மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -44-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சே
உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆச்ரயிக்கப் பார்
என்கிறார் –

———————————————————————————

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.

————————————————————————————

வியாக்யானம் –

உலகமும் –
லோகங்களும் –

உலகிறந்த ஊழியும் –
காலாவஷேஷித காலமும்
சமுத்ரமும் –

ஒண் கேழ் அலர் கதிரும் –
அழகிதாக அலரா நின்றுள்ள ஒளியை யுடைத்தான
சந்திர சூர்யர்களும்
அழகிய நிறத்தை  யுடையராய்க் கொண்டு
விக்ருதராகா நின்றுள்ள சந்த்ராதித்யர்களும் -என்றுமாம் –

செந்தீயும் ஆவான் –
சிவந்த நிறத்தை உடைத்தான அக்னியும்
இவை எல்லாமுமாவான்
தனக்கு பிரகாரமாக யுடையவன்
இத்தால் ஜகதா காரத்தைச் சொல்லுகிறது –

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் –
பரம பதத்திலே எழுந்து அருளி
இருக்கும் படியைச் சொல்லுகிறது

திவி சூர்ய சஹரஸ்ய பவேத் யிகபதுத்தா -கீதை -11-12-என்கிறபடியே
நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய்
அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –

பைம் பொன் முடி
திவி சூர்ய-என்றதுவும் போந்து இருந்தது இல்லை –

அடி இணைக்கே –
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான
திருவடிகளிலே –

பூரித்து என்னெஞ்சே புரி –
ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே பூரணமாய்
ஹ்ருஷ்டமாய்க் கொண்டு
என் நெஞ்சே ஆஸ்ரயி
என்கிறார் –

பூரித்து –
அநாதி காலம் மறந்து இருந்த இளைப்பு எல்லாம் தீர –

பைம் பொன் முடி –
திரு வபிஷேகம் தானே திருவடிகளிலே விழ விட்டுக் கொள்ளும்
நம் கார்யத்துக்கு கடவானவன் என்று கொண்டு
க்ருதக்ருத்யரைப் போலே இரு
என்கிறார் –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading