பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்/-அவதாரிகை/பாசுரங்கள் 1-10–திவ்யார்த்த தீபிகை –

அதர்வண வேத சாரமாகும் –

குணங்களால் பெருமை எனபது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

————————————–

தனியன் -எம்பெருமானார் அருளிச் செய்தது –
முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-
வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன்  பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

————————————————————————–

அவதாரிகை-

ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க
-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -திரு விருத்தம் –

சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை திருவாசிரியம்

நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை
இந்த பெரிய திருவந்தாதி

திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதை கண்டு
ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை திருவாய்மொழி –

————————————————————————–

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

பதவுரை

முயற்சி சுமந்து–எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு
எழுந்து–கிளம்பி
முந்துற்ற நெஞ்சே–(அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே!
நீ எம் எம்மொடு கூடி–நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய்–காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்)
நல் பூவைப்பூ ஈன்ற வண்ணன்–(அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய
புகழ்–திருக்கல்யாணகுணங்களை
நயப்பு உடைய–அன்பு பொதுந்திய
நா ஈன்–நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற
தொடை கிளவியுள்–சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே
பொதிவோம்–அடக்குவோமாக.
(இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.)

முயற்றி சுமந்து –
எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எழுந்து –
கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ் விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-
யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்
-என்பார் மேலே

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இருவரும் கூடி நடத்த வேண்டிய கார்யம் என்னவென்றால்
நற்பூவைப்பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம் பூவில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-

இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-
அன்பு கொண்ட சொற்களால்

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –
ஈனுதல்
-உண்டாக்குதல் –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குணரத்ன கோசம் –

(முற்று சுமந்து.) ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார்.
தமது நெஞ்சானது தம்மைவிட்டுத் தனித்துப் போய் விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு;
அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.

நெஞ்சு பிரிந்து போய்விட்ட தென்பதும் அதனை அழைத்து வார்த்தை சொல்லுகிறதென்பதும் அஸம்பாவிதமன்றோ?
நெஞ்சு போய்விட்ட தென்றால் வார்த்தையே சொல்ல முடியாதன்றோ;
நெஞ்சு நினைத்ததையன்றோ வாய் சொல்லும்;
“முந்துற்ற நெஞ்சே; இயற்றுவாய் எம்மொடு நீகூடி; என்று இப்போது சொல்லுகிற ஆழ்வார்
நெஞ்சு அற்றவரென்று எப்படிக் கொள்ள முடியும்?
நெஞ்சோடு கூடியிருந்ததுதானே இந்த வார்த்தை சொல்லி யிருக்க வேண்டும்;
அப்படியிருக்க “முந்துற்ற நெஞ்சே!- நீ எம்மொடுகூடி இயற்றுவாய்” என்று அருளிச் செய்வது
எங்ஙனே பொருந்தும்? என்று சங்கிக்க வேண்டா;

தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுதல் கவி மரபு.
நெஞ்சைத் தூது விடுவதாகவுஞ் சொல்லுவர்களிறே.
நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ் விருள் தரு மா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல்
உண்டியே உடையே உகந்தோடு கிறவர்களாயிருப்பதால், உசாத்துணையாவது நெஞ்சு தவிர வேறில்லாமல்
அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்.
“யானும் என்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்” என்று மேலே அருளிச் செய்யப் போகிறார்.
ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவதென்பது பக்தர்களுக்கு ஒரு நற்போது போக்காக அமைந்ததாம்.
நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்வதும் அப்படியே; நெஞ்சு விடுதூதாகச் சொல்வதும் அப்படியே. இது நிற்க.

இப்பாட்டின் கருத்தை ஆழ்வார்க்கும் நெஞ்சுக்கும் ஸம்பாஷணையாக வைத்து எழுதுவோம்;-

ஆழ்வார்:- ஓ நெஞ்சே! நீ எனக்கும் முன்னாடி வெகு உத்ஸாஹமாகக் கிளம்புகிறாயே;
என்ன செய்யப் போவதாக உத்ஸாஹங் கொண்டிருக்கிறாய்?

நெஞ்சு: ஆழ்வீர்! நான் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் போகிறேன்;
அதில் எனக்கு வெகு உத்ஸாஹமிருப்பதால் என்னைத் தடை செய்ய வேண்டா.

ஆழ்வார் :- உன்னை யாரும் தடை செய்வாரில்லை;
என்னோடே சேர்ந்து காரியம் நடத்தினாயாகில் நல்லது என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

நெஞ்சு:- நீர் செய்வதாக உத்தேசித்திருக்கும் காரியம் யாது?
நான் மேற் கொண்ட காரியத்தோடு அது விரோதப்படாத காரியமாயிருந்தால் பார்ப்போம்.

ஆழ்வார்:- நீ கொண்ட காரியமே நானும் கொண்டது; வேறில்லை;
காயாம்பூப் போல் அழகிய கறுத்த திருநிற முடையனான எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களை
நல்ல சொல் தொடைகளிலே சேர்த்துப் பாடி அநுபவிக்கப் பாரிக்கின்றேன்;
அதற்கு நீ துணை செய்ய வேணும் – என்கிறார்.

முயற்றி யாவது முயற்சி; அதனைச் சுமப்பதாவது மேற்கொள்ளுகை; ப்ரயத்னப்படுகை என்றபடி…
இயற்றுதல்- காரியம் நடத்துதல்.

நயப்புடைய= (நயப்பாவது – ஆசை.)
இந்த விசேஷணம் நாவிலும் அந்வயிக்கலாம்; கிளவியிலும் அந்வயிக்கலாம்.
எம்பெருமானைத் துதிக்க ஆசைக் கொண்ட நாக்கினால் கவனம் செய்யப்படுகிற என்றபடி,
கிளவியில் அந்வயிருக்கும் போது- அன்பு மிகுதியினாலுண்டாகிற சொற்கள் என்றதாம்.
நாவீன் என்றவிடத்து ஈனுதலாவது உண்டாக்குதல்.

தொடை கிளவியுள்- ***- பதாநாம் ஸௌப்ராத்ராதிநிமிஷநி ஷேல்யம் ச்ரவணயோ:” (ஸ்ரீகுணரத்நகோசம்) என்றபடி-
பதங்களுக்கு ஒன்றோடொன்று அமையும் சேர்த்தி அழகுக்குத் தொடை என்று பெயர்.
ஆகவே, சேர்த்தி யழகு பொருந்திய இனிய சொற்களிலே பகவத் குணங்களை அமைத்துப் பாடும்படி நெஞ்சே!
நீ அநுகூலிக்க வேணுமென்றதாயிற்று.
இப்பிரபந்தம் முழுவதும் வெண்பாவினாலமைந்தது.

————————————————————————–

(புகழ்வோம்.) “நற்பூவைப் பூவின்ற வண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்”
என்று கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானைத் துதித்துக் கவி பாடுவதாகத் தொடங்கின ஆழ்வார்
“இப்போது நாம் எடுத்துக் கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்;

எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்;
ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ?
எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ?
வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக் கடவோம்!
ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து,
மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது;
எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்?
சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!;

“கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக்காட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!
“பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?”
என்று பலரும் இழிவாக நினைக்க வன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி
அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

பதவுரை

எம் கண்–எங்களிடத்தில்
மால்–வ்யாமோஹகத்தை யுடைய
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான பெருமானே,
புகழ்வோம்–(ஒருவராலும் புகழ்ந்து முடிக்க வொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம்–(அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;
புகழோம்–(இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம்–உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
மதிப்போம்–உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம்–உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்;
மதியோம்–அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம்–அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்;
(ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது
இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.)
நீ சீறல்–நீ கோபங்கொள்ளலாகாது;
இவை–புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய்–மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.

நற் பூவீன்ற பூவை வண்ணன் புகழை –நயப்புடைய –பொதிவோம்
என்றார் கீழ்-

கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாக கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால்-
உன் தொல் புகழ் மாசூணாதோ –இந்த நீசன் புகழலாமா –

புகழ்வோம் பழிப்போம்
ஒருவராலும் புகழ்ந்து முடிக்க முடியாத உன்னை-அற்ப ஞானிகளான நாங்கள்
புகழ்வோம் ஆகில்-அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி அன்று ஆதலால்
உன்னை நாங்கள் பழித்தவர்கள் ஆக ஆகி விடுவோம் –
ஆசார ஹீனன் வசிஷ்டர் நல்ல ஆச்சார்ய சீலர் -என்னுமா போலே

புகழோம் பழியோம் –
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு புகழாது இருந்தோம் ஆகில்
உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம் –
மேல் அருளிய அர்த்தத்தையே ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

இகழ்வோம் மதிப்போம்-
மதிப்போம் இகழ்வோம்-உன்னை சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோம் ஆகில்
உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆகி விடுவோம் –

மதியோம் -இகழோம் –
அப்படி நெஞ்சால் நினையாது இருந்தோம் ஆகில்-அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்-
வாயால் புகழா விட்டாலும் நெஞ்சால் நினைப்பதும் இகழ்வாகும்

ஆக-இவற்றை அறிந்து இருந்தும் புகழாமலோ மதியாமலோ இருக்க மாட்டோம்
அப்படி புகழ்ந்தாலும் மதித்தாலும்

மற்று எங்கள் மால் செங்கண் மால்-சீறல் நீ தீ வினையோம் –
நீ கோபம் கொள்ளல் ஆகாது –

திரு நா வீறுடைய பிரானான ஆழ்வார் இப்படி அருளிச் செய்ததும்-ஆசை கொண்டு இருந்த எம்பெருமான்-
அந்த ஆசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழியும்படி
ஆழ்வார் நைச்ய அனுசந்தானம் பண்ணி -சொல்லவும் இன்றிக்கே நினைக்கவும் கூடாது -என்ன
உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்

கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்-அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –

ஆழ்வீர் நினைக்கவும் சொல்லவும் மாட்டீர் என்றீரே
ஏன் அழைக்கிறீர் போம் போம் என்று சீற்றம் தோன்ற திரு முகத்தை மாற வைக்க

அநந்ய கதியான என் மேலே சீறுவதே-என்ன
ஆழ்வீர் நீர் புகழவும் நினைக்கவும் மாட்டேன் என்று சொன்ன இதுக்கு சீறாமலும் இருக்க வேணுமோ -என்று-
எம்பெருமான் திரு உள்ளமாக

தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை –-என்கிறார்
புகழவும் நினைக்கவும் பார்த்தால் என் அந்தராத்மா சீறுகிறது-இல்லையேல் நீர் சீறுகிறீர்-
இந்த பாவத்துக்கு என்ன பண்ணுவேன்-யான் என் செய்வேன் என்கிறார்

எங்கள் மால் கண்டாய் இவை
இப்படி புகழ நினைப்பதும்-புகழாமல் பின் வாங்குவதும்-மகா பாபிகளான எங்களுடைய பிரமமே யாகும்-

புகழ்வோம் பழிப்போம் = திருமாலே! உன்னை நான் புகழ்ந்தேனாகில் பழித்தவனாவேன்;
என்னுடைய புகழ்ச்சி உனக்குப் பழிப்பேயாம் என்றபடி. ஆசார ஹீநனான ஒரு பயல் வஸிஷ்டனைப் பற்றிப் பேசத் தொடங்கி
‘வஸிஷ்ட முனிவர் நல்ல ஆசார சீலர்’ என்று புகழ்வதானது எப்படியோ,
அப்படியே யன்றோ குண ஹீகனான நீசனேன் குணக் கடலாகிய தேவரீரைப் புகழ்வதும்.

புகழோம் பழியோம் = நான் தேவரீரைப் புகழாதிருக்க பக்ஷத்தில் பழித்தவாக ஆக மாட்டேன்.
இவ்வர்த்தம் “புகழ்வோம் பழிப்போம்” என்றதிலேயே கிடைக்கக் கூடுமானாலும்
ஸுஸ்பஷ்டமாகச் சொல்ல விரும்பினரென்க.
உன் திருநாமத்தையே நான் எடுக்காதிருப்பின் யாதொரு பழிப்புமில்லை யென்றவாறு.

இகழ்வோம் மதிப்போம் = ‘மதிப்போ மிகழ்வோம்’ என மாற்றி அந்வயித்துக் கொள்வது.
இதன் கருத்தாவது- வாய் விட்டுப் புகழ்வதென்கிற விஷயம் அப்படி கிடக்கட்டும்;
தேவரீரை நாயினேன் நெஞ்சால் நினைப்பதாவது தகுதியோ என்று பார்த்தால், அதற்கும் யோக்யதை யில்லை;
நெஞ்சால் நினைப்பதுதானும் இகழ்ந்தவாறாகும் என்றபடி.

மதியோம் இகழோம் = உன்னை நான் நெஞ்சாலும் நினையாதிருக்கில் இகழ்ந்தவனாக ஆக மாட்டேனென்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதும், எம்பெருமான் திருவுள்ளஞ் சீறிக் கண் சிவந்து நின்றான்; ஏனென்னில்;
‘திருநாவீறுடைய பிரானாகிய இவ் வாழ்வார் ஏதோ பாசுரம் சொல்வதாகத் தொடங்கினாரே,
நல்லது, செவிக்கு இனிதாகக் கேட்போம்’ என்று மிக்க ஆசை கொண்டிருந்தான் எம்பெருமான்;

அந்த ஆசை *ஊமனார்கண்ட கனவிலும் பழுதா யொழியும்படி ஆழ்வார் அயோக்கியதா நுஸந்தாந்ம் பண்ணி,
‘நான் புகழத் தகாது, நெஞ்சால் நினைகக்வுந் தகாது’ என்று பேசவே
உண்ணுஞ் சோற்றை எதிர்பார்த்திருந்த பசியனுக்குச் சோறு தடுமாறிப் போனால் கண் சிவந்து கோபமுண்டாவது போல
எம்பெருமானுக்கும்
* செவிக்கினிய செஞ்சொல் கேட்டுக் களிக்கப் பாக்கியமில்லாமற் போகிறதே யென்று கோபம் மேலிட்டுக் கண்கள் சிவந்தன;
அந்த நிலைமையைக் கண்ட ஆழ்வார் “எங்கண்மால் செங்கண்மால்” என விளிக்கின்றார்
பிரானே! நீ எங்களிடத்து இயற்கையாகவே வ்யாமோஹ முடையவனல்லையோ;
இப்படி கண்கள் சிவக்கச் சீறலாமோ? என்ற கருத்து உள்ளுறை.

செங்கண்மால்! என்று ஆழ்வார் அழைத்தவாறே எம்பெருமான்
“ஒய்! என்னை எதுக்கு அழைக்கிறீர்?
என்னை நெஞ்சால் நினைத்தாலும் இகழ்ந்தாகும் என்று சொல்லிவிட்டீரே;
அப்படியிருக்க, என்னை நெஞ்சாலும் நினைத்து வாயாலும்
ஏன் அழைக்கிறீர்? போம் போம்” என்று சீற்றந் தோற்ற முகத்தை மாற வைத்தான்;
ஆழ்வார் அது கண்டு சீறல் நீ என்கிறார்;
நாயனே! அநந்ய கதியான என் மேலோ நீ சீறுவது; சீற வேண்டா என்கை.

“புகழ்வோம் பழிப்போம் புகழோம் இகழ்வோம் மதிப்போம்- மதியோ மிகழோம்” என்று வெகு அழகாக நீர் சொன்ன வார்த்தைக்கு
நான் சீறாமலுமிருக்க வேணுமோ? என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஸமாதானம் போல்
“தீவினையோம் எங்கண்மால் கண்டாயிவை” என்கிறார் இதன் கருத்து:-

தேவரீரைப் புகழ்வோமென்றால் என்னுடைய அந்தராத்மா சீறுகிறது;
புகழாதிருப்போமென்றால் தேவரீர் சீறுகிறது;
இந்தப் பாவத்திற்கு என்ன பண்ணுவேன்; இது பெரிய தீவினையாயிரா நின்றதே!

ஒரு விதத்தில் பார்த்தால் தேவரீரைப் புகழ நா எழும்பவில்லை;
ஒரு விதத்தில் பார்த்தால் புகழாதிருக்க முடியவில்லை;
ஆகையாலே, புகழ வேண்டியதாயுமிருக்கிறது; நாமோ புகழ்வதென்று பின்வாங்க வேண்டியதாயுமிருக்கிறது;
இது என்னுடைய ப்ராந்தி நிலைமை காணீர்* யான் என்ன செய்வேன் என்றாயின்று.
பின்னடிகளின் கருத்தை வேறு வகையாகவும் உரையிடலாம்.

————————————————————————–

(இவையன்றே நல்ல.) “சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-,
“ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதிதான்’ என்று கொண்டீரா?
அல்லது புகழத் தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்;

அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்;
எம்பெருமானே! இது யுத்தம், இது அயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமையில்லை;
அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுக்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை;

ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால்,
உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்றவேணுமிறே இந்த வீடு பற்றுக்கள் என்னால் செய்யப் போகாது.
(உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

பதவுரை

இறையவனே–எம்பெருமானே!
இவை அன்றே நல்ல–உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது;
இவை அன்றே தீய–உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது;
இவை இவை என்று அறிவனேலும்–(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம்–புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம்
என்னால்–என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது–பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என்–(சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது?

சீறல் நீ -என்று பிரார்த்த ஆழ்வார் இடம்-
அது கிடக்கட்டும் -நீர் என்ன தீர்மானம் செய்து உள்ளீர் என்ன –
இவை அன்றே நல்ல

உன்னை புகழாமையும் சிந்திப்பாமையும் -இவை -அன்றோ நல்லது –

இவை அன்றே தீய –
உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதும் -இவை -அன்றோ கெட்டது –

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இவை என்று அறிவேனேலும்-
ஆகவே இப்பது இப்படிப் பட்டது என்று உண்மையாக-நான் தெரிந்து கொண்டு இருந்தேன் ஆகிலும்

இவை எல்லாம் –
புகழாமையும் மதியாமையும் -புகழ்தலும் மதித்தாலும் -ஆகிய
ஆகிற இவை எல்லாம் –

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா –
என்னாலே-பற்றவும் முடியாது-விடவும் முடியாதே –
அடைப்பு -பரிஹரித்தல் / நீக்கல் -பரித்யஜித்தல்

இறையவனே என்னால் செயற்பாலது என் –
சபலனான என்னால் செய்யக் கூடியது-என்ன இருக்கிறது –
என்னுடைய எண்ணம் ஒன்றும் பலிக்கிறது இல்லை –

என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி-தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன
என் வாய் முதல் அப்பன்
-என்றபடி-
என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ —
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-

என்னால் செயற்பாலது என்? = என்னுடைய இஷ்டப்படி காரியம் நிறைவேறுமாகில் உன்னைப் புகழாமலிருந்து விடுவேன்;
அதில் தடையில்லை; *“என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி, தூ முதல் பத்தர்க்குத்தான் தன்னைச் சொன்ன
என்வாய் முதலப்பன்” (திருவாய்மொழி 7-9-3) என்றபடி என்னுடைய வாக்குக்களுக்கு ப்ரவர்த்தகன் நீ யாகையாலே,
அது புகழ்வதோ இகழ்வதோ உன் காரியமே யொழிய என்னுடைய காரியமாக யாதொன்று மில்லை காண் என்றவாறு.

இனி, “என்னால் செயற்பாலதென்” என்பதற்கு –
எனது அன்பு செய்கிறதே யொழிய நான் செய்வதொன்றுமில்லை என்பதாகவும் உரைக்கலாம்.

நல்ல, தீய- பலவின்பால் குறிப்பு வினை முற்று.
அடைப்பு நீங்கொண்ணாது = அடைப்பாவது பரிக்ரஹித்தல்; நீங்காவது பரித்யஜித்தல்-
பரிக்ரஹி தக்கதான புகழாமையைப் பரிக்ரஹிக்கவும், பரித்யஜிக்கத் தக்கதான புகழ்வதைப் பரித்யஜிக்கவும் என்னாலாகாது என்றபடி,
ஏன் உம்மாலாகாது? என்னில்; அதற்கு சமாதானம் என்னால் செயற்பாலதென்? என்பதாம் –

————————————————————————–

(என்னில் மிகு புகழார்.) முதற் பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி,
இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின் வாங்கி,
மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார்.

அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின் வாங்க நினைத்தாலுங்கூட
ஏதேனுமொருபடியாலே
அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே!
ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மைவிட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்?
எம்பெருமானுடைய சில திருக்குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்ல காலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில்.

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

பதவுரை

என்ன–என்னுடையவனான
கரும் சோதி கண்ணன்–கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல் புரையும் சீலன்–கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சோதிக்கு–மிகப் பெரிய சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று–என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால்
என்னில்–என்னைவிட
மிகு புகழார் யாவரே–மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பின்னையும் எண்ணில்–இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால்–மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை.

“என்னில் மிகு புகழார் யாவரே” என்பதில் சொல்லுகிற அர்த்தமே
“பின்னையும் மற்றெண்ணில் மிகு புகழேன்யானல்லால்” என்பதிலும்
கிடந்தாலும் ஸந்தோஷாதிசயத்திலே இரட்டித்துச் சொல்லுகிறபடி “
இல்லையெனக்கெதி ரில்லைனெக்கெதி ரில்லையெனக்கெதிரே” என்பது போல.
இவ்விடத்தில் இவர் நினைக்கிற புகழாவது- பாக்யசாலி என்கிற கீர்த்தியாம்.
ஆகவே. என்னைவிட பாக்யசாலி வேறு யார்? என்றதாயிற்று.

‘உமக்கிப்போது என்ன பாக்கியம் வந்து விட்டது?’ என்ன, பின்னடிகளில் அந்தப் பாக்கியத்தை விவரிக்கிறார்;- என்ன
கருஞ்சோதிக்கண்ணன் கடல்புரையுஞ் சீலப் பெருஞ்சோதிக்கு என்னெஞ்சு ஆளாகப் பெற்றதனால்
“என்னில் மிகு புகழார் யாவரே?” என்ன வேண்டியதாயிற்று என்கிறார்.

என்ன என்றது- என்னுடைய என்றபடி
தன்னுடைய வடிவை எனக்கு அநுபவிக்கக் கொடுத்தருளின கண்ணபிரான் என்கை.
கடல் புரையும் சீலன் என்றது கடல் போன்ற கம்பீர ஸ்வபாவமுடையனென்றபடி.
சீலம் என்ற வடசொல் – ஸ்வபாவமென்றும் நல்லொழுக்கமென்றும் பொருள்படும்.
“சீலப்பெருஞ் சோதிக்கு” என்றவிடத்து சீலன் என்று பிரியும்;
“சில விகாரமாமுயர்திணை” என்பது நன்னூல்.
ஆள் பெற்று என்றது – ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி.
எம் பெருமானை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்ற கொண்டிருந்த கொள்கை நீங்கி
அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப் பெற்றதனால் நான் மஹாபாக்ய சாலியானேன் என்றாயிற்று.

இதென்ன விசித்திரம்; எம்பெருமானை நீசனேன் நெஞ்சால் நினைப்பதும் கெடுதல் என்று சில ஸமயங்களில் சொல்லுகிறார்;
மற்றுஞ் சில ஸமயங்களிலோ ‘அவனை நினைப்பது மஹா பாக்யம்’ என்கிறார்;
இவ் விரண்டு வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர வில்லையே;
‘நினைத்தல் கூடும்’ என்பது ஸித்தாந்தமா? ‘கூடாது’ என்பது ஸித்தாந்தமா? என்று சிலர் சங்கிக்கக் கூடும்.
இரண்டும் ஸித்தாந்தமே யென்று கொள்ளக் கடவது. இப்படியுமுண்டோ? என்னில்; கேண்மின்;

“நீ சனேன் நிறையொன்றுமிலோன்” என்னும்படியான தம்முடைய தாழ்வு நினைவுக்கு வந்துவிட்டால்,
அப்போது, ‘நாயிலுங்கடை கெட்ட நாமோ பரம் பொருளை நினைப்பதற்கும் புகழ்வதற்கும் தகுதி யுடையோம்?
இதில் ப்ரவர்த்திக்க நமக்கு என்ன யோக்யதை?’ என்று பின் வாங்க வேண்டியதாகிறது. இதுவும் தகுதியே.

எம்பெருமானடைய வடிவழகும் போக்யதையும் நோக்கப்படுமிடத்து நெஞ்சையும் வாயையும் கட்டி வைத்திருக்க முடிகிறதில்லை;
பர வசமாகவே ப்ரவ்ருத்தி உண்டாய் விடுகிறது. அந்த ஆநந்தத்தினால் தலைதடுமாறாகக் கூத்தாடிக் கொண்ட
“என்னில் மிகு புகழார் யாவரே” என்றும்
“யானே தவஞ் செய்தேன்” என்றும்
“எனக் காரும் நிகரில்லையே” என்றம் பலவாறு பேச வேண்டியதாகிறது. இதுவும் தகுதியே.
ஆகையால் இரண்டுக்குங் குறையில்லையென்க.

ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும்,
பண்ணின பிறகு அநுதாபங் காட்டுதலுமாகிற இரண்டும் அவிருத்தமென்று கொள்வது போல இதனையுங் கொள்க.

என்ன கருஞ்சோதிக் கண்ணன் -என்னுடைய வனான  கறுத்த நிறத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணனும்-
கடல் புரையும் சீல -கடல் போன்ற கம்பீர ஸ்வபாவம் உடையவனும் –
தன்னுடைய வடிவை ஆழ்வாருக்கு அனுபவிக்கக் கொடுத்தவனும் –

————————————————————————–

(பெற்ற தாய் நீயே) எம்பெருமானை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் நான் யோக்யதை யற்றவன் என்று
பின் வாங்கப் பார்த்த அடியேனை அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய்தருளிற்றே;
இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு?
தாயும் தகப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரர்களை யாவரும் அடியேனுக்கு தேவரீரேயாயிற்று! என்று
எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5

பதவுரை

மாய–மாயவனே!
அம்மா–ஸ்வாமியே!
பேசில்–உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே–பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ–உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ–மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய–மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை–(அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ–அமுது செய்த நீ
காட்டும் நெறி–எனக்குக் காட்டின வழிகள்
எற்றே ஓ–என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.)

பெற்ற தாய் நீயே –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

பிறப்பித்த தந்தை நீ –
உண்டாக்கின பிதாவை போலே-ஹிதமானதையே செய்பவனும் நீயே –

மற்றையார் யாவாரும் நீ –
ஆத்மாவுக்கு நன்மைகள் செய்து-விலஷண ஜென்மத்தைக் கொடுக்கிற
மற்றும் ஆசார்யரும் நீயே
உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்

பேசில்
உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்

எற்றேயோ –
எற்றே ஒ -எனக்கு ஆச்சர்யமானவை-என்று உருகுகிறார் –

மாய –
மாயவனே –

மா மாய வளை மாய-
மகத்தான வஞ்சனை உடைய வளான-பூதனையை முடிப்பதற்காக

முலை –
அவளது விஷம் தடவின முலையை –

வாய் வைத்த நீ-
அமுது செய்த நீ –

யம்மா –
ஸ்வாமியே –
அந்த ஆச்சர்ய செயல் போலே-
அடியேனுடைய நைச்ச்ய பாவம் மாற்றி
புகழ வைத்து அருளினாயே-
உன் பக்கலிலே அவஹாகிக்கும் படி வழி காட்டிற்றே

காட்டும் நெறி –
எனக்குக் காட்டின வழிகள்-

பேசில் – நீ பண்ணின உபகாரத்தை வாய்விட்டுப் பேசத் தொடங்கினால், நீயே பெற்ற தாய், நீயே பிறப்பித்த தந்தை;
நீயே மற்றையாராவரும்- வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறுகிற தாயும், பிறப்பிக்குமவனான தகப்பனும்,
ஆத்மாவுக்கு உற்ற நன்மைகளைச் செய்து விலக்ஷண ஜன்மத்தைக் கொடுக்கிற ஆசார்யனும் ஆகிய
ப்ரஸித்தர்களான உபகாரர்கள் மூவரும் அடியேனுக்கு தேவரீர் தாம்.
அயோக்யனென்று பின் வாங்கி தேவரீரை அடியேன் போய் விடும்; அது போகாதபடி காப்பாற்றி யருளின உபகாரகர் தேவரீரே யாதலால்,
ஸத்தைக்கு ஹேது பூதர்களான தாய் தந்தை ஆசாரியர்கள் மூவரும் தேவரீரோயாயிற்றன்றோ என்கை.

மூன்றாமடியின் முதலிலுள்ள மாய என்பது ஸம்போதநம் (விளி);
உன்னுடைய ஆச்சரிய சேஷ்டிதத்தை என்ன சொல்லுவேனப்பா! என்று கருத்து.
“புகழ்வோம் பழிப்போம்” என்ற கொண்டிருந்த எண்ணத்தைத் தவிர்த்து
“என்னில் மிகு புகழார் யாவரே” என்னும்படி பண்ணினவிது என்ன ஆச்சரியம்! என்கிறார் போலும்.

மாமாயவளை மாய முலைவாய்வைத்த என்று பூதனையின் முலையைச் சுவைத்த வ்ருத்தாந்தத்தை எடுத்துக் காட்டியது-
பிள்ளையாயிருந்து முலை யுண்சிற பாவனையிலே அப் பூதனையின் உயிரை முடித்தது எப்படி ஆச்சரியமோ
அப்படியே காண் இதுவும் ஒரு ஆச்சரியம் என்றபடி.
உன்னைக் கொல்வதாக வந்த அவளை நீ கொன்று
உலகுக்கு ஒருயிரான உன்னை ரக்ஷித்தத் தந்த உபகாரம் போலே இதுவும் ஒரு உபகாரங்காண் என்றதாகவுமாம்.

மாயவள் மாய முலைவாய்வைத்த வரலாறு:- கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய்
அக் கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்கிறானென்பதை யறிந்து
அக் குழந்தையை நாடி யுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அஸூ ரர்களை ஏவுகிற கிரமத்திலே அவர்களில் ஒருத்தியான
பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த
கண்ணனாகிய குõந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல,
பகவானாக குழந்தை அவ் வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துக் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

நீ காட்டும் நெறி எற்றேயோ? = அயோக்கிதாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கப் பார்த்த வென்னை வசப்படுத்தி
உன் பக்கலிலேயே அவகாஹிக்கும்படி ஒரு வழி காட்டிற்றே! இஃது என்ன ஆச்சரியம்! என்கை.
எற்றே என்பது அதிசய இரக்கச் சொல்;
எற்று – எத் தன்மையது!

————————————————————————–

(நெறி காட்டி.) ‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ் வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்த விட்டுக் கொண்டோம்;
இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்;
அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்;
நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய
ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்பதாகத் தெரிந்துகொண்ட
ஆழ்வார் அப்பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; –

பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுக க்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு;
எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக் கூடும்.
சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்;
சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலி கட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய்.
இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய்.

இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திரு வுள்ளம் பற்றியிருப்பது எது?
ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

பதவுரை

கண்ணனே–எம்பெருமானே!
நெறி காட்டி நின்பால் நீக்குதியோ–கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது)
கரு மா முறி மேனி காட்டுதியோ–கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள்–அநாதி காலமாக
அறியோமை–அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய்–என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய்–தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
என் செய்தால்–நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம்–யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

எம்பெருமான் இடம்-ஸ்வா தந்த்ர்யமும்-நிர்ஹேதுக கிருபா குணம்-இரண்டுமே உண்டே
நெறி காட்டி-நின்பால்- நீக்குதியோ –
கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி
என்னை கை விடப் பார்க்கிறாயோ —
நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு -உன்னை ஒழிய
வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ -அல்லது –

கரு மா முறி மேனி காட்டுதியோ –
கறுத்த மா மரத்தின் தளிர் போன்ற உனது திரு மேனியை-சேவை சாதிப்பித்து
அனுக்ரஹிக்க நினைக்கிறாயோ –
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ச்ருதேன
யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-
அனுக்ரஹிக்க திரு உள்ளம் பற்றி இருப்பவர்க்கு பூரணமாக காட்டி அருளுவான்

முறி -என்று தளிர்க்குப் பெயர் -முறிக்கப் படுவது முறி
மா முறி -மாந்தளிர் -அது போல் ஸூகுமாரமாயும்
கரு -ச்யாமளமாயும்-இருக்கிற திருமேனியைக் கட்டி அருளுவாயோ –

மேனாள் –
மேல் நாள் -அநாதி காலமாக –

அறியோமை –
அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-
அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

என் செய்வான் எண்ணினாய்
என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறாய்

கண்ணனே ஈதுரையாய் –
தேவரீர் உடைய திரு உள்ளம் இன்னது-என்பதை அருளிச் செய்ய வேண்டும் –

என் செய்தால்–
நீ எமக்கு எந்த நன்மை செய்தாலும் –

என்படோம் யாம் –
1-யாம் எந்த அனர்த்தத்தைத் தான்-அனுபவிக்க மாட்டோம் -நீ எது செய்தாலும் அதன் படி உடன்படத் தக்கவன் அடியேன் –
அன்றிக்கே
2-நன்மை செய்தாலும் யானையை குளிப்பாட்டி-உடனே அது அழுக்கை தலையிலே போட்டுக் கொள்வது போலே-
நீ செய்து அருளும் நன்மையையும் ஏற்றுக் கொண்டு
தீமையையும் ஏறிட்டுக் கொள்வேன் -என்றுமாம் –

நெறிகாட்டி நீக்குதியோ நின்பால்? =நெறி யென்றால் வழி; வழியாவது உபாயம்;
பகவத் கீதையில் சரம ச்லோகத்துக்குக் கீழே விஸ்தாரமாகச் சொல்லப் பட்டுள்ள கர்ம ஜ்ஞாநாதி ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது.
எம்பெருமான் யாரை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானோ அவர்களை நோக்கி “நீங்கள் எவ்விதமான அலைச்சலும் படவேண்டா;
என்னையே தஞ்சமாக உறுதி கொண்டு மார்விலே கை வைத்து உறங்குங்கள்” என்பன்;
எவர்களைக் கைவிட நினைக்கிறானோ அவர்களுக்கு அருந்தொழில்களை அளவில்லாதபடி விதித்து
‘இவற்றைச் சரியாகச் செய்து பேறு பெறுங்கள்’ என்பன். ஆகையாலே நெறிகாட்டுகை யென்பதும் நீக்குகை யென்பதும் பர்யாயம்.

நெறியைக் காட்டுகையாவது – ‘இது கார்மயோம், இது ஜ்ஞாநயோகம். இது பக்தி யோகம்; இவற்றுள் எது உமக்கு ஸாத்யமோ
அதனை அநுஷ்டிக்கக் கடவீர்’ என்று சொல்லி, தான் உதாவஸீகனாய் விடுகை.
நெறிகாட்டி நின்பால் நீக்குதியோ? = உன்னை யொழிய றேறொருபாயத்தைக் காட்டி உன் பக்கலில் நின்றும் என்னை
அகற்றப் பார்க்கிறாயோ என்றவாறு.

நள மகாராஜன் தமயந்தியை உடுத்த புடவையிலே ஒரு தலையையறுத்து ‘இது விதர்ப்பதேசம் போகிற வழி.
இது கோஸலதேசம் போகிற வழி; எந்த வழியில் வேணுமானாலும் போய்க்கொள்; என்று
சொல்லிவிட்டு அகன்ற கதையை இங்கு நினைப்பது.

கருமா முறி மேனி காட்டுதியோ?= நிர்ஹேதுக விஷயீ காரத்திற்கு அடியேனை ஆளாக்கப் பார்க்கிறதோ என்கை.
நாயமாத்யா ப்ரவசநேய ஸப்யோ ந மேதயா ந பஹுநா ச்ருதேந. யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய;
தஸ்யைஷ ஆத்ம விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டிருக்கிறபடி-
எவனை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானே அவனுக்குத் தனது திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பரிபூர்ணாநுபவ விஷயமாகக்
காட்டிக் கொடுக்கக் கடவனாகையாலே, மேனி காட்டுதியோ யென்கிறார்.
முறியென்று தளிர்க்குப் பெயர்; முறிக்கப்படுவது முறியென்று காரணப்பெயர். மாமுறி-மாந்தளிர்;
அதுபோல் ஸுகுமாரமாயும், கரு- ச்யாமளமாயுமிருக்கிற திருமேனியைக் காட்டி யருள நினைக்கிறாயோ?

கண்ணனே! மேனாள் அறியோமை என்செய்வா னெண்ணினாய்?=
அநாதி காலமாக அவிவேகியாய்க்கிடக்கிற அடியேன் திறத்தில்
எது செய்ய நினைத்திருக்கிறது? நிக்ரஹமோ? அல்லது அநுக்ரஹமோ? சொல்ல வேணும்.
மேனாளறியோமை என்றதன் கருத்து யாதெனில்;
ஒன்றிலும் அறிவில்லாத அடியேனுக்கு உபாயாந்தரங்களை விதித்தால் என்ன செய்ய முடியும்?
தேவரீருடைய நிர்ஹேதுக க்ருபைக்கு அஜ்ஞரும் அசக்தருமன்றோ இலக்கு;
ஞானமுள்ளவர்களும் சக்தியுள்ளவர்களும் தங்களுடைய ஞான சக்திகளைக் கொண்டு கரையேறி விடக் கூடும்;
அறிவில்லாதவர்களும் அசக்தர்களுமே தேவரீருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்குப் பாத்திராமகக் கூடியவர்களாதலால்
அஜ்ஞனான அடியேன் நெறிகாட்டி நீக்குவதற்கு உரியவனல்லேன்;
கருமாமுறிமேனி காட்டுவதற்கே உரியேன்- என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் படும்படி சொல்கிறாரென்க.

என்செய்தாலென்படோம் யாம்- இதற்கு இரண்டு வகை பாகப் பொருள் கொள்ள இடமுண்டு;
நீ ஸ்வாதந்திரியத்தைக்காட்டி அகற்றப் பார்த்தாலும் ஸரி; அநுக்ரஹித்துத் திருமேனியை ஸேவை ஸாதிப்பித்தாலும் ஸரி;
திருவுள்ளமானபடி எனது செய்தாலும் அதன்படி அடியேன் உடன் படத்தக்கவனே யொழிய
வேறு என்ன தடை செய்யப்போகிறேன்- என்கிறார் என்னலாம்.

அன்றி,
நீ என்ன நன்மை செய்தாலும் அதைத் தாங்கிக்கொள்ள என்னால் முடியப்போகிறதோ?
யானையைக் குளிப்பாட்டி வைத்தாலும் நொடிப் பொழுதில் தும்பு தூசிகளையே வாரி மேற்கொள்ளுமாபோகே,
நீ செய்யும் நன்மையையும் கெடுத்துக் கொண்டு தீமையையே ஏறிட்டுக் கொண்டவனாவேன்- என்கிறார் என்னவுமாம்.

————————————————————————–

(யாமே அருவினையோம்.) “கருமா முறிமேனி காட்டுதியோ?” என்றாரே கீழ்ப் பாட்டில்.
ஆழ்வீர்! இதோ என்னுடைய கருமாமுறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப் போகிறானென்றும்
திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல் கொண்டிருந்தார்;
நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

பதவுரை

பூ மேய–தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற
செம் மாதை–*ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து–உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
பார் இடந்த–(பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா–ஸ்வாமீ!
நின் பாதத்து அருகு–தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே–என்னுடைய நெஞ்சதானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார்–அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது;
அரு வினையோம்–போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள
யாமே–நாங்கள் மாத்திரம்
சேயோம்–தூரத்திலிருக்கிறோம்.

யாமே அருவினையோம் –
போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள-நாங்கள் மாத்திரமே –
நெஞ்சுக்கு மட்டும் சேவை-கட் கண்ணால் காண வில்லை
கைகளால் அணைத்து களிக்கும் படியாகவும் சேவை சாதிக்கப் பெற வில்லை –

பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த அம்மா –
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின் பாதத் தருகு -சார்ந்து ஒழிந்தார் –
அருவினையோம் யாமே சேயோம் -என்று அந்வயம்

என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல்
தான் மாதரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –

நல்ல பேறு  பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –

நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார்-
உயர் திணை-திருவடிகளில் அழுந்தி ஆழம் கால் பட்டதால்-உயர்த்தி அருளிச் செய்ய வேண்டுமே
அணுக்கர் -அந்தரங்கர் -சமீபத்தில் உள்ளவர் –சேயோம் -தூரத்தில் இருக்கிறோம் –

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
பூ மேய –தாமரைப் பூவிலே பொருந்தி இருக்கிற –செம் மாதை
ஹிரண்ய வர்ணனையான-பிராட்டியை —நின் மார்வில் சேர்வித்து –
உனது திரு மார்பிலே சேர்த்து கொண்டவனாயும் -கடல் கடைந்து பெண்ணமுதம் கொண்டானே-
பாரிடந்த –
பிரளயத்தில் அழுந்திக் கிடந்த பூமியைக்-குத்தி எடுத்தவனுமாய்-இருக்கிற -வராஹாவதார அனுபவம் –
அம்மா –
ஸ்வாமி-நின் பாதத்தருகு –தேவரீர் உடைய திருவடிகளின்-சமீபத்திலே –

“பூமேய செம்மாதை நின்மார்வில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா!,
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின்பாதத்தருகு சார்ந்தொழிந்தார்; அருவினையோம் யாமே சேயோம்” என்று அந்வயம்.

முதலிலேயே நான் எனது நெஞ்சைக் கூவி “முயற்சி சுமந்தெழுந்து முந்துற்று நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
என்னோடு சேர்ந்து நீ காரியத்தை நடத்து என்று சொல்லி வைத்திருந்தும் என் சொல்லை லக்ஷியம் பண்ணாத
அந்த நெஞ்சானது என்னை நெடுந்தூரத்திலே தனிப்பட விட்டுவிட்டுத் தான் மாத்திரம் எம்பெருமானுடைய திருவடிகளுக்கு
அந்தரங்கமாக அணுகி அங்கேயே லயித்து விட்டது; அது நல்ல பேறு பெற்று விட்டது;
நான்தான் இப்படி தூரஸ்தனாய் வருந்திக் கிடக்கிறேன்; நான் பண்ணின பாவமிது! என்கிறார்.
ஆழ்வார் நம்மைப் போலே இவ்விருள் தருமா ஞாலத்திலே ஸம்ஸாரிகளுடைய மத்தியில் இருந்தாலும்
அவருடைய திருவுள்ளம் மாத்திரம் பகவத் பாதாரவிந்தத்திலேயே அழுந்தி யிருக்குமென்பது இதனால் அறியத்தக்கது.

சேயோம் = சேய்மை என்னும் பண்படியாப் பிறந்த தன்மைப் பன்மை வினைமுற்று = சேய்மையாவது தூரம்;
தூரத்திலுள்ளவன் சேயோன்; சேயோம் என்றது- தூரத்திலிருக்கிறோம் என்றபடி
“என்னெஞ்சு சார்ந்தொழிந்தது” என்ன வேண்டியிருக்க, நெஞ்சினார் என்றும் சார்ந்தொழிந்தார் என்றும் உயர் திணையாகக் கூறியது-
எம்பெருமானிடத்துத் தமக்குள்ள கௌரவத்தினால் அவனிடத்து ஆழங்காற்பட்ட மனத்தை உயர்த்திக் கூறவேணுமென்ற கருத்தினாலாம்.
அணுக்கர்- அந்தரங்கர். ஸமீபத்திலுள்ளவர்.

“பூமேயே செம்மாதை நின்மார்வில் சேர்வித்து” என்ற விடத்துக் கடல் கடைந்த வரலாற்றையும்,
“பாரிடந்த” என்றவிடத்து வராஹ அவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்திப்பது..

—————————————————————-

(அருகுஞ்சுவடும்.) எம்பெருமான் நெஞ்சுக்கு மாத்திரம் விஷயமானானே யன்றி,
கண்களால் காணவாவது கைகளாவணைக்கலாவது
விஷயமாகவில்லை என்றார் கீழ்ப் பாட்டில்.
அப்படி கண்ணால் காணப் பெறாதிருக்கச் செய்தேயும்,
கண்ணால் கண்ட விஷயங்களிற்போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்?
சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறார்.

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பதவுரை

பருகலாம் பண்பு உடையீர்–வாய்மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக்குணங்களையுடையவரே!
பார் அளந்தீர்–(த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமனந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்–பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!
நும்மை–உம்மை
அருகும்–கிட்டுவதையும்
சுவடும்–சிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம்–(நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே–உம் விஷயத்திலேயே
அன்புமிக பெருமை–(எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என்–இதற்கு என்ன காரணம்?
பேசீர்–நீர்தாம் சொல்லவேணும்.

“பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்!
நும்மை அருகும் சுவடும் தெரிவுணரோம்;
(அப்படியிருந்தும்) நுமக்கே அன்பு மிகப் பெருகும்; இது என்? பேசிர்” என்றுஅந்வயம்.

அருகும்-கிட்டுவதையும் / சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் -/ தெரி யுணரோம்-
நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை -அப்படி இருக்கச் செய்தேயும் –
நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக-
உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —
பருகலாம் பண்புடையீர்-
வாய் மடுத்து பானம் பண்ணுவதற்கு உரிய
திருக் கல்யாண குணங்களை உடையவரே -பொதுவாக சொன்னாலும் சௌசீல்யம் குணத்தில் நோக்கு–
சாரங்கன் தொல் சீரை ஓவாத உணவாக ஊண்-
என்று மேலே
அருளிச் செய்கிறபடியால்-பகவத் குணங்களை உணவாக கொள்கிறவர் –
அப்படிக் காட்டி அருளின இடம் மேலே அருளுகிறார் –

பாரளந்த்தீர்-திரு விக்ரமனாய் பூமி எல்லாம் அளந்து அருளினவரே –
பாவியேம் கண் காண்பரிய
-பாவிகளான எங்களுடைய கண்களாலே-காண முடியாத வைலஷண்யத்தை உடையவரே –
கருதரிய உயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம்
-என்றபடி-
நீ எங்கும் நிறைந்து இருந்தாலும் அருகில் இருப்பதாக தெரிந்து -கொள்ள வில்லை –
நீ அருகில் வந்து சேவை சாதிக்க வில்லை -என்றபடி –

இப்போது அறிந்து கொள்ள வில்லை என்றாலும் மேலும் அறிந்து கொள்ள வழி உண்டோ என்னில்-
சுவடும் தெரிந்து யுணரோம்-சேவை கிடைக்கும் என்கிற அடையாளமும் இல்லையே
அடியேன் இடம் யோக்யதையும் இல்லை என்னவுமாம்-சுவடு -யோக்யதை

நுண்புடையீர்-பிராட்டி 12 ஆண்டு காலம் இருந்து அனுபவித்தால் போலே
ஆயினும் அன்பு மாத்ரம் வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறதே-
இது என் பேசீர் -இதுக்கு என்ன காரணம்-நீர் தான் சொல்ல வேணும் –

பருகலாம் பண்புடையீர் = பண்பு என்று பொதுவாகக் குணத்தைச் சொல்லுகிறது;
இவ்விடத்தில், ஸௌசீல்யம் ஸௌலப்யம் என்கிற குணங்களின் நோக்கு.
“கணைநாணில் ஓவாத்தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே!, ஓவாத ஊணாக வுண்” என்று மேலே அருளிச் செய்கிறபடி
பகவத் குணங்களை உணவாகக் கொள்ளுகிறவராதலால் பருகலாம் பண்புடையீர் என்கிறார்.

அப்படிப்பட்ட பண்பு உலகளந்த சரிதையில் விளங்கிற்றென்பார் போல அடுத்தபடியாகப் பாரளந்தீர் என்கிறார்.
(பாவியேம் இத்யாதி.) பாவிகளான என் போன்ற ஸம்ஸாரிகளுடைய கட்புலனுக்கு இலக்காகாத வைலக்ஷண்யத்தை யுடையவரே! என்றபடி.
நம்மை அருகும் தெரிவுணரோம், சுவடும் தெரிவுணரோம் =
“கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனிநாயகம்” (திருவரங்க்க கலம்பகம் 1) என்றபடி
நீ எங்கணும் நிறைந்திருந்தாலும் அருகில் இருப்பதாக உன்னை நான் தெரிந்து கொள்ளவில்லை;
(நீ எனக்கு ஸமீபத்தில் வந்து ஸேவை ஸாதிக்கவில்லையென்றபடி.)

இப்போது அப்படி தெரிந்து கொள்ளாவிட்டாலும்,
இனி என்றேனு மொருநாள் தெரிந்துகொள்ள வழியுண்டோ என்னில்;
சுவடுந் தெரிவுணரோம் = சுவடாவது அடையாளம்; உன்னுடைய ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைப்பதற்குரிய
அடையாளமு மொன்றும் கண்டிலேன். என்னிடத்தில் ஏதாவது யோக்யதையிருந்தால் அந்த யோக்யதை நிமித்தமாக
உன் ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைக்க வழியுண்டு; அப்படிப்பட்ட யோக்யதை ஒன்றும் என் பக்கம் இல்லாமையாலே
அந்த நினைவுக்கு ப்ரஸக்தியில்லை யென்கை. சுவடு என்பதற்கு போக்யதை என்கிற பொருளுங்கொள்ளலாம்.

திருவயோத்தியில் பிராட்டி இராமபிரனோடு பன்னிரண்டாண்டு கலந்திருந்து அவனுடைய ராஸிக்யத்தை அறிந்தாற்போலே
நான் உன்னோடு கலந்தவனுமல்லேன், உனது ராஸிக்யத்தை அறிந்தவனுமல்லேன்;
ஆயினும், அன்பு மாத்திரம் எனக்கு உன் மீதே வளர்ந்து செல்லுகின்றதே!
இதற்கு என்ன காரணம்? சொல்ல வேணும்- என்கிறாராகவுமாம்.

ஆச்சார்யஹிருதயத்தில் -10 சூர்ணிகை-அருகும் சுவடும் -மா முனிகள் வியாக்யானம்-
உம்முடைய அருகு வருதல்-உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க
உம்மளவிலே ச்நேஹமானது அறமிக்கு வாரா நின்றது –
இதுக்கு அடி அருளிச் செய்ய வேணும் -என்று இந்த பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்

பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று
நஞ்சீயர்-பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-நும்மை அருகும் சுவடும் –
நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

————————————————————————–

(நுமக்கடியோம்.) எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே
அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்பு வஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார்
‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று
பலகாலும் சொல்லுவதில் என்ன ப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம் பண்ணுகிறதில்லை;
ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்தி விட வேண்டியது- எனக் கருதி
அக்கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார்.

அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்;
க்ஷண காலமும் இப்படி யிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி
‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்:
திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில்.

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
(மாலார்) அவர் தாம்–எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால்–நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது
நொந்து உரைத்து என்–வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி–இன்று முதலாக
எமக்கு ஆதானும் ஆகிடு காண்–நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு–அவ்வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று–“நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே–அப்பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு–எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக.

அந்த எம்பெருமான் நம்மை அனுக்ரஹித்தாலும் அனுக்ரஹிக்கா விடிலும் போகட்டும்
திரு உள்ளம்,ஆன படி செய்யட்டும்-நெஞ்சே-நீ  மாத்ரம் அவர் திறத்தில் செய்திடுக
மாலார் அவர் தாம்-எம்பெருமான் ஆகிற அப் பெரியவர் தாம்  /-சார்வரியரானால்-
நமக்கு கிட்ட முடியாதவராய் இருக்கும் பொழுது-ஆர்த்தி உடன் கத்தினாலும் சேவை சாதிக்காமல் இருப்பவன்

மாலார் தமக்கு –-அவ் வெம்பெருமானை நோககி –
ஆஸ்ரிதர் பேரில் வ்யாமோஹமே வடி எடுத்தவர்-என்று பேர் மாத்ரமே கொண்டவர் / 
நுமக்கு அடியோம் என்று என்று-
நாங்கள் உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று பல தடவை -/ நொந்து உரைத்தென்
வாய் நோவச் சொல்வதில் என்ன பலன்-/ இனி-இன்று முதலாக

எமக்கினியாதானும் ஆகிடு-நமக்கு எது வேணுமாகிலும் நடக்கட்டும் / அவர் திறத்தே
அப் பெருமான் விஷயமாகவே /யாதானும் சிந்தித்து இரு-எதையாவது
நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என் -என்றபடி-
அவர் நெறி காட்டி நீக்கினாலும் நீக்கட்டும்-

கரு மா முறி மேனி காட்டினாலும் காட்டட்டும் நீ அவர் விஷயமாக ஏதாவது சிந்தித்து இரு

பேறும் இழவும் இரண்டும் ஒக்க எண்ணி இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன-
அவனே வேண்டும் என்றது அவனுடைய அனுக்ரஹம் வேண்டும் என்றபடி-
சத்தைக்கு இது எல்லாம் வேண்டா காண்-
அவன் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும்-
நம்முடைய சத்தைக்கு அவன் சத்தை இறே காரணம்-

அவனுடைய அனுக்ரஹம் போலே நிக்ரஹமும் நமக்கு அனுசந்தேயமே
நம்மைப் பற்றி எம்பெருமான் திரு உள்ளத்தில் பட்டிருக்க வேண்டும் -அதுவே அபேஷிதம்-
கூவிக் கூவி நெஞ்சுருகி கண் பனி சோர நின்றால் பாவி நீ என்று என்று சொல்லாய் பாவியேன்
காண வந்தே
-திருவாய்மொழி -4-7-3-
விருப்போ வெருப்போ கண் முன்னே வந்து தோற்றி அருளிச் செய்ய வேணும் என்பதே அருளிச் செய்கிறார்-

ஆண்டாளும்-செம்மை உடைய திரு மார்பில் சேர்த்தானேலும்-
ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோககி விடை தான் தருமேல் மிக நன்றே-

கை விடப் போகிறேன் என்ற சொல்லை யாவது முகம் நோக்கிச் சொல்வான் ஆகில்
அப்போது சேவை யாவது கிடைக்குமே-கண்ணிலே தென் பட்டான் ஆகில்
அப்போது உபாயங்களால் ஸ்வாதீனப் படுத்திக் கொள்ளலாமே
நல்ல அபிப்ராயமோ தீய அபிப்ராயமோ-நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்து அன்றோ உண்டாக வேண்டும்
அந்த நினைவு தானே நமக்கு போதுமானது -என்கிறார்

“மாலார் தாம் சார்வரியரானால்
(அந்த) மாலார் தமக்கு நுமக்கடியோமென்றென்று நொந்து உரைத்து என்?” என்று முன்னடிகளின் அந்வயம்.
மாலார்தாம்-
ஆச்ரிதர்களிடத்தில்யாமோஹமே வடிவு கொண்டவர்’ என்று பேர் மாத்திரமேயா யிருக்கிற அவர் என்றவாறு.
சார்வு அரியரானால் என்றது-
நமக்கு நெருங்கியநுபவிக்கக் கூடாதவராயிருக்கையினால் என்றபடி நாம் ஆர்த்தியோடே
நுமக்கடியோம் நமக்கடியோம் என்று எத்தனை தடவை சொன்னாலும் அவர் ஸேவைஸாதியாதிருக்குமளவில்
அந்த வார்த்தையை நாம் வாய் நோவ வீணாகப் பலகால் சொல்லிக் கதறுவதில் யாது பயன்?
நெஞ்ச உலரக் கத்துவது எதுக்கு? என்கை.
நொந்து உரைத்தலாவது- ஆர்த்தியோடே சொல்லுதல்; வாய் நோவச் சொல்லுதலுமாம்.
பசித்த போது சோறிடாதவனை நோக்கிச் சோறு சோறு என்று பலகால் கத்தினாலும் வாய் தானே நோகும்.

நெஞ்சே! எமக்கு இனி யாதானுமாகி காண்; அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு=
“நல்லவென் தோழி!நாகணைமிசை நம்பரர், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?” (நாச்சியார் திருமொழி 10-10)
என்றாற்போலே, மிக்க பெரியவரான அவரை இன்னபடி செய்கவென்று நியமிக்க ஆராலாகும்;
அவர் – நெறிகாட்டி நீக்கினாலும் நீக்கட்டும்,- கருமாமுறிமேனி காட்டினாலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு.

இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்:-
(அவர் திறத்தேயாதானும் சிந்தித்திரு.) பேறும் இழவும் இரண்டு மொக்குமென்றிருக்கலாமோ?
நம்முடைய ஸத்தைக்கு (அவன் வேணுமேயென்றது- அவனுடைய அநுக்ரஹம் வேணுமே என்றபடி)
அவன் வேணுமேயென்ன; ஸத்தைக்கு இதெல்லாம் வேண்டா காண்;
அவர் நம்மை வேண்டா வென்றத்தை நினைத்திருக்கவமையும்;
நம்முடைய ஸத்தைக்கு அவர் ஸத்தையிறே காரணம்.” என்று.

இந்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ் பொருளை என் சொல்வோம்.
‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை; அவன் நம்மை அநுக்ரஹியாது
நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?
“எமக்கினியாதானு மாகிடுகோண்” என்று எப்படி சொல்லலாம்? என்னில்;

அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.
அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.
திருவாய் மொழியிலும் (47-3.) “கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ யென்றென்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத் தக்கது.

எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு நிர்பந்தமில்லை;
கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறாரன்றோ.

ஆண்டாளும் ·“செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடைதான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9) என்றாள்; –

கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்திற்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று;
அப்படி அணைத்துக்கொள்ளத் திருவுள்ள மில்லையாகில்,
என் முகத்தை நேராகப் பார்த்து ‘எனக்கு உன்மேல் அன்பு எள்ளளவுமில்லை, உன்னைக் கை விட்டேன், நீ போ’
என்று வாய் திறந்தொன்று சொல்லி விடட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரியம் என்றாளன்றோ.

உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச்சொல்லுவனாகில்
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.

அதுபோல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதையாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது-
நல்ல படியாகவோ தீய தீயபடியாகவோ ஏதேனுமொருவிதமாக நம்மைப்பற்றின
எண்ணம் அவனது திருவுள்ளத்தே பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.
நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வயக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவுதானே நமக்கும் போதுமானது என்கை.

ஆகிடு – ஆகிடுக. காண் – முன்னிலையசை.

————————————————————————–

(இரு நால்வர்.) எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக் கேடாக அவனைச் சிந்தித்தல் செய்து
‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவை ஸாதிப்பிக்க வில்லையே!’ என்று கை யொழிந்து கிடப்பதே நல்லதன்றோ என்று
திருவுள்ளம் பற்றின ஆழ்வார், பழைய அயோக்யதா அநு ஸந்தாநமே பண்ணுகிறார் இதில்.

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

பதவுரை

இரு நால்வர்–அஷ்ட வஸுக்கவென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர்–ஏகாதசருத்ரர் களென்ன
எட்டோடு ஒரு நால்வர்–த்வாதசாதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால்–அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம்–நாம்
திருமாற்கு–எம்பெருமானைப் பணிவதற்கு
ஆர். எவ்வளவு மணிசர்?–
வணக்கம் ஆர்–நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!
ஏ பாவம்–அந்தோ!;
நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாமா–நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம்–மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.

நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்-
நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-எதற்காக வீணாக நாக்கை  நீட்டி
இருக்கிறாய் –
என்கிறார் நெஞ்சை பார்த்து-
இதற்கு வேறு படியாகவும் அவதாரிகை உண்டு –

நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலுமாம் கொலோ என்றே –
எம்பெருமான் வடிவு அழகில் சிறிதும் ஈடுபாடு இன்றியே
உப்புச் சாறு கேட்டு -சாவாமைக்கு கடலைக் கடைந்து கொடு-மாவலியைக் கொல்லு இரணியனைக் கொல்லு -என்று-நிர்பந்திக்கிற
பிரயோஜனாந்திர பரர்களுக்கு சேவை கிடைக்குமே ஒழிய-உம் வடிவு அழகின் அனுபவமே பரம பிரோஜனம் என்று
இருக்கும் நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே
-பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று
சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்னவுமாம்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –முதல் திருவந்தாதி –
அவர் அஷ்ட வசுக்களை எண்மர் என்றார் இவர்– இரு நால்வர் -என்கிறார்
அவர் ஏகாதச ருத்ரர்களை பதினொருவர் -என்றதை இவர்
ஈரைந்தின் மேல் ஒருவர் என்கிறார்
அவர் த்வாதச ஆதித்யர்களை ஈரறுவர் என்றதை இவர் எட்டொரு நால்வர் என்கிறார்
அச்விநீ தேவதைகளை இருவரும் ஓரிருவர் -என்கிறார்கள்–/

ஆண்டாளும்முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -என்றாள் இ றே-

வேதமும் -த்ரயஸ் த்ரிம்சத் வைதேவா -என்று பல இடங்களும் ஓதா நின்றது
ஆக-ஆழ்வார் நிச்சய அனுசந்தானமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்கிறார்-

இரு நால்வர்-அஷ்ட வசுக்கள் என்ன/ ஈரைந்தின் மேல் ஒருவர் -ஏகாதச ருத்ரர்கள் என்ன –
எட்டோ டொரு நால்வர்
-த்வாதச ஆதித்யர்கள் என்ன –ஓர் இருவர் அல்லால் –
அஸ்விநீ தேவர்கள் என்ன-ஆகிய முப்பத்து மூன்று அமரர்கள் தவிர மற்றவர்களான

திரு மாற்கு யாமார் –நாம் எம்பெருமானை பணிவதற்கு-எவ்வளவு மனிசர் -/ 
வணக்கமார்-
வணக்கம் யார் -நம்முடைய பணிவு தான் எத்தகையது -பிறப்பு ஒழுக்கம் இவற்றால் அயோக்யரான நாம்-
ரஷ்ய வர்க்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லோம் -அயோக்யரான நம்முடைய ஆஸ்ரயணம் தான் எங்கனே-
அயோக்யரான நாம் ஆஸ்ரயித்தோம் எனபது அவனுக்கு ஒரு பொருளா –

பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாக இருந்து ஏத்த வீற்று இருந்த இது வியப்பே -என்னும்படியாக உள்ள அவனுக்கு
அறிவொன்றும் இல்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டு எண்ணத் தக்கதோ -என்றபடி
வணக்கம் எது -என்னாது–
வணக்கம் ஆ
ர் -என்று உயர் திணையாக அருளிச் செய்தது ஒரு வகைக் கவி மரபு

ஏ பாவம் –அந்தோ –இரு நிலத்தோர் பழி படித்தேன் ஏ பாவமே -திரு நெடும் தாண்டகம்

நன்னெஞ்சே –நல்ல மனமே -/நாமா மிகவுடையோம் நாழ் –
நாமோ என்றால் ‘குற்றம் உள்ளவர்களாக-இருக்கிறோம் இறே-புருஷோத்தமனான அவன் முன்னே ஒரு பதார்த்தமாக நிற்பதும்-
வணங்கினோம் என்பதும்-எவ்வளவு ஹேய விஷயம் –நாமாமிக வுடையோம் நாழ்-நாமா -நாமோ என்றபடி
நைச்யம்-பண்ணும் பஷத்தில் -அபராத சஹச்ர பாஜனம்-வெறுத்து அருளுகிற பஷத்தில்-பிரயோஜனாந்தர பரர்களுக்கே
கார்யம் செய்வதாக திரு உள்ளத்தில் சங்கல்பம் கொண்டவர்-குற்றமாக கொண்ட அநந்ய பிரயோஜனத்வத்தை கொண்ட நாமோ -என்றபடி-

ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தூயரான முப்பத்து முக்கோடி தேவர்களன்றோ அவனுக்கு அடிமைசெய்ய அர்ஹதை யுடையார்;
ஒரு குணமுமின்றிக் குற்றமே வடிவான நாம் அப்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு?.
நாம் என்பதற்கும் நம்முடைய வணக்கமென்பதற்கும் இங்கே என்ன விஷயமிருக்கிறது! என்று
தம்முடைய அயோக்யதையைக் கூறி அகலப் பார்க்கிறார்.
பகவதநுபவம் விலக்ஷணர்க்கே கிடைக்குமத்தனை யல்லது நம்மைப் போன்ற பாவிகளுக் கிடையாது காண் நெஞ்சே!,
நீ ஏன் வீணாக நாக்கை நீட்டிக் கிடக்கிறாய்? என்கிறார் போலும்.

இதற்கு மற்றொரு படியாகவும் கருத்துரைக்க இடமுண்டு;-
“நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காணலு மாங்கோலென்றே?” (திருவிருத்தம்- 92)
என்றபடி எம் பெருமானுடைய வடிவழகில் சிறிதும் ஈடுபாடின்றியே; எங்களுக்குச் சாவாமைக்கு மருந்து கொடுக்கக் கடலைக்கடை;
மாவலியைக் கொல்லு; இரணியனைக் கொல்லு; இராவணனைக் கொல்லு’ என்று உடம்பு நோகக் காரியம் செய்யுமாறு நிர்பந்திக்கிற
ப்ரயோஜநாந்தர பரர்களான தேவதைகளுக்கு அப்பெருமானுடைய அநுபவம் எளிதாகக் கிடைக்குமே யன்றி

ப்ரயோஜநாந்தர மொன்றையும் வேண்டாதே.
‘உன் வடிவழகின் அநுபவமே எமக்குப் பரம ப்ரயோஜநம்’ என்றிருக்கிற நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே;
ப்ரயோஜநாந்தர பரர்கட்குத்தான் காரியம் செய்யக் கடவோமென்று ஸங்கல்பித்துக் கொண்டிருக்கிற அப் பெரியவர்க்கு நம்முடைய
அநந்ய ப்ரயோஜநத்வம் தோஷமாக வன்றோ திருவுள்ளத்திற்பட்டுக் கிடக்கிறது;
இப்படிப்பட்ட தோஷம் நிறைந்துள்ள நமக்கு அவருடைய அநுக்ரஹம் கிடைக்குமா என்ன?
கிடைக்காது தான்- என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்றுரைக்கவுமாம்.

ப்ரயோஜ நாந்தரங்களை நச்சினவர்களும் உபாயாந்தரங்களைப் பற்றினவர்களுமான தேவதைகட்குக் காரியம் செய்கிற எம்பெருமான்
அநந்ய ப்ரயோஜநராயும் அநத்யோபாயராயுமுள்ள ஆழ்வார் தமக்குக் கடுகக் காரியஞ் செய்யவில்லை யென்றால்
இப்படித்தானே சொல்ல வேண்டும்.

“எண்மர் பதினொருவ ஈரறுவரோரிவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையார் அருளிச்செய்த முப்பத்துமூன்று
தேவர்களையே இவரும் சப்த பேதத்தாலே அருளிச் செய்கிறார்.
அவர் அஷ்டவஸுக்களை எண்மர் என்றார்; இவர் இருநால்வர் என்கிறார்;
அவர் ஏகாதச ருத்ரர்களைப் பதினொருவர் என்றார்; இவர் ஈரைந்தின்மேலொருவர் என்கிறார்;
அவர் த்வாதசாதித்யர்களை ஈரறுவர் என்றார்; இவர் எட்டோடொரு நால்வர் என்கிறார்;
அச்விநீதேவர்களை ஓரிருவர் என்றது மாத்திரம் இருவர்க்குமொத்தது.
ஆக முப்பத்துமூன்று தேவர்களைச் சொன்னது
ஸமஸ்த தேவர்களையும் சொன்னபடியாமென்பர்;

ஆண்டாளும் “முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று” என்றருளிறே.

வேதமும் ***-=த்ரயஸ்த்ரிம்சத்வைதேவா” என்று பலவிடங்களிலும் ஓதாநின்றது.
முப்பத்து மூலரமரர்கள் தாம் எம்பெருமானுக்கு உரியவர்கள்;

நாம் ஆர், நம்முடைய வணக்கமென்பது யாது? என்று ஸநச்யர்னுஸந்தான்யமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்தாராயிற்று.
யாம் ஆர் = பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் அயோக்யரான நாம் அவனுக்கு எந்த வகுப்பில் சேர்ந்தவர்கள்?
ரக்ஷ்ய வர்க்கங்களுள் ஒரு வகுப்பிலும் சேர்ந்தவர்களெல்லாம் என்றபடி.

வணக்கம் ஆர் = அயோக்யரான நம்முடைய ஆச்ரயணந்தான் அவனுக்கு எங்ஙனே?
நாம் ஆச்ரயித்தோமென்பது அவனக்கொரு பொருளோ?

“பிறையேறு சடையானும் நான் முகனுமிந்திரனும், இறையாக விருந்தேத்த வீற்றிருத்தலிது வியப்பே” (திருவாய்மொழி 3-1-10.)
என்னும்படியாயுள்ள அவனுக்கு, அறிவொன்றுமில்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டெண்ணத்தக்கதோ வென்றபடி.

“வணக்கம் எது” என்னாமல் “வணக்கம் ஆர்” என்று அஃறிணைச் சொல்லுக்கு
உயர்திணை வினாச்சொல் இட்டுச் சொன்னது ஒரு வகைக் கவிமரபு.

ஏபாவம் = வடமொழியில் *** (அஹஹ)* (ஹந்த) ** (பத) என்னும் அவ்வயயங்கள் போலே
தமிழில் இது ஒரு இரக்கக் குறிப்பிடைச் சொல்போலும் ‘
இருநிலத்தோர் பழிபடைத்தேன் ஏபாவமே” என்ற திருநெடுந்தாண்டகமுங்காண்க.

திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம்! = புருஷோத்தமனாகிய அவன் முன்னே நாம் ஒரு பதார்த்தமாக நிற்பதும்,
அவனை நாம் வணங்கினோமென்பதும் எவ்வளவு ஹேயமான விஷயம்!- என்று தம்மில் தாம் கர்ஹித்துக் கொள்ளுகிறபடி.
ஏன் இப்படி சொல்லுகிறீர்? என்ன;
நாமா மிகவுடையோம் நாழ் என்கிறார். நாமா என்றது- நாமோ வென்றால் என்றபடி.
நாம் அளவற்ற குற்றமுடையவர்களன்றோ; ஆனது பற்றி “நாமார் வணக்கமார்” என்றோம் என்கை.

இப் பாட்டில் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணுகிறாராகக் கொள்ளும் பக்ஷத்தில் “நாமாமிகவுடையோம் நாழ்” என்றது.
அபராத ஸஹஸ்ர பாஜநம்” என்றுமாபோலே ஸ்வரூபமாகச் சொல்லிக் கொண்டதாம்.
அங்ஙனன்றி,
ப்ரயோஜநாந்தரபரர்கட்கு அவர் காரியம் செய்வரேயன்றி அநந்ய ப்ரயோஜநரான நமக்குக் காரியம் செய்வரோ? என்று
வெறுப்பாகச் சொல்லுகிறரென்று கொள்ளும் பக்ஷத்தில், இங்கு நாமா மிகவுடையோம் நாழ் என்றது-
ப்ரயோஜநாந்தர பரர்களுக்கே காரியஞ் செய்கிறவரான அவருடைய திருவுள்ளத்தாலே குற்றமாகத் தீர்மானிக்கப்பட்ட
அநந்ய ப்ரயோஜநத்வத்தை நாம் உடையோமென்றோ? என்றவாறு. நாழ்- குற்றம்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

One Response to “பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்/-அவதாரிகை/பாசுரங்கள் 1-10–திவ்யார்த்த தீபிகை –”

  1. K.Manivannan Says:

    11 முதல் 20 வரை இல்லை

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading