அவதாரிகை –
பொருவற்றாள் -என்று – ஊர் தடைகள் விட்டால் -ஊர்க்கதிர் காவல் விட்டால் –
அறுப்பது -கிடா விடுவதாய் கொண்டு -ஆழி மூழையாய்ச் செல்லுமா போலே
இவளும் தாய்க் காவல் விட்டவாறே
அவனுடைய சர்வ ரஷகத்வத்தை வாய் விட்டுப் பேசி கால ஷேபம் பண்ணா நின்றாள் –
இவளை மகா பாக்யவதி -என்னுமது ஒழிய உவமை இட்டுச் சொல்லப் போமோ -என்கிறாள் –
1-மகிஷிக்கு உதவினபடியையும்-
2-பேரனுக்கு உதவினபடியையும் –
3-ரஷக அபேஷை உடையாரை ரஷித்த படியையும் –
4-அதுவும் இல்லாரை தன் கிருபையால் ரஷித்த படியையும் –
5-தன் பக்கல் விமுகராய் இருப்பார்க்கும் அகப்பட தூளிதானம் பண்ணின படியையும்
வாய் விட்டுப் பேசா நின்றாள் -என்கிறாள் –
(அர்ச்சாவதார அனுபவம் கலசாத பாசுரம் இது)
முதல் பத்தில் தாமான நிலையில் நின்று திருக் கோவலூரை அனுபவிக்கப் பார்த்து –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராக பெறாமையால் வந்த ஆற்றாமையாலே
கூப்பிட்ட விடத்திலும் அவன் வந்து முகம் காட்ட காணாமையாலே
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் –வாழலாம் -என்று
(முதல் மூன்று பாசுரங்கள் ஸ்வரூப ரூப குணம் அறிவித்தான் -இது அன்றோ திருமந்த்ரார்த்தம் -அடுத்து )
(அடுத்து ஓலைப்புறத்தில் கேட்டுப்போகாமல் கண்டு அனுபவிக்க திருக்கோவலூர் செல்ல எத்தனிக்க
போகும் வழியில் அங்குள்ள பெருமாள் குணங்கள் காட்டும் உகந்து அருளின திவ்ய தேசங்களை பாதேயமாகக் கொண்டு
மங்களா ஸாஸனம் செய்து பரிந்து இருப்பதை ஸாதனமாகக் கொண்டானோ என்று பதறி
அவை ஒன்றும் இல்லை என்று அறிவித்து த்வரை மிக்கு இருக்க
இந்த திருத்தாயார் வார்த்தையால் இறுதி பாசுரம் அன்றோ இது)
தாம் கால ஷேப அர்த்தமாக அனுபவிக்க இழிந்து
அது கிட்டாமையால் வந்த ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ணி
வந்து
முகம் காட்டாது ஒழிந்தானோ என்று சங்கித்து
பொன்னானாய் -என்கிற பாட்டிலே ஈஸ்வரனுடைய புத்தி சமாதானம் பண்ணினார்
இவ் விடத்தில் வினவ வந்தவர்கள் இவளுடைய ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ண
தாயார் நிலையில் நின்றவர்கள் உடைய ஹ்ர்தயத்தை சமாதானம் பண்ணித் தலைக் கட்டுகிறார் –
இத்தால் –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
யாவதாயுஷம் பகவத் குண சேஷ்டிதங்கள்
கால ஷேபத்துக்கு விஷயம் என்றது -ஆய்த்து –
———————————————————————————————-
தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே -20-
பதவுரை
முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐஸ்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானை யிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம் தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலை யெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாண புரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப் பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்கு நிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தி யெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத் திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெரும் பாக்கிய முடையவள் என்று
சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப் போமோ?
தேர் என்று பெயர் பெற்றவற்றை எல்லாம் ஆண்டவனாய்
வாள் ஆயுதத்தைக் கையிலே தாங்கின ராவணனுடைய சம்பத்து நசிக்கவும்
அழகை யுடைய லங்கையில் உள்ள ராக்ஷசர் ராவணன் முன்னே கலங்கும் படி திருவடியை இட்டு சிவந்த நெருப்பாலே கொளுத்தி
போர் செய்யும் தன்மையனான ஆயிரம் தோள்களை யுடைய பாணாசூரனை மாளச் செய்து
அலை எறிகிற ஸமுத்ரமாகிற கோட்டையை யுடைய வாண புரத்திலே புகுந்து வீர ஸ்ரீ யால் மிகுந்தவனாய்
பூமிக்கு நிர்வாஹகனாய்
வராஹ அவதாரத்தில் பூமியை அண்டபித்தியில் நின்றும் குத்தி எடுத்து பூமியை பிரளய காலத்திலே அமுது செய்து
பூமியை வெளிநாடு காண உமிழ்ந்து பூமியை த்ரி விக்ரம அவதாரத்தில் அளந்து
இப்படி பூமியை ரஷித்தவனுடைய திரு நாமங்களை எல்லாம் இடைவிடாமல் சொல்ல வல்லளான
இப்பெண்ணை பூமியிலே பெரும் பாக்யம் உள்ளவள் என்று அல்லது பேசப்போமோ –
———————————————————————————————–
தேராளும் வாளரக்கன் –
இப்போது இவனுடைய வைபவம் சொல்லுகிறது –
இவனை அநாயாசமாக அழியச் செய்த ஈஸ்வரத்வ சக்தி தோற்றுகைக்காக –
இது சதுரங்க பலத்துக்கும் உப லஷணம் –
அதிரதர் மகா ரதர் என்று பிரதானமாக சொல்லுவது தேரை யாகையாலே
அத்தை இட்டு அல்லாதவற்றையும் உப லஷிக்கிறது –
வாளரக்கன் –
இத்தனை தேராண்டான் என்று சங்க்யை சொல்லாதே
தேராளும் -என்கிறது –
தேர் என்கிற ஜாதி அத்தனையும் ஆண்டான் -என்கைக்காக –
இது சதுரங்க பலத்துக்கும் உறுப்பாக கட்டினான் இத்தனை என்னும்படியான தனி வீரன்
கையிலே வாளைக் கொண்டு எழுந்து இருந்தால் இந்த்ராதிகள் முதுகு புறம் காணும் படி இறே அவனுடைய தனி வீரம் இருப்பது –
அரக்கன் செல்வம் –
திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே -ராவணனுடைய ஐஸ்வர்யம் –
யத் தர்மோ ந பலவான் ஸ்யாத்-என்று இறே -திருவடியின் வார்த்தை –
(திருவடி மதித்த ஐஸ்வர்யம் -எங்கும் வேத ஒலியும் -வேள்விப் புகைகளும் நிறைந்து இருக்கக் கண்டார் திருவடி
மறம் செயல்களைச் செய்யாமல் இருந்தால் இவன் மூ உலகும் ஆளத்தக்கவன் என்று தோற்றிற்றே)
(யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸே ச்வா; ஸ்தாயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா.“
(இவ்விராவணனிடத்தில் அதர்மம் ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் இவனே தேவாதி தேவனாக விளங்கவல்லவன்
(என்றாயிற்று அனுமான் பேசினது.)
மாளத்-
பிணமும் காணாத படி நசிக்க —
தென்னிலங்கை –
அரணுக்கு அழகு துஷ் ப்ராபமாய் இருக்கை -(சதுர மா மதிள் சூழ் இலங்கை )
கட்டளைப் பட்ட இலங்கை -என்கை –
சுற்றும் கடலாய் –
அநந்தரம் நாடாய்-
அநந்தரம் மலையாய் –
அதின் மேலே மதிளும் அட்டாலையுமாய் -இருக்கை –
சூல் பெண் பெண்டாட்டிக்கும் எதிரிகளை ஜெயிக்கலாம் படி இருக்கை –
முன் மலங்கச் –
அவள் தன் குறி அழியாது இருக்க-
அவள் சந்நிதியில் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக கண் கலங்கும் படி –
லோகம் அடங்க அவன் கையில் படும் பாடு இத்தனையும்
அவள் சந்நிதியில் இலங்கை படும்படி ஆய்த்து –
செந்தீ யொல்கிப்
நெருப்பை கொளுத்தி –
ஒரு தனி யாளைப் புகவிட்டு இலங்கையை தக்தமாக்கி –
செந்தீ
ராவணன் ஏவல் செய்து இரை பெறாதே உடம்பு வெளுத்துப் போந்த அக்னி
திருவடி வாலை அண்டை கொண்டு தன்னிறம் பெற்றுத் தேக்கம் இட்ட படி –
அங்கன் இன்றியே
தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே
சர அக்னியால் இலங்கையை அழித்தான் சக்கரவர்த்தி திருமகன் என்னவுமாம் –
(தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே தொடுத்து விடுகிற போது அம்பாய் -ராம பாணமே நெருப்பு கக்குமே )
ஆனால் திருவடி இலங்கையை சுட்டான் என்பான் என் என்னில் –
கையில் திருச் சக்கரம் செய்தது தான் செய்தது அன்றியிலே ஒழியுமோ என்கை –
யதா ராகவ நிர்முக்தஸ் சர -என்னக் கடவது இறே –
(ஸூந்தர காண்டம் -ராம பாணம் போல் விரைவாக அடைவேன் -தனக்கு உவமானம் ராம பாணம் என்று சொல்லிக் கொண்டாரே)
போராளன் –
ஜன்ம ப்ரப்ர்தி யுத்த உன்முகனாய் போந்தவன் –
தன் தோளில் தினவு தீரும்படியான எதிரிகளைப் பெறாமையாலே
தன் அபாஸ்ரயமாக பற்றின ருத்திரன் பாடே சென்று –
பாராய மமகிம் புஜை -என்று
நான் இத் தோள் சுமந்து திரிகிற இதுக்கு பிரயோஜனம் என் –
என் மிடுக்குக்கு சத்ர்சமாய் இருப்பதொரு எதிரியைக் காட்டித் தர வேணும் என்றான் இறே –
(தோள் பலத்துக்கு ஏற்கும் படி போர் கிட்டுமா -இவை பெற்ற பலன் வேண்டுமே என்றானே)
அதுக்கு ஹேது என் என்னில் –
ஆயிரம் தோள் –
சஹஸ்ர பாஹூவாய் இருக்கையாலே
ஆயிரம் தோள் –
யௌ தத் பூஜா கரௌகரௌ -என்றும்(யௌ தத் பூஜா கரௌகரௌ-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -பூஜை செய்யவே திருக்கை )
கை உலகம் தாயவனை அல்லது தான் தொழா -என்றும் -சொல்லுகிறபடியே
கை கண்டது வகுத்த விஷயத்தை அஞ்சலி பண்ண விறே –
(வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-)
அதில் இரண்டு கை தான் தனக்கு உறுப்பாக பெற்றிலோமே -என்கிறான்
ஒருக்கால் அஞ்சலி பண்ணினாலும் ஐந்நூறு அஞ்சலி உண்டு இறே –
இத்தனையும் பர ஹிம்சைக்கு உறுப்பாவதே -என்கிறாள்
அதுக்கு ஹேது என் என்னில் –
வாணன் –
துஷ் பிரகிருதி யாகையாலே -என்கை –
மாளப்-
வாணனுடைய பாஹூ வனத்தைச் சேதித்து
அவனுடைய வீரத்தை அழித்தான் -என்கை –
வீரனுக்கு தன்னுடைய வீரத்தை அழிக்கும் அதில் காட்டிலும்
தன்னை அழிப்பது இறே நன்றாய் இருப்பது
மாலை
வீர வாசி அறியுமவள் ஆகையாலே
பின்பு இருந்த இருப்பு பிணம் என்று நினைந்து இருக்கிறாள்-
பொரு கடலை யரண் கடந்து புக்கு-
எதிரிகளுக்கு துஷ் பிரபமாம்படி யான திரைக் கிளர்த்தியை
உடைத்தான கடலாகிற
அரணைக் கடந்து பாணா புரத்திலே சென்று புக்கு –
தன்னில் தான் பொரக் கடவதான தரங்களை வுடைத்தான கடல் என்னவுமாம்
இது கீழும் அந்வயிக்கக் கடவது -(பொரு கடலை யரண் கடந்து புக்கு-தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கி)
மிக்க –
வீர ஸ்ரீயால் மிக்கவன் –
விஜயமும் மிக்கு வீர ஸ்ரீ யும் மிக்க படி –
அவனுக்கு ரஷகனாய் அபிமானித்து இருந்த எதிர்த்த ருத்ரனோடு
அவனுக்கு பரிகார பூதரானரோடு வாணன் தன்னோடு வாசி அற
அவர்கள் அழிய அழிய மேலே வீர ஸ்ரீ பணைத்த படியை சொல்கிறது –
பாராளன்-
பூ பாரமான பாணனை அழியச் செய்கையாலே பூமிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
பாரிடந்து-
தன் நிலை குலையாமல் நிற்கச் செய்தே வந்த ஆபத்தைப் போக்கி
விட்ட அளவு அன்றிக்கே –
அவள் தான் பாதாள கதையான போது ரஷித்த படியை சொல்லுகிறது –
தன்னிலை குலையாமல் நின்று சங்கல்ப்பத்தாலே ரஷிக்கை அன்றிக்கே
ஸூரி போக்யமான வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான வடிவைக் கொண்டு பிரளயம் கதையான பூமியை உத்தரித்து –
கீழ் பிராட்டியை ரஷித்த படியைச் சொல்லிற்று –
இவை இரண்டாலும் ஸ்ரீ பூமி பிராட்டியை ரஷித்த படியைச் சொல்கிறது –
(பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந்
தேசுடைய தேவர் என்னை மாத்திரம் இப்படி உபேக்ஷித்திருப்பதே! என்பது கருத்து.)
பாரை யுண்டு –
பூமியை பிரளயம் கொள்ளப் புக அந்த ஆபத்தே ஹேதுவாக திரு வயிற்றிலே வைத்து ரஷித்து
(நானும் அக்காலத்தில் இருந்திருந்தேனாகில் திருமேனியோடே ஸம்பந்தம் பெற்றிருப்பேனே என்றவாறு.)
பாருமிழ்ந்து –
அவ் அபேஷையும் இன்றிக்கே இருக்க
தயமானமனவாய்க் கொண்டு சிருஷ்டித்து –
(பிரளயகாலத்தில் திருவயிற்றினுள்ளே அடக்கின பூமியை மறுபடியும் வெளிப்படுத்திக்
கரண களேபரங்களைக் கொடுத்தருளி உருப்படுத்தினது இங்ஙனம் உபேக்ஷிக்கைக்காகவோ? என்றவாறு.)
பாரளந்து –
அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும்
திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –
(உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.)
பாரை யாண்ட –
இப் படியால் பூமியை ரஷித்தவன் –
(பாரையாண்ட =
ஆகக் கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் திரளப் பிடித்து நிகமனஞ் செய்கிறபடி.
தேராளும் வாளரக்கன் செல்வம்மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கிப் பாரையாண்ட பேராளன்;
பாரிடந்து பாரையாண்ட பேராளன்; பாரையுண்டு பாரையாண்ட பேராளன்; பாருமிழந்து பாரையாண்ட பேராளன்;
பாரளந்து பாரை யாண்ட பேராளன் – என்றிங்ஙனே அந்வயித்துக் கொள்ளலாம்.)
உண்டு உமிழ்ந்து அளந்து இடந்து -என்னாதே
பல கால் பார் –என்கிறது
அவவவ அபதானங்களில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
(ஓஓ! உலகினது இயல்வே* ஈன்றோள் இருக்க* மணை நீராட்டி,*
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து- அளந்து,* தேஎர்ந்து உலகு அளிக்கும் முதல்பெருங்- கடவுள் நிற்ப*
புடைப் பல தான் அறி- தெய்வம் பேணுதல்,* தனாது-
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி,*
கொல்வன முதலா அல்லன முயலும்,* இனைய செய்கை இன்பு துன்பு அளி*
தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்* பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே.)
பேராளன் –
இப்படி ரஷிக்கைக்கு ஹேதுவான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களுக்கு தொகை இல்லாதவன் –
இவளுக்கும் அத்தைப் பற்றி இறே திரு நாமத்தாலே சம்பந்தம் –
பேரோதும் பெண்ணை –
இப்படி அசங்க்யாதமான திரு நாமங்கள் இத்தனையும் இடைவிடாமல் பேச வல்லவளை –
கால ஷேப அர்த்தமாக பகவத் குண சேஷ்டிதங்கள் இத்தனையும் அவஹாகித்து அனுபவிக்க வல்ல இவளை –
மண் மேல் பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –
நித்ய ஸூரிகள் திரளினின்றும் பிறிகதிர் பட்டு போனதால் என்னும் அது ஒழிய வேறு பேசப் போமோ
பூமியிலே இருக்கச் செய்தே நித்ய ஸூரிகள் பரிமாற்றத்தை உடையவள் என்று அல்லது பேசப் போமோ –
பெரும் தவத்தர் -என்று
பரம பதத்தில் உள்ளாரை சொல்லக் கடவது இறே
நித்ய ஸூரிகள் பரிமாற்றத்தில் சாதனா புத்தி பண்ணினால் அன்றோ –
இவளுடைய ஆற்றாமையில் நமக்கு சாதனா புத்தி பண்ணலாவது
சாதனா புத்த்யா த்ர்ணச் சேதத்துக்கு பிராப்தி இல்லை –
கால ஷேப அர்த்தமாக இழிந்தால் அமுது கெடுக்க அவசரம் இல்லை -என்கை –
மண் மேல் பெரும் தவத்தள் –
நித்ய ஸூரிகள் தங்களிலே இவளை அந்ய தமையாக எண்ணப் போமோ
விண்ணுளாரிலும் சீரியர் -இத்தனை
(வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – ஸ்ரீ திரு விருத்தம் – -79)
———————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply