அவதாரிகை –
இன்னும் இவ்வளவேயோ
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும்
வியாபாரம்
என்கிறார் –
—————————————————————————–
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-
பதவுரை
பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.
————————————————————-
வியாக்யானம் –
செற்றதுவும் சேரா இரணியனைச் –
முடித்ததும்
சர்வதா பொருந்தாத ஆசூர ப்ரக்ருதியான ஹிரண்யனை —
ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனை -என்றுமாம் –
அவன் இழவுக்காக கொன்றான் -என்றுமாம் –
சென்றேற்றுப் பெற்றதுவும் மா நிலம் –
மகா பலி பக்கலிலே சென்று
நீரேற்று
பெறாதது பெற்றாப் போலே நினைத்து
பெற்றதும் தன்னைதான பூமியை –
பின்னைக்காய் -முற்றல் முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக
மிடுக்கை உடைத்தாய் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள
ருஷபங்களின் முன்னே நின்று
அவற்றின் வலியைப் போக்கினான் -ஆய்த்து-
சூழ்ந்து –
இடம் பார்த்து நின்று –
திண்மையாகவுமாம் –
முரி-
சஞ்சரிக்கிற –
மூரிச் சுரியேறு சங்கினாய் –
இடைத்தையும் உடைத்தாய்
சுரியையும் உடைத்தாய் உள்ள
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையவன் கிடீர்
சூழ்ந்து முன்னின்று அவற்றை முடித்தான்
தானே கை தொட்டு
விரகாலே செய்தான் -என்கை-
பின்னைக்காய் –
ரசிகத்வத்தாலே
தன்னை அழிய மாறின படி –
———————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply