மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -63-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான்
சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர்
என்கிறார் –

தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் –
சாதக வேஷத்தையும்
சித்தமான வேஷத்தையும்
ஒக்க தரிப்பதே –
என்கிறார் –

——————————————————————————-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

பதவுரை

தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரைநாணுமாய்க்கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள் திரளாக அருவிகள்
பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!

———————————————————————————

வியாக்யானம் –

தாழ் சடையும் –
சாதக வேஷமானது தோற்றும் படிக்கு ஈடாக
தாழ்ந்த ஜடையும் –
சிக்குத் தலை என்று அருவராது ஒழிவதே
என்கிறார் –

நீண் முடியும் –
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகமும் –
நீண் முடியோ பாதியாக
நினைத்து இருப்பதே தாழ் சடையும் –

ஒண் மழுவும்-
ஹிம்சைக்கு பரிகரமான
மழுவும் –

சக்கரமும் –
அருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33-என்கிறபடியே
ரஷைக்கு பரிகரமான
திரு வாழியும்-

சூழரவும் –
பயாவஹமாம் படி
இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும் –

பொன்னாணும் –
ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி
திருவரையிலே சாத்தின
பொன்னரை நாணும்-

தோன்றுமால் –
இவை ஒக்க தோன்றா நின்றது –
அவனும் சரீர பூதன் இறே-

சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு –
எங்கும் ஒக்க சூழ்ந்த அருவிகள்
திரண்டு பாயா நின்றுள்ள
திருமலையிலே நின்றுள்ள
என் நாயனானவனுக்கு -என் அப்பனுக்கு –

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து –
அவ் விரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருந்ததீ-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும்
அசாதாராண  விக்ரஹம் போலே இரா நின்றதீ –

இசைந்து –
இசையாது என்று காணும் -இருந்தார் –

ஓன்று சாதக வேஷமாய்
ஓன்று ஒப்பனைக்குக் கண்ட வடிவாய்
இருக்கை அன்றிக்கே
இரண்டும் ஓன்று என்று சொல்லலாம் படி
தகுதியாய் இருந்ததீ –
இது ஒரு சௌசீல்யம் இருந்தபடியே -என்கிறார் –

கண்ணுதல் கூடிய அருத்தனை –பெரிய திருமொழி -7-10-7-
என்னக் கடவது இறே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading