திரு நெடும் தாண்டகம்–21–மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

மச் சித்தா மத் கத ப்ராணா போத யந்த பரஸ்பரம் -என்ற இத்தை
ஸூக்ரஹமாக  மூன்று பத்துக்கும்
வாக்யார்த்தமாக அருளிச் செய்வர் –பட்டர் –

(மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷–ஸ்ரீ கீதை -10.9৷৷)

(அதாவது, சித்தத்தை நமக்கென்றே பறிகொடுத்து அப்படியே நம்மைப்பிரிந்தால் தரிக்கமாட்டாமல் பிராணனையும்
நம்அதீனமாக்கி, தாம்தாம் அனுபவித்த நம்குணங்களை யெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம்செய்த திவ்யசேஷ்டிதங்களையும் எடுத்துப் பேசிக்கொண்டு ஆனந்திக்கிறார்கள்.)

மச் சித்தா
மத் ஏக சித்தாக –
விஷயாந்தரம் கலசாமே அவனையே ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகை –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஒரு மிதுனைத்தை விஷயீகரித்து இருக்கும் அதுவே வேஷம்
என்று அருளிச் செய்தார்கள் இறே ஆழ்வார்கள் –

(பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –-முதல் திருவந்தாதி -67-)

இத்தை ஒழிந்தவை எல்லாம் வியபிசாரமே -என்கை –
தேவதாந்தரங்களைப் பற்றிய ஜ்ஞானம் வ்யபிசாரம் –
பிரகிருதி பிராக்ருதங்களைப் பற்றிய ஜ்ஞானம் வியபிசாரம் –
இவ் விஷயம் தன்னை பிரிய பிரிதிபத்தி பண்ணும் ஜ்ஞானமும் வியபிசாரம் -என்கை –

மத் கத பிராணா —
ஆவியை அரங்க மாலை –என்கிறபடியே
தத் கத பிராணனை வுடையராய் இருக்கை –

(ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -திருக் குறும் தாண்டகம் -12-)

பிராணன் தத்கதையாய் இருக்கை யாவது –
அவனோடு கூடின போது சத்தை உண்டாய் -பிரிந்த போது –
மோஹம் கதையாய் இருக்கை –

(தானான தன்மையும் இல்லாமல் நாயகி பாசுரங்களாகவும் இல்லாமல் திருத்தாயார் பாசுரங்களாகவே இரண்டாம் பத்து)

போத யந்த பரஸ்பரம் –
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –என்று
கேட்டு தரித்தல்

கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று
சொல்லி தரித்தலாம்படியாய்
இருக்கை-

(வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே- பெரிய திருமொழி 9-4-5-)

(ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 
குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*        )

தன்னுடைய வ்ருத்த கதனம் பண்ணி தரித்தும்
தோழிமார் வார்த்தை கேட்டும் தரித்தும் -இறே இப் பத்து செல்கிறது –

முதல் பத்து -பராசர பராசர்யாதிகளான ரிஷிகளுடைய ரீதியாய் இருக்கும் –
ஜ்ஞானப் பிரதானராய் இறே அவர்கள் இருப்பது –

நடுவில் பத்துஆழ்வார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராய் இறே இவர்கள் இருப்பது –

மூன்றாம் பத்துபிராட்டிமார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
வ்ருத்த கீர்த்தன ரூபமாய் இறே இருக்கும்-

(சீதா பிராட்டி த்ரிஜடை திருவடியிடம் பேசுவது போல் இருக்குமே இப் பத்தும்)

இதுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில்
தான் ஹிதம் கேட்கும் அவஸ்தை அல்லாமையாலே
மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -என்று
கொண்டாடி கடக்க நின்றாள் திருத் தாயார் –

அவன் இவ் வாற்றாமை ஸ்வ க்ர்ஷியின் பலம் ஆகையாலே
அதிலே திருப்தனாய்  கடக்க நின்றான் –

இவள் தன் ஆற்றாமையாலே அவசன்னையாய் கிடந்தாள்  –

இவளுடைய தசையைக் கண்ட தோழி –
ஏவம் பஹூ விதாம் சிந்தாம் சிந்த யித்வா -என்று-
திருவடி விசாரித்தாப் போலேயும் இவளும்-ஹிதம் சொல்லுகை அசஹ்யமாய் இருந்தது –

(மஹா மதிம் ஸம் ஸ்ரவம் மதுரம் வாக்கியம் வைதேஹி மட்டும் கேட்க்கும் படி பலவாறு ஆராய்ந்து திருவடி பேசினார் அன்றோ)

இனி இவளை தரிப்பிக்கும் விரகு ஏதோ என்று பல முகங்களையும் சிந்தித்து –
வ்ருத்தமான சம்ஸ்லேஷத்தை ஸ்மரிப்பிக்கவே இவள் தரிக்குமோ என்று பார்த்து –
இயற்கையால் புணர்சியாகையாலே (காந்தர்வ விவாஹம் )நானும் சந்நிஹிதை இல்லாமையாலே –
அவன் வந்தபடி என் –
உன்னோடு கலந்தபடி என் –
பின்பு பிரிகிற போது -உனக்கு ஆஸ்வாசமாக சொல்லிப் போன வார்த்தை தான் என்ன
வ்ருத்த கீர்த்தனம் ஆகையால் தரித்து அவற்றை இவளுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது –

(மூன்றாம் சதகத்தில் )முதல் பாட்டில் –
அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து-
கைப்பட்ட வஸ்துவை கடலிலே பொகட்டாப் போலே –
அந்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே -தோழி -என்கிறாள் –

அவன் வந்தபடி என் என்று தோழி கேட்க -பிரதமத்திலே வந்தபடியைச் சொல்கிறாள் –

இப்பாட்டு –
சக்கரவர்த்தி திருமகன் தலை மகனாய்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் தலை மகளாக
ப்ரவர்த்தம் ஆகிறது –

—————————————————————————–

(இந்த ஸ்ரீ பட்டர் நிர்வாஹத்தை ஸ்ரீ பரகால தாஸர் -என்னும் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸிஷ்யர் ஏடு படுத்தி அருளினார் என்பர்)

கஜ்ஜௌகார சௌகந்த்ய வஹாளக நிகும்பனம்
விவ்ர்ணோதி குரோ ப்ராப்தம் கலிவித் வேஷி கிங்கர -(கலி கன்றி தாஸரான அடியேன் -இவரே அருளிச் செய்தது )

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்யும் அவதாரிகை –
நாயகனோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமல் நோவு படுகிறாள் ஒரு நாயகி
உபாயத்தாலே உபவனத்திலே பூக் கொய்ய என்று புறப்பட
நாயகனும் வேட்டைக்கு என்று வர
அங்கே உபாயம் பலித்து சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தமாய்
நாயகனும் போன அளவிலே இத்தைக் கடிப்பித்து தலைக் காவலாக நின்ற
தோழி வந்து கிட்டி அவன் செய்தபடி என் என்று கேட்க
அவளுக்கு பிரவர்த்தமான படியை நாயகி சொல்கிறாள் –
இப்பாட்டால் –

1-முதல் பத்து -ஆழ்வார் தாமான பாசுரம்-
இரண்டாம் பத்து -திருத் தாயார் பாசுரம்-

மூன்றாம் பத்து -பெண் பிள்ளை பாசுரம்

2-முதல் பத்து மச் சித்தா என்கிறது –
இரண்டாம் பத்து மத் கத பிராணா என்கிறது –

மூன்றாம்பத்து -போதயந்த பரஸ்பரம் -என்கிறது –

3-முதல் பத்தாலே திருமந்தார்த்தம் சொல்லிற்று –
இரண்டாம் பத்தாலே த்வயார்த்தம் –
மூன்றாம் பத்தாலே சரம ச்லோகார்த்தம் –

4-முதல் பத்தாலே –பக்தி 
இரண்டாம் பத்தாலே -பிரபத்தி 
மூன்றாம் பத்தாலே –புருஷாகாரம்

5-முதல் பத்தாலே –பிரண வார்த்தம்  
இரண்டாம் பத்தாலே –நமஸ் சப்தார்த்தம் –
மூன்றாம் பத்தாலே –நாராயண சப்தார்த்தம்-

6-முதல் பத்திலே –அகாரார்தம்-
இரண்டாம்பத்திலே – உகாரார்தம்-
மூன்றாம் பத்திலே –மகாரார்தம் –

7-முதல் பத்தாலே –அதர்சனே தர்சன மாத்ர காமா -என்னும் அர்த்தம்
இரண்டாம் பத்தாலே –த்ரஷ்டா பரிஷ்வங்க ரசைக லோலா -என்னும் அர்த்தம்
மூன்றாம் பத்தாலே –ஆலிங்கதாயம் புநராய தாஷ்யாம் ஆசாஸ் மஹே விக்ரஹ யோர பேதம் –
என்னும் அர்த்தம் சொல்லிற்று –

முதல் பத்து ஆழ்வார் பாசுரமான படி என் என்னில் –
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என்னும் பாசுரம் ஆகையாலே

இரண்டாம் பத்து –திருத்தாயார் பாசுரமான படி எங்கனே என்னில் –
என் குடங்கால் இருக்க கில்லாள்
-என்றும்-
பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள்
-என்றும் சொல்லுகையாலே –

மூன்றாம் பத்து பெண் பிள்ளை பாசுரமானபடி என் என்னில் –என் முன்னே நின்றார் -என்றும் –
தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்
-என்றும்-
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
-என்றும் -சொல்லுகையாலே

மச் சித்தா -என்றபடி என் என்னில் –
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது -என்றும்
அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை
மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல்
வாழலாம் மட நெஞ்சமே -என்றும் சொல்லுகையாலே

மத் கத பிராணா-என்றபடி என் என்னில் –
நெஞ்சுருகி கண் பணிப்ப நிற்கும் சோரும் -என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-என்றும் சொல்லுகையாலே

போத யந்த பரஸ்பரம் -என்றபடி என் என்னில்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி -என்றும்
வரை வுருவில் மா களிற்றைத் தோழி என் தன பொன் இலங்கு
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும் சொல்லுகையாலே –

திருமந்த்ரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
என்னுருவில் நின்ற வெந்தை -என்று சொல்லுகையாலே பிரணாவார்த்தம் சொல்லிற்று-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்று சொல்லுகையாலே நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்று –
மின்னுருவாய் முன்னுருவில் தொடங்கி அனலுரு வறுதியாகநாராயண சப்தார்த்தம் சொல்லிற்று –

த்வயார்த்தம் சொன்னபடி என் என்னில் –
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்றும் –
திருமாலைப் பாடக் கேட்டு -என்றும் –ஸ்ரீ மத் பதார்த்தம் சொல்லுகையாலும் –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் – என்று தொடங்கி-
துன்று குழல் கரு நிறத்து என் துணையே –என்கிற அளவாக நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –

அடி இணையும் கமலவண்ணம் –என்று சரண சப்தார்தம் சொல்லுகையாலும் –

இது செய்தார் -என்றும்
பேர் பாடி -என்றும் சரண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்றும்
நீராடப் போனாள் -என்றும் பிரபத்யே சப்தார்த்தம் சொல்லுகையாலும்

பாவை மாயன் மொய் யகத்து இருப்பாள் -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்றும்
உத்தர கண்டத்தில்
ஸ்ரீ மச் சப்தார்த்தம் சொல்லுகையாலும்

பாரை யுண்டு -இத்யாதியாலே உத்தர கண்டத்தில் நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும்

பேர்பாடி தண் குடந்தை நகரும் பாடி -என்று நமஸ் சப்தார்த்தம் சொல்லுகையாலும்-

சரம ஸ்லோகாரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
கை வளையும் மேகலையும் காணேன் -என்றும்
இரு கையில் சங்கு இவை நில்லா -என்றும் -சொல்லுகையாலே
சர்வ தர்ம பரித்யஜ்ய -த்தின் அர்த்தம் சொல்லுகையாலும்

கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்-
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி இங்கே வந்து -என்றும்
கையும் சங்குமாய் கொண்டு சந்நிஹிதம் ஆகையாலே
மாம் ஏகம் பதார்த்தம் சொல்லுகையாலும்

என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும்
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேன் –என்றும்-
சரணம் -வ்ரஜ -என்கிற பதங்களின் உக்தமான அர்த்தத்தை அனுஷ்டான பர்யந்தமாக சொல்லுகையாலும்

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே -என்றும்
அஹம் சப்தார்த்தம் சொல்லுகையாலும்

அருளாய் -என்கிற இடத்தில் என்னை அருளாய் என்ன வேண்டுகையாலும்
த்வா -என்கிற பதார்த்தம் சொல்லுகையாலும்

தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற பதங்களின் அர்த்தம் சொல்லுகையாலும்

அருளாய் -என்கிற இத்தால் மாஸூச -வினர்த்தம் சொல்லுகையாலும்

பக்தி சொன்னபடி –
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -என்றும் –
காரணந்து த்யேய
-என்றும்
தஜ்ஜலா நீதி சாந்த உபாசீத -என்றும்
காரண வஸ்து உபாஸ்யம் என்னும் இடம் சொல்லுகையாலும்

மந்தரத்தால் என்றும் வாழ்த்தியேல் -என்றும்
த்ருவ அனு ஸ்ம்ருதி
 சொல்லுகையாலும் –

பிரபத்தி சொன்னபடி –
அணி யரங்கம் ஆடுதுமோ தோழி -என்று
நாயக சம்ஸ்லேஷத்துக்கு உபாயம் சிந்தித்தாலோ என்று தோழியை கேட்கையாலும்

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் – என்று சிந்தித்த உபாயாத்தை அனுஷ்டிக்கையாலும்–
புருஷகாரம்
சொன்னபடி

பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து புலவி தந்து –
என்று ததீயர் புருஷகாரமாக சம்ஸ்லேஷித்தபடி சொல்லுகையாலே –பிரணாவார்த்தம் சொன்னபடி –

என்னுருவில் நின்ற வெந்தை -என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்று
சேஷி சேஷ சீஷத்வம் மூன்றும் ஓர் அஷரமாய் நின்ற படியும் –
அகார உகார மகார இதி -என்று அஷர த்ரயமும் ஒன்றானபடி சொல்லுகையாலே –
நமஸ் சப்தார்தம் சொன்னபடி –

என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்
என் சிறகின் கீழே அடங்கா பெண் பெற்றேன் -என்றும் –
இப்புடைகளிலே சொல்லுகையாலே மமகார நிவர்த்தி சொல்லிற்று –

நாராயண சப்தார்த்தம் சொன்ன படி –
வண்ண -என்கிற பாட்டும்-
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று
இப் புடைகளிலே ஆயுத ஆபரண விக்ரஹம் நாராயண சப்தார்த்தமான
பரத்வ சௌலப்யாதிகள்-சொல்லுகையாலே-அகார்தார்தம் சொன்னபடி –

வற்புடைய -என்கிற பாட்டில் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
அவ ரஷணே-என்கிற தாத்வர்த்தமான ரஷகத்வம் சொல்லுகையாலே-உகார்த்தம் சொன்னபடி –

நெஞ்சுருகி -என்கிற பாட்டாலே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் ஏக காந்தத்வம் சொல்லுகையாலே மகாரார்த்தம் சொன்னபடி –

அவர் நிலைமை கண்டும் -என்றும்
தேவர் என்று அஞ்சினோம் -என்றும்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் -இத்யாதிகளாலே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள்   -சொல்லுகையாலே

அதர்சனே தர்சன மாத்திர காமா -என்கிறபடி என் என்னில்
எங்குற்றாய் எம்பெருமான் -என்று அவனை காண வேண்டும் என்று ஆசைப் படுகையாலே

த்ர்ஷ்டே பரிஷ்வங்கர சைகலோலா -என்றபடி என் என்னில் –
முற்றாரா வன முலையாள் -என்று துடங்கி நாச்சியார் திரு மார்பிலே அணைத்துக் கொண்டு இருக்கிறது கண்டு
தானும் அப்படி இருக்க வேணும் என்று அறுதி இட்டாள் என்கையாலே –

ஆஸாஸ் மஹே விக்ரஹே யோர பேதம் – என்கிறபடி என் என்னில் –
யான் காண்பான் கண்ட போது  புள்ளூரும் கள்வாநீ போகல் என்பன்-என்று –
என்னை விட்டு நீ போகாதே கொள் என்று அபேஷிக்கையாலே –

8-முதல் பத்திலேஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொன்ன படி –
முதல் பாட்டு துடங்கி ஸ்பஷ்டம் –

இரண்டாம் பத்தில்விஸ்லேஷித்து கலங்கின படி –
பட்டுடுக்கும் என்று துடங்கி -பெண் பிள்ளையினுடைய கிலேசம் சொன்ன -தாயார் பாசுரத்தாலே கண்டு கொள்வது –

மூன்றாம் பத்தில் கிலேசம் தீர்ந்து சம்ஸ்லேஷ வியாபாரம் பண்ணினபடி –

(“அதர்சநே தர்சநமாத்ரகாமா; த்ருஷ்ட்வா டரிஷ்வங்கரஸைகலோலா;,
ஆலிங்கிதாயாம் புநராயதாக்ஷயாம் ஆசாஸதே விக்ரஹயோரபேதம்“
(கண்ணாற் காணாதளவில் ஒருதடவை கண்ணாற் காணப்பெற்றால் அமையும் என்று காதலிப்பர்கள்;
அப்படியே காணப்பெற்றுவிட்டால் ஒருகால் அணைத்துக் கொள்ளவேணும் என்று காமுறுவர்;
அப்படியே அணைத்துக்கொள்ளவும் பெற்றால் ‘இரண்டு சரீரமாக இருப்பதேன்?
இரண்டுடலும் ஓருடலாக ஒற்றுமைப்பட்டாலாகாதோ? என்று அபேதத்தை விரும்பிப் போருவர்கள்.) என்றொரு ஸுபாஷிதமுண்டு.
இதுவும் அடைவே மூன்று பத்துக்கும் வாக்கியார்த்தமாக அமையும். எங்ஙனேயென்னில்,
முதற்பத்தில் “எங்குற்ற யெம்பெருமானுன்னை நாடி ஏழையேனிங்ஙனமே யுழிதருகேனே“ என்று
அவனைக் காணவேணுமென்னுமாசை கிளர்ந்திருக்கின்றமை தோற்றச் சொல்லுகையாலே
* அதர்சநே தர்சநமாத்ர காமா; * என்றபடியாகிறது.
இரண்டாம் பத்தில் “முற்றாராவனமுலையாள்பாவை, மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாளஃதுங்கண்டு மற்றாள்“ என்று
நாச்சியாரைப்போலே தானுந் திருமார்பிலே அணைய வாசைப்பட்டமை தோற்றச் சொல்லுகையாலே
* த்ருஷ்ட்வா பரிஷ்வங்கரஸைகலோலா; * என்றபடியாகிறது.
இனி‘ இப்பத்தில் “கள்ளூரும் பைந்துழாய்மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது,
புள்ளூரும்கள்வா! நீ போகாமைவல்லேனாய்ப் புலவியெய்தி என்னில் அங்கமெல்லாம் வந்தின்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே“ என்றும் சொல்லுகையாலே * ஆசாஸதே விக்ரஹயோரபேதம் * என்றபடியாகிறது.)

——–

மை வண்ண நறும் குஞ்சி துடங்கி –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு —எழில் ஆலி என்றார் தாமே –என்றும்
புனல் அரங்கமூர் என்று போயினர் -என்றும் இத்யாதிகளாலே சொல்லுகையாலே –
காந்தர்வேண விவா ஹேன பாஹ்வோ ராஜர்ஷி கன்யகா
ஸ்ருயந்தே பரிணிதாஸ்தா பித்ர்ப்ச்சாபி நந்திதா -என்கிறபடியே
உபய அனுராக நிபந்தனமாக நாயக நாயகிகளுக்கு சம்ஸ்லேஷம் பிரவர்த்தமாக

இத்தைக் கேட்ட தாய் மார்
நங்காய் நம் குடிக்கு இது நன்மையோ என்ன -என்றும்
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் -என்றும்
அன்னை என்னோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றும் பயப்பட்டு –
நாயகன் பக்கல் செல்லாது ஒழிய

அவனும் சாசங்கனாய் –
இவள் பக்கல் நேர் -கொடு நேரே வரக் கூசி -இவள் அபிப்ராயம் அறிய வேணும் என்று
ச்வயந்தூத்யம் என்றும் பரதூத்யம் என்றும் இரண்டாகையாலே –
முதல் கலவி கலந்த படியாலே பர தூத்ய அபேஷை இல்லை –

ச்வயந்தௌத்யம் பண்ணத் தேடி –
குசூமாந்யவசின்வந்தி சசார மதி ரேஷண -என்றும்(பூ பறிக்க போனவள் -பொன்னாலான மாய மான் போல் மான் விழியால் நோக்கி)
சத்யம் புரீபரி சரெபி – (இதுவோ காடு -கேட்டுக்கொண்டே போக பெருமாளே கண் கலங்கி )என்றும் ஊரைச் சூழ்ந்த உபவனத்தே புறப்பட்டு
இவள் பூ கொய்யப் போகிறாள் என்று கேட்டு –

தத ஸ்தவ வநதம் சாப மாதா யாத்ம விபூஷணம்
ஆபத் த்யச கலா பௌ த்வௌ ஜகா மோதக்ர விக்கிரம – என்று

(ஆரண்ய -அணிகலனான வளைந்த வில்லை ஏந்தி -அம்பறா துணியைக் கட்டிக்கொண்டு சென்றான் )

வேட்டை வித்யாதரனாக எடுத்துக் கட்டின மயிரும்
பிடரியிலே தழைந்தலைகிற குழலும் -இறுக்கின சாணமும் -கட்டின கச்சும்-

முன்னே உடுத்த உடைத் தோலும் -இடக்கையிலே கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும் -பெரு விரலிலே சாடின சரடும்
இடக்கையிலே நடுக்கொடத்தப் பிடித்த வில்லும் -வலக்கையில் தெரிந்து பெருக்கின வம்பும் –
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்க் கொண்டு – –

வேட்டைக்கு என்று புறப்பட்டு –இவள் பூ கொய்கிற உபவனத்திலே செல்ல

அவளும்-
காமஸ் ச அஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே புருஷனில் அதிசயித்த ஆசை உடையவள் ஆகையாலே
எங்கனயோ அன்னைமீர்காள் -என்கிற பாட்டை அனுசந்தித்து –
செல்கின்றது என் நெஞ்சமே -என்றும்
அன்னை என் செய்கிலென் ஊர் என் செய்கிலென் விடுமினோ –
என்று கலக்கம் அற்று மன்றாடி –

(எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-)

(அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-)

அணி அரங்கம் ஆடுதுமோ தோழி -என்று தோழியைப் பார்த்து
சுனையாடல் என்றும் –
புனல் ஆடல்
என்றும் -சம்போகத்துக்கு பேராகையாலே –
பயலான பேச்சாலே கேட்க

அவளும் இவள் அபிப்ராயஜ்ஞள் ஆகையாலே
பூ கொய்ய என்று கொண்டு போக விட்ட தாய் மாரும் ஊரவரும்
வடும்பிடுகிறார் களோ என்று தலைக் காவலாக வழியிலே போய் நிற்க
போக உபோத்காதமாக உபய அபிப்ராய ஜ்ஞ்ஞானம் பிறந்து
சம்ஸ்லேஷமும் பிரவர்த்தமாய்
புனல் அரங்கம் ஊரென்று போயினர் – என்று நாயகனும் போய்
இவளும் மீண்டு -உயிர் தோழியானவள் செய்த படி என் என்று கேட்க –
பிறந்த வ்ருத்தாந்தத்தை  தோழிக்கு சொல்கிறாள்–இப்பாட்டில்

———————————————————————————————-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

பதவுரை

மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ-கறுத்த நிறமுடைத்தாய் மணம் மிக்கதாய்
அலகல காயிருந்துள்ள திருக் குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு-இருபுறத்திலும்
மகரம் சேர் குழை–மகர குண்டலங்கள்
இலங்கி ஆட-அசைந்து விளங்கவும்
எய் வண்ணம் வெம் சிலையே துணை ஆ–ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்விய வில்லையே துணையாகக் கொண்டு
இங்கே-இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்-(தாமும் இளைய பெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
(அவருடைய)
கை-திருக் கைகள்
தாமரை வண்ணம்-செந்தாமரை ப் பூப் போலு மழகுடையன;
வாய்–திருப் பவளமும்
கமலம் போலும்–தாமரை யொக்கும்;
கண் இணையும்–திருக் கண்களும்
அரவிந்தம்–அத் தாமரையே
அடியும்-திருவடிகளும்
அஃதே-அந்நத் தாமரையே;
அவ் வண்ணத்தவர்-அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை-நிலைமையை
கண்டும்-கண்டு வைத்தும்
தோழீ-தோழியே!
அவரை-அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்- பர தேவதை யென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!

கறுத்த நிறத்தை யுடைத்தாய்
பரிமளம் மிக்கு இருப்பதாய்
அலகு அலகாய் இருந்துள்ள திருக் குழல் கற்றையானது பின்னே அலைய
இரு புறத்திலும் மகர குண்டலங்கள் அணிந்த திருச் செவிகள் பிரகாசித்துக் கொண்டு அசைந்து வர
எய்கையையே ஸ்வபாவமாக யுடைய வெவ்விய தனுஸ்ஸையே துணையாகக் கொண்டு
இந்த திரு மணம் கொல்லையிலே
தாமும் இளைய பெருமாளுமாய் -இருவராய் வந்தார்
வரவை எதிர்பார்த்து இருந்த என் முன்னே வந்து நின்றார்
அவருடைய திருக் கைகள் தாமரை புஷபத்தின் நிறம்
திருப் பவளமும் தாமரையை ஒக்கும்
திருக் கண்களும் தாமரை மலரின் நிறம்
திருவடிகளும் மலரின் நிறமே
அப்படிப்பட்ட திரு நிறத்தை யுடையரான அவர் ஸ்திதியைக் கண்டு வைத்தும்
பாங்கியே
அவரை பர தேவதை என்று பயப்பட்டோமே –

————————————————————————————-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய்–வந்தார் காண் –

வந்த போது இருந்த வமளி காண் –
ஸ்வாபாவிகமான வடிவு வழகும்
வை சேஷிகமான ஒப்பனை அழகும் –
காவல் துடிப்புமான
அப்பசும் கூட்டம் இருந்தபடி காண் –என்கிறாள் –

அன்றிக்கே
அவன் சீலத்தையும் அழகையும் கண்டு வைத்து
கைப் பட்ட பொருளை கடலிலே கவிழ்பாரைப் போலே
அன்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே தோழி
என்கிறாள் -ஆகவுமாம் –

மை வண்ணம் –
காளமேக நிபாஸ்யாமமான வடிவை
ஸ்படிகம் ஆக்கும்படியான திருக் குழலின் கறுப்பு இருந்தபடி –
திரு மேனிக்கு பரபாகமாய் இருக்கை –

நறும் குஞ்சி
நறுமை -பரிமளம்
அதி பரிமளிதமான குழல் –

தாபத் த்ரய துரரோடு விரஹதாப துரரோடு வாசி அற சர்வருக்கும் ஸ்ரமஹரமாம் படி காண் –
திருக் குழலின் பரிமளம் மிகுந்தபடி –

நரகே பஸ்யாம நஸ்து யமனே பரிபாஷித
கிம் த்வ்யா ந அர்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன
 (நரஸிம்ஹ புராணம் ஸ்லோகம் )–என்னக் கடவது இறே –

(கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-)

த்ருஷ்டி  பிரியமாய் இருக்கை அன்றிக்கே
நெஞ்சிலே ஸ்ரமம் எல்லாம் போம் படி காண் திருக் குழலின் பரிமளம் மிகுந்தபடி

குஞ்சி
திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே
அகலகலாக பிரிந்தது என்னலாம் படி காண்
திருக் குழல் தனித் தனியே சுருண்டு இருந்த படி –

கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளினுள்
கொண்ட நீல நன்னூல் தழை கொல் – என்று ஓர் இருளை சிஷித்து அது சத்ர்சம் இல்லாமையாலே –
அன்று மாயன் குழல் என்றார் இறே நம் ஆழ்வார் –
அஸ்திரமான இருள் சதைக ரூபமாய் இருந்துள்ள குழலுக்கு ச தர்சமாக  மாட்டாதே இறே
த்ருஷ்டி பிரியமாய் மநோஹரமாய் நித்ய அனுபாவ்யமான குழல் என்கை –

(கொள் கின்ற கோள் இரு ளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள் கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே–7-7-9-)

குழல் பின் தாழ –
ஸ்நிக்த்த நீல குடில குந்தளமான திருக் குழல் கற்றை பின்னே அலைய –

(கேசவ -பட்டர் -பிரசஸ்த- ஸ்நிக்தா -நீல -குடில)

பின் தாழ –
நீ பின்னே கண்டபடி என் என்ன –
பெருக்காற்றை எதிர் செறிக்க மாட்டாதாப் போலே
என்னுடைய சௌந்தர்ய அதரங்களைக் கண்டு நேர் முகம்
பார்க்க மாட்டாமையாலே முகத்தை திரிய வைத்தார் –
அப்போது கண்டேன் –என்கிறாள் –

முன்பு லலாட பர்யந்தமாய்ப் பின்பு அம்சவலம்பியாய் இறே திருக் குழல் இருப்பது –
சர்வ சக்திக்கும் எதிர் செறிக்க ஒண்ணாத படி இறே இவள் உடைய போக்யதை இருப்பது –

(ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||–ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் 35

ஸ்ரீ எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும்,
கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும்,
புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் …

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||-ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் 34

ஸ்ரீ எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின்
வரை வந்து தொங்குவதாலும், அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும்
அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் )

மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட –
அக் குழலின் இருட்சியாலே கண்கள் இருண்டு திரு முகம் தோற்றாது இருக்க
அத் தசையில் இரண்டு சந்தரன் உதித்தால் போலே காண் திரு மகரக் குழைகள் இருந்தபடி –

திருவடி பிராட்டி தேடுகிற தசையில் சந்த்ரோதயம் உதவினாப் போலே
திருக் குழலாலே இருண்ட திரு முகத்துக்கு இவை பிரகாசகமாக இருந்த படி –

இலங்கி –
அந்யோந்யம் பர பாகத்தாலே வந்த விளக்கத்தைச் சொல்கிறது –
திரு மகர குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமாக இருக்கிறதோ-
திருக் குழல் தான் திரு மகரக் குழைகளுக்கு ஆபரணமாக இருக்கிறதோ-என்று தெரியாத படியான
பர பாக ரசத்தை நீ காணப் பெற்றிலை காண் -என்கிறாள் –

(துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-)

ஆட
ஒரு கடல் அசைந்து வந்தால் போலே காண்-
வருகிற போது இரண்டு அருகும் திரு மகரக் குழைகள் அசைய வந்த படி –

அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகள் உண்டாகக் கடவதே -என்று
பட்டர் அருளிச் செய்வர் –

அங்கன் அன்றிக்கே
முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவது எத்தனை செய்தான்
இவள் ஸ்த்ரீத்வத்தை அழிக்க என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

கூட வந்தார் ஆர் என்ன –
எய் வண்ண வெஞ்சிலையே துணையா –
கையும் வில்லும் துணையாக வந்தார் -என்கிறாள்

எய்கையே ஸ்வபாவமான வெஞ்சிலை –
எய்கை வம்ச தர்மமாகவே -(இஷ்வாகு குல தர்மம் -) இருக்கிறபடி –
முன் நம்மை சேர விட்டது வில்லே இறே என்று வில்லைத் துணையாக கொண்டு வந்தார் –
வில் இறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தவர் இறே –

ஒரு கா புருஷன் எடுக்கிலும் அவனை புருஷோத்தமன் ஆக்க வற்றாயும்
புருஷோத்தமனுக்கு அல்லது எடுக்க ஒண்ணாது இருக்கையும் -(சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை )
ஜமதக்னிக்கு பிறந்த பரசுராம ஆழ்வானுக்கும் புருஷோத்தமனாய் எடுக்க வேண்டிற்று இறே –
வெஞ்சிலையே- எடுத்து எய்யுமவனுடைய மனஸ் சஹகாரமும் வேண்டாத வில்லு –

வெஞ்சிலை –
கையில் வில்லைக் கண்டவாறே எதிரிகள் குடல் குழம்பும்படி இருக்கை-
‘கையும் வில்லுமாய் இருக்கும் இருப்பைக் கண்டால் அனுகூலர் வாழும்படியாய் –
பிரதிகூலர் மண் உண்ணும்படியாய் இறே இருப்பது –

‘கையில் வில்லும் தாமுமாய் வந்த ஆண் பிள்ளைத் தனம் நீ காணப் பெற்றிலை காண் –
வீர பத்னி அகப்படுவள் வீரத்திலே இறே –
பாஹுவ ஹ்ருஷ்ட்வா வைதேஹி பர்த்தாரம் தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் பரிஷஸ்வஜே-(ஆரண்ய ) -என்னக்  கடவது இறே –

சிலையே துணையா –
1-சம்ஸ்லேஷிக்கைக்கு ஏகாந்தமாம்படி வந்தார் –
கண்டார்க்கு இங்கே வந்தது என் என்றால் -வேட்டையாட வந்தோம் என்றால் உத்தரம் இல்லாதபடி
தத் அனுகூலமான வில்லோடு இறே வந்தது
அவளும் புஷ்பாபசயத்தை வ்யாஜீ கரித்து இறே வந்தது-

சிலையே துணையா –
2-இவ்விடத்திலே பிரி நிலையாலே
கொங்கு உண்ட வண்டே கரியாக வந்தான் -என்னுமா போலே போகத்துக்கு வருகிறவர்
ஊரைத் திரட்டி கொண்டு வாராதே வில்லே துணையாக குறி வுடைமையோடே வந்தார் காண்-

சிலையே துணையா
3-ஆயுத சாலை போலே சொட்டை சரிகை தொடக்கமான கருவிகள் எல்லாம் கட்டிச் சுமவாதே
வில் ஒன்றையே
கொண்டு வந்தார் காண் –

சிலையே துணையா-4-போகத்துக்கு வருகிறவர் ஸ்ரக் சந்தன தாம்பூலாதிகள் போன்ற போக உபகரணங்கள் உடன் வரும் இத்தனை போக்கி
வில்லும் தான் என் என்னில் –
பூர்வ சம்ஸ்லேஷத்துக்கு தாய்மார் ஆகிற விடறு கட்டைகளாலே சில விரோதம் பிறந்து இன்னம் அடி தொடங்கி
ஹ்ருதய  பரீஷை பண்ண வேண்டுகையாலே
அதுவும் ஸ்வயம் தௌத்யத்தில் இழிந்து அதுக்கு அவகாசம் பாஹ்ய உத்யோனத்தில்
நானும் தோழி மாறும் பூ கொய்கிற இடத்தில் தாமும் வேட்டைக்கு என்று ஏகாந்தமாக வர வேண்டி அதுக்கு
வில் அபேஷிதமாகையாலே கொடு வந்தார் காண் —

இங்கே –
1-தான் நிதி எடுத்த பிரதேசம் இது காண் -என்கிறாள் –
கலந்து பிரிந்த பின்னும் மண்ணை மோந்து -கிடக்கலாம்படி காண் –
இலச்சினைப் பட நடந்த அடிச்சுவடு இருந்தபடி -(ஸம்ஸ்லேஷம் ஆகிய புதையல் கிடைத்த இடம் )

இங்கே –
2-என்று திரு மணம் கொல்லையைக் காட்டுகிறாள் –

இருவராய் வந்தார் –
1–சிலையே துணையா -என்று வைத்து –
இருவராய் வந்தார்
-என்கை -அசங்கதம் அன்றோ என்னில்
கையில் வில்லோபாதி இளைய பெருமாளும் நிரூபக பூதராய் இருக்கையால் சொல்லுகிறது –
ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே-

(லஷ்மணஸ்ய வீர்ய வான் -நித்யம் பிராணோ–இத்யாதி-சூர்ப்பணகை ராவணன் இடம் சொன்னவை
10 சொற்கள் -நிழலும் அடி தாறும் போல் -அன்பு கொண்டவன்- பக்தன் –

இவருக்கு குற்றம் செய்தவரைப் பொறுக்காதவன் -வலக்கரம் -வெளியில் நடக்கும் எப்போதும் உயிர் போல் இருப்பவன்
ஐந்துமே ராமனை இட்டே இவனைச் சொன்னவாறு
வெல்ல முடியாதவன்- வெற்றியை அடைபவன் -தடை அற்ற நடையை யுடையவன் -அறிவாளி- பலம் மிக்கவன் -வீரன்)

இருவராய் வந்தார் -என்று பிரியச் சொல்லுவான் என் என்னில் –
2-அணைக்கும் தோள் உடன் வந்தார் என்னவும் காட்டில் பிரியச் சொல்லிற்று ஆகாது இறே –
சம்ஸ்லேஷத்துக்கு வருகிறவன் படுக்கையோடு வருகிறது மிகை அன்றே –

இருவராய் வந்ததார் —
3–தேவ மனுஷ்யம் கலசி வந்தார் –
சேஷியாய் வந்தார் அல்லர் -சேஷ பூதராய் வந்தார் அல்லர் -சந்த்ர ஸூர்ய நேத்ர -இரு தன்மைகள் உண்டே

4-உபய ஆகாரத்தாலே வந்தார் என்னவுமாம் –
தம்முடைய காலை என் தலை மேலே வைக்கக் கடவதாக வந்து
என் காலை தம் தலை மேலே வைத்துக் கொண்டார் -என்கிறாள் –

பாணிக் க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறை கெட பரிமாறுகையும் இறே இருப்பது –
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும்
ந சாஸ்திரம் நைவ ச க்ரமம் -ஆகவும் வேணும் இறே –

(கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்– ஸப்த பதி -அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன்)

அதவா
சப்தத்தை நியமித்து இருவராக வந்தார் என்னவுமாம்
5-தாமும் நாமுமே யாம்படியாக வந்தார் -என்கை-(இருவர் ஆவதற்காகவே தனியாக வந்தார் )

வந்தார் –
தாம் இருந்த இடத்திலே நாம் மடல் எடுத்துச் சென்று கிட்ட வேண்டும்படியாய் இருக்க
நாம் இருந்த இடத்திலே காண் தான் வந்தது -என்கிறாள்

அங்கன் இன்றியிலும்
கால் நடையிலும் அவர் நடை அழகை நீ காணப் பெற்றிலை காண் என்னவுமாம் –
நடைச் சக்கரவத்து பிடிக்க வேண்டும்படி காண் நடந்த நடை இருந்தபடி –

வந்தார்-என் முன்னே நின்றார் –
1-பெரிய த்வரை உடன் வந்தவர் -கடல் கண்டு தேங்கின திருவடியைப் போலே
என்னைக் கண்டு மேலிட மாட்டாதே தேங்கி என் முன்னே நின்றார் –

அன்றியே
2-தாம் முகம் பாப்பது எப்போதோ என்று -நான் நிற்க பிராப்தமாய் இருக்க –
இவள் நம்மை நேரே முகம் பாக்க வல்லளோ என்று பாரித்துக் கொண்டு நின்றான் காண் -என்கிறாள் –

நின்றார் –
3-கால் வாங்க மாட்டாதே நின்றார்-

4-ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்றார் என்னுதல்

5-கந்தவ்ய பூமி இல்லாமையாலே நின்றார்-என்னுதல் –

கை வண்ணம் இத்யாதி –
அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் –
பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது-
தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-

கை வண்ணம் தாமரை —
1-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –

2-வாய் கமலம் போலும் –
கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற –
இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று
இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –

3-கண் இணையும் அரவிந்தம்-
இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால்
குறையும் தலைக் கட்டும் கண் –

இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி
குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி
ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு –
அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –

4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று –
கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
-என்று கீழ் சொன்னால் போலே
இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே
அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –

அடியும் தாமரை -என்னாதே-
அடியும் அக்தே
-என்றது
உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

(கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்
வாக்ய பேதம் பண்ணுதலும்-அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.)

வந்த வரவை கேட்டாப் போலே சாஷாத் கரித்தாப் போலே இருந்ததீ -நீ பேசினபடி என்று தோழி சொல்ல
இது என் எனபது –
அவ் வண்ணத்தவர்
-என்னும் இத்தனை என்கிறாள் –
பசக்கி மோந்தேன் இத்தனை ஒழிய வந்த பிரகாரத்தையும் அவரையும் நம்மால் பேசப் போமோ-

நீ கேட்கையால் உனக்கு ஒரு த்ருஷ்டாந்தம் இட்டுச் சொன்னேன் இத்தனை ஒழிய
ஒரு த்ருஷ்டாந்தம் இட்டு சொல்லலாம்படி அன்று காண் அவர் வடிவு இருந்தபடி
அப்பிரகாரத்தை உடையவர் என்னும் இத்தனை காண் –

நிலைமை கண்டும்
1-நத்யஜேயம் -என்கிறபடி -என்னைப் பெற்றுத் தரித்தல்-
பெறா விடில் முடிதல் செய்யும்படியான ஸ்வ பாவத்தை கண்டு வைத்தும் –

அவர் நிலைமை
2-அவர் வடிவு அழகு இருந்தபடி இது
அவர் சீலம் இருந்தபடி இது
வ்யவசாயம் இருந்தபடி இது
இத்தனையும் கண்டு வைத்தும் –

கண்டும் –
1-முன்பு உன் வாயாலே கேட்டுப் போந்தேன் இத்தனை இறே
கேட்டாப் போலே கண்டு வைத்தும் –

கண்டும் –
2-நெடுநாள் சாதனானுஷ்டானம் பண்ணிக் காண வேண்டும் விஷயம்
அனாயாசேன கண்ணுக்கு விஷயமாய் இருக்கச் செய்தே -கிடாய் நழுவ விட்டது –

தோழீ-
அவர் வடிவு அழகு இருந்தபடியும்
வந்த வரவு இருந்தபடியும்
நின்ற நிலை இருந்தபடியும்
நீ காணப் பெற்றிலை காண் -என்கிறாள் –

அவரை –
நம்மை ஒழிய செல்லாதபடி நின்றவரை

நாம்
அவரை ஒழிந்த போது –அசந்நேவ -என்னும் படி இருக்கிற நாம் என்னுதல் –
அவரை ஒழிய செல்லாமையை வுடைய நாம் என்னுதல் –
ஏகாதிரிக்தம் அநேகம் -என்று சொல்லுகையாலே
தோழியையும் கூட்டி –நாம் –என்கிறாள்-

தேவர் என்று –
அதஸ்மின் ஸ்தத் புத்தி பண்ணி நாம் பரதேவதை என்று பிரமித்தோம் இத்தனை ஒழிய
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்று காண் அவர் நினைத்து இருந்தது –
நாம் சஜாதீய விஷயத்தே விஜாதீய புத்தி பண்ணினோம் இத்தனை காண்

ஆத்மானம் மானுஷம் மன்யே -என்னும் அவர் நினைவை விட்டு –
பவான் நாராயணோ தேவ -என்று வழிப் போக்கர் வார்த்தை யைப் பற்றினோம் இத்தனை காண் –

(பவான் -நாராயனோ தேவா -ஸ்ரீ மான் -சக்ராயுத- விபு -ஏக ஸ்ருங்கோ வராஹத்வம்- பூத பவ்ய அசுரர் நிரசன சீலன்
விளையாட்டுக்காக படைத்து -ஜகத் காரண பூதன்)

அஞ்சினோமே —
இறாய்த்தோமே-
அபய ஸ்தானத்திலே காண் -பய புத்தி பண்ணிற்று

நாம் அஞ்சினோம் -என்று ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் வார்த்தையாய் இருந்தபடி கண்டாயே –
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

இழவிலும் வாசனை விடாது இறே –

தோழி
உன் சந்நிதி இல்லாமை இறே நான் இழந்தது –
அவன் படியையும் என் படியையும் அறியும் நீ கூட நின்றாய் ஆகில்
என் ப்ராந்தியைப் போக்கலாய்த்து -என்கிறாள் –

(அவன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்த கடகர் இல்லாமல் இழந்தேனே என்கிறாள்)

————————————————————————————

மை வண்ண நறும் குஞ்சி –
அத் திருக் குழலின் நிறமும் மணமும் இருந்தபடி காணும் –

மை வண்ணம்
கார் வண்ணம் திருமேனி –என்கிற வடிவின் நிறம் ஸ்படிகம்
என்னும்படி காண் திருக் குழலின் இருட்சி இருந்தபடி –

மை வண்ணம் –
பா ரூபா -என்றும்
தேஜஸா ராசும் -என்றும் –
ஒண் சுடர் கற்றை -என்றும் –
சொல்லுகிற தேஜோ ரூபமான திரு மேனியில் நின்றும் கிளம்பினதொரு மை போலே இருக்கை –

மை வண்ணம் –
இத் திருக் குழலை கண்டவர்களுக்கு சர்வமும் பிரகாசிக்கும்படி -சித்தாஞ்சனமாய் இருக்கை –

மை வண்ணம் –
பிங்கள ஜடோதேவ -என்றும்
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -என்றும் சொல்கிற
ப்ரஹ்ம ருத்ராதிகள் மயிர் போலே
குராலாயம் ஏறி ஓடி இருக்கை அன்றிக்கே –
நீல குஞ்சித மூர்த்தஜம் என்றும் –
குழல் இருண்டு சுருண்டு -என்றாப் போலே
கண்டவர்கள் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே ச்யாமளமாய் இருக்கை –

(குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (பெரியாழ்வார் -3-6-11))

சோபயன் தண்ட காரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா -என்கிறபடியே
தன் நிறப்பாட்டாலே ஸ்ரீ தண்ட காரண்யத்தை மயில் கழுத்து சாயல் ஆக்கா நின்றது
என்றான் இறே ஸ்ரீ வால்மீகி பகவானும்

கேவலம் ரூபா சம்ஸ்கார மேயாய் -கந்த சம்ஸ்காரம் அற்று இருக்குமோ என்னில் –
நறும் குஞ்சி –
1-மல்லிகை செங்கழுநீர் தொடக்கமான வற்றால் நாற்றம் கொள்ளுகை அன்றிக்கே
ஸ்வ பாவத ஏவ ஸூகந்தமாய் இருக்கை –

நறும் குஞ்சி –
2-திரு மேனியும் இருண்டு திருக் குழலும் இருண்டு -இருந்தால் வைஷம்யம் தெரியாது இருக்கை அன்றிக்கே
நாற்றம் கொண்டு அறியலாய் இருக்கை –

நறும் குஞ்சி –
3-பரிமளிதமான – திருக் குழல்
தாப த்ரயாதுரரோடு விரஹ தாபாதுரரோடு வாசி அற
சர்வருக்கும் ஸ்ரமஹரமாம்படி காண்
திருக் குழலின் பரிமளம் மிகுந்தபடி –

நரகே பஸ்யாம நஸ்து யமனே பரிபாஷித
கிம் த்வ்யா ந அர்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன –என்னக் கடவது இறே –

வெறும் த்ருஷ்டி  பிரியமேயாய் இருக்கை அன்றிக்கே
நெஞ்சில் ஸ்ரமமும் போம் படி காண் திருக் குழலின் பரிமளம் மிகுந்த படி-

நறும் குஞ்சி
4-திருவடிகள் தொடங்கி திருமுடி அளவும் அபிமதமாய் இருக்க
முதல் அடியிலே இவள் திருக் குழலிலே அகப்படுவான் என் என்னில் –
பிரணய கலகங்களிலே காலிலே விழுந்த போதை செம்பஞ்சு குழம்பு அடையாளமாய் இருக்கையாலே
முற்பாடுடவது கண்ணிலே தோற்றிற்று ஆகவுமாம் –

அன்றிக்கே
நறும் குஞ்சி
5-நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கிறபடியே
பரிமள பிரசுரமாய் பரத்வ ஸூசகமான
திருத் துழாய் நாற்றம் கொடு போய் மூட்டிற்று ஆகவுமாம்

அன்றியிலே
நறும் குஞ்சி -என்று
6-தாம் சூடிக் கொடுத்த பூவின் பரிமளம் அழைத்துக் கொண்டதாகவுமாம் –

அன்றியிலே
நறும் குஞ்சி -என்று
7-இவள் பூர்வ சம்ஸ்லேஷமே தொடங்கி
துன்று குழல் கரு நிறத்து என் துணையே -என்று
வாய் வெருவி வாசிதம் ஆகையாலே ஆகவுமாம்

(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்* 
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்* 
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்* 
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! –12-)

அன்றியிலே
நறும் குஞ்சி -என்று
8-சௌந்தர்யம் அரை வயிறாய் இருக்கை அன்றிக்கே –
விஞ்சித் தலைக்கு மேலே போகையாலே -என்னவுமாம் –

குஞ்சி
1-குடில குந்தள அலங்க்ர்தம் -என்றும்
கிஞ்சித மூர்ஜ்ஜிதம் (சுக சாரணர் லஷ்மணன் அடையாளத்தைச் சொன்னவாறு)-என்றும்
குழல் இருண்டு சுருண்டேறிய குஞ்சி -என்றும் சொல்லுகிறபடியே
கோரை போலே நாலுகை அன்றிக்கே பங்கி பங்கியாக வளைந்து இருக்கை –

அன்றிக்கே –குஞ்சி –என்று
2–குஞ்சியும் கொண்டையும் குடுமியும் -என்று -(நிகண்டு) அளகாக்ரம் துள்ளித் தூரி இருக்கை யாகவுமாம் –
நெறி மென் கூர்தல் குழையல்-(நிகண்டு )என்னக் கடவது இறே –

குஞ்சி குழல் ஓதி -என்று மயிருக்குப் பேராகவும் சொல்வார்கள் –
இவ்விடத்துக்கு அது உசிதம் அல்ல —மை வண்ண நறும் குஞ்சி -என்று குழலுக்கு விசேஷணம் ஆகையாலே –

அன்றிக்கே –குஞ்சி -என்று —
3-கேச சாமான்யத்தை நினைத்த போது –
மேலே எடுத்துக் கட்டின மயிரும் -அதற்கு சேஷமாக நான்றிப் பிடரிக் குழலையும் சொல்லுகையாலே
குஞ்சிக் குழல் -என்ன ஒண்ணும் –

குஞ்சிக் குழல் -என்று கிடக்கையாலே விசேஷணமாகக் கடவது –

திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே அலகலகாப் பிரித்து எண்ணலாம் படி காண்
திருக் குழல் தனித் தனியே சுருண்டு இருந்தபடி –

கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளினுள்
கொண்ட நீல நன்னூல் தழை கொல் – என்று ஓர் இருளை சிஷித்து அது சத்ர்சம் இல்லாமையாலே –
அன்று மாயன் குழல் என்றார் இறே நம் ஆழ்வார் –
அஸ்திரமான இருள் சதைக ரூபமாய் இருந்துள்ள குழலுக்கு ச்த்ர்சமாக மாட்டாதே இறே
த்ருஷ்டி  பிரியமாய் மநோ ஹரமாய் நித்ய அனுபாவ்யமான குழல் என்கை –

குழல் பின் தாழ –
1-ஸ்நிக்த நீல குடில குந்தளமான திருக் குழல் -கற்றைகள் பின்னே தாழ
முன்பு லலாட பர்யந்தமாயும் பின்பு அம்சவலம்பியுமாயும் இறே திருக் குழல் இருப்பது –

மயிரை ஏற வாரி முடித்த படியால் முதுகும் தலையும் வெற்றிமை பட்டு பருஷமாய் இராதபடி –
பிறகு வாளி சாத்தினாப் போலே பிடரிக்கே குழல் அலையா நின்றது –

பின் தாழ –
2-இவள் தான் மயிர் பட மாளுமாள் ஒருத்தி ஆகையாலே முகப்பிலே நின்று
க்லேசிப்பியாதே பிறகே ஒதுங்கா நின்றது ஆயத்து –
அனுசஞ்சரன் -(தைத்ரியம் பிருகு வல்லி)என்றும்
அக்ரத ப்ரயோ ராம சீதா மத்யே ஸூ மத்யமா ப்ரஷ்ட தஸ்து தனுஷ்ப் பாணி -லஷ்மணோ அனுஜகமஹா -என்றும்
ஸ்வரூப ப்ராப்தமாக இளைய பெருமாள் சேவித்தாப் போலே பிறகே சேவியா நின்றது ஆய்த்து –

(ஓங்காரமே நடந்தால் போல்
வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–)

பின் தாழ –
3-ஸ்வரூப பாரதந்த்ர்யங்கள் இரண்டும் தோற்றும்படி பிறகே ஆய்த்து தாழ்ச்சியும் உண்டாய் இருக்கிறபடி –

(சேஷத்வம் பின் புறம் பாரதந்தர்யம் தாழ்ந்து)

அபிமுகே மயி சௌஹர்த்த மீஷிதம் -(சாகுந்தலம் – )என்றும்
ஆயாந்த மதி ஹர்ஷிதம் -என்றும்
இவளை நோக்கி எதிரே வருகிற போது -பிறகும் குழலும் கண்ட படி என் என்னில்
பெருக்காற்றை எதிர் செறுக்க ஒண்ணாத போலே
என்னுடைய சௌந்தர்ய அதரங்களைக் கண்டு நேர் முகம் பார்க்க மாட்டாமையாலே-
முகத்தை திரிய வைத்தார் -அப்போது கண்டேன் என்கிறாள் –
சர்வ சக்திக்கும் எதிர் செறிக்க ஒண்ணாத படி இறே இவளுடைய போக்யதை இருப்பது –

அன்றிக்கே
4-எதிரே வந்து அவன் இவளுடைய ஆபிஜாத்ய சௌந்த்ர்யங்களுக்கு தோற்று புரிந்த அளவிலே கண்டால் ஆகவுமாம் –

அன்றிக்கே –
5-யோவா ம்ர்கம் ம்ர்கயதே விபிநஸ்த்த லீஷூ -என்று வேட்டைக்கு வருவான் ஆகையாலே
செடிகள் தோறும் புரிந்து புரிந்து ம்ர்க்ம் தேடுகிற அளவில் கண்டாள் ஆகவுமாம் –

அன்றிக்கே–6- களவின் கீழே புணர்ச்சிக்காக வருகிறான் ஆகையாலே வேற்று மனிசர்
காண்கிறார்களோ என்னும் பயத்தால் புரிந்து பார்க்கிற போது கண்டாள் ஆகவுமாம் –

இப்படி அவயவ சோபையில் அகப்பாட்டாய் இத்தனையோ என்ன
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கி யாட –
1-என்று ஆபரண சோபையிலும் அகப்பட்டேன் காண்-
குழல் அழகர் -என்கிறவனுடைய திருக் குழலின் அழகில் அல்ல அகப்பட்டது
பார்ஸ்வத்தில் திருக் காதுகளில் சாத்தின ஆபரண சோபையில் காண் அகப்பட்டேன் -என்கிறாள் –

அக் குழல்களின் இருட்சியால் கண்கள் இருண்டு திரு முகம் தோற்றாமல் இருக்க
அவ் விடத்தே இரண்டு சந்த்ரர்கள் உதித்தால் போல் காணும் திரு மகரக் குழைகள் இருந்த படி –
சந்த்ரோபி சாசிவ்ய மிவாச்ய குர்வன் தாரா கணைர்மத்யகதோ விராஜன்
ஜ்யோத்ஸ்னா விதாநேன விதத்ய லோக முத்தி ஷ்டதே நைக சஹஸ்ராமி -என்கிறபடியே
திருவடி பிராட்டியை தேடுகிற தசையிலே சந்த்ரோதயம் உதவினால் போலே
காண் திருக் குழலாலே இருண்ட திரு முக மண்டலத்துக்கு இவை பிரகாசகமாய் இருந்தபடி –

மகரம் சேர் குழை –
2-குழை -என்று ஆபரணத்துக்கு பேராய் –
அது தான் மகர ஆகாரமாயும் மயூர ஆகாரமாயும்
ஹம்ஸ
 ஆகாரமாயும் பஹூ விதமாய் இருக்கும் ஆகையாலே
அதில் மகரத்தோடே சேர்ந்த ஆபரணம் ஆகையாலே
மகரம் சேர் குழை -என்கிறது –
மகரம் சேர் குழை –

3-அந்த மயூர ஆகாரம் ஸூ ப்ரஹ்மண்யாதி பக்தர்களுக்கு சேரும் இத்தனை ஒழிய
பகவத் பக்தர்களுக்கு சேராது -(ஹம்ஸ ஆகாரம் பிரமனுக்கு )

மகரம் சேர் குழை
4-ஆனால் அது தான் மகரம் சேர்ந்த படி எங்கனே என்னில் –
காமனார் தாதை -என்கையாலே -பகவத் புத்ரனான காமனுடைய கொடி யாகையாலும் –
ஷீரார்ணவ வசஹ சாரியாகையாலும்
பிரதம அவதார சஜாதீயம் ஆகையாலும்
மிகவும் சேர்ந்து இருக்கும் என்றபடி –

மகரம் சேர் குழை –
5-அழகுக்கு கொடியும் கானமும் உடைய காமனுக்கு அடையாளமான கொடியைப் பறித்து
சாத்தினாப் போலே இருந்தது ஆய்த்து –
ஒரு காது சீலைக் குதும்பை -ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ -என்றபடியே
ஒன்றுக்கு மகரம் சேர் குழையும் ஒன்றுக்கு வேறு ஒன்றுமாய் இருக்குமா என்னில்

(சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- )

இரு பாடு இலங்கி யாட –
1-இரண்டு அருகும் உஜ்ஜ்வலமாக கொண்டு அசையா நிற்க –

இருபாடு இலங்கி யாட –
2-மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீச என்கிறபடியே
குந்தணத்தில் அழுத்தின முக்தா மணி ரத்னங்கள் பங்திபங்தியாக பக்கம் செய்து தோன்றுகையாலே
தன் அழகு காண்பார்க்கு தானே கை விளக்காய் கொண்டு அசையா நிற்கை –

(மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல் மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் -இரு  சுடரை-3–பெரிய திருமடல் )

இருபாடு இலங்கியாட –
3-இதத்ச்தோ தத் ததிருஷ்டியாக கொண்டு புரிந்து பார்க்கையாலே காதும் பணியும் திரும்பி
பூர்வபாகா பரபாகங்கள் இரண்டும் உஜ்ஜ்வலமாம் படி அசையா நின்றது -ஆகவுமாம் –

இலங்கி யாட –
4-ஹீனரோட்டை சம்சர்க்கத்தில் இறே மாஸ்ரண்யமும் சோபமும் பிறப்பது –
காமனை விட்டு உடையவன் காதிலே சேரப் பெறுகையாலே உண்டான உத்கர்ஷத்தாலே உஜ்ஜ்வலமாக கூத்தாடா நின்றது –

இலங்கி –
5-அந்யோந்யம் பரபாகத்தால் வந்த இலங்குதலைச் சொல்லுகிறது –
திரு மகரக் குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமாக இருக்கிறதோ
திருக் குழல்கள் திரு மகரக் குழைக்கு ஆபரணமாக இருக்கிறதோ என்று தெரியாதபடியான
பரபாக ரசத்தை நீ காணப் பெற்றது இல்லை காண் -என்கிறாள் –

ஆட
6-ஒரு கடல் வடிவு கொண்டு நடந்து வந்தால் போலே காண் வருகிற போது
இரண்டருகும் திரு மகர குழைகள் அசைய வந்தபடி

அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகள் உண்டாகக் கடவதே -என்று
பட்டர் அருளிச் செய்வர்

அங்கன் அன்றிக்கே
முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவது எத்தனை செய்தான்
இவள் ஸ்த்ரீத்வத்தை அழிக்க என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

இப்படி அவயவ சோபையும் ஆபரண சோபையும் ஆன சீர்மைக்கு காத்தூட்டும்படியான
பரிகர பலம் இல்லையோ என்ன –
எய் வண்ண வெஞ்சிலையே துணையா -வந்தார் –
1-புறம் காவலும் கூடக் கொண்டு வந்தார் காண் –

சிலையே துணையா -என்று
2-கையில் வில்லே துணையாக வந்தார் -என்கிறாள் –

எய் வண்ண வெஞ்சிலை
3-எய்கையே ஸ்வ பாவமான வெவ்விய சிலை -அதாவது
ஒரு தனம் படைத்தால் எய்தல் செய்ய வேண்டாதே
சரவர்ஷம் வவர்ஷா ஹ் -என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை -என்றும்
வாளி மழை பொழிந்த சிலை -என்றும் –
வில்லும் தானே எய்ய வற்றாய்
சத்ருக்கள் படுகையால் அவர்களுக்கு தாப கரமுமாய் இருக்கை –

எய் வண்ண வெஞ்சிலை –
4-ஒரு கா புருஷன் எடுக்கிலும் அவனை புருஷோத்தமன் ஆக்கவற்றாயும்-
புருஷோத்தமனுக்கு அல்லது எடுக்க ஒண்ணாது இருக்கையும் –
ஜமதக்னிக்கு பிறந்த பரசுராம ஆழ்வானுக்கும் புருஷோத்தமனாய் எடுக்க வேண்டிற்று இறே –
மழு வாளி சிலை வாங்கி
–என்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கின அளவிலே
புருஷோதமத்வம் போய் பழைய ரிஷி புத்ரனாய் சோகியாய் இறே போகின போது போன எளிவரவு
இத்தால் -எடுத்து எய்யுமவனுக்கு மனஸ் சஹகாரமும் வேண்டா என்கிறது-

எய் வண்ண வெஞ்சிலையே துணையா –
5-அன்றியே திவ்ய ஆயுதங்களுக்கு ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் இருபடை மெய்யக் காட்டாமையாலே
திருமகரக் குழையோபாதி திரு வில்லும் ஆபரணமாகத் தரித்து வந்தார் என்னவுமாம் –
சிலை இலங்கு பொன்னாழி திண் படை தண் ஒண் சங்கம் -என்றும்-
ஆழியோடும் பொன்னர் சாரங்கம் உடைய அடிகளை இன்னார் என்றறியேன் -என்றும்
சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு அறிவு கலங்கி ஈடுபட்டார்கள் இறே –

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

ததச் சர்ய வதனம் சாப மாதா யாத்மா விபூஷணம் (ஆரண்யம் -அணிகலனாக வளைந்த வில் -ஆத்ம விபூஷணம் )-என்னக் கடவது இறே

எய்வண்ண வெஞ்சிலை
6-எய்யக் கடவதாய்-ததஸ்துதம் சமயதி சித்ர கார்முகம் – என்றும்
எவ்வரி வெஞ்சிலை -என்றும் சொல்லுகிறபடியே
நாநாவித வர்ணங்களாலே வரி வரியாக சித்ரிதமாய் தர்சநீயமாய் இருக்கை –

வெஞ்சிலை –
கையில் வில்லைக் கண்டவாறே எதிரிகள் குடல் குழம்பும்படி இருக்கை
‘கையும் வில்லுமாய் இருக்கும் இருப்பைக் கண்டால் அனுகூலர் வாழும்படியாய் –
பிரதிகூலர் மண் உண்ணும்படியாய் இறே இருப்பது –
‘கையில் வில்லும் தாமுமாய் வந்த ஆண் பிள்ளைத் தனம் நீ காணப் பெற்றிலை காண் –
வீர பத்னி அகப்படுவள் வீரத்திலே இறே –
தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
-என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –
இப்படியே இவளும் கையும் வில்லுமாக வந்த ஆண் பிள்ளைத் தனத்தை நீ காணப் பெற்றில்லை காண் -என்கிறாள் –

1-சிலை துணையா துணையாக பிரிநிலை ஏவ காரம் -மணம் புரிய இதுவே துணை இதுவே அடையாளம் -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை-வேறே ஆயுதங்கள் கொண்டு வரவில்லை
2-கையும் மாலையாக வரவில்லை
3-தாய்மார் தடைகள் இருந்தனவே -தலை மகளுக்கு ஆசை உண்டோ -தாமே தூதாக வந்தார்
4-வேட்டைக்காகத் தனியாக-வியாஜமாக வந்தார்வேட்டைக்கு வில் வேண்டுமே

அன்றியிலே –சிலை துணையா -என்று
5-வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்கிறபடி
அழிய மாறி எங்களை சேர்த்த க்ர்தஞ்ஞையாலே
கை விட மாட்டாமல் கொடு வந்தார் -ஆகவுமாம் –

அன்றியிலே –சிலை துணையா -என்று
6-என் பக்கல் வரும் போது –தண்ணீர் துரும்பான தாடகா நிரசன பூர்வகமாக
விச்வாமித்ராவர த்ராணம் பண்ண வேணும் என்று கொடு வந்தார் ஆகவுமாம் –

அன்றியிலே–7- என்னைக் கை பிடித்து மீண்டு வரும் போது வழியிலே பரசுராமாதிகள் தோற்றினார் உண்டாகிலும்
கண்டகே நைவ கண்டகம் – ( -பாரதம் முள்ளை முள்ளால் எடுப்பது போல் )என்கிறபடியே ஒரு வில்லை வாங்க வேண்டுகையாலே கொடு வந்தார் -ஆகவுமாம் –

அன்றிக்கே –சிலையே துணையா -என்று
8-ஹதாந் யேகேந ராமேண மாநுஷேண பதாதிநா
சதுர் தச சஹாஸ்ராணி ரஷசாம் பீமா கர்மாணம் -என்று
பதினாலாயிரம் ராஷசரை தாம் ஒருவருமே கொன்று வென்றி கொள்ளுகிற இடத்தில்
தம்பியாரும் பிராட்டிக்கு காவலாக நிற்க —பதாதிநா-காலால் நடந்து -தேர் படை போல்வன இல்லாமல்
அத்தனை வீரத்துக்கு துணையாய் நின்று வத்தருத்துக் கொடுத்த தனி வில்லாகையாலே -அத்தை கொடு வந்தார் ஆகவுமாம் –

அன்றிக்கே –சிலையே துணையா –
9-அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்ச தநு ரூர்ஜிதம் -என்கிறபடியே(தாரை வார்த்தை -வாலியைக் கொன்ற வருத்தத்தால் பற்றுக்கோலாக நின்றது போல்)
என்னைப் பிரிந்த தளர்த்திக்கு தமக்கு ஊன்று கோலாக கொடு வந்தார் ஆகவுமாம்-

அன்றிக்கே —சிலையே துணையா -என்று
10-வன் துணை வானவர்க்காய் வரச் செற்று அரங்கத்துறையும்
இன் துணைவனுக்கும் ஒரு துணை உண்டாய்த்து காண் –

அன்றிக்கே –சிலையே துணையா -என்று
11-இது இப்படி துணை படுக்கைக்கு காரணம் ப்ராவண்யமும் குணவத்யையும் இறே
மற்று உள்ளவற்றைக் காட்டிலும் வில்லுக்கு ஏற்றம் உண்டு -என்கிறாள் ஆகவுமாம்

அன்றிக்கே -12–குணா விசிஷ்ட வஸ்த்வுக்கு குண விசிஷ்ட வஸ்துவே துணையாக இருப்பது என்கிறாள் ஆகவுமாம் –

இவர்க்கு அது துணை பட்டது யேனே என்னில் -இங்கே –
1-நான் நிதி எடுத்த இடம் -இங்கே-என்கிறாள் –
இங்கே–2–பறி கொடுத்த இடம் தன்னிலே காணப் பெற்றேன்

இங்கே—3-கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொடு கிடக்கலாம் படி காண்
4-ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் -என்றும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம் -என்றும் சொல்லுகிறபடி
இலச்சினை பட நடந்த அடிச் சுவடு இருந்தபடி

அன்றிக்கே –இங்கே –5–என்று திரு மணம் கொல்லையை காட்டுகிறாள் –

இங்கே -6-அஸ்மின் மயா சார்த்தம் உதார சீலா -என்று —
பெருமாள் கோதாவரி பாறை -நீச்சல் போட்டி -அந்த பாறை என்று
தாம் அருளிச் செய்தால் போலே சொல்கிறாள்

இங்கே – 7-ஏதத்ததிங்கு தீமூல மிதமேவ சதத்த்ர்ணம் யஸ்மிம் ராமஸ் ச சீதாஸ ராத்ரிம்
தாம் சயிதா வுபௌ
-என்கிறபடியே—-குகன் சீதா பெருமாள் சயனித்த இடம் பரதனுக்குக் காட்டிச் சொன்னது போல் நானும் அவனும் இருந்து போது போக்கின இடம் இது காண் –

இங்கே –8–ஒரு பரம பதம் அல்ல -ஷீராப்தி அல்ல -அயோத்யா மதுராதிகள் அல்ல -கோயில் திருமலை அல்ல –
இவ்விடம் பண்ணின பாக்கியம் காண் –
அஸ்மத் யக்தானி வேச்மானி கைகேயீ பிரதிபத்யாம் -என்று(அயோத்யா மக்கள் இவர்களே ஆளட்டும் நாம் பெருமாள் இடம் செல்வோம் என்றது போலே)
பிறந்து படைத்த படை வீட்டையும் மாளிகையையும் கைகேயியுக்கும் மகனுக்கும் கொடுத்தாப் போலே அன்றிக்கே– –ஸூ பக்ஸ் சித்ரகூடோ சௌகிரி ராஜோ பமோகிரி-என்று பெருமாளும் பிராட்டியும் கூடி இருந்த –சித்ரகூடம் போலே இவ்விடம் பண்ணின பேறு காண் –

இவ்விடத்திலே அவர் செய்தது என் என்ன –வந்தார் –
வந்தார்-1-இவ் விடம் கை விட்டுப் போகை அன்றிக்கே உத்தேச்ய பூமியாக வந்தார் காண் –

(ஆஜ காம விபீஷணன் வந்தார் -போனார் இல்லையே -தம்பி சொல் கேளாத இடம் விட்டு தம்பி சொல் கேட்க்கும் இடம் வந்தார் -ப்ராப்த இடம் வருகை)
வந்தார் -2–வருகிறார் என்று எழுச்சி கொட்டாது இருக்க நினைவின்றியிலே வந்து கொடு நின்றார் காண் –
வந்தார் –3-வரக் கடவர் அன்றிக்கே இருக்கை அன்றிக்கே வந்து கொடு நின்றார் காண் –
வந்தார் –4-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் (பெரிய திருவந்தாதி)-என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
இதுக்கடியாக இருப்பது ஒரு பிரவர்த்தி என் கையில் இன்றிக்கே இருக்க -இப்படி பலித்து கொடு நிற்கக் கண்டேன் –
வந்தார் –5–போக்கு வரத்துக்கள் பொதுவாய் இருக்கை அன்றிக்கே
இனி நான் போகல ஒட்டேன் -என்றும்
திரு வாணை நின் ஆணை கண்டாய் -என்றும்
தடுத்தும் வளைத்து கொள்ளலாம்படி கை புகுந்தார் காண் –

இப்படி வருகிறவர் உன்னுடனே கலந்து மகிழ்ந்து போகிற வன்றைக்கும்-பிரிந்து கலங்கி வருகிற அன்றைக்கும் வாசி உண்டோ என்ன
இருவராய் வந்தார் -1–உருவு இரண்டு மேனியாய் வந்தார் காண் –

இருவராய் வந்தார் –
2-முன்பு என்னுடன் கலந்து போகிற அன்று
புனை இழைகள் அணிவும் ஆடையும் வுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று(திருவாய் ) -என்றும்
உறாவி இருக்கிற போது –
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண்ணாக்கை ஆப்புண்டு –என்றும் சொல்லுகிறபடி
ஆகார நித்ரைகளையும் துறந்து ஊர்ந்தனவும் கடித்தனவும் அறியாதே
பிரிவாற்றாமையாலே மெலிந்து இருக்கிற இருப்பு பேசும் அளவல்ல காண் –

இருவராய் வந்தார் –
3-சரீரம் இரு துண்டமாயாதல் -இரு பிளவை ஆதல் வந்தார் என்கிறது அல்ல –
ஏக ஷணத்திலே உத்பத்தி விநாசமாய் வைவித்த்யம் கூடுகிறது இல்லை
சிலையே துணையா -என்று போக ஏகாந்தமாக தனியே வருவர் ஆகையாலே –
கூட சிலரைக் கொண்டு வந்தார் என்னக் கூடாது –
ஜனக கன்யா க்ரஹணம் போலே கன்னிகைகள் பலர் உண்டாய் தமையன் தம்பி கேட்க வருகிறார் அல்ல
இனி இருவராய் வருகை யாவது –
ஒருவன் தானே இரண்டு ஆகாரத்தை உடையவனாய் வருகை –

4-அதாவது சோக ஹர்ஷங்களை உடையராய் வருகை –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்ற-அவிகாராய ப்ரஹ்மம் -ஞான மய ப்ரஹ்மம் -அபரிச்சேத்ய ப்ரஹ்மம் –
விசேஷ்யமான ப்ரஹ்மம் ஒன்றாய் இருக்க
பேதகம் விசேஷணம் பேத்யம் விசேஷ்யம் என்று(பின்ன ப்ரவ்ருத்தி நிமித்த -சாமாநாதி கரண்யம் )
விசேஷண பேதாயத்த விசேஷ்ய பேதத்தை அங்கீ கரித்தது இறே
ஆகார பேதங்கள் தான் பல உண்டே –

அவையாவன
இருவராய் வந்தார் –5-அவயவ சோபையோடும் ஆபரண சோபையோடும் வந்தார் –
மை வண்ண நறும் குஞ்சி -அவயவ சோபை —மகரம் சேர் குழை ஆபரண சோபை –

இருவராய் வந்தார் —6-வீர ஸ்ருங்காரங்கள்  இரண்டும் தோற்ற வந்தார்
சிலையே துணையா -என்றது வீரம்
என் முன்னே நடந்தார்
-என்றது ஸ்ருங்காரம்

(முன்னிலும் பின் அழகு -காவல் சோர்வு அடையாமல் நடை அழகில் ஈடுபடாதே சுமத்தரை இளவனுக்கு உபதேசம்)

இருவராய் வந்தார் —7- பிரணியித்வ தைரியங்கள் இரண்டும் தோற்றும்படி வந்தார்
என் முன்னே -என்றது பிரணியித்வம்நின்றார் -என்றது தைர்யம்

இருவராய் வந்தார் –8–விநய தௌத்யங்கள் இரண்டும் தோற்றும்படி வந்தார் –
கைவண்ணம் தாமரை வாய் கமலம் -என்னும்படி இருந்தது வினயம்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே-என்று –தூது செய் கண்கள்
கொண்டு பண்ணின வியாபாரமும் நாலடி புகுர நின்றதவும் தௌத்யம்

இருவராய் வந்தார்
9-இரண்டு நினைவோடு வந்தார் –அதாவது பெறில் உஜ்ஜீவிக்கையும் பெறாவிடில் முடிகையும் –
இருவராய் வந்தார் –

10-பரத்வ சௌலப்யங்கள் இரண்டும் தோற்றும்படி வந்தார்
அவ்வண்ணத்தவர் நிலைமை என்றது சௌலப்யம்
அவரை நாம் தேவர் என்றது –பரத்வம் –

இருவராய் வந்தார் –
11-மானுஷௌ தேவ ரூபி நௌ -(சுக்ரீவன் வார்த்தை-தற் செயலாக வந்த சந்த்ர ஸூர்யர் போல் )என்கிறபடியே
திவ்ய மானுஷ ரூபம் இரண்டும் தோற்றும்படி வந்தார் –
சிலையே துணையா -மனுஷர்க்கு சேர்ந்த வில்லாலே மனுஷ்ய பாவம்
கண் இணையும் அரவிந்தம் -புண்டரீகாஷத்வத்தாலே(கப்யாஸம் புண்டரீக ஏவம் அஷிணி )திவ்யத்வ பாவம்

இருவராய் வந்தார்
12-தூதருமாய் நாயகருமாய் வந்தார் –
ஸ்வயம் தௌத்யம் ஆகையாலே தூதத்வம் -வடிவின் போக்யதையாலே நாயகத்வம் (பாண்டவ தூதன் போல் )

இருவராய் வந்தார்
13-சந்தரன் வந்தானோ ஆதித்யன் வந்தானோ என்று மானுஷௌ தேவ ரூபி நௌ-என்றும் -ஆதித்ய இவ தேஜஸ்வி -சசி ஏவ சர்வ லோகஸ்ய வைஸ்ரவணன் போல் லோக ராஜா – சங்கிக்கும் படி   வந்தார் –

மணி மகர குண்டலங்கள் வில் வீசுகையாலே ஆதித்ய சங்கை
குழல் அழகர் -என்று சொல்லுகையாலே சந்திர சங்கை

இருவராய் வந்தார் –
14-புனர் வசு நஷத்ரம் இரண்டும் சேர பூகதமானால் போலே வந்தார் என்கிற சுடர் உடைமை காரணம் -(சோபயன் தண்டகாரண்யம் )

இருவராய் வந்தார் -15–கஜ சிம்ஹ கதி வீரௌ -(விசுவாமித்திரர் இடம் விசால தேச அரசன் சுமதி வினவுதல் -)என்கிறபடி
வருகிற போதை நடை அழகு இருந்தபடி ஆனை பிசுகி நடந்ததோ –
சிம்ஹம் மதியாமே நடந்ததோ -என்னும்படி வந்தார் –

அன்றியிலே-வீர சார்தூல ரிஷபோ -என்கிறபடி
16-புலி அறட்டோடே நடந்ததோ –வ்ர்ஷம் செருக்கோடு நடந்ததோ என்னும்படி நடந்து வந்தார் என்றுமாம் —

இருவராய் வந்தார்
17-உபாயம் தாமேயுமாய் உபேயம் தாமேயுமாய் வந்தார் –
ம்ர்க வ்யாஜ்யத்தாலே வந்தது உபாயம்(வேட்டை யாடி விளையாடும் விமலன் )
அவ் வண்ணத்தவர் நிலைமை -என்னும்படியான போக்யத்வம் உபேயம் –

இருவராய் வந்தார் –
18-ஸ்வரூபத்தாலே ஸ்வ தந்த்ரராயும் -குணத்தாலே பரதந்த்ரராயும் –வந்தார்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நாரணனே நீ என்னை அன்றி இல்லை -என்றும்
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -என்றும் சொல்லுகிறபடியே
நான் உண்டாகில் தாம் உண்டாய் தாம் உண்டாகில் நான் உண்டாய் தான் இல்லையாகில் நான் இல்லையாம்படியாய்
ஆகார த்வயத்தோடும் வந்தார்

முஹூர்த்தம் அபி ஜீவதி -மனம் ஈடுபட்டதால் இன்னும் உயிர் உடன் இருக்கிறார்கள் -துஷ்க்ருதாம் க்ருதவான் ராம ப்ரபு -சத்தை ஒருவருக்கு மற்ற ஒருவரால்

அன்றிக்கே –இருவராய் வந்தார் –
19-இளைய பெருமாளும் தாமுமாக வந்தார் என்றுமாம் –

சிலையே துணையா -என்று வைத்து –இருவராய் வந்தார் –என்கை -அசங்கதம் அன்றோ என்னில்

கையில் வில்லோபாதி இளைய பெருமாளும் நிரூபக பூதராய் இருக்கையால் சொல்லுகிறது –
ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே-

இருவராய் வந்தார் -என்று பிரியச் சொல்லுவான் என் என்னில் –
20-அணைக்கும் தோள் உடன் வந்தார் என்னவும் காட்டில் பிரியச் சொல்லிற்று ஆகாது இறே –
சம்ச்லேஷத்துக்கு வருகிறவன் படுக்கையோடு வருகிறது மிகை அன்றே

இருவராய் வந்ததார் –21–தேவ மனுஷ்யம் கலசி வந்தார் –
சேஷியாய் வந்தார் அல்லர் –
சேஷபூதராய் வந்தார் அல்லர் –
உபய ஆகாரத்தாலே வந்தார் என்னவுமாம் –
தம்முடைய காலை என் தலை மேலே வைக்கக் கடவதாக வந்து
என் காலை தம் தலை மேலே வைத்துக் கொண்டார் -என்கிறாள் –

பாணிக் க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறை கெட பரிமாறுகையும் இறே இருப்பது –
வகுத்த ஸ்வாமி யாகவும் வேணும்
ந சாஸ்திரம் நைவ சக்ரமம் -ஆகவும் வேணும் இறே –

அன்றிக்கே
22-நர நாராயணர்கள் போலே வந்தார் என்னவுமாம்

அதவா
சப்தத்தை நியமித்து இருவராக வந்தார் என்னவுமாம்
23-தாமும் நாமுமே யாம்படியாக வந்தார் -என்கை-

வந்தார் –
தாம் இருந்த இடத்திலே நாம் மடல் எடுத்துச் சென்று கிட்ட வேண்டும்படியாய் இருக்க
நாம் இருந்த இடத்திலே காண் தான் வந்தது -என்கிறாள்
அங்கன் இன்றியிலும்
கால் நடையிலும் அவர் நடை அழகை நீ காணப் பெற்றிலை காண் என்னவுமாம் –
நடைச் சக்கரவத்து பிடிக்க வேண்டும்படி காண் நடந்த நடை இருந்தபடி –

இப்படி வந்து இவர் செய்தது என் என்ன –
என் முன்னே நின்றார் –
1-பெரிய த்வரை உடன் வந்தவர் -கடல் கண்டு தேங்கின திருவடியைப் போலே
என்னைக் கண்டு மேலிட மாட்டாதே தேங்கி என் முன்னே நின்றார் –

அன்றியே
2-தாம் முகம் பார்ப்பது எப்போதோ என்று -நான் நிற்க பிராப்தமாய் இருக்க –
இவள் நம்மை நேரே முகம் பாக்க வல்லளோ என்று பாரித்துக் கொண்டு நின்றான் காண் -என்கிறாள்

என் முன்னே நின்றார்
3-மாச உபவாசிகளுக்கு பால் குழம்பு கொடுப்பரைப் போலே காண வேணும்
என்னுடைய ஆசானுரூபமாக அனுபவிக்கும்படி முன்னே வந்து நின்றார் காண் –

என் முன்னே நின்றார் –
4-தஸ்மின் த்ர்ஷ்டே பராவரே பித்யதே ஹ்ரதய க்ரந்தி-என்றும்
த்ரஷ்ட ஏவ ஹிநஸ் சோஹம் அபநேஷ்யதி ராகவ -(அயோத்யா -பார்த்த உடன் வருத்தங்கள் நீங்கப் பெற்றார்கள் ஸூர்யன் வந்ததும் இருள் போமா போல் -பாவி என்று ஒரு சொல் சொல்லே என் முன்னே நின்று )என்றும்
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண -என்றும்
ஆசைப்பட்ட என் அபிநிவேசம் தீரும் அளவும் என் முன்னே நின்றார் காண் –

என் முன்னே நின்றார் –
5-தேக்கிட்டாருக்கு சோறு இடுகை இன்றிக்கே பசித்தாற்கு இடுமா போலே தர்சன மாத்ரத்தையே உகந்த என்னுடைய
அபிநிவேசம் தீரும்படி என் முன்னே நின்றார் காண் –

என் முன்னே நின்றார்
6-ஆருடைய முன்னே நிற்கத் தக்கவர் என் முன்னே நின்றார் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய -என்று த்ரிபாத் விபூதியாக அனுபவிக்கிற அனுபவத்தை
நான் ஒருத்தியே அனுபவிக்கும்படி சர்வ ஸ்வதானம் பண்ணினார்

என் முன்னே நின்றார் –
7-மானஸ சஷூஸ் களுக்கு விஷயம் அல்லாத தம்மைக் கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆக்கிற்று-

என் முன்னே நின்றார் –
8-கண்ண நீர் சோர்ந்து இரண்டு கண்ணும் இல்லாத எனக்கு கிடீர் கண்ணையும் காட்சியையும் தருகிறது –

ஸ்ருதி ஸ்ம்ருதி -அறியாத எனக்கு -இவையே இரண்டு கண்கள் ப்ரஹ்மம் அறிய-திவ்யம் சஷுஸ் விபுவான தன்னைப் பார்க்க வைத்தானே –

என் முன்னே நின்றார்
9-மந்தாக்னிகளுக்கு (ஜீரண சக்தி இல்லா ஜடராக்னி )சோறு இடுவாரைப் போலே தம்முடைய தரம் அறியாத என் முன்னே கிடீர் கால் வாங்க மாட்டாதே நின்றது –

என் முன்னே நின்றார் –
10-என்னுடைய ஸ்வ ரூபத்தை பார்த்தால் தம்முடைய முன்னே நான் கைக் கட்டிக் கொண்டு நிற்க பிராப்தமாய் இருக்க
பிரணயித்வத்தால் தாம் என் முன்னே கை கட்டிக் கொண்டு நின்றார்

என் முன்னே நின்றார்
11-தாம் இத்தனை போது படுத்தின சிறுமையால் வெறுத்து  உபேஷித்து இருந்தேனோ
அன்றிக்கே -இவ்வளவில் தான் வந்து உதவினத்திலே உகந்து அணைக்கிறேனோ என்று அளவிட மாட்டாதே அவர் நிலை காண் –

என் முன்னே நின்றார்
12-அவனை நான் என் செய்வன் காணே (நாச்சியார் )-என்றும்
இன்னும் என் கையகத்து இங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -(பெருமாள் திருமொழி )என்றும்
நான் அவன் பக்கலில் கோலி வைத்து இருந்த பாரிப்பு எல்லாம் அறிந்து வைத்து அவன் என் முன்னே நின்ற சாஹசம் காண் –

அன்றியிலே -என் முன்னே நின்றார் –
13-நான் தான் கண்டு இரங்கும்படி என் முன்னே நின்றதையும் காண் -என்றுமாம் –

நின்றார்
14-ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றார் -என்னுதல்

15-கந்தவ்ய பூமி வேறு இல்லாமையாலே வந்து நின்றார் -என்னுதல் –

இப்படி இரங்கும்படி அங்கு வர்த்தித்த அளவின் மேல் செய்தது என் என்னில்
என் ஹ்ருதயத்தை கூட்டிக் கொள்ளுகையாலே
ஸ்வயம் தௌத்யத்திலெ இழிந்து இருந்து –போக பிஷை இட வேண்டும் -என்று கை ஏற்றார் –
அப்போது கை இருந்தபடி –

கை வண்ணம் தாமரை –
1-மேல் இருந்த நிறத்தே அகப்பட்டேன் இத்தனை போக்கி அக வாயில் இழிய வேண்டிற்று இல்லை –
அவர் கையில் அகப்பட்டேன் காண் -என்கிறாள் –

கை வண்ணம் தாமரை –
2-செய்ய கை -என்று சொல்கிறபடி சாமுத்ரிகா லஷணத்தை உடைய கையில் சிவப்பிலே அனுரக்தை யானேன் –

ராகத்தில் அநுராகம் கொண்டேன்-

கை வண்ணம் தாமரை –
3-வண்ணம் என்று நிறம் -அன்றியே பிரகாரமாய் -ஆகார சாம்யத்தை சொல்லிற்றாகவுமாம் –
அல்லி போலே உள்ளங்கையும் -இதழ்கள் போலே விரல்களும் –
தாது போலே ரேகைகளும் -விலஷணமான கந்தமும் – ம்ர்துவான ஸ்பர்சமும் –
புற இதழ் போலே ஸ்யாமமான புறங்கையில் பசுமையும் –
ஏவமாதியான லஷணங்களை உடைத்தாய் இருக்கை –

கை வண்ணம் தாமரை –
4-சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்றும்- 
அலம் புரிந்த நெடும் தடக்கை
-என்றும் –
திருக்கை சகல பலங்களையும் கொடுக்கும்படி போலே இருக்கும்

(தேவேந்த்ரன்-மூ யுலகம் குபேரன் செல்வம் கார்த்த வீர்யார்ஜுனன் ஐஸ்வர்யம் ஜனகன் மோஷம் )

பின்பு செய்தது என் என்னில்
போக பிஷை -என்று கையைக் குவித்தார்
தத் அநந்தரம் நான் விரோத வசனம் பண்ணாதே இருந்து கொண்டு –
அப்ரதிஷித்த மநுமதம் பவதி -என்று பேசாதே இருந்தது பாதி இசைவாகக் கொண்டு
அயம் சதோ திஷ்டதி சங்க மோத் ஸூக -(சாகுந்தலம் )என்றும்
ஸ்வ பசீ மயா ஸூ தனு -என்றும் சில வபேஷ உக்திகளைப் பண்ணினார்

வாய் கமலம் போலும் –
அப்போது செவ்வி பெற மலர்ந்தால் போலே அவ்வவ்தர ஸ்புரணம் இருந்த படி காண் –
அதுக்கு நான் ஒரு பிரத்யாக்யானம் பண்ணாமையாலே-அதுக்கு மேலே ஒரு அபூர்வமாக
தூது செய் கண்களால் சில சேஷ்டைகளைப் பண்ணினார் –

கண் இணையும் அரவிந்தம் –
அந்த கண்கள் தானும் அவையாய் இருந்தது –

கை வண்ணம் என்று ஒரு கையைச் சொன்னார்
வாய் கமலம் என்று ஒரு வாயைச் சொன்னார்
கண் இணை -என்று இரண்டு கண்களையும் சொல்லுவான் என் என்னில்
கைகள் தனித் தனியே ஸ்வ தந்திர கரணம் –
கண் இரண்டும் கூட ஏக சாமக்ரியாய் யாய்த்து இருப்பது -ஆகையாலே சொல்லுகிறது –

அபாங்களாலே சில சங்கேதங்களைப் பண்ணின இடத்தில் நான் இசைந்து இருந்த படியாலே நாலடி புகுர நின்றார் –

அடியும் அக்தே –
நிலத் தாமரை மலர்ந்தால் போலே அத்திருவடி இருந்தபடி காண் –

அன்றியிலே
விபாஹா சமாதியாலே சில ஸ்ருங்கார சேஷ்டைகளைப் பண்ணி –
க்ர்ஹீத்வாகார பத்மாப்யாம் ஸீதாயா பாத பங்கஜம் அஸ்மன்யாரோ பயாமாசா -என்றும்
செம்மை வுடைய திருக் கையால் தாள் பற்றி யம்மி மிதிக்க -என்றும்
சொல்லுகிறபடியே
என் காலைப் பிடிப்பதாக சில அபிநயங்களைப் பண்ணினார்

கை வண்ணம் தாமரை –
அப்போது கடினமான கல்லை மிதியாமே ம்ர்துவான கைத் தாமரை இருந்தபடி காண் –

அநந்தரம் –
ஆதிஷ்டேமேமச்ச்மானம் – என்று அவ் வனுஷ்டான பிரகாசமான மந்த்ரத்தை உச்சரித்த போது –
வாய் கமலம் போலும் –
இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் -என்னும்படி
மதுகர ஜங்கார முகரிதமான தாமரை மலர்ந்தால் போலே இருந்தது காண் –

அனந்தரமாக
இமாம் சமேத பஸ்யதே-என்கிற மந்த்ரத்தாலே
என்னை காலே தொடங்கி -கரிய குழல் அளவும் பார்த்தார் -அப்போது
கண் இணையும் அரவிந்தம் -என்று திருக் கண்களும் தாமரை போலே இருந்தது காண் –

தத் அனந்தரமாக –
சகா சப்த பதா பவ -என்றும் –தீ வலம் செய்ய -என்றும் சொல்லுகிறபடியே
அக்னியை பிரத்யஷமாக வருவதாக நடந்தார்
என் கையைப் பிடித்துக் கொண்டு முன்னே நடக்கிற போது மாறி மாறி இட்ட திருவடிகளும் அத் தாமரை பூத்தாப் போலே இருந்தன –

அன்றிக்கே -அஞ்சலியைப் பண்ணுவதே -என்றும் இத்யாதியாலே
காலைப் பிடிப்பதாய் கையை நீட்டுவதாய் சில பாவங்களைப் பண்ணினார் –

கை வண்ணம் தாமரை -இப்பூவிலேயோ நான் கால் வைக்கப் போவது என்று கூசும்படி இருந்தது காண் –
அனந்தரமாக
என்னை நோக்கி சில கைவாரம் கொள்ளத் தொடங்கினார்
வாய் கமலம் போலும் -அப்போது வாய் மணம் இருந்தபடி
தாமரை மணந்தது போலே இருந்தது காண்
ஓசைப்படாத படி பிறகிட்டு வந்து கண்ணைப் புதைக்கிறாள் என்று சாசங்கரராய் புரிந்து பார்த்தார் –
கண் இணையும் அரவிந்தம் –
அப்போது இக் கண்களையோ நாம் நெருங்க புக்கது என்று
தவிரும்படியான கண்களில் சிவப்பு இருந்தபடி காண் –

இங்கே சற்றே ஆஸ்பதம் பெற்ற படியாலே மடியிலே இருப்பதாக கோலி –
வேட்டைக்கு போவதாக கோத்த மரவடியை கழற்றினார் –

அடியும் அக்தே –
இம் மெல்லடியைக் கொண்டோ காடும் ஓடுமான பரப்பு எல்லாம் உலாவப் புக்கது என்று
வயிறு பிடிக்கும்படியான அடியும் அவை தானாய் இருந்தது –
எனக்கு உகப்பு என்று கையில் ரஷணத்துக்கு என்று கட்டிய
காப்பையும் கையையும் என் கை முன்னே காட்டினார்
இப்படி விரோதி நிவர்த்தி பண்ணுகிற அக்கை தனக்கு மார்த்த்வமே ஸ்வ பாவமாக இருந்தது

கை வண்ணம் தாமரை
கைக்கு கட்டின காப்புக்கு ஈடாக சில வார்த்தைகளை சொன்னான்

(ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வராஹ ஸ்ரீ ராம சரம ஸ்லோகங்கள் போல் சொன்னார்)

வாய் கமலம் போலும் –
அவ் வார்த்தைக்கு உள்ள சுவடு காண் –
கூசாமல் அபேஷிக்கலாம் படியும் க்ர்தஞ்ஞாராய் இருக்கலாம்படியும் குளிரப் பார்த்தார் –
அப் பார்வைக்கு சௌ மனஸ்யம் உண்டாய் இருந்தது -(பூதாஸ்மி ரகு நந்தன-திருக்கண் கடாக்ஷம் கூசாமல் அபேக்ஷிக்கலாம் படி )

கண் இணையும் அரவிந்தம் -என்றும்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -என்றும்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்றும்
நின்றார் நின்ற படிகளில் சொல்லலாம் படி தலையிலே புகுர விட்டால் போலே
தேனேய் மலரும் திருப் பாதம் -என்ற திருவடியைக் கொண்டு வைத்தார்

அடியும் அக்தே
அத் திருவடிகளுக்கு பூவும் செருந்தியாய் இருந்தது –
செய்யேல் தீவினை -என்றும் -பிரபத்தியில் ச்கர்தி ஒழிய
த்விதீய பர்யாயம் தொடங்கி உள்ள பிரதீவர்த்தியும்
பிரவ்ர்த்திக்கு முன்பு கழிந்த அக்ர்த்ய துஷ்டான் நிபந்தனமான சோகத்தையும் தடுப்பதாய்
இருக்கிற-
அக் கையையும் காட்டினார் –

(ப்ராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந் –ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்துர் மாம் அவ்யாத பய முத்ரித–ந்யாஸ திலகம் -2-

உனது அடிகள் அடைகின்றேன் என்று ஒரு கால் உரைத்த வாறே அமையும் இனி என்பவர் போல் அஞ்சல் எனக் கரம் வைத்து –அடைக்கலப் பத்து
நிரதிசய ஆனந்தம் அளித்த பின்பும் மீண்டும் பிரபத்தி செய்தால் இன்னும் தர ஒன்றும் இல்லையே என்று அன்றோ திரு உள்ளம் மருகுவான் –)

கை வண்ணம் தாமரை
அப்போது ஆஸ்ரிதர் உடைய முகோல்லாசத்தைக் கண்டு கர பத்மம் மலர்ந்தால் போல் இருந்தது

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்தத மெய்ம்மை பெரு வார்த்தை -என்றும்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் -என்றும் அம்ருதம் போலே சில வார்த்தைகளை அருளிச் செய்தார் –

வாய் கமலம் போலும் -வாய் அவ் வம்ருதத்துக்கு பூண் கட்டினால் போலே இருந்தது –

என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி எனது இளம் கொங்கையையும் நோக்குகின்றார் –என்றும்
அவயவி உடன் என் அவயவங்கள் உடன் வாசி அற பூர்ண கடாஷம் பண்ணி அருளினார் -(ஞான பக்தி வைராக்யங்கள் )

கண் இணையும் அரவிந்தம்-
அப்போது ஆகாசத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருந்தது –

பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் –என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே-
என்று நான் அர்த்தியாய் அவன் இருந்த ஊரை நோக்கிப் போகத் தேடுவது
அவஸையாய் அது தானும் மாட்டாதே கிலேசிப்பாதகிற அளவிலே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -என்று
கமர் பிளந்த நிலத்திலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே என் முன்னே நின்றார் –

அடியும் அஃதே —
இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே -விரஹ சந்தப்தமான இத்தசையிலே திருவடித் தாமரை அடிகள் உண்டான படி காண் –

அன்றிக்கே(இது ஆறாவது நிர்வாகம் )
பிரதமத்தில் தன்னை பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –கைவண்ணம் தாமரை -என்றும்
வாய் கமலம் போலும் -என்று தன் கையைப் பிடித்து தன் செல்லாமை தோற்ற
இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என் –
இது ஒரு முலை அழகு இருந்தபடி என் –
இது ஒரு கண் அழகு இருந்தபடி என் –
இன் சொல்லுச் சொன்ன திருவதரம் இருந்தபடி என் –
கண் இணையும் அரவிந்தம் -இன் சொல்லு சொல்லு தொடங்கி
அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே சொல்லித் தலைக் கட்டிய படி –
ஆதர ஸூசகமாய் இறே இன் சொல்லு இருப்பது –
அவ்வதரம் அனைத்தையும் கண்ணிலே  பிரகாசிக்கும்படி நின்றார் என்கை

அடியும் அஃதே 
அந் நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகளைச் சொல்லுகிறாள்-(ஜிதந்தே புண்டரீகாக்ஷ )

கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று
கீழே சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க
போக்ய அதிசயத்தாலே அவயவங்கள் தோறும் தாமரையை த்ர்ஷ்டாந்தமாக சொல்கிறார் –
அடியும் தாமரை -என்னாதே-அடியும் அஃதே -என்று
உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் விசத்ர்ஷ்டாந்தம் என்னும் இடத்துக்கு ஸூசகம் –

அவர் வந்த வரவை நீ சொன்ன அழகு இருந்தபடி கேட்டதாய் இராதே சாஷாத் கரித்தாப் போலே இருந்ததீ-என்று தோழி சொல்ல
தோழி இது எல்லாம் -என் எனபது-அவ் வண்ணத்தவர் – என்னும் இத்தனை என்கிறாள் –
பசிக்கு மோந்தோம் இத்தனை ஒழிய -வந்த பிரகாரத்தையும் அவரையும் நம்மால் பேசப் போமோ –
நீ கேட்கையாலே உனக்கு ஒரு த்ர்ஷ்டாந்தத்தை இட்டுச் சொன்னேன் இத்தனை ஒழிய
ஒரு த்ர்ஷ்டாந்தத்தை இட்டு சொல்லும்படி அன்று வடிவு இருந்தபடி காண் –

அவ் வண்ணதவர்
அந்த பிரகாரத்தை -உடையவர் என்னும் இத்தனை போக்கி வேறு பாசுரம் இட ஒண்ணாது காண் –
வேதங்களும் எதோ வாசா நிவர்த்தந்தே –
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
என்று இப்படி சொல்லி விட்ட இத்தனை இறே –

(அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -9-3-3)

அவ் வண்ணத்தவர் நிலைமை -என்று இவ்விடத்தில்
அவ் வண்ணம் -அவருக்கு விசேஷணம்
அவர் நிலைமைக்கு விசேஷணம் ஆகவுமாம் –
அவ் வண்ணத்தவர் -என்ற போது –
வேதங்களில் பிரதிபாதிக்கிற பிரகாரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவன் -என்று பகவத் பரமாகவுமாம் –
அன்றியிலே அவ் வண்ணத்துக்கு நிலைமை என்று நிலைமைக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஓன்று -வ்யவஹிதான்வய பிரமாணிகாம்
மற்றையது -ஸ்வதம் ப்ராப்தம்
நிலைமை யாவது -மரியாதைகள் -அதாவது வியசித ஸ்வபாவங்கள்

அவ் வண்ணத்தவர் நிலைமை -என்று அந்த பிரகாரத்தை உடையவருடைய வ்யவசிதங்கள் –
அவ் வண்ணத்து -என்றும் –அவர் -என்றும் பிரிக்கவுமாம் –
அவ் வண்ணத்தவர் -என்று முழு சொல் ஆகவுமாம் –
அவ் வண்ணம் -என்று சௌலப்ய ஸ்வ பாவம் –
அதாவது சௌலப்யாதிகளை கால தத்வம் உள்ள அளவும் அனுபவிக்கலாய் இருக்கை –
வஸ்து ஸ்வ பாவத்தாலே கழற்ற ஒண்ணாது கிடந்த இத்தனை-(ப்ரஸாதவ் நாதவ் மம கேஹம் -கழற்ற முடியாத ஸ்வரூபம் நாதவ் பரத்வம் )

நிலைமை -என்று அதின் வகுப்பு —
சௌசீல்ய வாத்சல்ய காருண்ய சௌந்தர்யாதிகள் –

அவை யாவன –வந்து –இங்கே வந்து -என் முன்னே வந்து நின்றார் -என்கை –
கண்டும் -குணம் கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தே –
கண்டும் –
என்கிறபடி -என் என்னில் –
கண் என்று உட் கண்ணாய் -ஜ்ஞான சாஷாத் காரத்தை சொல்கிறது –
அவன் பண்ணின தாழ்ச்சிகளை அனுபவித்து இருக்கச் செய்தேயும் -என்றபடி –

அன்றிக்கே –
அவ் வண்ணதவர் நிலைமை -பிராட்டியும் கூட ப்ரதானையாய் பிறகிடும்படி போக ஸ்ரோதஸ்ஸூக்கு
முன்னோட்டுக் கொடுத்த அவ்வவ வைவித்யங்களை ஸ்மரிக்கிறது -(12 வருஷங்கள் இன்புறும் விளையாட்டுக்கள் லீலா விநோதம் )

அவ் வண்ணத்தவர் நிலைமை –
ஒரு ஸ்ரோதஸ்ஸூக்கு நிலவராய் மற்றை ஸ்ரோதஸ்ஸூக்கு நிலவர் இன்றியிலே இருக்கை
அன்றிக்கே ஸ்ரோதஸ்ஸூ தோறும் இதுவே நிலை என்னும்படி சார்வத்ரிகமான தேசிகத்வம் சொல்லுகிறது –
விதியினால் பெடை மணக்கும் -என்னுமா போலே

அன்றியிலே –அவ் வண்ணத்தவர் நிலைமை -என்று
வைவாத்யம் ஸூர தேஷ்விவ
-என்கிறபடியே –
பஹுமுகமான ஸ்ரோதஸ்ஸூ க்கு நிலவராக இருக்கச் செய்தேயும்
என்னுடைய மார்த்த்வத்தைக் கண்டு-(மெல்லியலாள் ஸீதை -)குசை தாங்கி நின்ற நிலைமை காண்

(மாதவ காவ்யம் -வெட்கமும் பொறுமையும் பெண்கள் லக்ஷணம் -பராக்ரமம் வெட்கம் இன்மை ஆண்கள் லக்ஷணம்)

அன்றியிலே -நிலைமை -கண்டும் -என்று
என்னைப் பெற்று தரித்தல் பெறாது முடிதல் செய்யும்படியான ஸ்வ பாவத்தை கண்டு வைத்தும்
அவர் நிலைமை
அவர் வடிவு அழகு இருந்தபடி இது
சீலம் இருந்தபடி இது
வ்யவசாயம் இருந்தபடி இது
இத்தனையும் கண்டு வைத்தும்-

கண்டும்
முன்பு உன் பக்கல் கேட்டுப் போந்தேன் இத்தனை இறே -கேட்டாப் போலே கண்டு வைத்தும்

கண்டும்
நெடு நாள் சாதனானுஷ்டானம் பண்ணி காண வேண்டிய விஷயம் அனாயாசமாக
கண்ணுக்கு விஷயமாக இருக்கச் செய்தே கிடாய் நழுவ விட்டது –
காணாத போது வெருவ ப்ராப்தமாய் இருக்க கண்டு வைத்து கலங்கினேன் –
கண்டு தெளிய கில்லீர் -என்னக் கடவது இறே –
அதுக்கடி என் என்னில் –

(பரந்ததெய்வமும் பல்உல கும்படைத்து அன்றுஉட னேவிழுங்கிக்
கரந்துஉ மிழ்ந்து கடந்துஇடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்க ளால்அம ரர்வணங் கும்திருக் குருகூர் அதனுள்
பரன்திற மன்றிப் பல்லுல கீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.-4-10-3-)

அவரை –
அதாவது —பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் –என்றும்
சௌலப்யம் ஸ்வ பாவம் ஆனவோபாதி பரத்வமும் ஸ்வ பாவமாய் நின்று நிலைத்தது ஆகையாலே

(மிக்க இறை நிலையும் -இறை நிலை பரத்வம் மிக்க இறை நிலை ஸுலப்யம்)

தோழி –
1-அஞ்சினான் புகலிடமாக உன்னை யாகிலும் பெற்றோம் இறே –

தோழி —
2-பால்யத்தில் பாம் ஸூக்ரீடைக்கு துணையானாய்
நாயகன் பக்கலிலே அபிலாஷை சென்ற அளவிலே -நெஞ்சில் கிடைப்பாடும் சொல்லுகைக்கும்
அவனைக் கிட்டுவிக்கைக்கும் -துணையானாய்
விஸ்லிஷ்ட தசையிலே வ்ர்த்த கீர்த்தனம் பண்ணி அனுமோதிக்கைக்கும் துணையாய் –
சர்வ வித சகாயனும் நீயே அன்றோ –

தோழி
3-இவர் வாயில் நால் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆகையாலே -அவர் -என்று போக்யதையை சொல்லுவது
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் -என்று
நாயக அனு ராகம் சொல்லுவது –
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகிறேன் -என்று பய ஸ்தானம் சொல்லுவது –
அச்சோ ஒருவர் அழகிய வா -என்று பின்னையும் விட ஒண்ணாத படியான
ஆகர்ஷகம்
சொல்லுகைக்கு உன்னை ஒழிய வேறு உண்டோ

தோழி
4-அவர் வடிவு அழகு இருந்தபடியும்
வந்த வரவு இருந்தபடியும்
நின்ற நிலை இருந்தபடியும்
நீ காணப் பெற்றிலை காண் -என்கிறாள் –

அவரை நாம்
நம்மை ஒழியச் செல்லாதபடி நின்றவரை -அவரை ஒழிந்த போது அசந்நேவ -என்னும்படி இருக்கிற நாம்
அன்றிக்கே -அவரை ஒழியச் செல்லாமையால் வந்த ஆற்றாமையை உடைய நாம் என்னுதல் –
ஏகாதி ரிக்தம் அநேகம் ஆகையாலே -தோழியையும் கூட்டி –நாம் -என்கிறாள்

அவரை நாம் —
செல்வர் பெரியர் -என்றும் –அவன் எவ்விடத்தான் -என்றும் எட்டாதபடி இருக்கிறவரை
சிறு மானிடவர் -என்று எண்ணிக்கைக்கு கூடப் பாற்றம் போராதபடி யான நாம் –
இப்படி பர்வத பரமாணுக்களான விடத்தில் நாம் செய்தது என் என்ன

தேவர் என்று அஞ்சினோமே –
நம் காலில் விழுவார் ஒருவர் அல்லர் –
நாம் அவர் காலில் விழத் தக்கவர் ஒருத்தர் என்று கூசினோமே

அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
ஸ்ரீ வராஹ நரசிம்ஹ அவதாரங்களை திர்யக் அவதாரங்களாக நினைத்திலோம் –
மானுஷர்களான ராம கிருஷ்ணர் என்று நினைத்திலோம் –
ஸ்த்தாவர அவதாரமான அச்வமத்த மேருக்களாக நினைத்திலோம் -(அஸ்வத்த மரமாகவும் மேருவாகவும் நானே கீதை )
மனிசர்க்கு தேவர் போலே தேவருக்கும் தேவாவோ -என்றும்-
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று ஸூரிகளுக்கும் எட்டாத பரதேவதை என்று நினைத்தோம்
ஸ்ருங்கார கர்ம சமாராத்யரானவரை கர்ம சமாத்ரயாராக நினைத்தோம்

அதவா
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்
இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் -என்றும்
வீட்டைப் பண்ணி விளையாடும் -என்றும்-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -என்றும்
விபூதியைக் கொண்டு லீலை பண்ணுவார் ஒருவர் என்று –

(தேவு –
1-திவு கிரீடா -விளையாட்டு –
2-விஜி கீஷா வெற்றி விருப்பம்
3-வியவஹாரம் வழக்கு –
4-திதி தேஜஸ் –
5-ஸ்துதி ஸ்தோத்ரம்
6-மோதம் மகிழ்ச்சி
7-மதம் செருக்கு
8-ஸ்வப்னம் கனவு
9-காந்தி அழகு
10-கதிஸூ உபாயம் உபேயம் -10 அர்த்தங்கள் உண்டே)

தேவர் என்று –
விஜிகீஷையாய் -என்றும்-ந விஜிகிஷ்ய நிவர்த்தந்தே – ஜெயிக்காமல் திரும்ப மாட்டார்
தோற்றோம் மட நெஞ்சம் -என்றும் -சத்யேந லோகான் -தீனே தானம் குரு சிஸ்ரூஷய-இத்யாதி -என்றும்
ஸ்வேதர வஸ்துக்களை நின்ற நிலைகளிலே தோற்பித்து வெற்றி கொள்வார் ஒருவர் என்றும் –

தேவர் -என்று
வ்யாவஹரமாய்

பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -என்றும் –
மறை வுரைத்த திருமால் -என்றும்
அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் -என்றும்-பாஞ்சராத்ரஸ்ய க்ருஷ்ணஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -என்றும்
பிரபுத்வம் கொண்டாடி -வாய் திறவாது இருக்கை அன்றிக்கே –
சகல ஜகத் ஹிதமாக வேத வைதிக பிரவசனம் பண்ணுவார் ஒருத்தர் –

அன்றிக்கே வ்யவஹாரம் என்று வழக்காய்
சம்சாரியான நான் கடவேன் என்ன -புருஷோத்தம வித்யை ஸ்ரீ கீதை –
பிரமாணமான ஸ்ருதி ஸ்ம்ர்திகளை கையிலே கொண்டு சம்சாரிகள் உடன் வழக்கு சொல்லி தம்மது ஆக்குவார் -என்றுமாம் –

தேவர் என்று
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த  என்றும்-நாராயண பரோ ஜோதி இத்யாதி என்றும்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் ஒரு உரு -என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபரராய் இருப்பார் என்றும்

தேவர் -என்று
ஸ்துதியாய் -ஏத்த ஏழு உலகம் -ருக் சாம வேதங்கள் ஸ்துதியே -ஸ்தவ்ய ஸ்தவப்ரியன் -பவான் நாராயணோ தேவ 
ஏத்த ஏத்த எங்கு எய்தும் வீவில் சீர் அம்மான்  -என்றும்–ஸாஸ்தா விஷ்ணு -அனைத்தையும் நியமிப்பவன் இவனே -என்றும்
திவ்யரோடு பௌமரோடு வாசி அற சர்வைஸ்துதியனாய் இருக்கும் என்றும்

தேவர் –
காந்தி– -கதிகளுக்கு –அழகு இவனே உபேயம் கதி இவனே உபாயம் பேராய் -ஆறும் பேறும் இவனே
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்-ப்ரஹ்மத்தை அறிந்தவன் அடைகிறான்-என்றும்
மன் மனா பவ -மாம் ஏவ -இத்யாதி -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும் சொல்லுகிறபடியே
உபாய உபேயங்கள் இரண்டும் அவனே என்றும்
வேத வைதிகர் சொல்கிற மேன்மையைன் புத்தி பண்ணினோம் -இத்தனை காண் –

அன்றியே –தேவர் -என்று –
அதஸ்மின் ஸ்தத் புத்தி பண்ணினோம் -பர தேவதை என்று பிரமித்தோம் இத்தனை ஒழிய –
மண்ணிலே மங்கி மனிசராய் இருக்கிறவரை நாம் தேவர் என்று பழி இட்டோம்
ஆலோகா லோபா லிங்கந விநயாதிகளை பண்ணி தம்மை தாழ விட்டு நின்று
சஜாதீய விஷயத்தை விஜாதீய புத்தி பண்ணினோம் இத்தனை காண் –

ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யம் ராமம் தசாரதாத் மஜம் -ந அஹம் தேவ –அஹம் வோ பாந்தவ ஜாத-
அவர் நினைவை விட்டு வழிப் போக்கன் வார்த்தையைப் பற்றினோம் இத்தனை காண் –
இப்படி அவர்கள் வார்த்தையை பற்றிச் செய்தது என் என்னில்

அஞ்சினோம்-
அபய ஸ்தானத்தில் பய புத்தி பண்ணினோம்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் வார்த்தையாய் இருந்தபடி கண்டாயே -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
யளவில் வந்தாலும் வாசனை விடாது இறே –

நாம் அஞ்சினோம்
(பீஷாஸ் வாத பவதி )துர்மானிகள் அஞ்சும் இடத்திலேயோ பக்ன அபிமாநீகளான நாம் அஞ்சுவது

நாம் அஞ்சினோம் –
கணயத்துக்கு உள்ளே இருக்கிற நாமா அஞ்சினோம் -(பெருமாள் தோளைப் பற்றி யானை புலி இவற்றைக் கண்டாலும் பயப்படாமல் ஸீதா பிராட்டி இருந்தாள் அன்றோ )
உபய விபூதிக்கும் அஞ்சினான் புகலிடமான தோள் எனக்கு ஒருத்திக்கும் பய ஸ்தானமாய் இருப்பதே –

அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே-
(ததாமி புத்தி யோகம் -10-10 )உணர்த்தியை தந்தவரை
அறியாதன அறிவித்த அத்தா-மயா ஸ்ருதா -ஆன்ரு சம்சயம் மயா தர்மம் -கேட்டேனே –
அவர் பக்கல் அறிவு பெற்ற நாம் பரத்வ ஞானம் பிறந்து ஸ்வ ரூப அனுரூபமாக ஒதுங்கினோம் –

நாம் அஞ்சினோம்-
தோழி உன் சந்நிதி இலோலாமை இறே நான் இழந்தது
அவன் படியையும் என் படியையும் அறிந்த நீ
கூட நின்றாயாகில் என் பிராந்தியை போக்கலாய்த்து -என்கிறாள் –

தோழி நாம் –
என்று தோழி கடக்க இருக்க
தானும் நாயகனும் கலந்து வந்த நாயகி தோழிக்கு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுவதாய் இருக்க –
நாம் தேவர் என்று அஞ்சினோம் என்று தோழியை கூட்டிச் சொல்லுவான் என் என்னில்

தோழீ என்று நீங்கலாக சம்போதிக்கையாலே கூடிற்று அல்ல

நாம் அஞ்சினோம் என்கிற பஹூ வசனம் உபலம்பத்திலே
ஆத்மாநிப பஹூ வசனமாய்
நாம் இப்படி அபாயம் பட்டோம் கண்டாயே என்று லௌகிக மர்யாதையாலே
முறைப் படுகிறாள் ஆகையாலே ஒரு குறைகளும் இல்லை

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading