மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -94-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி -வையம் தகளி-தொடங்கி
இவ்வளவும் வரத்
தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –

கீழில் பாட்டில்
நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –

இப்பாட்டில் –
தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே
அத்யாபி  நிவேசத்தோடே கூட
எம்பெருமான் உள்ளே புகுந்து
தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை
அருளிச் செய்கிறார் –

————————————————————————————–

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

பதவுரை

உய்ந்து உணர்வு என்னும்–விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.

—————————————————————————————-

வியாக்யானம் –

உய்த்து –
கொடு வந்து வைத்து –

உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
உணர்வாகிற
தைல வர்த்திகளால் உண்டான
வழுக்கின்றிக்கே தினுங்கின தேஜஸ் சை
உடைத்தான விளக்கை ஏற்றி –

வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் –
அவனை வைத்து தத் ஸ்வ பாவங்களை
யாராய்ந்து அனுசந்தித்து
அனுகூல்யமாகிற வலையிலே
அகப்படுத்தினேன்

பக்தி க்ரீத-
இவனுடைய க்ருஷியே
அவனுக்கு வலை –

மெத்தனவே நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-
அவனும் இவ்வலையிலே அகப்பட்டு
என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து –
மெல்லக் கொள்ளக் கொண்டு
கால் பாவி தரித்து –
நிற்பது
இருப்பது
கிடப்பதானான் –

பொன்றாமல்-
நான் நசியாமல் என்னவுமாம் –

ஹிருதயத்தில் ஸ்திதி யாதிகளுக்கு
விச்சேதம் இன்றிக்கே -என்னவுமாம் –

இடைவிடாதே -என்னவுமாம் –

மாயன் புகுந்து –
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரன் –

புகுந்து உய்ந்து வைத்து
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
அவனை நாடி
வலைப் படுத்தேன் –
மாயன் புகுந்து பொன்றாமல்
மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான்
என்  நெஞ்சத்து –
என்று அந்வயம் –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading