தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை -31-41- –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

இப்படி ஆத்மாவுக்கு ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள கர்த்ருத்வத்தை இல்லை என்று
ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வத்தைக் கொள்ளுகிற சாங்க்யரை நிராகரிக்கிறார் —
சிலர் என்று தொடங்கி –

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –

சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –

குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –

மூல பிரகிருதிர் நாம ஸூக துக்க மோஹாத் மகாநி லாகவ பிரகாச சலந
உபஷ்டம்பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீந்த்ரியாணி
கார்யைக நிரூபண விவேகாநி அந்யூந அநதிரேகாணி சமுதாமுபேதானி
சத்வ ரஜஸ் தமாம்ஸி த்ரவ்யாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –

(ஸ்ரீ பாஷ்யம் -2-2-1-மூலப்ரக்ருதி என்பது சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களைக் கொண்டதாகும்
இவை மூன்றும் சரி சமமான தசையில் -ஒன்றை ஓன்று விஞ்சாத விதத்தில் உள்ளன
இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸூகம் துக்கம் மற்றும் மயக்கம் -மோஹம் என்பதாகும்
சத்வம் அதிகமாகும் போது ஸூ கம் ஏற்படும் -சரீரம் எடை குறைவாகத் தோன்றும் –
இந்திரியங்களும் நன்கு இயங்கும் இத்தையே லகவ ப்ரகாசங்கள் என்பர்
ரஜஸ் அதிகமாகும் போது துக்கம் ஏற்படும் -அசைவு மற்றும் இந்திரியங்கள் செயல் ஆற்றுவதும் நிகழும்
சலனம் -சஞ்சலமான இயல்பு கொண்டபடியும்
உஷ் டம்பநம் -யாரையேனும் வாக்குவாதத்துக்கு இழுத்தபடியே இருப்பர்
தமஸ் அதிகமாகும் போது மயக்கம் ஏற்படும் -சரீரம் பளுவாக உணரப்படும் -இந்திரியங்கள் மறைக்கப்படும் -கௌரவம் ஆவரணம்
இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும்
அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணர வல்லதாக -அல்லது நிரூபிக்கும்படியாக இருக்கும்
சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றையும் சம நிலையில் கொண்டதான மூலப்ரக்ருதியானது அசேதனமாக உள்ள போதிலும்
எண்ணற்ற சேதனர்களுடைய இன்பத்துக்கும் மோக்ஷத்துக்கும் உதவுவதாக உள்ளது -)

அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே (கட -2-18-பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை )-இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம் பிரதி சேஷித்து-

ஹந்தா சேந் மந்யதே ஹந்தும் ஹதச் சேன் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே (கட –2-19-)
(கொல்பவன் நான் இவனைக் கொல்கிறேன் – என்று எண்ணினாலும்
கொல்லப்படுபவன் -நான் கொல்லப்பட்டேன் -என்று எண்ணினாலும்
இருவரும் உண்மையை அறியவில்லை -காரணம் –
அவன் கொல்வதும் இல்லை -இவன் கொல்லப்படுபவனும் இல்லை -)-என்று
ஹநநாதி க்ரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்

ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நாந்யம் குணேப்யே கர்த் தாரம் யதா த்ரஷ்ட அநு பஸ்யதி -(ஸ்ரீ கீதை –14-49-)
(குணங்களைக் காட்டிலும் வேறு கர்த்தா இல்லை என்று எப்போது காண்கிறானோ )என்றும்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது பிரகிருதி ருஸ்யதே
புருஷஸ் ஸூக துக்காநாம் போக்த்ருத்வே ஹேது ருஸ்யதே – (ஸ்ரீ கீதை -3-20-)
(சரீரத்தின் இந்திரியங்கள் செயல் ஆற்றுவதில் ப்ரக்ருதியே காரணம் என்றும்
ஸூக துக்க அனுபவங்களில் புருஷனே காரணம் என்றும் கூறப்படுகின்றன -)என்றும் சொல்லுகையாலும்

இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆய்த்து அவர்கள் சொல்லுவது –

————————————————————————————————–

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் –

அப்போது இவனுக்கு
சாஸ்திர வஸ்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்

அதாவது
பிரக்ருதிக்கே கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்த்ரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸூக துக்க ரூப பல போக்த்ருத்வம்
சேராது -என்கை-

சேதனன் கர்த்தா வாகாத போது சாஸ்தரத்துக்கு வையர்த்த்யம் பிரசங்கிக்கும்
சாஸ்திர பலம் ப்ரயோக்தரி(பூர்வ மீமாம்சையில் -கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் பயன் அளிப்பவன ஆகும் )
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்(2-2-33-சாஸ்திரம் பயன் உள்ளது என்றாக வேணும் என்றால் ஜீவாத்மா கர்த்தா வாகிறான் )-
என்னக் கடவது இறே –

இனித் தான்
ஸ்வர்க்க காமோ யஜத-(ஸ்வர்க்கத்தை விரும்புமவன் யஜ்ஜம் பண்ணக் கடவன் )
முமுஷூர் பரஹ்மோபாசீத் (மோக்ஷத்தை விரும்புமவன் ப்ரஹ்மத்தை உபாசிப்பானாக )-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இறே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இறே

அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் (ஸாஸ்த்ரங்கள் சாசனங்கள் ஆகும் )-என்னக் கடவது இறே
சாசனமாவது பிரவர்த்தகம்
சாஸ்தரத்துக்கு பிரவர்த் கத்வம் போத ஜனந த்வாரத்தாலே
அசேதனமான ப்ரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இறே

ஆகையால் சாஸ்திரம் அர்த்தவத்தாம் போது
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆக வேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
அப்போது இவனுக்கு சாஸ்திர வஸ்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

————————————————————————————————

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –

————————————————————————————————-

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சம்சர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூக்கள்
அவற்றின் யுடைய சம்சர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி

பிரக்ருதே க்ரிய மாநாணி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே -(ஸ்ரீ கீதை -3-27-அனைத்த்து செயல்களும் அனைத்து விதங்களிலும்
பிரகிருதியின் குணங்களால் செயல்படுகின்றன
ஆனால் அஹங்காரத்தால் மூடப்பட்ட அறிவு கொண்ட ஒருவன் –
நான் கர்த்தா ஆவேன் -என்று எண்ணுகிறான் )என்னக் கடவது இறே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்த வர்த்த வாத் (2-3-33-ஸாஸ்த்ரம் பயன் உள்ளது என்றாய் வேண்டும் என்றால் )-என்கிற ஸூத்ரத்திலே
பூர்வ பஷ ஸித்தாந்த ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

———————————————————————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வ யத்தமோ
பரா யத்தமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –

பராத்து தச் ச்ருதே (2-3-40-ஜீவாத்மாவுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவால் உண்டாகிறது -ஸ்ருதி கூறுவதால் – )-என்று
வேதாந்த ஸூத்ரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பரா யத்தம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே

சாஸ்த்ர அர்த்தவத் வாத்துக்காக கர்த்ருத்வம் ஆத்ம தர்மம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தர்மமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –

இவனுடைய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்

இப்படி கர்த்ருத்வம் பரமாத்மா யத்தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத ப்ரயத்நா பேஷஸ்து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்தி யாதிப்ய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –

அதாவது
விஹித ப்ரதி ஷித்தங்களுக்கு வையர்த்தி யாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –

எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமாந்யேந பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்

அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும்
அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்

அனுக்ரஹாத்மகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாத்மகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்

இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –
ஆதா வீஸ்வர தத் தயைவ புருஷஸ் ஸ்வா தந்த்ரிய சக்தயா
ஸ்வயம் தத் தத் ஞான சிகீர்ஷண பிரத்யத்நாந் யுத்பாதயந் வர்த்ததே தத்ர உபேஷ்ய
தத் அனுமத்ய விததத் தந் நிக்ரஹ அனுக்ரஹவ் தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததஸ் சர்வஸ்ய புமஸோ ஹரி (ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ தத்வ சாரத்தில் -46)
(ஆத்மாவுக்கு வழங்கப்படுவதான முதல் அனுமதி என்ற ஸூவதந்த்ரமாகிய சக்தி காரணமாக
ஆத்மாவானவன் தானாகவே அந்த அந்த விஷயங்களில் செயல் ஆற்றுவதற்கான ஆசை மற்றும் முயற்சிகளை ஏற்படுத்துகிறான்
அவற்றில் செய்யக் கூடாதவற்றில் உதா சீனமும் -செய்யக்கூடியவற்றில் அனுமதியும் அளித்தபடி உள்ள ஈஸ்வரன்
அதற்குத் தண்டனை அளித்தல் மற்றும் அனுக்ரஹம் புரிதல் ஆகியவற்றைச் செய்கிறான்
இதன் மூலம் அனைவருடைய கர்மபலனை ஸ்ரீ ஹரி அளித்தபடி உள்ளான் -)-என்று அடியிலே

சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப் புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –

அவ்விடத்திலே
அசாஸ்த்ரீயங்களிலே உபேஷித்தும்
சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –

இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று ஸ்ரீ தீப பிரகாசத்திலே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள்
இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –

ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேப்யோ லோகேப்ய
உநநிநீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி –
(ஸ்ரீ கௌஷீ தகீ உபநிஷத்தில் -எந்த ஒரு ஆத்மாவை இந்த லோகத்தில் இருந்து உயர்த்த
சர்வேஸ்வரன் எண்ணுகிறானோ -அந்த ஆத்மாவையே நல்ல செயல்கள் புரியும்படி செய்கிறான் –
எந்த ஆத்மாவை நரகத்தில் ஆழ்த்த எண்ணுகிறானோ
அந்த ஆத்மாவை தீய செயல்கள் செய்யும் படியாகத் தூண்டுகிறான் – )-என்று
உநநிநீஷையாலும் அதோ நிநீஷையாலும் சர்வேஸ்வரன் தானே
சாத்வ சாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்

இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதி மாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவஸ்தனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய்
அதி கல்யாணங்களான கர்மங்களிலே ருசியை ஜனிப்பிக்கும் –

யாவன் ஒருவன் அதி மாத்ர பிராதி கூல்யத்தில் வ்யவஸ்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்கிப்பிக்கும் என்று
இந்த ஸ்ருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே

இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வஸ்ய பிரபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வச மந்விதா–(ஸ்ரீ கீதை -10-8-)
(நானே அனைத்தும் தோன்றுவதற்கான காரணம் ஆவேன் -அனைத்தும் என்னால் செய்யப்படுகிறது –
என்று அறிந்து கொள்ளும் அறிஞர்களாகிய பக்தர்கள் என்னை இடைவிடாது உபாசிக்கிறார்கள் )என்று தொடங்கி

தேஷாம் சத்த யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி
தே தேஷாம் ஏவ அனுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞானம் ஜம் தமஸ்
நாசயாம் யாத்ம பாவஸ்த்தோ ஜ்ஞான தீபேன பாஸ்வதா -(ஸ்ரீ கீதை -10-10 /10-11)
(எப்போதும் என்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்னும் ஆசை கொண்டவர்களாக
என்னை மிகுந்த அன்புடன் உபாசிப்பவர்களுக்கு என்னை அடைவதற்கான
புத்தி யோகத்தை நானே அளிக்கிறேன்
அப்படிப்பட்டவர்களை அனுக்ரஹிக்கும் விதமாக நான் அவர்களுடைய உள்ளத்திலே நிலைத்து நின்று
அறியாமையால் ஏற்படும் இருளை என்னைக் குறித்த ஞானம் என்ற ஒளியால் அழிக்கிறேன் )என்றும் –

அசத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீஸ்வரம் (ஸ்ரீ கீதை -16-8-)
அவர்கள் இந்த உலகம் ஸத்யம் அற்றது பரமாத்மாவை ஆதாரமாகக் கொண்டது அல்ல
என்னால் நியமிக்கப்படுவது அல்ல என்று கூறுகிறார்கள் ) -என்று தொடங்கி

மாமாத்ம பர தேஹேஷூ ப்ரதவிஷந் தோப்ய ஸூ யகா (ஸ்ரீ 16-18-_
(தங்கள் உடலிலும் மற்றவர்கள் உடலிலும் அந்தர்யாமியாக உள்ளை என்னை வெறுத்து
என்னைக் குறித்து பொறாமை அடைகிறார்கள் )என்னும் அது அளவாக
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி

தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷூ நாரத மாந் ஷிபாம் யஜஸ் ரம
ஸூபாநா ஸூரீஷ் வேவ யோநிஷூ (ஸ்ரீ கீதை -16-19-)
(இப்படியாக யார் என்னை வெறுக்கிறார்களோ -பாபம் செய்கிறார்களோ -கொடியவர்களோ -அப்படிப் பட்டவர்களை
நான் இந்த ஸம்ஸார சுழற்சியிலே தொடர்ந்து உழலும்படியாக அசூரப் பிறவிகளிலே தள்ளுகிறேன் )-
என்றும் அருளிச் செய்கையாலே

ஆகையால்
அநுமந்த் த்ருத்வமே சர்வ சாதாரணம்
பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்

க்ருத பிரயத்நா பேஷூஸ்து -என்கிற ஸூத்ரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
(ஸ்ரீ ப்ரஹ்ம -3-2-40-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத்–
பலனை அளிப்பதால் முந்தையதே என்று பாதராயணர் கூறுகிறார் – )

இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு

ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து

அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று

இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இறே-

———————————————————————————-

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன -(ப்ரு -3-7-22-விஞ்ஞானத்தில் உறைபவன் யாரோ )
விஞ்ஞான மய-(தைத் -2-4-1-ஞான மயமாக உள்ளவனும் )
விஞ்ஞானம் யஜ்ஞம் தனுதே-(தை -2-5-ஞானம் யஜ்ஜத்தை இயற்றுகிறது )
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-6-)
(ஞான மயம் ஆனவனும் -அனைத்து குணங்களும் நீங்கப் பெற்றவனும் -இதனால் தூய்மையாக உள்ளவனும் )
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-40-இந்த உலகம் ஞான ஸ்வரூபமாகவே உள்ளது )
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி த்வைதிநோ அதத்ய தர்சிந -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-14-31 )
(ஞான மயமான ப்ரஹ்மத்தை இவ்விதம் அறிவதே உண்மையானது –
இரண்டு என்று எண்ணியபடி உள்ளவர்கள் உண்மை அறியாதவர் ஆவர் ) -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதிக்கிறார்

ஞான
ஆஸ்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

———————————————————-

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சார பூத குணமாய்
நிரூபக தர்மமே
இருக்கையாலும் -சொல்லிற்று

அதாவது
ஞானம் ஸ்வ ஆஸ்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சார பூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதித்வேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –

இது தான்
தத் குண சாரத் வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞத்வத் (2-3-29-)
(ஞானம் என்ற குணத்தை இன்றியமையாத -சாரமாகக் கொண்டுள்ளதால்
ஜீவ பர ஆத்மாவானது ஞானம் என்று கூறப்படுகிறது ) -என்றும்

யாவதாத்ம பாவித வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் (2-3-30-)
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதாலும் ஆத்மாவை ஞானம் என்று கூறுவதில் தவறு இல்லை )-என்றும்
ஸூத்ர த்வத்தாலும் சொல்லப் பட்டது –

ஞான மாத்ர வ்யபேதேசஸ்து ஜ்ஞானஸ்ய பிரதாந குணத்வாத்
ஸ்வரூப அனுபந்த்தித் வேந ஸ்வரூப நிரூபக குணத்வாத்
ஆத்ம ஸ்வரூபஸ்ய ஞானவத் ஸ்வ பிரகாசத்வாவோப பத்யதே (ஆத்மாவானது ஞானமே ஆகும் என்று உரைக்கும்
கருத்தானது ஞானம் முதன்மையான குணமாக உள்ளதாலும் ஆத்மாவை நிரூபிக்கின்ற குணமாக உள்ளதாலும்
ஆத்ம ஸ்வரூபம் போலே தானே பிரகாசிக்கப்பதாலும் ஆகும் )-என்று இறே
ஸ்ரீ வேதாந்த தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

————————————————————————————-

சூர்ணிகை -38-

நியாம்ய மாகை ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —

அதாவது
ய ஆத்மநி திஷ்ட்டந் ஆத்மநோ அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்மா அந்தர்யாமி அம்ருத (ப்ரு -3-7-22-)
யார் ஆத்மாவில் உள்ளானோ -யார் ஆத்மாவில் புகுந்து உள்ளானோ -யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ –
யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவினுள் புகுந்து நியமிக்கிறானோ அவனே உன் ஆத்மா –
உனக்கு அந்தர்யாமியாக உள்ள அவன் அழிவற்றவன் )-இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-

ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீர பூதமான இவ் வாத்ம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-

இப்படி
தச் சரீர தயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பிரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்னத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

—————————————————————————————

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன் சத்தை இல்லையாம்படி
இருக்கை –

அதாவது
ஏஷ சேதுர் விதரண -(ப்ரு –4-4-22-சம்சாரத்தைக் கடக்க உதவும் பாலம் இவனே என்றும் )
ஏதத் சர்வம் ப்ரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம் (இந்த அனைத்தும் உயர்ந்த அந்த ஆத்மாவிடமே நிலை பெற்று நிற்கின்றன )
ஏவ மேவ சாஸ்மிந் நாத்மநி சர்வாணி பூதானி சர்வ ஏவாத்மா நஸ் சமர்பிதா –
(இந்த அனைத்தும் அந்த உயர்ந்த ஆத்மாவிடமே நன்கு காக்கப்பட்டு நிற்கின்றன )
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்ய சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத (ப்ரு -3-8-9-)
கார்க்கி இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே ஸூர்யனும் சந்திரனும் நிலைக்கிறார்கள்)-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே

இவ் வாத்ம வஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூப ஆஸ்ரித தத்வத்துக்கும் சதா அனுவர்த்தி ரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்

ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவ ஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
அவ்வவோ த்ரவ்யங்களை ஆஸரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்ய த்வாரா ஆதாரமாய் இருக்கும்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவ த்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆஸ்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உத்பந்நங்களாயும்
நிதயங்கள் நித்யா இச்சா சித்தங்களாயும்-இருக்கை
இவ் வர்த்தத்தை ( ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் )
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் விவேகித்தார்-

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்ப ஆஸ்ரிதம் என்று சொல்கிறது

குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
த்யௌஸ் ஸ ஸந்த்ரார்க்க நஷத்ராகம் திசோ பூர் மஹோததி வாஸூ தேவஸ்ய வீர்யேண விக்ருதாநி மஹாத்மாந –
(சந்திரன் ஸூர்யன் நக்ஷத்ரங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயம் திசைகள் பூமி சமுத்திரங்கள் போன்ற பலவும்
வாஸூ தேவனுடைய வீர்யத்தாலே நிலையாக உள்ளன என்று மஹாத்மாக்கள் கூறுகிறார்கள் )-என்கிறபடியே
ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற

இப்படி இச்சாதீன சத்தா ஸ்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்

பரமாத்வானுடைய இச்சை இவ் வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர இச்சா அதீநமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆஸ்ரயமாய் சங்கல்ப ஆஸ்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்

இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இவ் வாத்ம சங்கல்பம் இல்லாத
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தெளிவது

ஜாக்ராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ஸ்ரீ மத் ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————————————————————-

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்கை-

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –

சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வ பிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லா வற்றாலும்
சேஷிக்கு அதிசய கரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே (2-9-4)-என்று ஆழ்வார் அருளிச் செய்தது –

பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பர சேஷீ –
(பிறருக்கு சந்தோஷத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற எண்ணம் எவைகளுக்குத் தன்மையோ
அவைகள் அனைத்தும் சேஷன் -அடிமை -மகிழ்வை அடைபவன் சேஷீ -அடிமைச் செயலை ஏற்பவன் -)என்று
சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –

இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்ய அதிசய சித்தயே உபய அனுபயைகைக ஜூஷாதௌ சேஷ சேஷி நௌ-
(எந்த ஒரு தலைவனுக்காக -எந்த ஒரு பொருள் -இருவரை அடைதல் அல்லது ஒருவரை மட்டும் அடைதல்
என உள்ளதோ -அதாவது தலைவனுடைய விருப்பத்துக்கு ஏற்ப -அவர்கள் அடிமை மற்றும் எஜமானன் ஆவார்கள் )என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்த்யதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜ்யதே -(ஒருவன் விருப்பத்திற்கு ஏற்ப பயன் கொள்ளத் தகுதியாக உள்ள
நிலையே அடிமை என்று கூறப்படுகிறது –ஸர்வேஸ்வரனால் அனைத்து லோகங்களும் தனது விருப்பப்படி
உபயோகப் படுத்தப் படுகிறது )-என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யஸ் யாஸ்யாமி ந தமந்தரேமி-(யஜுர் -யாருக்கு நான் அடிமையாக உள்ளேனோ அவனை நான் மீற மாட்டேன் )என்றும்

பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-(ஆரண்ய -15-6-)
காகுத்ஸத்த வம்சத்தில் வந்தவனே -பல வருஷங்கள் நீ உள்ளவரை நான் உனக்கு வசப்பட்டு நிற்பேன் )என்றும்

தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந நாந்யதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச -(அனைத்து ஆத்மாக்களுக்கும் ஸர்வேஸ்வரனுக்கு இயல்பாகவே அடிமையானவர்கள்
இந்த லோகத்திலும் மோக்ஷ நிலையிலும் அவர்களுக்கு ஸ்வ தந்திரம் என்னும் இலக்கணம் இல்லை )என்றும்

ஸ்வோஜ் ஜீவ நேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரேஸ்
ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர (ஸ்ரீ விஷ்ணு தத்வம் )
(உனக்கு கரை ஏறுவதற்கான விருப்பம் இருந்தால் -அல்லது அழியாமல் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தால்
இயல்பாகவே உள்ள ஆத்மாவின் தன்மையையும் ஸ்ரீ ஹரியான ஈஸ்வரனுடைய எஜமானனாக உள்ள தன்மையையும்
எப்போதும் சிந்தித்தபடியே இருப்பாயாக )-என்றும்

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-

—————————————————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ் வாத்ம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை –

இது தான் என்கிறது –
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்ம வஸ்து தான் -என்றபடி –

க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –

ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது
சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை

ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது

கிருஹ ஷேத்திர தாஸ தாசே பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்ட கநிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்

களத்ரமும்-சோம ப்ரதமோ விவிதே கந தர்வோ விவித உத்தர த்ருதீ யோக் நிஷ்டே பதிஸ் துரீயஸ்தே மனுஷ்யஜா
(சந்திரன் முதல் பர்த்தா -கந்தர்வன் அடுத்த பர்த்தா -அக்னி மூன்றாவது பர்த்தா -மனுஷ்யன் நான்காவது பர்த்தாவாக அறிவாய் )-என்று
பாணி க்ரஹண அனந்தரம் ஸோமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே
அநேக சாதாரணமாய் இருக்கும்

இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் ஸித்யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை

ப்ருதுக் ஸிதிதி களுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
ப்ருதக் உப லப்தியைச் சொல்லுகிறது

அப்போதைக்கு இது தான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபய அநர்ஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –

அயமே வாத்ம சரீர பாவ
ப்ருதக் சித்த்ய அநர்ஹ ஆதார தேய பாவ
நியந்த்ரு நியாம்ய பாவ
சேஷ சேஷி பாவச் ச -(ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹத்தில் -)
ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுக்கும் இடையே உள்ள சம்பந்தம் இதுவே ஆகும்
தனித்தனியே இருக்க இயலாத இவை இரண்டுக்கும் இடையே
ஆதாரம் -ஆதேயம் நியந்தரு-நியாம்யம் சேஷி சேஷ என்னும் சம்பந்தங்கள் உள்ளன )என்றும்

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷைதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய சரீரம் (ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹத்தில் -)
(எந்த ஓன்று தாங்கப்படுவதாகவும் -நியமிக்கப்படுவதாகவும் சேஷனாகவும் உள்ளதோ
அது தன்னைத் தாங்கும் ஆத்மாவை விட்டு அகன்று தனியாக நிற்க இயலாத பிரகாரமாக உள்ளது
இதுவே சரீரத்தின் லக்ஷணம் )-என்றும்

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்
ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
நியந்த்ரு நியாமக பாவம்
ஆதார ஆதேய பாவம்
சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
ஸ்ருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரத்வம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக
கீழே
ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading