(விசித்ரா தேக சம்பந்தி -ஈஸ்வராயா நிவேதிததாம் -பூர்வமேக -படைத்ததே இதுக்குத் தானே
சூழ் புனல் குடந்தையே தொழுது
குடந்தையே தொழுமின் உபதேசித்து
இங்கும் உபதேசித்துத் தலைக் கட்டின பின்பும்
ஸூத்ர புருஷார்த்த நப்பாசையாலே
விஷயாந்தர ப்ரவணராய்
கரண களேபரங்களை அதுக்கு உபயோகிப்பராக இருப்பதால்
உபதேச பரமாக இப்பதிகம் )
(முகுந்த மலை ஜிஹ்வே இத்யாதி ஸ்லோகம் போல் இங்கும்
ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய ! த்வம் ஸ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர் –கச்சாங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண முகுந்தபாத –துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம் ||–16-
நாக்கே—கேசவனைத் துதி; மனமே , முராரியைப் பஜனை செய்;கைகளே, ஸ்ரீதரனை அர்ச்சியுங்கள்;
காதுகளே, அச்சுதனின் சரிதங்களைக் கேளுங்கள்;கண்களே, கண்ணனைத் தர்சியுங்கள் ;
கால்களே , —ஹரே ஆலயம் கச்ச—ஹரியின் திருக்கோவிலுக்குச் செல்லுங்கள்;
மூக்கே ,முகுந்தனின் திருவடித் துளசியை நுகர்வாயாக; தலையே,விஷ்ணுவை வணங்குவாயாக .
இந்த ஸ்லோகத்தில்,பகவானின் திருநாமங்களாகிய , கேசவன், முராரி,ஸ்ரீதரன், அச்யுதன், கிருஷ்ணன்,
ஸ்ரீஹரி,முகுந்தன், விஷ்ணு —ஆக , எட்டுத் திருநாமங்களைச் சொல்கிறார்.)
(ஸ்ரீமத் பாகவதம் -2-3-20-தொடங்கி -24-ஸ்லோகங்களும் இதே போல்
பூதைர்மஹத்பிர்ய இமா: புரோ விபு: நிர்மாய சேதே யதமூஷு பூருஷ:
புங்க்தே குணான் ஷோடசஷோடசாத்மக: ஸோஅலங்க்ருஷீஷ்டபகவான் வசாம்ஸி மே
பஞ்சபூதங்களால் ஆன இந்த உலகத்தை நிர்மாணித்து அதனுள் புகுந்து அந்தர்யாமியாய்
பதினாறு குணங்களையும் செயல்களையும் நிர்வஹிக்கும் அந்த பகவான் என் வாக்கில் எழுந்தருளட்டும்.)
நீணாகம் -பிரவேசம் –
சர்வேஸ்வரன்
தன்னை அனுபவிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
வ்யர்த்தமே திரிகிறவர்களை –
அவனுடைய செயல்களை அனுபவியாதவர்கள் கரணங்கள் –
ஒன்றும் அன்று –
என்கிறார் –
———————————————–
நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-
நீணாகம் சுற்றி –
மஹா மேருவிலே சுற்றியும்
பின்னையும் வாசுகி நீண்ட படி –
நெடு வரை நட்டு –
சுற்றுடைத்தாய்
நீண்டு இருந்துள்ள
மஹா மேரு -ஒருவரால் பேர்க்கும் படி அன்றே இறே இருப்பது –
அத்தைக் கொடு வந்து
சமுத்ரத்துக்கு கண் செறி இட்டாப் போலே நாட்டி –
ஆழ் கடலைப் –
ஒன்றாலும் சலிப்பிக்க ஒண்ணாத
பெரிய பதார்த்தத்தை –
பேணான் கடைந்து –
இரப்பாரைப் பெற்றால்
படுக்கை என்றும் பாரான் –
அமுதம் கொண்டுகந்த-
பிறருக்கு உபகரித்தானாய் இராதே
தன் பேறாக உகந்தான் –
பெம்மானைப் –
இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே –
பூணார மார்வனைப்-
இவர் தம்முடைய -அம்ருதம் –
9திருமங்கை ஆழ்வாரது ஆரா அமுதம் –
திருக்குடந்தையிலே திரு உள்ளம் பேராமல் இருந்து அருளிய படி )
புள்ளூரும் பொன் மலையைக் –
சர்வாபரண பூஷிதனாய்
பெரிய திருவடி தோளில்
இருந்த இருப்பு –
ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –
(காய்ச்சின வேந்தன் பொன் மலைக்கு மேல் மீமிசைக் கார்முகில் -நம்மாழ்வார்
ஸ்வர்ண வர்ணாம் -இவள் அனைத்தையும் ஸ்வர்ண மயமாக்குவாளே
ஹிரண்ய மய புருஷன் -புருஷ ஸூக்தம் -போல் )
காணாதார் கண் என்றும் கண் அல்ல –
இதுக்கு முன்பு கண்டவை
என்றும் கண் அல்ல –
கண்டோமே –
ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் –
—————————————–
(பீலிக்கண் போல்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கூட்டிக் கொண்டு கண்டோமே
சேர்ந்து குரல் கொடுக்க –
பொன் மலையைப் போய் காண மாட்டீர்களே ஆகிலும்
இருந்த இடத்திலே வந்து தீண்டி-
அடிக்கீழ் இட்ட படிக்கு செவி சாய்க்கலாமே
அதுவும் இல்லாமல் -கேட்டோமே -என்று சேர்ந்து ஷேப்பிக்கிறார் இதில் -)
நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவி யல்ல கேட்டாமே —-11-7-2-
(தக்கணைக்கு மிக்கானை-தக்ஷிணை -எவ்வளவு கொடுத்தாலும் உயர்ந்த )
நீள் வான் –
நீளுக்கைக்கு நரிப் பூண் இட்டாப் போலே -நின்றபடி
(நரிப் பூண் கள்ளப் பூணல் )
அன்று செய்த கீர்த்தி கொண்டாட -நீள -என்னுமாம் –
குறளுருவாய் –
சுருங்க நின்றதனையும்
பெருக்க வளருகைக்கு உறுப்பாக –
நின்றிரந்து-
வடிவே அமைந்து இருக்கச் செய்தே
அதுக்கு மேலே
அவனை இரந்த –
மாவலி மண் –
அவன் என்னது என்று அபிமானித்த பூமி
தாளால் அளவிட்ட –
திருவடிகளுக்கு ஈடாக
கீழே இட்டுக் கொண்டு நின்றபடி –
தக்கணைக்கு மிக்கானை –
தஷிணையாக மஹா பலி கொடுத்த கொடை
இன்னம் போராது
என்னும் படி இருந்தவன்-
(கொடை போராமல் மூன்றாவது அடிக்கு இடம் இல்லாதபடி )
தோளாத மா மணியைத் –
துளை பட்டு சிலர் விநியோகம் கொண்டு அன்றிக்கே
அனுபபுக்த்தமாய்
ஒளி மழுங்காதே
ஜாதியான ரத்னத்தை –
தொண்டர்க்கு இனியானை –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று
ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவன் –
கேளாச் செவிகள் –
அவனுடைய கீர்த்தி கேட்க வென்றால்
கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –
கேட்டோமே –
ஷேபம் –
—————————————-
கீழ் இரண்டு பாட்டாலே ஞாந இந்த்ரியங்களை நிரசித்த்தார்
(அவனைப் பற்றி அறியாத கண்ணையும் காதையும் நிரசித்த்தார் )
இனி மூன்று பாட்டாலே கர்ம இந்திரியங்களை நிரசிக்கிறார் –
தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3-
(தூயானை-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் மங்களம்
தூய மறை-அபவ்ருஷேயம் அநாதி இத்யாதியால் வந்த தூய்மை உண்டே ஸ்ருதிகளுக்கு
அமுது உண்ட வாயானை-தாய் முலைப்பால் அமுது விஷத்துக்குப் பரிகாரமாக அமுது செய்த வாயான் – )
தூயானைத் –
வேதைக சமதி கம்யன் ஆனவனை –
தூய மறையானைத் –
இவன் தன்னையே பிரதி பாதிக்கும்
வேதத்தை உடையவனை –
அல்லாத ஆஸ்ரயணீயரில் இவனுக்கு வாசி
வேத பிரதிபத்யனாகை-
அல்லாத வற்றில் காட்டில்
வேதத்துக்கு ஏற்றம் இவனையே பிரதி பாதிக்கை –
தென்னாலி மேயானை-
பிரமாணத்தில் கேட்டுப் போகாமே
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
ஸூலபனாய் நின்றவனை –
மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை-
ஆஸ்ரித த்ரவ்யமும்
அநாஸ்ரிதர் உயிரும்
தாரகம் ஆனவனை –
நஞ்சுக்கு பரிகாரமாக அமுது உண்ட படி –
மாலை-
இப்படிச் செய்தது
ஆஸ்ரிதர் பக்கல் உண்டான வ்யாமோஹம் –
வணங்கி யவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல –
அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை
கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் –
அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே –
கேட்டாமே –
கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம் –
(ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு அருளிச் செய்து
வெளியில் உள்ளார் களையும் சேர்த்து ஷேபிக்கிறார் )
————————————-
(வாக் இந்திரிய கார்யங்கள் இரண்டு -பேச்சும் பாட்டும் –
விடு பேச்சை நிந்தித்து
பிரபந்தம் தவிர பாடுவதை நிந்திக்கிறார் இதில் -)
கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ —11-7-4-
(தோடார் நறுந்துழாய்-தொடுக்கப்பட்டு பரிமள பிரசுரமான திருத்துழாய் )
கூடா விரணியனைக்-
சத்ருவாய் முடிய நின்றவனை –
கூருகிரால்-
ஆயுதத்தால் அன்றிக்கே
திரு உகிராலே –
மார்விடந்த –
வர பல புஜ பலங்களாலே
திண்ணியதான உடலைப் பிளந்த படி –
ஓடா வடலரியை-
ஹிரண்யனுக்கு பிற்காலியாத அரியை
லோகத்தில் பரிமாறாத படி -என்னவுமாம் –
யும்பரார் கோமானைத்-
ஹிரண்யாதிகளைப் போக்கி
ப்ரஹ்மாதிகளுக்கு குடி இருப்புக் கொடுத்து
அவர்களுக்கு
தன் ஸ்வாமித்வம் நிலை நிறுத்தினவனை –
தோடார் நறுந்துழாய் மார்வனை –
சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி
மாலை இட்டு இருந்தவனை –
யார்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல
பிரேம பரவசராய்
பாடும் பாட்டு அல்லது
பாட்டு அல்ல –
————————————————
(தொழுவித்துக் கொள்ளும் திருக்கை -அவனுக்கு
தொழும் கை நமக்கு
1-ஐந்து விஷயங்கள் உபமானம் சொல்லி –
2-உபமேயம் மாத்திரம் சொல்லாமல்
3-உபமானங்களுக்கும் விசேஷணங்கள் இட்டு
4-இப்படி வருந்தி யாகிலும் திரு மேனியைச் சொல்லுவான் என்னும்
சங்கா சதுஷ்ட்யங்களுக்கு பரிகாரம் அருளிச் செய்து சங்கதி
எடுத்துக் கழிக்கவும் விசேஷணங்கள் சொல்லியே இவற்றைச் சொல்ல வேண்டுமே -)
ஒன்றைச் சொல்லி
இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு –
சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் –
அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் –
காமினிக்கு காந்தனுடைய தேஹமும் தேஹ குணங்களும்
ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி -(பணி -கர்தவ்யம் )
மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே —11-7-5-
(மெய்யானை-திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
ஏந்து -திரு வாழி திருச்சக்கரங்கள் ஒய்வு எடுக்கும் ஸ்தானமே திருக்கைகள் )
மையார் கடலும்-
பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை-
மணி வரையும்-
நெஞ்சாலே முகக்கலாய் இருக்கை –
மா முகிலும் –
குளிர்ந்து ஸ்ரமஹரமாய் இருக்கை –
கொய்யார் குவளையும் –
தர்ச நீயமாய் இருக்கை –
காயாவும்-
நெய்தது இருக்கை –
போன்று இருண்ட மெய்யானை –
இப்படிப் பட்ட வடிவு
மெய்ய மலையானைச் –
அறுகாதம் பயணம் போய்
பரம பதத்திலே காண விராதே
சந்நிஹிதன் ஆனவனை –
(ஆராவமுதம் அங்கு எய்தி -திருமடல் )
சங்கேந்தும் கையானைக் –
தொழுகைக்கு இவன் கை போலே
தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை –
தமச பரம மோ தாதா சங்கு சக்ர கதா தரா -நித்ய ஸ்ரீ -இத்யாதி –ஸாஸ்வத -மண்டோதரி –
கை தொழாக் கையல்ல கண்டாமே –
தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்-
—————————————–
(கீழே சொன்ன ஞான கர்மா இந்திரியங்களுக்கு தலைமை நிர்வாகமான
மனஸ்ஸூ -பற்றி இரண்டு பாசுரங்கள்
உள்ளம் இதில்
நெஞ்சம் அடுத்து )
அவனுக்கு என்று இராத
ஞான இத்ரியங்கள்
கர்ம இந்த்ரியங்கள்
அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் –
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-
(கொள்ளோமே-ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டு அருளிச் செய்கிறார்
நினைப்பதையாவது அவனுக்கு என்று நினைப்பீர் -நினைத்து அவனுக்கு சூடிக் களைந்த வற்றை நாமும் சூடலாமே –
கள்ளார் துழாயும் –
செவ்வித் திருத் துழாயும் –
கணவலரும் –
அலரியும் –
கூவிளையும்
முள்ளார் முளரியும் –
தாமரையும் –
ஆம்பலும் முன் கண்டக்கால் –
தேடித் பறிக்க வேண்டா –
விசஜாதீயங்களைக் கூட எண்ணிற்று என் என்னில் –
இவனது த்ரவ்யம் -பிரதானம் அன்று –
ஸ்நேக பிரதான்யம் –
ஸ்நேஹம் இல்லாதவன் இடில் திருத் துழாயும் ஆகாது –
ஸ்நேஹத்தோடு இடில் அலரியும் ஆம் –
பிராக்ருதம் அன்றே அப்ராக்ருத வஸ்துவுக்கு சத்ருசம் –
(திருத்துழாய் உடன் இவற்றை சேர எடுத்ததுக்கு இதுவே ஹேது )
ஸ்ரீ புருஷோத்தம உடையான் செண்பகம் உகந்து சாத்துவர் –
சில ராஜ புத்ரர்கள் செண்பகம் கொண்டு சாத்தத் தேடி
முன்பு பூ வெல்லாம் வித்துப் போய்
ஒரு பூ விருந்தது கடையிலே
இப் பூவுக்கு செருக்காலே ஒருவருக்கு ஒருவர் த்ரவ்யத்தைப் போர எற்றி
இவர்களில் ஒருவன் நினைக்க ஒண்ணாத் படி த்ரவ்யத்தைப் போர விட்டு கொடு வந்து சாத்தினான் –
அன்று இரா அவன் ஸ்வப்பனம் காண்கிறான்
நீ இட்ட பூ எனக்கு கனத்து சுமக்க ஒண்கிறது இல்லை -என்று அருளிச் செய்தான் –
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று –
ஏதேனும் த்ரவ்யமாம் படி தன்னை ஏதேனும் த்ரவ்யமாக
சிறுகி இட்டவன் –
பஷிகளுக்கும் மிருகங்களுக்கும் ஆகாதது இல்லை இறே
இவன் இடுகிறவை மிகையாம் படி இறே சிறுக விட்டபடி –
உள்ளாதார் உள்ளத்தை –
நினைவே அமையும் –
செயல் மிகை –
உள்ளமாக் கொள்ளோமே
வேறேயும் நினைப்பன யுண்டு இறே அவர்கள்
தான் நினைக்கும் அவை ஒழிய
நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –
ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து
இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –
அவ்வளவும் முடி கொண்டு திரியும் அத்தனை –
—————————————————–
(உள்ளம் நெஞ்சு
நினைக்க கருவி மனம் அதுவே உள்ளம்
நினைவுக்கு பதிவு இடம் நெஞ்சு
இரண்டு கார்யங்கள் செய்யுமே
அவனைப் பற்றியே பதிவுகள் இருக்க வேண்டுமே
விக்ரஹத்துக்கு ஒரு உபமானம் அமையாதோ
இத்தனை வேண்டுமோ
ஆத்ம குணங்களை பேசி அனுபவித்தால் போதாதோ என்கிற
சங்கைகளுக்கு பரிகாரமாக இப்பாசுரம் -)
கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே —11-7-7-
(அன்பு முற்றிய அவஸ்தையே ஆர்வம்
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக போல் )
கனையார் கடலும் கரு விளையும் காயாவும் -அனையானை-
உபமானம் இல்லை என்று பேசாதே
இருக்க மாட்டாரே –
திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால்
ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே
அன்பினால் ஆர்வத்தால் என்றும் –
அன்பாவது ஸ்நேஹம்
ஆர்வமாவது பெறாது ஒழியில்
முடியும் படியான ஆற்றாமை –
சுனையார் மலரிட்டுத் –
புஷ்பாதி உபகரணங்கள்
பண்டே சமைத்து இருந்தன –
அவன் தன்னை தாழ விட்டு நின்றான் –
தொண்டராய் நின்று –
இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை –
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல –
நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல –
(அநதிஷ்டமான நெஞ்சு ஆஸ்ரயம் இல்லாத -நினைவுகளுக்கு இருப்பிடம் இல்லாத
தாம் உளரே –பூ உளதே –பொய்கை ஆழ்வார் -ஈடு பாடு வேண்டுமே )
—————————————————-
(இனி கரணங்களை உடைய கரணி ஆத்மாவை
மேல் இரண்டு பாசுரங்களில் –
மனுஷ்யர் நினையா விடில் அஸத் சமம் என்கிறார் )
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ —-11-7-8-
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த –
இடைச்சிகள் வைத்த –
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட –
ஆஸ்ரித த்ரவ்யம் ஆகையாலே
பெறாப் பேறு பெற்றானாய் உண்டபடி –
சிறியானைச் –
ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு
இனி இல்லை என்னும் படி தாழ விட்டு
முக்தனானவனை –
செங்கண் நெடியானைச் –
இவர்களைக் கொண்டு போய் வைக்கும் இடத்தில்
இதுக்கு மேல் இல்லை என்னும் படி
உயரப் பரம பதத்திலே வைக்க வல்லவனை –
சிறியானைச் — செங்கண் நெடியானைச் —
ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் –
மேன்மையால் குறையற்று
சிவந்த கண்களை உடைய
சர்வேஸ்வரனை –
சிந்தித்து அறியாதார் –
நினைத்து அறியாதவர்கள் –
என்றும் அறியாதார் கண்டாமோ –
இங்குத்தை எளிமையும் மேன்மையும்
இரண்டையும் அறியாதவர்கள் –
————————————————-
(இவர் அஸத் பிராயராகவே இவர்களை மனத்தில் வைத்தால் ஆவது என் என்று அருளிச் செய்கிறார் -)
தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-
(ந்ரு பசு -பசு ப்ராயராய் இருப்பார்கள் -இரண்டு கால் பசு போல் )
தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை தானிடமாக்கிக் கொண்டான் –
உண்கிற வாயில் தேன் உள்ளே இழிச்சுவது
உமிழ்வதாக நின்று கொண்டு
ஸ ஸம்பிரம ந்ருத்தம் பண்ணும் வண்டுகள் –
மதுவும் நித்யமாய்ச் செல்லுகிறபடி –
தட மலர்க் கண்ணிக்காய்-
சுனைப் பூ போலே இருக்கிற
திருக் கண்கள் –
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு –
தன்னைப் பேணாதே
எருதுகளை அடர்த்தவனுக்கு –
ஆளானார் அல்லாத –
அவன் தன்னைப் பேணாது ஒழிய
தங்களைப் பேணித் திரியுமவர்கள
மானிடவர் அல்லர் –
பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் –
கட்டடங்க மனுஷ்யர் அல்லர் –
(கீழ் கண் காது நெஞ்சு பாட்டு அல்ல என்று பிரித்துச் சொல்லுவான் என் )
என்று என் மனத்தே வைத்தேனே –
சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே –
அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஆழ்வார்
இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் –
மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும்
இவருக்கு வாசி உண்டு –
(யத் அபராத சஹஸ்ரம் –விக்ருதிம் -இத்யாதி -வரதராஜ ஸ்தவம்
பாகவத அபசாரம் பொறாமையால் அவன் அவதரித்துச் செய்த ஆனைத் தொழில்கள்
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவதே ஹேதுவாக ஆழ்வார் கைக்கொள்ளுவார்களே -)
தலை தான் போனது அவனுக்கு
ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு
(என் மனத்தே வைத்தேன் -ஒருமையில் இங்கு
பயிலும் சுடர் ஒளி-இத்யாதியால் பாகவத வைபவம் விளக்கம்
பாகவத அபசாரம் கூடாது என்று உபதேசம்
இதுக்கும் அகப் படாமல் போனால் உஜ்ஜீவிக்க பிரசங்கம் தான் உண்டோ –
மித்ர -இத்யாதி சீதாபிராட்டி கைவிடவில்லையே
பிராட்டி உபதேசம் கேளாதவனுக்கு தலை தானே போனது
இவர் உபதேசம் கேளாமல் ஸ்வரூப நாசம் பிறக்கும் -)
————————————————
(ஆழ்வார் கை விட்டாலும்
தாமும் பின்னும்
பாடி ஆடும் என்று உபதேசிக்க
இப்பிரபந்தம் நழுவ விடாமல் அநுகூலிக்கப் பண்ணும் – )
மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-
(ஐ ஒன்றும் ஐந்தும்-இந்த ஐந்தும் அந்த ஐந்தும்
கரணங்களை -முதல் ஐந்தாலும்
அடுத்த ஐந்தும் மனஸ் ஆத்மா )
மெய்நின்ற பாவம் அகலத் –
பிரக்ருதியிலே அனுபவிக்கக் கடவதாய்
நின்ற பாபங்கள் அகல –
பாவத்துக்கு அடி -பிரகிருதி இறே –
திருமாலைக் –
அவள் முன்னாக ஆஸ்ரயிக்கில் இறே
பாபங்கள் அகலுவது –
கைநின்ற ஆழியான்-
எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இறே இருப்பது –
சூழும் கழல் –
எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –
திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை –
சூடி –
இத் திருவடிகளைச் சூடும் ஆழ்வார் –
கைந்நின்ற வேற்க் கை கலியன் –
சேஷித்வத்துக்கு அவன் திரு வாழியைப் பிடித்தால் போலே
சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி-
ஒலி மாலை ஐ ஒன்றும் ஐந்தும் –
பத்தும் –
(பதினொன்று என்று கொள்ளக் கூடாது -இவை பத்தும் அவை பத்தும்
வெளிக் கரணங்கள் நிந்தனை முதல் ஐந்து
‘ஆத்ம நிந்தித்து இவை ஐந்து -ஆத்ம சப்தம் மனசையும் ஜீவனையும் கீதையில் சொன்னான் அன்றோ )
இவை பாடி ஆடுமினே –
முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் –
இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்-
(பாடி -வாக்கு சுத்தம்
ஆடி உடம்பு சுத்தம்
இரண்டும் சுத்தமானவாறே மனசும் சுத்தமாகுமே )
(அடுத்த திருமொழி பிரவேசத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது
மெய்நின்ற -இத்யாதி
போக்யதை அளவிறந்தது
அனுபவித்து வாழுங்கோள் நாடடைய -என்கிறார் –
மெய்நின்ற பாவம் அகல –
அனுபவித்து அல்லது நசியாத படியான பாபமானது போக -என்னுதல் –
தேஹோபாதிகமானது அகல -என்னுதல் –
திருமாலை –
விரோதி என்று பேர் பெற்றவை அடைய போக்குவிக்கும் பிராட்டியை அருகே உடையவனை –
கைநின்ற-
எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிற
சர்வேஸ்வரனுடைய போக்யதை மிக்கு இருந்துள்ள திருவடிகளை -என்னுதல்
ஸூலபமான திருவடிகளை சிரஸா வஹித்து -என்னுதல்
சர்வேஸ்வரன் ஐஸ்வர்ய ப்ரகாசகமான திரு வாழியைக் கையிலே உடையவன் ஆனால் போலே
சேஷத்வ பிரகாசகமான வேலை உடைய ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தையும்
பாடுவது ஆடுவது ஆங்கோள்-
விரோதி போக்குகையில் பணி இல்லை –
அது தன்னடையே போம் –
மேல் உள்ளத்து உங்களுக்கு ஹர்ஷமே -)
——
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நீள் நகர் மாற்கு உற்ற காரணத்தால் புறம்பர் நீர்
நாண் இன்றி ஆட்பட்டு வீழாதே பேணி அடி
யார்க்கு இனியன் தொண்டு பூண்டு வாழும் எனும் ஆலி நாடன்
ஆர்ந்த நம் தீ வினைக்கு மாற்று -107-
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
நச்சு நல் மா மருந்தும் ஆழ்வார் –
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply