மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -47-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்
நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான்
என்கிறார் –

—————————————————————————————

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

பதவுரை

நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசினென்னுமசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்–நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?

—————————————————————————————–

வியாக்யானம் –

நின்ற பெருமானே நீரேற்று –
அவாப்த சமஸ்த காமன் ஆனவன் தான்
மகா பலி பக்கலிலே சென்று –
உதக ஜலத்துக்கு கை ஏற்று கொண்டு
நின்றான் -ஆய்த்து-

நின்ற பெருமானே –
சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –

உலகெல்லாம் சென்ற பெருமானே –
அவன் நீர் வார்த்த அநந்தரம்
ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –

செங்கண்ணா –
இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே
உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
சிவந்த திருக் கண்களை யுடையவனே –

அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய் –
ஒப்பனை குறி அழியாது இருக்கச் செய்தே
கேசி வாயைக் கிழித்துப் பொகட்டவனே
வைத்த வளையும்
அசையாமல் கீண்டபடி

நங்கள் நரகவாய் கீண்டாயும் நீ –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ
எங்களுடைய நரகத்தின் வாயைக் கிழித்துப் பொகட்ட உனக்கு –
எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ  –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –
நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-உன்னை பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading