அவதாரிகை –
பேராயர்க்கு ஆட்படுகை யாவது அவன் விஷயீ கரிக்கப் புக்கால்
தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது
சர்வேஸ்வரன் உடைய பிரபாவம்
ஒருவரால் பரிச்சேதிக்க ஒண்ணாது கிடீர்
என்கிறார் –
——————————–
பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் –56-
பதவுரை
[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம்பெம்மானது திருநாமமாகவே
வர–வரும்படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம்பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபி கமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.
————————————–
வியாக்யானம் –
பேரே வரப் பிதற்ற லல்லால் –
ஏதேனும் ஒன்றைச் சொல்ல நினைத்தால்
திரு நாமம் வாயிலே வரும்படி வாசனை பண்ணுமது அல்லால்
நாத் தழும்பெழ நாரணா என்று அழைத்து -பெருமாள் திரு மொழி -2-4-என்னக் கடவது இறே
அங்கன் அன்றிக்கே
அவன் மடுவின் கரையிலே வந்தாப் போலே
வரும்படி திரு நாமங்களை
அக்ரமாகச் சொல்லிக் கூப்பிடும் அது அல்லால் –
எம்பெம்மானை ஆரே யறிவார் –
என் நாயகன் ஆனவனை யார் தான் அறிவார்
இவருக்கு அவன் தானே காட்டின படி –
அது நிற்க –
அவ் விடை யாட்டம் கிடக்கிடீர்
நேரே -இத்யாதி –
அறிவார் கிடக்கிடீர்
அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ –
சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான
திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து
அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன்
இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் –
கடற்கரையிலே குடில் கட்டி இருக்கும் காட்டில்
கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ
அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்
அவன் பெரிய கிழாய் கிழாயனாய்
ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3-என்னும் அவனான பின்பு
அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி
ஒருவரால் அறிந்ததே விடப் போமோ
என்கிறார் –
———————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply