உபதேச ரத்னமாலை –பாசுரம் -39/40/41/42/ 43/44/45- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

இனி
ஸ்ரீ த்வயார்த்தமான ஸ்ரீ திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமானுசன் -(தனியன் )-என்னும் படி
இத்தை வர்திப்பித்துக் கொண்டு போந்தவர் ஆகையாலே
தத் பிரசாதம் அடியாகத் தத் அபிப்ராயமான அர்த்தங்களாலே
அருளிச் செயலிலே சாரமான ஸ்ரீ திருவாய் மொழியை
வியாக்யான நிர்மாண முகேன ரஷித்துப் போந்தவர்கள்
ஸ்ரீ பிள்ளான் முதலான ஸ்ரீ ஆச்சார்யர்கள் என்கிறார் —
(வேதக்கடல் -முத்து குளித்து -ஐந்து வியாக்கியானங்கள் –
நம்மாழ்வார் பிரசாதம் அடியாக ஆழ்வார் திரு உள்ளக்கருத்தை -அந்தரங்கமாக
மாறன் அடி பணிந்து உயந்த இவர் பெற்ற சீரிய அர்த்தங்களை
இவர் பிரசாதம் அடியாக இவர் திரு உள்ளக்கருத்தையே வியாக்யானம் -செய்து அருளி )

(பெரிய திருமலை நம்பி மூன்று திருக்குமாரர்கள்
1-பிள்ளை திருமலை நம்பி
2-ராமானுஜர்
3-பிள்ளான் -)

பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு—39-

(யதீந்த்ரர் காட்டிய -அகில புவன -பராசர –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்
பூர்வாச்சார்ய ஸூ ரஷதாம்- இதற்கு தமிழ் மொழி பெயர்ப்பே இங்கு -திருவாய்மொழியைக் காத்த குணவாளர்-
பொதுவாக ரக்ஷித்தமை அருளிச் செய்து தனியாக பின்பு போதாயனர் -என்று அங்கு –
இங்கு தனியான இவர்கள் திருநாமங்களை அருளிச் செய்து பின்பு காத்தமை அருளிச் செய்கிறார் )

சந்த்ர யதீந்த்ர ஜலதே குருகாதிபர்ய
ஸ்ரீ மாதவோ முனி
உபய கிருஷ்ண -இரு கண்ணர்
யோகீந்த்ர ஸூந்தர வரோகி
சஹஸ்ர தாதா
வியாக்யா
ஹ்ருதய தாம் அனுதினம் பஜ

பிள்ளான்–
பிள்ளான் ஆகிறார் –
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி செய்து அருளின மகா உபகாரத்தை அனுசந்தித்து
அதில் கிருதஞ்ஞாராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானாராலே புத்திர அபிமானம் பண்ணப் பட்டு
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -என்ற திரு நாமம் சாத்த –
(ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பிக்கே -திருக் குருகைப் பிரான் திரு நாமம் உண்டு
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்-நாச்சியார் திரு மொழி வியாக்யானத்தில் –
நம் திருக் குருகைப் பிரான் என்றே காட்டி அருளுகிறார் )

(ஆளவந்தார் திருப்பேரானார் திருமலை நம்பி -அவரது திருக்குமாரர் என்பார் சிலர் –
இதுக்கு பிரமாணங்கள் இல்லை
தாதாச்சார்யர் வம்சம் -தென்கலையிலும் உண்டு –
அத்தங்கி ஸ்வாமிகளும் -ஏட்டூர் சிங்கராச்சார்யர் ஸ்வாமிகளும் இந்த வம்சம்)

இப்படி ஸ்ரீ நம்பி தன் நாமமான ஏற்றத்தை யுடையராய்
அத்தாலே அல்லாதார்க்கு அவரோபாதி உத்தேச்யராய்
அவர் இடத்திலே அகில வேதாந்த தாத்பர்யங்களையும் அதிகரித்து
சகல சாஸ்திர வித்தமராய்
சம்ஸ்க்ருத திராவிட ரூபமான உபய வேதாந்தத்துக்கும்
ப்ரவர்த்தகராய் இருப்பார் ஒருவர் –

(ஐப்பசி பூராடம் நக்ஷத்ரம் அவதாரம் -விஷ்வக் சேனர் போல்
திராவிட ஆகம சாரஞ்ஞர் ராமானுஜ பாத ஆஸ்ரயம்
ஸூகீயம் குருகேசார்யம் நமாமி சிரசாம் வஹம்
ஆழ்வார் திரு நகரியில் அவதாரம்-இதனாலும் இந்த பெயர் பொருந்தும் –
திரு வெள்ளறை எங்கள் ஆழ்வான் இவர் சிஷ்யர் )

நஞ்சீயர் –
அவராகிறார் –
சர்வஞ்ஞரான ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருக் குமாரராய் சகல சாஸ்திர வித்தமரான ஸ்ரீ பட்டராலே
நம்முடைய ஜீயர் -என்று அபிமானிக்கப் பட்டு
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் சம்சய விபர்யயம் அறக் கேட்டு
பின்பு நூறு உரு ஸ்ரீ திருவாய்மொழி நிர்வஹித்து
அத்தாலே சதாபிஷேகம் பண்ணப் பெற்றவர் ஆய்த்து –

(தந்தி யானை போல் இருந்தவரை திருத்தி வேதாந்தி ஆக்கி நஞ்சீயர்
பங்குனி உத்தரம் திரு அவதாரம்
பால்குநோத் தரபல்குந்யாம் ஜாதம் வேதாந்தி நம் முனிம்
ஸ்ரீ பராசர பட்டார்ய பாத ரேகாம் அயம் பஜே
நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதவே
யஸ்ய வாக் அம்ருதா சார பூரிதம் புவன த்ரயம் )

பெரியவாச்சான் பிள்ளை –
அவர் ஆகிறார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய திரு வவதாரத்தோபாதியான ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தத் சேவைக்கு விருந்தங்களான தத் இதர புருஷார்த்தங்களை எல்லாம் சவாசனமாகப் பரித்யஜித்து
சகல அர்த்தங்களையும் அவர் சந்நிதியிலே நன்றாகக் கற்றுக் கேட்டு
அவருக்கு அத்யந்தம் அபிமதராய் இருக்குமவர் –

(ஸகல திராவிடாம் நாய சார வியாக்யான காரிணம்
ஸ்ரா வணே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ கிருஷ்ண குரும் ஆஸ்ரயே
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா
ஆவணி ரோஹிணி -சேங்கனூர்
கலிகன்றி தாசர் நம்பிள்ளை இடம் கற்றுக் கேட்டு )

தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
ஸ்ரீ திருவாய் மொழியில் அர்த்தங்களை எல்லாம் பிரகாசிக்கும் படியான மிக்க தெளிவை யுடையராய்
அத்தாலே -ச க்ருஷ்ண த்வயௌ-என்னும்படி ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையோடு ஒரு கோவையாய்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளுக்கு அத்யந்தம் அந்தரங்கராய்
அதிகிருத பரமார்த்தராய்
அபிமான நிஷ்ட அக்ர கண்யராய் இருக்குமவர்-

(யாமுனாச்சார்யர் -யார் உடைய தகப்பனார் தெரியாமல்
தனியன் கூட இருவருக்கும் பொருந்தும் படி இரு கண்ணர்கள் இவர்கள்
பகவத் விஷய காலக்ஷேப தனியனின் இவரே காட்டி உள்ளார் )

(தவராசன் படித்துறை
மணவாள மா முனிகள் திருவரசு
கேசவ பெருமாள் கோயிலை சுற்று வடக்கு -நடுவில் திரு வீதிகள் இருந்தன
மிதுனே ஸ்வாதி ஸம்பூதம் கலி வைரி பத ஆஸ்ரிதம்
உதக் ப்ரதோளீ நிலயம் கிருஷ்ண பாதம் காம் பஜே
ஸ்ரீ கிருஷ்ண பாத சதா சிரஸா நமாமி
யத் பிரசாத ப்ரபாவ சர்வ சித்தி
ஆனி ஸ்வாதி )

மணவாள யோகி –
அவர் ஆகிறார் –
அபயப்ரத ராஜ புத்ரர் என்னும்படி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கு குமாரரான
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை திருவடிகளை சதா சேவை ஸ்வர்யாத் -என்னும் படி பழுக்க சேவித்து
(இவருக்கும் அழகிய மணவாளர் இயல் பெயர் -அழகிய மணவாள நாயனார் -ஆச்சான் பிள்ளை என்று ஆயிற்றாம் )
தர்சன ரஹஸ்ய தாத்பர்யங்களையும் அவர் உபதேச முகத்தாலே லபித்தது
மற்றும் சகல சாஸ்திரங்களையும் அவர் சந்நிதியிலே சாங்கமாக அதிகரித்து
இதர தர்சன நிரசனத்துக்கு உறுப்பாக
ஸ்ரீ வாதி கேசரி -என்னும் படி வாக் வைகரியை யுடையராய் இருக்குமவர் –

(அவதார கிராமம் படி அருளிச் செய்கிறார் –
திருமடைப்பள்ளி கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருந்தவர்
ஸ்ரீ வாதி கேசரி-வாதங்களுக்கு ஸிம்ஹம்
ஸூந்தர ஜாமாத்ரூ முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சார ஆர்ணவ சம் மக்ன ஐந்து சந்தான போதகம் )

ஏவம் விதராண இவர்கள்
ஸ்ரீ திருவாய்மொழியைக் காத்த -குணவாளர் என்று நெஞ்சே கூறு –
அதாவது
பிரமாண ஸ்ரேஷ்டமான ஸ்ரீ திருவாய் மொழியை அல்ப மதிகளால் அவிசால்யமாம்படி
ஸ்வ ஸ்வ வ்யாக்யானங்களாலே ஸூ ரஷிதமாக ரஷித்த மகா குணத்தை யுடையவர்கள் -என்றபடி –

(வேதம் பிபேதி -நடுங்குமாம் அல்ப மதிகளால் -கோணா மாணா கிழித்து -வியர்த்தல் ஆகுமே )

அவர்கள் தான்
ஸ்ரீ ஆறாயிரப் படி தொடங்கி
ஸ்ரீ பன்னீராயிரப் படி இறுதியாக
வியாக்யானம் பண்ணி அருளின படியை மேலே இவர் தாமே ஸூ வ்யக்தமாக அருளிச் செய்கிறார் –

(வியாக்யானம் -பஞ்ச லக்ஷணங்கள்
1-பதச்சேதம் -பதம் பிரித்து
2-பதார்த்த யுக்தி
3-விக்ரஹம்
4-வாக்ய யோஜனை
5–தாத்பர்ய கதனம் )

(நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்
உறங்கேல் ஓர் எம்பாவாய் -இப்படி பதச்சேதம்

வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -ஏதோ -தாயார் இடம் அந்தரங்க வார்த்தை -இடை ஓடியா நின்றது அஷ்ட புஜங்கள்
மணி வண்ணன் வலையுளே அகப்பட்டேன் -கண்கள் வலை -கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு –
அப்பூச்சி காற்றுகின்றேன் -அரையர் அபிநயம் –
உள்ளது எல்லாம் கண்ணன் நம்மாழ்வாருக்கக் காட்டி அருள -அவர் நாதமுனிகளுக்கு காட்டி

விக்ரஹம் -வாக்கியம் பேதம் அறிந்து -தவம் புரிந்த மா முனி கொணர்ந்த கங்கை -பகீரதன் –
விசுவாமித்திரர் கங்கை கரை ஓரம் ராம லஷ்மணர்ட்களைக் கூட்டி
தான் போலும் தரணியாளன் -கோன் -பாசுர விளக்கம்

வாக்ய யோஜனை -மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் -எக்காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன்
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
நம்பியை -தென் குறுங்குடி–உம்பர் வானவர்-எம்பிரானை -என் சொல்லி மறப்பேனோ –கூட்டிப் பொருள்கள்
எங்கனேயோ என்னை முனிவது
அன்னைமீர்காள் என்னை முனிவது
கண்டபின் என்னை முனைவது
உயர்வற –அவன் -துயர் அறு சுடர் ஆதி தொழுது எழு

தாத்பர்யம்
கனைத்து இளம் கற்று எறுமை -கஜேந்திர வரதன் குமுறுவது போல் –
கைம்மா துன்பம் கடிந்த பிரானே எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -அம்மா
ஒரு முதலை -ஆயிரம் வருஷம் -குளம்
ஐந்து முதலைகள் -ஸம்ஸார அநந்த கோர ஆர்ணவம் –
பாசுர பதிக சங்கதிகள் )

காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு –
இப்படி வியாக்யான விசேஷங்களாலே ரஷித்துப் போந்த குணத்தை யுடையவர்கள் என்று
அக் குணங்களிலே வணங்கி இருக்கிற நெஞ்சே-
அக் குணங்கள் அடியாக யுண்டான அவர்கள் வைபவத்தை-
உன் ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
யத் மனசா த்யாயதி தத் வாசா வததி -என்னும் படி சொல்லு
மனசுக்கு த்வாரமாய் இறே மற்றைக் கரணங்கள் தான் இருப்பது
அந்த உண்மையைப் பற்ற கூறு -என்கிறார் –

(வாக்கு மனஸ்ஸூ -போட்டி -மனதால் நினைப்பதே வாய் சொல்லும் -ப்ரம்மா சொல்ல -வாக்கால் சொல்லாமல் சாபம்
ஆஹுதி -பிரம்மாவுக்கு மனசால் நினைத்தே சொல்கிறோம் -வேதத்தில் இது உண்டே –
ருத்ரனுக்கு சொன்னால் கை அலம்பி கொள்வாராம் -தீட்டு போக -இந்த அனுஷ்டானம் சைவர்களுக்கு உண்டாம் -)

(ஜீயர் -சீயர் -சீரியர் -saint -seer -one who fore sees -த்ருஷ்டா ரிஷி -முக்காலமும் உணர்ந்தவர் –
one who sees -பார்ப்பான் -நன்மையை தொலை நோக்குடன் பார்க்கும் -சீயம் -ஸிம்ஹம் -ஸ்ரேஷ்டர் -அடல் ஏறு -போல் )

—————————————————–

முற்காலத்தில் அவர்கள் செய்த வ்யாக்யானங்களின் அருமையை
வ்யதிரேக முகத்தாலே
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
(திருத்திப் பணி கொண்ட ஆச்சார்யர்களுக்கு -முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு
அன்பையே-என்றபடி – -முயலத்தான் முடியும் )

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் -அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு—40-

மனம் நினைக்க நினைக்க -சிந்தனைக்கு கருவி -மனம் பூர்வ வாக் உத்தர –

ஏதே சடாரி க்ருத கீத சஹஸ்ர டீகா
க்லுப்தா ந அசேத்
குருவரை
குருகேச முக்கிய
தஸ்ய பிரபந்த திலகம்
ஹந்த
பாவம் ஜாநந்தி ஹே
அத்ய
ஹ்ருதய த்வம் உதீரதா

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் –
அதாவது
ஜ்ஞாநான் யல்பீ பவிஷ்யந்தி -என்று சம்ப்ரதாயங்கள் சங்குசிதம் ஆவதற்கு முன்பே
ஏற்கவே –
முற்காலே –
ஸ்ரீ பிள்ளான் முதலாக ஸ்ரீ ஜீயர் அளவாக யுண்டான ஐந்து ஆச்சார்யர்களும் செய்து அருளும் –
(ஞானக் கலைகளுக்கு ஆதாரமான தானே பீஷ்மர் -தத்வ தர்ஸி வசனம் கேட்க உபதேசம்
பிள்ளான் தொடங்கி வாதி கேசரி மணவாள ஜீயர் வரை )

அந்த வியாக்கியைகள் –
அந்த விலஷணமான வ்யாக்யானங்கள் ஆனவைகள் –

அன்றாகில் –
அப்படி அவர்களாலே செய்யப் பெறா விடில்
அன்று -என்றது அல்லது -என்றபடி
அக்காலத்திலே-தீர்க்க தர்சிகளான அவர்களாலே வியாக்யானம் பண்ணாது ஒழியில்
இனி நாம் இருந்து என் படக் கடவோம் என்று விஷண்ணர் ஆகிறார்-

அந்தோ –
சதுரா சதுரஷரீ காம் அவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச -என்னுமா போலே –
(நம்மைப் போல் ஜந்துக்கள் என்ன நிலையில் இருப்போம்
இந்த சதுர ராமானுஜ அக்ஷரம் கிடைத்து இருக்கா விட்டால் -ஹந்த)

திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு –
ஸ்ரீ திருவாய் மொழிப் பொருளை தேர்ந்து உரைக்கும் போது
தெள்ளார் ஞானம் யுடையராக வேண்டாவோ –
இத்தை இப்போது நிரூபித்து சொல்ல வல்ல வெளிச் சிறப்பை யுடையார் ஆர் –
அவர்களை எங்கே காண்பது –
(வெளிச் சிறப்பை-ஞான தீபேண பாஸ்வத வெளிச்ச எரிப்பு )

ஏதத் காலத்தில் அவர்கள் உடைய ஞான மாந்த்யத்தையும்
திராவிட வேத சாகரம் -என்னும் படி
அளவியின்ற அந்தாதி யான இதனுடைய அர்த்த காம்பீர்யத்தையும் கண்டு
இத்தை அறிந்து
இதுக்கு அனுகுணமாக வியாக்யானம் பண்ண வல்ல சக்தியை யுடையார் ஆர் -என்கிறார் –

தேர்ந்துரைக்க வல்ல குரு ஆர் –
இவர்கள் செய்து அருளின வ்யாக்யானங்களின் சீர்மை அறிந்து-
அறியக் கற்று வல்லார் -என்னுமா போலே-
அத்தை ப்ரவர்த்திப்பித்து போருவார் தாம் ஓர் ஒருத்தர் என்னும்படி அபூர்வராய் இருக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளத்தை அடி ஒற்றி
அதுக்கு அனுகுணமாக வியாக்யானம் பண்ணுவார் அரிதாய் இறே இருப்பது –
(அறிந்து -மேலே கற்று தேர்ந்து –வல்லமை -பிரசாரம் -நான்கு நிலைகள் )

உரைக்க வல்ல -என்கையாலே
சப்த அர்த்த சந்தர்ப்ப கரணத்தில் அருமை இருக்கிற படி —

உரைக்க வல்ல குரு ஆர் இக் காலம் –
அர்த்த அபஹாரம் பண்ணுகிற காலத்தில்
அர்த்த பிரகாசகரைக் கிட்டுமோ –
உண்டாகிலும் தன் கைப் பொருள் கொண்டு தப்பி ஓடும் காலம் இறே
பிறர் நன் பொருளை இறே அபஹரித்து போருகிறது –

(தேகாத்ம அபிமானம் -ஓ ஓ இது என்ன உலகு இயற்க்கை
பூர்வர்களால் ஸூ ரஷிதாம் -உள்ளவற்றை அர்த்த அபகாரம் பண்ணும் புறச்சமயிகள்
அர்த்த அபஹாரம்-சாடு -பொருள் கவரும் காலம் -அர்த்தம் -பொருள் -செல்வம் -meaning –
பாதம் -கால் -அளவீடு -அவயவம் -இரண்டு அர்த்தம் போல் )

கடலளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரும் காலத்து -என்னும்படி
குரூரமான காலத்திலே
கூரிய மெய்ஞ் ஞானத்தாலே
ஸ்ரீ திருவாய் மொழிப் பொருளை ஓர்ந்து உணர்ந்து உரைப்பார் ஒருவரைக் கிட்டுமோ –
(பக்தி பிரபாவம் திரு உள்ளத்தில் பட வேண்டுமே )

நெஞ்சே கூறு –
ஸ்ரீ பாஷ்யகாரர் காலம் தொடங்கி உண்டான ஸ்ரீ திருவாய்மொழி ஸ்ரீ ஆச்சார்யர்கள் இடங்களிலே
பவ்யமாகப் போருகிற நெஞ்சே
இவர்களைப் போலே ஏதத் அர்த்த தர்சிகளாய் போருமவர்களை
இக் காலத்திலே இன்னார் என்று ஒருவரை யாகிலும் சொல்லிக் காண்-
ஆகையால் அவர்கள் அலப்யராய் இறே இருப்பது-

—————————————————–

கீழே
ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ நஞ்சீயர் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் -என்று அவர்கள் அருளிச் செய்த வியாக்யான
பஞ்சக சங்க்யையும் தனித் தனியே அருளிச் செய்வாராய் –

அதில் இப்பாட்டில் –
ஸ்ரீ குருகைப் பிரார்க்கு அன்பாம் ஸ்ரீ எதிராசர் -என்னும் படி
பிரபன்ன ஜன கூடஸ்தரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய
நிரவதிக கிருபையாலே ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
ஸ்ரீ திருவாய் மொழிக்குப் பண்ணி யருளின வியாக்யான சங்க்யை -ஷட் சஹஸ்ரம் -என்கிறார் –
(ஸ்ரீ விஷ்ணு புராணம் -கணக்கில் ஆறாயிரம்
படி -கிரந்தம் -புத்தகம் -நூல் –32-அக்ஷரங்கள் கொண்ட ஒரு தொகுதி –
அனுஷ்டுப் ஸ்லோகம் -32-எழுத்துக்கள் -கீதா -தனியன் ஸ்லோகங்கள் -1 படி
முமுஷுப்படி இத்யாதி -இங்கு கிரந்த அர்த்தம் – )

தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை யன்றுரைத்தது
தின்பமிகு மாறாயிரம்–41-

ஞானம் இருக்க -அதுக்கும் மேலே -யதிராசர் பேர் அருள் கிட்டி —
அதனாலே அன்பு மிக்கு -அதனாலே பிறந்த -இன்பம் மிகு ஆறாயிரம் -நான்கு நிலைகள்

நிஸ் ஸீம
நிர்மல தீயா
குருகாதிப
லப்தவா பிரசாத லகரிம் யதி புங்க வஸ்ய
ஸாஹா சஹஸ்ர விஷயா டீகா கீதா
ஷட் சஹஸ்ரீ

தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
ஸ்ரீ திருவாய் மொழிக்கு -பிரதம – வியாக்யானம் பண்ணுகைக்கு அனுகுணமாக
விவேக பரிபூரணமான வெளிச் சிறப்பை யுடையரான
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
அன்றிக்கே –
தெளிவு மிக்கு இருந்துள்ள ஞானத்தை யுடையவர் -என்னவுமாம் –

(பகுத்தறிவு -விவேக ஞானம் என்றும் -ஆர்ந்த ஞானம் என்றும் –
மணிப்பிரவாள கிரந்தமும் இது தான் பிரதமம் -இது உபநிஷத் சாரம் -அவற்றை பிரமாணமாகக் காட்டி –
ஆளவந்தார் முதலில் இத்தை உபதேசித்து -பிள்ளான் கிரந்தமாக அருளிச் செய்தார் )

எதிராசர் பேரருளால் –
உன் பெரும் கருணை தன்னை (ராமானுஜ -70 )-என்னும்படியான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய நிரவதிக கிருபையாலே –
இது வாய்த்து இவர் வியாக்யானம் பண்ணுகைக்கு அடி –

உள்ளாரும் அன்புடனே –
க்யாதி லாபாதிகளால் அன்றிக்கே
ஸ்ரீ திருவாய் மொழி விஷயமாக யுண்டான நிரவதிக பிரேமத்தாலே -என்னுதல்-
சேதனர் பக்கல் நிரவதிக ஸ்நேஹத்தால் -என்னுதல் –
(அன்பு -ஆழ்வார் பக்கல் க்ருதஞ்ஞதை -திருவாய் மொழியில் பக்தி- நம் இடம் இரக்கம் –
நன்றி பக்தி இரக்கம் மூன்றுக்கும் அன்பு வேண்டுமே )

மாறன் மறைப் பொருளை-
அருளினான் அவ் வரு மறையின் பொருள் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வார் யுடையதான வேத ரூபமாய்
ஸ்வார்த்த நிர்ணயத்தில் அல்லாதார்க்கு அருமை தட்டி இருப்பதான
ஸ்ரீ திருவாய் மொழியின் அர்த்தத்தை அருளிச் செய்தது ஸ்ரீ ஆறாயிரம் ஆய்த்து –
அவாவில் அந்தாதிக்கு அனுகுணமான அன்புடனே யாய்த்து உரைத்தது —

(தைத்ரியம் தித்ரி முனிவர் வெளிப்பட்டது போல் மாறனால் வெளிவந்த மறை தானே இது )

யன்றுரைத்தது –
அதாவது –
ஸ்ரீ பாஷ்ய காரர் சந்நிதியிலே கேட்டு
மனனம் பண்ணி
அர்த்த வைசத்யம் ( விளக்கம் ) பிறந்து இருக்கிற அக்காலத்திலே ஆய்த்து
இவர் வியாக்யானம் பண்ணிற்று என்கை –

அதன் சங்க்யை எவ்வளவு என்னில் –
இன்பமிகு மாறாயிரம்-
அமர்சுவை ஆயிரம் -என்னும்படி ரச கனமாய் இருப்பதாய் (சுவை அமர்ந்து -பக்தாம்ருதம் )
அடியார்க்கு இன்ப மாரியாய் -இருக்கிற இதுக்கு
இன்பமிகு மாறாயிரம் ஆய்த்து இவர் அருளிச் செய்தது –
இதுவும் அப்படியேயாய் இருக்கை –மூலத்தைப் பற்றி வரும் ரசம் இறே-
அன்புடனே பண்ணுகையாலே இதுவும் இன்பம் மிகுந்து இறே இருப்பது

இவர் தாம் பௌராணிக புத்ரர் ஆகையாலே ஆய்த்து ஸ்ரீ புராண ரத்ன சங்க்யையிலே அருளிச் செய்தது –
(பெரிய திருமலை நம்பி திருக்குமாரர் அன்றோ
ஆச்சார்ய ஹ்ருதயம் பௌராணிகர்-ராமானுஜர் -அபிமான புத்திரர் அன்றோ )

————————————————

அதன் பின்பு ஸ்ரீ பெரிய பட்டருடைய கிருபையாலே விசேஷித்து ஸ்ரீ நஞ்சீயர்
ஸ்ரீ ஆறாயிரத்தில் காட்டிலும் அரை வாசி தடத்து இருக்கும் படி
ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஸ்ரீ ஒன்பதினாயிரமாக
ஒரு வியாக்யானம் செய்து அருளின படியை அருளிச் செய்கிறார் –
(மாதவாச்சார்யர் -அத்வைதியாக -வேதாந்தியாக இருந்தவர்
பட்டர் -திரு நெடும் தாண்டக ஸாஸ்த்ரம் அறிவாரா -கேட்டு இவர் -வியந்து இருக்க –
இவரே சென்று திருத்திப் பணி கொண்ட சரித்திரம் –
மேலக்கோட்டையில் இருந்து வந்து- ஆழ்வார் ஈரச் சொற்களை இப்படி ஆர்வமுடன் சொல்வாரையும்
பெற்றோமே என்று வியந்த -ஞான பூர்த்தியே சீர் –
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வரு மறையின் பொருள் -என்று
உபநிஷத் தேனு -இடையன் கண்ணன் -பார்த்தோ வத்ஸ- கீதாம்ருதம் வழங்க –
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
இது தான் நஞ்சீயர் அருளிச் செய்த விசேஷ அர்த்தம் – –
மற்றவர்கள் இதுவும் ஆழ்வார் பரமாக வியாக்யானம் )

தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது
ஏர் ஒன்பதினாயிரம் –42-

பிரஞ்ஞாவதாம் நிரவதி ப்ரதிமாத்ம பூமா
பட்டாரகஸ்ய தயயா
நிகமாந்த யோகி
சடஜித் நிகமம் டீகாம்
நவ சஹஸ்ரம் –

தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும்-
அதாவது
ஸ்ரீ திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணுகைக்கு ஈடான தம்முடைய ஞானாதி குணங்களை
ஞாதாக்கள் எல்லாரும் ஸ்துதிக்கும் படியாய் இருக்குமவர் -என்னுதல் –

அன்றிக்கே –
தம்முடைய ஜகன் மங்கள ஹேதுவாய் இருக்கிற ஆச்சார்ய அனுவர்த்த நாதிகள் ஆகிற ஆத்ம குணங்களை
ஆசார்யவான் -என்னும்படி ஆசார்ய பரதந்தரராய் இருக்கிற விசேஷத்தாலே
ஞாதாக்கள் எல்லாரும் கொண்டாடும் படியான
வைபவத்தை யுடையராய் வேதாந்திகள் என்று நிரூபகமாய் இருக்கிற ஸ்ரீ நஞ்சீயர் என்னுதல் ஆகவுமாம் —
(ஜகன் மங்கள ஹேதுவாய் இருக்கிற தனியனில் இது உண்டே
நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதவே
யஸ்ய வாக் அம்ருதா சார பூரிதம் புவன த்ரயம்
பூம் தோட்டம் -பெருமாள் திருமுடி சிக்கு நாறாமல் இருக்கவா புஷ்பங்கள் -பட்டர் குழந்தைகள் துவம்சம் பண்ணவே
திருத்தொடையில் திருக்கண் வளர்ந்து அருள -கண் விழித்து மீண்டும் த்வயம் அருளப் பெற்ற சீர் )

இப்போது
வேதாந்தி நஞ்சீயர் – என்கிற விசேஷணத்தாலே
ஸ்ரீ பட்டர் நெடும் தூரம் எழுந்து அருளி
திருத்துகைக்குப் போரும் பெருமையை யுடையவர் என்று தோற்றுகிறது-

நஞ்சீயர் தாம் –
இப்படி பெரு மதிப்பரான ஸ்ரீ நஞ்சீயர் தாம் –

பட்டர் நல்லருளால் –
ஸ்ரீ பட்டருடைய நிர்ஹேதுக கிருபையால் –
இவருக்கு ஸ்ரீ பட்டர் உடைய கிருபை த்ருஷ்டமாகப் பலித்தது –
ஸ்ரீ திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணும் படியாக பலித்தது –

பட்டர் நல்லருளால் –
நல்லருள் நம்பெருமாள் -என்னுமா போலே
அங்கு திரு வாய் மொழிக்கு பிரதி பாத்யனுடைய கிருபை –
இங்கு பிரதிபாதகருடைய கிருபை —
அவனுடைய கிருபையைக் காட்டிலும் விஞ்சி இறே இவருடைய கிருபை இருப்பது –
அது ஆயிரத்துக்கு அடியாய் இருக்கும்
இது ஒன்பதினாராயிரதுக்கு அடியாய் இருக்கும் –
இது தான் ஒன்றுக்கு ஒன்பதாய் இருக்கிறபடி –
(ஆச்சார்யர் திருவடி பலத்துக்கு ஏற்றம் -ராமானுஜன் – பரத ராஜ்ஜியம்
ஒன்பது மடங்கு பெருகி ராமன் இடம் கொடுத்தது போல் )

அருளால் எஞ்சாத ஆர்வமுடன் –
அவர் நல்லருளாலே இவர்க்கு நலம் உண்டாய்த்து
நலம் அருளினான் -என்னுமா போலே (பக்தி ரூபா பன்ன ஞானமான பக்தி )
இப்படியானவர் அருளாலே ஆய்த்து இவருக்கு அசங்குசிதமான அபி நிவேசம் யுண்டாய்த்து –
எஞ்சல் -சுருங்குதல்-
ஆர்வம்-அபி நிவேசம்-

ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது –
ஆராத காதலை யுடையவருடைய பிரபந்ததுக்குத் தகுதியாக
(5-3- பேர் அமர் காதல் -5-4-பின் நின்ற காதல் -5-5-கழிய மிக்கதொரு காதல் பெருகி )
ஆர்வம் பெருக -என்னும் படியான அபி நிவேசத்தாலே
மாறன் பணித்த தமிழ் மறை -என்னும்படி ஸ்ரீ ஆழ்வார் யுடையதாய்
திராவிட வேத ரூபமான ஸ்ரீ திருவாய் மொழியின் அர்த்தத்தை நிரூபித்து
தத் அனுகுணமாக வியாக்யானம் செய்தது எவ்வளவு என்ன –

ஏர் ஒன்பதினாயிரம் –
என்கிறார் -ஏரார்ந்த தமிழ் மறைக்கு தகுதியாய் இருக்கை –

இது ஏரார்ந்து இருக்கை யாவது
சப்த சந்தர்ப்பத்தின் உடைய சாதுர்யத்தாலும்
அர்த்த கௌரவத்தாலும் உண்டான அழகின் மிகுதியை யுடைத்தாகை –

(ஆய்ந்து உட் புகுந்து ஆழ்ந்த அர்த்த விசேஷங்கள்
ஐ வாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் –
பொய் பேச-இவர்கள் ஸஹ வாசம் என்று வியாக்யானம் போல்வன )

இவர் தாம் வேதாந்தி நஞ்சீயர் – ஆகையாலே
வேதாந்த சாஸ்த்ரமான ஸ்ரீ பாஷ்ய சங்க்யையாலே யாய்த்து இறே
இத்தை இப்படி அருளிச் செய்தது –

(நஞ்சீயர் கொடுத்த ஏடு காவேரியில் போக சந்தை கேட்ட ஞானத்தால்
நம்பிள்ளையே எழுதிக் காட்டி அதுவே ஒன்பதாராயிரம் )

——————————————————-

அநந்தரம் –
ஸ்ரீ நம்பிள்ளை யுடைய நியோகத்தாலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை கீழ் அருளிச் செய்ததில்
மும்மடங்கு என்னும் படி ஸ்ரீ இருபத்து நாலாயிரமாக
ஒரு வியாக்யானம் செய்து அருளின படியை அருளிச் செய்கிறார்-

(ஸகல திராவிடாம் நாய சார வியாக்யான காரிணம்
ஸ்ரா வணே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ கிருஷ்ண குரும் ஆஸ்ரயே
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

சதுர் விம்ச சஹஸ்ராமி -24000 ஸ்ரீ ராமாயணம்
பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் வியாக்யானம்
தனி ஸ்லோக ஸ்ரீ ராமாயணம் வியாக்யானம் -இவர் ஈடுபாடு அறிவோம் )

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் –43-

இன்பாவருபத்தி மாறன் -இன்பா -இன்பமாக-
வரு -பகவத் கடாஷத்தாலே வருகிற
பத்தி மாறன் -பக்தி உடைய மாறன்

லப்தவா கிருபா சமுசிதம்
கலி வைரி தாஸ ஸூரே
நிதேசம்
அபய பிரத ராஜர் நாம
யத் கிலிப்த
திராவிட ஆகம விவரணம்
தத் கிரந்தம்
த்ரி குணிதம் அஷ்ட சஹஸ்ரம் சங்க்யம்

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட –
சுத்த சம்ப்ரதாய ப்ரவர்த்தகராய்
காருண்ய பூர்ணம் கலிவைரி தாசம்-என்னும் படி –

(வ்ருச்சிகே க்ருத்திகா ஜாதம் கலி வைரி குரும் பஜே
வேதாந்தி முனி பாதாப்ஜ ஆஸ்ரிதம் ஸூக்தி மஹார்ணவம்
வேதாந்த வேத்ய அம்ருத வாரி ராஸேர் வேதார்த்த சார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் வைரி தாசம் )

கேவல கிருபா மாத்ர பிரசன்ன ஆச்சார்யராய் இருக்கிற ஸ்ரீ நம் பிள்ளை –
தம்முடைய பர பிரயோஜன ஏக ப்ரதையான-
கொள்வது இலையாகிய குளிர்ந்த வருளாலே-(ஸ்ரீ வசன பூஷண தனியன் )

(பேரு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஒரு வியாக்யானம் பண்ணும் என்று நியமித்து அருள
அப்படியே அந்த அனுக்ரக ஏக சீலமான அவருடைய நியோகத்தை
க்ரியதா மிதி போலவும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும் அது போலவும் எண்ணி –

பின் பெரியவாச்சான் பிள்ளை –
இப்படி ஆஞ்ஞாபித்து அருளின அநந்தரம்
பரவான் அஸ்மி காகுஸ்த -என்னும் படி அங்குத்தைக்கு அத்யந்த பரதந்தரான
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை –

யதனால் –
அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி-
இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
வ்யாவர்த்திக்கிறது –
(ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்-125000 படி -மஹா பாரத கணக்கில் -இன்று வரை கிடைக்க வில்லை
நம்பிள்ளை கரையானுக்கு இரையாக்கினார்
முன்னோர் –முறை தப்பாதே கேட்க வேண்டும் -இது இருந்தால் கேட்க வருபவர்கள் இல்லாமலே போகுமே
(ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டர்-36000 படி ஈடு )

அதனால் –
ராக பிராப்தமாய் இருக்கும் அதுக்கு விதி யுண்டானால்
கடுக பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கையாலே -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் இவை )
பாலோடு அமுதம் என்ற ஆயிரம் -ஆன இதுக்கும்
அப்படியே ஆச்சார்ய நியமனம் உண்டாகப் பெற்றது —

அதனால் யாய்த்து –
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது – இருப்பத்து நாலாயிரம் –

இன்பா வருபத்தி-
ஸ்மர்த்தவ்ய விஷய ஸ்வாரஸ்யத்தாலே ஸூ ஸூகம் என்னும் படி
நிரதிசய ஸூக ரூபமாய் இருக்கிற பக்தியை
ப்ராப்தருமாய் ஆப்தருமாய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் (ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை )
மேன் மேல் என பெருக்காறு போலே பெருகி வாரா நிற்கிற அந்த பக்தி பலாத் காரத்தாலே
அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியின் அர்த்தத்தை
இவர் வ்யாக்யானமாக அருளிச் செய்தது

இருபத்து நாலாயிரம் – பக்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
காதல் குருகூர்ச் சடகோபன் என்னுமா போல இது தான்
இன்பாவருபத்தி -அடியாக வந்தது ஆகையாலே பக்தாம்ருதமாய் -ஆக அவதரித்தது இறே-
(கிருஷ்ணா த்ருஷ்ணா தத்வம் அன்றோ )

இப்படி நிரதிசய போக்யமான
மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்
சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் உக்தவான் ருஷி -என்னுமா போலே
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயண சங்க்யை யாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது –

இன்பாவருபத்தி மாறன் மறைப் பொருளை –
ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளத்தின் படியாய் இறே இது இருப்பது
ஆகையாலே வியாக்யானமும் தத் துல்யமாய் இருக்கை –

ஸ்ரீ ராமாயணம் -என்றும்
ஸ்ரீ திரு வாய் மொழி என்றும்
இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டு என்று இறே இவற்றின் உடைய சாம்யம் இருப்பது –

(அவ்யப தேசனுக்கு அநந்தரம் இருக்கிறவன் -இரண்டு மதிள்கள் இவை என்றானே )
இருபத்தி நாலு -இலக்கண பிழை -இருபத்தி மூன்றும் இருபத்து நான்கும் இப்படி –
இருபத்தொன்று போன்றவை போல் சந்தி இல்லை இவை இரண்டுக்கும் )

—————————————————————

(ஈடு இணை அற்ற -ஈடுபடுத்தும் -கவசம் -அவதரித்து –4 5 அதிகாரிகள் தாண்டி
திருவாய் மொழிப்பிள்ளைக்கு 150-200 வருஷங்கள் பின்பே நாடு அறிய வந்தது –
முன்பு ஓராண் வழி -அந்தரங்கங்களை உபதேசித்து -நம்பிள்ளை கோஷ்ட்டியோ நம்பெருமாள் கோஷ்ட்டியோ
என்னும் படி அன்றோ இவர் சாதித்தார்
இவர் செப்ப -ஏடு படுத்தினார் -பட்டோலை செய்து அருளி -ஒவ் ஒரு நாளும் பகலில் கேட்டதை இரவில் –
முடிந்தபின்பு காட்ட -இவர் அனுமதி இல்லாமல் ஆசை உடன் -ஏடு படுத்த –
நமது பாக்யம் இத்தை அழிக்காமல் பின்பு வெளிவந்தது )

அநந்தரம்
ஸ்ரீ (நம்)பிள்ளை யுடைய திவ்ய ஸூக்தி க்ரமத்தை ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை
ஜகத் பிரசித்தமாம் படி
ஸ்ரீ திருவாய் மொழிக்கு வ்யாக்யானமாக அருளிச் செய்தது
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரம் என்கிறார்

தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை யிந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம் –44-

ஸூக்தி
ஸூ தா கர சஹி
கலி வைரி தாஸ நாம் குரோ
சமவலம்பி
கிருஷ்ண பாத
யாம் திராவிட உபநிஷத் விவரிதம் சகாரா
ஷட் த்ரிம்சத் சத தசம்

தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை –
பிரசன்ன கம்பீரமாய்–சார அசார விவேக சதுரமாய் இருந்துள்ள
ஸ்ரீ நம்பிள்ளை யுடைய திவ்ய ஸூக்தி க்ரமத்தை –

செப்பு நெறி தன்னை -என்கையாலே –
அவர் அருளிச் செய்த மார்க்கம் ஒழிய
தமக்கு ஒரு மார்க்காந்தரம் இல்லை என்று தோற்றுகிறது –
குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய-என்னும் படி இறே –
இவர் ஆச்சார்யரை அடி ஒற்றி நடக்கும் க்ரமம் –

வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
சம காலத்தில் அவர்களை ஒழிய பின்பு உள்ளாறும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி
கிரந்தஸ்தமாக எழுதி ஈடு உபகரித்த ஔதார்யத்தை யுடைய ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை —

(பின்னரும் கற்க அன்றோ இவரும் உபதேச ரத்ன மாலை -ப்ரமாணத்துக்கு இவை
பின்னானார் வணங்கும் சோதி நமக்காக அன்றோ -ப்ரமேயத்துக்கு
ஈட்டை எழுதிக் கொடுத்து அருளியதால் உதாரர் ஆனார் –
யோகி பார்த்த சாரதி ஸ்வாமிகள் -1874-சரஸ்வதி பண்டாரம் trust ஏற்படுத்தி
நம்பிள்ளை சந்நிதி அயோத்யா அம்மாஞ்சி கோயில் ஏற்படுத்தப்பட்டது )

யிந்த நாடறிய –
நாடும் நகரமும் நன்கறிய -என்னுமா போலே விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற
ஒரு நாடாக அறிந்து ஈடு படும் படி –
(நாகரீகம் -நகரத்தார் -நாட்டுப்புறத்தான் -வழக்குச் சொற்கள் )

மாறன் மறைப் பொருளை-
ஸ்ரீ ஆழ்வார் யுடைய வேத ரூபமான ஸ்ரீ திருவாய் மொழியின் அர்த்தத்தை
மாறன் செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை (சம்பிரதாய சந்திரிகை பிரமாணம் ) -என்னக் கடவது இறே –

நாடறிய நன்குரைத்தது –
அவர் ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆக்கும்படி ஸ்ரீ திருவாய் மொழி ஆறாம் பத்தில் பாடினால் போல்
இவரும் நாடறிய வாய்த்து ஸ்ரீ ஈடு நன்கு உரைத்தது –
அதாவது ஸூ வ்யக்தமாம் படி அருளிச் செய்தது –

ஈடு முப்பத்தாறாயிரம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தைக் காட்டிலும் பன்னீராயிரம் அதிகமாம் படி இறே
இவர் அருளிச் செய்தது –

ஈடு -என்பது -பொருள் –
ஸ்ரீ மாறன் மறைப் பொருளை ஈடும்படி-ஈடு படும்படி – இறே இவர் அருளிச் செய்தது
(இடப்படுவது ஈடு -விடப்படுவது வீடு போல்
ஈடு -கவசம் -திருவாய் மொழிக்கு கவசம் போல் ரக்ஷகம் -அபார்த்தங்கள் வராத படி )

இது தான் ஸ்ருத பிரகாசிகையில் -என்று இறே
பட்டர் பிரான் ஜீயர் அருளிச் செய்த அந்திம உபாய நிஷ்டையில் அருளிச் செய்து அருளினார் –
(எழுத்தாணி ஓலைச்சுவடி போல் தான் அடியேனுக்கும் இதன் தொடர்பு –
மா முனிகள் வக்தா -லோக கத்வ-தாள பத்ரம் போல் -)

அந்தக் கட்டளையிலே யாய்த்து அருளிச் செய்தது –
குருப்ய அர்த்தச் ஸ்ருதச் சப்தைச் தத் பிரயுக்தைச்ச யோஜித -என்கிறபடியே
இங்கும் ஸ்ருதமான அர்த்தத்தை இறே பிரகாசிப்பித்தது-

(ஸூதர்சன ஸூரி -நடாதூர் அம்மாள் 18 தடவை ஸ்ரீ பாஷ்யம் -சொல்ல கேட்டு ஸ்ரீ பாஷ்ய விளக்கம் –36000-படி இதுவும்
13 -மங்கள ஸ்லோகங்கள் உண்டே ஸூருத பிரகாசிகைக்கு -இது அதில் ஓன்று
உயர்ந்த ஆச்சார்யர் இடம் பொருள் கேட்டேன் -அவர் அருளிச் செய்த சப்தங்கள் கொண்டு தொகுத்து –
இதில் ஆசை உள்ளாருக்காக இத்தை எழுதுகிறேன் )

நம்பிள்ளை செப்பு நெறி தன்னை – இறே இவர் எழுதி அருளினார்
எழுது ஏரார் தமிழ் வேதத் தீடு தன்னை -என்று இவர் மேலே அருளிச் செய்கையாலே
இவர்க்கு லேகக அன்வய மாத்ரமே உள்ளது –

இவர் தான் ஸ்ருத பிரகாசிகைக்கு முன்னே திரு அவதரித்தானாலும் பின்புள்ளார் இதன் படியை
திருஷ்டாந்தமாக அருளிச் செய்ய குறை இல்லை –
(பின் பட்ட நாம் கண்ணன் சொன்னதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினார் -என்று சொல்லுமா போல் )

————————————————————-

இனி ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் தம்முடைய அதிசயமான ஞானத்தாலே
ஸ்ரீ திருவாய்மொழியின் அர்த்தத்தை யுரைத்தது ஸ்ரீ பன்னீராயிரம் என்கிறார் –
(ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயில் -அம்பாசமுத்திரம் அருகில் திரு அவதாரம் –
குலசேகரப்பெருமாள் திருவரசும் இங்கே தான் )

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் —45-

போதமுடன் -ஞானத்துடன்

பஸ்யாத் அபி ஜனான்
அநுக்ரஹ தான்
ரம்யோ பயந் தரு முனி
ஸ்ப்புட வைபவ
வ்ருத்தி யதாயி
சடஜித் நிகமஸ்ய
தேயம் கிரந்தம்
த்வி ஷட் தச சத
முதம் ஆனந்தாதி

அன்போடு அழகிய மணவாளச் சீயர் –
ஸ்ரீ திருவாய் மொழியில் தமக்கு உண்டான பிரேமம் பெருக்க வாய்த்து அருளிச் செய்தது –
பாஷ்ய பக்திர் அஸூசுரத் -என்னுமா போலே

(ஸ்ரீ ரெங்கேச ராஜ்ஜயா லப்த வியாச -சங்க்யம் ஸூ தர்சனம் பாஷ்ய பக்திர் அஸூசுரத்
வேத வியாச பட்டர் புத்திரர் -வாசா விஜயந புத்திரர் – நாவால் வென்றான்
அவர் புத்திரர் -ஸூத பிரகாசர்
ஸூத பிரகாசம் எழுத தூண்டிற்று -ஆழமான அர்த்தம் –ஸ்ரீ பாஷ்ய பக்தி -ஓன்று மற்ற ஒன்றுக்கு உதவுமே
இதனால் வியாச பட்டம் பெற்றார் இவர் )

அன்றிக்கே –
அன்போடு அழகிய மணவாளச் சீயர் –
என்று -சேதனர் பக்கல் வாத்சல்யத்தாலே அருளிச் செய்தார் -என்னவுமாம்
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன்-( 1-3-5-) -என்னுமா போலே –

பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-
பின்பு உள்ளாறும் இத்தைக் கொண்டே சாதிக்க வேண்டி இருக்கும் இறே –
அதுக்கு அனுகுணமாக பின்பு உள்ளாறும் இத்தை அப்யசித்து-
அதில் தாத்பர்யங்களை நன்றாக அறிந்து
பர (பத) பிரதி பாதனம் பண்ண வல்லராம் படியாக –
இத்தை ஒழிய நாலு வியாக்யானம் யுன்டானாலும்
சப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தைக் கொண்டே சாதிக்க வேண்டும் இறே –

(ஸ்ரீ பதி சேதனஸ்யாக்ய ஹேதுத் வேன அநிஷ்ட ஹானி இஷ்ட பிராப்தி அர்த்த பஞ்சகம்
ஸ்ரீ பதி -முதல் இரண்டு பத்து பர ஸ்வரூபம்
சேதனஸ்யாக்ய ஸமாஸ்ரிதா -அடுத்த இரண்டு பத்து ஸ்வ ஸ்வரூபம்
ஹேதுத் வேன -அடுத்த இரண்டு பத்து-உபாய ஸ்வரூபம்
அநிஷ்ட ஹானி -அடுத்த இரண்டு பத்து-விரோதி ஸ்வரூபம்
இஷ்ட பிராப்தி-அடுத்த இரண்டு பத்து-பிராப்தி ஸ்வரூபம் -இவர் அருளிச் செய்து பர ப்ரதிபாதனம் -)

தம் பெரிய போதமுடன் –
திருவாய் மொழியை தேர்ந்து உரைக்க வல்ல தம்முடைய மகத்தான புத்தியாலே –
(மின்னின் நிலை –இறை உன்னுமின் -மற்ற வியாக்யானங்களில் இறைவன் -இவர் சிறிய பொழுது என்றும் )

மாறன் மறையின் பொருள் –
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திருப் பவளத்திலே அவதரிக்கையில் யுண்டான அதிசயத்தை யுடைத்தாய் –
திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய்மொழியின் அர்த்தத்தை

உரைத்தது –
உரையாக-பிரதிபிம்ப வ்யாக்யானமாக அருளிச் செய்தது –

ஏதமில் பன்னீராயிரம் –
ஏதமில் ஆயிரமான இதுக்கு ஏதமில் பன்னீராயிரம் ஆய்த்தது –
ஏதம் இல்லாமை -குற்றம் இல்லாமை
அதாவது
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தை பின் செல்லுகை-

(தன்னுடைய கற்பனை என்று குற்றம் சொல்ல வேண்டாத படி -குறை சொல்லி தவிர்த்ததால்
பங்காக எழுந்து இருக்கா -ஜுரம் இல்லையே -இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றாக இருந்தாலும்
கொஞ்சம் குறை உண்டே இதுக்கு
இவரும் திரு விருத்த வியாக்யானம் சாதித்து உள்ளார்
பாசுர அகத்துறை கொஞ்சம் மாற்றி அருளிச் செய்துள்ளார் )

இது தான் ஸ்ரீ பிள்ளான் உடைய வ்யாக்யானத்தில் த்வி குணமாய்
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் அர்த்தமாய்
இப்படி அடி ஒத்து இருக்க இறே அருளிச் செய்தது –
ஆகையால் அதி சங்க்ரஹமும் அதி விஸ்தரமும் இல்லை என்றபடி
ஏதத் சங்க்யைக்கு அனுகுணமான விலஷண பிரமாணம் உண்டாகில்
தத் சங்க்யையாக அருளிச் செய்தார் என்று நிர்வஹிக்கக் கடவது –

(ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் கணக்கு -12- என்று பெரிய குரு பரம்பரை ப்ரபாவத்தில் காட்டி அருளுகிறார் )

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading