அவதாரிகை –
கீழ் பாட்டில் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே -என்று
அதஸ்மின் ஸ்த்த புத்தி பண்ணினோம் கண்டாயே தோழி -என்றாள்-
நீ அகன்றாய் ஆகில் -அவன் உன்னோடு சம்ஸ்லேஷித்த படி என் என்ன –
அவன் வசீகரித்த படியும் -சம்ஸ்லேஷித்த படியும் இது தான் -என்கிறாள் –
தன்னுடைய சௌந்த்ர்யத்தையும் சீலத்தையும் காட்டின இடத்திலும் கார்யகரம் இல்லாமையாலே –
போம் இத்தனையோ என்று நினைத்தான் –
ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை –
நித்ய சாபேஷ்யமான விஷயத்தை குறித்து -நித்ய நிரபேஷன் ஆனவன் –
கால் வாங்க மாட்டாது நிற்கையாவது என் என்ன –
சேஷி யாகையாலே சேஷ வஸ்து அகன்றால் இழவு தன்னதாய் –
அத்தால் பெரும் பேறும் தன்னதாய் இருக்கையாலும்
இவளை ஒழிய செல்லாத கரமுகத்வத்தாலும்
நம் அழகு இங்கே ஜீவிக்கை யாய்த்து இல்லை என்று மீளுவோம் ஆகில்
புறம்பு நமக்கே சர்வ ஸ்வம்மாய் இருந்துள்ள அழகை தயாரிப்பார் இல்லை என்கிற அபிமானத்தாலும்
கால் வாங்க மாட்டிற்று இலன் –
உத்தம ராஜ கன்யை பக்கல் உத்தம ராஜ புத்திரன் சென்று –
அழகு ஜீவிக்கை யாகாதே மீண்டான் என்றால் புறம்பு ஜீவிக்கை யாகாது இறே –
ருசியே தொடங்கி பிறரை வசீகரிக்கும் பரிகரமாக தான் நினைத்து இருப்பது அழகை இறே –
அது நிஷ் ப்ரயோஜனம் ஆனால் அபிமானம் கால் கட்டும் இறே
சக்தி கொண்டு கார்யம் கொள்ளிலும் விஷயம் இல்லாமையாலே மேல் விழுந்து அணைக்க மாட்டிற்று இலள் –
எதிர் தசையில் இசைவின்றிகே மேல் விழுந்தால் ரசம் இல்லை இறே –
அழகும் சீலமும் கார்யகரம் ஆய்த்தில்லை –
சக்தி கொண்டு கார்யம் கொள்ளும் நிலம் அன்றியிலே இருந்தது –
இனி இவளை வசீகரிக்கும்படி என் என்று பார்த்தார்
முன்பு திருவாய்ப்பாடியிலே பெண்கள் தன் குழல் ஓசையில்
வசீக்ர்தரான படி யைக் கண்டபடியாலே
தம்முடைய மிடற்று ஓசையாலே வசீகரிப்போம் என்று பார்த்து ஒரு பண்ணை நுணுக்கினான் –
இவனுடைய –ஏவம் பஹூவிதாம் சிந்தாம் (சிந்தயித்வா மஹா மதி ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் -செவிக்கு இனிய செஞ்சொல் பேசினாரே )-இருக்கிறபடி –
ம்ர்கயார்த்தமாக வந்தோம் ஆகையாலே பாடுகிறவன் ஆர் என்று கேட்பார் இல்லை
இவளை வசீகரிக்கும் பரிகரம் இது வென்று ஒரு பண்ணை நுணுக்கினான் –
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் -இது காண் செய்தபடி என்கிறாள் –
ம்க்ர்கையைக் குறித்து வந்தவர்கள் ஸ்ரமம் தீர ஒரு மரத்தின் நிழலிலே ஒதுங்குகையும் –
முகத்திலே நீரை இட்டுக் கொள்ளுகையும்-
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுகையும்-
ஒரு பண்ணை நுணுக்குகையும் -பிராப்தம் இறே-
—————————————————————————
நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-
பதவுரை
ஒன்று–மிகச் சிறந்ததான
கைவளம்–கைவளமென்கிற பண்ணை
ஆராயா-ஆராய்நது பாடி
நம்மை நோக்கா–நம்மைப் பார்த்து
இறையே நாணினார் போல்–சிறிது வெட்கப் பட்டவர் போல நின்று
பின்னும்–அதற்குப் பிறகும்
நயங்கள் செய்வளவில்–நயமான வார்த்தைகளை யிட்டுப் பண்ணிலே பாடினவளவில்
என் மனமும் கண்ணும்-எனது நெஞ்சம் கண்களும்
ஓடி-பதறிச் சென்று
எம்பெருமான் திரு அடிக் கீழ் அணைய-அப்பெருமானது திருவடிவாரத்திற் பதிய
இப்பால்–அதன்பின்
கைவளையும்–என் கையில் தரித்திருந்த வளைகளையும்
மேகலையும்-அரையில் மேவிய கலையையும்
காணேன்-காண மாட்டாமல் இழந்தேன்;
கனம் மகரத்குழை இரண்டும்-கனமான மகரகுண்டலங்களிரண்டையும்
நான்கு தோளும்-நான்கு திருத்தோள்களையும் காணப் பெற்றேன்;
(அதன்பிறகு)
எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு-“தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு
எழில் ஆலி இது அன்றோ என்றார்-அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார்.
அத்விதீயமாக நைவிக்கும் அழகை யுடைய பண்ணை ஆராய்ந்து பாடி நம்மைப் பார்த்து
கொஞ்சம் லஜ்ஜை பட்டவர் போல் நின்று
பின்னும் நீச பாஷணங்களை செய்யும் போது
என் மனஸ்ஸும் என் கண்ணும் ஓடி எமக்கு ஸ்வாமியான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட
அதன் பின் கையில் தரித்த வளையையும் அரை நூல் மாலையையும் போன இடம் அறிந்திலேன்
ஸ்திரமான இரண்டு மகர குண்டலங்களையும் நான்கு தோள்களையும் பார்த்தேன்
எனக்கு ஸ்வாமியே தேவரீர் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ ரெங்கம் எவ்வளவு தூரம் உண்டு என்று கேட்ட எனக்கு
அழகிய திருவாலி இது அன்றோ என்று தாமே சுட்டிக் காட்டி அருளினார் –
—————————————————————————————————
நைவளம் –
கேட்டாரோடு சொன்னாரோடு வாசி அற -நைவிக்கும்படியான
அழகை உடைத்தான பண்ணை நுணுக்கி
நட்ட பாஷையை -குண யோகத்தால் –நைவளம் –என்று பேரிடுகிறது –
நுடங்கு கேள்வி இசை -என்னக் கடவது இறே –
பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–3-4-6-
ஓன்று –
அல்லாத இசைகளில் காட்டிலும் பிறரை வசீகரிக்க வற்றாய் இருக்கையும் –
இதுக்கு வசீக்ர்தராகா விட்டால் வேறு கதி அற்று இருக்கையும் -பற்ற அத்விதீயம் -என்கிறது –
(‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தை யுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற் காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படா விட்டால் வேறு கதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.
கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப் பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ் நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.
மேலும், இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம் தெரி பாலை கைவல் பாண் மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினை யொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையை யுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலை யாழில் வாசிக்கப் பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப் பண்கள், பகற் பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.)
கர்ம ஜ்ஞானங்களால் சாத்தியம் அல்லாததை பக்தியால் சாதிக்கலாம் –
பக்தியால் சாத்தியம் அல்லாததை பிரபத்தியால் சாதிக்கலாம் –
அதுவும் பலியா விட்டால் வேறு கதி இல்லை இறே –
சேஷ பூதன் சேஷியை லபிக்கைக்கு சரமமான உபாயத்தை பற்றினால் போலே காணும்
காந்தன் அபிமத விஷயத்தை லபிக்கைக்கு சரம உபாயத்தை பற்றினபடி –
ஆராயா –
நுணுங்கினான் –
நம்மை நோக்கா –
பண்ணை நுணுங்கின வாறே தான் அழிந்தான் –
இனித் தப்பாது இவள் அழிகை -என்று என் முகத்தைப் பார்த்தான் –
வயிர உருக்கானது அரக்கை உருக்க சொல்ல வேணுமோ என்று இருந்தான் –
நம்முடைய பும்ஸ்வத்தை அழித்த இது
ம்ருது ஸ்வ பாவியான இவளுடைய ஸ்த்ரீத்வத்தை
நம்மை -என்று
ஆத்மனி பஹூ வசனம் –
நாணினார் போல் இறையே –
அல்பம் நாணினாப் போலே –
அவர் என் முகத்தைப் பார்த்த இடத்தில் -அவர் நுணுங்கின பண்ணிலே –
அகவாய் அழிந்து இருக்கச் செய்தே -பொரி புறம் தடவி -நான் அழிந்தமை அவருக்கு தெரியாதபடி
அவிக்ர்தையாய் இருந்தேன் –
அத்தைக் கண்டு லஜ்ஜை பிறந்தது –
சரம உபாயத்தை அனுஷ்டித்தோம் –
அது நிஷ் பலமாய்த்து என்று லஜ்ஜையிலே இழிந்தார் –
நேராக நாணினால் ஆகில் மேல் பண்ணும் பிரவர்த்தி கூடாது இறே
ஆகையால் நாணினார் போலே பாவித்தார் -என்கிறாள் –
அதாகிறது
லஜ்ஜித்தார் போலே பாவியா நேர் முகம் பார்க்க மாட்டாதே -சோலையைப் பார்ப்பது
பார்ஸ்வங்களைப் பார்ப்பது -ஆனார் -என்கிறாள் –
பிரபன்னர் தம்மை லபிக்கைக்கு –அழுவன் தொழுவனில் பட்ட பாடு எல்லாம்
அபிமத விஷயத்ததைக் குறித்து தான் பட்ட படி –
(அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந் தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-)
நயங்கள் பின்னும் செய்வளவில்-
பின்னும் நயங்கள் செய்வளவில் –
பின்னும் நீச பாசஷணங்களை பண்ணிலே இட்டு நுணுங்கும் அளவில் –
நயங்கள் பின்னும் –
நம்முடைய மகா விஸ்வாஸம் போலே யாய்த்து -அவனுடைய மகா விஸ்வாஸம் இருக்கிறபடி –
பண்ணின பிரபத்தி விபரீத பலம் ஆனாலும் -அத்தை ஒழிய கதி அற்று இருக்குமா போலே
தான் நுணுங்கின பண் பலித்தது இல்லை என்று விடாதே
பின்னையும் அத்தையே நுணுங்கினான் என்கை –
நயங்கள்
அவ் விசையிலே வைத்து நுணுங்கின
நீச பாஷணங்களுக்கு தொகை இல்லை -என்கிறாள்
(பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது,
நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்க வில்லை யென்று வாளா கிடந்திலர்;
‘அடியேன், குடியேன்‘ என்றாற் போலே சில நைச்ய பாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத் தொடங்கினார்;)
ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் -என்று கொண்டு
அவன் பண்ணின சாரஸ்யங்களை நீயும் கூட காணப் பெற்றது இல்லை காண் -என்கிறாள் –
செய்வளவில்
அத்தை நுணுங்கின அளவிலே –
என் மனமும் கண்ணும் ஓடி –
த்வஸ்த்தமாய் போய்த்து -என்கிறாள் –
பொரி புறம் தடவி அடக்கிக் கொண்டு இருந்தேன் –
என்னால் அடக்கப் போய்த்தில்லை –
கடல் உடைந்தால் போலே உடைந்தது -என்கிறாள் –
கண்ணால் கண்ட இடத்திலே இறே நெஞ்சு செல்வது –
அம் முறை குலைந்தது என்கிறாள் –
நெஞ்சும் தனியே போய்த்து –
கண்ணும் தனியே போய்த்து -என்கிறாள் –
ஹ்ர்ஷீகேசனை காணும் அளவு இறே இந்த்ரியங்களுக்கு இவனோடு சம்பந்தம்
கர்ம நிபந்தனம் ஆகையாலே ஔபாதிகம் இறே-
ஓடி –
ஒன்றை ஓன்று பின் பாராதே ஓடிற்று என்கிறாள் –
என்னையும் பாராதே ஓடிற்று -என்கிறாள் –
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை –
நிருபாதிக சம்பந்தியானவன் பக்கலிலே போய்ப் புக்கது -என்கிறாள் –
எம்பெருமான்
தன் மிடற்று ஓசையால் என்னை எழுதிக் கொண்டவன் –
திருவடிக் கீழ் அணைய –
அவன் நினைத்த அளவன்று காண் தான் அழிந்த படி -என்கிறாள்
என் முலையைத் தன் மார்விலே நெருக்கி தழுவிக் கொள்ளவாய்த்து அவன் நினைத்தது –
நான் அவன் காலைத் தலை மேலே வைத்துக் கொண்டேன் -என்கிறாள் –
அழக்கி இருக்குமா போலே இறே அழியும் போது அழியும் படி –
இப்பால் –
என்னை வந்து கிட்டுகைக்கு அவன் பண்ணின வியாபாரங்கள் சொன்னேன் –
கலந்த போது அவன் பண்ணின வியாபாரங்கள் ஒரு மகாபாரதத்துக்குப் போரும் –
அத்தை அடைவு கெடப் பேசுகைக்கு வேண்டும் தெளிவு இல்லாமையாலே பேச்சுக்கு நிலம் அன்று –
இக்கதை ஸ்ரீ ராமாயணத்தில் கேட்கலாகாதோ -என்கிறாள் –
உபோத்காதம் சொன்னேன் -பல ஸ்ருதியைக் கேட்கலாகாதோ -என்கிறாள் –
கை வளையும் இத்யாதி –
அகம் ஒடுக்குண்டு போனால் கண்டது ஏது காணாதது ஏது என்று கேட்பாரைப் போலே
அவன் வந்து கலந்த போது கலவியின் பலமாய்க் கொண்டு நீ காணாதது ஏது கண்டது ஏது என்னச் சொல்கிறாள்
த்ர்ஷ்டம் அத்ர்ஷ்டமாய் அத்ர்ஷ்டம் த்ர்ஷ்டம் ஆய்த்து –
கை வளையும் –
வளை கழல்வது விரஹத்தின் பின்பு அன்றோ -வளை போய்த்து என்பான் என் என்னில் –
சம்ஸ்லேஷ ரசத்தால் பூரித்து வெடித்துப் போய்த்து -என்கை –
மேகலையும் –
மேகலை கண்டிலேன் என்கை -அசதஸ்யம் அன்றோ என்னில் –
அத்தசையில் பரியட்டம் மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் -என்கை
அவன் பரியட்டம் தன் கையில் இருக்க கண்டாள் இத்தனை இறே –
காணேன் –
புக்கவிடம் அறிந்திலேன் –
இத்தால் -ஸ்வாபதேசத்தில் வந்தால் –
அஹங்கார மமகார நிவ்ருத்தியை சொல்லிற்றாய் இருக்கும் இறே –
ஸ்வரூப ஜ்ஞானம் போதில் விரோதியான அஹங்கார மமகாரங்கள்
போக வேளையில் வந்தால்
வஸ்த்ரம் என்றும் வளை என்றும் பேரிடக் கடவதாய் இருக்கும் –
நான் போக்தா என்று இருத்தல் –
எனக்கு போக்யம் என்று இருத்தல் -செய்யுமது ஸ்வரூபம் அன்று இறே –
போஜ்யமாய் இருக்கை இறே ஸ்வரூபம் –
(உபாய விரோதி, ப்ராப்ய விரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.
‘நான் போக்தாவன்று, எனக்குப் போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற
ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.)
காணேன் –
தன் விரோதியைக் கழித்துக் கொள்ளுதல்
அவனைப் பற்றிப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தல் – செய்தால் இறே விரோதி போனது அறிவது –
தான் போகத்தில் அந்ய பரையாய் இருக்க
அவன் போக்கப் போனவை ஆகையாலே கண்டிலேன் -என்கிறாள் –
கண்டேன் இத்யாதி –
இத் தலையில் உள்ளத்து ஒன்றும் காணாதது போலே
அத் தலையில் உள்ளதை நேராகக் கண்டேன் –
விரோதியை நேராக கண்டிலேன் –
போக்யதை குறைவற்று இருக்க கண்டேன் –
அணைத்த போது உறுத்தின திரு மகரக் குழைகளையும் –
அணைத்த திருக் கைகளையும் கண்டேன் –
கன மகரக் குழை -இரண்டும்
ஸ்த்திரமான திரு மகரக் குழை –
நித்ய அனுபாவ்யமாய் இருக்கை –
கலந்தவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்க –
நான்கு தோளும்-என்கிறது
தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்த படியைப் பற்ற –
இத் தலை அகப்பட்ட பின்பு தன்னை வெளி இட்ட படியாகவுமாம் –
தோள்களைக் கொண்டு கார்யம் பண்ணும் இடத்தே மறைக்க ஒண்ணாது இறே –
எவ்வளவு இத்யாதி –
அவிச்சின்னமாக அனுபவிக்க வேண்டும் என்று பார்த்து –
உம்முடைய அகம் எத்தனை தூரம் போரும் என்று கேட்ட எனக்கு –
எவ்வளவு உண்டு –
சற்றிடமாகில் கூடப் போம் என்று நினைத்து
எவ்வளவு உண்டு -என்கிறாள் போலே காணும் –
பருகிக் களித்தேன் -என்ற அநந்தரம் –
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்தால் போலே
இவனோடு சம்ஸ்லேஷித்து பெற்று வைத்து இவனுடைய வேண்டப்பாட்டைக் கண்டு இவனுக்குத் தகுதியான
பரிஜனத்தோடே அனுபவிக்க வேணும் என்னும் அபேஷை பிறந்தது –
(கடிவார் தண்ணந் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-)
(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.–2-3-10 )
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
என்றேற்கு –
நானே கிடீர் பிரிவை பிரசங்கித்தேன் -என்கிறாள் –
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே
திரு மணம் கொல்லைக்கும் திருவாலிக்கும் உண்டான பிரத்யாசத்தி
அங்குலி நிர்த்தேசம் பண்ணலாய் இருக்கையாலே
இது வன்றோ -என்று கையைக் காட்டினார் -என்கிறாள் –
அங்கன் அன்றியே –
நீ இருந்த இடம் அன்றோ -நமக்கு உத்தேச்யம் என்றார் -என்னவுமாம் –
சேஷி இருந்த இடமே சேஷ பூதனனுக்கு உத்தேஸ்யமாம் போலே
பிள்ளை வேட்டகத்தை ஆசைப்படும்
பெண் பிள்ளை புக்ககத்தை ஆசைப்படும் இறே –
அதவா
எவ்வளவு -இத்யாதி –
போகம் உன்மஸ்த கரசமான வாறே சாத்மிப்பித்து அனுபவிக்க வேணும் என்று பார்த்து
நாம் அகம் புக்கு வாரா நின்றோம் -என்று பிரிவை பிரசங்கிக்க –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு –எழில் ஆலி இது அன்றோ –என்றார் –
உன் காலே அன்றோ நமக்கு உத்தேஸ்யம் -என்று என் காலைக் காட்டிப் போந்தார் –என்கிறாள் –
தாமே
வருவாரும் தாமே
அனுபவிப்பாரும் தாமே -யாய்விட்டது என்கிறாள் –
(இத்தால் -அசித்வத் பாரதந்தர்யமே ஜீவாத்மாவின் ஸ்வரூபம் என்றதாயிற்று -)
(வந்த விடத்திலே கலந்து பிரிந்து போகை யன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று
நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணிக் களிக்க வேணுமென்னும் விருப்பாலும்,
சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும்,
தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும்
‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்;
இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய் விட்டார்.
அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானே யன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்;
அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப் போது அநுபவிக்கலாமாயிருந்ததே!
நானே கெடுத்துக் கொண்டேனே யென்கிறாள் போலும்.)
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply