அவதாரிகை –
இப்படி இருக்கிற
சர்வேஸ்வரனை விட்டு
இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை
ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம்
என்கிறார் –
——————————————————————————
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-
பதவுரை
அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வஜந ஸாதாரணமான
பொன் அம்கழலே–விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸம்ஸ்த பாபங்களும்
முடிந்து–உருமாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.
——————————————————————————-
வியாக்யானம் –
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே –
பகவத் ப்ராவண்யம் நன்று
விஷயப் ப்ராவண்யம் பொல்லாதது
என்று சம்சயப் படாதே –
பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் தீதொடு ஒக்க
நல்லத்தை சம்சயாஸ் பதமாகப் பண்ணும்
அவற்றின் உடைய நன்மை தீமை ஆராயப் புக்கால்
பின்னையும்
ஐயத்தோடு தலைக் கட்டும் இத்தனை –
அதாகிறது
தான் தீதாய் இருக்கச் செய்தே நன்று போலே தோற்றிலும் தோற்றும்
இப்படி நன்றாய்த் தோற்றுகிற தீமையோடு தலைக் கட்டி நிற்கிலும் நிற்கும் –
மது நின்ற தண் துழாய் மார்வன் –
சம்சயம் இல்லாத விஷயம்
மது மாறாதே இருப்பதுமாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைத்தான
மார்வை யுடையவன் –
பொது நின்ற பொன்னங்கழலே தொழுமின்-
என் தான் –
இவன் தொழுவான் என்னக் கடவர் அல்லாத திருவடிகள் –
தேவானாம் தானவானாம் ச -ஜிதந்தே -என்னக் கடவது இறே-
சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
யாவன் ஒருவன் சம்பந்தம் கொண்டு நீங்கள் என்னை
இவன் ஆகாது என்கிறிகோள் –
அப்படிப் பட்டவன் தனக்கு வரலாம் படி அன்றோ
அவர் ஸ்வரூபம் இருக்கிற படி -என்றான் இறே
அவரும் அப்படியே
யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-19-என்றார் இறே
சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமாய்
அழகிதான
திருவடிகளை தொழப் பாருங்கோள் –
முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து –
தொழுகைக்கு விரோதியான
அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு முன்பே
நசிந்து ஓடிப் போம் –
முன்னம் கழலும் –
பிரணாமாத் பூர்வ காலீநாத்யவசாயத்திலே கழலும்
முடிந்து –
வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாதபடி நசிக்கும் –
அன்றிக்கே
அது நன்று
இது தீது
என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது
இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாதது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து
சம்சயியாதே -என்னவுமாம் –
——————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply