இனி ஸ்ரீ வகுள பூஷண திவ்ய பிரபந்த வியாக்யான அநந்தரம்
அதில் தாத்பர்யமான
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டா க்ரமங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
அதுக்கு அடி கோலுகிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் பிரஸ்துதமான ஸ்ரீ நம் பெருமாள் தொடக்கமான அவர்களுக்கு அதிசயமான
திரு நாமங்கள் வருகைக்கு ஹேதுவையும் ( 50 )
அந்தப் பிரசங்கத்திலே ஸ்ரீ நம்பிள்ளை என்று பிரஸ்துதரானவர்க்கு ஸ்ரீ லோகாச்சார்யர் என்ற
திருநாமம் வருகைக்கு ஹேதுவையும் ( 51 )
அந்த திரு நாமமானது ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யருக்கு பிராப்தமாய்
அவரடியாக எங்கும் வந்து பரந்த படியையும் (52 )
ஓர் ஒரு பாட்டாக மூன்று பாட்டாலே அருளிச் செய்கிறார் –
(லோகாச்சார்யார் பிள்ளை -நம்பிள்ளை அனுக்ரஹத்தால் இவரும் –
நம்பெருமாள் அனுக்ரஹத்தால் நாயனாரும் அவதாரங்கள் )
அதில் இப்பாட்டில்
முன்பு சொன்ன ஸ்ரீ நம் பெருமாள் தொடக்கமானவர்க்கு அதிசயமான திரு நாமங்கள் வருகைக்கு
அடி இன்னது -என்கிறார் –
(எம்பெருமான் தர்சனம் -என்று நம்பெருமாள் நாட்டி வைத்தார் முன்பே சொன்னாரே
திருவல்லிக்கேணியில் நம் கலியன் நம் பட்டர் பிரான் -போல் அருளப்பாடு உண்டே )
நம் பெருமாள் நம் ஆழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று—50-
ஆக்யே மனா கலய
நம்பெருமாள்
அதோ நம்மாழ்வார்
இதி வியவஹ்ருதே பிரணயேன பக்த
நஞ்சீயர் இது யாபி ச
நாம க்ருத ப்ரவ்ருத்தம்
நம்பிள்ளை
இத்யாபி
சம்க்யாம்
நம் பெருமாள் –
அதாவது-
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் (முமுஷுப்படி )-என்னும் படி
ஆச்சார்யர்களுக்கு அனுபாவ்யரான ஸ்ரீ நம் பெருமாள் –
(குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம் –
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –சூரணை -138-
இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –சூரணை -141-
திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சேல் என்ற கையும் –
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாய் நிற்கிற
நிலையே நமக்கு தஞ்சம் –சூரணை -142)
நம் ஆழ்வார் –
ஸ்ரீ முகில் வண்ணன் அடி இணையை அடைந்து
அருள் சூடி உய்ந்த-( 7-2-11 ) -ஸ்ரீ நம் ஆழ்வார் –
நஞ்சீயர்-
ஸ்ரீ நம் பெருமாள் திருக் குமாரரான ஸ்ரீ பட்டராலே விஷயீ க்ருதரான ஸ்ரீ நஞ்சீயர் –
(ரெங்கராஜ கமலா பத லாலித தத்வம் -பட்டர் அன்றோ )
நம்பிள்ளை –
ஸ்ரீ நஞ்சீயராலே விசேஷ அபிமானம் பண்ணப் பெற்றவராய்
ஸ்ரீ நம் பிள்ளை கோஷ்டியோ நம் பெருமாள் கோஷ்டியோ -என்று விகல்பிக்கும் படி
அத் தலைக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஆள் தேடுகையால் வந்த
மகா சம்ருத்தியை யுடைய ஸ்ரீ நம்பிள்ளை –
என்பர் –
என்று சொல்வார்கள்-என்பர் அன்புடையோர் -என்று கூட்டக் கடவது-
(நம் பெருமாள் இவரே மேல் மூவரையும் அபிமானித்து சொன்னதாகவுமாம்
திரு மால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பருமான் தன்மையை யாரே அறிகிற்பார் –
முதல் சொல் லைப் பிரித்து அர்த்தம் கொள்ளுமா போல் )
அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர் சாற்று திரு நாமங்கள் தான் என்று –
அவர் அவர்கள் உடைய ஆதிக்யத்தாலே அவர்கள் இடத்திலே அதி ஸ்நேஹத்தை யுடையவர்கள்
அவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து சாத்தின திரு நாமங்கள் –
தான் என்று –
இவையும் சில அதிசயமான திரு நாமங்கள் இருந்த படி என் தான் என்று –
இன்று அதனைச் சொல்லி நீ ஏத்து -என்று மேலே அந்வயம் —
(வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளைக்கு சதங்கை அழகியார் திரு நாமம் சாத்திய ஐதிக்யம் )
அன்புடையோர் சாத்துகை யாவது –
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -என்று அருளிச் செய்தார் இறே –
(அன்புடையாரான பிள்ளை லோகாச்சார்யார் முமுஷுப்படியில் சாத்தினாரே
இவர் அன்றோ பரிவுடன் நம்பெருமாளை எழுந்து அருளப் பண்ணினவர் )
முன்பு ஒரு காலத்திலே ஒரு கலபையிலே க்ரூரராய் இருப்பார் சிலர்
ஸ்ரீ பெருமாளையும் அத் தேசத்தில் உண்டான ஸ்ரீ எம்பெருமான்களையும் கொண்டு போந்து –
கெட்டேன் -என்னும்படி -வாரி வடக்கே கொண்டு போக
(ஸ்ரீ ரெங்கத்தில் மூன்று படை எடுப்புக்கள் -1311-1323-உண்டே )
அப்பொழுது ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு போர நல்லராய் இருக்கிற
ஸ்ரீ ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார் (அரையர் ஸ்வாமி )
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -(7-2)–என்கிறபடியே ஸ்ரீ பெருமாளைப் பிரிய ஷமர் அன்றிக்கே
இது நிலம் கை துழாவிக் கொண்டு போய்
அங்கே சென்று அவனைக் கண்டு
தம்முடைய நுடங்கு கேள்வி இசை (3-4-6)-என்னலாம் படியான பண்களாலே
அவனைப் பண்படுத்த –
அவனும் அதி ப்ரீதனாய்
உமக்கு வேண்டுவது என் என்ன –
நம்முடைய ஸ்ரீ பெருமாள் இங்கே வந்தார் அவரைத் தர வேணும் -என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களையும் கொடு வந்து காட்ட –
அப்பொழுது அவர்கள் நடுவே தேடிக் காணாமல்
சிந்திக்கும் திசைக்கும் இத்யாதிப் படியே-( 7-2-) கிலேசித்து இருக்க –
அப்பொழுது அவனுடைய பெண் பிள்ளை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளான இவரைத்
தம் அந்தப்புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்சேதியை அறிந்த அவன்
அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் -என்று காட்டிக் கொடுக்கக் கண்டு
(ராமபிரியனை ராமானுஜர் மீட்டால் போல் இங்கும் –
இது நம்பெருமாளை அரையர் மீட்டது -காலத்தால் பின்னால் )
ஸ்ரீ ரெங்க நாத மம நாத (கத்யம்)-என்றும்
அரங்கமாளி என்னாளி -(திருமங்கை ஆழ்வார் )-என்றும்
என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர்-(நாச்சியார் -11) -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளை அதி ப்ரீதியுடன்
இவர் தாம் ஸ்ரீ நம் பெருமாள் -என்று அணைத்துக் கொண்டு
அதி த்வரையுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று பிரசித்தம் இறே
அப்போது அனைவரும் ஸ்ரீ பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
ஸ்ரீ ஆயி ஆழ்வார் பிள்ளையும் -இவர் நம்முடைய பெருமாளாம் -என்று
மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அவருக்கு அதுவே நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் –
(1371-நம்பெருமாள் -48- வருஷங்கள் பின்பு எழுந்து அருள -ஈரம் கொல்லி -வ்ருத்தர் –
கண் தெரியாதவர் -திருவாடை கந்தம்-நம்பெருமாள் பெயர் உறுதிப்படுத்தப் பட்டது-
திருவரங்க மாளிகையார் உத்சவர் இடைக்காலத்தில் –
அரையர் ஸ்ரீ சடகோபன் சாதிக்கும் நாள்கள் விசேஷம் –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் )
இனி ஸ்ரீ நம் ஆழ்வார் -என்ற
திரு நாமம் ஆகைக்கு அடி முற்காலத்திலே
ஸ்ரீ பெருமாள் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ நம் ஆழ்வார் என்று அபிமானித்து அருளி
பெரிய திரு அத்யயனத்துக்கும் அப்படியே திருமுகம் எழுதி
ஸ்ரீ திரு நகரிக்குப் போக விட்டு அருளுவர் என்றும் உண்டு இறே –
(ஆழ்வாரைக் கொண்டு வர சென்ற நாள் கார்த்திகை கார்த்திகை –
திரும்ப எழுந்த பண்ணும் வரை அத்யயன காலம் ஆனது
செங்கழு நீர் திருவாசி கொடுத்து நம்மாழ்வாரை எழுந்து அருளப் பண்ண சொல்லி
தாம் திருக்கைத்தலை சேவை அருளி உள்ளே எழுந்து அருளுவார்
ராமானுஜர் கருட மண்டபம் பக்கம் தனியாக சந்நிதி ஏற்படுத்தி நம்மாழ்வார் ப்ரதிஷ்டை செய்து அருளினார் – )
அதுவும் அன்றிக்கே –
ஒரு கால் மலை நாட்டிலே ஸ்ரீ பெருமாள் வலசையாக (தமிழ் நாட்டை பூ ப்ரதக்ஷிணம் )எழுந்து அருளின போது
மற்றும் உண்டான ஸ்ரீ திருப்பதியில் எம்பெருமான்களும் ஸ்ரீ ஆழ்வாரும் அங்கே யாத்ருச்சிகமாக சங்கதராக
அப்போது ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆழ்வாரை பலரடியார் முன்பு அருளிய -( 7-10 )-என்கிறபடியே
மிகவும் கிருபை பண்ணி அருளி
நம்முடைய ஸ்ரீ ஆழ்வார் நம் அருகே வாரும் -என்று தம்முடைய திவ்ய சிம்ஹாசனத்திலே வைத்துக் கொண்டு
முத்தின் சட்டை- வட்ட மனை – முதலான வரிசைகளையும் பிரசாதித்து
தம்மையே ஒக்க அருள் செய்வார் -என்றும் அருளிச் செய்து போருவர்கள் –
(வட்ட மனை ஆழ்வார் திருநகரியில் இன்றும் சேவிக்கலாம் )
அத்தைப் பற்ற
நம் சடகோபனை பாடினாயோ -என்று
ஸ்ரீ நம்பெருமாள் விஞ்சிய ஆதாரத்தால் கேட்ப -என்றாய்த்து அவனும் ( கம்பனும் ) சொன்னது –
(823-நாதமுனி அவதாரம் -அவர் வயோதிகர் ஆனதும் கம்ப ராமாயணம் அரங்கேற்றம்
சடகோபர் அந்தாதியில் பல தடவை அருளிச் செய்கிறார் )
அதுவும் அன்றிக்கே
ஸ்ரீ பெரிய முதலியார் -மற்ற ஆழ்வார்களில் காட்டில் அங்கே விசேஷ பிரதிபத்தி பண்ணி –
த்வய புரஸ் சரமாக ஸ்ரீ திருவாய் மொழி முதலிய பிரபந்தங்களை எல்லாம் அவர் பிரசாதத்தாலே பெற்று
அந்த வ்யாவ்ருத்தி தோன்ற நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர் என்னுமோபாதி-
நம்முடைய ஆழ்வார் -என்று ஆய்த்து அபிமானித்துக் கொண்டு போருவது –
அத்தைப் பற்றி இறே -ந குலபதேர் வகுளாபிராமம் (ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி )-என்று அருளிச் செய்தது –
இனி நம் ஆழ்வார் உடைய திருவாய் மொழியில்
அநவரத பரிசீல நத்தாலே அபிஷிக்தரான ஸ்ரீ நஞ்சீயருக்கு இந் நாமம் ஆகைக்கு அடி
(பகவத் விஷயம் காலஷேபம் நூறு தடவை சாத்திய அபிஷேகம் )
இவர் ஸ்ரீ பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்த அநந்தரம்
மேல் நாட்டிலே சந்யசித்து-
அங்குண்டான பரிக்ரஹங்களை அடைய ஸ்வ வாசனமாக பரித்யஜித்து
ஸ்ரீ கோயில் ஏற வந்து ஸ்ரீ பட்டர் திருவடிகளிலே சேவித்து நிற்கக் கண்டு
போரவும் உகந்து -நம்முடைய ஜீயர் -வந்தார் -என்று
கட்டி எடுத்துக் கொண்டு உபலாலித்த அன்று தொடங்கி
வேதாந்திகளுக்கு -ஸ்ரீ நஞ்சீயர் -என்ற திரு நாமம் ஆயத்து என்கை –
இனி இவருக்கு (நஞ்சீயருக்கு ) அத்யந்த அபிமதராய்
ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திரு வவதாரம் என்னலாம் படி
(கலிகன்றி தாசர் -கலியன் தானே நம்மாழ்வார் ஹ்ருதயம் அறிந்தவர் )
ஸ்ரீ நம் பிள்ளைக்கு இந்த திரு நாமம் வந்தபடி –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ திரு வாய் மொழிக்கு ஒன்பதினாயிரம் கிரந்தம் சங்க்யையாக ஒரு வியாக்யானம் செய்து அருளி
அந்தப் பட்டோலையை நன்றாக எழுதிக் கொண்டு வரும்படிக்கு
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த ஸ்ரீ வரதராஜரான இவர் திருக் கையிலே கொடுத்தருள –
இவர் ஊர் ஏறப் போகிற போது ஆற்றிலே ஒழுகிப் போக பின்பு ஒரு அலேகத்திலே அதன்படி ஒன்றும் தப்பாதபடி
எழுதிக் கொண்டு வந்து–
(அலேக கிரந்தம் கதை காஞ்சி -மாப்பிள்ளை கோயம் க்ரந்த இயம் மயா பிடிதம் –
இயம் அபி மயா பிடிதம் -எழுதாத கிரந்தம் )
ஸ்ரீ நஞ்சீயர் சந்நிதியிலே வைக்க – அத்தை அவிழ்த்து திருக் கண் சாத்தி அருளி –
அது மிகவும் நன்றாய் இருக்கையாலே-இது ஏது என்று கேட்டு அருள
இவரும் தத் ஹேதுக்களை எல்லாம் விண்ணப்பம் செய்யக் கேட்டு
இது ஒரு புத்தி விசேஷம் இருந்த படி என் என்று மிகவும் உகந்து அருளி –
நம்முடைய பிள்ளை -ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் -என்று அருளிச் செய்ய –
அன்று தொடங்கி- ஸ்ரீ நம் பிள்ளை -என்று திரு நாமமான இது லோக பிரசித்தம் இறே –
அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர் சாற்று திரு நாமங்கள் –
இது வாய்த்து –
நன்னெஞ்சே –
இந்த திரு நாமங்களின் வாசி அறிந்து உகந்து இருக்கிற நெஞ்சே –
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று –
இந்தத் திரு நாமங்களை அனுசந்திக்கைக்கு ப்ராப்த காலமான இன்று
இதன் சுவடி அறிந்த நீ
இவையும் சில திரு நாமங்கள் இருந்த படியே என்று
வாயாரச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணு –
அநாதி காலம் இத்தை அனுசந்தியாத இழவு தீர ருசி பிறந்த இன்று
பிரத்யஷே குரவ ஸ்துதயா (மந்த்ர யத்நேந கோபயத் –மந்த்ரம் மறைத்து )-என்றும்
குரோர் நாம சதா ஜபேத் (அந்திம உபாய நிஷ்டை )-என்றும்
சொல்லுவோம் அவன் நாமங்களே (ராமானுஜ -1)–என்றும்
என் மனம் ஏத்தி அன்றி ஆற்ற கில்லாது (ராமானுஜ -89)-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்துதி ரூபமான அனுகூல வ்ருத்தி பண்ணியே ஸ்வரூபம் பெறப் பார் –
(வக்தவ்யம் குரு பரம்பரையும் த்வயம் என்று உண்டே )
—————————————————
இனி-
இவர்களில் துர்யரான ( நாலாவதான )ஸ்ரீ நம் பிள்ளைக்கு
அதிலும் அத்யந்த விலஷணமான
ஸ்ரீ லோகாச்சார்யர் என்ற திரு நாமம் வருகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்—-51-
துன்னு புகழ்க் -பொருந்திய வைபவம்
கந்தாடை தோழப்பர் -தாசாரதி முதலியாண்டான்- –
வாதூல குல திலகர் -ராமானுஜர் பாதுகா ஸ்தானம் -திருமேனி சம்பந்தம் தன்னேற்றம் –
இவர் திருக்குமாரர்-கந்தாடை ஆண்டான்-இவரே ராமானுஜன் –
தான் உகந்த திருமேனி எழுந்து அருளப் பண்ணினவர் -தை மாதம் புஷ்ப நக்ஷத்ரம் இன்றும் விசேஷம்
இவர் குமாரர் தோழப்பர் -அபசாரம் தொடங்கி உபசாரத்தில் முடிந்ததே
ஓங்கி-விருத்தி அடைந்து
விலகாமல் -நீங்காமல் -பேர் நிலைத்து நின்றது
வாதூல வம்ச திலக
அதீத வாரணர்ய -பச்சை வாரண பெருமாள் என்றே கந்தாடை தோழப்பருக்கு திரு நாமம்
ப்ரீதியா கதாபி
கலி ஸூதான தாஸர் ஸூரே
ஆக்யாம் ஜகத் குரு பிரதிதாம் அகார்ஷித்
தஸ்மாத்
ச நியதாத தஸ்மின்
துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் –
அவர் ஆகிறார் அபிஜன வித்யா வ்ருத்தங்களால் யுண்டான யசஸ் சம்ருதியை யுடையராய்
ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் என்னும் திரு நாமத்தை யுடையராய் –
ஸ்ரீ முதலி யாண்டானுடைய திருப் பேரனாராய் –
ஸ்ரீ கந்தாடை ஆண்டானுடைய திருக் குமாரராய்-
இருப்பார் ஒருவர் இறே –
(பேட்டை -ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் கோயில்
கோயில் நிர்வாகம் -முதலியாண்டான் வம்சத்தவர் -ஆகவே இவர் கிரந்தங்கள் நிறைய இல்லை – )
ஏவம் பூதரானவர் செய்த படி சொல்லுகிறது மேல் –
தம்முகப்பால் -என்று
அதாவது
ஸ்ரீ நம் பிள்ளையினுடைய ஞான வ்ருத்தியையும் சிஷ்ய சம்பத்தையும் கண்டு
அசஹிஷ்ணுவாய் அஸூயை கொண்டாடி
(குற்றங்களைக் குணமாக கொள்வது வாத்சல்யம் -குணங்களைக் குற்றமாகக் கொள்வது அஸூயை )
அவரை ஸ்ரீ பெருமாள் திரு ஓலக்கத்திலே பரிபவித்து
பின்பு திரு மாளிகையிலே எழுந்து அருள –
அனுகூலையாய் இருக்கிற அவர் தேவிமார்
இத்தைக் கேட்டு அனுதாப ஹேதுவாய் சில வார்த்தை சொல்ல –
(ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–
ஒரு கால் ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ பகவத் விஷயம் அருளிச் செய்து கோஷ்டி கலைந்து போகா நிற்கச் செய்தே-
ஸ்ரீ வைஷ்ணவானாய் இருப்பான் ஒரு ராஜா வருகிற பெரும் திரளைக் கண்டு ஸ்ரீ நம் பெருமாள் திருலோக்கம் கலைந்ததோ –
ஸ்ரீ நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ என்று கேட்டான் என்பார்கள்
இப்படி மஹா சம்ருத்தமான ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீயோடே ஸ்ரீ நம்பிள்ளை வாழ்ந்து அருளும் காலத்தில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனாய்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக்குமாரரான ஸ்ரீ கந்தாடை தோழப்பர் ஸ்ரீ நம்பிள்ளையுடைய பெரு மதிப்பையும் வைபவத்தையும் கண்டு
அஸூ யாளுவாய் பொறுக்க மாட்டாமல் இருக்குமவர் –
ஒரு நாள் ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ பெருமாளை சேவித்துக் கொண்டு
இருக்கும் அளவிலே ஸ்ரீ பிள்ளையும் முதலிகளுமாய் பெரும் திரளாக ஸ்ரீ பெருமாளை சேவிக்க என்று ஸ்ரீ கோயிலுக்கு உள்ளே எழுந்து அருள
ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளையுடைய பெருமையைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சீறிப்
பகவத் சந்நிதியில் ஸ்ரீ நம்பிள்ளையைப் பஹு வாகப் பருஷ யுக்திகளை சொல்லி அநேகமாக நிந்திக்க –
ஸ்ரீ பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு ஸ்ரீ பெருமாளை சேவித்துப் புறப்பட்டு எழுந்து அருள-
இச் செய்தியை ஞானாதிகையாய் இருக்கிற ஸ்ரீ தோழப்பர் திருத் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திரு மாளிகைக்குள் செய்கிற கைங்கர்யங்களையும் செய்யாமல் விட்டு வெறுத்து எழுந்து அருளி இருக்க
அவ்வளவில் ஸ்ரீ தோழப்பரும் ஸ்ரீ பெருமாளை சேவித்து மீண்டு தம் திரு மாளிகையில் எழுந்து அருள –
ஸ்ரீ தேவிகளும் முன்பு போலே எதிரே புறப்பட்டு வந்து ப்ரீதியுடன் தமக்கு ஒரு கைங்கர்யமும் பண்ணாமையாலே
ஸ்ரீ தோழப்பர் தம் திருத் தேவியாரைப் பார்த்து -உன்னை நாம் அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்று அளவாக
நம்மைக் கண்டால் ஆச்சார்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போந்தாய்-இன்று உதாசீனம் பண்ணி இருந்தாய் –
இதற்கு அடி என் என்று கேட்டு அருள –
திருத் தேவியாரும் ஸ்ரீ தோழப்பரைப் பார்த்து -வாரீர் ஸ்ரீ ஆழ்வாருடைய திரு அவதாரம் என்னலாம் படி ஒரு அவதார விசேஷமாய்
ஸ்ரீ பெருமாளுக்குப் பிராண பூதருமாய் இருந்துள்ள ஸ்ரீ நம்பிள்ளையை ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் கூசாமல் அநேகமாக பருஷ யுக்திகளைப்
பண்ணித் தூஷித்து -இப்படி செய்தோமே -என்ற அனுதாபமும் அற்று உஜ்ஜீவிக்க இருக்கிற உம்மோடு எனக்கு என்ன சம்பந்தம் உண்டு –
நீர் என்னை வெறுத்தீர் ஆகில் என்னுடைய மாதா பிதாக்கள் என்னைப் பெற்று வளர்த்து உம்முடைய கையில் காட்டித் தந்த இந்த சரீரத்தை
உமக்கு வேண்டின படி செய்து கொள்ளும் -எங்கள் ஆச்சார்யர் என் ஆத்மாவை அடியிலே அங்கீ கரித்து அருளின அன்றே நான் உஜ்ஜீவித்தேன் –
ஆன பின்பு பத்ம கோடி சதேந அபி ந ஷமாமி கதாசன -என்று பாகவத நிந்தனை பண்ணினவர்களை ஒரு காலும் ஷமிப்பது இல்லை என்று
ஸ்ரீ பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரம் அறிந்தும் அறியாதவர் போலே இருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாசமும் கூடாது –
ஆகையால் நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதது போலவும் -கடல் உடைந்தால் கட்ட ஒண்ணாதது போலேயும்-
மலை முறிந்தால் தங்க ஒண்ணாதது போலேயும் அனுதாபம் பிறவாத பாகவத அபசாரம் தீர்த்துக் கொள்ளக் கூடாதது இறே –
ஆன பின்பு நான் என் இஷ்டத்திலே இருந்து யீடு ஏறிப் போகிறேன் என்ன
ஸ்ரீ தோழப்பரும் தேவிகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுச்
சற்றுப் போது திகைத்து எழுந்து அருளி இருந்து -பெரிய வித்வான் ஆகையாலும் திரு வம்ச பிரபாவத்தாலும் அஸூயையால் வந்த
திரு உள்ளத்தின் கலக்கம் தீர்ந்து தெளிந்து வந்து திருத் தேவிகளைப் பார்த்து-
நீ சொன்னது எல்லாம் ஒக்கும் -நாம் தப்பச் செய்தோம் –இனி மேல் செய்ய அடுக்குமது எது-என்ன
திருத் தேவிகளும்-ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே-கெடுத்த இடத்தே தேடிக் கொள்ளீர் -என்ன –
ஸ்ரீ தோழப்பரும் ஆவது என் -என்ன -திருத் தேவிகளும் பரம தயாளுவான ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் சென்று சேவித்து
அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு அவர் கிருபை பண்ணி அருள யீடு ஏறீர் என்ன –
ஸ்ரீ தோழப்பரும் அவரை ஸ்ரீ பெருமாளுடைய பெரும் திரு ஓலக்கத்திலே பரிபவித்து -இப்போது அவர் சந்நிதியில் போய் நிற்க என்றால்
எனக்கு லஜ்ஜா பயங்கள் அனுவர்த்தியா நின்றது -நீ கூட வந்து ஷமிப்பிக்க வேணும் -என்ன
திருத் தேவிகளும் ஸ்ரீ தோழப்பர் சொல்லும் வார்த்தையைக் கேட்டு -அப்படியே செய்கிறேன் என்று கடுக
எழுந்து அருளி இருந்து அவரையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ நம்பிள்ளை திரு மாளிகைக்கு எழுந்து அருளுவதாக புறப்பட்ட அளவிலே
ஸ்ரீ நம்பிள்ளை செய்தபடி -ஸ்ரீ கோயிலிலும் இருந்து எழுந்து அருளின பின்பு முதலிகள் எல்லாரையும் அனுப்பி அருளி
பகல் எல்லாம் அமுது செய்து அருளாமல் தம் திரு மாளிகைக்கு உள்ளே எழுந்து அருளி இருந்து சாயங்காலமான வாறே
ஆவஸயக கர்மத்தைச் செய்து அருளி ஒற்றைத் திருப்பரி யட்டத்துடனே முட்டாக்கு இட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்து அருளி
ஸ்ரீ கந்தாடைத் தோழப்பர் திரு மாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண் வளர்ந்து அருள –
ஸ்ரீ தோழப்பரும் திருத் தேவிகளுமாக திரு விளக்கை ஏற்றிக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருமாளிகைக்கு எழுந்து அருளுவதாகத்
திரு மாளிகை வாசலிலே புறப்பட்ட அளவிலே -திரு விளக்கு ஒளியாலே கைப்புடையிலே ஒரு வெள்ளை கிடக்கிறதைக் கண்டு-
ஸ்ரீ தோழப்பர் இங்கே யார் கிடக்கிறார் -என்று கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் -அடியேன் திருக் கலிகன்றி தாசர் -என்ன
அவ்வளவில் ஸ்ரீ தோழப்பர் -இது என் என்று திகைத்து -ஸ்ரீ பிள்ளையைப் பார்த்து –
நாம் மஹா தேஜஸ்வீ -நம்மை ஸ்ரீ நம்பெருமாள்
திரு ஓலக்கத்திலே பரிபவிக்கலாவது என் -என்கிற கோப அதிசயத்தாலே நம்முடைய திரு வாசலிலே வந்து
மௌர்க்யம் செய்வதாகக் கிடக்கிறீரோ என்ன –
ஸ்ரீ நம்பிள்ளையும் ஸ்ரீ தோழப்பரைக் குறித்து -அடியேன் அப்படிச் செய்ய வரவில்லை -என்ன –
ஆகில் இங்கு வந்து கிடப்பான் என்று என்று ஸ்ரீதோழப்பர் கேட்க –
ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தபடி –
ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனான தேவரீர் திரு உள்ளம் கலங்கும்படி வர்த்தித்த மஹா பாபியான
அடியேனுக்குத் தேவரீர் திரு மாளிகை வாசல் அல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன் -என்ன
இவரை அநு வர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளை கண் வளர்ந்து அருளுகிற தைன்யத்தைக் கண்டு
அவருடைய நைச்ய வார்த்தைகளையும் கேட்டு -இது ஒரு அதிகாரம் இருந்தபடி என் -என்று போர வித்தராய்
ஸ்ரீ பிள்ளையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு-இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யர் என்று இருந்தேன் –
இப்போது லோகத்துக்கு எல்லாம் நீரே ஆச்சார்யர் ஆகைக்கு ப்ராப்தர் என்று அறிந்தேன் என்று
ஸ்ரீ தோழப்பர் உகந்து -ஸ்ரீ லோகாச்சார்யார் -என்று ஸ்ரீ பிள்ளைக்குத் திரு நாமம் சாத்தி அருளித்
தம்முடைய திரு மாளிகையில் கொண்டு புக்குத் தாமும் திருத் தேவிகளுமாய் ஸ்ரீ பிள்ளையை
அநேகமாக அனுவர்த்தித்து அவர் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்து தமக்கு வேண்டும் அர்த்த விசேஷங்களை
எல்லாம் கேட்டுக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் ப்ரவணராய் க்ருதார்த்தராய் அருளினார் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் அந்திம உபாய நிஷ்டையில் இத்தை எடுத்துக் கட்டி உள்ளார் )
அப்படிச் சொன்ன அவளுடைய வார்த்தையைக் கேட்டு
பிரமாதாத் புத்தி தோ வாபி யதா அக க்ரியதே சதா
அனுதப்தஸ் து தாநேவ ஷாம யேன் நான்ய தாசம -என்கிறபடியே
(பிரமாதாத் புத்தி தோ வாபி – கவனக்குறைவாலோ தெரிந்தோ
யதா அக க்ரியதே சதா-அபசாரம் செய்தால்
அனுதப்தஸ் -அனுதாபம் பட்டு
து தாநேவ ஷாம யேன் நான்ய தாசம–அவர் இடமே ஷாமணம் வாங்கிக் கொள்ள வேண்டும் )
அஸூயையால் வந்த கலக்கம் தெளிந்து
அத்யந்தம் அனுதாபத்துடனே
கெடுத்த விடத்திலே தேடும்படி அவரை ஷாமணம் பண்ணுவதாக
சஹகாரிகள் உடனே புறப்பட்டு வர–
அவ்வளவிலே –
அஹேதோர் அபி சக்ரோதம் அர்ச்சயன் ந அச்யுத ப்ரியம் ப்ரபோத்ய
விவிதைர் யத்னை ப்ராஜ்ஞ்ஞோதித ப்ரசாதயேத்–என்கிறபடியே
தம்மை உகப்பிப்பதாகத் தம் திரு மாளிகை வாசலிலே வந்து கைப்புடையிலே கிடக்கிற ஸ்ரீ நம் பிள்ளை யுடைய
அத்யந்த நைச்யமான உக்தி வருத்திகளைக் கண்டு-கேட்டு-மிகவும் ப்ரீதராய்
இது ஒரு பரிமாற்றம் இருந்த படி என் என்று
தம்முடைய ஆதர அதிசயத்தாலே இவரைப் பார்த்து
தேவரீர் இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யராய் இருந்தீர்
இப்போது லோகத்துக்கு எல்லாம் ஆச்சார்யராக ப்ராப்தராகா நின்றீர் -என்று –
(குற்றம் செய்பவர்கள் பக்கல் பொறை -முதலில் -பின்பு கிருபை -பாபங்கள் போகக் கூடாதே -பின்பு சிரிப்பு –
ஆத்மாவுக்கு நன்மை தானே உண்டாகும் கெடுதி இல்லையே -பின்பு உகப்பு -அடுத்து உபகார ஸ்ம்ருதி –
பாபங்களை தாமாகவே வந்து சுகப்பதாலும் – நம்மால் விண்ணப்பம் செய்யாத தோஷங்களை பிரதி நிதியாக சொன்னாரே
இப்படி ஐந்தும் வேண்டுமே -துர்லபம் -இவர்களைப் போல் )
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் —
என்ன லோகாச்சார்யாரோ -என்று அருளிச் செய்ய –
லோகாச்சார்ய அபிதாம் தாது கவிஜித் தாச ஸூரயே
ச்யாமே பச்சய சரணவ் கரணை ஸ்த்ரிபிர் ஆஸ்ரயே–என்றும் (ச்யாமே பச்சய பச்சை வாரணர் )
தயாயாம் தேவ ராஜச்ய தாசரத்ரார்ய சந்ததே
அபிவருத்தி கரம் வந்தே ஹரிதத் விபதேசிகம் -என்னக் கடவது இறே –
(ஹரிதத் விபதேசிகம்-பச்சை வாரணர் )
பின்னை உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றது என்றும் மேல் –
அப்படி அவராலே பேர் பெற்ற பின்பு ஸ்ரீ லோகாச்சார்யர் என்னும் திரு நாமம்
உச்ச்ராயத்தை ( உயர்த்தியை ) யுடைத்தாய்-
சர்வ லோகத்திலும் ஸ்ரீ நம்பிள்ளைக்கு பேராமல் நின்றது –
ஆஸ்ரயம் போந்து இருக்கையாலே பேரானது பேராமல் இருக்கிற படி –
இத்தால் ‘-
இவர் லோகாச்சார்யத்வம்
கூர குலத்திலவர்களும்
வாதூல வம்ச்யரும்
அனுவர்த்தித்து ஆஸ்ரயித்த போதே
சர்வ லோக சம் பிரதிபன்னம் என்றது ஆய்த்து –
(கூர குலத்திலவர்களும் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் இவர் சிஷ்யர்
ராஜ சபைக்கு போக –சத்யான் லோகான் ஜெயதி -நம்பிள்ளை அருளிச் செய்வதைக் கேட்டு
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் இடம் கேட்டு அறிந்தார் -அரசனுக்கு அருளிச் செய்த வ்ருத்தாந்தம்
அரசன் கொடுத்த பரிசை -நஞ்சீயருக்கு சமர்ப்பித்து தேவர் திரு வாக்கில் வந்த திவலைக்கு பரிசு என்று அடி பணிந்தார்
அழைக்கும் கரும் கடலில் -திரு விருத்தம் வியாக்யானத்தில் உள்ள ஐதிக்யம் உண்டே
ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக
இப்பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வகித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து
பிள்ளையை அழைக்க இப்பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால்
அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்
ரிஷி -என்னுடைய ஆஸ்ரமத்தில் பிராமணர்கள் தவிர வேறே இல்லை
ஒழிந்த ஷத்ரியனும் பிராமணனும் ஆனான்
ப்ரஹ்ம ரிஷி ஆனார் வசிஷ்டர் வாயால் சொன்னதால் விச்வாமித்ரரும் )
இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தமும்
இதன் கீழ் மேல் சொல்லுகிற அர்த்தங்களும்
எல்லாம் அந்திம உபாய நிஷ்டையிலே அஸ்மத் பரமாச்சார்யரான -ஸ்ரீ பெரிய பட்டர் பிரான் ஜீயர்
ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்து அருளினார்
அதிலே கண்டு கொள்வது –
(சிலர் திருப்பேரனார் என்பர்
இவர் கார்க்கி கோத்ரம் -ஜனக குலம்
அவர் பரத்வாஜ கோத்ரம்
சிஷ்யருக்கு சிஷ்யரும் பேரன் ஸ்தானமே
கார்க்கி பாரத்வாஜம் என்றும் ஒரு கோத்ரம் உண்டாம் )
————————————————
இனி-இந்த லோகாச்சார்யர் என்னும் திரு நாமமானது
லோகம் எங்கும் வந்து பரந்தது
இன்னத்தாலே என்று –
தத் ஹேதுவை தர்சிப்பித்து அருளுகிறார் –
பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால்
அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திரு நாமம் இங்கு —52-
பிரமாண ப்ரமேய ரஷணம் செய்த பிரமாதா இவர் என்பதால் வந்த புகழ் உண்டே
இவருக்கு அவதரித்த போதே பெற்ற சிறப்பு உண்டே – இதுவே இயற் பெயரானதே-
தாம் கிருஷ்ண பாத
உபலாலயதி ஸூவ சம்க்யாம்
க்ருத்வா தத் அர்ஹ
நிஜஸ்ய ஸூ நோ
தேனைவ ச
ஜன ஹிதாயா புவி ப்ரவ்ருத்த
ஜகத் குரு
பிரசிதா சமந்தாத்
பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
அதாவது–
ஸ்ரீ நம்பிள்ளைக்கு லோகாச்சார்யார் என்னும் திரு நாமம் நன்றாக நடந்து செல்லுகிற அக்காலத்திலே
அதி விரக்தராய் ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போருகிற
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு தந் நியோகம் அடியாக
தத் சம்வத்சரத்திலே
ஒரு திருக் குமாரர் திரு வவதரிக்க –
அநந்தரம் ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டரான அவர் –
(இவர் விரக்தராய் இருக்க இவரது திருத்தாயார் நம்பிள்ளை இடம் பிரார்த்தித்து அதனால் புத்ர பாக்யம்
1205-திரு அவதாரம்
1323 வருஷம் பங்குனி எட்டாம் திரு உத்சவம் நடத்தி திரை சாத்தி
மூடு பல்லக்கில் எழுந்து அருளப்பண்ணி )
(பேரன் -கொச்சை பேயரன் –தாத்தா பெயரை உடையவன்
பேத்தியும் அப்படியே
தகப்பனார் லஷ்மி தாத்தாச்சாரியார் பிள்ளை ஆழ்வார் -இப்படி மாறி மாறி வருமாம்
ஆச்சாரர் திரு நாமம் வைப்பதும் வழக்கம் )
யன்பால் அன்ன திரு நாமத்தை யாதரித்து –
அன்புடையோர் சாத்தப் பட்ட தாகையாலே தாமும் அப்படியே அன்பாலே
அவர் திருவடிகளிலே ஸ்நேஹத்தாலே
அவாங் மனஸ் வைபவமான அந்தத் திரு நாமத்தை ஆதரித்து –
மன்னு புகழ் மைந்தர்க்குச் சாத்துகையால் –
திரு நாமம் சாத்துக்கைக்கு போரும்படியான பொருந்தின புகழை யுடைய
தம் குமாரருக்கு –
(அவதரிக்கும் பொழுதே ப்ரமாண ப்ரமேய ரக்ஷணம் செய்யப் போகிறார்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே போல் )
அதாவது
ஸ்ரீ நம்பூர் வரதர் யுடையவும்-ஸ்ரீ திரு வத்தியூர் வரதர் யுடையவும்
திரு வவதாரம் ஆகையால்
ஏற்கும் பெரும் புகழ் யுடைய-( திருவாய் -3-9-11) தம் குமாரருக்கு –
இப்படி மன்னு பெரும் புகழை யுடைய மஹாத்மாவான
மைந்தருக்கு அனுரூபமாகச் சாத்துகையாலே –
(தேவப் பெருமாளே பிள்ளை லோகாச்சார்யார் -இரண்டு ஆற்று கரையில் போய் கேளும் -அவரோ இவர் )
வந்து பரந்தது எங்கும் இந்தத் திரு நாமம் இங்கு –
இப்படி ஸ்ரீ கிருஷ்ண பாதராலே கீர்த்திக்கப் படுகையால்
தத் ஸூநுவான இவருடைய இந்தத் திரு நாமமானது –
இங்கு எங்கும் வந்து பரந்தது –
ஒரு பேர் வெள்ளம் இட்ட படி –
இவருடைய இந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் என்னும் திரு நாமம் ஆனது
இந்த லோகம் அடைய ஏறிப் பாய்ந்து பரந்து பலித்தது –
(லோகாச்சார்யார் திரு நாமம் பெரு வெள்ளம் எடுத்து லோகம் முழுவதும் பாய்ந்து பலித்ததே )
கிண்ணகம் உடை பட்ட வாறே-காடு மேடுகள் எங்கும் வெள்ளம் பாய்ந்து பரக்குமா போலே
இப் பேர் வெள்ளமானது
அஞ்ஞர் ஞானிகள் விபாகம் அற எல்லாரும் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படி
எங்கும் விஸ்தருதம் ஆய்த்து –
ஸ்ரீ ஜீயர் தாமும் –
வாழி ஸ்ரீ உலகாரியன் -என்கிற திரு நாமத்தை தாமும் பலகாலும்
அனுசந்தித்து அருளி
தமக்கு அந்தரங்கர் ஆனவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு உடலாக உபதேசித்து அருளியும்
இதில் விமுகராய் இருப்பாரையும் உட்பட
இப்படி எளிதும் இனிதுமான திரு நாமம் இருக்க
இத்தை அனுசந்தித்து உஜ்ஜீவியாமல் அனர்த்தப் பட்டுப் போவதே – என்று வெறுத்து அருளுவாராம் –
வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு
ஒத்து முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —
முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply