ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ நஞ்சீயர் என்று தொடங்கி உத்தேசித்த படி
திராவிட வேதமான திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணினவர்களையும்
தத் கிரந்த சங்க்யைகளையும்
இவ்வளவாக தர்சிப்பித்து அருளி
இனி-தத் அங்க உபாங்களான மற்றை அருளிச் செயல்களுக்கும்
வியாக்யானம் பண்ணினார் இன்னார் என்னும் அத்தையும் அருளிச் செய்வாராய் –
அப்படியே அவை எல்லாவற்றுக்கும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
வியாக்யானம் செய்து அருளின படியையும் இதில் அருளிச் செய்கிறார் –
பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் -அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச் செயல் ஆய்த்து அறிந்து–46-
ப்ராயேண சம்யக் அபர திராவிட ஆகம
டீகா க்ருதா யத்
அபய பிரத ராஜ நாம்நா
தேனைவ
தேஷு ககநேஷு கதி
குரு நாம்
லோக உபதேச சமயேஷு
அதுனாதி ரம்யா
பெரியவாச்சான் பிள்ளை –
அவர் திருக் குமாரரான ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையும்
ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையும் யுண்டாகையாலே
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்று இவரை விசேஷிக்கிறது –
(பரந்த ரஹஸ்யம் -மாணிக்க மாலை -இரண்டும்
நாயனார் ஆச்சான் பிள்ளை இவர் குமாரர் அருளிச் செய்தவையே – காஞ்சி ஸ்வாமிகள்
இவரே -தான் என்பர் -புத்தூர் ஸ்வாமிகள் பெரியவாச்சான் பிள்ளை – )
பின்புள்ளவைக்கும் தெரிய –
ஸ்ரீ சடகோப வாங்மயமான திருவாய் மொழியை ஒழிந்த
ஸ்ரீ திருப்பல்லாண்டு தொடங்கி
ஸ்ரீ திருமடல்கள் ஈறாக யுண்டான
திவ்ய பிரபந்தங்கள் இருபத்து மூன்றுக்கும் –
(அவதார கிரமம் முதல் திருவந்தாதி -திரு நெடும் தாண்டகம் ஈறாக –
சேவா கால க்ரமம் முதல் ஆயிரம் தொடக்கம் திருப்பல்லாண்டு இயற்பா கடைசியில் திரு மடல்
அத்யயன உத்சவம் -இயற்பா கடைசியில் சேவை உண்டே
சம்ரோக்ஷன காலத்தில் தொடர்ச்சியாக சேவிக்க திருவாய் மொழி கடைசியில் -சேவை உண்டே )
தெரிய வியாக்கியைகள் செய்வால் –
தம்முடைய பர சம்ருத்ய ஏக பிரயோஜனதையால் ஸூ ஸ்பஷ்டமாம் படி
வியாக்யானம் செய்து அருளுகையாலே –
அரிய அருளிச் செயல் பொருளை –
அரிய வின்னிசை (பெரிய திருமொழி -1-2-10)-என்றும்
அறிவித்தேன் ஆழ் பொருளை (நான்முகன் -1-)-என்றும் சொல்லும் படியாய் இறே
அருளிச் செயல்களின் உடைய சப்தார்த்தங்களின் அருமை இருக்கும் படி –
(சப்த அர்த்தங்கள் சீர்மைக்கு இரண்டு பிரமாணங்கள்
அரன் இத்யாதி மேனி -அவனுக்கு சரீர பூதர் போன்ற ஆழ்ந்த பொருள்கள் -)
செஞ்சொல் கவி-( 10-7-1-)-என்றும்
செவிக்கு இனிய செஞ்சொல்-10-6-11-) -என்றும்
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை -(பெரிய திருமொழி 1-1-10 )-என்றும் –
செந்தமிழ்-( பெரிய திருமொழி -2-8-2-) -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரவண சமயமே பிடித்து நிரதிசய போக்யமாய்-
திராவிட பாஷை என்னுமத்தால் அதி ம்ருதுக்களாய்
அத ஏவ அதி ஸூலபமாய் இருந்ததே யாகிலும்
தாத்பர்ய நிர்ணயத்தில் வந்தால் -அத்யந்த துர் க்ரஹமாய் இறே இருப்பது —
இப்படி அருமை பெருமைகளை யுடைத்தான அருளிச் செயல்களின் அர்த்தமானது –
ஆரியர்கட்கு இப்போது-
ஸ்ரீ ஆச்சான் பிள்ளைக்கு இவ்வருகில் உண்டான ஆச்சார்யர்கள் எல்லாருக்கும் –
இப்போது –
இவர் வியாக்யானம் செய்து அருளின பின்பு -என்னுதல் –
அன்றிக்கே –
தமக்கு சமகாலத்தில் அவர்களாய் உள்ளவர்களுக்கு -என்னுதல் –
அப்போது -அவர் அப்படி செய்து அருளுகையாலே யாய்த்து
இப்போது- இப்படி அருளிச் செய்ய வாய்த்து –
அரியது எளிதாகும் (இரண்டாம் திருவந்தாதி )-என்னும் படி அவர் பிரசாதத்தாலே –
அருளிச் செயல் ஆய்த்து அறிந்து-
அதாவது
அதி துர்க்ரஹமான அர்த்தங்களை இவர் வியாக்யான விசேஷங்களாலே
நன்றாக அறிந்து
அத்தை-ஸ்வ அனுபவ ரூபமாகவும்
பரோபதேச ரூபமாகவும் அருளிச் செய்யும் படி யாய்த்து –
அல்லாத ஆச்சர்யர்களில் காட்டில் இது இறே இவர்க்கு வைபவம்-
(வியாக்கியான சக்ரவர்த்தி-பரம காருண்யர்
ஸ்தோத்திரங்கள் -ரஹஸ்யங்கள் -ராமாயணம் -அருளிச் செயல்கள் -ஸிம்ஹாஸனம் )
——————————————————-
இதில் ஸ்ரீ நஞ்சீயர் தொடக்கமான ஆச்சார்யர்களும்
சிறிது பிரபந்தங்களுக்கு வியாக்யானம்
செய்து அருளின படியையும் அருளிச் செய்கிறார் –
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில –47-
சேஷாஞித் திராவிட ஆகமானாம் விவ்ருத்தி
வேதாந்திபிர் க்ருத
ந புன
பிராஜ்ஜாபராத்
அவரஐ ஜகாத் குரோ
ஸும்யோ
கலி தாஸ்ய கச்சித்
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு-
அதாவது ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையைப் போலே
அசேஷ திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் பண்ணுகை அன்றிக்கே –
அவற்றில் நாலிரண்டு பிரபந்தங்களுக்கு ஆய்த்து அவர் முன்னே செய்து அருளிற்று -என்கை – –
(பெரியவாச்சான் பிள்ளைக்கு முன்னமே என்றபடி )
நாலிரண்டு –
என்று சங்க்யா நிர்த்தேசம் அன்று
ஒரு முழுச் சொல் இருக்கிறபடி –
அதாவது
அல்பத்திலே தாத்பர்யம் –
மேலும் -சில- என்று இறே அருளிச் செய்தது –
இவர் தாம் செய்து அருளினதாய்க் கண்டது
ஸ்ரீ திருப் பாவைக்கும்-
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும் – இறே உள்ளது –
பின்னையும் யுண்டாகில் கண்டு கொள்வது –
( திருப்பள்ளி எழுச்சிக்கும் பெரிய திருமொழிக்கும் உண்டு என்பர்
திருப்பாவைக்கு நஞ்சீயர் வியாக்யானம் இப்போது நம்மிடம் இல்லை –
திருப்பள்ளி எழுச்சிக்கு உண்டு –
பெரிய திருமுடி அடைவில் நஞ்சீயர் திருப்பாவைக்கு ஈராயிரப்படி உன்டு என்று உள்ளது
சரஸ்வதி பண்டாரம் -பெரிய திருமொழிக்கு -ஆறு பத்துக்கு மட்டும் இருக்கிறது –
முதல் இரண்டுக்கும் நஞ்சீயர் -மேலே வாதி கேசரி ஜீயர் அருளிச் செய்தது என்று உள்ளது
அரும் பதத்தில் நஞ்சீயர் படியில் கண்டு கொள்வது என்றும் உள்ளது – )
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே –
அதாவது
சங்கோசம் அற சகல திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் செய்து அருள வில்லை -என்றபடி –
இல்லையே -என்று தேற்றம் இருக்கிறபடி –
எஞ்சல் -ஒழிதலும் -சுருங்குதலும் –
எஞ்சாமை வைத்தடக்கி -(பெரிய திருமொழி- 2-10-1-)-என்னக் கடவது இறே –
தஞ்சீரால் வைய குருவின் தம்பி –
அருளிச் செயலிலே வந்தால் அல்லாத ஆச்சார்யர்கள் எல்லாரையும் காட்டிலும்
அத்யந்த அவகாஹத்தை யுடையராம் படியான தம்முடைய ஞாநாதி கல்யாண குணங்களாலே
காத்த குணவாளர் -என்னும் போலே –
தஞ்சீராலே யாய்த்து இவரும் சிலவற்றுக்கு செய்து அருளினது –
(கீழே ஐந்து திருவாய் மொழி காத்த குணவாளர் போல் ஆச்சார்ய ஹ்ருதயம் அருளி காத்தார் இவரும் அன்றோ
-critical analysis )
மன்னு பதின்மர் மறைப் பொருளில் மாறன் சீர்
துன்னு மதுர கவி சொற்பொருளும்
அன்ன நடைத் திங்கண் முக வல்லி யுரை செம்பொருளும்
தென் முடும்பை எங்கள் மணவாளர்க்கு இறை – என்னும் படி இறே இவற்றில் இவருடைய அவகாஹம் இருப்பது-
(கண்ணி நுண் சிறு தாம்பு வியாக்யானம் – திருப்பாவை ஆறாயிரப்படி )
வைய குருவின் தம்பி –
இதுக்கு எல்லாம் அடி –அவர் பின் பிறப்பு ஆய்த்து –
அதாவது ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் என்று பிரசித்தியை யுடையரானவருடைய திருத் தம்பியாரான
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -என்கை –
இவருக்கு அதிசயாவஹமான சம்பந்தம் இருக்கிறபடி –
ராஜ குமாரர் ( ராமனுஜர் என்றால் போல் )-என்றாப் போலே -இவருக்கு ஜகத் குருவராநுஜர்-என்று இறே நிரூபகம் –
தம்பி உடன் தாசரதி ஆனானும் —இத்யாதி –
(தம்பி உடன் தாசாரதி ஆனானும் -சங்க வண்ண நம்பி உடன் பின் நடந்து வந்தானும்
முடும்பை உலகாரியனும் மணவாளனும் -கண்ணன் போல் -யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
இனி மாம் என்று தொட்டுரைத்த சொல்லும் த்வயம் சொல்லும் பொருளும் யார் உரைப்பார் -என்று
பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாகவும் உண்டே )
(மார்கழி கேட்டை -திரு அவதாரம்
தநுர் ஜ்யேஷ்டா ஸமுத்பூதம் ஸ்ரீ லோகார்ய பாத ஆஸ்ரிதம்
வந்தே வர குணா வாஸம் வர ஜாமாத்ரூ தேசிகம்
த்ராவிடாம் நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமா கதம்
ரம்ய ஜா மாத்ரு தே வேத தர்சிதம் கிருஷ்ண ஸூநு நா )
மன்னு மணவாள முநி-
இவ்வர்த்தத்தில் பொருத்தம் யுடையவராய்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் என்று
நிலை நின்ற நிரூபகத்தை யுடையரானவர் –
இப்படி திரு நாமத்தை யுடையரான இவர்கள் இருவரும் –
செய்யுமவை தாமும் சில –
இவர்களால் செய்யப் படும் வ்யாக்யானங்கள் தாமும் சில பிரபந்தங்களுக்கு -என்றபடி –
அவை தாமும் –
என்று கீழில் அவற்றோடு சமுச்சயிக்கிறது –
ஸ்ரீ திருப்பாவைக்கும்
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும் -நாயனார் அருளிச் செய்தனதாயும்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு ஸ்வாபதேச வியாக்யானம் ஜீயர் செய்து அருளினதாகவும் கண்டது –
(இது இன்றும் கிடைக்கிறது )
இன்னமும் இவற்றை ஒழிய யுண்டாகிலும் கண்டு கொள்வது –
(பெரிய திருமடல் வியாக்யானம் -நாயனார் அருளிச் செய்ததாக புத்தகம் உள்ளது
முகவுரையில் -நம்பிள்ளை வியாக்யானமாக தெலுங்கு பதிப்பில் உள்ளது –
புத்தூர் ஸ்வாமி இது நாயனார் அருளிச் செய்தது என்பர்
நம்பிள்ளை அருளிச் செய்யும் படி என்ற வாக்கியங்கள் உண்டு
இதனால் கொள்ள முடியாதே -ஈட்டில் இது போலே உண்டே
திரு விருத்தத்துக்கு நம்பிள்ளை வியாக்யானத்திலும் இது போல் நம்பிள்ளை அருளிச் செய்யும் படி -போல் –
இவர் சொல்ல வேறே ஒருவர் பட்டோலை கொள்ள லாமே
நாயனார் அருளிச் செய்த அமலனாதி பிரான் வியாக்யானமும் உண்டு )
(இந்த மூவரையும் தவிர
நம்பிள்ளை -திரு விருத்த வியாக்யானம் உண்டு —
இயற்பா –நான்கு திருவந்தாதிகளுக்கும் – நம்பிள்ளைப் படியும் உண்டே
கண்ணி நுண் சிறுத்தாம்புக்கும் நம்பிள்ளை வியாக்யானம் உண்டு
திரு எழு கூற்று இருக்கை இரண்டு வியாக்கியானங்கள் இருக்கின்றன –
அதில் ஒன்றும் நம்பிள்ளை அருளிச் செய்ததாக இருக்கலாம் –
இவை மா முனிகள் பின்பு கிடைத்து இருக்கலாம் -)
(தத்வ விவேகம் -பிள்ளை லோகாச்சார்யார் சமஸ்க்ருதத்தில் உண்டு –
அயோத்தியில் ராமானுஜ ஜீயர் சிங்கம்மாள்-யோகி பார்த்த சாரதி ஸ்வாமி தர்ம பத்னி இடம்
பகவத் விஷயம் காலஷேபம் செய்தவராம்
அஷ்டாதச ரஹஸ்யம் புத்தகம் -முன்னுரையில் தத்வ விவேகம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது -என்ற குறிப்பு –
அத்தைப் பார்த்தே வேங்கட கிருஷ்ண ஸ்வாமி இத்தை-2005- வெளியிட்டு அருளினார் )
(நம்பிள்ளைப்படி ரஹஸ்ய த்ரயத்துக்கு சமீபத்தில் ஓலைச்சுவடி கிடைத்துள்ளதாம் –
வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி இடம் உள்ளது –
ஆய் ஸ்வாமி ஆச்சார்ய ஹ்ருதயம் எல்லா பிரகரணங்களுக்கும் சமீபத்தில் வெளி உள்ளது )
(இந்தக் காலத்திலும் நமக்கு இப்படி
ஆகவே வியாக்கியானங்கள் சேகரித்து இருப்பதைக் கொடுத்து அருளி
பெரிய உபகாரம் மா முனிகள் அருளிச் செய்துள்ளார் )
———————————————
நாதம் பங்கஜ நேத்ர ராம யமுநாவாஸ்தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேச சந்திர ஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்த யோகி ஜகதார்சார்யௌ ச க்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது
திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –ஸ்ரீ மா முனிகள் அருளியது
(ஸ்ரீ நாத முனிகள் திருவவதாரம்–823- 917-
ஸ்ரீ பங்கஜ நேத்ரர் ஆகிறார் -சீர் உய்யக் கொண்டார் -என்னும்படியான சீர்மையை யுடையவர் –886-975-
அவர்தாம் புண்டரீகாஷர் இறே
ஸ்ரீ ராமர் ஆகிறார் -ஸ்ரீ ராம மிஸ்ரர் -அவர்தாம் மணக்கால் நம்பி-926-1006-
மாலாதரர் ஆகிறார் -குரு மாலாதரர் -என்னும்படி யான திருமாலை யாண்டான்-988-1088-
யோகீந்த்ரம் குருகேச சந்திர ஜலதிம் -அதாவது -குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர்-1017-1137
ஸ்ரீ கோவிந்தர்-1021-1140 –
ஸ்ரீ கூரேசர் -1009-1127–
ஸ்ரீ பராசர பட்டர் –1122-1174
ஸ்ரீ நஞ்சீயர் என்கை –1113-1208–
ஸ்ரீ நம்பிள்ளை –105 திருநக்ஷத்ரம் 1147–1252-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –95-திருநக்ஷத்ரம் 1166–1261-
ஸ்ரீ வடக்குத் திருவீதிப்பிள்ளை–97- -திருநக்ஷத்ரம் 1167-1264-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -1205—1323- -ஜோதிஷ்குடி -கொடிக்குளம் இன்றைக்கு –
ஸ்ரீ நம்பெருமாள் -1323-உலுகான் படையெடுப்பு -1371 மீண்டு எழுந்து அருளி –
ஸ்ரீ நாயனார்–1207–102- திருநக்ஷத்ரம்–1309-
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை-1290–1406
ஸ்ரீ மா முனிகள் -1370–1443-
ஸ்ரீ தேசிகன் 1269-1369
கம்பர் குருகைப்பிரான் திரு நாமம் அடிக்கடி சடகோபர் அந்தாதியில் குறிப்பிடுகிறார்
நம்பிள்ளை சந்நிதி அம்மா மண்டபம் போகும் வழியில் வலது பக்கம் உள்ளது –
பெரியவாச்சான் பிள்ளைக்கு -கருத்துரை மண்டபம் பக்கம் -ஆயிரம் கால் மண்டபம் தாண்டி -கோயிலுக்கு உள்ளே உள்ளது –
மாதவாச்சார்யர் -நஞ்சீயர் பூர்வாஸ்ரம திரு நாமம் –
பட்டர் பெரியபெருமாள் இடம் பிரார்த்திக்க அர்ச்சகர் முகேந ஒன்பதினாயிரம் அருளிச் செய்ய ஆஜ்ஜை
கைசிக புராணம் -நம்பாடுவான் சரித்திரம் கேட்டு பூரிப்பு -மேலை வீடு தந்தோம் -பட்டருக்கு பெரும் பரிசு –
வைத்த அஞ்சல் –இந்த சேவையுடன் அங்கே சேவை சாதிக்க வேண்டும் –
வீற்று இருந்த கோலம் இருந்தால் மூலை கிழித்து வருவேன்
ஆண்டாள் -தாயார் -நலம் அந்தமில் நாடு புகுவீர் -ஆசீர்வாதம்
நஞ்சீயர் சோகிக்க-தர்சனம் ரக்ஷிக்க பிள்ளையை பெறுவீர்
சந்நியாசி -நம்பிள்ளை வருவதை ஸூசகம்
ஸ்ரீ வேத வியாச பட்டர்- ராம பிள்ளை கொண்டு கைங்கர்யம் செய்து
வாக் விஜய பட்டர் -ஸூதர்சன பட்டர் -இவர் வம்சம் -முன்பே பார்த்தோம் –
நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -ஸ்ரீ ராம பிள்ளை திருக்குமாரர்
நம்பூர் -ராமர் சந்நிதி -அருகில் -நம்பூர் வராச்சார்யர் -இருப்பதை
சொப்பனம் சாதிக்க நஞ்சீயர் -ஆள் விட்டு அழைத்து –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
பட்டர் திருவடிகளே சரணம் -எழுதிக் காட்ட
கால ஷேபம் சொல்லி -பிரதி கொடுத்து-நல்ல பிரதி எழுதச் சொல்லி -காவேரி ஆற்றை தாண்ட –
வெள்ளம் பெறுக -ஈஸ்வர ஸங்கல்பம் -ஓலை சுவடு இழந்து
ரெங்கராஜ பெருமாள் இவர் திரு ஆராதனம் பெருமாள் -நஞ்சீயர் அனுக்ரஹம் உமக்கு பூர்ணம் –
இன்னும் ஒரு ஓலைச்சுவடி எடுத்து எழுதச் சொல்ல –
கொண்டு போய் சமர்ப்பிக்க -விலக்ஷணமாக இருக்க -நடந்ததை சொல்ல –
நம்பிள்ளையோ -பட்டர் முன்பு சாதித்தத்தை நினைவு கொண்டு திரு நாமம் சாதித்தார்
ஆயர் தேவு தமது ஆராதனை பெருமாளைக் கொடுத்து
மேல் மேலும் எழுத திரு உள்ளத்தில் மநோ ரதித்து -எல்லா அர்த்தங்களையும் சாதிக்க
100 கால க்ஷேபங்கள் சாதித்தார் -குண திசை பாதம் நீட்டி -நாலு கால் மண்டபம் விஷ்வக்சேனர் அருகில்
இவர் சிஷ்யரே -பின்பழகிய பெருமாள் ஜீயர் -ஆறாயிரப்படி குரு பரம்பரை
பெரியவாச்சான் பிள்ளை
வடக்கு திரு வீதிப்பிள்ளை -ஆனி ஸ்வாதி
பிள்ளை லோகாச்சார்யார்
நாயனார்
நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -சர்வஞ்ஞ பட்டர் என்ற திரு நாமும் உண்டு இவருக்கு -125000 படி சாதித்தார் –
ஈயுண்ணி மாதவாச்சார்யர் -சிறியாழ்வானப் பிள்ளை -மாதவாச்சார்யர் என்ற பெயர் பெற்றார் இவர் –
இவரது திருக்குமாரர் -ஈயுண்ணி பத்ம நாபாச்சார்யர்
இவர் சிஷ்யர் நாலூர் பிள்ளை கோல வராக நாயனார் -இவர் திருக்குமாரர்
நாலூர் ஆச்சான் பிள்ளை -தேவாதிபர் என்ற திரு நாமம் இவருக்கு -இவர்
ஆய் ஸ்வாமிக்கும் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை -திருவாய் மொழி பிள்ளைக்கும் ஈடு சாதித்தார்
ஆளவந்தார் -தவ ராசன் படித்துறை கிழக்கு
அருகில் ஆதி கேசவ பெருமாள்
நம்பிள்ளை மாட திருவீதி
வடக்குத் திரு வீதிப்பிள்ளை -125000 படி கரையானுக்கு இரை ஆனது அறிந்தும் -ஈடு ஏடு படுத்தினார்
நம்பிள்ளை ஆச்சார்யர் திருவடி சேர்ந்ததும்
தூவியும் புள்ளு திருக்குமாரர் தலை ஷவரம் பண்ணி கொள்ள
நடுவில் திரு வீதிப்பிள்ளையும் தலை ஷவரம் பண்ணி கொள்ள –பிள்ளைகளும் சிஷ்யரும் இப்படி –
தாஸன் என்று உணர்ந்து -சர்வாங்க ஷவரம் பண்ணிக் கொள்ள வில்லை -ஷாமணம் வாங்கிக் கொண்டாராம்
நம்பிள்ளை ஈடு சாதிக்க -பெரிய பெருமாளே எழுந்து வந்து -திரு விளக்கு பிச்சன் -அர்ச்சா சமாதி குலைக்கக் கூடாது –
திருவேங்கடத்தான் படம் அருகில் -கீழே சேவித்து -நம்பிள்ளை கோஷ்ட்டி நினைவாக -பின்பே ப்ரதக்ஷிணம் செய்வார்கள் –
போட்டி மனப்பான்மையோ -இப்பொழுது வெளியிட எண்ணம் இல்லை
ஈயுண்ணி மாதவாச்சார்யர்
கந்தாடை தோழப்பர் சொபனம்- -தேவ பெருமாள் –
ஜகத் ரக்ஷணம் அபரோ -மா முனிகள் அவதாரத்தை -ஸூ சிப்பித்து அருளி
ராமானுஜர் வேதாந்த சாஸ்திரம் பிரவர்தனம் செய்து அருளினது போல்
இவரே தமிழ் வேதாந்த சாஸ்திரம் ப்ரவர்த்தனம் செய்வார்
என்று அருளிச் செய்ததும் வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஆனந்தம்
திரு மாளிகை பக்கம் அம்மையார் குடி இருப்ப -பரமபதம் -பண்டம் மாற்று –
ஓலை சுவடி -வாங்கி மூன்றாம் நாள் -பரம பதம் அடைந்தாளாம் )
———-
ஆக
கீழ் தாம் பண்ணின பிரதிஞ்ஞ அனுரூபமாக
வியாக்கியைகள் உள்ளது என்றத்தை உபபாதித்து அருளினவர் –
ஸ்ரீ நம்பிள்ளை செப்பு நெறி – என்று ப்ரஸ்துதமாய்-
சகல திவ்ய பிரபந்த வியாக்யான அர்த்தங்களையும் தனக்கு உள்ளே யுடைத்தாம் படி இருப்பதாய்-
ஏதத் ஸ்ரவணத்தாலே
எல்லாம் ஸ்ரவித்த தாம்படியான ஸ்ரேஷ்டத்தையும் யுடைத்தான-
ஸ்ரீ ஈட்டின் உடைய வரலாற்றையும் (வரவாற்றையும் ) அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
அத்தையும் இரண்டு பாட்டாலே
எல்லாரும் அறியும் படி இவர் ஸ்ரீ ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் -என்று சொல்லுகிற அடைவே
அருளிச் செய்கிறார் –
(ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் -ஏக விஞ்ஞானம் சகல விஞ்ஞானம் –
ஸ்வேதகேது -சாந்தோக்யம் ஸத்வித்யா பிரகரணம் -போல்
ஈட்டை அறியவே அருளிச் செயல்கள் அனைத்தையும் அறிந்தது ஆகுமே
நஞ்சீயர் பூர்வாஸ்ரம திரு நாமம் மாதவாச்சார்யர் சாற்றியதால் இவர் மேல் ஈடுபாடு உண்டே )
சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் –48-
ஈட்டு ஓலைச் சுவடியைக் கொடுத்தார் -என்றபடி –
முன்பே கால ஷேபம் பண்ணி அருளினார் அன்றோ
தாம் கிருஷ்ண பாத லிகிதாம்
சடவைரி வேத வாக்யாம்
ததத்வ மஹதி மிதி கிருஷ்ண பாதாத்
ஆதாய தேசிக வர
கலி வைரி தாஸ
பிராதத்த
மாதவ குரு தயமான சேத
சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
இவருக்கு சீர் ஆர்ந்து இருக்கை யாவது –
ஆச்சார்ய பிரசாதத்தாலே-அவர் அருளிச் செய்த அர்த்த விசேஷங்களை எல்லாம்
தெரிந்து
எழுதி
எல்லாருக்கும் உபகரிக்கும் படியான ஞாநாதி குண பூர்த்தியை யுடையராய் இருக்கை-
அன்றிக்கே –
திரு வீதிக்கு விசேஷணம் ஆம் போது
சீரார் நெடு மறுகு-( 7-9-10 ) -என்னுமா போலே
இவர் தொடக்கமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயால் பூரணமாய் இருக்கிறது -என்றுமாம் –
வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளையும் யுண்டாகையால் அவர்களில் வ்யாவ்ருத்தி –
அவர் எழுந்து அருளி இருக்கிறதுக்கு வடக்கு திரு வீதியிலே யாய்த்து இவர் எழுந்து அருளி இருக்கிறது –
அது தான் தவ ராஜன் துறைக்கு அருகான
ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு அடுத்து அணித்தாய் இருக்கும் –
இப்படி வ்யாவ்ருத்தமான ஸ்தலத்திலே யாய்த்து இப்படி வியாக்யானம் செய்து கொண்டு எழுந்து அருளி இருப்பது –
(ஈடு கேட்ட இடம் திருவரங்கன் கோயிலுக்கு உள்ளே அன்றோ )
ஆகையால் அதுவே நிரூபகம் ஆய்த்து இவர்க்கும் –
இவர் ஆச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கும் -மாடத் திரு வீதிப் பிள்ளை என்றே நிரூபகம் –
கோயிலில் வாழும் வைட்டணவன்-( பெரியாழ்வார் -5-1-3)–என்னுமா போலே
இப்படி ஞான வர்த்தகமான தேசத்தை இட்டே நிரூபிக்கும் படியாக இருக்கிற இவர் –
எழுது ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென வாங்கி –
அதாவது – ஸ்ரீ நம்பிள்ளை செப்பு நெறி தன்னை -இறே இவர் எழுதியது –
ஆகையாலே எழுதின மாத்ரத்தைக் கொண்டு ஸ்ரீ பிள்ளான் முதலாரோடு சஹ படிதர் ஆய்த்து –
இத்தால் முழுதும் நம்பிள்ளை யுடைய ஸ்ரீ ஸூக்தி இறே –
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னை –
ஏரார்ந்த தமிழ் மறை என்கிறபடியே
விலஷணமான சப்தார்த்த சந்தர்ப்பங்களால் வந்த அழகின் மிகுதியை யுடைத்தாய்
திராவிட ரூபமான வேதத்தின் உடைய வியாக்யானத்தை –
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தான் ஆனைக் கோலம் செய்தாப் போலே அத்ய ஆகர்ஷகமாய் இறே இருப்பது –
அத்தைப் பற்ற எரார்ந்து இருக்கை ஈட்டுக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஈடு தனைத் தாரும் என வாங்கி –
இப்படி அதி மநோ ஹரமாம் படியான ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரத்தையும் எழுதி
ஸ்ரீ நம்பிள்ளை சந்நிதியிலே வைக்க
அப்போது அத்தை அவிழ்த்து திருக் கண் சாத்தி
போரவும் உகந்து
ஆனாலும் நம்முடைய காலத்திலே
நம்முடைய அனுமதியும் இன்றிக்கே எழுதினீர்
இப்படி எழுதின நம்முடைய கிரந்தத்தைத் தாரும் -என்று அவர் திருக் கையில் நின்றும் வாங்கி –
முன் நம்பிள்ளை –
பூர்வ காலத்திலே முற்காலத்திலே நம்பிள்ளை
அதாவது
சிஷ்ய ஆச்சார்ய ஸூவ்யவஹார க்ரமம் நன்றாக நடந்து போருகிற அந்த க்ரமத்தை
நன்றாக நடத்திப் போருகிற
ஸ்ரீ நம்பிள்ளை –
ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்-
பின் – தம்முடைய சந்நிதியிலே வைத்த பின்பு –
ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார்-
அதாவது
ஸ்ரீ ஈ யுண்ணி என்கிற குடியிலே திரு அவதரிதவராய் தம்முடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்த அநந்தரம் –
ஸ்ரீ மாதவப் பெருமாள் -என்று
தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ நஞ்சீயர் உடைய திரு நாமத்தைச் சாற்றப் பெற்றவராய்
தமக்கு அத்யந்த அபிமத விஷயமாய் இருக்கிற அவர்க்கு –
தாம் கொடுத்தார் பின்-
ஸ்ரீ மாதவ சிஷ்யர் -என்றும் –
சீ மாதவனடிக்கு அன்பு செய்யும் -என்றும் அத்தையே நிரூபகமாக யுடையராய்
(நெஞ்சத்து இருந்து –நிரந்தமாக நிரந்தரம் உய்க்கும் வஞ்சக் குறும்பை அறுத்தேன்
மாய வாதிகள் தாம் அஞ்சப் பிறந்தவன் ஸீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் நம்பிள்ளை)
ஸ்ரீ திருவாய் மொழிக்கு முப்பத்தாறாயிரம் கிரந்த சங்க்யையாம் படி உபன்யசித்து அருளின தாம்
இவர் பேறு பெறும்படி கொடுத்தார் –
தம் தாம் ஸ்வத்தை தம் தாம் வேண்டினவர்களுக்கு விநியோக்கிகுமா போலே
இத்தை ஒருவருக்கும் பிரகாசியாதே அனுசந்தித்துக் கொண்டு போரும் -என்று
அவர் கையிலே காட்டிக் கொடுத்தார் –
ஸ்ரீ மாதவப் பெருமாளுக்கு இந்த மஹத் ஐஸ்வர்யத்தைக் காட்டிக் கொடுத்தார்-
(ஈயுண்ணி மாதவப் பெருமாள் – கார்த்திகை மாசம் பரணி நக்ஷத்ரம் – திரு அவதாரம் –
கார்த்திகே பரணீ ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
வேதாந்தத் த்வய ஸம்பந்தம் மாதவார்யம் அஹம் பஜே )
(நஞ்சீயர் மாதவ முனி –
வரதார்யா தயா பாத்ரம் ஸ்ரீ மாதவ குரும் ஆஸ்ரயே
குருகாதீச வேதாந்த சேவோன் மீலித வேதனம்
யது வச -சகலாம் சாஸ்திரம்-யத் க்ரியா வைதிக விதி –
யத் கடாஷோ ஜகத் ரக்ஷை தம் வந்தே மாதவ முனிம் )
பின் –
அவர் திரு முன்பே வைத்த அனந்தரத்திலே-
அதனைத் தான் –
அப்படி அனுமதி இன்றிக்கே எழுதின கிரந்தத்தைத் தான் –
முழுச் சொல் இருக்கிறபடி –
(ஈட்டைத் தானாகிய நம்பிள்ளை என்று பிரிக்க வேண்டாம் என்ற படி )
ஆகையால்
இப்படி சீரியதான அர்த்தத்தை சீ மாதவர் இடத்திலே மேல் எல்லாருக்கும் உதவும் படி
சேமித்து வைத்து அருளினார் ஆய்த்து –
(ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே ஸ்ரீ சிறியாழ்வானப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள்
தமது திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாப பெருமாளுக்கும்
அவர் தம் சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கும்
அவர் தம் திருக்குமாரர் நாலூர் ஆச்சான் பிள்ளைக்கும்
அவர் திருவாய் மொழிப்பிள்ளைக்கு ப்ரசாதித்து அருள
இப்படி ஐந்து தலைமுறையாக ஓராண் வழியாக திருவாய் மொழிப்பிள்ளை பெற்றதை மா முனிகள் பெற்று
பார் உலகில் ஆசை உடையார்க்கு எல்லாம் ஆகும்படி மா முனிகள் -ஈட்டுப் பெருக்கர் பண்ணி அருளினார் )
——————————————————-
இப்படி ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
ஸ்ரீ சிறியாழ்வான் அப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாளுக்கு -பிராப்தமான ஸ்ரீ ஈடானது –
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அளவும்
சம்ப்ரதாயமாக நடந்து வந்த படியை அருளிச் செய்கிறார் -( மா முனிகள் )
ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-
ஆங்கு அவர்பால் பெற்ற -நம்பிள்ளை இடம் பெற்ற
சிறியாழ்வான் அப் பிள்ளை-இவரே ஈயுண்ணி மாதவாச்சார்யர்
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -ஈயுண்ணி பத்மநாபாசார்யர்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் -கோல வராஹ நாயனாருக்கு -இவரே -நாலூர் பிள்ளை-சதுஷ் கிராமம் –
இவருக்கு பத்ம நாபாச்சார்யார் கொடுத்தார்
நல்ல மகனார்க்கு அவர் தாம்-தேவாதிபர்-தேவ ராஜர் என்கிற நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இவர் தந்தையான நாலூர் பிள்ளை கொடுத்தார்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-மேலோர் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை -ஆய் ஜனனாச்சார்யர் -திருவாய் மொழிப்பிள்ளை –
மூன்று வம்சத்தாரும் இன்றும் உள்ளார்கள் -இவர்களுக்கு நாலூர் ஆச்சான் பிள்ளை கொடுத்தார்
(கூர குலோத்தம தாசர் மூலம் திருவாய் மொழிப் பிள்ளையை திருத்திப் பணி கொண்டார்
1-கூர குலோத்தம தாசர்-2- திருக்கண்ணணங்குடி பிள்ளை -3-திருப்புட் குழி ஜீயர்
4-விளாஞ்சோலைப்பிள்ளை 5-நாலூர் பிள்ளை -6-மணல்பாக்கத்து நம்பி 7-கொல்லி காவல தாசர்
8-திருவாய் மொழிப்பிள்ளையின் திருத்தாயார் -9-கோட்டூரில் அண்ணர் -10-முதலி ஆண்டான் வம்சத்தவர் திருக்கோபுரத்து நாயனார்
கூட சென்றவர் -இனி நிர்வாக திறல் உள்ளவரை சம்பிரதாயத்துக்கு ஆக்க கூர குலோத்தம தாசர் இடம் ஆணை
நாலூர் ஆச்சான் பிள்ளை இடம் கால ஷேபம் -முடித்து -நம்மாழ்வாரை சேவிக்க ஆவல் தூண்ட
நம்மாழ்வார் நம்பெருமாள் கோழிக்கோட்டில் சேர்ந்து – -திருகணாம்பி -சேனை கிடாம்பி -மூன்று சேர்ந்த இடம்
படகு அசைந்து நம்மாழ்வார் கீழே -கருடன் வட்டம் இட்டு காட்டி மீட்டு
சேவைக்கு கேரளா வந்து -கடிதங்கள் பரிமாறி மீண்டு எழுந்து அருளப் பண்ணி –
சதுர் வேத மங்கலம் அமைத்தவர் திருவாய் மொழிப் பிள்ளை )
தாம் மாதவ புனர் உபாகுரு
ஆத்ம ஸூ நு
கருணாக்ய
வராக ஸூரே
ச அபி
ஸூகீய தனயஸ்யா உதார
ச அபி
அநுஜித்
ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு சிறு பெயர் சிறியாழ்வான் அப் பிள்ளை-
நான்கு ஊர் சேர்ந்தவை நாலூர் -பெருமாள் கோயில் பக்கம் –
ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை –
ஆங்கு –
அந்த திவ்ய கோஷ்டியாய் இருக்கிற அவர் திரு முன்பே
அன்றிக்கே
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருக் கையில் நின்றும் வாங்கின அத் தசையிலே -என்னவுமாம் –
(வாங்கிய அன்றே என்றும் மாதவ பெருமாள் நம் பெருமாள் இடம் பிரார்த்திக்க பின் பெற்றார் என்றுமாம் )
அவர் பால் பெற்ற –
அந்த கோஷ்டிக்கு நாயகமாய் அந்த ஸ்ரீ ஈட்டுக்கு பிரதான வக்தாவான ஸ்ரீ நம்பிள்ளை இடத்திலே –
நிதி பெற்றால் போலே
உறு பெரும் செல்வம் -அடியாக–(ராமானுஜ -19)- வந்த அர்த்தத்தைப் பெற்றவர் ஆய்த்து –
இவர் தாம் – ஒரு தேசமும் தேசிகரும் கோசமும் இருந்தபடி –
(தேசம் -ஆங்கு கோயில்
தேசிகர் -அவர் பால்-நம்பிள்ளை
கோசம் -ஈடு )
சிறியாழ்வான் அப் பிள்ளை -தாம் –
இவருடைய சிறு பேர் இருக்கிறபடி –
இப்படியான இந்த நிதியைப் பெற்றுடைய –
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –
சஞ்சிதம் காட்டுவாரைப் போலே ஸ்ரீ மாதவப் பெருமாளான தாம் –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் என்று நிரூபகமாய் இருக்கிற
தம்முடைய திருக் குமாரர் திருக் கையிலே காட்டிக் கொடுத்தார் –
அதாவது –
அவருக்கு ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரத்தையும் பிரசாதித்த பின்பு
அவர் திருக் கையிலே திரு வாராதனமாய் இருந்த ஸ்ரீ கோசத்தையும்
காட்டிக் கொடுத்தார் -என்கை-
ஆகை இறே மாதவ பத்ம நாப (ஈட்டு தனியன் )-என்றது –
(ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -தனியன்
ஏந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூரேர் வாணீ கணார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரய )
இப்படி இவர்கள் இரண்டு பேருடைய காலத்திலும் ஓராண் வழியாக உபதேசித்துக் கொண்டு
ஸ்ரீ கோசத்தையும் பிரகாசிப்பியாமல்
ஸ்ரீ கோயில் ஆழ்வாரில் திரு வாராதனமாய்ப் பேணிக் கொண்டு
ஸ்ரீ நம் பிள்ளையினுடைய நியமனத்தின் படியே நடந்து போந்தது ஆய்த்து
திருவாய் மொழியின் ஈடு தான் –
இப்படி நிதியை நோக்கிக் கொண்டு போருமா போலே
இத்தை நோக்கிக் கொண்டு போந்தது தான்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பட்டர்கள் திரு வீதியில் திரு மாளிகையில் ஆய்த்து –
(ஸ்ரீ ரெங்க ராஜ வீதி -பட்டர்கள் திரு வீதி காஞ்சிபுரம்
சம்பிரதாய ரக்ஷணம் தேவப்பெருமாள் -திருமங்கை ஆழ்வாருக்கும் -ராமானுஜருக்கும் ரக்ஷித்து
கைங்கர்யம் கொடுத்து வளர்த்து பின்பு அரங்கனுக்கு -சொத்தை விட்டு கொடுத்தவரும் இவரே – )
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் –
அதாவது –
ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
அவரை
பிரணி பாத
நமஸ்கார
பிரிய வாக்குகளாலே
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -(பெரியாழ்வார் -4-4-)
அவரை மிகவும் உகக்கப் பண்ணி
இப்படி பல சாதன ஸூஸ்ருஷையை யுடையராய் இருக்கிற
ஸ்ரீ நாலூர் பிள்ளைக்கு –
ப்ரணி பாத பிரசன்னராய் இருக்கிற ஸ்ரீ பத்மநாபப் பெருமாள்
ஸ்ரீ ஈட்டை இவர் ஒருவருக்குமே ஓராண் வழியாக
முன்பு நடந்து போந்த படியே பிரசாதிப்பதாக
இவரை ஸ்ரீ பேரருளாள பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
பிரமாண புரஸ்ஸரமாய் ஸூழரவு கொண்டு சொல்ல வேணும் என்று
ஸ்ரீ சடகோபனை அர்ச்சக முகேன இவர் திரு முடியிலே ஊன்றி வைக்க –
(நின் ஆணை திரு ஆணை அழுத்தி நம்பிள்ளை ஆணை படியே வேர் ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது என்று )
(சதுர்க்ராமோத்பவம் ஸ்ரீ மத் ராமாவரஜ கிங்கரம்
சர்வதா த்வய சந்நிஷ்டம் கோலாஹ்வயமஹம் பஜே -என்றும்
ஸ்ரீ மத் ராமானுஜ தாஸ பாத யுக்ம முபாஸ்மஹே
சடகோபார்யா வாணீ நாமர்த்த தாத்பர்ய சித்தயே-என்று இறே இவர் விஷயத்தில் தனியன்கள் இருப்பது
ராமானுஜ தாசர் என்ற திரு நாமமும் கோல வராகர் -நாலூர் பிள்ளைக்கு உண்டாம் )
(யா பத்ம நாப குருதஸ் சடஜிந் முநீந்திர ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மதிகம்ய சம்ருத்த போத
தத் தேவராஜ குரவே ஹ்யதி சச்சதுஷ் பூர்வாசேத்த கோலவர தேசிகம் ஆஸ்ரயே தம் –
என்று இ றே இவர் சம்ப்ரதாய க்ரமம் இருப்பது-)
அவர் அதனை ஒருவருக்கும் வெளி யிடாமைக்கு ஊன்றி வைக்கிற ஆகாரத்தை
பாவஞ்ஞரான இவர் அறிந்து –
ஸ்ரீ பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து
தம் திரு முடியிலே வைத்த அந்த ஸ்ரீ சடகோபனை
ஸ்ரீ அருளாளர் திருவடியை ஊன்றினவர்-என்னும் படி தம் திருக் கையாலே ஊன்றி
சம்ஜ்ஞை பண்ணின அது –
சர்வஞ்ஞரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே உற்று இத்தை நீர் எல்லாருக்கும் பிரகாசிப்பியும் என்று
அர்ச்சக முகேன திவ்ய ஆஞ்ஞை இட்டு அருள
அத்தைக் கேட்ட ஸ்ரீ பத்மநாபரும் எண்ணினவாறு ஆகாமையாலே-(10-6-3)
திரு உள்ளமான படி -என்று
பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை –
(யஸ்ய பிரசாத கலயா –பேச முடியாதவன் பேசி -பேர் அருளாளன் -வரத ராஜன் -அவர் -நம்பூர் வரதர் நம்பிள்ளை
அஸ்மாத் துல்யோ பவதி -பெரியோர் முடிவு ச வாசனமாக முந்திய நிஷ்டையை மாறப் பண்ணுமே )
இவர் இத்தை எல்லாருக்கும் வெளியிட வேணும் என்கிற தம்முடைய
பர சம்ருத்ய ஏக பிரயோஜனதா ரூபமான திரு உள்ளக் கருத்தாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாளைக் குறித்து பிரதஷிண நமஸ்காராதிகளைப் பண்ணியும்
அ நதிக்ரமண ஹேதுவான
சரண க்ரஹணம் பண்ணியும் ஆய்த்து இவர் இப்படி அர்த்தித்தது
அவரும்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதர் ஆகையாலே இப்படி செய்து அருளினார் –
ஆகை இறே –
ஸூமன கோலேச தேவாதிபான் -என்று அருளிச் செய்தது –
(தீஷிதம் வீக்ஷிதம் விரத ஸம்பன்னாம் )
அப்படியே ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும் ஸ்ரீ அரங்கர் தம் தாளை ஊன்று வித்து இறே
ஸ்ரீ திருவாய் மொழியின் ஈட்டைப் பிரவர்த்திப்பித்தது –
சரணாப்ஜ சமர்ப்பணாத் தர்சயந்து க்ரஹாந அர்த்தான் த்ரமிடோப நிஷித்கிராம் -என்னக் கடவது இறே-
(ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும்-மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை
ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ நம்பிள்ளையும் முன்னம் திரு உள்ளம் சமாதானம் படுத்தினார் )
நல்ல மகனார்க்கு அவர் தாம் –
அந்த ஸ்ரீ நாலூர் பிள்ளையும் தம்முடைய திரு உள்ளக் கருத்தின் படியே
ஸ்ரீ பெருமாள் தலைக் கட்டி அருளுகையாலே
பெற்றுப் பேரிடும்படியான அந்த உபகாரத்துக்கு -தமக்கு குமாரர் திரு வவதரித்த உடனே –
ஸ்ரீ தேவப் பெருமாள் -என்று திரு நாமம் சாத்த –
இப்படி பேர் பெற்று சகல கலா பூரணராய் வளர்ந்து போருகிற –
நல்ல மகனாரான -ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இத்தை வர்திப்பித்துக் கொண்டு போரும் என்று
ஈட்டை பிரசாதித்து அருளினார் –
அவர் சௌ மனஸ்யம் போலே யாய்த்து இவர் குணசாலி யானதும் –
(ஸூ மானஸ கோலேஸர் அவர் இவர் குணசாலி )
அன்றிக்கே –
இவர் ஸ்ரீ அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்றதுக்கு
இவர் -என்று ஸ்ரீ பத்ம நாபரைச் சொல்லி
அவருடைய அருளை யுடையவர் என்று ஸ்ரீ நாலூர் பிள்ளையைச் சொல்லி –
திருவடி ஊன்றினவர் என்று ஈட்டை பிரசாதிக்கும் படி ஸ்ரீ நாலூர் பிள்ளையாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள் திருவடி ஊன்றப் பட்ட ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைச் சொல்லி –
அப்படி திருவடி ஊன்றின ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் -என்று
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையைச் சொல்லுகிறது என்றும் அருளிச் செய்து போருவர்கள் –
(ஸூ தம் கோல வராஹச்ய குருகாதீச பூர்வஜம்
சாந்தம் சத்வ்ருத்த நிரதம் தேவராஜ மஹம் பஜே -என்றும்
நமோஸ்து தேவராஜாய – என்னும்படி இறே நாலூர் ஆச்சான் பிள்ளை வைபவம் இருப்பது )
(யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
திருமலை -பெயரால் கூர குலோத்தம தாஸரல் திருந்தி -திருக்கண்ணங்குடிப்பிள்ளை மேலோட்டமாக சொல்ல –
திருப்புட் குழி ஜீயர் இதன் கேட்க வர -அவர் பரமபதிக்க-இவர் பேர் அருளாரை சேவிக்க –
இவருக்கு ஸ்ரீ சடகோபனை அழுத்தி சாதித்து ஈட்டைப் ப்ரசாதிக்க ஆஜ்ஜை வந்தது – திருவாய் மொழிப் பிள்ளை ஆனார்)
இந்த யோஜனை
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு -என்கிறதுக்கு மிகவும் சேர்த்தியாய் இருக்கும் —
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு –
என்று -அதாவது –
கீழில் அவர்களைப் போல ஓராண் வழியாக நடத்துப் போருகை அன்றிக்கே
தம்முடைய ஔதார்யத்தாலே ஸ்ரீ கோல வராஹப் பெருமாளாலே கொடுக்கப் பட்ட ஸ்ரீ தேவப் பெருமாளான தாம் –
ஸ்ரீ திருமலை ஆழ்வாரைக் கைக் கொண்டு அருளி
அவர் தொடக்கமாக
ஸ்ரீ திரு நாராயண புரத்து ஆய்- பிள்ளை இவர்களுக்கும் பிரசாதித்து அருளினார் –
ஆகை இறே மேலோர் -என்று பஹு வசனம் பிரயோஹம் பண்ணி அருளிற்று –
(ஸ்ரீ ரெங்க ராஜ வீதியில் ஈடு சாதிக்க ஆரம்பித்து –இத்தைக் கேட்டு ஆய் ஸ்வாமி –
ஸ்ரீ சானு தாசர் -மலைத் தாழ்வாரையில் கைங்கர்யம் செய்தவர் –
ஆய் -ஜநநி- ஆய் ஜனனாச்சார்யர் -வழக்கு ஆனது –
மேல் கோட்டைக்கு கூட்டிச் சென்று பூர்த்தி ஆனது – )
த்ரேதா ப்ரவர்த்ய புவி ய பிரதயாம் சகாரா -என்று அவர் தனியனிலும் யுண்டு இறே
ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்தமாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண சயஸ்த்ரிதைவம் -என்றும் சொல்லக் கடவது இறே –
(நாலூர் ஆச்சான் பிள்ளை தனியனின் மூவருக்கு கால ஷேபம் செய்தவர்
த்ரி பதக -மூன்று லோகத்திலும் ஓடும் கங்கை போலெ இதுவும் மூவர் இடம் )
(கோலாதிபாத் பிதுரவாப்ய சஹச்ர கீதேர் பாஷ்யம் ஹி பூர்வதர தேசிக வர்ய குப்தம்
த்ரேதா ப்ரவர்த்ய புவி ய ப்ரத யாஞ்சகர தம் தேவராஜ குருவர்ய மஹம் ப்ரபத்யே -என்றும்
ஸ்ரீ சைல நாத குரு மாத்குரு ரூத்த மாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண ஸ யஸ் த்ரி தைவம்
வ்யக்தஸ் சடாரிகிருத் பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவே புங்க வேஷூ –என்றும்
தேவாதிபாத் சமதிகம்ய சஹச்ர கீதே பாஷ்யம் நிகூடமதய ப்ரத யாஞ்சகார
குந்தீ புரோத்பவமும் சரணம் பஜே தம் ஸ்ரீ சைல முரு பக்தி பருத்தும் சடாரௌ-என்றும்
தேவாதி பாதாதி கதம் பாஷ்யம் பராங்குச ஸ்ருதே
ப்ராவர்த்தயத் யச்சேவ தம் சடஜித் ஸூக்தி தேசிகம் -என்றும்
ஸ்ரீ தேவ ராஜ குருதோ த்ரவிடாக மாந்த பாஷ்யம் ஹ்வவாப்ய புவி ய ப்ரத யாஞ்சகார
தம் யாதவாத்ரிபதி மாலய சமர்ப்பணைக நிஷ்டம் பஜேய ஜநநீ குரு மஸ்மாதார்யம்-என்றும்
சொல்லக் கடவது இறே-)
அவரே மிக்கு –
என்கையாலே-இவர்களுடைய அர்த்தித்வமும் மிகை என்னலாம் படி
தம்முடைய ஔதார்யத்தாலே
தாமே கைக் கொண்டு அருளி
அருளிச் செய்தார் என்னுமது தோற்றுகிறது –
அவ்வளவும் அன்றிக்கே –
அருளிச் செயல் அனைத்துக்கும்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளை பிரசாதித்து அருளினதுக்கு
த்யோதகமாக
மாற்றுத் தாய் -என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ ஜீயர் தாமே ஸூசிப்பித்து அருளினார்
ஜீயர் தாமே அருளிச் செய்த பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானத்திலும்
பல இடங்களிலும்
ஸ்ரீ நாலூர் பிள்ளை பிரசாதித்ததாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் -என்று
இறே அருளிச் செய்து அருளுவது –
(மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3 9-4 –
மா முனிகள் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –
சம்ப்ரதாயத்திலும் வந்தால்-
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் கேட்ட ஸ்ரீ சிறிய ஆழ்வான் அப்பிள்ளை குமாரர் பக்கலிலே கேட்ட ஸ்ரீ நாலூர் பிள்ளை
அருளிச் செய்தது ஆகையாலே பிராபல்யம் உண்டு
அவர் தாம் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை திரு தமப்பனார் ஆகையாலே ஸ்ரீ பிள்ளைக்கு பரம ஆச்சார்யரும் இறே
ஆகையால் அந்த யோஜனை முற்பட எழுதி
ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்த யோஜனை பிற்பட எழுதப் பட்டது)
பிதா புத்ரர்களுக்கு ஸ்ரீ திருவாய் மொழி முகேன யுண்டான–சிஷ்ய ஆச்சார்ய சம்பந்தம்–
1-ஸ்ரீ கூரேச ஸ்ரீ பட்டார்யர் இடங்களிலும்
2-ஸ்ரீ அபய ப்ரதராஜ தத் புத்ரர்கள் இடங்களிலும்
3-ஸ்ரீ கிருஷ்ண பாத ஸ்ரீ லோகாச்சார்யர் இடங்களிலும்
4-ஸ்ரீ மாதவ ஸ்ரீ பத்மநாபர் இடங்களிலும்
5-ஸ்ரீ கோலேச ஸ்ரீ தேவாதிபர் இடங்களிலும்–தர்சிப்பிக்கலாய் இருக்கும் –
ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வாராலே –
ஸ்ரீ திருமலை ஆழ்வார் தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு (ஆர்த்தி பிரபந்தம் ) -என்னும்படி
அங்கீ க்ருதரான ஸ்ரீ ஜீயரும்
ஆர்யாஸ் ஸ்ரீ சைல நாதாத் அதிகத சடஜித் ஸூக்தி பாஷ்யோ மஹிம் நா -என்றும்
ஆசிஸ்ருய தயம்பூய ஸ்ரீ சைலாதீச தேசிக அசேஷந ஸ்ருணோத் திவ்யான் பிரபந்தான் பந்த நச்சித -என்னும் படி
ஸ்ரீ திருவாய் மொழி முதலான அசேஷ திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களையும்
அவர் உபதேச முகத்தாலே லபித்தருளி
அநந்தரம் அவற்றை சர்வ லோக பிரசாரம் யுண்டாம் படி நடத்தி அருளினார் இறே
ஆர்யாச்ச் ஸ்ரீ சைல நாதா திகத சட ஜித் ஸூ க்தி பாஷா மஹிம் நா யோகீந்தரஸ் யாவதாரோ
அயமிதி ஸ கதிதோ யோ ரஹச்ய பிரபந்தான் வ்யாக்யாத் வா நாதரி யோகி பரவர வராத நாராயணாத் யைஸ்
ஸ்வ சிஷ்யைஸ் சாதா நீத் சம்ப்ரதாயம் வரவர முநிபம் நௌமிதம் துங்க போதம் -என்னும்படி இறே பெரிய ஜீயர் பிரபாவம் இருப்பது
பின்பும் –
யோ அவாப்ய சௌம்ய வர யோகி வரச் சடாரி ஸ்ரீ ஸூக்தி பாஷ்ய மத தத் பிரதிதம் விதேநு
தான் –பட்ட நாத முனி வான மஹாத்ரி யோகி வாதூல வமச்ய வரதார்யா முகன் பஜாமா -என்னும்படி
சௌம்ய ஜாமாத்ரு முனி வர்யர் சம்ப்ரதாயம் நடந்து போரும்படி இதுவாயிற்று-
(பட்ட நாத முநி -பட்டர் பிரான் பரவஸ்து ஜீயர்
வான மஹாத்ரி யோகி-ஸ்ரீ வான மா மலை ஜீயர்
வாதூல வம்ச்ய -கோயில் அண்ணன்
வரதார்யா முகான் -எறும்பி அப்பா )
——
கஸ்தூரி திரு நாமம் தான் சாத்திய மாலை நம்மாழ்வாருக்கு இன்றும் திருமுடி சேவை
திருவடி தொழுத பின்பு அருளுவார் -வட்ட மணை முத்துச்சட்டை முன்பு கொடுத்தது போல் –
நம்பெருமாள் வடக்கே போக -வட மேற்கு திசையில் போக –
நம்மாழ்வார் -தென் கிழக்கே -தென் மேற்கு திசையில் போக
(நவ திருப்பதி பெருமாள்களும் நம்மாழ்வார் உடன் சென்றதாகவும் சொல்வர் )
தோழப்பர் -திருமலை ஆழ்வார் இடம் சொல்ல -ராஜ புரோகிதராய் இளவரசனுக்குப் பதில் நாட்டை ஆண்டு இருந்தவர் –
செல்வ நம்பி பாண்டிய மன்னன் இடம் இருந்தது போல் இவர் இருக்க
முந்திரிப்பூ மலையில் இருந்து -மலை பள்ளத்தாக்கு –
இடைச்சேரி அருகில் இன்றும் அடுக்கு மலைத் தொடர் சென்று பார்த்து க்ருதஜ்ஜத்தை செலுத்த வேண்டும்
வகுளா பரண பட்டர் -போல் இவருக்கும் இன்றும் ஆழ்வார் திரு நகரியில் மரியாதை
கருட பக்ஷி காட்டக் கண்டார் -தோழப்பர் –
பாறை தட்டி கீழே விழுந்து ஆச்சார்யர் திருவடி சேர
அங்கேயே சம் ப்ரோக்ஷணம் செய்தார்கள்
திருகதம்ப புரம் -திருக் கணாம்பி -கூடலூர் வழியே சென்று –
1371-வைகாசி -17 -நம்பெருமாள் திரும்பி வந்த நாள்
1323-கிளம்பியது -ஜோதிஷ்குடி
1323-1325 -திருமால் இருஞ்சோலை
1325-1326–கோழிக்கோடு
1326-1328-சேனை கிடம்பை -திருக்கதம்ப புரம்
மேல்கோட்டை 28-43- மேல்கோட்டையில் 15 ஆண்டுகள்
44-70 ரெங்க மண்டபம் -26 ஆண்டுகள்
கோபண்ணாராயன் உதவியால்
செஞ்சிக்கு வந்து -பரிதாபி வருஷம் –
பிரமாணம் ரக்ஷணம் இதுக்கு நடுவில் நடக்கிறது
நம்பெருமாளை வியர்க்க சாமரம் வீசும் கைங்கர்யம் திருவாய் மொழிப்பிள்ளை திருத்தாயார் அந்தரங்க கைங்கர்யம் –
விளாஞ்சோலை பிள்ளை
கூர குலோத்தமை தாசர்
திருப்புட் குழி ஜீயர்
திருக்கண்ணங்குடி பிள்ளை
அடியேன் செய்யும் விண்ணப்பம் -திரு விருத்தம் பாட கூர குலோத்தம தாசர் -காணாமல் போக -உமிழ்ந்து
தயார் படுத்தி கொடுக்கும் பொறுப்பு -உணர்ந்து –
திருமண் காப்பு சாத்தும் சமயம் மட்டும் கால ஷேபம் -நடக்க
ஒரு நாள் விட்டு -தானே காலால் நடந்து அபசாரத்துக்கு ஷாமணம்
லௌகிக பற்று விட்டு -முழு அர்த்தங்களை கேட்க த்வரை மிக்கு -ராஜ்ய வியாபாரம் துறந்து
திருப்புல்லாணி அருகில் சிக்கிலி கிராமம் உபதேசம்
தனக்கு அந்திம காலம் வருவதை உணர்ந்து
விளாஞ்சோலை பிள்ளை இடம் ஸ்ரீ வசன பூஷணம் அர்த்தம்,
திருக்கண்ணங்குடி பிள்ளை இடம் திருவாய் மொழி அர்த்தம்
லோகாச்சார்யா கிருபா பாத்திரம் -கௌண்டின்ய கோத்ரம் – ஸமஸ்த ஆத்ம குண சாலி
ஐப்பசி திருவாதிரை அவதாரம் கூர குலோத்தம தாசர் –
துலார் த்ராயாம் ஸமுத் பன்னம் வந்தே லோகார்ய ஸம் ஸ்ரீ தம்
ஸ்ரீ சைலேச குரோர் ஞான ப்ரதம் கூர குலோத்தமம் -இவர் தனியன்
திருக்கண்ணங்குடி பிள்ளை இடம் திருவாய் மொழி அர்த்தம் கேட்டார்
தமக்கு வயசு மிக்கு -தினவு கெட உபதேசிப்பார் திருப்புட் குழி ஜீயர் என்று காட்ட அங்கே சென்றார்
இவர் வந்த அன்றே ஜீயர் பரமபதம் -12 நாள் -காஞ்சி புரம் –
நாலூர் பிள்ளையும் நாலூர் ஆச்சான் பிள்ளையும் அங்கே வர –
கோயில் திருமலை ஆழ்வார் -பாண்டிய அரசர் என்று அங்கு உள்ளோர் சொல்ல
சடாரியை ஊன்றி- தன்னுடைய விரலால் இவரும் ஊன்றி-தேவ பெருமாள் ஆணை நாலூர் பிள்ளை இடம் –
நாலூர் ஆச்சான் பிள்ளை என்னும் தேவ ராஜர் இடம் காஞ்சி புரத்திலே சொல்ல
சம்ப்ரதாயம் வளர்த்த பேர் அருளாளன் –
திரு நாராயண புரத்தில் -கால ஷேபம் தொடர்ந்து
த்ரேதா ப்ரவர்த்ய புவி ய பிரதயாம் சகாரா -என்று அவர் தனியனிலும் யுண்டு இறே
மூவருக்கு -ஈட்டை வளர்த்தார்
ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்தமாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண சயஸ் த்ரிதைவம் -என்றும்
ஸ்ரீ சைல நாதர் -திருமலை ஆழ்வார் என்ற திருவாய் மொழிப்பிள்ளை
(கொந்தகை இன்று முன்பு குந்தி நகரம் மதுரைக்கு பக்கம் உள்ளது )
குரு மாத்ரு -ஆய் -ஜநநி-ஆச்சார்யர்
குருத்தமாப்யாம் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை மூவருக்கும் –
நம்மாழ்வாரை சேவிக்க த்வரை பிறந்து -நாலூர் ஆச்சான் பிள்ளை தம்முடைய திரு ஆராதன பெருமாளை
திருவாய் மொழிப் பிள்ளைக்கு ப்ரசாதிக்க
இன ஆயர் தலைவன் – -இன்றும் அவர் திருமாளிகையில் கோயில் ஆழ்வாரில் சேவிக்கலாம் –
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக் கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என் மகள் உற்றனவே–5-6-6-
திருக் கணாம்பி சென்று நம்மாழ்வாரை சேவித்து இங்கு நாடு திருத்தி புனர் நிர்மாணம் செய்து அருளினார் –
நம் சடகோபர் தாசர் -என்று இன்றும் அவர் வம்சத்தார் –
பின்பு விளாஞ்சோலைப் பிள்ளை
திரு நலம் திகழ் நாராயண தாசர் இவர் திரு நாமம்
விளாம்பழ தோட்டத்தில் வாசம் செய்தவர்
இவர் வருவார் என்று சோலையிலே தென்னம் மரம் ஏறி விமானம் சேவித்துக் கொண்டு இருப்பாராம்
சிலந்தி வலை பின்னும் படி த்யானம் செய்து கொண்டு இருந்தாராம்
ஸ்ரீ வசன பூஷண அர்த்தம் –
ஸப்த காதையும் கொடுத்து அருளினார்
ஐப்பசி உத்தரட்டாதி
திருவடி துவாரம் மூலம் இவர் வந்து சேர்ந்ததை உணர்ந்து -இயல் சேவித்து -பரிவட்டம் –
திரு அத்யயனம் திருவாய் மொழிப்பிள்ளையே நடத்தி வைத்தார்
திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்
தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே
ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.
மற்றொரு தனியன்
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.
ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.
இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.
1370 சாதாரண ஐப்பசி திரு மூலம் மா முனிகள் அவதாரம் -ஆழ்வார் திரு நகரியில்
திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய நாயனார் -திருக்குமாரர்
1425-ஆஸ்ரம ஸ்வீ காரம் –
சிக்கில் கிடாரம் தாய் மாமன் இடம் -அம்மான் திருமாளிகை
எங்கள் மணவாள யோகி
நாள் தேவ ராசன்
நலம் திகழ் நாராயண தாசர்
கூர குலோத்த தாசர்
வாழியவே
ஈட்டையும் -ஸ்ரீ வசன பூஷண அர்த்தம் சாதித்தார் மா முனிகளுக்கு
1432- பரிதாபி ஆவணி -31 நாள் தொடக்கம் -ஆனந்த வருஷம் கீழ்மை ஆண்டில் ஆனி மூலம் சாத்துமுறை -1433-
நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–
ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–
தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–
அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-
நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-
ஆர்யாஸ் ஸ்ரீ சைல நாதாத் அதிகத சடஜித் ஸூக்தி பாஷ்யோ மஹிம் நா -என்றும்
ஆசிஸ்ருய தயம்பூய ஸ்ரீ சைலாதீச தேசிக அசேஷந ஸ்ருணோத் திவ்யான் பிரபந்தான் பந்த நச்சித -என்னும் படி
ஸ்ரீ திருவாய் மொழி முதலான அசேஷ திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களையும்
அவர் உபதேச முகத்தாலே லபித்தருளி
அநந்தரம் அவற்றை சர்வ லோக பிரசாரம் யுண்டாம் படி நடத்தி அருளினார் இறே
பின்பும் –
யோ அவாப்ய சௌம்ய வர யோகி வரச் சடாரி ஸ்ரீ ஸூக்தி பாஷ்ய மத தத் பிரதிதம் விதேநு
தான் –பட்ட நாத முனி வான மஹாத்ரி யோகி வாதூல வமச்ய வரதார்யா முகன் பஜாமா -என்னும்படி
சௌம்ய ஜாமாத்ரு முனி வர்யர் சம்ப்ரதாயம் நடந்து போரும்படி இதுவாயிற்று-
த்ராவிட உபநிஷத் ரத்னாவளி
த்ராவிட உபநிஷத் சாரம்
த்ராவிட உபநிஷத் சங்கதி
திருவாய் மொழி நூற்று அந்தாதி
அரும்பதங்கள் கொண்டு ஈட்டு அம்ருதம் பருகிக் கொண்டே இருப்போம்
கந்தாடை அண்ணன் திருக்குமாரர் கந்தாடை நாயன் -அரும் பதம் கிடைக்க வில்லை
ஜீயர் பேரனார் நாயனார் இவர்-கந்தாடை நாயன்- இடம் அனைத்தையும் கற்றாராம்
ஆத்தான் ஜீயர் -அடைய வளந்தான் யரும் பதம் -தொகுத்து
நாநா வியாக்கியான ஸம்மேளனம்
அனந்தாழ்வான் பிள்ளை வம்சத்தார் -ஜீயர் அரும்பதம் –
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply