மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -90-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திருமலையில் மூங்கில்கள் அகப்பட
உத்தேச்யமான விடத்தில்
அதிலே நின்றவன்
உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –

திருமலையிலே நின்று அருளினவன்
ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம்
காண்கிறிலீ கோளீ
என்கிறார் –

———————————————————————————-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
கே அடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத்தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போராவில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்துகொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

——————————————————————————————

வியாக்யானம் –

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப –
திருச் சிலம்பும் –
செறிந்த வீரக் கழலும்
ஒக்கப் போய் த்வனிக்கும் படி –

விண்ணார் அலம்பிய சேவடி போய் –
ஆகாச கங்கையிலே விளக்கப் பட்ட
திருவடிகளானது போய் –
ஆகாச கங்கையிலே ஸ்பர்சிக்கப் பட்ட –
என்றுமாம் –

சேவடி போய் அண்டம் – சென்றிசைப்ப –
அண்ட பித்தி யளவும்
சென்று கிட்டி –

புலம்பிய தோள் எண்டிசையும் சூழ –
சகல லோகங்களும்
இத்தோள் இருக்கிறபடியே என்று
கூப்பிடும்படியான
அழகிய திருத் தோள்கள் ஆனவை
எட்டு திக்கிலும் வியாபிக்க –

சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் தைஸ் ததா மனுஷ்யர்
கக நே ச கே சரை சத்துத க்ரமான்  ய பிரசகார  சர்வதா
மமாஸ்து மாங்கள்ய வ்ருத்தயே ஹரி -ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரம் மாங்கள்ய ஸ்தோத்ரம் –
என்று தேவர்களாலே திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட
என்றபடி –

வண்டுழாய் மாலளந்த  மண் -இடம் போதாது என் கொலோ –
திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடையவன்

அளந்த பூமி –
இப்படி அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க
இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ
என்று
ஆச்சர்யப் படுகிறார் –

நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு
அன்றோ அளப்பது –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading