அவதாரிகை –
இப்படிப் பட்ட விஷயத்தில் அநவரத பக்தியைப் பண்ணுமது ஒழிய
வ்யதிரிக்த விஷயங்களை ஷண காலமும் ஸ்மரிக்கல் ஆகாது கிடீர்–என்கிறார்
அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால்
வேறே யொன்றை நினைக்கப் போமோ -என்கிறார் –
———————
புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரி யுருவும் ஆளுருவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-
பதவுரை
ஒரு கை புரி பற்றி–ஒரு திருக் கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
(மற்றொரு திருக் கையிலே)
ஓர் பொன் ஆழி ஏந்தி–ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம்–நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான்—அக்நியின் வடிவம் போலே [கண்ணெடுத்துக் காண முடியாத] வடிவத்தை யுடையனான இரணியனுடைய
மார்பு–மார்பை
இடந்த–நகத்தால் குத்திப் பிளந்து போட்ட
மால்–திருமாலினுடைய
அடியை அல்லால்–திருவடிகளைத் தவிர
மற்று–வேறொரு விஷயத்தை
இமை–க்ஷண காலமேனும்
எண்ணத்தான் ஆமோ–நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]
————————-
வியாக்யானம் –
புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி –
வலம்பு ரியை குறைத்துப் புரி என்று கிடக்கிறது
ஒரு திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் தரித்து
மற்றைத் திருக் கையிலே ஸ்ப்ருஹணீயமான திரு வாழி ஆழ்வானைத் தரித்து –
புரி யொரு கை என்கையாலே –
ஹிரண்யன் மேலே விழுகிறவனை விலக்கினால் போலே –
பொன்னாழி ஏந்தி என்கையாலே
ஹிரண்யன் திரு ஆழியில் படாமையால்
அழகுக்குக் கட்டின பத்திரம் ஆய் விட்டது –
அரியுருவும் ஆளுருவுமாகி –
அவ் வாழ்வார்களைக் கொண்டு கார்யம் கொள்ள ஒண்ணாத படி யானவாறே
அதுக்கே ஈடான வடிவைக் கொண்டான்
இவன் கொண்ட வற்றில் அகப்படாதது ஒன்றைக் கொண்டு இவனை அழியச் செய்ய வேணும்
அதுக்கீடாக நரத்வ சிம்ஹங்களை சேர்த்துக் கொண்டு தோற்றினான் –
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த –
எரியினுடைய ரூபம் போலே இருந்துள்ள வடிவை யுடைய
ஹிரண்யன் யுடைய மார்பைப் பிளந்து பொகட்டவனுடைய-
க்ரௌர்யத்தால் வந்த அநபிபவ நீயதை தோற்றுகிறது-
அன்றிக்கே
பொன்னன் -என்னக் கடவது இறே-
மாலடியை யல்லால் –
சிறுக்கன் உடைய விரோதியைப் போக்கி
அவன் பக்கல் வ்யாமுக்தனாய் இருந்துள்ள வனுடைய
திருவடிகளை -என்னுதல்
உக்ரம் வீரம் மகா விஷ்ணும் -என்கிறபடியே சொல்லுதல் –
மற்று எண்ணத்தான் ஆமோ இமை –
இப்படிப் பட்டவனுடைய திருவடிகளை ஒழிய ஷண காலம் வேறு ஒன்றை என்னலாமோ -என்னுதல்
தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவின குணம் புறம்பு ஒன்றை எண்ண ஒட்டுமோ
அன்றிக்கே
நெஞ்சை சம்பாதித்துக் கொண்டு வருகிற பிரகரணம் ஆகையாலே
கண்டாயே இருந்தபடி இத்தைப் பார் -என்றதாகவுமாம் –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply