மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -45-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று
பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே
அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –

அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் –
அக் குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்
ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

———————————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

பதவுரை

மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப்பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய
மலை–திருமலையாம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

புரிந்து மத வேழம் –
மதித்து இருந்துள்ள ஆனை யுண்டு -மத்த கஜம் –

மாப் பிடியோடூடித் –
தன்னை நினைத்த படியே கார்யம் கொள்ள வல்ல
ஸ்லாக்கியமான பிடியோடு ஊடி –
இவ்வளவிலேயும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வற்றான பிடி இறே-

புரிந்து –
அநந்தரம்
ஊடல் தீர்ந்து
கலந்து  –

திரிந்து –
அந்தச் செருக்காலே
சஞ்சரியா நிற்கும் –

ஊடி மாப் பிடியோடு –
ஸ்லாக்யதை ஊடுகைக்கு அடி –

திரிந்து-
பூஞ்சோலை வழி இறே சஞ்சரிப்பது –

சினத்தால் பொருது –
அங்கு உண்டான பளிங்குப் பாறையிலே
தன் நிழலைக் கண்டு -பிரதி கஜம் என்று புத்தி பண்ணி
பின்னை அத்தோடே ஒன்றிப் பொருது –
அந்த வீர ஸ்ரீ யடங்கலும் தோற்றும் படி நின்று –

இப் பொருள் அன்றிக்கே –
மத வேழம் மாப் பிடியோடு புரிந்து ஊடி –
பிடியோடு சம்ஸ்லேஷித்து
அநந்தரம்
ஊடி-

திரிந்து சினத்தால் பொருது –
ஊடலாலே பிறந்த சினத்தாலே உலாவி –

சினத்தாலே பொருது –
மலையில் ரத்ன பித்திகளிலே  பொருது
காமாத் குரோத அபிஜாயதே -கீதை-2-62-
மலையோடு பொருகிற படி –

விரிந்த சீர்-
இப்படி பொருகையாலே வீர ஸ்ரீயை யுடைய ஆனை

இத்தால்
கர வதத்தின் அன்று போலே
விஜயம் கண்டு ஊடல் தீர்ந்து அணைக்க வேண்டி
இருக்கை-

விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் -வேங்கடமே –
வீர ஸ்ரீ யை உடைத்தான வெள்ளைக் கொம்புகளில் உண்டான முத்தை உதிரா நின்ற திருமலை என்று ஜீயர்
விரிந்த சீரை உடைத்தாய்
வெண் கொட்டு முத்தையும் உதிர்க்கும் -என்றுமாம் –

மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை-
இப்படிப் பட்ட நன்மையை உடைத்தான தேசம் கிடீர்
முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது
வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து
வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து–பெரிய திருமொழி -3-4-3-என்னக் கடவது இறே  –

மலை –
இன்ன மலையை யுடையவன் என்னுமா போலே
அவனுக்கு ஐஸ்வர்யம் ஆகை-

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading