மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -91-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி
காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால்
ஓர் அவதி  காண ஒண்ணாத படி
என்கிறார் –

——————————————————————————

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் ———91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப்பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக்கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

————————————————————————————

வியாக்யானம் –

சாமான்யேன ஜகத்தையும்
பிரதிகூலருடைய பிராணங்களையும்
உண்டும் –
அனுகூலர் ஸ்பரசித்த த்ரவ்யத்தை யுண்டு அல்லது
பர்யாப்தம் ஆய்த்து இல்லை –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய் –
பிரளயம் கொள்ளப் புக்க
பூமி யடங்கலும் வயிற்றிலே வைத்து –

அதுக்கு மேலே –
பூதநா ஸ்த்ன பானத்தாலே -அவளுடைய பிராணனை உண்டும் –
இவை இரண்டாலும் பர்யாப்தன் ஆகாதே

கீழ்ச் சொன்ன இரண்டாலும்
ஜகத்துக்கு அனுகூல பிரதி கூலங்கள் இல்லாமையாலும்
அத்ருப்தனாய் –

வெண்ணெய் விழுங்க-
குறை எல்லாம் தீரும்படிக்கு ஈடாக
வந்து –
வெண்ணெய் விழுங்கினான் ஆய்த்து –

வெகுண்டு ஆய்ச்சி –
ஆய்ச்சி வெகுண்டு
வெண்ணெய் களவு போய்த்து என்ற மாத்ரத்திலே
இவன் முகத்தில் பையாப்புக்கு
யசோதை பிராட்டியானவள் சீறினாள் ஆய்த்து –
ஸ்நேஹத்தோ பாதியும் போரும் கோபம் –
வெண்ணெய் களவு காண்கையில் உள்ள ச்நேஹம் போரும் இறே -அவளுக்கு ரஷிக்கையிலும் –

வெண்ணெய் விழுங்க –
கீழ்-மண் உண்டது முதல்வன – இவற்றின் ஆற்றாமை பரிஹரித்த படி –
இங்கு தன ஆற்றாமை பரிஹரித்த படி –
ஜகத்துக்கு தன வயிறு போலே
தனக்கு வெண்ணெய் –

கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் –
பல பிணைகளை யுடைத்தான
தாம்பாலே பந்திக்க
அதுக்கு பரிஹாரம் இன்றிக்கே
கட்டுண்டு இருந்தான் –

கட்டுண்டு –
சர்வ நியந்தா வானவன் –
சம்சார சம்பந்த ஸ்திதி மோஷ ஹேது வானவன்
ஒரு அபலை கையாலே கட்டுண்டு
போக மாட்டாதே இருந்தான் –

ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ வ்யதிரிக்தரை யடங்கலும் கட்டி விடக் கடவ
தான் கட்டுண்டு இருந்தான் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து-பெரிய திருமொழி -8-3-5-
நெய்யுண் வார்த்தையுள்  அன்னை கோல் கொள்ள
நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் -திருவாய் மொழி-5-3-5-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் – பெருமாள் திருமொழி -7-8-

வயிற்றினோடு ஆற்றா மகன் –
வயிற்றைக் கொண்டு புகும் இடம் அறியாத பிள்ளை –
பருவம் நிரம்பினால் இறே பசி பொறுக்க வல்ல ஆற்றல் உண்டாவது –

இவ்விடத்தை இயலைக் கேட்டு
ஹர்ஷத்தாலே
பிள்ளை உறங்கா வில்லி  தாசர்
வயிற்றை  அறுத்து வண்ணானுக்கு
இட மாட்டானோ –
என்று பணித்தார் –
வயிறா வண்ணான் சாலா -இன்றும் சொல்லக் கேட்போமே –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading