மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -61-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ –
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன்
சம்சாரத்திலே
உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில்
தம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான்
என்னும் தாத்பர்யம் தோற்ற
அருளிச் செய்கிறார் –

—————————————————————————————-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

பதவுரை

வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்–நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).

—————————————————————————————–

வியாக்யானம் –

வைகுந்தம் கொண்டு அங்கு உறைவாற்குக் –
ஸ்ரீ வைகுண்டத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக
மிகவும் ஆதரித்துக் கொண்டு
அங்கே
நித்ய வாசம் பண்ணுகிறவற்கு –

பாற்கடல் வேங்கடம் –
திருப்பாற்கடல் திருமலை –

வண்டு வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை –
வண்டுகளின் உடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை உடைத்தான சோலையை உடைய
அழகியதாய்
போக பூதமான
திருக் கடிகை –

இளங்குமரன் தன் விண்ணகர் –
பாற்கடல் வேங்கடம்–
நித்ய யுவாவானவன் வர்த்தியா நின்றுள்ள
திரு விண்ணகர் –

இவை இவனுக்கு –
பண்டெல்லாம்-கோயில் போல் –
என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு கோயில் போலே

இத்தால்
இப்போது வாசஸ் ஸ்தானம்
தம்முடைய ஹிருதயம் -என்று கருத்து –

பண்டெல்லாம்-கோயில் போல் –
இன்று என் துரிதத்தைப் போக்கி
என்னை அல்லது அறிகிறிலன்
என்றபடி –

இத்தால்
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு
திருப்பாற்கடலையும் விட்டு
திருப்பதிகளைப் பற்றி
இவை இத்தனையோடும்
தம்முடைய திரு உளத்திலே வந்து புகுந்தான் –
என்றபடி –

அங்கன் அன்றிக்கே
வேங்கடம்
பாற்கடல்
வைகுந்தம் பண்டெல்லாம் கொண்டு அங்கு உறைவாற்கு
என்றாக்கி
இவற்றை பண்டு எல்லாம் வாசஸ் ஸ்தானமாக உடையவன் –

இத்தால்  –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -திருவாய் மொழி -5-7-8–என்று
பரமபதத்தோபாதி
திருப்பாற்கடலோ பாதி யாக
திருமலையைச் சொல்லுகிறது –

வண்  பூங்கடிகை விண்ணகர் கொண்டு அங்கு உறைவாற்கு
வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
பண்டெல்லாம்
கோயில் போலே
என்றுமாம் –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading