒன்றும் பறிகொடாமல் தப்பிப்போன வொருவன் “தெய்வாவாதீனமாய் நாம் தப்பப் பெற்றோமே!” என்று உகப்பதுபோல,
ஆழ்வாரும், எல்லாரையும் மதி கெடுக்கின்ற இவ்விருள் தருமாஞாலத்திலே
முந்துற முன்னம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றோமே’ என்று உகக்கிறாராய்ந்து.
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
பதவுரை
ஆரானும் ஆதானும் செய்ய–யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து–விசாலமான இப்பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே—அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான்–நானோவென்றால்
சீர் ஆர் மனத்தலை–(எனது) சிந்த மனத்திலுள்ள
வன் துன்பத்தை–வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால்–நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால்
மாற்றினேன்–நீக்கிக்கொண்டேன்.
ஆரானும் ஆதானும் செய்ய –
யாராவது–எதையாவது செய்து கொள்ளட்டும் –
கற்றவர்கள் உடன் கல்லாதவர்கள் உடன் வாசி அற-தேவதாந்தர பஜனம் என்ன-
உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பார் என்ன
பிரயோஜனாந்தரங்களை நச்சுவார் என்ன -எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று
வெறுக்கும் தந்தை போலே அருளிச் செய்கிறார்-
அகலிடத்தை ஆராய்ந்து –
விசாலமான இப் பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே –
அவர் அவர்கள் கார்யங்களை திருத்தல் நம்மால் ஆகுமோ –
சீரார் மனத்தலை –
எனது சிறந்த மனத்தில் உள்ள -திருந்தப் பெற்ற மனம் ஆதாலால் சீரார் மனம் –என்கிறார்
வன் துன்பத்தை –
வலிய துன்பங்களை –
மாற்றினேன் –
நீக்கிக் கொண்டேன் –
வானோர் இனத் தலைவன் கண்ணனால்-
நித்ய ஸூரிகள் திரளுக்கு தலைவனான-கண்ணபிரானால் –
யான் –
யானோ என்றால் -துன்பங்களுக்கு நிலமான இந்த விபூதியிலே-
யான் ஒருவன் ஆகிலும் இன்பம் பெற நேர்ந்ததே என்று-ஆனந்திக்கிறார் –
வானோர் இனத் தலைவன் -பரத்வம்
கண்ணபிரான் -சௌலப்யம் –
ஆரானும் ஆதானும் செய்ய = கற்றுணர்ந்தவர்களோடு கல்லாதவர்களோடு வாசியற எல்லாருமே இந் நிலத்தில் கலங்குவார்களாதவால்
ஆரானும் என்கிறார். தேவதாந்தரபாஜநம் பண்ணுவார் சிலர், உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பார் சிலர்.
ப்ரயோஜநாந்தரங்களை நச்சுவார் சிலர் என்றிப்படி தப்புச் செய்கைகள் பல இருப்பதால் ஆதானும் என்கிறார்.
ஸம்ஸாரிகளையெல்லாம் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார் தாமும் “அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று
திருவுள்ளம் வெறுத்துச் சொல்லும்படி யாய்த்து ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு.
வழி தப்பி நடக்கும் பிள்ளையின் பக்கல், பெற்ற தகப்பனும் சில ஸமயங்களில் மனம் வெறுத்து
“அது எக்கேடு கெட்டாலும் கெடட்டும்” என்று சொல்லிக் கைவாங்கியிருப்பதுண்டிறே.
மனத்தலை என்றவிடத்து, தலை- எழனுருபு; மனத்திலே என்றபடி.
தம்முடைய நெஞ்சு திருந்தப்பெற்ற ஸந்தோஷத்தினால் “சீரார் மன” மென்கிறார்.
“வானொரினத்தலைவன்” என்று பரத்வமும் “கண்ணனால்” என்று ஸௌலப்யமும் சொல்லிற்று.
நித்யஸூரிகளுக்கு நிர்வாஹனாயிருக்கையாகிற மேன்மையைப் பாராமல்
இடக்கை வலக்கை யறியாத இடையர்களுக்குள்ளே
ஒருவனாக வந்து பிறந்து காட்டியருளின ஸௌலப்யகுணத்திலே நான் ஈடுபட்டு
என்னுடைய மனத் துன்பங்களை யெல்லாம் போக்கிக் கொண்டேன்;
துன்பங்களுக்கே நிலமான இவ்விபூதியில் நானோருவனாகிலும் இன்பம் பெற நேர்ந்ததே யென்று ஆநந்திக்கின்றேனென்றாராயிற்று.
—————————————————————
(யானுமென்னெஞ்சும்.)
கீழ்ப் பாட்டில் “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச் செய்தார்;
ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமான தல்ல வென்றும்
தமக்குக் கர்த்ருத்வம் தோன்றாமல் எம்பெருமானுடைய திருவருளுக்கே கர்த்ருத்வம் தோன்றும்படி
ஸ்வரூபாநுரூபமாகப் பாசுரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்ல வேணுமென்றும் திருவுள்ளமுண்டாகி,
கீழ்ப்பாட்டின் பின்னடிகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச் செய்கிறார்.
யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-
பதவுரை
ஓர் இருள் தான் அன்ன மாமேனி–இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய
எம் இறையார்–எம்பெருமான்
தந்த–அளித்த
அருள் என்னும் தண்டால்–க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல்வினையை–கொடிய பாவங்களை
அடித்து–புடைத்து,
கானும் மலையும் புக–(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான்–தூரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்–நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் –
நானும்-என் மனமும் ஆகிற-இருவருமே இசைந்து நின்றோம் –
உடன் பட்டு இருந்ததே கர்த்தவ்யம்-வேறு ஒன்றும் இல்லை –
வல் வினையைக் -கானும் மலையும் புகக் –
அவை காடுகளிலும் மலைகளிலும் சென்று-புகும்படி –
உருத் தெரியாத அதருஷ்ட ரூபமான வஸ்து-எம்பெருமான் உடைய நிக்ரஹம்
ஒழிந்தமை சமத்காரமாக கவிகள் பேசுவர்-
பெரியாழ்வார் நெய்க்குடத்தை பற்றி -திரு மொழியில்
இங்கனம் பன்னி உறைத்து அருளிச் செய்கிறார்
கடிவான் –
துரத்துவதர்க்காக –
தானோர் -இருளன்ன மா மேனி –
இருள் தானே வடிவு கொண்டால் போலே-இருக்கிற விலஷணமான-திருமேனியை உடைய -கண்டவர்கள்
நெஞ்சை குளிரச் செய்ய வல்ல-ஸ்ரமஹரமான திரு மேனி
எம்மிறையார் –
எம்பெருமான் –
தந்த அருள் என்னும் தண்டால்-
கிருபையாகிற தடியினாலே –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன் -திரு மங்கை ஆழ்வார்
அடித்து –
புடைத்து –
அவன் அனுக்ரஹிக்க மேல் விழுந்த பொழுது இறாய்த்து பின் வாங்காமல்
அனுமதி பண்ணி இருந்தேன் -என்கை –
ஓரிருளன்னமா மேனி யெம்மிறையா தான் தந்த அருளென்னுந் தண்டால் வல்வினையை அடித்துக்
கானும் மலையும் புகக் கடிவான் யானும் என்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்- என்று அந்வயம்.
எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினால் என் பாவங்களைத் தொலைக்கத் தொடங்கின போது
அடியேனும் அடியேனுடைய நெஞ்சும் அக் காரியத்திற்கு உடன்பட்டிருந்தோமத்தனை;
நான் செய்த காரியம் வேறொன்றுமில்லை என்கிறார்.
இருளன்னமாமேனி என்றது-
கண்டவர்கள் நெஞ்சைக் குளிரச் செய்ய வல்ல ச்ரமஹரமான திருமேனி யென்றபடி.
அப்படிப் பட்ட தனது திருமேனியைக் காட்டின போதே பாவங்கள் அஞ்சி ஓடத் தொடங்கின போலும்.
உலகத்தில் ஒருவனை அடித்துத் துரத்த வேண்டில் கொம்பு தடி முதலியன இன்றியமையாதனவாதலால்,
இவ்விடத்தில் பாவங்களைத் துரத்தித் தள்ளுவதற்கு எம் பெருமானுடைய திருவருளாகிற தடி ஸாதனமாயிற்றென்றார்.
“நீ பணித்தவருளென்னு மொள்வாளுருவி யெறிந்தேன்” (பெரிய திருமொழி, 6-2-4) என்ற திருமங்கையாழ்வா ரருளிச்செயல் இங்கு ஸம்மரிக்கத்தகும்.
“வல்வினையைக் காணும் மலையும் புகக் கடிவான்” என்றவிடத்து ஒரு ஆக்ஷேபம் தோன்றும்;
வல் வினையென்பது உருத்தெரியக் கூடிய ஒரு வஸ்து வல்லவே; எம்பெருமானுடைய அநுக்ரஹமே புண்யமென்றும்,
அவனுடைய நிக்ரஹமே பாபமென்றுமன்றோ சொல்லப்படுகிறது.
ஆகவே பாபமென்பது உருத் தெரியாத அத்ருஷ்ட ரூபமான ஒரு வஸ்துவென்று தேறுகிறது. இப்படிப்பட்ட பாபத்தைத் தண் டாலடித்துக்
காடுகளிலும் மலைகளிலும் ஓடிப்போய் விடும்படி துரத்துவதென்பது பொருந்தாத பேச்சாயிருக்கின்றதே! என்று சங்கிக்கக்கூடும்.
எம்பெருமானுடைய நிக்ரஹம் ஒழிந்து விட்டது என்று சொல்ல வேண்டியதை இப்படி சமத்காரமாகப் பேசுவார்கள். கவிகள் என்று தெளிக.
பெரியாழ்வாரும் “நெய்க்குடத்தைப்பற்றி” என்கிற திருமொழியிலே இங்ஙனம் பன்னி யுரைத்தா ரென்றுணர்க.
“யானும் என்னெஞ்சுமிசைத் தொழிந்தோம் =
அவன் அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றி மேல்விழுந்து வந்தபோது நான்
இறாய்த்துப் பின்வாங்காமல் அவனுடைய அநுக்ரஹத்துக்கு அநுமதி பண்ணியிருந்தேனென்கை.
—————————————————————-
(அடியால் படிகடந்த.)
கீழ்ப்பாட்டில் “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று ஆழ்வார் பேசின பாசுரத்தைத்
திருச் செவி சாத்தின எம்பெருமான் “இவ் விபூதியிலே இப்படிப்பட்ட வார்த்தை சொல்லுவாருமுண்டாவதே!;
த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.
அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-
பதவுரை
நெடியாய்–பகவானே!
செறி கழல் கொள் தான் நிமிர்த்து–செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று–கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே
அடியால் படி சடந்த முத்தோ–திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அது அன்றேல்–அல்லது
முடியால் விசும்பு அளந்த முத்தோ–திருவடியால் மேலுலகத்தையெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம்–அவ்விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
அடியால் படிகடந்த முத்தோ –
திருவடியால் பூமி முழுவதும்-அளந்து கொண்டதால் உண்டான-சந்தோஷமா -/
அது அன்றேல் –அல்லது –
முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியால் மேல் உலகத்தை எல்லாம்-அளந்து கொண்ட சந்தோஷமா –
முத் ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ -அமர கோசம் –முத் -சந்தோஷம்
அதுவே தமிழ் முத்து என்கிறார்/
முத்து -அழகு-இந்த செயல் அழகா அந்த செயல் அழகா என்றுமாம்
இரண்டுமே சந்தோஷம் அழகு என்பதால் –
அன்றிக்கே
நவரத்னங்களில் சேர்ந்த முத்து என்றுமாம்/
திருவடியில் வீரக் கழலில் சாத்திய முத்துக்களா–
திரு முடியில் கிரீடத்தில் உள்ள முத்துக்களா எவை அளந்தன என்றுமாம்
பரம போக்யமாக இருப்பதால் -அவயவங்கள் கண்ணுக்கு தோற்றாமல் முத்துக்களே தோன்றியதால் என்னவுமாம்
ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி-திருமங்கை ஆழ்வார்-
மா முதலடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முகுதும் அகப்படுத்தி
ஒண் சுடர்ப் போது ஓன்று விண் செலீஇ -என்றும் இவரே அருளிச் செய்தபடி
ஒரு திருவடியே மேல் உலகங்களையும் அளந்தாய் இருக்க
முடியால் விசும்பு அளந்த என்றது-திருவடி உடன் திரு முடியும் ஓங்கி வளர்ந்த படியாலும்
எல்லா செயல்களுக்கும் திருவடியைச் சொன்னால் கண் எச்சில் படும் என்பதாலும்
நெடியாய் –
பகவானே –
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் –
செறிந்த வீரக் கழலை அணிந்த-திருவடிகளை நீட்டி-
செறி கழல்கள் தாள் -என்றும் பாட பேதம்-
நெறி கழல் கோள் தாள்-என்பதே சிறக்கும் என்பர் அழகிய மணவாள சீயர்
சென்று உலகம் எல்லாம் நீ யளந்த யன்று –
உலகம் எல்லாம் சென்று நீ யளந்த யன்று -கீழ் உலகம் மேல் உலகம் எங்கும் வியாபித்து
அளந்த காலமாகிய-திருவிக்கிரம அவதாரத்திலே -/
அறிகிலமால்-
இந்த இரண்டில் எந்த சந்தோஷம் உனது நெஞ்சில் ஓடுகிறது-என்பதை அறிகிறோம் இல்லை –
நெடியாய்!
நீ செறிகழல்கொள் தாள் நிமிர்ந்து உலகமெல்லாம் சென்று அளந்தவன்று அடியால்படி கடந்த முத்தோ?
அதன் றேல் முடியால் விசும்பளந்த முத்தோ? அறிகிலும் என்று அந்வயம்.
‘செரி கழல்கள் தாள்” என்று இக்காலத்தில் பாடம் வழங்கி வந்தாலும்
“செறிகழல் கோள்தான்” என்றே ப்ராசீக பாடமென்று
அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்வர். அதுவே நன்கு பொருந்தும்.
நெருங்கின வீரத் தண்டைகளை அணிந்துள்ள திருவடிகளை நீட்டி உலகங்களை அளந்த காலத்தில் திருவடியாலே
பூமிப் பரப்பை யெல்லாம் ஆக்ரமித்து ஸ்வாதீனப்படுத்திக் கொண்டதனால் ஒரு ஸந்தோஷமும்,
திருமுடியை நிமிர்த்தி மேலுலகங்களையெல்லாம் அளாவி ஸ்வாதீனப்படுத்திக் கொண்டதனால் ஒரு ஸந்தோஷமும்
ஆக இரண்டு ஸந்தோஷங்கள் உண்டாயின;
அவற்றுள் எந்த ஸந்தோஷத்தோடொக்கும் இப்போதைய உன்னுடைய ஸந்தோஷம்? என்று கேட்கிறபடி
(முத் ப்ரீதி : ப்ரமதோ ஹர்ஷ:) என்ற அமர கோசத்தின்படி வடமொழியில் முத் என்று ஸந்தோஷத்திற்குப்பெயர்;
அச் சொல்லே இங்குத் தமிழிலக்கணப்படி முத்து என்றிருக்கிறது.
முடியால்லிசும்பளந்தமுத்தோ” = இவ்விடத்தில் ஒரு சங்கை உதிக்கக்கூடும்;
“ஒரு குறளாயிருநில மூவடி மண்வேண்டி உலகனைத்து மீரடியாலொடுக்கி” (பெரிய திருமொழி 3-4-1) என்று திருமங்கையாழ்வாரும்,
“மாமுதலடிப்போதொன்று கவிழ்த்தலர்த்தி மண் முழுதுமகப்படுத்து, ஒண்சுடரடிப்போதொன்று விண்செவீ இ” (திருவாசிரியம் 5) என்று
இவர்தாமும் அருளிச்செய்தபடி மேலே நீட்டப்பட்ட ஒரு திருவடியே மேலுலகங்களையெல்லாம் அளந்ததாயிருக்க,
முடியாமல் விசும்பளந்த என்று இங்கே இவர் அருளிச் செய்வானேன்? என்று. (இதற்கு ஸமாதாநம்:-)
ஒரு திருவடியே மேலுலகங்களையும் அளந்ததென்பது உண்மையே; அந்தத் திருவடியோடு கூடத் திருமுடியும் ஓங்கி வளர்ந்தபடியாலும்,
எல்லாச் செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சிலாகுமென்று ஒரு செயலைத் திருவடியிலேறிட்டுச் சொல்லுவோமென்று
ஆழ்வார் திருவுள்ளம் பற்றினபடியாலும் முடியால் லிசும்பளந்த என்றவிதில் அநுபபத்தி ஒன்றுமில்லை யென்றுணர்க.
முத்து என்பதற்கு அழகு என்கிற பொருளும் கொள்ள இடமுண்டாகையால் அப்பொருள் கொண்டு,
எம்பெருமானே! நீ அடியால் பூமியையெல்லாம் அளந்தது அழகிய தா?
அன்றி முடியால் மேலுலகங்களையெல்லாம் அளந்தது அழகியதோ?
இரண்டு காரியங்களில் எது அழகியது? சொல்லாய் என்று கேட்கிறாரென்றுரைக்கவுமாம்.
இரண்டும் அழகியதே என்று வெளியிடுவதே இக்கேள்வியின் கருத்தாரும்.
அளந்த என்றது அனந்தது என்றபடி.
இப் பொருளில், உலகளந்தபடியைப் பரம போக்யாமக அநுபவிக்கிறார் என்று அவதாரிகை ஆகக் கடவது.
இனி, முத்து என்பதற்கு நவரத்னங்களிற் சேர்ந்து முத்துக்கள் என்றே பொருள்கொண்டு உரைப்பதும் ஒரு புடையுண்டு.
திருவடியிலணிந்த வீரக்கழலி“ சாத்தியுள்ள முத்துக்களே பூமியை அளந்துவிட்டனவோ?
திருமுடியில் சாத்தியுள்ள முத்துக்களே விசும்பை அளந்து விட்டனவோ? என்கை.
இப்பொருளில், கடந்த என்பதும் அளந்த என்பதும் ஈறுகெட்ட வினை முற்றுக்கள்.
முத்தோ அடியால்படி கடந்தன, முத்தோ முடியால் விசும்பளந்தன? என்றபடி.
உலகளந்த காலத்தில் திருவடியும் திருமுடியும் முத்து மயமாயிருந்த படியால் அவயவங்கள் கண்ணுக்குத் தோன்றாமல்
முத்துக்களே தோற்றின என்பதை வெளியிடுதல் இக் கேள்விக்குக் கருத்தாகும்.
——————————————————————-
(அன்றே நங்கண் காணும்.)
கீழ்ப்பாட்டில் உலகளந்த வரலாற்றைச் சிறிது ப்ரஸ்தாவம் செய்யவே.
ஓங்கி யுலகளந்த உத்தமனுடைய அந்த விலக்ஷணமான திருவுருவத்தை ஸேவிக்கப் பெறவேணு மென்று ஆழ்வார்க்கு ஆசை கிளர்ந்தது.
கிளர்ந்தாலும் பரம பக்தி தலையெடுத்தாலன்றி அவன் ஸேவை ஸாதிக்க மாட்டானாகையால், அந்தப் பரமபக்தி தலையெடுக்கும்போது
விகஸிக்கக் கூடியதான நெஞ்சென்னு முட்கண்ணுக்கு விஷயமாகக் கடவதான பரம்பொருள் நமது புறக்கண்ணாகிய
மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு இப்போது எப்படி விஷயமாகுமென்று தம்மில் தாமே ஸமாதானப்படுகிறார் போலும்.
பரம பக்தி தலை எடுத்தால் அன்றி-கீழே பிரச்துதமான அந்த விலஷணமான -திருமேனியை-சேவிக்க பெறாதே-
தம்மில் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்
ந மாம்ஸ சஷூர் அபி வீஷதே தம் -என்றும்
ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும் சொல்லுகிறபடியே-புறக் கண்ணால் காண்கைக்கு என்ன ப்ரசக்தி –
கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்-என் கண்ணனை நான் கண்டேனே –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும் –
மானஸ சாஷாத்காரமே அருளிச் செய்கிறார்-
கமலக் கண் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும்
உட் கண்ணாலேயே -ஆச்சார்ய ஹிருதயம்-
அகக் கண் விகசிக்கப் பெற்றவர்கள் புறக் கண்ணாலும் காணப் பெறுவார் என்பர் சிலர்-
அங்கன் அன்றி-அவன் பரிஹ்ரஹித்து கொள்ளும்
திவ்ய மங்கள விக்ரஹம் மாத்ரம் பரம பக்தர்களுக்கு புலப்படுமே அன்றி-
திவ்யாத்ம ஸ்வரூபம் புறக் கண்ணுக்கு புலப்படாது என்பர் பெரியோர்-அகக்கண் கொண்டு திவ்யாத்மா ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கப் பெற்றோம் ஆகில்-புறக்கண் கொண்டு திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கப் பெறுவோம் என்பதே கருத்து –
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-
பதவுரை
என்றேனும்–எக்காலத்திலும்
கண் கண்ணால்–வெளிக்கண்ணாலே
நாணாக–காணக்கூடாத
அவ்வுருவை–அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல்–நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே–அப்போதே,
ஆழியான் கார் உருவம்–திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும்–நமது புறக்கண்ணும் காணப்பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே–நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே.
அன்றே –
அப்பொழுதே –
நம் கண் காணும் –
நமது புறக் கண்ணும் காணப் பெறும்
ஆழியான் காருருவம் –
திரு ஆழியை நிரூபகமாக வுடையனான-எம்பெருமான் உடைய கரிய திரு மேனியை –
இன்றே நாம் காணாது இருப்பதுவும் –
நாம் அவ்வுருவத்தைக் காணாமல்-வருந்திக் கிடப்பது-அகக் கண் மலராத இப்போது மாத்ரமே
என்றேனும் –
எக் காலத்திலும்
கட் கண்ணால் –
வெளிக் கண்ணாலே
காணாத வவ் வுருவை –
காணக் கூடாத-அப்படிப் பட்ட விலஷணமான திரு வுருவத்தை –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –
நெஞ்ஜாகிற அகக் கண் விகசித்து-சாஷாத் கரிக்குமாகில்-
என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண் உணர்ந்து காணுமேல் அன்றே
ஆழியான் காருருவம் நம் கண் காணும்; நாம் காணாதிருப்பதுவும் இன்றே- என்று அந்வயம்.
(ந மாம்ஸ =க்ஷுரபிவீக்ஷதே த் = அந்த எம்பெருமானை மாம்ஸக் கண் காணப்பட்டாது) என்றும்,
(ந சக்ஷû பச்யதி கச்சநைநம் = ஒருவனும் இவ் வெம்பெருமானைக் கண்ணால் காண மாட்டான்) என்றும்
வேதங்களிற் சொல்லுகிறபடியே யாராலும் ஒரு நாளும் புறக் கண்ணால் காணமுடியாத பரமாத்ம ஸ்வரூபத்தை
அகக் கண்ணால் காண முயன்றால் காணலாமத்தனை யொழிய புறக் கண்ணால் இப்போது காண்கைக்கு என்ன ப்ரஸக்தி?
ஆழியான் காருருவம் அன்றே நம் கண் காணும் = நெஞ்சென்னுமுட்கண் காணுமேல் அன்றே ஆழியான் காருருவத்தை நம் கண் காணும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே = நெஞ்சென்னுமுட்கண் காணப்புகாமையால் இன்று நாம் காணாதிருக்கின்றோம்.
கட்கண்ணால் = கண் என்று உலகத்தில் ஸாமாந்யமாக வ்பவஹரிக்கப்படுகிற கண்ணாலே என்றபடி.
இந்த மாம்ஸசக்ஷஸ்ஸாலே எம்பெருமானுடைய திருவுருவம் காணப்படாது என்னில்,
“கமலக் கண்ணனென் கண்ணினுள்ளான்” “என் கண்ணனை நான் கண்டேனே”
‘தேவர்கட்கெல்லாங் கருவாகிய கண்ணனைக் கண்டுகொண்டேனே” என்றிப்படி பலகாலும் கண்டதாகத் திருவாய்மொழியில்
ஆழ்வார் அருளிச்செய்வானேன்? என்றால்,
அவயிடங்களெல்லாம் மாநஸ ஸாக்ஷாத்காரத்தையே சொல்லுகின்றனவாகையால் ஒரு குறையுமில்லை.
“கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய” என்று
ஆசர்யஹ்ருதய முடிவில் அருளிச் செய்ததுகாண்க.
அகக்கண் எனப்படுகிற ஞானக்கண் விகஸிக்கப்பெற்றவர்கள் புறக்கண்ணாலும் பரம்பொருளைக் காணவரல்லராவர் என்பர் சிலர்.
அங்ஙனன்றி எம்பெருமான் தன்னுடைய விருப்பத்தாலே பரிக்ரஹித்துக் கொள்ளுகிற திவ்யமங்கள விக்ரஹம் மாத்திரம்
பரம பக்தர்களுடைய புறக் கண்ணுக்குப் புலப்படுமேயன்றி அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஒருகாலும் புறக்கண்ணுக்குப் புலப்படாதென்பர் பெரியோர்.
இப்பாட்டில் “அன்றே நம் கண்காணும்” என்கிறாரே,
இங்குக் கண் என்றது புறக்கண்ணோ அகக்கண்ணோ? என்னில்; புறக்கண் என்று கொள்க.
அகக்கண் திறந்து திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றோமாகில் பின்பு புறக்கண்ணாலே
திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கப் பெறுவோம் என்பதே இப்பாட்டின் கருத்தாகக் கொள்ளத் தக்கது.
——————————————————————-
(உணரவோருவர்க்கு.)
“இன்றே நாம் காணதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு
எம்பெருமானது திருச் செவியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திரு வாயினாலே இப்படி சொல்லும்படி நாம் அருமைப் பட்டிருக்கலாமோ?
‘நான்காணாதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்ல வேண்டியவர்கள் *
உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளே யொழிய,
*உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ் வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ?
ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-
பதவுரை
இணரும் துழாய் அலங்கல் எந்தை–(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான்
தனக்கு எளியர்–தனக்கு அடிமைப்பட்டவர்கள்
எவ்வளவர்–(தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன்–தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு–(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே–நேராக
உணர எளியனே?–அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்)
ஆனால்–ஆகையினாலே
இங்கு–இவ்விடத்தில்
எம்பெருமான்–எம்பெருமான்
எனக்கு–என்னாவறிந்து
உணர எளியன்–கொள்ளக்கூடியவன்.
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே –
தாமாகவே முயற்சி செய்பவர்களில்-ஒருவர்க்காவது-நேராக-அறியக் கூடுவனோ
அன்பு அற்றவர்க்கு ருஜூ வாக அறியக் கூட அரியவன் என்றபடி
பக்தி இல்லாத அளவில் எவ்வளவு கற்றவர்களுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாகாதே
யே து த்வன்க்ரி சரசீருஹ பக்தி ஹீன தேஷாம் அமிபிரபி நைவ யதார்த்த போத
பித்தக்ன மஞ்ஞா மநாப்ஷி ஜாது நேத்ரே நைவ ப்ரபாபிரவி சங்கசி தத்வ புத்தி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
இணரும் துழாய் அலங்கல் எந்தை –
திரு மேனியின் சம்பந்தத்தாலே-மேன் மேலும் தழைத்து ஓங்குகின்ற-திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான் –
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான்
தன்னிலத்தில் காட்டிலும் இவன் தோளில் விகசியா நிற்கும்-தேவர்கள் தோளில் மாலை வாடாது-
சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்
இணர்தல்-கொத்து கொத்தாக அலர்தல் –
ஒருவருக்கும் அறியக் கூடுபவன் அல்லன் ஆயினும் -உணரத்-
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்-தமக்கு எளியர்-தமக்கு அடிமைப் பட்டவர்கள் -எளியவர் -சேஷ பூதர் என்றபடி-
எவ்வளவர்-தன் மேல் எவ்வளவு அன்பு உடையவரோ-அவ்வளவர்
அவர்களுக்கு தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் திருமால் ஆகையினாலே –
பேசுவர் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாயான் வடிவு -பேயாழ்வார்
ஆனால் இங்கு
அதனாலே இவ்விடத்திலே
எனக்கு உணர எளியன் எம்பெருமான்
எம்பெருமான் என்னால் அறிந்து கொள்ளக் கூடியவர்-
என்னுடைய அன்புக்கு தக்கபடி எளியனாக காட்டிக் கொடுப்பதில் தட்டில்லையே –
இணருந்துழாயலங்கெலந்தை ஒருவர்க்கு செவ்வே உணர எளியனே? (எளியனல்லன்.) (ஆனபோதிலும்)
எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவன்; ஆனால் எனக்கு இங்கு உணர எளியன் என்று அந்வயம்.
“தோளிணை மேலும் நன்மார்பின்மேலுஞ் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்றபடி
திருத்துழாய் மாலைகளைப் பரம போக்யமாக அணிந்து கொண்டுள்ள எம்பெருமான் யாராலாவது உள்ளபடி அறிந்து கொள்ளக்கூடியவனோ?
ஸ்வ ப்ரயத்நத்தால் ஒருவராலும் அறிந்துகொள்ளக் கூடியவனல்லன்;
ஒருவனுடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லை என்று சொல்லி விட்டால், ஆகாசத் தாமரை, முயற் கொம்பு, மலடி பிள்ளை
முதலான வஸ்துக்கள் போல் ப்ரஹ்மமும் அடியொடு இல்லாத பொருள் என்று தேறி விடுமே என்று நினைக்க வேண்டா;
ஒருவருடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லை யென்று யாரும் சொல்ல வரவில்லை.
எவரெவர்கள் எவ்வௌவெவ்வளவு அன்பு பாராட்டுவர்களோ அவரவர்களுக்கு அவ்வளவவ்வளவு எம்பெருமான் தன்னைக் காட்டிக் கொடுப்பவன்
என்றே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருப்பதால் நானும் என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எம்பெருமானை லபிக்க உரியேன் என்கிறார்.
முதலடியில் “ஒருவர்க்குச் செவ்வே உணர எளியனே” என்றது- அன்பு அற்ற ஒருவர்க்கும் ருஜுவாக அறியக் கூடாதவன் என்றபடி.
புத்தி சாதுரியத்தாலே சாஸ்த்ரங்களை யெல்லாம் ஸந்தேஹமறக் கற்றுணர்ந்தவர்களுக்கும் பக்தியில்லாத யளவில்
ப்ரஹ்ம ஜ்ஞான முண்டாகாமட்டதென்ற பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
யெது க்வதங்க்ரி ஸரஸருஹபக்தி ஹீநா தேஷாம் அமீபிரபி நைவ யதார்த்தபோத:-
பித் தக்க மஞ்ஜந மநாபுஷி ஜாது நேத்ரே நைவப்ரபாபிரபி சங்கஸிதத்வபுத்தி:” (எம்பெருமானே! உனது திருவடித் தாமரைகளில்
அன்பு இல்லாதவர்கள் எவரோ அவர்களுக்கு சாஸ்த்ரங்களாலும் உண்மை யுணர்ச்சி உண்டாக மாட்டாது; பித்தம் கொண்டவனுடைய
கண்ணில் பித்த ஹரிமான அஞ்ஜனம் இடாவிடில் ஆயிரம் ஸூரியர்கள் காய்ந்தாலும் சங்கு மஞ்சள் நிறமாகக் காணப்படுமேயன்றி
வெண்ணிறமாகக் காணப்படாதன்றோ, அதுபோல.) என்று ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் கூரத்தாழ்வானருளிச் செய்தது இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
இணருந்துழாயலங்கல் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த அர்த்த விசேஷம் குறிக்கொள்ளத்தக்கது;
(இணரும்) தன்னிலத்திற் காட்டிலும் இவன் தோளில் விகஸியா நிற்கும்; தேவர்கள் தோளில் மாலை வாடாது;
ஸர்வாதிகனாகையாலே இவன் தோளிலிட்டது அரும்பியா நிற்கும்” என்று.
தேவர்கள் மாலை அணிந்துகொண்டால் அந்த மாலை தோளில் வாடாமல் வதங்காமல் விளங்கிக் கொண்டிருக்கும் என்பது மாத்திரமேயுள்ளது;
ஸர்வாதிகனான எம்பெருமானுடைய திருத்தோளிலோ வென்னில், மாலை வாடாதிருப்பது மாத்திரமே யன்று;
மேன் மேலும் அரும்புவிட்டு விகஸிப்பதும் செய்யும் என்று, இணரும் என்ற பதஸ்வாரதஸ்யத்தை நோக்கி இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க.
இணர்தலாவது கொத்துக் கொத்தாக அலர்தல்.
எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர்; (தானும்) அவ்வளவன் =
“ பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே பாச மலர்த்துழாய் மாலையான் – வடிவு.” என்று பேயாழ்வாரருளிச் செய்ததை
ஒரு புடையொத்திருக்கின்றது இதுவும்.
தாழ்ந்தவர்களைச் சொல்வதான எளியர் என்ற சொல் இங்கு தாத்பர்ய வ்ருத்தியால் சேஷ பூதர்களைச் சொல்லுகிறது.
தனக்கு அடிமைப்பட்டவர்கள் எவ்வளவு அன்பை யுடையவர்களாக இருக்கின்றார்களோ அவ்வளவாகத் தானிருப்பன்;
“பசிக்குத்தக்க ப்ரஸாதம்” என்னமாபோலே, ஸ்நேஹத்துக்குத்தக்க ஸ்வரூபாவிஷ்காரஞ் செய்வனாம் எம்பெருமானும்.
ஆனால் எனக்கெளியனென்பெருமானிங்கு = ஆனால் என்றது ஆனதால், என்றபடி. அன்புக்குத் தக்கவளவு தன்னைக்
காட்டிக் கொடுப்பவனாகையாலே என்னுடைய அன்புக்குத் தக்க வளவு எனக்கு அவன் எளியனாகத் தடையில்லை என்றாராயிற்று.
————————————————————————–
(இங்கில்லை பண்டு போல்)
கீழ்ப்பாட்டில் “எனக்கெளிய னெம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய ஸௌல்ப்ய குணத்தை அநுஸநதித்தார்;
அந்த குணாநுபவம் வர வர அதிகரித்துத் திருவுள்ளத்தில் தாங்க முடியாதபடி விஞ்சிற்று; விஞ்சவே,
அந்த ஆநந்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஓ பாவங்களே! பகவத் குணாநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை;
அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் ஏது?;
ஒரு மூலையில் சுருங்கிக் கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக் கூடும்;
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இங்கு இருக்க வேண்டா; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேறிடந் தேடி ஓடிப்போங்கள் என்கிறார்.
இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-
பதவுரை
இங்கு–என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டுபோல்–இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால்–என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய
சீர்க்கும்–கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது–எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.
அங்கே–முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே
வீற்றிருத்தல் இல்லை–(பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)
வல்வினையார் தாம்–கொடிய பாவங்கள்
மடி அடக்கி நிற்பதனில்–துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட
ஈண்டு–இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு–கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.
இங்கு இல்லை பண்டு போல்
என்னுடைய இந்த நெஞ்சில்-இத்தனை நாளும் போலே-
வீற்று இருத்தல் –
பாபங்கள் தங்கி இருக்க முடியாது –
உயர்வற உயர் நலம் உடையவன் எவனவன் -கல்யாண குணங்களுக்கே நெஞ்சில் இடம் அல்பமாய் இருக்குமே
என்னுடைய செங்கண் மால் –
என் மேல் வாத்சல்யத்தாலே-சிவந்த திருக் கண்களை உடைய பெருமான் உடைய
சீர்க்கும் –
கல்யாண குணங்களுக்கே-
சிறிது உள்ளம் –
உள்ளம் சிறிது-என் நெஞ்சம் இடம் போராததாய் இருக்கின்றது
அங்கே –
முன்பு விசாலமான வாழ்ந்த இடத்திலே
மடி யடக்கி நிற்பதனில் –
துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக இருப்பதை விட-
ஒரு மூலையில் மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப் போலே
வல் வினையார் தாம்
கொடிய பாபங்கள் –வல்வினைகாள்-முன்னிலையாக முன்பு அருளிச் செய்து
இங்கு வல்வினையார் -படர்க்கையாக அருளிச் செய்கிறார்
கோபமும் த்வேஷமும் நன்கு விளங்கும்-முகம் நோக்கி வார்த்தை சொல்லக் கூசுகிறபடி
ஈண்டு –
இவ் விடத்தில் நின்றும்-
சீக்கிரமாகவும் என்றுமாம்
மீண்டு -என்றும் பாடம் –
அடி எடுப்பதன்றோ அழகு –
கால் பேர்ந்து வெளிக் கிளம்பி போவது அன்றோ அழகியது-
பண்டு போல் வீற்றிருந்தால் இங்கில்லை = பாவங்களே! இது வரையில் நீங்கள் என்னுடைய நெஞ்சை உங்களுக்கு
வாஸஸ்தானமாக ஆக்கிரமித்துக் கொண்டு உங்களுடைய பெருமை யெல்லாந் தோற்ற விசாலமாகக் கிடந்தீர்கள்;
நான் பக்வத் விஷய வாஸநை யறியாத காலத்தில் நீங்கள் என் நெஞ்சில் குடியிருந்தீர்களத்தனை; இனி அப்படியிருக்க முடியாது;
ஏனென்றால், இப்போது என்னெஞ்சு பகவத் குணாநுபவம் பண்ணத் தொடங்கி விட்டது.
*“உயர்வறவுயர் நலமுடையவன்” என்றபடி அநந்த கல்யாண குணாத்மகனான அப்பெருமானுடைய குணங்களுக்கே
இங்கு இடம் அற்பமாயிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் கிடைக்க ப்ரஸக்தி எது? – என்றிப்படி ஆழ்வார்
பாப ராசிகளை சேதநஸ மாதியாலே விளித்துச் சொன்னவாறே.
அவை “ஆழ்வீர்! நெடுநாள் இங்கே பழிக்கிடந்த எங்களை இன்று இப்படி அடித்துத் துரத்தி விடலாகாது;
உமது நெஞ்சில் எங்களுக்கு முன் போல் விசாலமாக இடம் கிடைக்காவிட்டாலும் ஒரு மூலையில் பதுங்கி நிற்கும்படி
மிக்க சுருக்காமன இடம் கிடைத்தாலும் எங்களுக்குப் போதும்; அரைத் துணிகளை இடுக்கி நெருக்கிப் பிடித்துக் கொண்டு
ஒரு மூலையிலே மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப் போலே நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டாகிலும் ஒரு பக்கமாகக் கிடக்கிறோம்;
எங்களை விலக்காமல் இடங்கொடுத்துக் காத்தருள வேணும்” என்று பணிந்து வேண்டிக் கொள்ள,
பின்னடிகளால் அதற்கு மறுமொழி கூறுகின்றார்- பெருமை தோற்ற நன்றாக வாழ்ந்தவர்கள் அப்படி வாழ முடியாமல்
கஷ்டப்பட நேர்ந்த காலத்துக் கண் மறைய ஓடிப்போய் விடுவதன்றோ அழகு என்கிறார்.
வல்வினைகாள்! என்று முன்னிலையாகக் கூறாமல் வல்வினையார் தாம் என்று படர்க்கையாகக் கூறியதனால்
அவற்றின் மேல் ஆழ்வார்க்குள்ள கோபமும் த்வேஷமும் நன்கு விளங்கும். முகம் நோக்கி வார்த்தை சொல்லக் கூசுகின்றாரென்க.
“இங்கே மடியடக்கி நிற்பதனில்” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று சிலர் சொல்லுவர்; அது வேண்டா;
அங்கே என்றிருப்பதே அழகியது ஆழ்வாருடைய நெஞ்சுக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க.
தூரமான இடத்தைக் குறிப்பிடும்போது அங்கே என்றே குறிப்பிட வேண்டும்.
தவிரவும்,
“அங்கே மடியடக்கி நிற்பதனில் மீண்டடியெடுப்பதன்றோ வழகு” என்று உலக வழக்கச் சொல்லாகவும் கருதத் தக்கது.
‘தாங்கள் பெருமையாக வாழ்ந்த விடத்திலே தங்களுக்கொரு குறை நேரிட்டால் அவ் விடத்திலேயே பிறர் சிரிக்கும்படி
வருந்தி வாழ்வதிற் காட்டிலும் அவ்விடத்தை விட்டுக் கண் மறைய ஓடிப்போவது நலம்’ என்று உலகில் ஸாமாந்யமாக வழங்குவதுண்டிறே;
அந்த வார்த்தையை அநுவதிக்கிற படியாகவுமிருக்கின்றது.
இங்கு, மடியடக்கி நிற்பதனில் என்றது எங்ஙனே பொருந்தும்? ‘பாவங்களுக்கு மடியென்று ஒன்றுண்டாகின்லன்றோ
அதை யடக்கி நிற்க வேண்டா என்னலாம்- என்று சிலர் சங்கிக்கக் கூடும்;
வல்வினையார் என்று உயர்திணையாகச் சொன்னதுக்குச்
சேர உலகவழக்க சொல்லையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறபடி
மூன்றாமடியின் இறுதியில் மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம்.
ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம்.
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply