ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -70 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இருந்தபடி இது வாகையால்
ஒரு சக்தனைப் பற்ற வேண்டி இருந்தது இறே
ஆன பின்பு
ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு இவனை ஆஸ்ரயிங்கோள்   –
என்கிறார் –

————————————

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று –70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திரு நாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

——————————————————

வியாக்யானம் –

விழும் உடம்பு செல்லும் தனையும்
நல்லிதழ்த்   தாமதத்தால் வேள்வியால் தந்திரத்தால் திரு மாலைத் தொழுமின்
மந்திரத்தால் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –

சொல்லும் தனையும் –
வாக் இந்த்ரியமானது விதயேமாம் அளவும் –

தொழுமின் –

விழுமுடம்பு செல்லும் தனையும் –
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும்

நல்லிதழ்த் தாமத்தால்-
நல்ல செவ்விப் பூவை உடைத்தான மாலையாலே

வேள்வியால் –
செவ்விப் பூ கிடையாதாகில்
கர்த்தவ்யமான
யாகாதி கர்மங்களாலே

தந்திரத்தால் –
மந்திர தந்த்ரம் அடையச் செய்யப் போகாதாகில்
தந்திர ரூபமான க்ரியாதிகளாலே-
க்ரியா ரூபமான தந்த்ரம் செய்யப் போகாதாகில்
மந்திரத்தால் –
மந்தரத்தால்

நாமத்தால் –
மந்த்ரத்துக்கு தேச கால நியதியும்
அதிகார நியதியும் வேணும் என்று
இருந்தி கோளாகில்
நாமத்தால் ஏத்துவது –

ஆரை என்னில் –
திருமாலை –
வகுத்த விஷயத்தை –
மாதா பிதாக்கள் பேர் சொல்லச் சடங்கு வேணுமோ

இம் மாத்ரத்தைக் குவாலாக்குகைக்கு
அவள் கூடி இருந்தாள்-

ஏத்துதிரேல் நன்று

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading