அவதாரிகை –
பின்னையும் வடிவு அழகு தன்னை
உபமான முகத்தாலே இழிந்து
அனுபவிக்கிறார் –
எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை
மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை
சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும்
என்கிறார் –
———————————————————————————
கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-
பதவுரை
மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடுகூடி
இமைக்கும்–விளங்காநின்ற
கண்ணா–கண்ணபிரானே!
மரதகம்–மரதகரத்னமானது
மலர்ந்து–ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திராநின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற
தண் துழாய்–திருத்துழாய் மாலையணிந்த
கோமானை–ஸர்வேச்வரனாகிய உன்னை
அந்தி வரன் அது காட்டும்–ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.
———————————————————————————-
வியாக்யானம் –
கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்மேனிமலர்ந்து மரகதமே காட்டும் –
கண்ணனே –
கலந்து மணி இமைக்கும் நின் மேனியை
மரகதமே மலர்ந்து காட்டா நின்றது –
கிருஷ்ணனே –
ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம்
ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்
ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே –
ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற
உன்னுடைய திரு மேனியை
ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய
பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
நலந்திகழும் கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை-
அழகு விலங்கா நின்றுள்ள
கொத்திலே
மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
தட்ப்பத்தை யுடைத்தான
திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரன் ஆன உன்னை –
அந்தி வான் காட்டுமது-
சந்த்யாராகத்தை யுடைத்தான திருமேனியைக் காட்டும்
இத்தால் அவயவியைச் சொல்லிற்று ஆகிறது
அன்றிக்கே
அது போலி காட்டும் என்னவுமாம் –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply