மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -43-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான்  ஒருவனையும்
நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர்
என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது
என்கிறார் –

————————————————————————————-

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள்  ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

பதவுரை

சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.

—————————————————————————————-

வியாக்யானம் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –
சினத்தையும் உடைத்தாய்
பெரிய வடிவையும் உடைத்தாய்
மத முதிதமாய்க் கொண்டு
முன்னடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தின் உடைய திண்ணியதான கொம்புகளை முறித்து
அநாயாசேன பறித்து –

புனமேய பூமி யதனைத் –
சேதனர்க்கு நல்ல போகங்களை விளைப்பித்துக் கொள்ளுகைக்கு ஈடான
பிரதேசங்களோடு கூடின பூமியை –

தனமாகப் –
வஸ்துவாக ஆதரித்துக் கொண்டு –

பூமியதனைத் தனமாக –
காடும் ஓடையும் கிடீர்
இவன் நிதி போலே நோக்கிற்று –

பேரகலத்துள்  ஒடுக்கும் –
இஜ் ஜகத் அடங்கப் புக்காலும்
இடம் விஞ்சி இருக்கிற திரு வயிற்றிலே வைத்து நோக்கும்
ஸ்வ பாவனாய்-

பேரார மார்வனார் –
இது செய்யும் இடத்து
ஒப்பனை குறி அழியாமல் செய்ய வல்லனானவன்
இது போலே குணமும் அழகியதாகை என்றும்
தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற
ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –

ஓரகலத்து உள்ளது உலகு –
அத்விதீயமாய்
அபரிச்சேத்யமான
சங்கல்பத்து உள்ளது ஜகத்து –

அன்றிக்கே –
ஓரப்பட்டு இருப்பதான
அனுசந்திக்கப் பட்டு இருப்பதான
சங்கல்பரூப ஜ்ஞானத்து -என்னவுமாம் –

சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே
கை தொட்டு செய்கிறது
ஆஸ்ரித வாத்சல்யம்  –

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading