புள்ளாய்– பிரவேசம் –
கீழ்-(கிடந்த நம்பி பதிகத்தில்) சம்பந்த ஜ்ஞானம் பிறந்த-விளைந்த – படி சொல்லிற்று –
பின்பு தாம் நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே
பிறவாமை என்னைப் பணி-7-1-1- -என்று அபேஷித்தார்-
நீர் இப்பாடு படுவது என்-உமக்காக அன்றோ நாம்
உகந்து அருளின இடங்களில் வந்து நிற்கிறது -என்ன
எல்லாம் பெற்றாராய் சமாஹிதர் ஆனார் –
இதுவே பேறும் இழவும் ஆகைக்கு நம் தலையில் ஏதேனும் உண்டோ -என்று ஆராய்ந்து பார்த்தார் –
இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே
அவன் எதிர் சூழல் புக்குப் பண்ணின கிருஷி
இப்படி பலித்த பலமாய் இருந்தது –
(பக்தி உழவன் ஷேம க்ருஷி வலன் )
ஊனேர் ஆக்கை தன்னை யுழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் -7-2-9-
(உயிர் பாசுரம் இந்தப்பதிகத்துக்கு )
இத் த்யாஜ்யமான சரீரத்தைக் கொண்டே
பேற்றுக்கு உடலாம்படி
பண்ணி அருளினான் –
என்கிறார் –
(தாழ்ந்த சரீரத்தில் புகுந்து உகந்து இருக்கும் உன்னை விட மாட்டேன் என்கிறார் இப்பதிகத்தில் )
————————————————–
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-
என்னை உள்ளம் கொண்ட-விஷயாந்தர ப்ராவண்யம் உள்ள மனசை தனது வசமாக்கிக் கொண்ட
உன்னை-என்னுடைய உஜ்ஜீவனத்தில் முயன்ற உன்னை –
ஓ -ப்ரீதியால் -ப்ரீதி அதிசய யோதகம் -வெளிக்காட்டும் -அவ்யயம் –
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட –
என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு நான் பட்டது பட அமையாதோ –
நானும் பிறவாத பிறவிகளை அன்றோ நீ வந்து பிறந்தது –
(நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு )
அன்னமாயும்
வராஹமாயும்
செயலைக் காட்டி என் ஹிருதயத்தைக் கொண்டான் ஆய்த்து-
(என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் )
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -என்று
பந்த ஹேதுவான தன்னையே
மோஷ ஹேதுவாம் படி பண்ணி அருளினான் –
(யஜமான சம்ஹயை இத்யாதி –2-57-60-நான்கு ஸ்லோகங்கள் கீதையில் )
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால் –
இவர் நெஞ்சிலே புகுரா நின்றான் என்று அறியில்
ஒட்டார் என்று தெரியாதபடி யாகப் புகுந்தபடி -(ய ஆத்மா சரீரந வேத)
இவ் உபகாரத்தை அனுசந்தித்துப் பேசப் புக்கவாறே
கண்ணானது நீர் பாயா நின்றது –
என் கண்கள் –
ஸ்திரீகளை நினைத்து அழுது போந்த
என்னுடைய கண்கள் –
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால் –
உன்னை அனுசந்தித்து புக்கவாறே
நெஞ்சாது உள்ளே நின்று உருகி
உடை குலைப் படா நின்றது –
நள்ளேன் உன்னை அல்லால் –
இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும்
அவற்றோடு செறியேன் –
நறையூர் நின்ற நம்பீயோ —
நான் நோவு படுகிற சம்சாரத்தில்
நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு
அவற்றோடு பொருந்துமோ –
ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார் –
(நான் உள்ளே புகுந்த -இரும்பு போல் வலிய நெஞ்சம் -பதம் செய்து –
அவ்வவ் அவதானங்களைக் காட்டி
ஆனந்த ஸ்ரு க்களை பிரவஹித்து
நெஞ்சை உருக்கினால்
பள்ளமடையான விஷயாந்தர ப்ராவண்யம் பிரபலம்
தன்னடையே பிரிய பண்ணவோ என்ன
மாட்டேன் -அவற்றோடு செறிய மாட்டேன் -)
(உன்னுடைய சங்கல்பமே ஜெயிக்கும் ஸத்ய ஸங்கல்பன் அன்றோ
பாபங்கள் வென்றால் மீண்டும் மீண்டும் பிறவி சூழலில் ஆழ்ந்து மாக்கிப் போவோமே
நான் தோற்று உன் குணங்கள் வென்றால் தானே பேறு -கூரத்தாழ்வான் )
—————————————
கீழே புள்ளாய் ஏனமாய்
தாழ்ந்த ஜென்மம் வேனுமாகில் பிறக்கலாம்
நாட்டார் பிறக்காத பிறக்க வேண்டுமா
நரமும் சிம்மமும் கலந்த நரஸிம்ஹ அவதார அனுபவம் –
ஓடா வாளரியின் உருவாய் மருவி என் தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-2
ஓடா வாளரியின் உருவாய் –
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –
தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ –
நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –
மருவி –
நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி
இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது –
என் தன் மாடே வந்து –
நீ பராவஸ்தன் ஆனாயாகில்
என் பாடு வந்து கிட்டலாமோ –
அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா –
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் நெஞ்சை உனக்காக்கிக் கொண்டாய் என்கிற இது
உனக்கு ஒரு மிடுக்கோ –
என்னை உனக்காக்கிக் கொண்ட உனக்கு –
அது செய்தோம் இறே
மேலே நீர் செய்யப் பார்த்தது என் என்ன –
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு –
சாஸ்திர உக்தங்களான லஷணங்களிலே குறைவற்று இருக்கிற
கவிகளைக் கொண்டு நீசரைப் பாடுவது தவிர்ந்தேன் –
(தொண்டர் இங்கு விஷயாந்தர ப்ராவண்யம் உள்ளவர்களை
நாவில் இன் கவி ஒருவருக்கும் கொடிக்கிலேன் )
கவிதைப் பனுவல் என்றது -பனுவல் கவிதை -என்ற படியாய்
பனுவல் என்று நூலாய் -சாஸ்திரம் -என்ற படியாய்
சாஸ்திர உக்தமான லஷணங்களிலே குறை அற்ற கவி -என்றபடி –
நாடேன் உன்னை அல்லால் –
இவனைப் பாடுவோமோ -என்று விசாரிக்கும் அதுவும் தவிர்ந்தேன் –
நறையூர் நின்ற நம்பீயோ –
நீ என்னுடைய சர்வ இந்த்ரியங்களுக்கும் உன்னை விஷயம் ஆக்கி வைக்க
நான் உன்னை விட்டு புறம்பே கவி பாடுகைக்கு
பிராப்தி உண்டோ –
————————————
தொண்டர் தம்மைப் பாடேன் -அஸேவ்ய ஸேவை பண்ண மாட்டேன் -என்றால்
உபகாரங்களைப் பண்ணினால் அதுக்காக ஏத்த வேண்டுமே என்ன
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
உபகாரர்களில் தலையான தாயும் தந்தையும் -விட்டு போனாலும்
மஹா உபகாரனான உன்னை ஒழிய வேறு எவரையும் பாடேன் –
எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே–7-2-3-
அடியேனுக்காகி –ஸ்வதா ஸித்தமான தாஸ்யம் உடைய எனக்கு –
மைம்மான வண்ணம்-அஞ்சன வண்ணன் –
எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின் அம்மானும் அம்மனையும்
நாட்டார் உபகரிக்கும் அளவிலே உபகரித்தாயாகில் அன்றோ உன்னை மறக்கல் ஆவது –
தாய் அளவிலே உபகரித்தான் –
தமப்பன் அளவில் உபகரித்தான் -என்ன ஒண்ணாதே –
அவர்கள் கை விட்ட அளவிலே முகம் காட்டின உன்னை –
மாதா பிதாக்கள் ராகாந்தராய்
பிரஜையை உபபாதித்து பின்பு
யௌவன விரோதி என்று கால் கடை கொள்ளுமவர்கள் –
ஜன்மம் தோறும் பழகிப் போந்த வாசனையாலே
அம்மே -என்றும் -அப்பா -என்றும் இவன் சொல்லிப் போருவது –
அதில் அம்மே என்ற போதாக பெண் குரலாலே ஏன் என்றும்
அப்பா என்ற போதாக ஆண் குரலாலே ஏன் என்றும்
இவன் அறிந்த வழியாலே யாய்த்து முகம் கொடுப்பது –
(மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ
ஸூகர் வியாசர் புத்ர வாத்சல்யம் புத்ரா கூப்பிட தன்மையில் மரங்கள் அப்பா கூப்பிட )
அடியேனுக்காகி நின்ற-
அந்த மாதா பிதாக்கள் அளவில்லாத படி
ஸ்வதஸ் சித்தமான முறையை உடைய எனக்கு
அம்மானும் அம்மனையும் ஆகி நின்ற –
(தாய் தந்தை உறவு கர்மாதீனம் -இது நிருபாதிகம்
அடியேன் உணர்ந்தால் தானே இந்த எண்ணம் சித்திக்கும் )
நல் மான ஒண் சுடரே –
விலஷணமாய்
அளவிறந்த ஒள்ளிய சுடரை உடையவனே
அப்படி இருப்பது பரம பதத்தில் அன்றோ என்ன –
நறையூர் நின்ற நம்பீ –
திரு நறையூரிலே வந்து சந்நிஹிதன் ஆன
கல்யாண குண பரிபூரணனே –
உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –
அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய
உன்னை அல்லது
புறம்பே சிலரை –
எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும்
ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை –
இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை –
(உன் அடியார் எல்லோரோடும் ஓக்க நினைத்தீர் -அங்கு நம்மாழ்வாரை போல் இங்கும் மற்ற திவ்ய தேசங்கள் )
அந்நிய விஷயத்தில் பிரேரித்தால் கடைமைக்குப் பாடுவேன் அன்று உகந்து பாட மாட்டேன் –
மைம்மான வண்ணம்-மை அளவான வண்ணம் -மை ஒத்த வண்ணம் –
ஸாளக்ராம திரு மேனி நறையூரில்
—————————————————-
வேறே திவ்ய தேசம் பாடேன் என்றவாறே
நெஞ்சில் உறைந்து நித்ய வாசம் செய்து அருள -அத்தை மறவாமையாலே
அன்றிக்கே
எத்தனை உபகார சீலனாய் இருந்தாலும் என்ன பயன்
நாட்டில் ஒருவரும் அத்த நினைப்பார் அல்லவே
நீரும் அப்படியே
நீ என் நெஞ்சில் இருக்க செய் நன்றி மறந்தவனாக ஆவேனோ என்கிறார் –
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-
அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள
இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல் –
பாலனாய் ஏழு உலகு உண்டு -என்கிறபடியே
யசோதா ஸ்த நந்தயமும் நிரம்பின பருவம் என்னும் படியான பருவத்தை உடையையாய் –
அப் பருவத்திலே சகல லோகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையையாய் –
(சிறியாய் ஓர் பிள்ளையுமாய்-உம்மைத்தொகை
பிள்ளை சிறுமை தெரியுமே
பாலனாய் -பாலன் காட்ட வேண்டுமே -பால் குடிக்கும் பருவத்துக்கும் சின்னவன்
உலகு உண்டு சின்ன ஆலிலையில் படுத்தது பொருந்தாது
சேராச் சேர்த்திக்கு உம்மைத் தொகை
நெஞ்சுள் உறைந்ததுக்கு எடுத்துக் காட்டு இந்த பொருந்தாத செயல்கள் )
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் அறியாது இருந்தறியேன் அடியேன் –
அப்படி சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
பரம பதம் போலே இடம் பெற இருந்து
என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் –
அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –
அணி வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ –
உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ –
தர்ச நீயமான வண்டுகள் ஆனவை மேன் மேல் என படிகைக்கு
மேற்பட வேறு ஒன்றில் கால் வாங்காதபடி மிக்க தேனை உடைத்தான
பொழிலாலே சூழப் பட்ட திரு நறையூரை வாசஸ் ஸ்தானமாக உடையவனே –
உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு –
———————————————–
கீழ் பாட்டில் செய் நன்றி மறவாமல் அடிமையில் உருப்பட
இவர் ஆசையை வளர்க்க
கொஞ்சம் பிரிய உத்யோகிக்க -வளைக்கிறார் -போக ஓட்டேன் என்று
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
நீண்டாயை-இடம் காலம் வடிவம் -மூன்றாலும் நீண்டு
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சிலர் பேச என்று புக்கால்
எல்லாம் பேசி தலை கட்ட ஒண்ணாத படி
அபரிச்சேத்யனாய் உள்ள உன்னை
ப்ரஹ்மாதிகள் நெஞ்சால் கூட அனுசந்தித்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
கண்ணாலே காண வேணும் என்று ஆசைப் பட்டால்
காண அரியையாய் –
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு –
என் ஆயனே என்று ஆதரிக்கப் படுகிற உனக்கு –
ப்ரஹ்மாதிகள் உடைய பாசுரம் இருக்கிறபடி –
நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் –
இப்படி இருக்கிற உனக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று உன் திருவடிகளிலே சகல சேஷ வ்ருத்திகளிலும் அதிகரித்தேன்
என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய
ஹிருதயத்திலே புகுந்த
உன்னைப் போக ஒட்டுவேனோ
வந்த கார்யம் தலைக் கட்டினோம் ஆகில் இனி வேறே ஒரு இருப்பிடம்
தேடித் போக அமையாதோ -என்று போக நினைத்தான்
நான் போக ஒட்டுவேனோ –
அடியேன் –
அடியேன் -என்னா நின்றீர்
சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ
ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன –
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் –
மடல் எடுக்க நினைப்பார்
இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது –
நறையூர் நின்ற நம்பீயோ —
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –
நீ முந்துற மடல் எடுத்து
பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-
(அடிமையை ஆசை மூட்டுவதே வந்த கார்யம்
விலக விலக ஆசை வளரும்
இரண்டாம் மூன்றாம் நாலாம் பாட்டில் மூன்று அடியேன் உண்டே
பிரணயம் -சிவிடக்கு தோன்ற ஓட்டேன்)
——————————————————————
வந்தது நாண் இல்லாமல்
நீரும் நாண் இன்றி
நாண் அற்ற இருவரும் ஸ்வ தந்த்ரர்
விலகுகிறேன் என்ன
குலா நாதன் அன்றோ என்று காலைப் பிடிக்கிறார்
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன்
எந்தை எந்தை –ஏழு படிகள்
கீழில் போக ஓட்டேன்
பாரதந்தர்யத்தில் வைத்து அருள திரு உள்ளம் பற்றி
ஆனைக் குப்பம் ஆடுவாரைப் போல் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்க
இழப்பு உம்மதே என்கிறார்
எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-6-
எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் –
நான்
என்னுடைய தமப்பன்
அவனுடைய ஜநகன்
இவர்களோடு கூட அவ்வருகே எழுவர்
(மேல் பத்து கீழ் பத்து -21
என் தாதை -அர்த்த சித்தம்
தச பூர்வம் -உத்தரம்
கன்யாதான பல தயா -21 தலைமுறை பலம்
கேசவன் தமர் படி சம்பந்திகள் பலித்தமை -இங்கும்)
சப்த சப்தஸ சப்தஸ –என்னக் கடவது இறே
ஒருவருக்கு உண்டான நன்மை அசல் காக்கும் இடத்தில்
ஏழ் படி கால் சொல்லும் இறே –
இத்தால் குலமாக அனந்யார்கள் என்றபடி –
நான் அபேஷியாது இருக்க
நீயே என்னுடைய ஹிருதயத்தில் வந்து புகுந்த உன்னை
போக ஒட்டுவேனோ –
கைப் பட்ட நிதியை உதறுவார் உண்டோ –
அந்தோ என் ஆர் உயிரே –
இவர் ஒட்டேன் என்னச் செய்தே
பின்னையும் போவானாக நினைத்தான் –
ஐயோ இவ் வஸ்துவை இழந்தாய் கிடாய் -என்கிறார் –
உன்னை ஒழிய ஜீவியாத படி
என் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போருகிறவனே-
அரசே –
என்னை வன்னியம் அறுத்து ஆண்டவனே –
அருள் எனக்கு நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ –
நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி
என் பக்கலிலே அருளைப் பண்ணின
என் ஆயனே
திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று –
——————————————–
இவருடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்த
ஈஸ்வரன் போக்கை நினைத்தான் –
போக ஒட்டேன் -என்றார் –
ஒட்டேன் ஆவது என் –
நம்மோடே மலைந்து விலக்கப் போமோ உமக்கு
இருப்பதொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துப் பொகட்ட
பெரு மிடுக்கர் அல்லோமோ நாம் -என்ன
அதில் தட்டில்லை –
ஆனாலும் அவ்வோ பிரக்ருதிகளுக்கு அனுரூபமாக அன்றோ
நீ பரிமாறுவது -என்கிறார் –
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா –
ராஜ லோகம் அடைய அஞ்சும்படி அவர்களுக்கு அடியான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய தோள்கள் ஆயிரத்தையும்
மழுவாலே துணித்த மிடுக்கனே –
நீ தொடங்கின கார்யத்துக்கு ஒரு பிரதிஹதி உண்டாம் என்றவனும் அல்லேன்
உன்னுடைய மிடுக்கை இசையாதவனும் அல்லேன் –
ஆனாலும் அவ்வோருடைய ஸ்வபாவங்களை அறிந்து அன்றோ பரிமாறுவது –
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் –
உன்னை ஒழிய அறியாத படி இருக்கிற
என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து
இனி இங்கு நின்றும் போயிருக்கவுமாய் -போகவுமாய் –
இருப்பார் நெஞ்சில் போய் இருக்க ஒட்டேன் –
(போகவுமாய் -இருப்பார் நெஞ்சில் -விஸ்லேஷத்தில் தரிப்பார் நெஞ்சில் )
ஒட்டேன் என்றாலும் நாம் தவிரோம் என்றால் –
வளைத்து வைத்தேன் –
நீ போகில் நான் முடிவன் -என்கிறார் –
இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –
நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –
நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்
ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள் –
—————————————————–
நீர் பிராட்டி சலுகை கொண்டு வளைக்க காரணம் என்ன –
முன்னமே வந்து பின்பு நீ புகுந்தது
ஆகவே போகிறேன் என்கிறேன்
நான் வர நீர் காத்து இருந்து -என் உள்ளமும் புகுந்து போகலாமா
தேவரீர் குறை இருந்து என்னால் தீர வில்லையே
பூர்த்தியை காட்டி அருளி
நீயே நான் நினைக்காத பொழுது உள்ளம் புகுந்து
உனது போக்யதையையும் காட்டி அருளி
பின்பு பிராட்டி ஸஹ கரிக்கவும் சந்நிஹிதையாய் இருக்க போக ஒட்டுவேனோ
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நற் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-8-
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய் –
நாம் முன்பு வந்து புகுந்தது
ஒரு குறை உண்டாயோ
இப்போது போக நினைக்கைக்கு -சதா பஸ்யந்தி -என்கிறபடியே
எப்போதும் ஒக்க ஸ்ப்ருஹணீயமான புஷ்பங்களைக் கொண்டு
நித்ய ஸூரிகளானவர்கள் தொழுது
தங்கள் கைகள் ஆகிற புஷ்பங்களைக் கொண்டு
அஞ்சலியைப் பண்ணிக் கொண்டு
திருவடிகளிலே விழுந்து
ஆஸ்ரயிக்கும் படி இருந்தாய் –
இப்போது –
உன்னுடைய இவ் வரவுக்கு பூர்வ ஷணத்தில் எனக்கு ஒரு சம்ருத்தி இல்லை –
என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
என் பக்கலில் ஒரு அபேஷம் மாதரமும் கூட இன்றிக்கே இருக்க
நீயே வந்து புகுந்து
உன்னுடைய போக்யதையை அறிவித்த பின்பு
இனி உன்னை போக ஒட்டுவேனோ –
நற் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –
விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை
குடைந்து வண்டு உண்ணும் -திருவாய்-1-7-11-என்கிறபடியே
உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி
வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-
அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு
வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ
அவ் ஊரில் போக்யதை இருப்பது –
————————————————
போக்யத்தை காட்டக் கண்டு வளைத்தேன் என்றதால்
பரம ஹ்ருஷ்டானாய் ஸ்திரமாய் அமர
சரீரத்துடன் இப்பேறு பெற்றேன் என்று
கீழ் எட்டு பாசுரக்களிலும் உள்ளவற்றை தொகுத்து
உயிர் பாசுரம் அருளுகிறார் –
தானாக -பரகத ஸ்வீ காரம் -வந்து அடியேன் மனம் புகுந்து
ஸ்வீகாரத்தின் உடைய பலம் பெற்றேன் -என்கிறார் –
ஈஸ்வரன் அநேக அவதாரங்களைப் பண்ணி
ஸ்வயம் வரித்துக் கொடு வந்த
ஸ்வீகாரத்தின் உடைய பலம் பெற்றேன் -என்கிறார் –
(கீழ் பாசுரங்களில் அருளிச் செய்த அனைத்தையும் தொகுத்து அருளுகிறார்)
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் –
மாம்ச பிரசுரமான சரீரத்தை
வழி அல்லா வழியே த்ரவ்யார்ஜனம் பண்ணி
அது கொண்டு இத்தைப் பேணி வைத்த
பிரயோஜனம் இன்று பெற்றேன் –
யானாய் –
நாமும் நாமாய் இவரும் இவராய்
இவரோடு கலக்கும் இடத்தில்
இவர் ஆணை இட்டு விலக்குவார்-
ஆன பின்பு இவர் என்ற சொல்லுக்குள்ளே இவரை அடக்கி கலப்போம் -என்று பார்த்து
நானாகிற சொல்லுக்கு உள்ளே தன்னை அடக்கிக் கொடு வந்து புகுந்தான் –
என் தனக்காய் –
சர்வாதிகனான தன்னை
எனக்காக ஆக்கி –
அடியேன் மனம் புகுந்த –
தன்னைத் தமக்காக்கி-( பெருமாளை ஆழ்வாருக்கு ஆக்கி )
தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க
தமக்கு இனிதாகா நின்றது –
தேனே தீன் கரும்பின் தெளிவே –
எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே –
என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன் –
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி
அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே
ஊனேர் ஆக்கை தன்னை உழம்பி ஓம்பி வைத்த நான் –
இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் –
அது செய்த படி தான் எங்கனே என்ன –
நறையூர் நின்ற நம்பீயோ –
நீ வர நிற்கையாலே
நான் இப் பேறு பெற்றேன் –
———————————————
நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-
சொன்னீர்-சொல் நீர் -நீர்மை – ஸ்வ பாவம்
நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் –
அழகிய ஜல சம்ருத்தியை உடைத்தான வயலானது
பர்யந்தம் எங்கும் சூழ்ந்து இருக்கின்ற
திருநறையூரை வாசஸ் ஸ்தானமாக உடைய
கல்யாண குண பூர்ணனை யாய்த்து கவி பாடிற்று –
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்-
கல் என்று த்வனிக்கு பெயர்
மிக்க த்வனிகளை உடைத்தான அருவிகளை உடைத்தாய் இருக்கிற
பெரிய மலை போன்ற தோள் மிடுக்கை உடையராய்
பிரதிபஷ நிரசன ஸ்வபாவரான
திரு மங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் கவி பாடினவர் –
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் –
இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும்
இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்
இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே
சூழ் விசும்பில் நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –
போக பூமிகளிலே மேலாய் இருக்கிற பரம பதத்திலே போய்
இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே
(சேஷத்வ பாரதந்த்ர முறையில் )
நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்
பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
புள் ஏனம் ஆம் நம்பி நெஞ்சுட் புகுந்தானைத்
தள்ளேன் வையத்து வான் இன்பம் விட மெய் உள்ளத்தோடு
சிந்தையால் எய்தி இன்புற்றேன் என் சீர்க் கலியன்
சிந்திப்பார்க்கு இல்லை சினம் -62-
விட மெய் -விடத்தக்க உடல் -நஞ்சாகிய உடல் என்றுமாம்
என் சீர்க் கலியன் -என்று அருளிச் செய்யும் ஆழ்வார் –
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply